Friday 29 December 2023

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி-புறப்பொருள் வெண்பா மாலைகல் என்றால் மலை, மண்-சமவெளி,வாள்-ஏர் முனை.மலை மட்டும் இருந்த ஊரில் ஏர்முனையில் நிலத்தை சீர்படுத்தி வயலாக்கினார்கள். உழவர் பெருமையைக் குறிக்கும் வகையில் சொல்லப்பட்டது.

அருகாமை என்றால் அருகில் என்று பொருள் இல்லை.தொலைவு என்று அர்த்தம்.அருகில்- தூரம் குறைந்து உள்ளது.அதாவது பக்கத்தில் என்று பொருள்.அருகு எனில் சுருங்குதல், குறைதல். அருகாமை எனில் நீளுதல்,சுருங்காமை என்று பொருள்.nearby-அருகில், far-அருகாமை#info

Thursday 28 December 2023

சொக்கன்


"தொலைக்காட்சி ஒரு மிகச் சிறந்த கருவி. அதைப் பார்க்கப் பார்க்க உங்கள் மனத்திலிருந்து எல்லா எண்ணங்களும் வடிந்துவிடுகின்றன. நீங்கள் எதிலும் கவனம் செலுத்தவேண்டியதில்லை. நீங்கள் எதற்கும் எதிர்வினையாற்றவேண்டியதில்லை. நீங்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை. முக்கியமாக, உங்கள் மூளை உங்களுக்கு முற்றிலும் தேவைப்படாது."

ரேமண்ட் சான்ட்லர் என்ற நாவலாசிரியருடைய பொன்மொழி இது. அவர் "தொலைக்காட்சி" என்று சொல்லியிருக்கிற இடத்தில் "Social Media Feed" என்று வைத்துக்கொண்டால் இன்றைக்கு அது சாலப் பொருந்தும்.

-சொக்கன்

உலகத்தில்இதுவரை ஒரே ஒருகூரான கத்திதான்உயிரோடு உள்ளது.அதுசாகாமல் இருப்பதற்காகசாணை பிடித்துக்கொண்டேஇருக்கின்றனலட்சோப லட்சம் கைகள்.-கல்யாண்ஜி

Monday 25 December 2023

நெக்லஸ்

நெக்லஸ்
-மாப்பசான்

நேற்று காலை நேர அவசரத்தில் படித்த கதை இன்னும் மனதில் எண்ணற்ற கேள்விகளை

மிகவும் சாதாரணமான கதை 'நெக்லஸ்' ஆனால் சொல்லிய செய்தி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

"ஒரு பெண் தன் தோழியிடம் இரவல் நகை ஒன்றை வாங்கி போட்டுக் கொண்டு திருமணத்திற்கு போகிறாள்..அது ஒரு வைர நெக்லஸ். தொலைந்து போய்விடுகிறது. பதறிப்போன அவள் எங்கெங்கோ தேடிப்பார்க்கிறாள். எங்கும் கிடைக்காதுபோகவே அதேப் போலொரு நெக்லஸை வாங்கி கொடுத்துவிடலாமென கடையில் கேட்கிறாள். அதன் விலை அவளது சேமிப்பு, உடைமை, சொத்து அனைத்திற்கும் சரியாக இருக்கிறது. அனைத்தையும் விற்று அந்த நகையை வாங்கித் தோழியிடம் கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டு எங்கோ போய் விடுகிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரு தோழிகளும் ஒரு பொது இடத்தில் சந்திக்கிறார்கள். இவள் மிகவும் வயதானவளாக, நோயாளி போல் காணப்படுகிறாள். தோழிக்கு ஆச்சரியம்..."ஏன் இப்படி இருக்கிறாய்?" என அதிர்ந்துபோய் கேட்கிறாள். சிறிது நேரத்தில் உண்மை வெளிப்படுகிறது.

"அடப்பாவி... என்னிடம் நடந்த விஷயத்தை சொல்லியிருக்கக் கூடாது ? அது ஒன்றும் ஒரிஜினல் நகை இல்லை. கவரிங்..." என்று தலையிலடித்துக்கொண்டு அவளை வீட்டிற்குக் கூட்டிப்போய் அவள் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த நெக்லஸை அவளிடமே திருப்பித் தருகிறாள் தோழி.

கதை முடிந்துவிட்டது!

ஒரு நல்ல கதை முடியும் இடத்தில்தான் உண்மையில் ஆரம்பமாகிறது! நெக்லஸ் அவளிடமே வந்து விட்டது! ஆனால், அவள் இழந்த வாழ்க்கை? இளமை? நிம்மதி? '

அவள் அற உணர்வை எண்ணி வியப்பதா, அவள் ஏமாற்றத்தை எண்ணி பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை.மனிதர்கள் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க நினைத்ததை எண்ணி பெருமிதமும் பட வைக்கிறது

-மணி

Knowing others is wisdom;Knowing yourself is Enlightmentமற்றவரை அறிதல் அறிவென்றால்.. தன்னையறிதல் ஞானம் எனலாம்-லாவோட்சூ

'பேங்க்' (bank) என்பதை நாம் 'வங்கி' என்கிறோம். இத்தாலிய வார்த்தையான 'பாங்க்கோ' (banco) என்பதிலிருந்து தோன்றியது. யூதர்கள் இங்கிலாந்தின் கடைத்தெருவில் ஒரு நீளமான இருக்கையில் உட்கார்ந்து தங்கள் வணிகத்தை நடத்தினார்கள்.அந்த இருக்கையை (பெஞ்ச்சை) இத்தாலிய மொழியில் 'பாங்க்கோ' என்று அழைத்தார்கள். அதுதான் 'பாங்க்' ஆனது.-ஜி.எஸ்.எஸ்

Sunday 24 December 2023

புதைத்துப் பார்த்தேன் முளைக்கிறது எரித்துப் பார்த்தேன் உயிர்க்கிறது கரைக்கலாம் என்றால் மிதக்கிறது சுமக்கலாம் என்றால் கனக்கிறது. பாவி என்னடீஈஈஈஈஈஈ செய்வேன் உன் ஞாபகங்களை. -ரவி சுப்பிரமணியன்

சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரம்மில்லை. ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது-பாலகுமாரன்

தூரத்தில் ஒலிக்கிற பழைய பாடலுக்குதூரமே புதுப் பின்னணிஇசை சேர்க்கிறது.-கலாப்ரியா

Thursday 14 December 2023

janakiraman


ஏகம் சத் விப்ரா : பகுதா வதந்தி

"ஏகம் சத்" - உண்மை ஒன்று தான். "விப்ரா" - அதனை அறிந்தோர்கள், "பகுதா வதந்தி" - பலவாறாக கூறுகிறார்கள் என்பது வேத வாக்கியம். அந்த உண்மை என்பதை, பரம்பொருள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஒரு வரி, மிக ஆழமான, தத்துவார்த்த, ஆன்மீக  விளக்கங்களை தரும். இப்போது, எளிய புரிதலில் இந்த மந்திரம் சார்ந்த வாழ்வியல் உண்மையை பார்ப்போம். 

2+5 = 7 என வரும். 15 – 8 என்பதும் 7 என்ற விடையைத் தரும். அதே போல 21/3 என்பது 7 என்ற விடையைத் தருகிறது. கணக்கில் 7 என்ற விடையை பல வழிமுறைகளில் நாம் கண்டடைவது போல,  ஒரு பிரச்சனைக்கு பல வித "சரியான" தீர்வுகள் இருக்கமுடியும். 

அகிரா குரோசாவுடைய ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ரஷோமொன் (1950), ஒரே நிகழ்வை, அதில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொறுவரும் தத்தமது பார்வையில் முரணுடன் சொல்லுவதை மிக அழகாக பதிவு செய்திருக்கும்.

பல நேரங்களில், அலுவலகத்திலோ, குடும்பத்திலோ நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு என்ற ஒற்றை மைய சிந்தனையால் தான் குழப்பம், ஈகோ ஏற்படுகிறது. உண்மையில், இருவர் கூறுவதுமே சரியாக இருக்கலாம். ஒரு உண்மை, இன்னொறு உண்மைக்கு எதிரானது இல்லை. இரண்டு கோணங்களில் இருந்து பார்ப்பதால் ஏற்படும் சிந்தனைகள். அவ்வளவு தான். 

"அனைத்தும் உண்மை" என்பதில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அனைத்தும் உண்மை என்பதால் மட்டுமே அவை அனைத்தும் அறமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர், திருடிவிடுகிறார். நீ திருடினியா எனக் கேட்டால், ஆமாம் திருடினேன் என்று உண்மையைக் கூறுவதால் அவர் உத்தமனாகிவிடமாட்டார். உண்மை என்பது, அறத்தைக் கொண்டு கட்டமைக்கும் போது தான் அதற்கு மதிப்பு கிடைக்கிறது.

(மீள் பதிவு)

Wednesday 13 December 2023

பிச்சைக்காரன்

நம் பார்வைக் கோணம் நம் உணர்வுகளை எப்படி  மாற்றுகிறது என stephen covey தரும் உதாரணம் அவர் வரிகளில் ( அதன்பிறகு என் அனுபவம்)

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பலர செய்திதாள் படித்தவாறும் வேடிக்கை பாரத்தவாறும் கண்மூடியும் அமைதியாக இருந்தனர் அழகான பயணம்
அப்போது ஓருவர் சில குழந்தைகளுடன் ஏறினார்  அமைதியே போய்விட்டது குழந்தைகள் சேட்டை அழுகை  பிறரது பேப்பரை இழுப்பது என செம டார்ச்சர்.  காட்டுமிராண்டிகள் எரிச்சலுடன்  அவரிடம் சொன்னேன்  குழந்தைகள் இடைஞ்சலை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?

அவர் சொன்னார்  தப்புதான் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை  அவர்களது தாயார் சற்றுமுன் இறந்துவிட்டார் மனம்கலங்கிப்போய் இருக்கிறோம் இந்த,சூழலை கையாள என்னாலும் முடியவில்லை  அவர்களாலும் முடியவில்லை

இதைக்கேடடு ஆடிப்போனேன்  அதுவரை காட்டுமிராண்டிகளாக தெரிந்தவர்கள் தற்போது பரிதாபத்துக்கு உரியவர்களாக மாறினர் அதன்பின் அவர்கள் செய்கை எரிச்சலூட்டவில்லை.

-படித்தது

Saturday 9 December 2023

இவளை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் வேறு முக்கியமான வேலை ஒன்றும் இல்லையென எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தேன்.ஒவ்வொரு கோணமும் ஒவ்வொரு விதம். அழகு நமது பார்வையில் இல்லை.நாம் பார்த்து இரசிக்கிற கோணத்தில்தான் உள்ளது..-கோகுல் பிரசாத்Gokul Prasad (ஒரு கொரியர் ஆபிசில் உள்ள பெண்ணை வர்ணித்திருப்பார்)

பிடித்தவர்கள்கடந்து போகையில்மட்டும்..பிடரியில்முளைத்துக் கொள்கின்றனகண்கள்-கண்மணி குணசேகரன்

janakiraman


இந்த ஓவியம், இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டி வரைந்தது. 

ஓவியத்தில், ஒரு பாம்பின் வால் பகுதி மட்டும் சிறிய ஓட்டையின் வழியாக வெளியே தெரிகிறது. இதனைக் கண்ட பூனை, அது எலியின் வால் என்று நினைத்துக் கொண்டு, அந்த எலியை வெளியே வர வழைக்க அதனை இழுத்து, பிராண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய வேகமான மற்றும் யோசிக்க நேரமில்லாத வாழ்க்கையில், உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் காண்கிறோம்.

நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் அபாயங்கள் தெரியாமல், யாருடன் விளையாடுகிறோம் என்று தெரியாமல், நமது அறியாமை, ஈகோ, முன் முடிவுகள் போன்ற குணங்களால் அந்த பூனை, எலியின் வால் என நினைத்து பாம்புடன் விளையாடுவது போல வாழ்வை அணுகுகிறோம்.

நாம் எலி வாலாக நினைக்கும் பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை விட நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு ஆகியவை மிகப் பெரியவை. 

நம்மால் வாழ்வின் முழு படத்தையும் பார்க்க முடியாது.  முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை புரிந்து கொள்வோம்.

Friday 8 December 2023

ஃபேன்சி கடையில் "நல்லா எழுதுமா?" என்று கேட்டு பேனா வாங்குகிறேன். அதே கடையில் மகன் "நல்லா விளையாடுமா?" என்று கேட்டு கிரிக்கெட் பேட் வாங்குகிறான். நம்மைப் பார்த்துத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.-பேயோன்

எந்த மரத்தை வெட்டப்பொகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான கயிறையும் தாம்புக் கயிறையும் கோடரியையும் வைக்கிறோம்-வண்ணதாசன்

சில நேரம் வேடிக்கை மட்டுமே பார்க்க நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். கைகள் கட்டப்பட்ட, மனம் கட்டப்பட்ட, சொற்கள் கட்டப்பட்ட ஒரு வெற்றுயிராய் இருந்துதான் ஆகவேண்டும்.-சேரவஞ்சி

ராமனுஜம்


Productivity , Creativity

நமக்கு இந்த இரண்டில் எது தேவை?

Productivity அதாவது உற்பத்தி என்பது  அளவு அடிப்படையிலானது ( Quantitative). ஒரே விஷயத்தைத் தொடர்ச்சியாக, பொறுமையாகக் கவனச் சிதறலின்றிச் செய்வது Productivity க்கு அவசியம். ஒரு கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் என்றால் நிறையத் தகவல்களைப் பல மணி நேரம் கணினியில் ஏற்ற வேண்டியிருக்கும். ஒரு எழுத்தாளர் என்றால் உங்களுக்குத் தோன்றிய ஐடியாக்களை உட்கார்ந்து வரிசைப் படுத்தி எழுதி மீண்டும் மீண்டும்  பிழைகளைத் திருத்த வேண்டும். பூ கட்டுபவராக இருந்தால் கவனச் சிதறல் இன்றி எத்தனை மாலைகளைத் தொடுக்கிறோம் என்பதுதான் Productivity. இதனை அடைய நமக்குச் சலிப்பூட்டும் , போரடிக்கும் விஷயங்களைக் கவனச் சிதறலின்றிச் செய்ய வேண்டும். மனக் கட்டுபாடு வேண்டும். 

இதனை Hyperfocus என்கிறார் க்றிஸ் பெய்லி ( Chris Bailey). ஹைப்பர் ஃபோகஸ் என்ற தனது நூலில் இதனை விளக்குகிறார்.

அதே நேரம் Creativity என்பது புதிதாகக் கருத்துகளை  உருவாக்குவது. இது தரத்தோடு தொடர்புடையது ( qualitative). இதற்கு நம் மனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பல விஷயங்களைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் பல விஷயங்களைத் தொடர்பு படுத்திப் புதுமையான கருத்துகளை உருவாக்க முடியுமாம். இதனை Scatter Focus என்கிறார் க்றிஸ் பெய்லி.

ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பது ( Organized)  Productivity ஐ அதிகரிக்கும். Productive ஆன ஆட்கள் மேஜையும் புத்தக அலமாரியும் கம்ப்யூட்டரும் ஒழுங்காக இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.

அதே நேரம் Creativity அதிகம் இருப்பவர்கள் ஒழுங்கற்றுக் கன்னாப் பின்னா என மேஜையையும் கணினியையும் வைத்திருப்பார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

இறுதியாக

நமக்கு இரண்டுமே தேவை. ஒரு விஷயத்தை உருவாக்க Creativity வேண்டும். உருவானதை ஒழுங்காக உற்பத்தை செய்ய Productivity தேவை.

Hyperfocus , Scatter focus இரண்டுமே தேவை என்கிறார் க்றிஸ் பெய்லி.

-படித்தது

Monday 4 December 2023

பூங்காவில் கோடைகாலம் நுழைந்து கொண்டிருக்கிறது. புகைப்படக் கருவியின் விழிகளை சட்டென்று மூடித் திறப்பது போல.இலைகளெனும் சிறிய இதயங்களின் பச்சையம் நீங்கிக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சியிலிருந்து அசட்டுத்தனம் ஒழுகுவதைப் போல.-திருச்செந்தாழை

தொட்டிக்குள் இருக்கும் ஒரு மீனை எது கடலை நோக்கி உந்தித் தள்ளுகிறதோ அதுவே பயணம்.அது உங்கள் இதயத்தையும் அறிவையும் அகலப்படுத்தும். உங்கள் தலைக்குமேல் இருப்பது முழுமையான வானமல்ல, வானத்தின் ஒரு துண்டுதான் என்பதை உணரவைப்பதே மெய்யான பயணம்-மருதன்

Saturday 2 December 2023

ஜெமோ


எந்தத் தளத்திலும் ஆரம்பம் என்பது மனச்சோர்வூட்டக்கூடியதாக, கடுமையானதாகவே இருக்கும். அந்த சோதனையை உங்களால் தாண்ட முடிகிறதா என்று பாருங்கள். தாண்டினால் உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

ஒருவன் அன்றாடம் செய்யும் பணி முழுக்க அவனுக்கு மனநிறைவூட்டக்கூடியதாக இருக்கும் என்றால், அதுவே அவனுடைய கல்வியும் சாதனையும் கேளிக்கையும் வழிபாடும் ஆகும் என்றால் அவன் வாழ்க்கைதான் ஆசீர்வதிக்கப்பட்டது.

                                   - ஜெயமோகன்

அறிவையே நாட வேண்டும்.அறிவையே அறிய வேண்டும்.அறிவையே அடைய வேண்டும்-பிளேட்டோ

பாராட்டுதலை குறிக்க hats off என்று கூறுவோம். யாரையாவது அறிமுகப்படுத்தும் போது தன் தொப்பியை கழற்றுவது அக்கால பிரிட்டிஷ் பழக்கம். இது மரியாதையைக் குறிக்கும் பாராட்டுதல்.இன்றளவும் கூட்டத்தில் பேசும்போது சாதனையை அங்கீகரிக்க பயன்படுத்துகிறோம்.

அறியாமை என்பது மிகப்பெரிய சாபம்! முட்டாளாக இருப்பது ஒரு மிகப்பெரிய தண்டனை! இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தச் சாபத்தையும் தண்டனையையும் நாம் தான் நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்-சுகபோதானந்தா

Friday 1 December 2023

ஜெஃப் ப்ரவுன்


நமது இளமையில் எல்லாவற்றிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கிறோம். அந்த மாயை மீது பித்து கொள்கிறோம். உறுதியைத் தொழுகிறோம். ஆனால், வயதாகும்தோறும் மனிதர்களின் இயல்பான பிழைகளை விரும்பத் தொடங்குவோம். கடும் இன்னல்களிலிருந்து மீண்ட கதைகள், கர்மாவைப் போல நம்மைப் பின்தொடர்ந்த போராட்ட வாழ்வு, சூழலுக்கேற்பத் தன்னை வடிவமைத்த ஆன்மாவின் பலகீனங்கள், வயதாவதன் நொய்மை போன்றவற்றை ஏற்கப் பழகுவோம். நம்முடைய ஆற்றலும் போராட்டக் குணமும் வலுவிழக்கும்போதே நமது உண்மையான இயல்பென்ன என்பதை உணர்கிறோம். அத்தகைய புரிதல் மலர்ந்ததும் இவ்வுலகில் வாழ்வதற்கு எஃகு போன்ற உறுதி தேவையில்லை, பூஞ்சையான மனங்களே போதும் என்கிற தெளிவைப் பெறுகிறோம். முன்னர் குறைகளை அடையாளம்கண்ட இடத்தில், தற்போது வாழ்வை முழுமையாக அனுபவித்து அறிந்ததற்கான தடயங்களைக் காணத் தலைப்படுகிறோம்.

- ஜெஃப் பிரவுன்.

அகம் முகம்


அகம் முகம்

Raajaa Chandrasekar 

கவிஞரும் இயக்குநருமாகிய திரு. ராஜா சந்திரசேகர் அவர்கள் என் வாசிப்பின் முன்னத்தி ஏர். அந்திமழை வார இதழில் தான் கண்ட மனிதர்களை எழுத்தின் வழியே நமக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்வின் உன்னத தருணங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் உன்னத பணியை செய்து இருக்கிறார். அகம் புறம் புத்தகத்தின் தலைப்பே உலகை திறந்து பார்க்கும் சாளரம் போல அழகான் கவித்துவமான தலைப்பு. இதில் சந்திப்புகளை உயிர்ப்புள்ளதாக்கும் எளிய மனிதர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பார். இந்தபக்கத்தை படித்தபின் திருப்புவதற்குசில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மனிதர்களின் கதையின் முடியிலும் ஒரு உயிரின் வாதையை மெல்லிய எதார்த்தத்தை நமக்கு சொல்லியிருப்பார்.கற்றுக் கொள்ள தயாராய் இருக்கும் போது உன் குரு உன் முன்னால் தோன்றுவார். நாம் எப்போதும் கற்றுக் கொள்ள இருக்க வேண்டும் என்பதற்கால சொல்லப்பட்டதை ஒவ்வொரு சிறு கட்டுரையிலும் தான் கற்றவற்றின் வழியே நமக்கும் வழிகாட்டுகிறார்.

இந்தத் தொகுப்பில் உள்ள மனிதர்கள் யாவும் எளிய மனிதர்கள். அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்.
ஒவ்வொரு காத்திருப்பின் முடிவிலும் ஏதேனும் ஒரு புதையல் கிடைப்பது போல் ஒவ்வொரு மனிதர்களை சந்தித்த பின் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரிகள் நாம் சிந்திப்பதற்கு தந்திருப்பது எனர்ஜி டானிக். உதாரணத்திற்கு 
"இறந்த காலத்தை
நினைவுகளால் திற.
நிகழ்காலத்தைச்
செயல்களால் திற.
எதிர்காலத்தை
நம்பிக்கையால் திற" எனும் வரி.

அந்த மனநலக் காப்பகத்தின் விளக்குகள் நோய்மையுடன் முணுமுணுக்கின்றன எனும் வரி கவித்துவம். அதே போல் ",சில சொற்கள் தருணங்களை அழகாக்குகின்றன.அதில் மனிதர்கள் அழகாகத் தெரிவார்கள் எனும் வரியைபடித்தவுடன் நம் மனமும் நமக்கே அழகாய்த் தெரிகிறது.

டீஸ்பூன் அளவுக்கு புன்னகை சேருங்கள். நாள் இனிப்பாகும் என்பது பாசிட்டிவ் திங்கிங்கிற்கு எடுத்துக்காட்டு.வாழ்க்கையோடு ஓடுகிறீர்களா? வாழ்க்கை ஓடவைக்கிறது!

"வார்த்தைகள் பூப் போன்றவை. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் மதிப்பைப் பெற முடியும்" என்பார் விக்டர் ஹ்யூகோ. இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர்களையும் சரியாக வார்த்தைகளில் தொடுத்து மாலையாக்கி..நம் கைகளில் கொடுத்திருக்கிறார் ராஜா சந்திரசேகர் அவர்கள்.வாழ்த்துகள் சார்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday 28 November 2023

மனிதனுடைய கௌரவம் அவன் நிழல் மாதிரி. தினசரி வாழ்க்கையின் வெளிச்சம், நடைமுறை அவன்மீது பட்டு ஒரு கௌரவ நிழலை அவனுக்குத் தரும். அவனோடு பிரியாது வரும். அந்த நிழல் மனிதனில்லை. அதற்கு வலியில்லை. அது உயிரில்லை. ஆனால் அது கூடவே வரும். தனியே இருட்டில் கௌரவம் ஏதுமில்லை. நாலு பேர் கண் வெளிச்சம்பட, பின்னால் அடைகாத்து நிற்கும். நிழல்கள் மட்டும் யுத்தம் செய்யும்-பாலகுமாரன்

ஒருவர் அடுத்தவரை ஏதேனும் ஒரு வேலையைச் செய்ய வைப்பதற்கு எத்தனை வழிகள் உள்ளன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு ஒரே ஒருவழிதான் உண்டு. அச்செயலைச் செய்வதற்கு அவர்களை விருப்பம் கொள்ளச் செய்வதுதான் அது.-டேல் கார்னகி

Sunday 26 November 2023

தெரியும் என்கிற பிரமையை முதலில் ஒழி. தெரியாது என்கிற தெளிவோடு இரு. இதுவே தெரிந்து கொள்ளலைச் சுலபமாக்கும்-பாலகுமாரன்

யுவன்

தன்னிடம் ரகசியங்கள் எதுவுமில்லை என்று திறந்து கிடக்கும் வெளியைப் பார்க்கும் போது மனம் வெகுவாகக் கனிந்து விடுகிறது. கட்டங்கரையில் அங்கங்கே முளைத்திருக்கும் சிறுபுற்கள், மேலே ஒன்றுமில்லாவிட்டாலும் தரை தனக்குள் ஏதேனும் ரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிக்க வேர்களைஅனுப்பி இருப்பதாக பாவனையில் இறுமாப்பாக அசைகின்றன.

என்னுடையது புல்மனமல்ல. மனித மனம். பரந்தவெளியைப் பார்க்கும் போது நானும் அதே அளவு விஸ்தாரம் அடைகிறேன்

-யுவன் சந்திரசேகர்

Saturday 25 November 2023

எனக்கு வீம்பு அதிகம்என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.இல்லவே இல்லைஎன்ன செய்வதென்று தெரியாதஎன் இயலாமைக்குநான் அணியும் முகமூடி அது..!!-மனுஷ்ய புத்திரன்

அழுகை


அழுகை

அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.

அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.

தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.

இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.

கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.

-படித்தது

Wednesday 22 November 2023

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அனைத்திந்திய பணிகள் சட்டம் 1951ல் திருத்தம் கொண்டு வந்து இந்திய வனப்பணி (I.F.S) எனும் பிரிவு வந்தது.சூழலியல் குறுத்து பல்வேறு அரும்பணிகளை செய்துள்ளார்.

janakiraman


"என்னைப் போலவே அனைவரும்..."

சுற்றி இருப்பவர்கள் யாரும் சரியில்லை, என்னை யாருமே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள், என்னை விட மற்றவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நமக்கு வாழ்வில்,  சில தொய்வான நாட்களில் தோன்றக்கூடும். அப்போது "என்னைப் போலவே" எனும் சோதனையை செய்து நாம் செய்து பார்க்கலாம்.

அது போன்ற தருணங்களில், மக்கள் கூட்டம் அதிகம் புழங்கும் வீதிக்கு வரனும். ட்ராஃபிக் சிக்னல் அருகே வருவது நல்லது. அந்த வீதியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கும் யாரையாவது ஒருவரை கவனிக்க ஃபிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அவரைப் பார்த்து, உங்க மனதுக்குள் அவரைப் பற்றி அனுமானிக்க ஆரம்பியுங்கள். "என்னைப் போலவே இவரும் தோல்வியை விரும்புவதில்லை", "என்னைப் போலவே இவரும் மற்றவரின் அன்பையும் ஆருதலையும் விரும்புகிறவர்", "என்னைப் போலவே இவருக்கும் இழப்புகள் நடந்திருக்கும்" என சொல்லிக்கொள்ளுங்கள். நிச்சயம் அந்தத் தருணத்தில் அந்த அநாமதேய மனிதரின் மனதில் ஓடும் எண்ணத்தை நம்மால் மிகச சரியாக அறிந்து கொள்ளமுடியாது என்றாலும் மேலே கூறியவை அவருக்கும் பொருந்தும். யாரென்றே தெரியாத மனிதருக்கும் நமக்கும் பொதுவான விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன. மற்றவர் குறித்து நிறைய விஷயங்கள் நமக்கும் தெரிகிறது. மனிதர்கள் அனைவரும் தம்மை யாரும் வெறுத்து ஒதுக்கக்கூடாது என்றும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் விரும்புகின்றனர்.

இதனை புரிந்துகொள்ளும் போது, நமது தற்காலிக விரக்தியும் வேதனையும் இழப்பும் இயல்பானவை என புரிந்து மனம் அமைதியுறும்.

- From the book, "Welcoming the unwelcome" by, Pema Chödron.

வீடு என்பது விடுதலையான இடம். எந்த இடத்தில் கால் நீட்டி மல்லாந்து கவலையின்றி சாய முடியுமோ, அசந்து தூங்க முடியுமோ, பயமின்றி உலவ முடியுமோ அதுவே வீடு. வீடு என்பது விடுதலையான இடம்.-பாலகுமாரன்

Sunday 19 November 2023

பவர் பிளே


Power Play

பவா் பிளே என்று அழைக்கப்படும் களத்தடுப்பு விதிமுறைகள் முதன்முறையாக 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்த காரணம் 1980ம் ஆண்டு இறுதிப்போட்டியில் நடந்த ஒரு சம்பவமே.

மெல்போ்னில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு கடைசிப்பந்தில் நான்கு ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. மேற்கிந்திய அணியின் தலைவா் கிளைவ் லொயிட் ஒருநாள் போட்டியில் யாரும் உபயோகிக்காத ஒரு யுத்தியை பயன்படுத்தினாா். இறுதிப்பந்துக்கு சகல களத்தடுப்பாளா்களையும் எல்லைக்கோட்டுக்கு அருகே அனுப்பினாா். மெல்போ்ன் மைதானம் மிகப்பொியது. சிக்ஸா் அடிப்பது சிரமம். அதையும்விட சிரமமானது எல்லைக்கோட்டு வீரா்களை தாண்டி பௌண்டாி அடிப்பது. மைக்கல் ஹோல்டிங் வீசிய பந்தில் இங்கிலாந்து அணித்தலைவா் மைக் பிரேயாா்லியினால் ஒரு ஓட்டமே பெற முடிந்தது. மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால் இறுதிப்பந்தில் நடந்த நிகழ்வால் போட்டியின் சுவாரசியமே குறைந்தது.

போட்டி ஏற்பாட்டாளா்கள் இச்சிக்கலை தீா்க்க புதிய வழிமுறை ஒன்றைத்தேடினா். அவா்களது கண்டுபிடிப்புதான் field restrictions எனப்படும் களத்தடுப்பு விதிமுறைகள். இதன்படி ஆடுகளத்தை(pitch) சுற்றி 30 யாா் ஆரை(radius) கொண்ட வட்டம் ஒன்று வரையப்படும். போட்டியின் முதல் 15 ஓவா்களுக்கு இந்த வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளா்களே அனுமதிக்கப்படுவா். 15இலிருந்து 50 ஓவா் வரைக்கும் இந்த வட்டத்திற்குள்ளே கண்டிப்பாக நால்வா் இருக்கவேண்டும்.

போட்டியின் முதற் 15 ஓவா்களுக்கு இருவா் மட்டுமே வட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடலாம் என்ற விதி ஒருநாள்போட்டியின் சுவாரசியத்தை அதிகாிக்க செய்தது. முன்னா் நடந்த போட்டிகளில் ஆரம்ப ஆட்டக்காரா்கள் முதல் 15–20 ஓவா்களில் மெதுவாக ஆடி விக்கெட்களை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தனா். புதிய விதி கிாிக்கெட்டை விறுவிறுப்பாக்கியது. வட்டத்திற்குள் இருக்கும் வீரா்களை தாண்டி அடித்தால் 2 அல்லது 4 ஓட்டங்களை நிச்சயம் பெறலாம் என்ற நிலை வந்தது.

1981இலிருந்து 1992 வரை ஆஸ்திரேலிய உலகத்தொடா் கோப்பையில் இருந்த இந்த விதி 1992 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து சகல ஒருநாள் போட்டிகளுக்குமான விதியாக மாறியது.

1992 உலகக்கோப்பை போட்டியில்தான் முதன்முறையாக அதிரடி ஆட்ட வீரா்கள் ஆரம்ப வீரா்களாக களமிறங்கினா். நியூசிலாந்தின் சாா்பாக மாா்க் கிரேட்பட்ச் இங்கிலாந்தின் சாா்பாக இயன் போத்தம் போன்றோா் முதல் 15 ஓவா்களில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்கவென்றே ஆரம்ப வீரா்களாக களமிறக்கப்பட்டனா்.

2005இல் field restrictions எனப்படுவது பவா்பிளே என பெயா்மாற்றப்பட்டது. ஐஸ் ஹாக்கியில் பயன்படுத்தும் பவா்பிளே என்ற சொல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

2005இலிருந்து பவா்பிளே விதிகள் Trial&Error முறை மூலம் பல மாற்றங்களை பெற்றள்ளது

-படித்தது

உலகில் முதல் ஒரு வழிச்சாலை லண்டனில் உள்ள அல்பமாரேல் சாலை.1833ல் தொடங்கி ராயல் நூலகத்தில் மைக்கேல் ஃபாரடே தனது அறிவியல் எழுச்சி உரைகளை நிகழ்த்தினார்.மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஞாயிறுகளின் மதியம் அச்சாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டது-ஆயிஷா நடராசன்

புரட்சிக்காரன் என்பவன் பழி தீர்த்துக் கொள்ளும் பயங்கரவாதி அல்லன்; அவன் பிறக்கப்போகும் சமுதாயத்தின் மருத்துவச்சி-பகவதிசரண் ஓரா(பகத்சிங்கின் தோழர்)

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறைய குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. ஹென்றி மில்லர்

Friday 10 November 2023

ஒரு மழைக்கும்இன்னொரு மழைக்குமிடையில்தன்னைஉலர்த்திச் செல்கிறதுவெயில்-கூடல்தாரிக்

நக்கீரன்


தென் அமெரிக்காவின் ஏண்டிஸ் மலைத் தொடரில் வசிக்கும் சாமன் என்கிற தொல்குடி மூதாட்டியை சிலர் தேடி செல்கின்றனர். அவரை சந்தித்ததும் உலகம் அழியப் போகிறதா தாயே? என்றனர்..

 அதற்கு அவர் சிரித்துக் கொண்டு உலகம் எப்படி அழியும்? அதற்கு ஒரு ஆபத்தும் இல்லை. மனிதர்களாகிய நாம் தான் ஆபத்தில் இருக்கிறோம். நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் பூமி நம்மை ஒட்டுண்ணிகளை உதறுவது போல் உதறிவிட்டு போய்விடுவாள் என்றார்.

- சூழலியலாளர் நக்கீரனின் கட்டுரையிலிருந்து

Thursday 9 November 2023

மிக  மிக அழகென்றாலும் தரையில் தத்திக் கொண்டிருக்கும் பறவைகள், ஒரே சமயம் வெறுப்பையும், பரிதவிப்பையும் கோரி நிற்கிறது-படித்தது

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்கிறது பழமொழி. விருந்தாளிகள் மேல் தலைநாள் உள்ள ஆர்வம் மறுநாள் இருப்பதில்லை. அது தேய்ந்து கொண்டே போகிறது. முதல் நாள் பரிமாறி விட்டு அழைப்பார்கள். மறுநாள் அமர வைத்துப் பரிமாறுவார்கள். மூன்றாம் நாளிலோ தட்டில் முகம் தெரிந்து விடுகிறது. நாம் அதிலேயே சீவிச் சிங்காரித்துக் கொள்ளலாம்-இசை

இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது’. -உமா மகேஸ்வரி

தேவன்


தேவன் எழுத்துகளில் சில துளிகள்
------
வண்டில பிரச்சனை.. ஏதாச்சும் ஆயில் இருக்கா ?

என்ன ஆயில் ?

விளக்கெண்ணெய் இருந்தாகூட போதும்

விளக்கெண்ணெய் இல்ல.. ஆஸ்பத்திரியில பேதி மாத்திரை கொடுத்தாங்க. விளக்கெண்ணெய்க்கு பதிலா இதை பயன்படுத்தலாமா ?

-------

சிஐடி சந்துரு தனி ரகமானவன் மட்டுமல்ல தன்னந்தனி ரகமானவனும்கூட

--------

கார்ல நாய் இருக்கா பாருங்க

நம்ம ரெண்டு பேரைத் தவிர வேறு நாய் இல்லையே

------

Tuesday 7 November 2023

குளிரும்போது முற்றிலுமாக குளிரில் இரு;வெப்பமாக இருக்கும் சமயம் முழுமையாக வெப்பத்தில் ஊடாகிச் செல்.மாற்றமுடியாதவைகள் எல்லாம்,என்னென்னவாக இருக்கின்றனவோ அவற்றுடன் நாம் முழுமையாக ஒன்றிவிட்டால் நாம் அவற்றின் அடிமையாகாமல் எஜமானன் ஆகிவிடுவோம்-டோஜான்

சுதர்சன்


லியோவில் ஒலிக்கும், "தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்" பாடலில் வருகிற, " IR8 நெல்லைப் போல அவசரமா சமைஞ்ச அய்த்தை மக" வரிகளின் Subtitle பார்த்தபோது தான் IR8 நெல் வகை என்று தெளிவாக அறிந்ததாகச் சிலர் சொன்னார்கள். அந்த நெல்வகை ஏன் உவமைக்கு அதிகமா பயன்பட்டது?

முன்னர் அம்மா விவசாயம் செய்த காலத்தில் மொட்டைக் கறுப்பன் நெல் போடுவார்கள். நல்ல பெரிய சிவப்பு அரிசி. ஆனால் ஆறு மாதம் ஆகும். ஒவ்வொருவரும் தேவையான நெல்வகையை போட்டுக்கொள்வார்கள். அதேநேரம் இந்த IR8 வகை நெல் அதைவிட குறைவான காலத்தில் விளைச்சல் தரும். வெள்ளை. 

IR8 நெல்வகை பற்றி நிறைய பாடல்களில் வந்திருக்கும். அண்டங்காக்க கொண்டக்காரி பாட்டில் கூட வைரமுத்து IR8 பல்லுக்காரி என்று எழுதியிருப்பார். IR8 நாத்துக்கட்டை என்று மஜாவில் ஒரு பாடல் இருக்கிறது. அதற்கு முதலும் நிறைய பாடல்களில் இந்த நெல்வகை வரும். 

காரணம் எழுபதுகள், எண்பதுகள் என்று இந்த நெல்வகை நிறைய விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டெயருக்கே நல்ல விளைச்சல் தந்த நெல்வகை. பஞ்சத்திலிருந்து மீட்ட நெல்வகை என்று சொல்வார்கள். நல்ல ஹைபிரிட் இனம். அந்தக் காலத்தில் இந்த நெல்வகை பிரபலம் என்பதால் நிறைய கிராமிய பின்புலம் உள்ள பாடல்களில் வரும். 

வைரமுத்து இந்தப் பாடலில் இதை அழகா கிராமியச் சூழலுக்கு கையாண்டிருப்பார்.

-சுதர்சன்

Friday 3 November 2023

வண்ணதாசன்


வாசலில் அடித்துக் கொண்டிருந்த வெயில் போராவும் ஒரு உருவம் போலத் திரண்டு வந்து அவன் தோளில் கை வைத்து, 'கோமு அக்கா'.
 என்று கூப்பிடச் செல்வது போல் இருந்தது.

'கோமு அக்கா'. முதல் தடவையை விட இரண்டாம் தடவை உரக்க கூப்பிடும்போது,உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தொட்டில் அசைந்து, கைப்பிள்ளை அழுகை கேட்க ஆரம்பித்தது. அழுகிற குரல் கனத்துக்கொண்டு வீறிட்டு வெளியே வந்து, வெயிலுடன் உடனடியாக கலந்து பளீர் என்று நிரம்பியது.

 மேற்கொண்டு கூப்பிட முடியாமல், இரண்டடி முன்னால் நகர்ந்து,ராமையா, வாசலில் ஒட்டப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி என்ற பெரிய நோட்டீஸ்ம் வெளிறினது போன்று கண்ணில் பட்டது.

கோமு அக்காவின் புகைப்படத்துடன் பெரிய கருப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்த அதில், கோமு அக்கா வேலை பார்த்த பள்ளி மாணவ மாணவிகள் இரங்கல் தெரிவிக்கிற வரிகள் இருந்தன.

 கீழே வலது ஓரத்தில் அச்சகத்தின் பெயர் இருக்கிற இடத்தில் பழனி என்று மட்டும் இருந்தது.

 தன்னுடைய பெயரையும் அச்சடிக்கப் போதுமான இடம் அதில் இருப்பதாக ராமையாவுக்கு தோன்றிற்று

 -வண்ணதாசன்
(அச்சுட்டு வெளியிடுபவர்கள் கதையில்)

உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் உங்கள் கவலைகளைப் பற்றி மனம் விட்டு பேசுவது, கவலையைப் போக்குவதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று-ரோஸ் ஹில்ஃபெர்டிங்

Monday 30 October 2023

கனவுகள் தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும்-மாரி செல்வராஜ்

முன்னிரவில் தேரடித்தெரு பின்னிரவில் கோடங்கி தோப்புத் தெரு அதிகாலையில்படப் படித்தெரு தெருத்தெருவாய் தேடி அலைகிறான்குடுகுடுப்பைக்காரன் தனக்கொரு நல்ல காலத்தை -ஸ்ரீதர் பாரதி

சு.வேணுகோபால்


விதவிதமான தனிமைகள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு தான் வந்திருக்கின்றன. சில தனிமைகள் சமநிலையை தேடிக் கொண்டும், சில தனிமைகள் சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டும் செய்கின்றன. 

நிகழ முடியாத விஷயங்கள் மனதை புரட்டி அலைக்கழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப் போய் விடுகின்றன.

 சிதறியதில் மிச்சம் மீதியை நினைவில் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்துவிடுகிற போது, ஓர் அமைதி மட்டும் சொல்ல முடியாத அமைதியாய் தொடர்ந்து வருகிறது

-சு.வேணுகோபால்

Sunday 29 October 2023

பறவைகளின் இடம் கூடோ , மரக்கிளையோ அல்ல. அளவற்று விரிந்திருக்கும் ஆகாயத்தில் திரிவதே பறவையாயிருப்பதன் தன்மை-ஹான்ஸ்

ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் உள்ள அதே அளவு இடைவெளி, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது-யுவன் சந்திரசேகர்

உலகில் ஏதாவது ஒரு காரியத்தை சிறிது கூட அலுப்பே இல்லாமல் செய்து கொண்டிருக்கலாம் என்றால்,அது படிப்பது ஒன்றுதான்.வாசகனாக இருப்பதைவிடப் பரம சிலாக்கியமான விஷயம் எதுவுமே இல்லை.-வண்ணநிலவன்

Saturday 28 October 2023

குற்றமும் தண்டனையும்

எந்த ஒரு குற்றவாளிக்கும் குற்றம் செய்யும் சரியான தருணத்தில், மன உறுதியும் ஆராயும் திறனும் எப்படியோ கலந்து போய்விடுகின்றன. எந்த சமயத்தில் அதிகமான எச்சரிக்கை உணவும் கூர்மையாக விரைந்து முடிவெடுக்கும் திறனும் மிக அவசியமாக தேவையோ அப்போது அதற்கு நேர் மாறாக- கிட்டத்தட்ட எல்லா குற்றவாளிகளுக்குமே குழந்தைத்தனமான அவசரம் தொற்றிக் கொண்டு விடுகிறது.

 அந்த நேரத்தில் கிரகணம் பிடித்தது போல பகுத்தறியும் சக்தி மங்கிப்போய் மன உறுதியும் குறைந்து விடுகிறது. இதையெல்லாம் படிப்படியாக ஒரு நோயைப் போல வளர்ந்து கொண்டே வந்து குற்றம் செய்யும் நேரத்துக்கு சற்று முன்பாக உச்சத்தை எட்டி விடுகின்றன.

 சிலருக்கு குற்றம் செய்கின்ற நேரத்திலும் வேறு சிலருக்கு அதன் பிறகும் கூட இந்த நிலை மாறாமல் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களை பொருத்து இது மாறுபடுகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளும் கூட நோய் பிடித்தது போலவே அமைந்து விடுகின்றன. குற்றத்தை விதைப்பதே எப்படி ஒரு நோய்தானா அல்லது குற்றத்தின் தன்மை இப்படிப்பட்ட நோயின் தாக்கத்தோடு சேருகையில் வேறு வகையாக முடிந்து விடுகிறதா என்ற கேள்விக்கு அவனிடம் தெளிவான முடிவை எதுவுமில்லை.

-குற்றமும் தண்டனையும்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

நிம்மதியடைய வழி ஏதும் இல்லை. ஆனால் குழப்பம் அடைய வழிகள் உண்டு. குழப்பம் தரக்கூடியதை செய்யாமல் இருந்தால் ஒருவன் நிம்மதியாக இருப்பான்-ஓஷோ

Thursday 26 October 2023

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது முட்டாளாக இருக்கிறான். அந்த எல்லையைத் தாண்டாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்-எல்பர்ட் ஹப்பார்ட்

புல்லுருவி


புல்லுருவி - என்பது ஒரு குறிப்பிட்ட மரத்தில் தனது வேரை ஊன்றிக் கொண்டு - அதிலேயே தொற்றிப் படர்ந்து வளரும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த செடி /கொடியாகும்.

தன்னை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, தான் படர்ந்த மரத்தின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அம்மரத்திற்கே இடையூறு செய்துவிடும் ஒட்டுண்ணி (Parasites) இனம் இவை.

இவை எந்த மரத்தின் மீது வளர்கிறதோ - அதன் சத்துக்களின் மூலமாக அம்மரத்தின் இயல்புகளை தகவமைத்துக் கொள்ளுபவை.

தான் வளர இடம் கொடுத்த மரத்திற்கு கேடு செய்வதால்தான் - பிறரோடு ஒட்டி உறவாடி, அவரைச் சார்ந்து வாழ்ந்து - அவருக்கே துரோகம் இழைப்பவரை புல்லுருவி என இகழ்ந்து சொல்வர்.

-படித்தது

Wednesday 25 October 2023

மின்மினி பூச்சி


மின்மினிப் பூச்சிகள் இப்போது கண்களில் தட்டுப்படுவதில்லையே....என்ன காரணம்?
 
 ஃபயர் ஃபிளைஸ்( Fire flies) எனப்படும் மின்மினிப்பூச்சிகளை நாம் மழை, மற்றும்  குளிர்காலங்களில் பார்க்க முடியாது.அப்போது அவை மண்ணுக்கு அடியில் போய் ஒட்டிக்கொண்டு மண்புழுக்களை  உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் . 

வெயில் காலத்தில் மட்டுமே வெளியே வரும். அதுதான் அதன் இனப்பெருக்க காலம் கூட.
இந்த சமயத்தில்தான் மின்மினிப்பூச்சிகள்  வெளிப்பட்டு நம் பார்வைக்கு கிடைக்கிறது.

இந்த பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு ஒளிர் செல்கள் இரவு நேரங்களில் செயல்பட ஆரம்பிக்கின்றன .
இவற்றில் உள்ள லூசிபெரின் ( Luciferin)  என்கிற  ஒரு ரசாயனப் பொருள் தான் அந்த பூச்சிகளின் ஒளி ஜாலத்துக்கு காரணமாக அமைகிறது .

பூச்சிகள் சுவாசிக்கும் போது அதன் உடலுக்குள் போகும் ஆக்ஸிஜன் உள்ளே இருக்கும் ரசாயனப் பொருளான லூசிபெரினோடு இணைகிறது.
பின் லூசிபெரேஸ் (Luciferase )என்கின்ற என்சைமோடு கலந்து ஆக்ஸிலூரி பெரிலின் என்கிற  ஒளிரும் தன்மையாக மாறுகிறது.   

இப்படி ஒரு பூச்சியினம் வெளிப்படுத்தும் ஒளியின் நிகழ்வுக்கு பயோலூமைன்  சீன்ஸ் ( Bioluminescence) என்று பெயர் .

இதில் உள்ள இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெண்  பூச்சி வெளியிடும் ஒளியின் அளவை காட்டிலும் ஆண் பூச்சி வெளியிடும் ஒளியின் அளவு அதிகம் என்பதுதான். 

ஒவ்வொரு பூச்சியும்  5 வினாடிகள் இடைவெளி விட்டு ஒளிர்வதால் வெளிச்சம் நமக்கு கண் சிமிட்டுவது போல் தெரியும். 

பத்தாயிரம் மின்மினிப்பூச்சிகள் ஒரே இடத்தில் இருந்தால் 40 வாட்ஸ் பல்பு எரியும் போது எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ அந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கும் என்பது ஹைலைட்.

உங்கள் குழுவுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, எடுத்துகாட்டும்கூட. ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையில் தன் தலைவன் / தலைவி எப்படி யோசிப்பார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்கிற தெளிவாகத் தெரியும்போது அவர்களும் அந்த அடி ஒற்றிதான் நடப்பார்கள். Think like a leader என்று சொல்வது உண்டு. நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு தலைவர் என்கிற எண்ணம் மேலோங்கும் போது உங்களைப் போலவே நடக்க, வளர அவர்களும் முயற்சிப்பார்கள்-படித்தது

மகுடேஸ்வரன்


எழுத்தாளர் தோழர்கள் கவனத்துக்கு:
ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி ? 
OO

எழுதும்போது ஒற்றுப் பிழை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தெரிந்ததுபோல் தோன்றினாலும் எழுதும்போது நம்மையறியாமல் ஒரு பிழை தோன்றிவிடும். ஒற்று இட வேண்டிய இடாமல் விட்டுவிடுவோம். வேண்டாத இடத்தில் ஒற்றெழுத்து வந்துவிடும். ஒற்றுப் பிழை, வலிமிகுதல் பிழை, சந்திப்பிழை, சொற்களின் ஈற்றில் க்ச்த்ப் போடுவதில் பிழை என்று பலவாறும் அழைக்கப்படுவது இதுதான். இதற்குச் சிலவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் போதும். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதலாம். அவற்றைப் பார்ப்போம் !

1). அந்த இந்த எந்த ஆகிய சுட்டுச் சொற்களை அடுத்து ஒற்று இடவேண்டும். அந்தக் காடு, இந்தச் செய்தி, எந்தப் பாட்டு.

2). அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடச்சுட்டுகளை அடுத்தும் கட்டாயம் வல்லொற்று வரும். அங்குச் சென்றான், இங்குக் கிடைக்கும், எங்குப் போனாய் ?

3). ஐ என்கின்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் உறுதியாக ஒற்று மிகும். அன்பைத் தேடி, உண்மையைச் சொல், படித்ததைக் கூறு.

4). கு என்கின்ற நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் கட்டாயமாக ஒற்று மிகும். காட்டுக்குச் சென்றான், வந்தவர்க்குக் கிடைத்தது. பாட்டுக்குப் பாட்டு.

6). அஃறிணைப் பெயரை அடுத்து அதற்கு உடைமையான இன்னொரு பெயர்ச்சொல் வந்தால் கட்டாயம் வலிமிகும். குருவிக் கூடு, மாட்டுக்கொம்பு.

7). இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து ஒரே பொருளைக் குறிக்குமானால் அங்கே வலிமிகும். அதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பார்கள். வாழைப்பழம், சிட்டுக்குருவி, வாடைக்காற்று.

8). ஊர்ப்பெயரை அடுத்து எந்தச் சொல் வந்தாலும் கட்டாயம் வல்லினமெய்யைப் போட்டுவிட வேண்டும். சென்னைக் கல்லூரி, மதுரைத் தமிழ்ச்சங்கம், நெல்லைத் திருவிழா, கோவூர்க்கிழார்.  

9). இரண்டு பெயர்ச்சொற்களில் முதலாவது உவமை நோக்கில் வந்தால் கட்டாயம் ஒற்று வரும். இதனை உவமைத்தொகை என்பார்கள். தாமரைக்கண், மலைத்தோள்.

10). ஒரு பெயர்ச்சொல் ஓரெழுத்தால் மட்டுமே ஆகியிருந்தால் வல்லொற்று தோன்றும். பூக்காடு, தீப்பிழம்பு.

11). டு, று என்று முடியும் பெயர்ச்சொற்கள் இன்னொரு பெயர்ச்சொல்லோடு இரட்டித்து வரும் இடங்களில் கட்டாயம் வலிமிகும். வயிற்றுப்பசி, காட்டுத்தடம், ஆற்றுத்தண்ணீர்.

12). ம் என்று முடியும் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ம் மறைந்து ஒற்று தோன்றும். மாவட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாநிலக் குழு.

13). இரண்டு வினைச்சொற்கள் தொடராக வரும்போது பெரும்பாலும் வலிமிகும். ஆடிச் சென்றான், அள்ளிக் கொடுத்தான், எடுத்துச் சென்றாள், முடித்துக் காட்டு  (மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் விதிவிலக்கு – எழுந்து சென்றான், செய்து கொடுத்தான்)

14). ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குக் கட்டாயம் வலிமிகும். ஓடாக் குதிரை, செல்லாக் காசு, வாராக்கடன்.

15). ஒரு பொருளின் அளவு, நிறம், வடிவம் சார்ந்த பண்புப் பெயர்களோடு சேர்த்து அப்பொருளைச் சொன்னால் கட்டாயம் வலிமிகும் – நெட்டைத்தென்னை, வெள்ளைச் சட்டை, வட்டத்தொட்டி.

இவை தொடக்கநிலை உதவிக் குறிப்புகள். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் பெரும்பான்மையான ஒற்றுப் பிழைகளைத் தவிர்த்துவிடலாம்.

- கவிஞர் மகுடேசுவரன்  
(தினமலர் பட்டத்தில் வெளிவந்தது.)

Monday 23 October 2023

ஊக்கம்



ஒரு திராட்சை தோட்டக்காரர் பழங்கள் எல்லாம் பழுத்ததால் யார் தன் தோட்டத்தில் அந்தி சாயும் வரை பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பொற்காசு அளிக்கப்படும் என அறிவிக்கிறார்.

 சிலர் காலையில் வருகிறார்கள், சிலர் மதியம் வருகிறார்கள், சிலர் கடைசி நேரத்தில் வருகிறார்கள். அவர்களுக்கும் பணி தரப்பட்டு ஒரு நாணயம் வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவன் நான் காலையிலிருந்து பணிபுரிகிறேன் எனக்கும் ஒரு நாணயம் அந்தி சாய்வதற்கு முன் வந்த மற்றவர்களுக்கும் ஒரு நாணயம். இது எந்த வகையில் நியாயம்? என்கிறார். 

அதை கேட்ட தோட்டக்காரர் நான் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. உனக்கு ஏதாவது கொடுத்த வாக்கை மீறினேனா, அடுத்தவர்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? என்றார்.

 நாம் ஒருபோதும் அடுத்தவர்களோடு ஒப்பிடக்கூடாது. அது ஊக்கத்தை குறைக்கும் ஆயுதம் என்று அந்த உருவக அதை தெளிவுபடுத்துகிறது 

இனிய காலை

உலகிலே இருக்கிற எந்த விலங்கும், மற்ற விலங்குகளை வெறும் பசிக்காகவும் இறைக்காகவும் மட்டும்தான் கொன்று தின்னுமே தவிர மனிதர்களைப் போல பொழுதுபோக்குக்காக, விருதுகள் பெறுவதற்காக, பொருள் ஈட்டுவதற்காக ஒரு நாளும் மற்ற விலங்குகளை கொலை செய்வதில்லை -தியோடர் பாஸ்கரன்

ரயில் பிரேக்


ரயிலில் பிரேக்

இரயில் வண்டிகளில் உள்ள ப்ரேக் இருவகைப்படும். ஒன்று காற்றழுத்தத்தால் வேலை செய்யும். மற்றொரு முறை வெற்றிடம் (vacuum) மூலம் வேலை செய்யும்.
இரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலி இரயிலின் முதல் முக்கிய ப்ரேக் என்பதுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அபாய சங்கிலியை இழுத்தவுடன் அது ப்ரேக்கில் உள்ள வெற்றிடத்தை வெளிக்காற்றால் நிரப்பி விடும், அல்லது அதில் உள்ள அழுத்தத்தை உடனடியாக குறைத்து விடும். அதனால் இரயில் உடனே ஒரு பலத்த அதிர்ச்சியுடன் நிறுத்திவிடும்.
இதைத்தவிர, ஓட்டுநர் அருகே ஆபத்து காலத்தில் அவரே இயக்கவும் ஒரு அமைப்பு இருக்கும்.

நவீன இரயில் வண்டிகளில் அபாய சங்கிலியை இழுத்தால் அது வண்டியை உடனடியாக நிறுத்தாது. ஆனால் ஓட்டுனர் அறையில் இருக்கும் அபாய விளக்கு எரிந்து, அலாரம் ஒலிக்கும். அவர் உடனடியாக எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என அறியலாம். அவர் அந்த இடத்தில் உள்ள பயணிகளை காணொலியில் கண்டு பேச முடியும். காரணத்தை அறிந்து அவர் இரயிலை அதிர்ச்சி இன்றி சௌகரியப்பட்ட இடத்தில் மெதுவாக நிறுத்த முடியும்.
(படம் : கூகுள்)

நேர்மையற்ற திறமை அயோக்கியத்தனம், திறமையற்ற நேர்மை கையாலாகாததனம் -சூஃபி

ஐஸ் பாய் விளையாட்டில் ஐஸ்பாய் என்பது "ஐ ஸ்பை" என்பதாம்.தேடி வருபவரின் முதுகை அவருக்கு தெரியாமல் தொட வேண்டும் ஒற்றன் போல#info

Saturday 21 October 2023

ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவசரப்படாமல், நிதானமாகவும் கவனமாகவும் செயல்படவேண்டும். அவசரப்பட்டு தவறான முடிவுகளையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டால், பிறகு காலத்திற்கும் அவற்றை அழிக்கவோ,திருத்திக் கொள்ள முடியாமல் போய்விடும்-தஸ்தயெவ்ஸ்கி

விடிந்ததும் தாமரையிடம் கேட்டேன், 'வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?'மெதுவாக தன் கையை அது விரித்தது, அதில் எதுவும் இல்லை.-டெப்ரா வூலர்ட் பெண்டர்

ரூமி


தண்ணீரைத் தேடியலைந்த  தாகம் கொண்ட மீனின் கதையை ரூமி ஒருமுறை சொன்னார். அதன் தணியாத தாகத்திலிருந்து நிவாரணம் தேடி அம் மீன் ஒவ்வொரு திசையிலும் அயராது நீந்தியது. அது நீரிலிருந்து வெளியே எட்டிக் குதித்து, மேற்பரப்பிற்கு மேலே தண்ணீரைத் தேடியது, ஆனால் பயனில்லை. இறுதியாக, மீன் மிகவும் களைத்துப் போய் பலவீனமாக உணர்ந்தது. அதனுடைய அந்த சோர்வில், அது ஒரு கணம் திகைத்து நின்றது. அமைதியான அந்தத் தருணத்தில், அதுவரையிலும் தான் தேடிக்கொண்டிருந்த அந்த  நீரில் , இப்போது தான் நீந்திக் கொண்டிருந்ததை  அது உணர்ந்தது. 
   
"உண்மை, அர்த்தத்திற்கான தேடலில், மீனுக்குத் தண்ணீர் போல  நாம் தேடிடும் பதில்கள் நமக்குள்ளாகவே இருப்பதை நாம்  மறந்துவிடுகிறோம். நாம் வேட்கையோடு மற்ற எல்லா இடங்களிலும் தேடுகிறோம், ஆனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் இருப்பின் சாரத்தை நினைவில் கொள்வதுதான். உள்நோக்கி உங்களுக்குள்ளாகவே பாருங்கள். , நீங்கள் தேடிடும் ஞானம், அன்பு, அர்த்தம் ஆகியவற்றைக் காண்பீர்கள்." என்று கூறி ரூமி அந்தக் கதையை  முடிக்கிறார்.

பெண்களின் கேள்விகளும், குழந்தைகளின் கேள்விகளும், பதிலுக்காக கேட்கப்படுபவை அல்ல. எப்போதுமே அது நீண்ட வாதத்திற்கான நோக்கமாகவே இருக்கும்.-சத்யா

Friday 20 October 2023

மாரத்தான்


மாரத்தான் ஓட்டப்பந்தய வரலாறு;

கிரேக்கத்தில் நிலவும் ஒரு மரபு வழிக் கதையின் படி, கி.மு. 490 ம் ஆண்டு, பெர்சியர்கள் கிரேக்க நாட்டை ஆக்கிரமித்த போது, மாரத்தான் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப்போது, கிரேக்கர்கள் வென்ற செய்தியினை ஒரு கிரேக்க வீரர் மாரத்தனிலிருந்து, ஏதென்ஸ்க்கு ஓடியே வந்து தெரிவித்து, மயங்கி விழுந்து, உயிர் நீத்தார். மாரத்தான் முதல் ஏதென்ஸ் வரை தூரமானது 25 மைல்கள் அல்லது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள்.

எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டி மறுபடி 1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, இது 40 கிலோமீட்டர் என நிறுவப்பட்டது. ஆனால், பின்னர், 1908ம் ஆண்டு, லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் போட்டியின் தூரமானது பிரிட்டிஷ் ராஜ வம்சத்தினருக்காக நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, வின்ஸ்டர் கோட்டையிலிருந்து, ஒலிம்பிக் விளையாட்டரங்கின் ராஜ வம்சத்தினர் அமரும் இடம் வரை. அது 26.2 மைல்கள் என இருந்தது. அதுவே தொடர்ந்து விட்டது. 1921ம் ஆண்டு, அதுவே அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.

எனவே, 26.2 மைல்கள் அல்லது 42.195 கிலோமீட்டர்கள் மாரத்தான் போட்டி தூரம்.

-படித்தது

Thursday 19 October 2023

ஒரு தருணத்தின் முழுமையான அழகு என்பது அத்தருணம் மறையும்போது தொடங்குகிறது.-சோரன் கீர்கேகார்ட்

சிறந்த சண்டைகளானது,நாம் தவிர்த்த சண்டைகள் தான்.-ஜாக்கி சான்

பிரார்த்தனைஎன்னால் எதை மாற்ற முடியுமோ அதை மாற்றுவதற்கான சக்தியை எனக்கு கொடு.என்னால் எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக் கொள்வதற்கான மனோபலத்தை எனக்கு கொடு. எதை என்னால் மாற்ற முடியும் எதை என்னால் மாற்ற முடியாது என்று பகுத்தறிவதற்கான அறிவை எனக்கு கொடு-சுகபோதானந்தா

சிந்தையை அடக்கி சும்மா இருத்தல் சுகம்-வள்ளலார்

Wednesday 18 October 2023

டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் கட்ட வேண்டும். 'டென்ஷன் இல்லாமல் இருப்பது' என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால், அது ஏற்கனவே இருக்கிறது!-படித்தது

"பள்ளிக்கூடந்தான் எங்க பிள்ளைகளுக்கு நிழல்.நிழலுக்கு வரத்தான் இந்தப் பாடு".அடித்தட்டுக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கெல்லாம் பள்ளிதான் நிழல்.-கேரளாவில் புலையர் சமூகத்தினர் முதன்முதலாய் பள்ளி செல்லும்போது சொன்ன வாக்கியம்

வாழ்வை புரிந்து கொள்வதற்காக மனிதன் படைக்கப்படவில்லை. வாழ்க்கையை வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்-சாந்தயானா

Tuesday 17 October 2023

யார் இந்த சிந்தனையை உருவாக்கினார்கள் என்று சிந்தித்தால் அதுவும் நம் மனம் தான்! மனதின் கதவு அகலமாக திறந்திருக்கும் போது நாம் ஏன் சிறையில் இருக்க வேண்டும்?"-ரூமி

வெட்சித்திணையில், எதிரிநாட்டிலிருந்து அநிரைகளைக் கவர்ந்து வரச் செல்லும் வீரன் யுத்தத்தில் மாண்டுபோனாலோ, எதிரிகளை அழிக்கும் போரில் உயிர் நீத்தாலோ நடுகல் நட்டு வணங்குவது மரபு. பிற்காலத்தில் அது மாடன் வழிபாடாக வளர்ந்தது. தங்களுக்காக உயிர்விடுவோரை மக்கள் மாடனாக கருதினர்-வெ.நீலகண்டன்

வெயிலில் சோர்வுற்று என் தோள்பிடித்து நடந்துவந்தாய் நினைவிருக்கிறதா?அந்தத் தோளைத்தான் இன்றும்சுமந்து திரிகிறேன் நீ இல்லாத பாலையில்.-லதாமகன்

"அறிந்து கொள்ளல் என்பது இரண்டு வகை. ஒன்று, புரிந்துகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளுதல், மற்றொன்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிந்து கொள்ளுதல்-படித்தது

Wednesday 11 October 2023

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் குறையாதவரை வாழ்க்கை அயர்ச்சியூட்டுவதில்லை. புதிதாக ஒன்றை அறியும் ஆர்வத்தை இழக்கும்போது நாம் ஏதோ ஒரு படிக்கட்டிலிருந்து இறங்குகிறோம்-மகுடேசுவரன்

கம்பலை



'கண்ணீரும் கம்பலையுமாக நின்றான்' என்பதில் வரும் கம்பலை என்பதன் பொருள் என்ன?

கம்பலை என்பதற்கு நடுக்கம் என்பது ஒரு பொருள். ஓசை என்னும் ஒரு பொருள் உண்டு. அழுகையும் கூச்சலுமாக நிற்றலைக் குறிப்பதனால் கம்பலை என்பதற்கு ஓசை என்று பொருள் கொள்வது சிறப்பு; 'வம்ப மாக்கள் கம்பலை மூதூர்' என்று மணிமேகலை அடியில் அப் பொருளில் வருவது காண்க.
---கி.வா.ஜ பதில்கள்

Monday 9 October 2023

இறந்த காலத்தைநினைவுகளால் திற.நிகழ்காலத்தைச்செயல்களால் திற.எதிர்காலத்தைநம்பிக்கையால் திற.-ராஜா சந்திரசேகர்

எடை மேடை


எடை மேடை

இதற்கு ஆங்கிலத்தில் "weighing Bridge" என்று பெயர்.

மிகவும் பளுவான வாகனங்கள் காலி எடையையும் மற்றும் பொருள்கள் ஏற்றிய பிறகும் அதன் எடைகளை நிறுக்க இது உபயோகமாகிறது. அதில் ஏற்றியுள்ள எடையையும் அறிய முடியும்.

அந்த வாகனங்களில் ஏற்றப்படும் பொருள்களுக்கான பில்லில் குறிப்பிட்ட எடையை சரிபார்க்கவும் உதவும். இது சில சமயங்களில் காவல் துறைக்கு தேவைப்படலாம். அதில் வேறு ஏதாவது சாமான்கள் ஏற்றப்பட்டனவா என்பதையும், அல்லது கடத்தல் சாமான்களின் எடையை கண்டறிய உதவும்.

இரு மாநிலங்களின் எல்லைப்பகுதி சுங்கச்சாவடி அருகிலும் இவற்றை காணமுடியும்.

-படித்தது

Sunday 8 October 2023

நேர்மையாக இருப்பதால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்காமல் போகலாம்.ஆனால்,அது எப்போதும் உங்களுக்கு சரியானவர்களைப் பெற்றுத்தரும்.-ஜான் லெனான்

தில்லானா மோகனாம்பாள்


''தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்.

அவர்களில் இளையவரான பொன்னுசாமியை  சந்தித்தபோது எடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.

சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம்.

ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,பாலையா, சாரங்கபாணி குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும்.

''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.

'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி.

பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார்.

பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார்.

அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!''

நன்றி மணா, என்.சொக்கன் .

Saturday 7 October 2023

பேச்சுஇருவரில் ஒருவரையாவது காயப்படுத்தக்கூடியவல்லமை பெற்றது.மௌனம்இருவரில் ஒருவரையாவதுஆற்றுப்படுத்தக்கூடியவல்லமை பெற்றது.-சேரவஞ்சி

தங்கம்


தவறவிட்ட தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில்… 
3000 மீ தொடர் Roller- skater போட்டியில் (மூன்று பேர்) பைனலில் ஓடிய அணிகளில் தென் கொரியாவும் சீன தாய்பே அணிகளும் முடிவு லைனை தொடும் வினாடி… பின்னால் மின்னலாய் ஸ்கேட்டிங் செய்து வரும் சீன தாய்பே வீரரைக் கணிக்காமல் வெற்றிக் கோட்டினைத் தொட்டு விட்ட உணர்வில் நெஞ்சை நிமிர்த்தி கையை உயர்த்தி மகிழ்ச்சியைத் தெரிவித்த தென் கொரிய வீரரை .01 வினாடி முந்தி காலை நீட்டி போட்டோ பினிஸில் வெற்றிக் கோட்டை தொட்டார் சீன தாய்பே வீரர்.. 

இவர் கோட்டைத் தொட்டு தங்கம் பெற்றார்… தங்கம் பெற வேண்டியவர் கோட்டை விட்டு வெள்ளியைப் பெற்றார்… ஆன்லைனில் தென் கொரியர்களின் எக்கச்சக்க வசவுகளையும் சேர்த்தே பெற்றார்… மூன்று வீரர்களின் ஓட்டமும் அவசர வெற்றிக் களிப்பால் புளிப்பாகிப் போனது.. வெள்ளி பெற்றும் வேதனை தான் மிஞ்சியது.. எதிலும் கண் மண் தெரியாத ஆர்ப்பாட்டம் கூடாது தம்பி…

கொஞ்சம் அதிகமா சத்தம் போட்டு சிரிச்சாவே போதும் அவனுடைய வாழ்க்கையே அவனிடம் கேட்குமாம்.. டேய் யார்ராது சத்தம் போட்டு சிரிக்கிறதுன்னு.. அது போல் தான் ஏகமாய் சிரித்தவனிடமிருந்து தங்கத்தை தட்டிக் கொண்டு போய் பணிந்து குனிந்தவனிடம் கொடுத்து விட்டது போல…

ஒட்டகம்


ஒட்டகம் ஒன்று காட்டில் கடுமையாக தவம் செய்து தன்னுடைய கழுத்தை நீண்டதாக இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றது. ஆனால் சோம்பல் மிகுந்த அது நீண்ட கழுத்தின் உதவியால் இருந்த இடத்தில் நின்றபடியே உணவு உண்டது.

ஒரு சமயம் பெரு மழை பெய்தபோது..குகையொன்றில் தலை நீட்டியபடி இருந்தது. பசியில் இருந்த
நரி ஒட்டகத்தின் கழுத்தினை தின்ன ஆரம்பித்தது.ஒட்டகம் கழுத்தை சுருக்கமுடியாமல் இறந்தது.

தெய்வமே வரம் தந்தாலும் சோம்பேறியானவன் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தாமல் அழித்து விடுவான் என்பது பாண்டவர்களுக்கு அம்பு படுக்கையில் பீஷ்மர் சொன்ன உபதேசக் கதை இது

கடல்மட்டம்


கடல் மட்டம் 

நாசா செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் கடல் மட்டத்தை அளவிடுகிறது.

ஜேசன்-3 செயற்கைக்கோள் கடலின் மேற்பரப்பின் உயரத்தை அளவிட ரேடியோ அலைகள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துகிறது - இது கடல் மட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

மற்றபடி பூமியின் பல்வேறு இடங்களின் உயரம் 'ஆல்டிமீட்டர்' என்ற கருவியின் உதவியுடன் அளவிடப்படுகிறது.

ஒரு இடத்தில் உயரத்தை அளக்க பயன்படும் கருவி அடிப்படையில் ஒரு காற்றழுத்தமானி ஆகும். கடல் மட்டத்தில், பாரோமெட்ரிக் திரவத்தின் (மெர்குரி) உயரம் 76 செ.மீ. ஒரு இடத்தில் பாதரசம் காட்டும் அளவை வைத்து அந்த இடத்தின் உயரத்தை கணக்கிடுவார்கள்.

-படித்தது

Thursday 5 October 2023

படித்தது



ஒளிமயமான  எதிர்காலம் , பட்டொளி வீசியது , ஒளிர்ந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்.. ஒளி என்றால் என்ன என தெரிந்து கொள்ள ஆசை என்றது ஒரு ஆழமான குகை.. அது ஒரு போதும் ஒளியை பார்த்ததில்லை...

இருளின் ஆழம் , இருண்ட முகம் என்றெல்லாம் சொல்கிறார்களே..இருளை காண ஆசை என்றது அகல் விளக்கு,,,

கட்வுள் இருவர் ஆசையையும் நிறைவெற்ற நினைத்து இருவரையும் மற்றவர் இடத்துக்கு ஒரு முறை போய்ப்பார்க்க ஏற்பாடு செய்தார்..

குகை தன் பண்புகளோடு கூடிய ஓர் உருவம் எடுத்து அகல் விளக்கின் இடத்துக்கு சென்றது.. 
அடடா...ஒளியின் அழகு என்னே,,, ஒளி மட்டும் அன்று...அதன் கதிர்கள் தொடும் இடங்களும் ஒளிர்கின்றவே..... என வியந்து மகிழ்ந்தது..

விளக்கு குகைக்கு சென்றது..

வித்தியாசமாக எதுவும் தென்படவில்லையே... எப்போதும் நான் காணும் மெல்லொளிதானே இங்கும் இருக்கிறது ! என அலுத்துக்கொண்டது

-படித்தது

Wednesday 4 October 2023

மனமுறிவு


மனமுறிவுக்கு அடிப்படை காரணம் "ஒன்றையே பற்றி இருத்தல்".இது இன்னொரு எண்ணத்திற்கு இடம் தராததால், அடுத்த கட்டத்துக்கு போகாமல் தடுக்கிறது. அதேவேளையில் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல விடாமல் மனம் என்ன செய்யும். மூன்று காலங்களில் ஏதாவது ஒன்றில் மனம் இருக்க வேண்டும்.

இம்மூன்றுக்கும் வலியில்லாத போது மனம் முறிகிறது. எனவே நாம் அடைய விரும்பும் ஒன்றை 'ஒற்றை நிலையாக' வைத்துக் கொள்ளாமல், நடக்காமல் போனால் அதற்கு மாற்றாக வேறொன்றை வைத்திருப்பது நல்லது. ஒரே இடத்திலேயே மனம் முடங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

மனிதர்கள் நேசிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டவர்கள். பொருட்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.ஆனால், உலகத்தின் குழப்பத்துக்குக் காரணம், பொருட்கள் விரும்பப்படுவதும், மக்கள் பயன்படுத்தப்படுவதும் தான்.- தலாய்லாமா

Tuesday 3 October 2023

சின்ன புறக்கணிப்புதான்மனதை எவ்வளவு வருத்துகிறதுசின்ன நெளிவுதான்எவ்வளவு மரியாதை தருகிறதுசின்ன புன்னகைதான்எவ்வளவு பகையை உடைக்கிறதுசின்னச் சின்னதுதான்எவ்வளவு பெரிதாக இருக்கிறது?-ப.உமா மகேஸ்வரி

மரணத்தின் வலியைவிட, பிரிவின் வலி அடர்த்தியானது. அது அடர்ந்த ரோஜாக்காட்டில் பூக்கள் உதிர்ந்த பின் முட்களுக்குள் நடப்பதைப் போன்றது-நரன்

“அத்தனையும் தொடங்க ஒரு தாயம் தேவை. அது ஆடுபவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் விழும். முதலில் தாயம் விழுந்து ஆட்டத்தைத் தொடங்குபவர்கள்தான் வெல்வார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. தாயத்தின் மதிப்பு வெறும் ஒன்றுதான். ஆனால் தாயம் விழாதவர்கள் ஆட்டத்தையே தொடங்க முடியாது. தாயம் இல்லாமல் எத்தனை விழுந்தாலும் பயனில்லை.”-ஷான்

காந்தி


காந்தி ஒன்றே ஒன்றைத்தான் கோரினார், நாம் நம் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேர்ந்தெடுக்கும் முறைகளுக்கு அளிக்கும் மதிப்பீடுகளை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இந்த இருபதாம் நூற்றாண்டில், நாம் சக மனிதர்களை கவுரவமாக நடத்த முயன்று கொண்டிருக்கும் சூழலில், மற்றவனின் தலையை கொய்வதை காட்டிலும் வேறுவழிகளில் நம் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியை கண்டடைய முடியும் என்றார். நமது மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கெஞ்சினார்....

சர் ரிச்சர்ட் அட்டன்பரோ  'காந்தி'  திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதினைப் பெற்றுக்கொண்டபோது பேசியது

இறந்தார் என்ற சொல்லுக்கு "கடந்தார்" என்பதுதான் பொருள்.அதையேதான் ஆங்கிலமும் passed away என்கிறது. எங்கிருந்தோ வந்தார், இப்போது இந்த பூவுலகத்தைக் கடந்தார் என்று இவ்வுலக வாழ்வை நீத்தாரை அச்சொல் சுட்டுகிறது.-பழ.அதியமான்

Monday 2 October 2023

சு.ரா


"உனக்கான சந்தோசத்தை நீதான் உனக்கு கொடுத்துக் கொள்ள வேண்டும்" யாரும் உனக்காக மெனக்கெட்டு இவனுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என நினைக்கமாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு
வாழ்க்கை இருக்கும். அதைப் பார்க்க வேண்டும். சில தருணங்கள் அவர்கள் தரலாம், தர முடியும். உனக்காகவே வாழ முடியுமா? உனக்கான மகிழ்ச்சியை நீ தேடு.

-சுந்தர ராமசாமி
(குழந்தைகள் பெண்கள் ஆண்கள்)

Saturday 30 September 2023

இருளில் இழந்திருந்த சுய அடையாளத்தை வெளிச்சத்தின் முன்னிலையில்மீட்டெடுக்கிறது பொழுது-யுவன் சந்திரசேகர்

கள்ளிச் செடிகள் மனிதர்களை போன்றவை. துன்பப்படும் போது அவைகள் வளரும். ஒரு கள்ளிச்செடி வளர்ச்சிக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை என்றால் தண்ணீர் விடுவதை நிறுத்தி விடுங்கள். மறுபடியும் செடி வளர தொடங்கும் போதுதான் தண்ணீர் விட தொடங்கவேண்டும்.- ராகுல் அல்வரிஸ்

உங்களின் ஒவ்வொரு அனுமானங்களும் உங்கள் உலகின் ஜன்னல்கள். ஒவ்வொரு முறையும் அவற்றை நன்றாகத் துடைக்கவும், இல்லையெனில் வெளிச்சம் உள்ளே வருவது கடினம். ஐசக் அசிமோவ்.(அமெரிக்க எழுத்தாளர்)

என் மனசு ஒரு பீத்தை மனசு. ஒரு தூசு பட்டாலும், தாங்கிக் கொள்ள முடிவதில்லை.நாயை, எங்க வேணாலும் அடிங்க. அது காலைத்தான் நொண்டும். அதுபோலத்தான்,எனக்கு ஒன்னுன்னா மனசு குழம்புது.-ஆ.மாதவன் சிறுகதையில்

Tuesday 26 September 2023

ஒரு அமைப்பு எப்போதும் ஒரு தனிமனிதனை விடப் பெரியது.ஆனால் தவறான நம்பிக்கைகளை பரப்பும்அமைப்பை ஒப்பிடும்போதுஉண்மைகளை வைக்கும் தனிநபர் எப்போதும் சிறந்தவர்-கம் நகரி

janakiraman


மீள் பதிவு

பாடகராக எஸ்பிபி மாபெரும் லெஜன்ட். ஆனா ஓர் இசையமைப்பாளராகவும் எஸ்பிபி சாதித்திருப்பார். சிகரம் படத்தின் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு" பாடல் எனது எல்லா சோகங்களிலும், வாழ்வின் நம்பிக்கை இழக்கும் தருணங்களிலும் மிகப்பெரிய ஆருதலாக இருந்திருக்கிறது.

இவரே மிகச்சிறந்த பாடகர் என்றாலும், இநத பாடலை ஜேசுதாஸுக்கு அளித்திருப்பார். பாடல் வரிகள் - இசை - பாடகரின் குரல் என மூன்றும் ரொம்ப அரிதாகத் தான் ஓர்மைப் பட்டு உன்மத்த நிலை அடையும். அந்த வரிசை பாடலில் அகரம் இப்போ... நிச்சயம் முன் வரிசையில் இடம் பெறும். 

கேட்பதற்கு எளிமையான சந்தம் போல இருக்கும். ஆனா அதில் இருக்கும் சிரமத்தை ஜேசுதாஸ் ஒரு லைவ் கான்டெஸ்டில் கூறுவார். செமயா இருக்கும். (இணைப்பில் காணவும்). தனிப்பட்ட வகையில், நான் இந்தப் பாடலை எஸ்பிபி யே பாடியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரது குரல் இந்த பாடலின் ஆன்மாவை இன்னும் உயரமாக, வேறு தளத்துக்கு கொண்டு சென்றிருக்கும்.

//பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்கை உள்ளது..//

-janakiram

ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்

Thursday 21 September 2023

புத்திசாலிகள் தங்கள் இழப்பைக் குறித்து வருந்தி, ஒருபோதும் மூலையில் போய் அமர்வதில்லை.ஆனால் தங்கள் இழப்புகளை எவ்வாறு சீர்படுத்தலாம் என்பதற்கான வழிகளை தேடுகின்றனர்-ஷேக்ஸ்பியர்

உன்னால் திரும்பிச் செல்ல முடியாத போது, முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும்-பாவ்லோ கொய்லோ

வாழ்ந்து மறைந்தவர்கள், வாழ்பவர்கள், இனிமேல் பிறப்பவர்கள் எவரும் இதைவிடச் சிறப்பாக செய்ய முடியாத அளவுக்கு ஒருத்தன் தான் செய்யும் வேலையைச் செய்ய வேண்டும்-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

Wednesday 20 September 2023

உலகத்திலேயே மிகப்பெரிய சுமை எது?"கடந்தகாலம்"

நான் தேங்காயும் உடைப்பதில்லை. பிள்ளையாரையும் உடைப்பதில்லை.-அறிஞர் அண்ணா.

காந்தி


இந்தியாவில் முதலில் காந்திஜி படம் இருக்கவில்லை. முதலில் அசோகச் சக்கரம், அசோகர் தூண் படங்கள் போட்ட ரூபாய் தாள்களே பழக்கத்தில் இருந்தன.

முதன்முதலில் 1996ல் ரிசர்வ் பேங்க் காந்திஜியின் படத்தை அச்சிட முடிவு செய்தது. ஏன் ?

பெரும்பாலான நாடுகள் தங்களது முக்கியமான தலைவர்களின் குளோசப் முகப்படங்களை அச்சிட்டன. இந்திய ரூபாய் நோட்டுக்களில் வேறு படங்கள், கட்டடங்கள் , இயற்கை காட்சிகள்,நினைவு சின்னங்கள் இருப்பது , போலி நோட்டுக்கள் அச்சிட இலகுவாக ஆகிவிட்டது. முகங்களை அச்சிடும்போது , வித்தியாசங்கள் இலகுவாக கண்டுபிடித்து விடமுடியும். அதனால் காந்திஜி முகத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

ஏன் காந்திஜி முகம் ?

நேரு, பட்டேல், அம்பேட்கர், போஸ், சாஸ்திரி, இந்திரா, மற்றும் எல்லோரையும் அச்சிடலாமே. இவர்களெல்லாம் அரசியல் கட்சி, சிலமாநிலங்களில் மட்டும் புகழ் பெற்றவர்கள்.

புத்தர், சமணர், இந்துக்கடவுள்கள், இவ்வாறு மதங்களை அச்சிட்டால் சட்டப்படி கூடாது. நமது நாடு மதம் சார்ந்ததல்ல.

1996களில் மக்களிடையே பெருமதிப்பு, மரியாதைகளைக் கொண்ட ஒரே தலைவர் மகாத்மா. அதனால் காந்திஜியின் முகத்தைத் தேர்ந்தெடுத்தது ரிசர்வ் பேங்க்.

இந்த காந்திஜி முகப்படம் எப்படி கிடைத்தது ?

1946ல் இங்கிலாந்து லார்டு ப்ரெட்ரிக் லாரன்ஸ் என்பவர் தற்போதைய ராஷ்டிரபதி பவனில் காந்திஜியை சந்தித்துப் பேசியபோது எடுத்த பல படங்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த போட்டாவிலுள்ள முக அமைப்பு மட்டும்தான் ரூபாய்தாள்களில் அச்சிடப்படுகிறது.

Tuesday 19 September 2023

லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.புதைகுழியில் பன்றி ஒன்று விழுந்து போராடிக் கொண்டிருந்தது. லிங்கன் வண்டியை நிறுத்தி பன்றி குட்டியை காப்பாற்றினார். 

அப்போது அவரது உடையில் சேரும் சகதியும் பட்டுவிட்டன. அப்படியே வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவரை அனைவரும் பாராட்டினார்கள். லிங்கன் குறுக்கிட்டு என்னை யாரும் புகழாதீர்கள். 

அந்த சின்னஞ்சிறிய உயிர் புதைக்குழியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது என் இதயத்தில் ஒரு முள் தைத்தது போல் உணர்ந்தேன். அதன் உயிரை காப்பாற்றினேனோ இல்லையோ என் இதயத்தில் தைத்திருந்த
முள்ளை நான் அப்புறப்படுத்தி விட்டேன். அதை மட்டும் செய்யாதிருந்தால் என் இதயத்தில் தைத்த முள் என் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்

எந்தப் பள்ளியும்கற்றுத் தருவதில்லைதிங்கட்கிழமைகளைநேசிக்க-ஜோ

நிகழ்வுகளை என்னால் கையாள முடியாமல் போகும்போது,அவை தாமே தம்மை கையாளட்டும் என்று விட்டுவிடுவேன்-ஹென்றி போர்ட்

Monday 18 September 2023

எல்லோருக்கும் எப்போதும் ஏதாவது இருக்கிறது சொல்வதற்கும் சொல்லாமல் இருப்பதற்கும்சொல்வனவற்றை விட வெகுவாக கவனிக்கப்படுகின்றன சொல்லாமல் விடப்பட்டவை அதுவும் கூட சொல்லிவிடும் வரைதான் ஏனோ தெரியவில்லை சொல்லிப் போனவற்றைப் பார்த்து எப்போதும் ஒரு ஏளனம் சொல்லாமல் போனவைகளுக்கு.-ஷான் கருப்புசாமி

ஷான்

பாறையாய்க் கிடக்கும் மனங்களை மெல்லிய குச்சி ஒன்றால் தட்டித் தட்டி திறக்க முயன்றபடி ரயிலாடி நடக்கிறாள் அவள்

சிலர் வாங்குகிறார்கள்
சிலர் பேரம் பேசுகிறார்கள் சிலர் இரக்கப் படுகிறார்கள் சிலர் பயணம் மட்டும் செய்கிறார்கள்

பேனா கீசெயின் பொம்மை டார்ச்லைட் எது வாங்கினாலும் இலவசமாய்க் கிடைக்கிறது வாழ்க்கைக்கான பாடமொன்று பார்வையற்ற சிறுமியிடம்.

-ஷான்


Sunday 17 September 2023

தஸ்தா


'எல்லாவற்றிற்கும் மேலாக பொய்ம்மையை விலக்கு! எல்லாப் பொய்ம்மைகளையும். குறிப்பாக உன்னோடு நீ சொல்லிக் கொள்ளும் பொய்ம்மையை.

உன் சொந்தப் பொய்ம்மையை எப்போதும் கவனித்துக் கொண்டே இரு. ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், வெறுப்பை விலக்கு. மற்றவர் மீதும் உன் மீதும் கொள்ளும் வெறுப்பை.உனக்குள் வெறுப்புத் தோன்றினால், அதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அதைக் கழுவிக் களைந்து விடலாம்.

அச்சத்தை அகற்று. 
அச்சம், பொய்களின் விளைவு. 
அன்பைச் சாதிக்கும் போது, உன் அற்பமான சுயநலம் கண்டு அஞ்சி விடாதே. 
சில சமயங்களில் நீ தவறாகச் செயல்பட்டால் அதற்காக மிகவும் கலவரப்பட்டு விடாதே. 
இதைவிட உறுதிப்பாடான எதையும் என்னால் சொல்ல முடியாது.

பொய்யான நேசத்தை விட மெய்யான நேசம், கடினமானதும், பயங்கரமானதும் ஆகும்!

கற்பனை நேயம், உடனடியான சாகசச் செயல்களை உருவாக்கும். அவை அனைவர் கண்களுக்கும் புலப்படும்.'

-  தஸ்தயேவ்ஸ்கி

Thursday 14 September 2023

ஆள்வதற்காக அரசக்கட்டிலில் அமர்பவன் ஒரு தாயைப் போல இருக்க வேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குரிய தர்மமே அரச தர்மம்.தனக்கு விருப்பமான உணவைவிட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள்.ஆட்சியாளனும் தனக்கு உரியதை செய்யாமல் மக்கள் நலனுக்கு உகந்ததை செய்யவேண்டும்-தருமனுக்கு அறம் போதித்த பீஷ்மர்

படித்தது


அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமி தன் தாயிடம் நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எது? என்று கேட்டாள் 

அதற்கு தாய் உடம்பிலேயே கண்தான் முக்கிய உறுப்பு ஏனென்றால் கண் இல்லை எனில் உலகம் இருட்டாகிவிடும் என்றாள். அந்த பதிலாக திருப்தி அடையாத மாணவி சிந்தித்தாள்.  

கடைசியில் சிறுமி தன் பதிலை சொன்னாள்.. நம் உடலில் முக்கியமான உறுப்பு தோள்கள் தான். மற்ற உறுப்புகள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.ஆனால் தோள்கள் தான் ஆறுதல் தேடும். அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களில் தானே முகம் புதைத்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவததிற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் முக்கிய உறுப்பு என்றாள்

-படித்தது

Wednesday 13 September 2023

இனி சொல்ல ஒன்றுமில்லை எனும் சொற்களில்தான் உள்ளன சொல்ல வேண்டியஎல்லா சொல்லும் -நேசமிகு ராஜகுமாரன்

அலெக்சாண்டர்


அலெக்சாண்டர் சில அறிஞர்களிடம் கேட்ட முக்கியமான மூன்று கேள்விகளும் மூன்று பதில்களும்.

1) எல்லோராலும் நேசிக்கப்பட
என்ன செய்யவேண்டும்? 'அதிகாரம் இருந்தாலும் அதிகாரம் செலுத்தாமல் அன்பு செலுத்த வேண்டும்.

2) மனிதன் கடவுளாக மாற
என்ன செய்ய வேண்டும்? 'மனிதனால் முடியாதென்று நினைக்கப்படுவதை செய்து காட்ட வேண்டும்.'

3) வாழ்க்கை பெரிதா? மரணம் பெரிதா? 
வாழ்க்கைதான் பெரிது. ஏனெனில் மரணம் தாங்காத துயரங்களையெல்லாம் வாழ்க்கைதான் தாங்குகிறது.

Tuesday 12 September 2023

மைக்டைசன்


மைக் டைசன், ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது-

தொகுப்பாளர் : நீங்கள் பயிற்சி செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவீர்களாமே - அது உண்மையா?

மைக் டைசன் : இல்லை. 4 மணிக்கு நான் ஓடிக்கொண்டிருப்பேன். அதனால் அதற்கு முன்னரே எழுந்து விடுவேன்.

தொகுப்பாளர் : நீங்கள் ஏற்கனவே ஒரு உலக சாம்பியன், இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?

மைக் டைசன் : நான் ஒரு உலக சாம்பியன் - அது, அதுதான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய எதிரிகள் வெற்றி மமதையில் இரவு பார்ட்டி செய்துவிட்டு வெகு நேரம் தூங்கி, சரியான உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை கூடுகிறார்கள்.

அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 4 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால் நான் 2 மணிக்கே எழுந்து ஓட ஆரம்பித்து விடுவேன்.

அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 2 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால், நான் தூங்குவதையே விட்டு விட்டு இரவு முழுவதும் ஓடி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.

அதனால் தான் நான் உச்சியில் இருக்கிறேன். இப்படி பயிற்சி செய்வது என்னுடைய பொறுப்பு, அவர்களுடையதல்ல

ஹெர்மான் ஹெஸ்ஸே


ஒருவரை நமக்குப் பிடித்துப் போகிறது என்றால் அவர்களுடைய பலவீனங்களை நாம் பெரிது படுத்துவதில்லை என்று அர்த்தம். அதே சமயம் ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்றால் அவர்களுடைய பலவீனங்களையும் சேர்த்துதான் நேசிக்கிறோம் என்று அர்த்தம்.

 -ஹெர்மான் ஹெஸ்ஸே

Monday 11 September 2023

தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழாமல் மேற்கூரையைப் பார்த்து குருட்டு யோசனை செய்ய வேண்டும்.இந்த உலகம், மனிதர்கள்,விதி..தூங்கி விழிக்கும் நேரத்தில் தான் எண்ணங்கள் தெளிவாகவும் நிர்பயமாகவும், தளைகள் இன்றி வரையறையின்றி சுயேச்சையாய் மேய்கின்றன-ஆதவன்

கருப்பு கண்ணாடி முதன்முதலில் உபயோகப்படுத்துயது சீனர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில்! சீன நீதிபதிகள் தாங்கள் சொல்லும் தீர்ப்பின் போது உணர்ச்சிகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட்டு மறைத்துக் கொண்டு தீர்ப்பு சொன்னார்கள்!#info

தனியாக இருப்பது ஏகாந்தம் (aloness)மனிதத் தொடர்பில்லாமல் இருப்பது (loneliness)நீங்கள் தனித்திருந்தாலே மனம் துணையைத் தேடும். தனித்து விடப்பட்ட நிலை ஆறாத வலியைத் தரும்.-ஓஷோ

குழந்தை கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலைக் கொடுக்க வேண்டுமானால், 50 கேள்விகளுக்கான பதில்கள், அந்த ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும்.’’ -சகோதரி நிவேதிதா.

'எல்லோரும் உதறியபின்பும் உன்னிடம் மிச்சமிருக்கும் வைராக்யம் உன்னை உயர்த்தும்!'-கடற்கரய்

Sunday 10 September 2023

அச்சம், பயம், பீதி


நமக்கு ஆபத்து வரும் என்று தெரியும் போது நாம் முதலில் அடைவது 'அச்சம்'

அந்த ஆபத்து எந்த வடிவில் எப்படி வரும் என்று தெரியாத நிலை ஏற்படும்போது உண்டாவது 'பதற்றம்'

வந்த ஆபத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாதபடி நாம் உறைந்து கிடக்கும்போது ஏற்படுவது 'பீதி'. -p

Friday 8 September 2023

நடந்து போன ஒரு விஷயத்தை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில், நடந்து முடிந்த ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்வதுதான் எந்தவொரு துரதிருஷ்டமான விளைவுகளில் இருந்து மீள்வதற்கான முதல் படி ஆகும்.-வில்லியம் ஜேம்ஸ்

சூரியனை சுற்றும் எல்லா கிரகங்களின் அச்சும் சாய்வாகத் தான் உள்ளது.பூமி 23.5 பாகைகள் சாய்திருப்பதால் தான் நமக்கு ஒரு வருடத்தில் கால பருவங்கள் ஏற்படுகின்றன.வெள்ளி மட்டுமே அதிகமாக 177 பாகை சாய்ந்து உள்ளது. அதனால் அதனுடைய சுழற்சி மாறுபடுகிறது.அங்கே சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும்

Thursday 7 September 2023

வாழ்வில் நாம் எதிர்வினை ஆற்ற கூடாது, பதிலளிக்க வேண்டும்(I should not react in life, I should always respond).#மனைவியுடன் பேசும் போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய தாரக மந்திரம்

மோசமானவற்றை ஏற்றுக் கொள்வதில் இருந்துதான் உண்மையான அமைதி பிறக்கிறது.உளவியல் ரீதியாக, அது ஆற்றலை விடுவிக்கிறது.-லின் யூட்டாங்

வழிகாட்டு, தயவு செய்து வெளிச்சம் கொடு.. என் பாதத்தை நிலை நிறுத்து,நான் தூரத்து காட்சியை பார்க்க வேண்டும்என்று உன்னை கேட்கவில்லை;அடுத்து எடுத்து வைக்கும் ஓரடி போதும் எனக்கு-படித்ததுஇனிய காலை

Wednesday 6 September 2023

இறுதியில் இந்த மூன்று விஷயங்கள்தான் முக்கியமானது.எந்தளவுக்கு நீ நேசித்தாய்/நேசிக்கப்பட்டாய்.எந்தளவுக்கு நீ நேர்மையாக வாழ்ந்தாய்.உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தராத,தேவையில்லாத எவ்வளவு விஷயங்களை, பொருட்களை,மனிதர்களை உன்னிடமிருந்து விடைபெற மனதார அனுமதித்தாய்-புத்தர்

வெகு தூரத்தில் மங்கலாகத் தோன்றும் ஒன்றைப் பார்ப்பது நம் வேலையல்ல,ஆனால் நம் கையில் தெளிவாக உள்ளதைச் செய்வதுதான் நம் வேலை -சர் வில்லியம் ஆஸியர்

நாளைய தினத்தைப் பற்றி எண்ணாதீர்கள். ஏனெனில் நாளைய தினம் தன்னுடையவற்றைப் பற்றி எண்ணிக் கொள்ளும்-ஜென்

Monday 4 September 2023

காபியின் தரம் என்பது, கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் முழுமை என்பது, நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. சிறந்த கோப்பைகளைப் பற்றியே யோசிக்கும் நமக்கு, பல சந்தர்ப்பங்களில் காபியின் சுவை தெரிவதில்லை.அதே போல் பணத்தையும் பதவியையும் விடாமல்துரத்தும் நாம், அவற்றை விடவும் முக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் இந்த தவறான அணுகுமுறை தான் காரணம் -சுகபோதானந்தா

ஆதித்யா L-1 : பூமியைச் சுற்றும் ஒரு செயற்கை கோள் பூமியில் விழாமல் சுற்ற வேண்டுமென்றால் அது பூமியின் இழுவிசைக்கு எதிராக அதி வேகத்தோடு சுற்ற வேண்டும். இந்த வேகத்தை செயற்கை கோளை ஏவும் ராக்கட்டு அளிக்கும். இப்படியான செயலுக்கு எரிபொருள் அதிகம் தேவைப்படும். எரிபொருள் அதிகம் தேவைப்பட்டால் கோளின் எடை கூடிவிடும், மொத்தத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் பூமியின் இழு விசையிலிருந்து தப்பித்து குறைந்த எரிபொருள் துணையோடு சுற்ற இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் இந்த Lagrange point. விண்வெளியின் பார்க்கிங் ஸ்பேஸ் என்கிறார்கள் இதை. இரு கோள்களுக்கிடையிலான இழுவிசைகள் சமமாக இருக்கும் பகுதி இந்த Lagrange point. நிலவுக்கும் பூமிக்கும் இடையில் இப்படியான பகுதி உண்டு. அந்த வகையில் சூரியனின் இழு விசையும் பூமியின் விசையும் சமமாக இருக்கும் ஒரு பகுதிதான் இந்த Lagrange point-1. இந்த பகுதியில் செயற்கை கோளை நிறுத்தினால் சூரியனை நோக்கி விழாமல் பூமியை நோக்கியும் விழாமல் அதே நேரத்தில் சூரியனை சுற்றும். இதற்கு எரிபொருளும் குறைவாக தேவைப்படும். மேலும். இந்த Lagrange point-1ல் நிலை நிறுத்தப்படுவதால் பூமியைவிட சூரியனுக்கு அருகில் ஆதித்யா இருந்தாலும் அது சூரியனை சுற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் பூமி எடுக்கும் அளவில் ( 365 நாட்கள்) இருக்கும். பூமிக்கு நிகராக / நேராக சுற்றும். இதன் முலம் ஆதித்யாவிற்கும் பூமிக்கும் இடையில் தொலை தொடர்பு எளிதாகவும் சீராகவும் இருக்கும். சூரியனை ஆராய அனுப்பப்படுவதால் சூரியனுக்கு பூமிக்கும் இடையில் உள்ளLagrange point-1ல் நிலை நிறுத்தப்படுகிறது ஆதித்யா-L1. இதில் L1 என்பது Lagrange point-1 ஐ குறிக்கிறது. அந்த வகையில் இன்று ஏவப்பட்ட ஆதித்யா-L1 செயற்கை கோள், பூமியை சுற்றி, ஸ்லிங் ஷாட் அடித்து சூரியன் சுற்றுப் பாதையில் போய் சேர இன்னும் 4 மாதங்கள் ஆகும். Lagrange point என்பது “திரிசங்கு சொர்க்கம்” மாதிரி அந்தக் காலத்திலே அதை குறித்து அறிவு நம்மிடம் இருந்தது. பஞ்சாங்கத்தில் இருந்தது போன்ற வாட்சப் பதிவுகள் வரும். அவற்றை தள்ளி வைத்துவிட்டு. அயராத உழைப்பால், வியக்க வைக்கும் அறிவாற்றலால் அறிவியல் துணையோடு இந்த திட்டத்தை செயல்படுத்திய அனைவருக்கும் திட்ட குழு தலைவரான திருமதி நிஹார் ஷாஜி அவர்களுக்கும் அறிவு வணக்கத்தை சொல்லி மகிழ்வோம். .

ஆசிரியர் தினம்


சீன - ஜப்பானிய மொழியில் ஆசிரியரை சென்சே (Sen-Sei) எனக்குறிப்பிடுவார்கள். சென்சே என்றால், தமக்கு முன் பிறந்தவர் என்று அர்த்தம். இது வெறும் வயதை மட்டும் குறிப்பதில்லை. ஜென் மார்கத்தில், தனக்கு முன் ஞானமடைந்தவர், உலகை உணர்ந்தவர் என்று அர்த்தம்.

சீடர்கள், ஏற்கனவே ஞானமடைந்தவரை அணுகி, தானும் ஞானம் பெற வேண்டும் என அவரிடமிருந்து கற்றுத் தேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. 

மாணவன் குருவைத் தேடி அடைவது டிமாண்ட் ட்ரைவன் ப்ராசஸ். இப்ப இருக்கும் நடைமுறைப் போல ஆசிரியரகள் நமக்கு பள்ளி/கல்லூரி அமைப்பின் மூலம் அறிமுகமாவது போல இல்லாமல், கற்பவர், தமக்கான ஆசிரியரை ஒரு தேனீயைப்  போல தேடிக் கண்டடைய வேண்டும்.

இந்த சென்'சே என்பதை ஜப்பானிய சித்திர எழுத்து வடிவத்தில்  இரண்டு கேரக்டரை கொண்டு எழுதுவார்கள். 

முதல் கேரக்டர், நம்ம ஊர், நடராஜரின் ஆனந்த தாண்டவ நிலை போல இருப்பது ஞானமடைந்த குருவையும், இரண்டாவது கேரக்டர், அந்த ஆனந்த தாண்டவ நிலையின் முன் பணிந்து, முழங்காலிட்டு அமந்து கேட்கும் சீடனையும் குறிப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். 

எனது சென்-சேக்களுக்கு மனங்கனிந்த வணக்கங்கள்.
****

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். 🌸

எது காயப்படுத்தவில்லையோ, அது வாழ்க்கை அல்ல.எது கடந்துபோகவில்லையோ, அது மகிழ்ச்சியல்ல.- இவோ ஆண்ட்ரிச்

Sunday 3 September 2023

ஒரு நல்ல விவாதம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா?தனது கருத்தை ஆழமாகச் சொல்வதில் இல்லை. அடுத்தவன் கருத்தை ஆழமாக உள்வாங்குவதில்...!!-ராஜ்சிவா

திருச்செந்தாழை


மிகவும் சிறிய நாவல்.
இரண்டே பாத்திரங்கள்தான். நிறைமாத கர்ப்பிணியான பன்றி, அதனை வளர்க்கின்ற கிழவன்.
காட்டுக்குள் காணாமல்போய்விடுகிற அந்த பன்றியைத் தேடிச்செல்கிற கிழவனின் ஓரிரவு அனுபவத்தை ஓவியம்போல சொல்கின்ற மொழி.

குறிப்பாக, ஒரு மாபெரும் முயற்சிக்குப் பிறகும் தோல்வியையே அடைந்துவிடுகிற ஒருவரது மனவோட்டங்களை மிகையின்றி வெளிப்படுத்துகின்ற விதத்திலும்,
நம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்கும் நடுவே மனிதன் திகைத்து நிற்கின்ற கணத்தில் தன்னைத்தானே அவன் தட்டி நிமிர்த்துக்கொள்ள தனது பழைய நினைவுகளை, அதன் வெற்றிகளை ஒரு சூத்திரம்போல ஆக்கி வைத்திருக்கின்ற மனதின் கைவைத்தியத்தையும் இந்த சிறிய நாவல் ஒரு ஈட்டியின் முனையால் எழுதப்பட்டதைப்போல எழுதிச்செல்கிறது.

"வெயில் சூரியனிடமிருந்து வருகிறது. நிலவொளி சந்திரனிடமிருந்து வருகிறது. பின் இருள் எங்கிருந்து வருகிறது? ஒருவேளை இருளுக்கு பிறப்பு,இறப்புகள் இல்லைபோல.அது எப்போதும் இருக்கும்போல"

தீவிர யுத்தத்தைப்போல கடந்துசென்றுவிட்ட இரவிற்கு பிறகு, தனது செயல் அனைத்திலும் தோல்விகண்ட கிழவன் மயக்கமாகி புல்வெளியில் கிடக்கிறான்.அவனது உள்ளம் மட்டும் சிதைபோல எரிந்துகொண்டிருக்கிறது.அப்போது அவன் எண்ணிக்கொள்வதாக ஒருவரி வருகிறது.
"உருவமுள்ள எனது உடல் உயிரில்லாததுபோல தோல்வியில் துவண்டு விழுந்துகிடக்கும்போது,
உருவமில்லா உள்ளம் புல்வெளியில் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருக்கிறது '

அழுதுகொண்டே உறங்கிவிடுபவர்கள் கண்களை கசக்கியபடி, மற்றொரு புதிய தினத்தின் மீது  எழுந்தமரும்போது 
வருகின்ற இறந்தகாலத்தின் இருள்படியாத அந்த புதிய கண்களை  இரவு திரும்பவும் தந்துசெல்வதைப்போல,
ஒருவனது தோல்வியினூடே அவனை அகவிசாரணைகளின்வழியே சலித்து, தூய்மைப்படுத்தி திரும்ப தனது நிலத்திற்கு அனுப்புகின்ற இந்த சிறிய நாவலின் வாசிப்பனுபவம் மிக அந்தரங்கமானது.

அவன் காட்டை வென்றான் - கேசவரெட்டி.
NBT வெளியீடு.

நன்றி திருச்செந்தாழை

சந்தேகிப்பது நல்லது. சந்தேகித்தால், தொடர்ச்சியாக நீங்கள் சந்தேகித்துக் கொண்டே வந்தால், நீங்கள் சந்தேகிக்கவே முடியாத கற்பாறை போன்ற ஒரே ஒரு நிகழ்வு மிச்சப்படும்.அதுவே உங்களின் இருத்தல். பின் ஒரு புதிய தேடல் எழும்-ஓஷோ

Friday 1 September 2023

Neo-New புதிய எனும் பொருள்படும் சொற்கள் இவை.New என்பது வரலாற்றுத் தொடர்பில்லாத முற்றிலும் புதியதை குறிப்பதுNeo என்றால் ஒரு பழைய யோசனையை மறுபரிசீலனை செய்வதைப் பயன்படுத்துவது அல்லது ஒரு இடைவேளைக்குப் பின் மாற்றமின்றி மீண்டும் தொடர்வது#info

கோகுல்


காந்தியச்சிந்தனை பக்கத்திலிருந்த பதிவு:

காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை

ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.

இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.

நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.

இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.

இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.

மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே

இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.

தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்

அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.

காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.

janakiraman


காந்தியச்சிந்தனை பக்கத்திலிருந்த பதிவு:

காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை

ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.

இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.

நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.

இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.

இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.

மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே

இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.

தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்

அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.

காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.

வெற்றி என்பது ஓர் அற்புத நிகழ்வல்ல.எவன் ஒருவன் தனது ஆர்வத்தை மிகச்சரியான நேரத்தில் கண்டுபிடித்துக் கொள்கிறானோ அவன் வெற்றிக்கான முதல் படியில் காலடி வைத்தவனாகிறான்-ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

Thursday 31 August 2023

படித்தது


Be like Pluto 

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் மட்டும் தான் இருக்கின்றன என்ற நம்பி வந்தோம். 

1930ம் ஆண்டு நெப்ட்யூனைத் தாண்டி இன்னொறு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிரகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று உலக அளவில் விவாதம் நடந்து, மினர்வா, க்ரோனஸ், புளூட்டோ எனும் மூன்று பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் புளூட்டோ என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த பெயரை புதியதாக கண்டுபிடித்த அந்த கிரகத்துக்கு சூட்டி, ஒன்பதாவது கிரகமாக அடையாளமிட்டனர்.

பிறகு ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த ஆராய்ச்சியில் புளூட்டோ மிகச் சிறிய கிரகம் (நிலாவை விட சிறியது), அது வெறும் வாயுக்கூட்டத்தால் ஆனது, அதன் அடர்த்தி மிகக்குறைவு என்று அறிந்தனர். 

சூரிய மண்டலத்தின் கடைசி பகுதியில் "குய்பர் பெல்ட்" என்ற ஒன்று இருக்கிறது. சின்னச் சின்ன விண்கற்கள் அதில் சுற்றிக்கொண்டிருக்கும். அந்த குய்பர் பெல்ட்டில் இருக்கும் ஒரு பொருள் தான் புளூட்டோ என்று தீர்மானித்து, அது கிரகம் அல்ல என்று 2006ம் ஆண்டு அறிவித்து சூரிய குடும்பத்தின் கிரகங்கள் பட்டியலில் இருந்து புளூட்டோவை தூக்கிவிட்டனர். இப்ப சமீபத்தில், புளூட்டோவை தனி கிரகமாக கருதலாம் என்று சில விண்வெளி ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

நாம புளூட்டோவை கண்டுபிடித்தது, அதனை கிரகமாக அங்கீகரித்தது, அதற்கு பெயர் வைத்தது, அப்புறம் அதனை கிரகம் அல்ல என்று அப்புறப்படுத்தியது, மீண்டும் அதனை கிரகமாக கருதலாம் என்று பேசுவது இவை எதுவுமே புளூட்டோவுக்குத் தெரியாது. அது தோன்றிய காலத்தில் இருந்து, அது பாட்டுக்கு அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம புளூட்டோவை பற்றி பேசியவை, ஆராய்ந்தவை ஆகியவை பற்றி புளூட்டோவுக்கு எந்த அக்கறையும் இல்லை.

நாமும் புளூட்டோவைப் போலத் தான் இருக்கனும். நம்மைப் பற்றி மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும். நாம் நம்ம பாட்டுக்கு இயங்கிக்கொண்டே இருப்போம். நம்மைப் பற்றிய மற்றவரின் அபிப்ராயம், நாம் அல்ல. அது அவர்கள் பிரச்சனை.

😊

Sunday 27 August 2023

ஒரு சிறு கோப்பையில் இருக்கும் நீருக்குள் கைப்பிடியளவு உப்பை அள்ளிப்போட்டால் அந்த நீரைப் பருக முடியாது. ஆனால், அதே அளவு உப்பை நதிக்குள் போட்டாலும் நதி நீரை நாம் அள்ளிப்பருகலாம், அதில் சமைக்கலாம் , துணி துவைக்கலாம். நதி மகத்தானது. எதையும் வாங்கி அரவணைத்து அதை மாற்றக்கூடிய திறன் அதனிடம் உள்ளது. எப்பொழுது நம்முடைய இதயம் ஒரு கோப்பையைப் போல் சிறியதாக மாறுதோ அப்பொழுது நம்முடைய புரிதல், கருணை எல்லாமுமே ஒரு கட்டுக்குள் சிறியதாகத்தான் இருக்கும். தவிர, அது நம்மை துயரத்தில் ஆழ்த்தும். நாம் எதையும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லது அவர்களைச் சகித்துக்கொள்ளும் திறன் இருக்காது. தவிர, மற்றவர்களை மாறச்சொல்லி வற்புறுத்துவோம். ஆனால், எப்பொழுது நம்முடைய இதயம் நதியைப் போல் விரிவடையதோ அப்போது இதே விசயங்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தாது. நாம் நிறைய புரிதல் உள்ளவர்களாகவும் கருணையுள்ளவர்களாகவும் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்களாகவும் இருப்போம். மற்றவர்கள் எப்படியோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம். Thich nhat hanh

காசி ஆனந்தன்


சேவல் கூவியது 

நான் எழும்போது இந்த சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது என்று கதிரவன் பூரித்துப் போனான். மாலை வந்தது.

 மேற்கு திசையில் கவிழும் முன் நான் விழுகிறேனே என்னை தாங்க யாருமே வர மாட்டார்களா என்று ஏங்கினான் 

சேவலை அவன் எதிர்பார்த்தான் வரவில்லை விழுந்து கொண்டே கதிரவன் சொன்னான் 

"எழும்போது தாங்க வருகிறவனெல்லாம் 
விழும்போது தாங்க வருவதில்லை"

-காசி ஆனந்தன்

சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமில்லைநாம் ஒருபோதும் வாழாத,நாம் எப்போதும் வாழ அச்சப்படும்வாழ்க்கையைத் தவிர...- கே.சச்சிதானந்தன்.

சதுரங்க காய்களுக்குச் சுய சிந்தனை கூடாது என்பது முதல் பாடம்..-யுவன் சந்திரசேகர்

Wednesday 23 August 2023

முதலை

முதலை

psi.(pounds per square inch )என்ற அளவீடு மூலந்தான், இதன் கடிக்கும் திறன் அளவிடப்படுகின்றது. இதன் கடிக்கும் திறன் 3,700 psi. ( மனிதர்களின் கடிக்கும் சக்தி 150 முதல் 200 PSI அளவில் இருக்கும். 

சிங்கம் அல்லது புலியின் கடிக்கும் சக்தி சுமார் 1,000 PSI அளவில் இருக்கும்.)இந்த ஒப்பஷீட்டில் முதலையின் மூர்க்கமான கடி வலு எக்கடி இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். மிகப் பலம் வாய்ந்த தாடையுடனான முதலைகள், 66 கூரிய பற்களைக் கொண்டவை..

மிகப் பலமான வேகத்தோடு இரையைக் கவ்வும் இந்த முதலைகள் எருமைகள், காட்டுப் பன்றிகள் என்று எதையும் சுலபமாகக் கவ்விப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்று விடுகின்றன. பற்கள் உடைந்தால் உடனடியாக வளர ஆரம்பிக்கும் தன்மை உண்டு...

#info

ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?புத்தர்:மனித வாழ்வு நூறாண்டுகள் அல்ல. நூறு நிமிடங்கள் அல்ல.நூறு விநாடிகளும் அல்ல. ஒரு விநாடி. "ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்வு".

Tuesday 22 August 2023

கற்கை நன்றே-32


கற்கை நன்றே-32
*மணி

1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.

இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.

இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?

தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.

கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.

தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.

இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.

இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன

புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.
அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.

-படித்தது

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

காதல் மிகவும் பேராசை கொண்டது. அது உலகிலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்வதற்குத் துடிக்கிறது. எந்நேரமும் எல்லாமும் தனக்கே உரியதாக இருக்கவேண்டும் என அடம்பிடிக்கிறது. அந்த ‘எல்லாம்’ என்பது மிகவும் எளிதாகவும் இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ. - பீத்தோவன் எழுதிய காதல் கடிதம்.

'வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்'நம்முடைய நல்வினைப்பயனாக இந்த உயர்ந்த மனிதப் பிறவியாகி இப்பிறப்பு கிடைத்துள்ளது. இதனை மதித்துச் செயல் பட வேண்டும் நாம். இப்பிறப்பின் நோக்கமே அதுதான்.-அப்பர்

கற்பனை ஒரு ஆற்றல். நீங்கள் அதை பயன்படுத்த முடிந்தால் அது உதவிகரமாக இருக்கும். நீங்கள் அதனால் பயன்படுத்தப்பட்டால் அது பேரழிவு பயப்பதாக இருக்கும்-ஓஷோ

Monday 21 August 2023

கற்கை நன்றே-31*மணி




ஒரு கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவர்களை கணிக்க சொன்னார். ஒவ்வொருவரும் ஒரு விடையை சொன்னார்கள்.

அதற்கு ஆசிரியர் கூறுகிறார் இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை அதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேனோ அதற்கேற்றாற் போல் அதன் எடை மாறுபடும்.

இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், அதன் எடை மிகவும் சிறிதாக தெரியும். இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள் என் கை வலிக்க ஆரம்பித்து விடும். இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால் என் கை உணர்வற்று செயலற்றதாகி விடும்.

இங்கே அந்த குவளையின் எடை அதிகமாகவில்லை ஆனால் அதை நான் தாங்கிக் கொண்டிருக்கும் நேரம் அதிகமாகும் பொழுது அந்த குவளையின் எடை கூடுவது போல் ஒரு பிம்பம் உருவாகிறது.

நம் மன அழுத்தம், கவலைகள் எல்லாம் இந்த குவளை தண்ணீர் போல. சிறிது நேரம் அதைப் பற்றி நினைத்தாள் எந்த தொந்தரவுமில்லை. அதுவே கொஞ்சம் நேரம் கூடுதலாக அதை பற்றிய சிந்தனையில் இருந்தால் ஒரு சங்கடமான நிலையை உருவாக்குகிறது. சதா ஒரு நாள் முழுவதும் இதே சிந்தனையிலிருந்தால் அது நம்மை உணர்ச்சியற்றவராக எதுவும் செய்ய இயலாத நிலையை தந்துவிடும்.

இங்கே கவலைகளோ மன அழுத்தமோ நம்மை தொந்தரவு செய்வதில்லை. அதைப்பற்றி நாம் எவ்வளவு நேரம் யோசிக்கிறோமோ அந்த அளவு நம்மை ஆட்படுத்தும் சக்தியை நாம் அதற்கு கொடுத்து விடுகிறோம். இங்கே ஒரு மடுவை மலையாக்குகிறோம் நாம்.

இதற்கென்ன வழி? மிகவும் எளிது. எப்பொழுதும் அந்த குவளையை கீழே வைத்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை

இனிய காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

‘பொதுவாக, உண்மையைப் பின்பற்றுவது என்றால், உண்மையைப் பேசுவது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைக்கு இன்னும் விரிவான பொருள் உண்டு’ . ‘எண்ணத்தில் உண்மை வேண்டும், பேச்சில் உண்மை வேண்டும், செயலில் உண்மை வேண்டும்!’-என்.சொக்கன்

Sunday 20 August 2023

படித்தது


அளிய தாமே சிறு பசுன் கிளியே

குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின்

மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும்

மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது

கோவலன் கண்ணகியை வர்ணிக்கும் சிலம்பு வரிகள். குழலிசையையும், யாழிசையையும், அமிர்தத்தையும் கலந்த உன் பேச்சைக் கேட்ட பசுங்கிளிகள் அதோடு போட்டியிட இயலாமல் வருந்தி அதனைக் கற்பதற்காக உன்னைப் பிரியாமல் இருக்கின்றன என்பது அதன் அர்த்தம்.

நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,ஆனாலும்ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்அதன் தொண்டையைஅடைத்திருக்கும் பாடல் போலஎன்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.- டல்ஸ் மரியா லொய்னாஸ் தமிழில் - க. மோகனரங்கன்

நாட்கள் பொல்லாதவைகளானதால், நாம்தான் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்-பாவெல் சக்தி

Friday 18 August 2023

உண்மையிலுமே வாழ்க்கை நாற்பது வயதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.அதுவரைக்கும் நீங்கள் அதைப்பற்றி ஆராய்ச்சி மட்டுமே செய்துகொண்டிருக்கிறீர்கள்- யுங்

அலெக்சாண்டர் ஹெய்ஜர்.


நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் அதன் பொருள் நிறைய உழைத்துக் களைத்துவிட்டீர்கள் என்பதல்ல. உங்களை மலர்த்தும் செயல்களில், உத்வேகமூட்டும் காரியங்களில் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதே. வேலை நாள்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் அன்றன்று அவசரகதியில் முடிக்க வேண்டிய, ஆனால் பயனற்ற பணிகளில் மட்டுமே மேலதிகக் கவனம் செலுத்துகிறோம். நம்முடைய முதலாளிகள் நம்மைச் சக்கையாகப் பிழிவதற்கான புதுப்புது வழிகளைக் கண்டறிந்தவாறே இருக்கிறார்கள். இதன் காரணமாக எப்போதும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். தற்கணத்தில் வாழ்வதை மறந்துவிட்டு, அடுத்தக் குறிக்கோள், அடுத்தப் படிநிலை உயர்வு, அடுத்த வாகனம், அடுத்த வார இறுதி என வேறொன்றைத் துரத்தும் கனவிலேயே நேரத்தை வீணடிக்கிறோம். நண்பர்களே, நம் கைவசமுள்ள தருணம் நிகழ்கணம் மட்டும்தான். அது மட்டும்தான். 

நமது நேசத்துக்குரியவர்களோடு செலவழிக்கும் நேரத்தைவிடப் பணியில் அதிக நேரம் செலவிடுகிறோம். தாமதமாக வீடு திரும்பினாலும் நவீனக் கருவிகளோடு மல்லுக்கட்டி, மெய்நிகர் உலகில் பொய்யாக வாழ்ந்து, நம்மருகே இருக்கிற பிரியத்துக்குரியவர்களின் அன்பைத் தவறவிடுகிறோம். சோம்பிகளைக் காட்டிலும் மோசமான நிலையில் நாள்களைக் கடத்துகிறோம். அதன் பிறகு ஏதோவொரு பொழுதில், ‘வாழ்க்கை ஏன் சலிப்பாக இருக்கிறது?’ என அலுத்துக்கொள்கிறோம். அதற்குக் காரணம் வேலைப்பளுதான் என முடிவுகட்டுகிறோம். உண்மையாகவே பொருட்படுத்தத்தக்க விஷயங்களில், மனத்துக்கு நெருக்கமான பணியில் ஈடுபட்டால் நாம் சோர்வாக உணரப் போவதில்லை என்பதைக் குறித்து என்றேனும் சிந்தித்ததுண்டா? கடின உழைப்போ பணி அழுத்தமோ நம்மை வீழ்த்துவதில்லை நண்பர்களே! மனநிறைவைத் தராத பணியைச் செய்வதால்தான் நாம் எளிதில் அயர்ச்சியுறுகிறோம்.

- அலெக்சாண்டர் ஹெய்ஜர்.

Thursday 17 August 2023

சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?அது சூழலைப் பொறுத்தது. உணவு இருப்பவனுக்கு பசிக்கிற நேரமே சாப்பிடச் சரியான நேரம்.எதுவும் இல்லாதவனுக்கு உணவு கிடைக்கிற நேரமே சரியான நேரம்-சூஃபி

ஒட்டகம்


ஒட்டகம்
-அ.முத்துலிங்கம்

இக்கதை சோமாலியா நாட்டில் நடக்கிறது. நிலவும் கொடுமையான தண்ணிர் கஷ்டத்தில் தவிக்கும் மைமுன் என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மைமுன் தினமும் அதிகாலையில் எழுந்து பதினாறு மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவருகிறாள். அந்தக் காரியம் அவளை மிகவும் சோர்வடைய வைக்கிறது. 

ஐ.நா. சிறகம் அவர்கள் ஊருக்கு வந்து என்ன வசதி வேண்டும் என்று கேட்டபோது பெண்கள் ஆழ்துழாய் கிணறு வேண்டுமென்கிறார்கள். ஊர்த் தலைவரான அவள் தகப்பனார், “மசூதியைக் கட்டித்தா மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்” என்று சொல்கிறார். அவ்வளவு நிதியை ஒதுக்க முடியாத ஐ.நா. சிறகம் இதனால் பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுகிறது. இந்நிலையில் தினமும் தண்ணீர் எடுக்கவரும் அவளை அலிசாலா விரும்புகிறான்.

 அவளோ பக்கத்து ஊரைச்சேர்ந்த ஐம்பது வயது கிழவனை மணக்கச் சம்மதிக்கிறாள். திருமணமும் நடக்கிறது. ஊருக்கு போகும்போது அவள் அழுகிறாள். விருப்பப்பட்டுத்தானே திருமணம் செய்துகொண்டாய் இப்போது ஏன் அழுகிறாய் என்று அவள் தாயார் காரணம் தெரியாமல் கேட்கிறாள். அதற்கு அவள், “பக்கத்து ஊரில் தண்ணீர் குடம் குடமாக வருகிறதாம்.

 பதினாறு மைல் நடக்கத்தேவையில்லையாம். அதனால் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று சொல்கிறாள்.

 இந்தக் கதைக்கும் ஒட்டகம் என்ற தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஒட்டகம் பல நாள் தண்ணீர் அருந்தாமல் வாழக்கூடிய ஒரு பிராணி. தேவையான போது தண்ணீரை மொத்தமாகக் குடித்துக்கொள்ளும். அதே போல் மைமுன், தன் வாழ்க்கை முழுமைக்குமான தண்ணீரை இந்தத் திருமணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள். 

தினமும் தேவைப்படும் தண்ணீரைப் பற்றிய கவலையைவிட இது எவ்வளவோ மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடுகிறது. மேலும் ஒட்டகம் முள்ளை விரும்பிச் சாப்பிடும். அதுபோல் அவளும் அந்தக் கிழவனுடடான திருமணத்தை, முள்ளாக இருந்தபோதிலும், விரும்பி ஏற்றுக்கொள்கிறாள்.

அ.மு


இடம் மாறியது
-அ.முத்துலிங்கம்

பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை அவர்களிடம் செல்கிறார். 

பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். அங்கே பார்த்தால் பிள்ளையவர்கள் களத்திலே கொட்டிக்கிடந்த நெல்மணிகளை ஒவ்வொன்றாக பொறுக்கி கூட்டிச் சேர்த்துக்கொண்டிருந்தார். புலவருக்கு திக்கென்றது. இவரிடமிருந்து பரிசில் பெறவா இத்தனை தூரம் நடந்து வந்தோம் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார். எனினும் மனதை தேற்றிக்கொண்டு தான் வரும் வழியில் கவனம்  செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.

பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி  அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார் ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’

பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். 

இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும்.

 John Steinbeck  என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath  நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. 

இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.

சிபில்


சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் என்பதுஉங்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் எவ்வளவு கடன் கொடுக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் அளவே சிபில் ஸ்கோர் எனப்படும். இது அனைவரும் வாழ்க்கையின் பொதுவான ஒரு நடவடிக்கையாகும். நீங்கள் வங்கியில் பணம் வாங்கும்போது ஆதார் கார்டு பான் கார்டுபோன்ற ஆதாரங்கள் வங்கியில் கேட்கிறார்கள் அல்லவா! அது ஏன் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா அவர்களிடம் இல்லை என்றால் நான் விளக்கம் சொல்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் வங்கிகள் பொதுவான நடவடிக்கைகள் என்ன வென்றால் உங்கள் ஆதார் கார்டு பான் கார்டு டீடெய்ல்ஸ் சிபில் ஸ்கோர் என்ற இணையதளத்தில் தேடுதல் பொறியை தட்டுவார்கள். அதில் குறைந்தது "50" கீழ் இருந்தால் உங்கள் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக கடன் கிடைக்காது

அதுவே 80 90 க்கு உங்கள் ஸ்கோர் மேல் இருந்தால் நிச்சயமாக கடன் கிடைக்கும். பொதுவாக வங்கிகள் உங்கள் ஆதாரங்களை சேகரித்து சிபில் ஸ்கோர் அமைப்புக்கு அனுப்பிவிடுவார்கள் அந்த அமைப்பு உங்கள் ஆதாரங்களை பதிவு செய்து கொள்ளும் இப்படி நீங்கள் ஒரு வங்கியில் வாங்கிய கடன் மற்றொரு வங்கியில் உங்கள் கடன் நிலையை சோதிக்கும் போது உங்கள் இயல்நிலை தெரிந்துவிடும். சிபில் ஸ்கோர் ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.

அதில் அனைத்து வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஆதாரங்கள் இருக்கும். இதன் வைத்தே கடன் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று சிபில் ஸ்கோர் முடிவு செய்கிறது.

இதுவே சிபில் ஸ்கோர் ஆகும்." 50 "அளவு ஸ்கோர் கடன் கொடுக்க கூடாது "60 "அளவு ஸ்கோர் நன்றாக பரிசோதித்து கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம்

70 "ஸ்கோர் ஓரளவு செக்யூரிட்டிகள் அதிகரித்து கடன் கொடுக்கலாம்." (80 90)" சிபில் ஸ்கோர்கள் நிச்சயமாக கடன் கொடுக்கலாம்.

-படித்தது

Wednesday 16 August 2023

பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் பளபளக்கிறது. கடலில் இருக்கும் நீரோ கருத்தேயிருக்கிறது. சின்ன உண்மைகள் தெளிவான சொற்களைக் கொண்டவை. பேருண்மையோ மெளனத்தை கருக்கொண்டவை-தாகூர்

மறதி எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது. மனதுக்குள் சதா சுழன்றுகொண்டு நம்மை துன்புறுத்திக்கொண்டிருக்கும் ஞாபகங்களை மறப்பதற்கான அழகான வழித்தடமாக பாடல் இருக்கிறது. மனிதன் தனக்குப் பிடித்த பாடலைக் கேட்கும்போது அவன் நேசிக்கிற விஷயங்களை மட்டுமே உணர்கிறான்.- இவோ ஆண்ட்ரிச்

சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமில்லைநாம் ஒருபோதும் வாழாத,நாம் எப்போதும் வாழ அச்சப்படும்வாழ்க்கையைத் தவிர...- கே.சச்சிதானந்தன்.

திச் நாத் ஹான்


சரியான பேச்சு

வெளிப்படையாக பேசுகிறோம் என்ற பெயரில் சில நேரங்களில் நாம் விகாரமாகப் பேசிவிடுகிறோம். அதன் மூலம் மற்றவர்களின் மனதில் உள் முடிச்சுகளை உருவாக்கிவிடுகிறோம். பிறகு, "நான் உண்மையைத்தானே சொன்னேன்" என்று சொல்லி சமாதானப்படுத்திக் கொள்கிறோம். 

நாம் பேசியது உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நாம் பேசும் விதம் தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தினால், அது "சரியான பேச்சு" அல்ல.

உண்மையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் முன்வைக்க வேண்டும்.  சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் வார்த்தைகளைக் கொண்டு பேசுவது சரியான பேச்சு அல்ல.

நாம் பேசுவதற்கு முன், நம்முடன் உரையாடுபவரை புரிந்து கொள்ளவேண்டும். நாம் எதையும் கூறுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கவனித்து, அதன்படி பேச வேண்டும். இப்படி செய்தால், நமது பேச்சு, பேசும் விதத்திலும் உள்ளடக்கத்திலும் "சரியான பேச்சாக" மாறும்.

உண்மையான பேச்சு, சரியானதாகவும் இருக்கும் போது தான் அன்பும், அமைதியும் மலரும்.

 ~ திச் நாத் ஹான்

Tuesday 8 August 2023

ஒரு நேசத்திற்குள் எல்லா மகிழ்வையும் கொண்டாடித் தீர்த்து விடாதீர்கள்.மறவாமல் ஒரே ஒரு புன்னகையையாவது எடுத்து ஓரமாக வைத்து விடுங்கள்.. பிரியும் தருவாயில் அது நிச்சயம் பயன்படும்.-விசித்திரன்

எதனால் அழுதாயோ அதனாலேயே ஆறுதல் அடைவாய்.எதற்காக காத்திருந்தாயோ அது உன் கைகளிலே வந்துவிழும். இழத்தல் இயல்பென்றால் அடைதலும் இயல்புதான்.-நிவேதிதா

ஒருவரின் கடைசி நாட்கள்தான் அவரது ஆரம்ப நாட்களை ஒவ்வொருவருக்கும் நினைவு கூர வைக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது-பாவெல் சக்தி

நமக்குத் தெரிஞ்ச வாழ்க்க வேற,நாம தேடுற வாழ்க்க வேற,நாம வாழுற வாழ்க்கயும் வேற..-இமையம்

Monday 7 August 2023

பட்டறைஇரும்பை உருக்கி எஃகாக உருமாற்றி அதனைக் கொண்டு வேளாண் கருவிகள், போர்க் கருவிகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படும் கொல்லர் தொழிற்கூடமே அன்றைக்கு உலை, பட்டறை, பட்டசாலை போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டது.பட்டடைக்கல் என்பது வார்ப்பிரும்பால் / வடித்த எஃகாலான தட்டையான மேற்பரப்பமைந்த அகலமான பாளம் ஆகும்.ஆங்கிலத்தில் ANVIL என்று பெயர் கொண்ட இது ஓர் எஃகு / இரும்புப்பாளம். இதன் மீது உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் நடைபெறுகிறதுஇரும்பு அல்லது எஃகுப் பணிப்பொருளை வைத்து வேலை செய்யப் பயன்படுத்தப்படும் வெட்டுதாங்கிக் கல்லின் பெயரே 'பட்டடைக்கல்' ஆகும். இதனை 'அடைக்கல்' என்றும் அழைப்பர்.பட்டடைக்கல் என்ற பெயரையொட்டி தோன்றிய பெயரே பட்டறை!-படித்தது

"அசையாதவர்கள், தங்கள் சங்கிலிகளைக் கவனிக்க மாட்டார்கள்." -ரோசா லக்சம்பர்க்

ஜானகிராமன்


நாம் பேசும் மொழிக்கு சக்தி உள்ளது. பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும், அது குணநலனையே கூட மாற்றியமைக்கும்.

தமிழில் "நான் சோகமாக இருக்கிறேன்" என்று சொல்வோம். இதையே ஆங்கிலத்தில் "I'm Sad" என்று கூறுவோம். இரண்டிலும் சோகம் என்ற உணர்வு நமக்குள்ளிருந்து வெளிப்பட்டதாக அர்த்தமாகிறது.

ஐரிஷ் மொழியில், ஒருவர் சோகத்துடன் இருப்பதை "Ta Bron Orm" என்பார்கள். அதனைத் தமிழில் மொழி பெயர்த்தால், "சோகம் என் மீது உள்ளது" என்று அர்த்தப்படும். 

இது மிக அழகிய அணுகுமுறை. உணர்ச்சிகள் வெளியில் இருந்து நம்மை அவ்வப்போது ஆட்கொள்கிறது, அந்த உணர்ச்சிகள் நான் அல்ல என உணர்ந்து கொள்ளும் போது, உணர்வு வயப்படுவது குறைகிறது. இப்போதைக்கு சோகம் என்ற மீது உள்ளது. பிறகு அது மாறும். வேறொரு உணர்ச்சி என் மீது வரும் என்ற மனநிலை நம்பிக்கைத் தருகிறது. 

இதே தான் மகிழ்ச்சிக்கும். நான் மகிழ்வாக இருக்கிறேன் எனும் போது, மனதுக்குள் ஒரு வித துள்ளல் ஏற்படுகிறது. அதே, "மகிழ்ச்சி என் மீது உள்ளது" என்று கூறினால் நம்மால் சமநிலையுடன் இருக்க இயலும்.

-படித்தது

Sunday 6 August 2023

தாவோ


ஒரு நாள் இளவரசன் ஒருவன் தன் படைகளோடு காட்டிற்கு சென்றான். அவனைப் பார்த்ததும் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன. ஆனால் ஒரே ஒரு குரங்கு மட்டும் இவனைப் பற்றி கவலைப்படாமல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. அது அந்த இளவரசனக்கு எரிச்சலை ஏற்படுத்த அந்த குரங்கை நோக்கி அம்பை எய்தான்.

 அந்த குரங்கு தன்னை நோக்கி பாய்ந்து வந்த அம்பை கையால் பிடித்து தூர வீசியது. கோபம் அடைந்த இளவரசன் தன் படைவீரர் அனைவரையும் அழைத்து குரங்கை கொல்ல உத்தரவிட்டான். அடுத்த கணம் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய குரங்கு அந்த இடத்திலேயே உயிர் விட்டது. ஒருவனுக்கு திறமைகள் இருந்தால் அதை அத்தனை பேருக்கும் விளம்பரமாய் காட்டக்கூடாது. அதுவே அழிவுக்கு காரணம் ஆகிவிடும்.

-தாவோ

"நல்லதைச் செய்து கிணற்றில் தள்ளிவிடு"'நல்லதை செய்தால் இருந்தால் உடனடியாக மறந்துவிடு.நான் நல்லது செய்துவிட்டேன் என்னும் நினைவை தூக்கிச் சுமந்து கொண்டு திரியாதே'-சூஃபி

அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் என்பது சோர்வுக்கு எதிரான ஊக்கத்தின் போராட்டம்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Saturday 5 August 2023

winwin method

ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "WIN WIN METHOD."

அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.

இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் WIN WIN METHOD.

இதே போல் எந்த ஒரு செயலையும். நீங்கள் தூங்கினால்கூட நாளை இதைவிட அமைதியாக தூங்கவேண்டும் என்று நினைப்பது.

இதையே" ஓஷோ" வேறுமாதிரி சொல்வார்.

எதிலும் ஒரு பூர்ணத்துவம் ஒரு முழுமைவேண்டும்.

நீ பணக்காரன் என்றால் அம்பானியைவிட பணக்காரனாக இரு.

பிச்சைக்காரன் என்றால் உன்னைவிட ஒன்றுமேஇல்லாத பரதேசி யாருமில்லை என்ற அளவுக்கு பிச்சைக்காரனாக இரு என்பார்.

-இனியகாலை

தனிமனித வழிபாடு என்பது தத்துவங்களை மறைத்து தனிநபர்களைக் கடவுளாக்கும் வழி-அம்பேத்கர்

Thursday 3 August 2023

மலைஅதன் மாறாத் தொல்லிருக்கையில்இவ்வெளியில் அமர்ந்துஆட்சிப் புரிகிறதுசகலத்தையும் கவனித்தபடிசகலத்தையும் விசாரித்தபடி-எமிலி டிக்கன்சன்

மேற்பரப்பினைக் கண்டுமெய்ம்மறப்போர்க்குஒரு கடல்அதன் ஆழத்தால் ஆனதுஎன்பது தெரியாது-மகுடேசுவரன்

பிரிவின் வலியோடுஇறுகிய மெளனத்துடன்காத்திருந்தது'பூட்டு'

ஒருத்தரோட பணிவிடைகளுக்கு இன்னொருத்தர் கொடுக்கற கைமாறல்ல, அன்பு. அது ஒருத்தங்க இன்னொருத்தங்ககிட்டக் கண்டடையற பூரணத்துவம்.”-கே. ஆர். மீரா

"வாழ்க்கையில் ஒரே சமயத்தில் எல்லாமே கிடைத்துவிட முடியாது. அது சாத்தியமேயில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், கூடவே ஏதாவதொன்றை இழந்தாக வேண்டும். இந்தத் தேர்ந்தெடுக்கிற பிரச்சனைதான் வாழ்க்கையில் மிக மிகப் பயங்கரமான சங்கதியென்று எனக்குத் தோன்றியது. எதையென்று, எந்த அடிப்படையில், எப்படித் தேர்ந்தெடுப்பது?"-ஆதவன்

Wednesday 2 August 2023

இருபது வருடங்களுக்குப் பிறகு நாம் சாதித்ததை விட செய்யத் தவறியது தான் நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.-மார்க் ட்வைன்

மனிதன் பயப்படும் போது பிறரையும் பயப்படுத்த முற்படுகிறான்.பிறரும் தன்போல் பயந்தால் தன் பயம் குறையும் என நினைக்கிறான்-ஓஷோ

போட்டிக்கும்... பொறாமைக்கும் என்ன வேறுபாடு? அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!-இறையன்பு

காதலென்பது வாழ்நாள் முழுவதும் ஒருவன் ஈடுபடும் இடையறாத தேடல்-ஆதவன்

Tuesday 1 August 2023

பாதை தெரியுது பார் ❤சந்திரயான் பூமியை 16 நாட்கள் தட்டாமாலை சுற்றி சுற்றி வந்தது.இன்று காலை கிழே வந்ததும் அதை அதி வேகத்தில் சர்ர்ர்ர்ர்ரென்று ஃப்யர் செய்து நிலவுக்குச் செல்லும் பாதையில் திருப்பி விட்டார்கள்.இதை sling shot என்பார்கள்.Discus throw விளையாட்டில் பல சுற்றுகள் சுற்றி வேகம் எடுத்து வெயிட்டை சர்ர்ரென்று தூக்கி தூரத்தில் எறிவார்கள்.அது மாதிரி கவணில் கல்லை வைத்து ரப்பரை கூடிய வரை பின்புறம் இழுத்து அடிப்பது.வேகம் கிடைக்கும் அதனால் இலக்கை அடையும்.இது எல்லாம் ஸ்லிங் ஷாட்தான்.நீலக் கலர் கோடு நிலவுக்கானப் பாதை.நிலவை அடைய 4அல்லது 5 நாள் ஆகும்.தூரம் 384400 கிலோ மீட்டர்.சந்திரயான் 3 ஒரு மணிக்கு 2500 -3000 கிமி வேகத்தில் பயணிக்கும்.அங்கே போயும் மீண்டும் தட்டமாலை சுற்றிவிட்டுதான் நிலவில் ஆகஸ்ட் கடைசியில் இறங்கும்.

ஓஷோ


ஜப்பானில் வாழ்ந்த, ஹோட்டே (Hotei) எனும் ஞானியை "சிரிக்கும் புத்தர்" என்று அழைப்பார்கள்.  அவர் ஜப்பானியர்களால் இன்று வரை  மிகவும் விரும்பப்படும் ஒருவர். ஆனால், அவர் தன் வாழ்நாளில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.  

அவர் ஞானம் பெற்றவுடன், சிரிக்க ஆரம்பித்தார், யாராவது நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்கும் போதெல்லாம்,  அவர் மேலும் சிரிப்பார்.  அவர் சிரித்துக் கொண்டே கிராமம் கிராமமாகச் சென்றார்.

கிராமங்களில் வேடிக்கைப் பார்க்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும், அவர் சிரிப்பார்.  சிறிது நேரத்தில் மெதுவாக -- அவரது சிரிப்பு மற்றவரையும் தொற்றி, கூட்டத்தில் யாரோ ஒருவர் சிரிக்கத் தொடங்குவார்கள், பிறகு வேறு யாராவது, இறுதியில் மொத்த கூட்டமும் சிரிக்க ஆரம்பிக்கும். காரணமே இல்லாமல் சிரிப்பது, அபத்தமானது என்று அவர்கள் உணர்ந்தாலும் சிரிப்பதை நிறுத்த முடிவதில்லை.

அதே சமயம், "இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? சிரிக்க எந்த காரணமும் இல்லையே."  என்று எல்லோரும் கொஞ்சம் கவலையும் அடைந்தார்கள். ஆனால் மக்கள் ஹோட்டேவின் வருகைக்காக காத்திருப்பார்கள். 

ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வளவு முழுமையுடன் சிரித்ததில்லை, அந்த சிரிப்புக்குப் பிறகு அவர்களின் ஒவ்வொரு உணர்வும் தெளிவாக இருப்பதைக் கண்டார்கள்.  அவர்களின் கண்கள் நன்றாகப் பார்க்க முடிந்தது, மனதுக்குள் ஒரு பெரிய சுமை மறைந்துவிட்டதைப் போல, அவர்களின் முழு உடலும் ஒளியாகிவிட்டது.

மக்கள் ஹோட்டேயிடம், "மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று கேட்பார்கள், அவர் சிரித்துக்கொண்டே வேறு கிராமத்திற்குச் செல்வார்.  

ஹோட்டே, ஞானம் பெற்ற சுமார் நாற்பத்தைந்து வருடங்கள் அவரது வாழ்நாள் முழுவதும், அவர் ஒரே ஒரு காரியத்தைச் செய்தார், சிரித்தல்.  அதுவே அவருடைய செய்தி, அவருடைய பிரசங்கம், அவருடைய வேதம்.

(கடைசியாக நாம் எப்போது வாய்விட்டு சிரித்தோம்?)

- ஓஷோ

Monday 31 July 2023

மனிதர்கள்


நாம் சந்தித்த அழகானவர்கள் பலரும் வீழ்ச்சியை, வாதையை, வலி மிகுந்த போராட்டத்தை, இழப்பை அறிந்தவர்கள். அவற்றிலிருந்து மீளும் வழியைக் கண்டறிந்தவர்கள். அத்தகைய மனிதர்களிடம் வியப்பும் பாராட்டுணர்வும் நுண்ணுணர்வும் இயல்பாகவே மிகுந்திருக்கும். வாழ்க்கை கொடுத்த பலத்த அடிகள் வழியாகப் பரிவையும் சக மனிதர்கள் மீது அக்கறையையும் மென்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்துவார்கள். 

ஒரு நாளில் யாரும் அழகாவதில்லை. 

- வளர்ச்சியின் இறுதிப் படிநிலை, எலிசபெத் குப்ளர் ராஸ்.

'காலையில் ஒன்று ஆவர், கடும்பகலில் ஒன்று ஆவர்;மாலையில் ஒன்றுஆவர் மனிதரெல்லாம்'-ஓளவையார்

Sunday 30 July 2023

நன்றாக உடுத்திய பெருவயிறான பணக்காரனுக்கும், மோசமாக உடுத்திய படிப்பறிவற்ற ஏழைக்கும் இடையில் நீதியை நிர்ணயிக்கும் போது இயற்கையாகவே நீதிமன்றம் முதலில் சொன்னவனுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது-இ.எம்.எஸ்.நம்பூதரிபாட்

"நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்"- ஆல்பெர் காம்யு

"வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லே தான்... ஆனா நரகமா ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்..."- ஜெயகாந்தன்,

Friday 28 July 2023

தற்கொலை என்பது எளிதல்ல அரளிவிதை மையாய் அரைத்து நீர்கரைத்து குடித்துவிடலாம் குடல்பிரட்டி வயிறு எரியும் சையனைடுகளுக்கு வாங்குதிலேயே பிரச்சினைகள் வரும் தூக்குப்போட்டுக்கொண்டால் வாய்கோணி முகம் கோரமாகும் தூக்கமாத்திரை இவற்றில் எளிது காப்பாற்றும் முயற்சியிலிருப்பவர்கள் கண்டதையும் கரைத்து வாயில் ஊற்றக்கூடும் தற்கொலைக்கு எளியவழி என்பது காரணங்களோடு சமரசம் கொள்வதுதான்-லதாமகன்

என்.சொக்கன்

அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!

 கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்! 

ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:

 ‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’ இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல,

 ’ஆலத்தைப்போ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண். 

இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’

 அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’

 இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!

-என்.சொக்கன்

"உதட்டை இறுக்கிச் சிரிப்பது, சுழித்துச் சிரிப்பது, தாடையைக் கீழே இறக்கிச் சிரிப்பது, பக்கவாட்டில் பார்த்துச் சிரிப்பது, எப்போது பார்த்தாலும் சிரிப்பது" என ஐந்து வகை சிரிப்புகள் சொல்லப்படுகின்றன.-படித்தது

எக்காரணத்தைக் கொண்டும் உன்னுடைய மேலதிகாரியைக் காட்டிலும் ஒளிர நினைக்காதே-அதிகாரத்திற்கான 48விதிகள் நூலில்

சொற்களைக் காட்டிலும்மௌனத்திற்கு அஞ்சுகிறோம்,ஒரு மௌனம் தனக்குள்எல்லா விபரீதங்களின் சாத்தியங்களையும்புதைத்து வைத்திருக்கிறது.எய்யாத அம்புஎந்தத் திசையில் வேண்டுமானாலும் பாயக்கூடும்அபாயங்களைப் போல.-யாத்திரி

Thursday 27 July 2023

ஈசாப்


மதிய வேளையில் மலை உச்சிக்குச் சென்ற ஓநாய் தன் நிழலை பார்த்து, மிக பிரம்மாண்டமான உருவத்தை பெற்றிருக்கும் நாம் ஏன் இனி புலி,சிங்கத்துக்கு பயப்பட வேண்டும் என எண்ணியது. அப்போது அந்த வழியாக வந்த சிங்கம் அதன் மேல் பாய ஓநாய் உயிரை இழந்தது.போலிச் சொற்களால் மிகவும் உயர்வாக கருதுபவர்களின் முடிவு இதுதான்.

-ஈசாப்

பிடித்தவைகளோடு இருக்க நேரம் பறித்துக் கொண்டிருக்கிறான்தன் அவதியின் உலகிலிருந்து.பிடித்தவைகளும் அதற்கேயுரிய அவதிகளின் உலகிலிருந்து கரம் நீட்டுகின்றன..-திருச்செந்தாழை

Wednesday 26 July 2023

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி, தான் தான் சுவரையே தாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுமாம்.அதைபோல சிலர் வேலை செய்யும் கம்பெனியை தான் தான் தாங்குவதாக சிலர் நினைத்துக் கொள்வார்கள்..-சுகபோதானந்தா

அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்-தலாய்லாமா

படித்தது


'ஒரு விசயத்தைப் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பார்க்கும் விசயமும் மாறுகிறது...' என்கிறது குவாண்ட இயற்பியல். எல்லைக்குட்பட்ட நம் அறிதல்களால், நம்மை சிறிதினும் சிறிதாக சுருக்கிக்கொள்ள உதவுகிற கதைகளையோ, செயல்களையோ நாம் நம்ப விழைகிறோம்.

 'இந்த உட்சுருங்கலுக்கு காரணம் நானல்ல, இதுவே வாழ்வியல்போக்கு' என எதன்மீதோ பொறுப்புசுமத்தி நம்மை நாமே நியாயப்படுத்துகிறோம். மானுட அகம் எந்நிலையிலும் சுருங்கப்படுவதன் பொருட்டு படைப்படைந்தது அல்ல.

 அறிதலால்... அமைதியால்... அடைதலால்... கணத்திற்குக் கணம் அது விரிவுகொள்வது.  ஆகவே, நம் சின்னஞ்சிறு அகத்தை, பெரிதினும் பெரிய இப்பிரபஞ்சத்தோடு பொருந்த வைக்கக்கூடிய கதைகளும் செயல்களுமே நமக்குத் தேவை. அதைத் தேடி கண்டடைவதே ஒவ்வொரு மனிதரின் பிறப்புநோக்கம்.

-படித்தது

Monday 24 July 2023

நிலவு சண்டையிடுவதில்லை;அது யாரையும் தாக்குவதில்லை;அதற்கு கவலை என்பதில்லை:அது எதையும் நசுக்க முயல்வதில்லை.நிலவு அதன் போக்கில் இயங்குகிறது, ஆனால் அதன் இயல்பே, மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நிலவைத் தவிர, வேறெந்த ஒன்றால் ஒரு முழு கடலையும் கரையிலிருந்து கரைக்கு இழுக்க முடியும்? நிலவு, அதன் இயல்புக்கு உண்மையாக இருக்கிறது. அதனால், அதன் சக்தி ஒருபோதும் குறைவதில்லை.- டெங் மிங்-டாவோ.

நீங்கள் இளமையாக இருக்கும்போது வாழ்க்கை இன்னமும் தொடங்கவில்லை என்றே நம்பிக்கொண்டிருப்பீர்கள். உங்களது வாழ்க்கை அடுத்த வாரமோ அடுத்த மாதமோ அடுத்த ஆண்டோ விடுமுறைக்குப் பிறகோ ஏதேனுமொரு கணத்தில் தன்னிச்சையாகத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கருதுவீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததைப் போல வாழ்க்கை ஆரம்பமாகியே இருக்காது. நீங்கள் விரும்பிய தருணம் மலர்ந்திருக்காது. சட்டென உங்களுக்கு வயதாகியிருக்கும். உங்களிடம் எஞ்சுவதென்னவோ ஒற்றைக் கேள்விதான். ‘இத்தனை காலமாக என்னிடம் இருந்தது என்ன? காலத்தின் இடைச்செருகலா? சிதறுண்ட பொழுதுகளா? பொருளற்ற பைத்தியக்காரத்தனமா? என்னிடம் வழங்கப்பட்டிருந்தது என்ன?’- டக்ளஸ் கூப்லேண்ட்.

திருச்செந்தாழை


அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.

அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.

தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.

இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.

கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.

-திருச்செந்தாழை

Sunday 23 July 2023

ஓஷோ


எல்லாம் அவசரம்

 ஒரு சிறிய நகரத்தில் கார் விபத்து ஏற்பட்டது.

அதில் பலியானவரை  சுற்றி ஒரு பெருங்கூட்டம்  கூடி இருந்தது.

அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர்,அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது.

"இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான்"என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும் ,தயவு செய்து வழிவிடுங்கள்.

உடனே,அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று,அவருக்காக வழி விட்டனர்.

நிருபர் அருகில் சென்றவுடன்,விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அது ஒரு கழுதை????????? 🙄🤔

இப்படிதான் மனிதன் எல்லாவற்றிருக்கும் அவசரப்படுகிறான்...!

- ஓஷோ

Saturday 22 July 2023

மனிதர்கள் தங்களைத் தொடர்ந்து 'அவதானிப்பதன்' மூலமாகவும் தொடர்ந்து 'மறுகண்டுபிடிப்பு' செய்வதன் மூலமாகவும் மட்டுமே கட்டற்ற நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும் மனக்கொந்தளிப்பான வாழ்க்கை சூழலிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்-யுவால் நோவா ஹராரி

படித்தது


முற்றிலும் அடையாளம் சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு காலத்தில் அடையாளங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது  சந்தையில் தியானம் செய்வது.  எவ்வளவு அமைதிக்கு முயல்கிறோமோ அவ்வளவு இரைச்சலைத் திணிப்பதும், எவ்வளவு இரைச்சலிருக்கிறதோ அவ்வளவு அமைதி தேவையாகவும் ஆவது. டார்க்காவ்ஸ்கி, கலைஞனுக்குத் தேவை சமூக உரையாடல் இல்லை, தனித்திருப்பது என்கிறார். அவர் உத்தேசிப்பது தன்னைப் புனைந்துகொள்வதை விடுத்து தனித்திருந்து ஆராய்ந்துகொள்வதை. அறிவால் அல்ல, அறிவை அதைவிட பெரிய ஒன்றின் முன் தன்னிலையை மண்டியிடச்செய்துதான் கலையை உருவாக்க முடியும். அறிவை அங்குசமாக்குபவர் அந்த யானையை மண்டியிடச்செய்யலாம். ஆனால் யானையையே மண்டியிடச்செய்வதால் அங்குசம் ஒன்றும் அரிய ஒன்றாகிவிடுவதில்லை.
 
அறிவு நம்மை நோக்கி வரும்போதே நூறு கைகளையும் விரித்துக்கொண்டே வருகிறது. நம்மின் பகுதியாகவே மாயம் காட்டுவது. ரத்னாபாயின் ஆங்கிலத்தைப்போல. அறிவின் சிறு துளி போதும்,  சந்தையை வாங்கித் தருகிறேன் என்பது.  ஆனால் அங்குசத்தை வைத்திருப்பவனுக்குத் தேவை சந்தையல்ல. பகலில், சந்தையின் இரைச்சல் எட்டாத உயரத்தில் மிதந்து செல்ல ஒரு யானை. இரவில் தனிமையின் குளிருக்குக் கிழித்துப் போர்த்திக்கொள்ள ஒரு யானைத்தோல். சந்தையையே வாங்கினாலும் குத்தி மண்டியிட வைக்க யானையற்றவன் துயரம் தீராதது.
 
அங்குசத்தை அடைவதைவிட ஆயிரம் மடங்கு கடினம் தனக்கான யானையைக் கண்டடைதலும், அதைக் கிழித்துப் போர்த்திக்கொள்வதும்.

-படித்தது

யார் யாரோ வந்துஆறுதல் போல் ஏதேதோ சொல்லஇப்போது என்னிடம் இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்அவர்களிடம்எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்எஞ்சி இருந்தது-படித்தது

பழசெல்லாம் சோப்பு போட்டுக் கழுவின மாதிரி பளிச்சுன்னு பத்திரமாக நினைவில் இருக்க, காலையில் நடந்தது மறந்துபோவதுதான் மூப்பின் பிரச்னை.-சுஜாதா

Wednesday 19 July 2023

கற்பனை நிஜம்


உங்களின் கற்பனை' என்பது, நிழல்கள். உங்களின் அனுபவம் என்பது நிஜங்கள்.

உங்களின் கற்பனையில், இருப்பதை அனுபவிக்க, பழகுங்கள். அங்கு நிஜங்கள் தோன்றும். நிழல்கள் மறையும்.

அதாவது அனுபவித்தல், என்பது உணர்தல். ஒவ்வொன்றுடனும்' ஒவ்வொன்றையும், ஆழமாக உணருங்கள்.

அதாவது. அங்கு, நீங்கள் நீங்களாக' இருந்திடுங்கள்.

அதாவது, உண்மை, என்பதே நிஜம்.

எனவே உங்களுள் இருக்கும், நிஜமே, உங்களிற்கு நிஜத்தை காட்டும்.

எனவே உங்களின், கற்பனை என்பது ஒரு ஆக்கம்'. ஆனால் அது நிஜமா, என்பதில் உங்களிற்கு எந்த வித விடயமும் இல்லை. ஆனால் அது கற்பனையில், உள்ள விழிப்பு ' என்பதில் எந்த வித ஆட்சபனையும், இல்லை, என்பதே உண்மை.

"வெளிச்சம் வரும் போதெல்லாம், கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன" எனும் ஆதவனின் வரி நினைவுக்கு வருகிறது.

Tuesday 18 July 2023

படித்தது


காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரை !!

''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது. மீண்டும் மீண்டும் எழுகிறது. யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்த பிறகு தான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்து போன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
'ஒரு சரித்திரம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு சகாப்தம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு தியாக பரம்பரை முடிந்தது' என்று சொல்வார்கள் . எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வதுதான் உண்மையோ? என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப் பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார்.
மற்றவர்களையெல்லாம்  வாழவைக்க நினைத்த அந்த மனிதனை, வாழவேண்டிய விதத்தில் வாழ வைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து 'வாழ்க' என்ற  கோஷம் வானதிரக்கிளப்பி, அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.               
நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மை விட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப் புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை. அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும், யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை.சொல்ல வேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை  நமக்கு நாமே அழுது கொள்வோம். அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை இனி நாம் தானே அனுபவிக்கப் போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. 
இனி நம்மால் அவரை அவமானப்படுத்த  முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்...

Monday 17 July 2023

பிச்சைக்காரன்


நீளமான வாக்கியங்களில் தெளிந்த நீரோடை போல எழுதுவது ஆங்கில பாணி .. தமிழில் இந்த பாணி குறைவு..  ..  இயல்புத் தன்மை கெடாமல் நீளமாக எழுதுவதில், மாஸ்டர்  சாண்டில்யன்தான்... கவனியுங்கள்
--------------
இளமதியின் இளம் பாதங்களையும் தளிர் விரல்களையும் கடலரசன் தனது அலைக்கரங்களால் ஆசையுடன தழுவி தழுவி சென்று கொண்டிருந்தாலும் மாலைக்திரவன் அவள் பொன்னிற மேனிக்கு ஈடு கொடுக்க முடியாத தன் கிரகணங்களை ஈர்த்துக்கொண்டு வெட்கத்தினால் முகம் சிவந்து கடலுக்குள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்ததனால் தமது தோல்விககு பழி வாங்கும் பொருட்டு அவன கிரகணங்கள் கடல் நீரில் கலந்து அதன் ஓரப்பகுதிகளை சிவக்க அடித்து நீலக்கடலுக்கு சிவப்பு சேலையை போர்த்த முற்பட்டன.


*முற்றுப்புள்ளியே இல்ல.. தட் எவ்லோ பெரிய மாத்திரை மொமண்ட்

இவ்வளவு பேர் இருக்கும்இவ்வளவு கூட்டமான என் வாழ்வில்நீ மட்டும் ஏன்இல்லாது போனாய்?இருந்திருக்கலாம்தனிப்பட என்றில்லாவிட்டாலும்கூட்டத்தில் ஒருத்தியாகவாவதுஎவரையோநீ என ஒரு கணம்காட்சிப் பிழையாக மயங்கும் விதமாகவேணும்-மனுஷ்ய புத்திரன்

'சிலரோடு சிந்திப்பாய், பலரோடு பேசுவாய்'*பலரைக் கவனித்து அவர்கள் தகவல்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு.. முடிவுகளை எடுக்கும் போது முக்கியமானவர்களை அருகில் வைத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்".-பல்தசார்

ப.பி


படித்ததில் பிடித்தது

உதய கீதம் படம் . மோகன் சிறையில் . ரேவதி அவரை விரும்புகிறார் . பாடு நிலாவே . தேன் கவிதை என பாடல் எழுதினேன் . இதே வரியை மோகனும் பாடுவதாக எழுதினேன் . இளையராஜா யோசித்தார் . ரேவதி சிறைக்கு வெளியே இருக்கிறார் . நிலவை பார்த்து பாடுவது பொருத்தம்தான் . ஆனால் சிறைக்குள் இருக்கும் மோகன் பாடு நிலாவே என எப்படி பாடுவார் . அவருக்கு நிலா தெரியாதே என்றார் . நிலவொளி தெரியுமே என்றேன் . இசைஞானி சமாதானம் ஆகவில்லை . யோசித்தோம் . திடீரென அவர் முகத்தில் பரவசம் . ஒரே ஒர் எழுத்தை சேர்ப்போம் . பாடு நிலாவே என ரேவதி பாடட்டும் . பாடு(ம்) நிலாவே என மோகன் பாடட்டும் என்றார் . அருமை அண்ணா என உற்சாகமாக கை தட்டினேன் . ம் என்ற ஓர் எழுத்து அர்த்தம் பொருந்தியது . ரேவதி நிலவை பார்த்து பாடுகிறார் . மோகன் ரேவதியை முன்னிலைப்படுத்தி பாடுகிறார் . பாடல் வெற்றி பெற்றது . இப்போது இன்னொன்று தோன்றுகிறது . அது இசைஞானிக்கே தெரியாது . பாடும் நிலா பாலு என எஸ்பிபி அழைக்கப்படுகிறார் . அன்று ராஜா சேர்த்த மெய்யெழுத்து பாலுவின் அடையாளமாகி விட்டது

−மு.மேத்தா

Sunday 16 July 2023

நேரம்


மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப்பாண்டவரை தரிசித்தனர். முதல் நபரை பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறார்கள் என்றார் போப். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாக சுற்றிப் பார்க்க மாட்டீர்கள் என்றார்.

 அடுத்தவர் நான் மூன்று மாதம் தங்கப் போகிறேன் என்றார். அதற்குப் நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார்.பிறகு மூன்றாமவர் எனக்கு ஒருவாரம் தான்  விடுமுறை என்றார்.போப் சொன்னார்.. நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள் என்றார்.அதற்கு விளக்கமும் தந்தார்.. 

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனை பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறது பிறகு பார்ப்போம் என்று எதையும் முழுமையாக பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்றார். இது நேர நிர்வாகத்துக்கும் நேரம் மேலாண்மைக்கும் நிச்சயம் பொருந்தும்.

இனிய காலை

பா.வெ


"வாய்மொழி மரபில் நிறுத்தற்குறிகள் போன்ற அடையாளக்குறிகள் எதுவும் இருக்காது. இந்த அடையாளக்குறிகள் 'இன்மையை' ஈடுசெய்வதற்காக வாய்மொழி மரபில் 'Modulation' உபயோகப்படுகிறது. ஒரு ஆச்சர்யக்குறியை இட முடியாத இடத்தில் "ஹா.. "என்ற ஒரு ஒலி அதை ஈடுசெய்கிறது. கேள்விக்குறி இட முடியாத இடத்தில் "அப்படியா.. " என்ற ஒலி கேள்விக்குறியை ஈடுசெய்கிறது. அல்லது, தலைமாற்றாகச் சொல்ல வேண்டுமானால் Modulation ஐ ஈடுசெய்வதற்காக நாம் சில குறியீடுகளை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய கதைகளில் நிறுத்தற்குறி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இந்த குறிகளை ஈடுசெய்யக்கூடிய சப்தமுறையை எழுத்துக்களின் வழியே உருவாக்க முடியுமா என்கிற பரிசோதனை முயற்சியாக நான் என்னுடைய புனைவுகளை அமைக்கிறேன்.

இந்த பரிசோதனைகளை நான் செய்வதற்காக வாக்கிய அமைப்புகளை அதற்குத் தகுந்தாற்போல மாற்றுகிறேன். இப்படி வாக்கிய அமைப்புகளை தகுந்தாற்போல மாற்றும்போது மொழியினுடைய சாத்தியப்பாடு அதிகமாகிறது. மொழி அதிகமாக வேண்டியிருக்கிறது. மொழியினுடைய திரவத்தன்மை அதிகமாகிறது. திரவத்தன்மை தொடர்ந்து எனக்கு நிகழ்வுகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது."

-புதுமைப்பித்தன் நினைவு விருது விழாவில் பா.வெங்கடேசன்

அன்பு என்பது அடைக்கப்பட்ட பறவைக்கு இடப்படும் இரையைப் போன்றதல்ல, அது அந்தப் பறவைக்காகத் திறந்து காட்டும் ஆகாசத்தைப் போன்றது-சிவபாலன் இளங்கோவன்

Saturday 15 July 2023

மெழுகுவர்த்தி


மெழுகுவர்த்தி-சக்கரவர்த்தி

மெழுகுவத்தி - என்பதே பிழையற்றது.

வத்தி - என்ற சொல் 'திரி' யைக் குறிக்கும்.

வதி - என்றால் தங்கு. (To dwell, remain, stay, abide).

வத்தி = எரியும் தீயினை நிலைக்கச் செய்யும் திரி, தீப்பற்றி எரியும் திரிப்பொருள்.

எனவே தீவத்தி, மெழுகுவத்தி, ஊதுவத்தி, கொசு வத்தி எனச் சொல்வதே பிழையற்ற பயன்பாடுகள்.

தீவத்தி > தீவட்டி.
தீவத்தி என்பதன் கொச்சை வழக்கே தீவட்டி .

வத்தி > வத்திக்குச்சி /வத்திப் பெட்டி.

சக்கர வர்த்தி போன்ற அயற்சொற்களின் தாக்கத்தால், பேச்சு வழக்கில் மெழுகுவர்த்தி, ஊதுவர்த்தி என்று பிழையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வத்தி, வர்த்தி இரண்டும் வெவ்வேறு பொருள் குறிப்பன.

சக்கரவர்த்தியில் உள்ள 'வர்த்தி' யானது வட்டப்பொருள் குறிப்பது.

மன்னனின் தேர் சக்கரத்தை உருவகப்படுத்தி அமைந்த சொல்லாகும். அதாவது ஆட்சி என்ற தர்மச்சக்கரத்தை உருளச் செய்பவன் என்ற பொருள் குறிப்பது - சக்கரவர்த்தி.

-படித்தது

ஜெமோ


இந்த உலகை அறிந்துகொள்ளுதல்,
பயன்படுத்துதல் என
அறிவியலின் இரண்டு விளைவுகள் உள்ளன.அறிவு பயன்பாடாக ஆகிறது,பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம். 
இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது என்கிறார் ரஸல்

-ஜெமோ

Friday 14 July 2023

பூ


” மலர்ப் பண்பாடு “ - பூவுக்கு எத்தனை பெயர்கள்? Tamil Botany 

1 அரும்பு : காலையில் அரும்பிய நிலை

2 நனை - வெளியில் தெரியத்தொடங்கி வெளிச்சத்தில் நனையும் நிலை 

3 முகை –முத்துப்போல்ஆகும் நிலை 

4 முகிழ் – நறுமணத்துடன்முகிழ்த்தல் 

5 மொட்டு –கண்ணுக்குத் தெரியும் மொட்டு 

6 போது –மலரும் பொழுது காணப்படும்
புடைத்த நிலை

 7 மலர் – மலர்தல் செய்யும் நிலை 

8 பூ –முழுமையாகப் பூத்த மலர் 

9 வீ – தரையில் உதிரும் பூ 

10 பொதும்பர்– பூத்துக் குலுங்கும் நிலை. .

11பொம்மல் – தரையில் உதிர்ந்த புதுப் பூ

12செம்மல் – தரையில் உதிர்ந்த பூ சிவந்து அழுகும் நிலை.

”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்” என்று வள்ளுவர்  உருவகிக்கிறார். 

நாம் இன்று பூக்களை அந்த அளவுக்கு நுட்மாகக் கவனிக்கும் ஆற்றலை இழந்து
விட்டோம். அதனால் பூவின் பல பெயர் சொற்களை நாம் இழந்து வருகிறோம்.

-இந்திரன்

தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணி காகங்கள் எப்போதும் பறக்கின்றன.பிடித்துக் கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றனநம்பிக் கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன-இறையன்பு

ஆயிரம் துயர்களை எதிர்கொள்ளயானை பலம் போதும்.அன்பினால் வீழ்த்தப்படும் போது..சிற்றெறும்பின் திடம் கூடவாய்ப்பதில்லை.- ஜே.ஜே.அனிட்டா

Thursday 13 July 2023

இயற்கை மெழுகு கடினமான உடையும் பொருள்.ஆனால், அதில் கொஞ்சம் வெப்பத்தைச் சேர்த்தால், நாம் விரும்பும் வடிவத்தை அதில் ஏற்படுத்த முடியும். அதைப் போலவே பணிவையும், இனிமையையும் சேர்த்தால் யாரையும் நம் பக்கம் ஈர்க்க முடியும்-ஆர்தர் ஷோபன்

' எப்படி இருக்கீங்க?' என்ற கேள்விக்குசத்தி பொய் சொன்னார்'நல்லா இருக்கேன்'.' நீங்க எப்படி இருக்கீங்க:ஐயா?'சத்தி பதிலுக்குக் கேட்டார்.'நல்லா இருக்கேன் சாமி'நான் பொய் சொன்னேன்.இப்படித்தான் நாங்கள்ரொம்ப ரொம்பஉண்மையாக இருக்கிறோம்.-வண்ணதாசன்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!-கவிதாஎத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு.ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம் புதிதாய் உயிர்ப்பித்து விடுகிறது.ஒரு செண்பகத் தோட்டத்தின் தெற்கு மூலையில் அவன் காத்திருப்பு. காதலுக்காக சில மணித்துளிகள் காத்திருப்பதன் சுகத்தையும், சந்திக்க வராது போனவளிடத்துப் பிறக்கும் தவிப்பையும் எத்தனையெத்தனை வடிவிற்தான் சொல்லிப் பார்க்கிறான் பாரதி.காத்திருக்கிறான். பார்க்கும் இடங்களெல்லாம் அவளைப் போலவே தோற்றம் கொள்கிறது. இதையே மற்றொரு பாடலில் விரித்துக் கூறுகின்றான்.‘நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.’வானின் இடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார்’ என்று அவனுக்குள் சின்னதாய் ஒரு சிணுங்கல் எழுகிறது. காதலினால் உடல் கொதித்து வேதனை செய்கிறது. இது வேதனையல்ல! காதலின் பெருந்தவிப்பு!சட்டென்று அங்கிருந்து ஓடிச் சென்று அவளைக் காணவேண்டும் என்ற வேகம் வருகிறது. ஒரு அரசியைப் போல மிடுக்கோடு இருப்பவளை தனது வருகை நாணச் செய்திடுமோ என்ற அச்சமும் வருகிறது. அவ்வெண்ணத்தை அதே வேகத்தில் தடுத்துவிடுகிறான். ஒரு பெண்ணின் தன்னிலை மாறாது தன்னோடு வைத்துக்கொள்ள எத்தனிக்கும் காதல் அவனது.அன்றைய பொழுதில் காதலோடு கூடிப் பரவசப்பட முடியாதது தான் செய்த குற்றம் தானோ என தனக்குள் நொந்து நோகிறான்.இதே போல ஊரே உறங்கிக் கிடக்கும் தருணத்தில் தான் மட்டும் அனுபவிக்கும் காதல் வேதனையை, தவிப்பை குறுந்தொகைப் பாடலொன்றும் பாடியிருக்கிறது. அது அங்கே தலைவன் வராததையிட்டு தலைவி தோழிக்குச் சொல்லியது. பதுமனார் என்ற புலவர் எழுதியது.‘நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கள் முனிவின்றுநனந்தலை உலகமும் துஞ்சும்ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ஆனாலும் பாரதியின் “இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ?” என்ற வார்த்தைகளுள் இருக்கும் உணர்வையும் உடல்மொழியையும் குறுந்தொகைப் பாட்டில் என்னால் பெறமுடியவில்லை என்பதே உண்மை.‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!’ – பிரிவாற்றாமையின் ஏக்கத்தை அவளுக்கு வலிக்காமல் சொல்வதற்கு இதை விடவும் வார்த்தையுண்டோ!கொடுத்துவைத்தவள் கண்ணம்மா!உண்மையில் யார் இந்தக் காதலி?‘வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலிபன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தனநின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே’என்று தன் கவிதைத்தமிழையும் காதலியென்றான். அவனுடைய கண்ணம்மா, பால் கடந்தவள், வயதெல்லை கடந்தவள், வரையறைகள் கடந்தவள், அளவீடுகளைக் கடந்தவள்.அவள் சிறுவாழ்வின் பேரோசை.ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

படித்தது


புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhovவிடம் ஒரு முறை "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.

"தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.

அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும்  உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். 

அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும். 

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."

Wednesday 12 July 2023

செய்யும் பணி எதுவானாலும் அதில் கரைந்து போய் உச்சத்தைத் தொடவேண்டும், மிகச் சிறந்த விளைவுகளைப் பெறவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.-பா.ரா

பூலோக நரகம் என்பது யாது?அஃது இருப்புப்பாதை மூன்றாம் வகுப்பு வண்டித்தொடர்(அன்ரிசர்வ் கோச்)-திரு.வி.க

சல்லிசிறுமைக் கருத்தின் அடிப்படையில் அமைந்த சொல்லே... சல்லிப்பையன்/சல்லிப்பயல்! சல்லி வேர், சல்லிக்கல், சல்லிக்காசு, சல்லித்தனம், சல்லிசு, சல்லி(ஜல்லி) சல்லிப்பயல் முதலியபெயர்களில், சல்லி என்பது சிறுமைப் பொருள் குறிக்கும்.

ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்தில் ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல் போவது தான் வாழ்க்கையின் சுவாரசியம்!-பாலகுமாரன்

இரவு நேர சாலை விளக்கு


ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?

அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.

இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.

அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில்சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.

இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர்(LIGHT DEPENDING RESISTOR ) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE )எனப்படும் எல்இடி விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிர செய்கின்றது.

அதனால் இரவு 12 மணி நேரம் கூட எல். இ .டி பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது

-படித்தது

Monday 10 July 2023

ஆறுதல் பரிசு என்று ஒன்று உண்டு. அதைவிட மோசமான பரிசு இந்த உலகத்திலேயே கிடையாது. தோற்றவரை ஆற்றுவதற்காகத் தரும் இந்தப் பரிசு உண்மையிலேயே தோல்வியை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. இந்தப் பரிசு பெற்றவரை யாரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அ.முத்துலிங்கம்

மது அருந்துபவர்கள் குடிக்க துவங்கும் முன் cheers என்று கூறுவது 'கம்பெனி கொடுத்ததற்கு நன்றி' என்று பொருள்-ஜி.எஸ்.எஸ்

ரயில் குறியீடு


பொருள் மயக்கம் என்னும் அழகு ❤

குறியீடுகள் நிறைந்தப் படம் என்று ”குறியீடு” என்கிறச் சொல்லை கடந்த 10-12 வருடமாக  இணையத்தில்  வைரலாகப் பயன்படுத்தி வருகிறோம்.இதன் பழைய மாடல் ”சிம்பாலிக்” (symbolic) என்கிற சொல்.பாலச்சந்தர் இதன் உலகக் காப்புரிமையை வைத்திருந்தார்.அவர்  படங்களில் பார்க்கலாம்.லோக்கலில் நாங்கள் இதை “டைரக்‌ஷன் காட்றது” என்போம்.😃வீட்டில் யாரவது இறந்தால் சுவர் கடிகாரப் பெண்டுலம் நின்று விடும்.வாழை மரம் தலை சாயும்.அவுட் அண்ட் அவுட் நாடகத்தனம் இருக்கும்.அப்போதைய டிரெண்ட்.

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட  புகழ் பெற்ற எழுத்தாளர்களின்  சிறுகதைகளில் ரயில் நிலையம் ஒரு படிமமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்?அதைக் குறியீடாக சிலாகித்து இந்தப் புத்தகத்தில் "சில பொழுதுகள் சில நினைவுகள்” வெங்கட்சாமிநாதனும் பாவண்ணனும் உரையாடுகிறார்கள்.

குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி, சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்,யில்வே ஸ்தானம் – பாரதியார்,
விடியுமா – கு.ப.ரா.

மல்லேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெங்கட்சாமிநாதன் பாவண்ணன் உரையாடல் நடுவே இந்த ரயில் நிலையத்தைச் சிலாகித்து உரையாடல் நீள்கிறது.

”ஸ்டேஷன் ரயில் எல்லாமே  வலிமையானப் படிவம்.மறைமுகமா ஒரு மனிதனுக்குள்ள நடக்கிற டிரான்ஸ்ஃபர்மேஷனை ரொம்ப சுலபமா முன் வைக்க ஒரு எழுத்தாளனுக்குக் காலம் காலமா ஸ்டேஷன் சித்தரிப்புகள் ரொம்ப உதவியா இருந்திருக்கு”  வெ.சா.

குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி

புத்தரருக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைச்ச மாதிரி அந்த வாத்தியாருக்குக் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷ்ன்ல ஞானம் கிடைச்சிட்டுது……..அதுதான் பெரிய தரிசனம்.குமாரபுரம் ஸ்டேஷன்கிறதே  அந்த நேரத்துல ஒரு பெரிய குறியீடாயிடுது.அற்புதமான கதை.

ரயில்வே ஸ்தானம் – பாரதியார்

ஒரு கதைக்குரிய நுட்பத்தையும் கவித்துவத்தையும் இந்தச் சித்திரத்தில் வச்சிருக்காரு பாரதியார்.முஸ்லீம் இளைஞனுக்கு மூன்று பொண்டாட்டி.அதனால் வீட்டில் பிரச்சனை.ஒரு நாள் கனவில் அல்லா  மூணுல ரெண்டு பேரை மணவிலக்குச் செஞ்சு ஒருத்தியோடு வாழுன்னு சொல்லிட்டு போயிடறாரு.ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்துதான் யோசிப்பதாக கதை ஆரம்பிக்கிறது.
அழுகை துக்கம்.இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்றதுன்னு கதைச் சொல்லிக்கு ஒரே குழப்பம்.
தடுமாற்றம்.நல்ல வேளையா தொடர்ந்து பேச முடியாதபடி ரயில் வந்துடுது.அவனும் அதில் கிளம்பி போயிடறான். கதை முடிஞ்சுடுது.ரயிலும் ஸ்டேஷனும் சரி டிரன்ஸ்ஃபர்மேஷனை சுட்டிக் காட்டக் கூடிய குறியீடுகள்.முக்கியமான முடிவை நோக்கி வந்துட்டான் அவன்.ஆனால் இப்ப எடுக்கப் பட போகுதுங்கற சூட்சுமமா சுட்டிக் காட்டத்தான் ரயில்வே ஸ்டேஷன் பின்னணி.

(மேல் சொன்னக் கதையைப் பாவண்ணனுடன் இரண்டுப் பக்கத்திற்கு அலசுகிறார் வெ.சாவுடன்)

விடியுமா? கு.ப.ரா❤

இந்தச் சிறுகதையில் கூட ஒரு ரயில் பயணம் வருது.கணவன் இறந்துட்டார்னு தந்தி கிடைச்சதும் மனைவியும் அவள் தம்பியும் ஊருக்குக் கிளம்புகிறார்கள்.செத்துப்போன கணவனைப் பற்றிய ஞாபகங்கள் வந்துட்டே இருக்கு.எப்படா விடியும்னு இருக்கு.கணவன் உயிரோடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்னு இரு சாத்தியப்பாடு உருவாகுது.ஒரே குழப்பம்.ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்னு நின்னு போகுது.ஒரு பக்கம்  ரயில் பயணம் அதனுடைய விவரங்கள் பெட்டிக்குள்ள பயணம் செய்யக்கூடிய மற்ற பிரயாணிகளுடைய எதிர்வினைன்னு சொல்லிக்கிட்டே போறாரு.ஒரு கதையைப் பற்றி யோசிப்பதற்கும் அசைப்போடுவதற்கும்  ஒரு வாய்ப்பை அந்த பொருள்
மயக்கம் காலம்காலமாக தக்கவச்சிருக்குது.

சிலிர்ப்பு – தி.ஜா.(stunning one. என்னால் மறக்கவே முடியாத கதை❤👌)

ஒரு ரயில் பயணம் நம் கண்களையெல்லாம் திறந்துடுது……………..ஓடும் ரயிலில் பல விவரங்கள் சொல்லப்படுகிறது.சிறுமியின் கதையும் சொல்லப்படுகிறது

.(இந்தக் கதை ஆரம்பமே ரயில்வே ஸ்டேஷன் விவரிப்புதான்.உரையாடலில் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கிறது.இருவரும் கதையின் உள்ளடக்க சிலாகிப்பிற்குப் போய்விட்டார்கள் உரையாடல் முழுவதும்.

கதையின் ஆரம்பம்:( இது புத்தகத்தில் இல்லை.படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக)

// திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. //

வெ.சாவின் ரசனையில் மிகையும் உண்டு.சாதாரண விஷயத்தை இப்படி பில்ட் அப் கொடுப்பதாக.இப்போத் கதை,சினிமா,குறும்படம் எல்லாவற்றிலும் drill down & detailing லெஃப்ட் அண்ட் ரைட் வந்துவிட்டது.96 படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் கதையை ஒட்டிய  ஒவ்வொரு hidden element கண்டுப்பிடித்திருக்கிறேன்.

பாரதியார் கதையில் ரயில்வே ஸ்டேஷன் தவிர நிறைய விஷயங்கள் உண்டு.அது உரையாடலில் இல்லை.

நன்றி நாகராஜன்