Friday 25 December 2020

அசோமித்திரன்

இந்திய பஸ்களே பஞ்சத்தில் அடிபட்டுச் சாகப் போகிறவர்களின் இறுதிப் பயணத்துக்காகத் தயார் செய்யப்பட்டவை போல் உள்ளன

-அசோமித்திரன்

Tuesday 22 December 2020

ஐன்ஸ்டீன்

எதிர்காலத்தை பற்றி நினைக்கத் தேவையில்லை.அது தானாகவே சீக்கிரம் வந்துவிடும்

-ஐன்ஸ்டீன்

Monday 21 December 2020

பாவக்கதைகள்*மணி




இப்படியெல்லாம் இந்தக்காலத்தில நடக்குமா?ஆணவக்கொலையெல்லாம் சுத்த ஹம்பக்னு சொல்றவங்க எல்லாரும் நியூஸ் பேப்பரில் கிரிக்கெட் செய்தியும் தலைப்புச் செய்தியும் பார்க்கிற கூட்டமா தான் இருக்கும். ஒரு புலனாய்வு வார இதழில் மாதத்தில் குறைந்தது இரு இதழ்களிலாவது ஆணவ கொலைகள் அட்டைப்படத்துடன் வருவதை பார்த்திருக்கிறேன். நிச்சயம் இதுபோல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனை ரத்தின சுருக்கமாக மனம் கனக்கும் வகையில்,உள்ளது உள்ளபடியே படைத்த நான்கு இயக்குநருக்கும் சபாஷ். ஆந்த்ராலஜி படம்னாலே ஓவியத்திலிருந்தோ, கார்ட்டூனிலிருந்தோ படம் விரிய வேண்டும் என்பது சாங்கியம் போல இருக்கு.


#தங்கம்

1981ல் கோவையை பின்னணியாக கொண்ட கதையில் திருநங்கையாக காளிதாஸ் ஜெயராம்.அவரின் தங்கையை விரும்பும் நாயகனாக சாந்தனு.இந்து-முஸ்லிம் ஈகோ வர அண்ணனான காளிதாஸே இருவரையும் இணைத்து ஊருக்கு அனுப்புகிறார்.முடிவில் என்ன்ச் என்பது கதை.கிட்டதட்ட  பம்பாய் போல செல்லும் கதையில் இறுதியில் நெகிழ வைக்கின்றனர். காளிதாஸின் நடிப்பு அபாரம். கோவை நேட்டிவிட்டினாலே ஒன்ற,என்றனு சினிமாத்தன பேச்சு பேசாமல் "ஈடு,ஆகாவலி, திருவாத்தான்,ஒத்தனம் குடு,சித்தங்காட்டி,கதவநீக்கு"என பேச்சு வழக்கை பேச்சுவாக்கில் சொன்னது சிறப்பு.அம்மாவின் அழுகை சோககீதம்.


#லவ் பண்ணா உட்றணும்

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் யதார்த்தமாய் ஆரம்பித்து வேறு பாணியில் செல்கிறது.தேனி ஈஸ்வரனின் கிராமம் அழகியல்.

காதல் மிக புனிதமானது
நம் பிள்ளைகளுக்கு வராத வரை னு ஒருகாலத்தில் ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்காரு.
கலப்பு திருமணம் செய்து வைக்கும் ஊர் பெரியவருக்கு இரட்டையர் அஞ்சலி.இருவரும் பேசிக்கொள்வதில்லை.மூத்த மகள் ஒருவரை காதலித்தார் என்பதால் கொலை செய்துவிடுகிறார்.இது தெரியவரும் இளையமகள் என்ன செய்தார் என்பது கதை.

அல்லக்கை நரிக்குட்டியாக வருபவர் சிக்ஸர் அடித்திருக்கிறார். லெஸ்பியன்னா ESPN சேனல்தானேனு சொல்லும் இடமும் தாடி வைத்தவரை KGF என அழைப்பது லகலக.அக்கா கொலையை கண்டுபிடிக்கும் போது புத்திசாலித்தனமா எதாச்சும் நடக்கும்னு நினைச்சா புஸ்ஸூனு போகிடுச்சு பாஸ்.நான்கில் கடைசி இடம்தான் இதற்கு.



#வான்மகள்

இருமகள்,ஒரு மகனுக்கு அப்பாவாகவும்,சிம்ரனுக்கு கணவனாகவும் வாழ்ந்து வருகிறார் கெளதம் வாசுதேவ்மேனன். பாசத்தில் திளைத்து மூவரையும் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்.
மூத்தவள் வயதுக்கு வந்தவுடன் சிம்ரன் பேசும் வசனம் கூர்மையானது "இந்த உடம்பு உன்னுது..உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.அதனால் உன் உடம்பை  மதிக்க கத்துக்க, பாதுகாக்க கத்துக்க என பேசும் இடம் நச்.

எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழும் போது குடும்பமே உடைந்து போகிறது.வழக்கமான ஆணவக்கொலை போல் அல்லாமல் பெண்ணின் பார்வையில் சொல்லியிருப்பது நுட்பம்.ஆனால் ஒரு பெண் இவ்வளவு தூரம் செய்வார்களா என்பது ஆச்சர்யமளிக்கிறது.


#ஓர் இரவு

அண்ணாவின் ஓர் இரவு போல் அல்லாமல் நெஞ்சை கனக்க வைக்கிறது வெற்றி மாறனின் ஓர் இரவு.பிரகாஷ்ராஜ்க்கு மூன்று மகள்கள் ஒரு மகன்.அக்குடும்பத்தில் ஒருவரான சாய்பல்லவி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் செட்டிலாகிறார்.கர்ப்பமாய் இருப்பதால் ஊருக்கு அழைத்து வளைகாப்பு செய்ய நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.அந்த ஓர் இரவில் என்ன நடந்தது என்பது நெஞ்சை கனக்க வைக்கும் கதையாய் சொல்லி இருக்கிறார்.

மகளுக்காக பாசத்தில் மருகுவதும், மருமகனின் கையால் தண்ணீர் கூட குடிக்காமல் கெத்து காட்டு ஊர் மனுஷனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.நேர்த்தியான நடிப்பிலும்,தன்னால் படிப்பு பாதிக்கப்பட்ட சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்பதிலும் ஸ்கோர் செய்கிறார் சாய்பல்லவி.


4கதைகளும் சொல்லும் பாடம் இன்னும் ஆணவ கொலைகள் இருக்கிறதென மக்களிடம் ஆவண படுத்தியிருக்கிறது.இதற்கு தீர்வு இல்லையானு இயக்குநர்களை கேட்காமல் இப்படிப்பட்ட கேடுகெட்ட காரியங்களை செய்யாமல் இருப்பதும்,இப்படி செய்வோரை சட்டத்தில் பிடித்து தருவதும், இது பற்றி இளைஞர்கள் விவாதிப்பதும் தான் தீர்வாக அமையும்.ஜாதியை ஒழிக்க முடியாது.. புறக்கணிக்க கற்றிக்கொண்டாலே ஜாதி ஒழியும்


நான்கு படங்களுமே கெளரவ கொலைகள் குறித்த படம் தான். இதில டூயட் இல்ல, காமெடி இல்லனு சொல்லாம இது குறித்து படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற நால்வருக்கும் பூங்கொத்துக்கள்


-மணிகண்டபிரபு



அ.கி.பரந்தாமனார்

வலிமிகுதல் என்கின்ற இப்பண்பு உலகில் வேறெந்த மொழிகட்கும் இல்லை. இது தமிழுக்கும் மலையாளத்திற்கும் மட்டுமே உரிய மொழிப்பண்பு

-அ.கி.பரந்தாமனார்

Thursday 17 December 2020

info

தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே.
பழிக்காதே இல்லை.தாய்க்கு ஒரு பிழை செய்துவிட்டால் அவள் மன்னித்துவிடுவாள். தண்ணீர்க்கு ஒரு பிழை செய்து நஞ்சு போன்றவற்றை கலந்தால் மன்னிக்க மாட்டாள். எல்லோரையும் கொன்றுவிடுவாள்.

#info

படித்தது

நாய்களுக்கான ஒரு அறிவு மனிதனுக்கில்லை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
"நாய்கள் பார்த்த மாத்திரத்திலேயே தங்களிடம் அன்புள்ளவர்களையும், அன்பில்லாதவர்களையும் தெரிந்து கொண்டு விடுகின்றன

-க.நா.சு


விலா எலும்பு கோணலாக இருந்தால்தான் பயன்படும். அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.அதை நேராக்க முயல கூடாது. முயன்றால் உடைந்துவிடும். பெண்களுடைய குணங்களும் நமக்கு கோணலாகத் தெரியலாம்.அவற்றை மாற்ற முயலகூடாது.ஏனெனில் அவை தேவை கருதியே அவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது

-அப்துல்ரகுமான்



கண்டெனன்,கற்பினுக்கு அணியை,கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்.

#கண்டேன்.கற்பினுக்கு அணியாக இருக்கிறாள்.என் கண்களால் கண்டேன்.கண்ட இடம் இலங்கை.

-அனுமன்

மொரீஸ் ட்யூவர்ஜி

ஒவ்வொரு தொகுதியிலும் ஏன் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் வலுவானவர்களாக இருக்க வேண்டும்?மூன்றாவது வேட்பாளர் ஒப்பீட்டளவில் பலவீனமானவர் என்பதால் பலவீனமானவர்க்கு ஓட்டளித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்புவதில்லை.ஒரு தொகுதியில் இரு வலுவான வேட்பாளரே இருக்க முடியும்

-மொரீஸ் ட்யூவர்ஜி

Tuesday 1 December 2020

அண்ணா

எல்லா மொழிகளிலும் தமிழ்நாட் என எழுதப்படும் தீர்மானம் கொண்டுவந்தார் அண்ணா. ம.பொ.சி இரு திருத்தம் வேண்டினார்.Tamil என்பதை thamizh என்றும் nad nadu என மாற்றக்கோரினார்.

பிறமொழிக்காரர்கள் tamil என உச்சரிப்பது சரியாய் இருக்கும் ஆனால் நாட் என்பதை நாடு என மாற்றி அண்ணா உத்தரவிட்டார்