Wednesday 30 September 2020

அப்துற் றஹீம்

பணத்தின் முக்கிய ஆற்றல் என்னவென்றால் அது நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதுடன்..
99 சதவீத தேவைகளை உற்பத்தியும் செய்துவிடுகிறது

-அப்துற் றஹீம்

info

நோபல் பரிசுக்கு காந்தியின் பெயர் ஐந்து முறை பரிசீலிக்கப்பட்டது.முதல் நான்கு முறை ஏகமனதாக தேர்வு செய்யப்படவில்லை. 1947ம் ஆண்டு இறுதியில் அடுத்த ஆண்டு நோபல் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

1948 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டதால் நோபல் பரிசு வழங்கப்படவில்லை

#info

Tuesday 29 September 2020

அண்ணா

அண்ணா நண்பர்களோடு காரில் செல்லும்போது..ஒரு மாட்டு வண்டியை கார் முந்தியதால் மாட்டு வண்டிக்காரர் காரிலிருப்போரை திட்டினார்

அதற்கு அண்ணா பார்த்தீர்களா.. காருக்கு இணையாக அவரால் வரமுடியவில்லை என்றவுடன் திட்டுகிறார்.நம் வளர்ச்சி பொறுக்காமல் திட்டுவார்கள்.அதை கவனிக்காது நம் வழியில் முன்னேற வேண்டும்.
வெய்யிலின் உக்கிரம் ஏற ஏற மழைக்கான அதிகாரம் கூடிக்கொண்டே போகும்

-சோ.தர்மன்

Monday 28 September 2020

காந்தி

இயன்றவரை எனும் சொல்லை வெறுக்கிறேன்.
'இயன்றவரையில்' இதைச் செய்வேன் என்று சொல்கிறவன் தன் ஆணவத்தை வெளிப்படுத்துகிறான் அல்லது தன் ஆற்றலின்மையை காட்டுகின்றான்.

-காந்தி

Sunday 27 September 2020

அண்ணா

அறிஞர் அண்ணாவிற்கு வரவேற்பளித்த நகர் மன்றத்தலைவர் ஒரு மிளகாய் வியாபாரி..சிறப்பாக பேசினார்.

பதிலுக்கு அண்ணா 
"i Never thought that a chille merchant can speak so sweet

(ஒரு மிளகாய் வியாபாரி இவ்வளவு தித்திப்பாக பேசுவார் என நான் நினைக்கவில்லை)

கற்றதும் பெற்றதும்-94*மணி



பகத்சிங் பிறந்ததினம்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது 23 மட்டுமே ஒரு தலைசிறந்த தலைவனுக்குரிய அத்தனை அடையாளங்களம் ஆளுமைகளுடன் இருந்திருக்கிறார். தூக்கிலிடப்படுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு 1930 ஜூலை மாதம் 24 ஆம் தேதி லாகூர் சிறைச்சாலையிலிருந்து தன் பள்ளிக் கால நண்பன் ஜெயதேவ் குப்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

 அந்த கடிதத்தில் மிலிட்டரியிசம்,why men fight,Civil war in France,Land revolution in Russiya உள்ளிட்ட
 பத்து புத்தகங்களை பற்றி பட்டியலிட்டு எழுதி.. இந்த பத்து புத்தகத்தையும் துவாரகதாஸ் நூலகத்திலிருந்து எப்படியாவது எடுத்து..வருகிற ஞாயிற்றுக்கிழமை தனது தம்பி என்னை பார்க்க வருகிறான் அவரிடம் கொடுத்து விடுமாறு வேண்டுகிறார்.

அதுமட்டுமின்றி பஞ்சாப் பொது நூலகத்தில்  வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற புத்தகத்தையும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் நாற்பது ஐம்பது வயது நிரம்பியவர்கள் மட்டுமே படித்து உள்வாங்கிக் கொள்ள முடியும்.ஆனாலும் இறப்பதற்கு முன் இதனை படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அதோடு நிற்காமல் பாஸ்டல் சிறைச்சாலை நூலகத்தில் ஒரு புத்தகப்பட்டியல் அனுப்பி புத்தகம் படிக்க வேண்டியுள்ளார்.இவை அனைத்தும் அரிய புத்தகங்கள். லாகூரில் துவாரகதாஸ் நூலகம் உள்ளது.இந்நூலகத்தை சுற்றித்தான் பகத்சிங்,சுகதேவ் கல்லூரிகளில் படித்து வந்துள்ளார்கள். அந்நூலகத்தின் நூலகராய் உள்ள ராஜாராம் சாஸ்திரியை பற்றி பெருமையாக சொல்லியுள்ளார். தனக்கான மிகச்சிறந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்க கொடுத்தவர் என பெருமையாய் கூறியுள்ளார்.

காந்தியவாதியான நூலகர் ராஜாராம் 1930 சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று பகத்சிங்குடன் தங்கியுள்ளார்.தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப் படவில்லை.

தி டிரிபியூன் எனும் இதழில் வெளியான நூல் விமர்சனம் ஒன்றை படித்துவிட்டு அந்நூலை வாங்கி வர வழக்கறிஞர் பிராணநாத் மெஹாதா விடம் கேட்டார் பகத்சிங்.அந்நூல் மாமேதை லெனின் வாழ்க்கை வரலாற்றுநூல்.1931 மார்ச்23 வழங்கினார்.அன்று மாலைதான் தூக்கிலிடப்பட்டார்

கடைசியில் தூக்கில் போடுவதற்கு முன்னால் மார்ச் 23ஆம் தேதி மாலையில்  வெளியே வா என்று அழைத்த போது உலகின் மிகப் பெரியதொரு புரட்சியாளனுடன் கை குலுக்கி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த பகத்சிங் இன்னும் கொஞ்சம் வாசித்து விட்டு வந்து விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவாறு பக்கங்களை வாசித்து முடித்துவிட்டு தூக்குமேடை ஏற தயாரானார். 

ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.அப்போது ஒரு சுதந்திர கீதத்தை பாடினர்

அந்த நாளும் கண்டிப்பாக வரும்,
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்,
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... 

என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது."தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன.தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

பகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் இறக்க விருப்பம்?".

சுகதேவ் முதலில் சொல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.

இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.சிறையில் அடக்கம் செய்தால் பிரச்சனை வரும்.வெளியில் அலைஅலையாய் கூட்டம். எனவே சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது.

 மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டுசெல்லப்பட்டது.
இறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது. சிதையூட்டிய உடலை காண மக்கள் கூட்டம் திரண்டு வந்து பார்த்தனர். மறுநாள் புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.

*புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன்றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல

*புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையைக் காணிக்கையாக்குகிறோம்

*என்னை தூக்கலிடும்போது என் கண்களை கட்ட வேண்டாம், சாகும்போது கூட இந்த மண்ணை பார்த்து கொண்டே தான் சாக வேண்டும்

*நேற்றைய வரலாறு தெரியாது போனால்,இன்று நடப்பது புரியாமல் போகும்.இன்று நடப்பது தெரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை

ஏராளமான புத்தகங்களை வாசித்து அறிவை விரிவு செய்து கொண்ட இளம் தலைவர் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன்

-மணிகண்டபிரபு

Saturday 26 September 2020

ரிச்சர்ட் லெட்டிஸ்

திங்கள் ஒரு மோசமான நாள்; வேலைக்கு மீண்டும் வருவதால்!

செவ்வாய் இன்னும் சிறந்த நாள்; திங்கள் கடந்து சென்றதால்!

புதன் நம்பிக்கை அளிக்கும் நாள்; வாரத்தில் பாதி கடந்ததால்!

வியாழன் ஒரு தூங்குமூஞ்சி நாள்; பெரிதாக எதுவும் நடக்காததால்!

வெள்ளியோ ஆரவாரமான நாள்; வாரஇறுதி வந்துவிட்டதால்!

சனி, ஞாயிறு இரண்டு நாள் எல்லோருக்குமே இன்பத் திருநாள்!

-ரிச்சர்ட் லெட்டிஸ்

Friday 25 September 2020

நம்பிக்கை

ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு செயல் மேன்மையானது.

ஆயிரம் செயல்களைக் காட்டிலும் ஒரு சாதனை மேம்பட்டது.

ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஒரு உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கேற்றுவது

கண்ணதாசன்

வருவன யாவையும் வழிநடை போட்டபின் மறைவது தெரிகின்றது.
இந்த வரவுக்கும் செலவுக்கும் வழிவிட்ட இறைவனின் வழிமட்டும் தொடர்கின்றது

-கண்ணதாசன்

Monday 21 September 2020

அசோகமித்திரன் பிறந்ததினம்

அசோகமித்திரன் பிறந்ததினம்

*அபிப்ராயங்கள் என்பவையைச் சொல்லப்படும் அந்த நிமிடத்துக்கு மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
-அசோகமித்ரன்

*கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை.ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை,வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது-அசோகமித்ரன்

*எந்த புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை.,
அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது
-அசோகமித்ரன்

*அர்த்தம், நாம் தேடிச்செல்லச் செல்ல அது நழுவிக்கொண்டே இருக்கிறது #அசோகமித்திரன்

*சாவதற்கு கூட நல்ல மகத்தான காரணங்கள் கிடைப்பதில்லை.
-அசோகமித்திரன்

*உண்மைதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைதான் மிகப்பெரிய உண்மையாகவும் இருக்கிறது
-அசோகமித்திரன்

*“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தலை கட்டுக்கடங்காத யோசனைகளால் வெடித்துக் கொண்டிருக்கிறது. எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானம். எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானத் தொல்லை.” 
 - அசோகமித்திரன்.

*ஒருவருடைய பெருமைகளையும் சாதனைகளையும் விதந்துரைக்க அவரின் மரணம் வரை காத்திருக்க வேணுமா -அசோகமித்திரன்

*மனிதன் கீழே விழுவதுதான் இயற்கை, ஆனால் அதற்குத்தான் அவன் அளவுக்கு மீறி அலட்டிக் கொள்கிறான்.  -அசோகமித்திரன்

*"அழகென்றால் அப்படியொன்றும் அழகில்லை! 
ஆனால் உற்று நோக்கினீர்களானால் காதல்வயப்பட வாய்ப்புள்ளது!!" 
- அசோகமித்திரன்

*மானுட வெறுப்பை காரணகாரிய ரீதியாக விளக்கவே முடியாது.
-அசோகமித்திரன்

*மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவு பேருடைய பொருளாதார நிலைமையும் பொதுவாக ஒன்றுதான்...எல்லோருக்கும் எப்போதுமே பற்றாக்குறை...
     -அசோகமித்திரன்

*சமகால மனிதர்கள் பற்றி அபிப்ராயம் கூறிவிட்டு ஒருவருடைய வெறுப்பையாவது பெற்றுக்கொள்ளாது தப்பிப்பது கடினம். கடைந்தெடுத்த அபிப்பிராயமே விமர்சனம்
-அசோகமித்திரன்

திருவள்ளுவர்

நாநலம் என்றும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

*பேச வேண்டாத நேரத்திலே, பேச வேண்டாத இடத்திலே பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பவன் தான் நல்ல பேச்சாளன்

-திருவள்ளுவர்



#பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற
சிலசொல்லல் தோற்றா தவர்

பேச வேண்டியவற்றை சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்கள்தான் பேச்சை நீண்ட நேரம் வீணாக நீட்டிப் பேசுவர்

-திருவள்ளுவர்

Thursday 17 September 2020

ஞானக்கூத்தன்

பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்
தெரிந்திடும் நீலவானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது

-ஞானக்கூத்தன்

Tuesday 15 September 2020

விஐபி நபர்களைப் பாதுகாக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ்...! - எப்படிச் செயல்படும்? #MyVikatan-மணிகண்டபிரபு



கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
என்கிறார் வள்ளுவர்.

 எமனே படை திரட்டி வந்தாலும், திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடையதே படை.

ஒவ்வொரு முறை தலைவர்களின் பாதுகாப்புக்கு வரும் படைகளை ஆச்சர்யமாய் பார்ப்போம்.

சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்தபோது, அது `ஒய் படையா’, `ஒய் ப்ளஸ்ஸா’ என்ற சந்தேகம் வந்தது. அதை அறிந்துகொள்ள நேர்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தன.

ஒவ்வொருவருக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுபோல உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரத்யேகப் பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.
இவர்கள் தவிர விஜபிக்கள், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது.

READ MORE

பிரெஞ்சு பொன்மொழி

மொழிபெயர்ப்பு ஒரு மனைவியைப் போல; அழகாக இருந்தால் விசுவாசமாக இருக்க மாட்டாள், விசுவாசமாக இருந்தால் அழகாய் இருக்க மாட்டாள்” 

-

வாழப்பாடி ராமமூர்த்தி

சிதம்பரத்தில் படிக்கும்போது திராவிடர் கழகத்தில் இருந்தவர் ராமமூர்த்தி.திமுகவை பெரியார் ஆதரித்ததால் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

ராமமூர்த்தி என மூன்றுபேர் இருந்ததால்
கண்ணதாசனிடம் போனில் நான்தான் வாழப்பாடியிலிருந்து ராமமூர்த்தி பேசுகிறேன் என்றவுடன் அதுவே நிலைத்துவிட்டது.
-

Thursday 10 September 2020

பாரதிதாசன்

அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..

#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்

Monday 7 September 2020

Awe (ரகசியம்)*மணி


#

ஓபனிங் சாங் இல்லை.சினிமாத்தனம் இல்லை.
ஆனால் படம் பார்த்த அனுபவம் முழுமையாய் இருந்தது. ஐந்து அடுக்கடுக்கான கதைகள் பத்து நிமிடத்துக்கு வருகிறது.முதல் 50 நிமிடத்துக்கு அப்புறம் படத்தை லிங்க் செய்த விதம் படு சுவாரஸ்யம்.
அந்த ஐந்து கதைகளுமே செம க்யூட் கிட்டத்தட்ட சில்லுக்கருப்பட்டி மாதிரி. ஆனால் வேற வேற ஜார்னர்ல.


#கதை

*பிறந்தநாள் அன்று காஜல் அகர்வால் ஹோட்டலில் தனிமையில் கொண்டாடி தற்கொலை செய்துகொள்ள தயாராகிறார்.


*ஆர்த்தடாக்ஸ் தம்பதிகள் மகளின் வருங்கால கணவரை அறிமுகப்படுத்த காத்திருக்கும் தருணத்தில் மாப்பிள்ளை ஒரு செம ட்விஸ்ட்

*சமையலே தெரியாதவன் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர அவனுக்கு உதவி செய்கிறது ஒரு வாய் பேசக்கூடிய மீன்.ஆனால் அதற்கு உதவியாய் மீனின் ஆசையை நிறைவேத்தனும்.

*கடைக்கு மேதாவி மேஜிக் நிபுணர் தனக்கு போட்டியாய் இருக்கும் இன்னொரு மேஜிக் நிபுனருடன் தொழில் போட்டி நடக்கிறது.அதில பாத்ரூமில் மாட்டி எப்படி வெளிய வர்றார்

*வெயிட்டராக இருக்கும் ரெஜினா தனது காதலனுக்கு உதவி செய்ய
ரெஸ்டாரென்ட் லைட்டை 40செகன்ட் ஆஃப் செய்வதற்குள் காதலன் உள்ளே நுழைந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை அடிக்க உதவி செய்யனும்.


*ஹோட்டலில் கதவு திறந்துவிடும் வாட்ச்மேன் இளைஞன் அறிவியல் ஆர்வம் கொண்டவன்.டைம் மெஷின் கண்டுபிடிக்க முயலும் போது 20 வருசத்துக்கு அப்பாலுள்ள பெண்மணி இப்போது இவன் முன் வந்து உதவுகிறாள்.

இந்த ஐந்து கதையும் 50 நிமிடத்துக்குப் பிறகு ஒரு புள்ளியில் லாஜிக்குடன் சந்திக்கிறது தான் கதை


#டின்ஜூ

*படத்தோட பெரிய பலம் சுவாரஸ்யமான சின்னக் கதைகள் ஒரு புள்ளியில் இணைய வைத்த திரைக்கதை

*கதையில் அடிக்கடி கரன்ட் கட் ஆவது நம்மையும் ஹோட்டலில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

*சினிமாத்தனம் இல்லை, பாட்டு இல்லை.புதுமையான கதை. அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கிறது.

*ஒவ்வொரு ஓவியம் அதிலிருந்து கதை வருவது சுவாரஸ்யம்.

*எல்லா எதிர்ப்பார்ப்பும் ஏற்றி விட்டு கடைசியில் அதுநான் தான் என்பது விடாது கருப்பு இந்திரா செளந்தர்ராஜன் டெக்கினிக்

*அத்தனை ரணகளத்திலும் கண்டக்டர் பஸ்ஸில ட்ரிப் சீட் எழுதற மாதிரி காஜல் அகர்வால் எழுதுவதை பார்த்தா காண்டாகுது..பின்னால் அதற்கும் லிங்க் வைத்திருப்பது நறுக்.

*மீனின் குரலில் நானியின் குரல் கனகச்சிதம்.

*ரெஜினா வருவது நல்ல த்ரில் கொடுக்கிறது.

*கடைசியா எல்லா கேரக்டரும் காஜலின் பிம்பம் என்பதை சொல்வது கொஞ்சம் உறுத்துகிறது.

*அதிக லாஜிக் மிஸ்டேக் இல்லாதது ஒரு ஆறுதல்


நல்ல படம்,நல்ல சுவாரஸ்யம்
நம்பிப் பார்க்கலாம்.


-மணிகண்டபிரபு

Sunday 6 September 2020

Maniyarayile Ashokan மலையாளம்*மணி




அரெஞ்ச் மேரேஜ் செய்தவர்கள் ஒரு கணம் ஆமால்ல அப்டினு நினைக்கும் படம்.ஆயிரம் ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து,27 வயசில தேட ஆரம்பிச்சா 30 வயசுல ஒரு வழியா பொன்னு கிடைக்கும்.அதிலும் நம்மை ரிஜக்ட் செய்த பெண்களை ஒரு குயர் நோட்டு போட்டுத்தான் எழுதனும்.
சரி லவ் மேரேஜ் செய்யலாம்னா கூச்சம் வேற.சொல்ல மாட்டோம் பயம்.அறிஞர் அண்ணாவைக் கூட அத்தனை பேரு அண்ணானு கூப்பிட்டிருக்க மாட்டாங்க. அண்ணாந்து பார்த்தாலே அண்ணானு கூப்பிடும் பெண்கள் அதிகம்.அப்பிடியான ஒரு கதை மணியாறிலே அசோகன்.

ரொம்பவும் நல்லா இருக்காது. மினிமம் கேரன்டிதான் படம். சுமாரான பையனுக்கு பெண் கிடைக்கும் அவலத்தை சொல்லியிருக்காங்க.துல்கர் சல்மான் தயாரிப்பு என்பதால் ஒரு எதிர்பார்ப்பு.பட் கொஞ்சம் குறைவுதான்.ஆனால் இதை அனுபவித்தர்களுக்கு கொஞ்சம் நிறைவு.

#கதை

ஹீரோ ஜேக்கப் கிரிகோரி ஒரு அரசாங்க ஊழியர்.உயரமில்லை. குட்டையானவர்.அழகில்லை. எங்கு தேடியும் பொன்னு கிடைக்கல. ஜாதக தோஷம்.ஒரு இடம் செட்டாகுது ஆனால் அந்த பெண் இவனை கட்டிக்கிட்டா செத்துருவேன் மிரட்ட அதை இவர் கேட்க விரக்தியின் உச்சத்துக்கே போறார் பேரழகன் பிரேம்குமார் மாதிரி.அப்பதான் இவரையும் காதலிக்கிறாங்க அனுபமா.எல்லா சரியாப் போகும்போது ஜாதகத்தில முதல் மனைவி செத்துப் போயிடுவானு சொல்லுபோது கல்யாணம் நின்னிடுது.

இலவசம் இல்லாத வெள்ளை கலர் ரேசன் கார்டு வச்சிருக்கவங்க மாதிரி உடைஞ்சு போறாரு.இரக்க குணம் அதிகமுள்ள கிரிகோரி வாழைமரத்துக்கு தாலி கட்டி முதல்.மனைவியா எத்துக்கிறார். அதக்கு பிறகு என்னானது, கல்யாணம் ஆச்சா என்பது தான் கதை.


#டின்ஜூ

*படத்தின் பெரிய ப்ளஸ் லொக்கோசன்.ஈரமான, எப்பவும் மழை வரும்போலுள்ளது போல் அவ்வளவு அழகான இடங்கள். ரம்மியமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

*அசரீரி போல் ஒலிக்கும் மெல்லிய இசை மனதை வருடும்.

*சுத்தியுள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆகும்போது நமக்கும் மட்டும் ஏன் இப்பிடினு 90 கிட்ஸின் அனுபவத்தை திரையில் விரிக்கிறார்

*கற்பனையில் உருகும் ஹீரோவுக்கு ஒரு சீனில் வரும் துல்கர்..நிலா வானத்தில் தான் இருக்கு.அதை தண்ணீரில் தேடக்கூடாதுனு சொல்லிபுரிய வைக்கிறார்.

*மேரேஜ் ஆகாதவங்களுக்கு சொல்லும் ஒரே அட்வைஸ் "உனுக்குனு ஒருத்தி பொறந்திருப்பா" னு சொல்வது.அதை கேட்டுட்டு அப்பிடியே ஓடிப்போயிடலாம்னு தோனும்.ஆனா அந்த பேங்க் பொன்னு சொன்னதும் அமைதியா போறாரு.

*கடைசி ட்விஸ்ட் நஸ்ரியாவை கல்யாணம் செய்வது.எப்பிடிணேனு தெரியல.

பூவரசன் படத்துல கவுண்டமணிக்கு செந்தில் சொல்லும் செங்கல் லாஜிக்

செங்கல்..அதை கொட்டுனா பொடி.. அதை ஊதுனா..ஒன்னுமேயில்ல.
அதான்னே வாழ்க்கை ம்பார்.
அதுதான் படம் பார்த்து முடிச்சதும் நினைவுக்கு வந்துச்சு.


அழகியலுக்காக ஒரு முறை பார்க்கலாம்.


-மணிகண்டபிரபு

Saturday 5 September 2020

V movie(telugu)*மணி


V movie(telugu)
*மணி

நானி நடித்து நேற்று வெளியான படம் வி.இரு ஹீரோக்கள் சப்ஜெக்ட். விக்ரம் வேதா போல ஏதோ புதுசா இருக்குனு உட்கார்ந்த தார் ரோட்டை வெட்டி போட்டு ஊர் பூராவும் சுத்தி வீட்டுக்கு போற கதையா இருக்கு படம்.லாக்டெளன் காலத்தில் எல்லாரும் உலகப்படம்,வெப் சீரிஸ் எல்லாம் பார்த்து ஜெட்வேகத்தில் போக வாங்க அப்படியே ஜாலியா மாட்டு வண்டில போலாம்னு சொன்ன எப்பிடி இருக்கும்.


#கதை

எங்க தப்பு நடந்தாலும் தடயம் இருக்குதோ இல்லயோ அங்க போலீஸ் சுதிர் பாபு இருப்பார். ஒரு நாள் அன்னோன் நெம்பர் காலில் கொலைசெய்யப் போறதை சொல்ல 
இவரும் சீரியசா கொலை நடப்பதை தடுக்கப்போனா..அங்க நானி கொலை அந்நியன் ஸ்டைலில் கொலை செய்து,அதே பட் பானியில் ஒரு துண்டு சீட்டை க்ளுவா விட்டுட்டு போவாரு.அதை விட்டுட்டு சுதிர்பாபு நிவேதாதாமஸுடன் சந்தோசமா இருக்கும்போது இன்னொரு கால் இன்னொரு கொலை.

இப்பிடி போகும் போது ஏன் கொன்னாரு நானி னு சொல்லும் படம் தான் கதை.

தமிழ் பட ஹீரோக்களுக்கு சிவானு பேர் வைச்சா படம் ஓடுங்கிற மாதிரி.
 கொஞ்சம் ஹஸ்கி வாய்சில் அசால்டா பேசுனா அவர்தான் கொலைகாரன்னு இன்னும் எத்தனை படம் தான் வருமோ.


#டின்ஜ்

*ஆரம்பத்தில் பேர் பாடியோட சுதீர் பாபு வருவதும், படம் முழுக்க ஏதோ மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன் மாதிரி.. அடிச்சும் ஆடாம அவுட்டும் ஆகாம ஆடுகிறார்

*ப்ளாஷ் பேக்கில் வரும் நானி போர்சன் பொங்கலுக்கு வடகறி மாதிரி இருக்கு

*நேர்த்தியான கதைக்கு ஹீரோயின் வரும் காட்சிகள் ஸ்பீட் பிரேக்

*கொலைக்கான காரணம் அழுத்தம் இல்லாம இருக்கு.எது கிடைச்சாலும் ஷேர் செய்யிற டிஜிட்டல் இந்தியாவுல ஆதாரம் இருக்கிற வீடியோவை அடுத்தவர்க்கு ஷேர் செய்திருக்கலாமே பாஸ்

*ரயில் பயணங்களில் போல ஹீரோயின் கடைசியா புக் எழுதியிருக்காங்க

*வித்தியாசமான காட்சி அமைப்புகளோ,புதுமையான ட்விஸ்ட்டுகளோ இல்ல.படம் போட்ட பத்தாவது நிமிஷத்திலேயே ரசிகன் யோசிக்க ஆரம்பிச்சுடுறான்.
அட போங்க பாஸ்


-மணிகண்டபிரபு

Thursday 3 September 2020

C U SOON(REVIEW)

C U SOON(மலையாளம்)
*மணி

இருநாட்களுக்கு முன்பு பார்த்தாலும் இப்பதான் டைம் கிடைத்தது பகிர.
சினிமா பெரிய திரை ல பாத்திருப்ப,சின்னத்திரைல பாத்திருப்ப மொபைலின் வெண் திரைல பார்த்திருக்கியா என்பது போல் உண்மையில் வித்தியாச அனுபவமாய் இருந்தது.

முதன்முதலில் கேப்டன் பிரபாகரன் படத்தில் டைட்டில் போட கால்மணி நேரம் ஆனது போல..இப்படத்தின் டைட்டிலும் தாமதமாய் வந்தாலும் அவ்வளவு கவித்துவமாய் இருந்தது. படம் முடியும்போது கதைக்கேற்ற 100% டைட்டில் என்பதை மீண்டும் நிரூபித்தது.படம் முழுக்க வீடியோ காலில் பார்த்தது அவ்வளவு ரியாலிட்டியாய் இருந்தது.இதற்கு முன் 2014ல் Unfriended 2018ல் searching இரு படங்கள் திரை வழியே கதை சொன்னவை..அந்த வகையில் இது மூன்றாவது.

#கதை

துபாயில் வங்கியில் வேலை செய்யும் ஜிம்மி ஆன்லைன் சாட்டில் அனுவுடன் அறிமுகமாகிறான். கண்டதும் காதல்போல் இனி சாட் செய்தவுடன் காதல்.உரையாடல் துவங்கிய சில நாட்களில் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்து குடும்பத்துடன் குரூப் காலில் அறிமுகப்படுத்துகிறான்.அவனின் அம்மா இப்பெண்ணை குறித்து விசாரிக்க  உறவினரான சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் பகத் பாசிலிடம் சொல்கின்றனர்.அவரும் மேலோட்டமாய் பார்த்துவிட்டு சொல்ல பதிவுத் திருமணத்திற்கு காத்திருக்கிறான் ஜிம்மி.

ஒரு கட்டத்தில் அனு தொடர்பு எல்லைக்கு வெளியே செல்ல சந்தேகம் வருகிறது.கூடவே போலிசும் வருகிறது. அந்த பெண்ணை விசாரிக்கையில் சிம் கார்ட் இல்லை,பாஸ்போர்ட் இல்லை.அவளைப்பற்றிய எந்த தடயமும் இல்லை. மீண்டும் பகத் பாசில் துப்புறவு மூளையில் தேட C u Soon என நெகிழ்ச் வைக்கும் முடிவை தொடுகிறது.

#டின்ஜ்

*ஆன்லைனில் படம் பார்த்த காலம் போய் ஆன்லைனையே படமாய்  பார்க்க வைத்துவிட்டது

*மூன்று கேரக்டர்களை வைத்து மங்காத்தா,ரம்மி ஆடுவது போல் அடுத்து என்ன எனும் விறுவிறுப்பு

*வீடியோ கால்,ஸ்க்ரீனில் படம் பார்க்கிறோம் எனும் உணர்வின்றி ஒன்ற வைத்தது ஒளிப்பதிவும், இசையும்.

*துபாய் சென்ற ஆண்களின் துயரையே அதிகம் சொன்ன படங்கள் பெண்களின் நிலையை முதலில் சொல்லி இருக்கிறது

*அனு குறித்த உண்மையை அறியும் இடத்தில் காமன் மேனின் உணர்வுகளை படர விட்டிருக்கிறார் பகத் பாசில்

*என்ன நெட்வொர்க்னு தெரியல எதை அடித்தாலும் இத்தனை வேகமா செல்வதைப் பார்த்தால் கொஞ்சம் ஆயாசமாத்தான் இருக்கு

*திரையில் ஒரு கேரக்டர் ஆன்லைனிலும் மற்றது கேமராவில் படம் பிடித்தாலும் அந்த உணர்வே ஏற்படாதவாறு படம் முழுக்க லைவ்விலேயே செல்கிறது.

*அங்கங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை

C u soon.. பார்க்கலாம்

-மணிகண்டபிரபு

காந்தி

சின்ன மறதி தான்
பெரிய மறதிகளை உருவாக்குகிறது

-காந்தி

கவிதை குறித்து சுஜாதா

தெ.சு.கவுதமன்

கீழே விழுமோ
என்பதைவிட
மேலே விழுமோவென்ற
பயம்தான்
உத்திரத்துப் பல்லியை
பார்க்கும் போதெல்லாம்!

-தெ.சு.கவுதமன்

யுகபாரதி

கூண்டுக் கிளிக்கு
பரிதாபப்படுகிறார்கள்
அறுப்பதற்கென்றே
கோழி வளர்ப்பவர்கள்

-யுகபாரதி

Tuesday 1 September 2020

நாகராஜன்

குடத்தில் நீர் நிரம்புவது போல 
மவுனத்தில் கவலைகள் நிரம்புகின்றன

-ஜி.நாகராஜன்

info

Neo-New புதிய எனும் பொருள்படும் சொற்கள் இவை.
New என்பது வரலாற்றுத் தொடர்பில்லாத முற்றிலும் புதியதை குறிப்பது

Neo என்றால் ஒரு பழைய யோசனையை மறுபரிசீலனை செய்வதைப் பயன்படுத்துவது அல்லது ஒரு இடைவேளைக்குப் பின் மாற்றமின்றி மீண்டும் தொடர்வது

#info