Sunday 31 July 2022

சுஜாதா

விளம்பரம்

சோகமாக ஓர் இளைஞன் வீடு திரும்புகிறான். அவன், அம்மாவை நிமிர்ந்து பார்க்க,

அம்மா:என்னடா ஆச்சு? 
இளை:96தாம்மா கெடச்சுது. அம்மா விசித்து விசித்து அழத் தொடங்க,காமிராவின் குறுக்கே ஒரு சாத்விகமான ஆசாமி தெரிந்து, கண்ணாடியைக் கழற்றிவிட்டு, உங்களை நேராகப் பார்த்துப் பேசுகிறார்.

பையன் மார்க் வாங்கலையா? கவலைப்படாதீங்கோ. எங்க மகாத்மா காந்தி பொறியியற் கல்லூரில வீட்டின் பேர்லயும் தங்க நகைகளின் பேர்லயும் ‘ஸீட்’ கொடுக்கிறோம். இப்பவே புக் பண்ணிடுங்கோ...’

-சுஜாதா

இஸ்லாம்

உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால்,தமது கைகளால் தடுக்கட்டும் இயலாவிடில்,நாவால் தடுக்கட்டும்,அதுவும் முடியாவிட்டால்,தமது உள்ளத்தால் தடுக்கட்டும்

-இஸ்லாம்

யுகபாரதி

“கையேந்தி பவனிலிருந்து காஸ்ட்லி உணவகம் வரை
நல்லதைத் தீர்மானிப்பது நாக்குதான் 
வாக்கு மாறினாலும்
நாக்கு மாறுவதில்லை
நாக்கை வைத்துத்தான்
நடக்கின்றன
உணவகமும் அரசியலும்

-யுகபாரதி

திருச்செந்தாழை

பிரிந்திருந்தோம்.
அவள் கேட்டாள் , " இது நிரந்தரமா?".
" தற்காலிகம்தான் "

சேர்ந்திருந்தோம்.
அவன் கேட்டான், " இது நிரந்தரமா?"
" தற்காலிகம்தான் " 

தற்கணத்தின் நிறைவோடும்,
விடுதலையின் மகிழ்வோடும்
நாங்கள் சேர்ந்திருந்த நிமிடங்களில்,
மணற்கடிகாரத்தின் துகள்கள்
அனைத்தும் பொன்னாக
மாறியிருந்தன

-திருச்செந்தாழை

Saturday 30 July 2022

ராஜ்சிவா

Thursday 

ஆங்கிலத்தில் Thursday என்பது, நோர்ஸ் கடவுளான (வட ஐரோப்பிய), தோரின் (Thor) பெயராலேயே வியாழக் கிழமை அழைக்கப்பட்டது. ‘தோர்ஸ் டே’ (Thor’s day) என்று குறிப்பிடப்பட்டுப் பின்னர் அது ‘தேர்ஸ் டே’ (Thursday) ஆனது. 

ஜெர்மன் மொழியிலும் ஏனைய ஐரோப்பிய சில மொழிகளிலும், வியாழக் கிழமை Donnerstag என்று சொல்லப்படுகிறது. இதில் Donner என்றால் ‘இடி’ (மின்னல்). Tag என்றால் ‘நாள்’. அதாவது இடிக்கான நாள். இங்கும், இடியின் (மின்னல்) கடவுள் தோர் என்பதாலேயே அவரின் பெயர்கொண்டு அந்நாள் அழைக்கப்படுகிறது. 



-ராஜ்சிவா

இக்யூ

நேற்றைய தெளிவு என்பது
இன்றைய முட்டாள்தனம்

-இக்யூ

Friday 29 July 2022

info

புதிய கார் டயர்களில் இருக்கும் முள் போன்ற வடிவங்கள் டயர் தயாரிக்கும்பொழுது அதன் அச்சினில் ரப்பர் திரவத்தை அதிக அழுத்தத்தில் உள்செலுத்தும்போது உண்டாகும் சிறுசிறு காற்று குமிழ்கள் அதற்கென இருக்கும் சிறிய வென்டிலேஷன் துளைகள் வழியாக வெளியேறும்போது சிறிதளவு ரப்பரையும் சேர்த்து
வெளிவரும் .

அது சிறுசிறு முள்கள் போன்று தோற்றமளிக்கும் .

#info

இச்சா' - ஷோபாசக்தி

போகிற போக்கில் புயற்காற்று செடியை சும்மா பிடுங்கிவிட்டுப் போவதில்லை. அங்கு செடிக்கும் காற்றுக்கும் ஒரு சமர் நிகழ்ந்திருக்கும். ஒவ்வொரு இலையும் எதிர்த்த பின்புதான் வீழ்ந்திருக்கும். என் மரணமும் அப்படித்தான் நிகழும்.

# 'இச்சா' - ஷோபாசக்தி

ஞாநி

விரும்பிய இலக்கை அடைந்து, உயரத்தில் போய் அடுத்து செய்ய ஏதுமில்லை என்ற வெறுமையுடன் செய்ததையே திரும்பத் திரும்ப செய்தாக வேண்டிய சூழ்நிலையின் கைதியாக தனிமையின் உச்சத்திலிருக்கும் நிலை ஏற்படும்

-ஞாநி

Wednesday 27 July 2022

ஓஷோ

உங்கள் மனதில் அரைகுறை ஆர்வத்துடன் நீங்கள் இருப்பது உங்கள் குழுவிற்கு தெரிந்தால் அவர்கள் ஆர்வம் கால்வாசி தான் இருக்கும். எந்த காலத்திலும் ஒரு குழு தலைவன் செல்லும் பாதையில் பாதி தான் பயணிக்கும். நீங்கள் 100% கொதிக்க வேண்டும் கொதித்துக் கொதித்து ஆவியாக வேண்டும்.
அப்போதுதான் உங்கள் குழுவிற்கு உங்களுடன் பயணிக்க துணிச்சல் வரும்

-ஓஷோ

ஹிட்லர்

Don't forget how people laughed at me 15 years ago when I declared that one day I would govern Germany.They laugh now, just as foolishly, when I declare that I shall remain in power!

15 ஆண்டுகளுக்கு முன் நான் ஜெர்மனியை ஆட்சி செய்வேன் என்று சொன்னபோது மக்கள் எப்படி சிரித்தார்கள்
என்பதை மறந்துவிடாதீர்கள். நான் அதிகாரத்திற்கு வந்ததை பிரகடனப்படுத்தினேன், தற்போதும் சிரித்துகொண்டிருக்கிறார்கள், சிறிது ஏமாற்றத்துடன்.

-ஹிட்லர்

கவிமணி

பெரியோர் செய்த பெரும்பிழை அதனைச்
சிறுபிழை என்று தேய்த்து விடுவர்,
 சிறியர் செய்தது சிறு பிழை எனினும்,
 பெரும்பிழை என்று பேரிகை கொட்டுவர்,
 உள்ளதை உள்ளவாறு உழைப்பவர் அரியர் 

-கவிமணி

பெரியவர்கள் பிழை சாதாரணம்,சிறியவர்கள் பிழை அசாதாரணம்.உள்ளதை உள்ளபடி சொல்பவர்கள் அரிதானவர்கள்

Tuesday 26 July 2022

கந்தர்வன்

பிரச்சனையைத் தூக்கி நடுவில் வை.சுற்றி சுற்றி வா
தொட்டுவிடாதே!

-கந்தர்வன்

அப்துல் ரகுமான்

கொடியவளே!
உன் நினைவுகளில்
நீந்த இறங்கியவனை
மீனாக்கி விட்டாயே!

-அப்துல் ரகுமான்

Monday 25 July 2022

இந்தியாவில் 4 வகையான ரயில் சந்திப்பு அமைப்புகள் உள்ளன.


சென்ட்ரல் (Central)
டெர்மினல் (Terminal)
ஜங்ஷன் (Juncture)
ஸ்டேஷன் (Station)
ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.சென்ட்ரல் (Central)

ஒரு முக்கியமான நகரத்தில் பல இரயில் நிலையங்கள் இருக்கும்.

அவற்றில் ஏதேனும் ஒன்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

அவ்வகை இரயில் நிலையங்களுக்கு "சென்ட்ரல்" என்று பெயரிடுவர்.

சென்னை சென்ட்ரல்
மும்பை சென்ட்ரல்
கான்பூர் சென்ட்ரல்
மங்களூர் சென்ட்ரல்
திருவனந்தபுரம் சென்ட்ரல்
இவையெல்லாம் இந்தியாவில் உள்ள முக்கியமான சென்ட்ரல் ரயில்வே நிலையங்கள்.

2.டெர்மினல்

டெர்மினல் என்றால் இரயில் வருவதும் போவதும் ஒரே வழியில்தான்.
இவ்வகை இரயில் நிலையங்களில் இரயில் பாதை முடிவுபெறும்.
பந்த்ரா
ஹௌரா
பௌவ்நகர்
கொச்சின் துறைமுகம்
சத்ரபதி சிவாஜி
இப்படி பல உள்ளன.

3. ஜங்ஷன்

இங்கு 3 இரயில்பாதைகள் இருக்கும்.
குறைந்தபட்சம் 2 வெளியேறும் பாதைகள்
1 பாதை இரயில் வரும் பாதை

4.ஸ்டேஷன்

பொதுவாக இரயில் நிறுத்துமிடம்.
அதாவது பயணிகள் தமது பொருட்களை ரயிலில் ஏற்றவும், இறக்கி வைக்கும் நோக்கிற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

-படித்தது

ஜே.ஜே.அனிட்டா

ஆயிரம் துயர்களை எதிர்கொள்ள
யானை பலம் போதும்.
அன்பினால் வீழ்த்தப்படும் போது..
சிற்றெறும்பின் திடம் கூட
வாய்ப்பதில்லை.

-ஜே.ஜே.அனிட்டா

Saturday 23 July 2022

wise man

A wise man once said., 

மனிதன் இயல்பாகவே அன்பை விரும்பும் சாதுவான  பிராணி அல்ல. எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோமென எதிர்பார்த்து திருப்பி அடிக்கத் தயாராவே இருக்கக் கூடிய மூர்க்கமான மிருகம்.

ஜெயமோகன்

வேடிக்கைபார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி.

-ஜெயமோகன்

நேசமித்ரன்

வாழ்க்கை என்பது அபத்தங்களின்
சிம்பனி..
அதை அன்புதான் இசைக்கின்றது.

-

Friday 22 July 2022

செளம்யா

புரிதலில் நெருக்கமானவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்பதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும்... 

மன்னிப்பு கேட்கும் முன்பே மன்னித்திருப்பர்

-செளம்யா

Thursday 21 July 2022

தஸ்தாயோவ்ஸ்கி

எவ்வளவோ இழப்புகள் ... இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கிறேன்.

-தஸ்தாயோவ்ஸ்கி

ரஹ்

வாசிப்பை நிறுத்தி விடும் பொழுது சிந்தனை ஊற்றுகள் வறண்டு விடுகின்றன.

அதன் பிறகு மனதில் தெளிவான சிந்தனைகளுக்குப் பதிலாக சேறும் சகதியுமான சிந்தனைகள் தோன்றத் தொடங்கி விடுகின்றன.

- இமாம் ஸெய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ஜெமோ

"என்ன நடந்திருக்கிறது? ஒரு தலைமுறையையே குமாஸ்தாவாக பெற்று,குமாஸ்தாவாக கல்விகற்க வைத்து,குமாஸ்தாவாக ஆக்கி விட்டிருக்கிறார்கள்.மிகச்சிறந்த குமாஸ்தாவாக ஆவதே வெற்றி என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிறந்த குமாஸ்தாவே முன்னுதாரணம்.ஒரு குமாஸ்தாவாக ஆவதற்காக அனைத்து தனித்திறமைகளையும் வீணடித்து, அனைத்து நுண்ணுணர்வுகளையும் மழுங்கடித்துக்கொண்டு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.உழைப்பது, உண்பது,கேளிக்கை-அவ்வளவுதான் ஒரு தினம்.வேலைசெய்வது, சேமிப்பது,பிள்ளை பெற்று ஆளாக்கி ஓய்ந்து இருமி சாவது - இவ்வளவுதான் மொத்த வாழ்க்கையும்"



ஜெமோ

Tuesday 19 July 2022

காந்தி

யுக்தியும் செயலும் இல்லாவிடில் நாம் எங்கே நிற்கிறோமோ, அங்கேயே தங்கிவிடுவோம்

-காந்தி

Saturday 16 July 2022

ராஜா சந்திரசேகர்

காரணங்களோடு காத்திருங்கள்.
காரணங்களுக்காக காத்திருக்காதீர்கள்.
  - ராஜா சந்திரசேகர்

கவுதமன்

தயக்கமேதுமில்லை
பொழியும் மழையில்...
நனைவதற்குத்தான்
அத்தனை தயக்கங்களும்!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கார்கி விமர்சனம்*மணி

கார்கி விமர்சனம்
*மணி

சாய் பல்லவி நடித்துள்ள ஹீரோயின் ஓரியண்டட் படம்.ஹீரோ,பாடல்கள் பில்டப், பாடல், ஹீரோயினிசம் எதுவும் இல்லாமல் நம்பகமான திரைக்கதை வழியாக நல்ல கதாபாத்திரமாக மனதில் பதிகிறாள்.அன்றாடம் படித்துக் கடக்கும் குழந்தைகள் வன்கொடுமை செய்திகளை தொகுத்து திருப்தியான திரைபடமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அறிமுக காட்சியிலே கதை துவங்கி விடுவது சந்தோசமா இருக்கு.

#கதை

பள்ளி ஆசிரியையான சாய் பல்லவிக்கு காதலனுடன் திருமணம் நிச்சயமாகப் போகிறது.மாவு ஆட்டி வைக்கும் அம்மா, தங்கை, அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி
வேலை செய்யும் தந்தை என அக்மார்க் மிடில் க்ளாஸ் குடும்பம்.
9 வயது சிறுமியை வன்கொடுமை செய்யும் 4 வடமாநிலத்தவர் போலிசில் பிடிபடுகின்றனர். அதே அப்பார்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்யும் சாய் பல்லவியின் தந்தையும் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.

நிலை குலைந்து போகும் குடும்பத்தையும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கவும், அப்பாவியான தன் தந்தையை விடுவிக்க சாய்பல்லவி எடுக்கும் முயற்சிகளும், இறுதியில் ஆயிரம் நியாயங்கள இருந்தாலும் தர்மம் ஒன்றுதான் எனும் அடிப்படையில் சட்டத்தின் முன் குற்றவாளியை பிடித்துக் கொடுப்பதும் தான் கதை.

#ப்ளஸ்

*படத்தின் முக்கியப் பலம் சாய்பல்லவி தான்.நம் வீதியில் இருக்கும் பெண்ணைப் போல இயல்பான நடிப்பு.சிறுவயதிலிருந்து குழந்தைகளிடம் அத்து மீறினால் என்ன நடைபெறும் என்பதை நன்கு உணர்ந்த பாத்திரம்

*யூகிக்க முடியாத திரைக்கதை. க்ளைமேக்சில் இவர் செய்திருப்பாரா என சந்தேகம் இருந்தாலும், யாராக இருந்தாலும் தப்பு தப்புதான் என சொல்லியிருப்பது நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
மாலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை குற்றவாளி யாராக இருக்கும் என்பது யோசிக்க வைக்கிறது.

*ஜூனியரான காளி வெங்கட் இந்த வழக்கில் ஆஜராவதும், மெடிக்கல் ஷாப்பில் இருப்பதால் மருந்து டோஸ் கொண்டு பாய்ண்ட் பிடிப்பதும் ஓகே ரகம்

*திருநங்கை கதாபாத்திரமும், முரட்டு அப்பாவான சரவணன்.. சாய் பல்லவியின் தங்கையின் உருவில் தன் மகளை பார்ப்பது போல் உடைந்து அழுவது நெஞ்சம் கனக்க வைக்கிறது

*காட்சியின் வலியின் மனோநிலையை இசையின் மூலம் சொல்லும் கோவிந்த் வசந்தாவிற்கு பாராட்டுக்கள்

*நீங்க விரும்பறத சொல்றது நியூஸ் இல்ல,நடந்ததை சொல்றதுதான் நியூஸ் மற்றும் அவ்வப்போதும் வரும் டைமிங் வசனங்களூம் சிறப்பு. 

*ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காடு இருவரின் ஒளிப்பதிவும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

*கார்த்திக் நேத்தாவின் வரிகள் நாயகியின் உணர்வுகளை அசரீரி போல் ஒலிக்கிறது.

#மைனஸ்

*இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாய் போவது போல் இருந்தது. பின் வேகமெடுக்கிறது

*அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்டில் சி.சி டி வி கேமரா இருக்காதா? அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

*சம்பவ இடத்தில் வரும் நாய்..முதலாளியை பார்த்து குரைக்காது. மற்ற மூவரை பார்த்து குரைக்காதா?அந்த சத்தம் கேட்டு வரமாட்டாங்களா?தேமேனு படுத்திருக்கு. அதுக்கு டோஸ் கொடுத்திட்டாங்களா?

*பேட் டச் பற்றி சொல்லிக் கொடுத்த ஒருவர் சபலத்தில் இப்படி செய்வாரா? அப்படி ஒரு வக்கிர எண்ணம் தோன்றுமா எனவும் சந்தேகிக்க வைக்கிறது

*அப்படியே குற்றவாளி குற்றம் செய்திருந்தாலும் தப்பி செல்வாரா இல்லை குழந்தைக்கு முதலுதவி செய்வாரா என யோசிக்க வைக்கிறது.

அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் காட்சிகளும்,நம்பகமான நடிப்பும், திரைக்கதையும் நிச்சயம் பார்க்க வைக்கும்

தோழமையுடன் மணிகண்டபிரபு

மெளனம்

மொழிகள் ஆயிரம் இருப்பினும் மௌனம் மட்டுமே அழகாய் பேசுகிறது யாரையும்
புண்படுத்தாமல்......

Friday 15 July 2022

கலாப்ரியா

கருக்கிருட்டில் 
புது ஊரில் வழி சொல்லும் உள்ளூர்க் கண்களில்தான் எவ்வளவு பத்திர உணர்வு

-கலாப்ரியா

Thursday 14 July 2022

ஜாக்மா

நான் மற்றவர்களால் விரும்பப்படுபவராக இருக்க விரும்பவில்லை, நான் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருக்க விரும்புகிறேன். 

-ஜாக்மா

Wednesday 13 July 2022

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

பஞ்சம்'' என்ற சொல்லுக்கு ''ஐவர்'' என்றும் ''ஆயம்'' என்ற சொல்லுக்கு ''கூட்டம்'' என்றும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து (பஞ்சம்+ஆயம்) ''பஞ்யசாயம்'' என்ற சொல் உருவானது. பஞ்சயத்து என்ற சொல்லுக்கு ''village jury'' என்ற தமிழ் ஆங்கில
அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ''an assembly of five or more persons'' என்றும் விளக்கம் தருகிறது. இதனை ''ஐவர் கூடிய நியாய சபை'' எனவும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

#info

விஜயானந்த லட்சுமி

காலத்தால் உருமாறும் நம்பிக்கைகள் "சரி தவறு" என்ற இரண்டிலிருந்து பிரிந்துபோனவையே.

-விஜயானந்த லட்சுமி

Tuesday 12 July 2022

ONIDA TV பெயர் உருவான காதை :

ONIDA TV பெயர் உருவான காதை : 

ஓக்லா என்ற கிராமம் டெல்லியின் புறநகர் பகுதியில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி. 40 வருடங்களுக்கு முன்பு (நம்ம அம்பத்தூர் தொழில் பேட்டை போல) அங்கு தொழில்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. யமுனை ஆற்றின் கிழக்கு கரையில் (அது உத்திர பிரதேசம்) New Okla Industrial Development Area என்ற தொழில்பேட்டை உருவானது. அதன் சுருக்கமே NOIDA. அந்த பேட்டையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட டெலிவிசன் கம்பேனி தான் ONIDA. NOIDAவை சற்றே jumble செய்து உருவான பெயர் இது !!

கலாப்ரியா

தொட்டி மீன் போலச் 
சுற்றிக் கொண்டிருக்கிறது மனதுக்குள்
ஒரு உண்மை

-கலாப்ரியா

பா.ரா

செய்யும் பணி எதுவானாலும் அதில் கரைந்து போய் உச்சத்தைத் தொடவேண்டும், மிகச் சிறந்த விளைவுகளைப் பெறவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

-பா.ரா

புழுங்கல் அரிசி

புழுங்கல் அரிசி


நெல்லைப் புழுக்கி அரிசி ஆக்குதலே
புழுங்கல் அரிசி என்ற பெயர் கொண்டது. இதன் ஆங்கிலப் பெயர் PARBOILED RICE.

புழுக்குதல் என்றால் அவிகை, அவித்தது. (ஆங்கிலத்தில் Parboiling).

புழுங்குதல் - என்றால் சிறுக வேகுதல், ஆவியெழவேகுதல்.
நெல்லைப் புழுக்கி யெடுத்து உமி நீக்கப்பட்ட அரிசியே புழுங்கலரிசி. (Paddy parboiled and dried before husking)

Monday 11 July 2022

கலாப்ரியா

போதுமான நேரம் 
விளையாடிய பின் 
பலூன் உடைந்து போனதில் குழந்தைக்குப் 
பரம திருப்தி

-கலாப்ரியா

அம்பேத்கர்

மற்றவர்களின் எல்லா தேவைகளையும்
பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன்
என்ற பெயர் கிடைக்குமானால்
அந்த பெயர் உனக்கு வேண்டாம்.   

 -அம்பேத்கர்

ஜெயமோகன்

நான் செயல் பற்றி யோசிக்கும்போது ஒன்று தோன்றியது. செயலாற்றுவதில் முழுமையாக நம்மைக் குவிக்கமுடியும் என்றால் அது ஒரு யோகம். ஒரு கொண்டாட்டம். மனம் அதை நாடும். எந்த நள்ளிரவிலும் நாம் அதை செய்யமுடியும். மனம் குவியாமல் செய்யும் செயல் நம்மை சிதறடிக்கிறது. நாம் உள்ளே பலதிசைகளில் இழுக்கப்படுகிறோம். அது பெரிய வதை. ஆற்றல் வீணாவதனால் களைப்பூட்டக்கூடியதும்கூட. கூர்ந்து, ஒருமுகப்பட்டு செயலாற்ற அறியாதவர்கள் செயலை அஞ்சி தவிர்க்க முயல்கிறார்கள் என்று தோன்றியது

-ஜெயமோகன்

Sunday 10 July 2022

ஜெயமோகன்

ஒருபக்கம் அன்றாடத்தின் பொருளில்லா சுழற்சியில் இருந்து கற்பனை வழியாக தப்பிக்கும் விழைவு. இன்னொருபக்கம் நலிந்த தனிமையில் தன்னிச்சையாக உருவாகிப் பெருகி யதார்த்தத்தை விடப்பெரிதாக நின்றிருக்கும் கனவு. கனவுகள் மேலும் கனவுகளை உருவாக்குபவை.” 

-ஜெயமோகன்

கலாப்ரியா

எந்த ஊரை மழை நனைத்தாலும் சொந்த ஊர் மழை பற்றிய செய்தியிலேயே அதிகமும் நனைகிறது இதயம்

-கலாப்ரியா

Friday 8 July 2022

சந்துரு

உங்களை நினைத்து 
நீங்களே பெருமைப்பட்டுக்
கொள்வதைத் தவிர வேறென்ன அங்கீகாரத்தை 
உங்களுக்கு நீங்கள் 
தரப் போகிறீர்கள்?! 

#சந்துரு

ரூமி

அதிக வார்த்தை
அர்த்தங்களை 
தொலைத்து விடும்

-ரூமி

தஸ்தயெவ்ஸ்கி

நாகரீகமான ஒரு மனிதன் அதீதமான மகிழ்ச்சியோடு எதைப் பற்றி பேசுவான்?

அவனைப் பற்றி மட்டும் தான்

-தஸ்தயெவ்ஸ்கி

Thursday 7 July 2022

அபி

புரிந்து கொண்டதற்கும்
அமைதியாய் இருப்பதற்கும்
இடையில் 
ஒரு போர் நடந்திருக்கும்...!!

-அபி

Wednesday 6 July 2022

மூட்டைப்பூச்சி

மூட்டைப்பூச்சி

முகட்டுப்பூச்சி என்ற சொல்லே மூட்டைப்பூச்சி எனத்திரிந்தது.
முகட்டுப்பூச்சி > மோட்டுப்பூச்சி > மூட்டைப்பூச்சி.

மரத்தால் ஆன முகட்டு வளை, உத்தரங்களைக் கொண்ட கூரை வீடுகளின் உச்சியில்/ முகட்டு இடுக்குகளில் பெரும்பாலும் இருப்பதால் இப்பெயர்

#info

Tuesday 5 July 2022

காஃப்கா

எதிரே தடை இருக்கிறதென்று ஆராய்ந்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். அங்கே எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்.

-காஃப்கா

Monday 4 July 2022

ச.மாடசாமி

ஒரு அதட்டல் போதும்-கை கட்டவும்,வாய் பொத்தவும் வைக்க.

'நம்ம வேற அவன் வேற' என்ற ஒரு வாக்கியம் போதும்- பகையை விதைத்து விட

சாஸ்திரம் என்ன சொல்லுதுன்னா'என்ற ஒரு தொடக்கம் போதும் அடிமைச் சங்கிலியை முறுக்கிக் கட்ட

மனிதர்களை கையாள்வது சுலபம்.கூச்சலிட்டால் போதும். பழமைவாதம் கொடி கட்டிப் பறப்பது இப்படித்தான்

-ச.மாடசாமி

QR code

QR code

கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களின் வரிசையைக் கொண்ட இயந்திரம் படிக்கக்கூடிய குறியீடு இது.

பொதுவாக URLகள் அல்லது ஸ்மார்ட்போனில் கேமரா மூலம் படிக்கும் பிற தகவல்களைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகிறது.

QR குறியீடு என்பது ஜப்பானிய வாகன நிறுவனமான டென்சோ வேவ் 1994 இல் கண்டுபிடித்த ஒரு வகை மேட்ரிக்ஸ் பார்கோடு ஆகும். பார்கோடு என்பது இயந்திரத்தால் படிக்கக்கூடிய ஆப்டிகல் லேபிள் ஆகும். அது இணைக்கப்பட்டுள்ள உருப்படி பற்றிய தகவலைக் கொண்டிருக்கும்.

QR குறியீடு மூலம் கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு பணம் தர முடியும். உதாரணம் PayTM.

பார் கோடு என்பது சந்தை அல்லது கடைகளில் விற்கும் பொருள்கள் மேல் ஒட்டப்பட்டு இருக்கும்.

-படித்தது

Sunday 3 July 2022

மனித நாகரீகம் எப்போது தொடங்கியது?


 
”ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆபத்து வரும்போது எப்போது உதவி செய்யத் தொடங்கினானோ அன்றுதான் நாகரீகம் தொடங்கியது”  என்று சொன்னார் நோபல் பரிசு பெற்ற மானிடவியலாளர்  மார்கரெட் மீட் ( MARGARET MEAD ).

ஒர் விலங்கு காலில் அடிபட்டவுடன் அதனை அடுத்த விலங்கு காப்பாற்றி குணப்படுத்துவதில்லை. அடிபட்ட விலங்கு அடுத்த விலங்கிற்கு இரையாகி விடுகிறது. ஆனால் எப்போது அடிபட்ட ஒரு மனிதனை இன்னொரு மனிதன் காப்பாற்றி பத்திரமான இடத்துக்கு எடுத்துச் சென்றானோ அன்றுதான் மனிதன் நாகரிகம் தொடங்கியது என்று சொன்னார் மார்கரெட் மீட். 

அவர் மீன் பிடிக்கும் தூண்டில், அல்லது மண்பாண்டம் அல்லது மாவரைக்கும் கல் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதுதான் நாகரிகம் தோன்றியதாகச் சொல்வார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.

செழியன்

இசைக்கருவியின் மௌனம் கனக்கிறது. தன்னை வாசிக்க விரல்கள் இல்லாமல் இருட்டறையில் இத்தனை ராகங்களோடும், இத்தனை ஸ்வரங்களோடும் மௌனமாய் இருப்பது எவ்வளவு பெரிய தியானம்.

-செழியன்

Saturday 2 July 2022

ஞாநி

சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் போது அந்த முடிவுகளின் விளைவுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பிறர் சொல்வதை கேட்டு செயல்படுவது,சிந்திக்கவும் பொறுப்பேற்கவும் மறுக்கும் எளிய வழி.

இதைத்தான் தனிநபர் வழிபாட்டு அரசியல் செய்யும் எல்லாரும் ஊக்குவிக்கிறார்கள்.

-ஞாநி

நகுலன்

'நீங்கள் விரும்புகிற காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டுமானால், 
இடையிடையே நீங்கள் விரும்பாத 
சில காரியங்களையும் 
செய்துதான் தீரவேண்டும்.

-நகுலன்

Friday 1 July 2022

வாலி

கோழியை பாரு
காலையில் விழிக்கும்
குருவியை பாரு
சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு
கூடி பிழைக்கும்

நம்மையும் பாரு
நாடே சிரிக்கும்!

தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்

உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்ததிட வேண்டும்
கைகளை நம்பி

-வாலி

நா.முத்துக்குமார்

புழுக்கமாய் இருந்தாலும்
பரவாயில்லை
பூட்ஸை அணிந்துகொள்.!
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்குப்போ.!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து அடித்தார்கள்
உன் அப்பனை

-நா.முத்துக்குமார்