Tuesday 20 August 2019

மணி

[05/08, 6:52 am] மணிகண்ட பிரபு: No man has a good enough memory to be a successful lier

"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது

-லிங்கன்

[05/08, 7:05 am] மணிகண்ட பிரபு: ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.

*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.

-தொ.பரமசிவன்

[05/08, 8:01 am] மணிகண்ட பிரபு: சிந்தனைகளில் ஈடுபாடு கொள்வது மிகப் பெரிய மனப்புரட்சி

-சுந்தர ராமசாமி

[05/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: ஒரு சூழ்நிலையைச் சரியாக,முழுமையாக நீங்கள் புரிந்து
கொள்வதற்கு முன்பு இருந்த
மனநிலைதான் "தன்னம்பிக்கை"

[06/08, 7:10 am] மணிகண்ட பிரபு: இட்டவி

அன்றாட உணவில் இட்லி என்பது முக்கியமானது.9ம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர் நிகண்டில் இட்லி என்பது இட்டவி என இருக்கிறது.இட்டு அவித்தல் என்பதை இட்டவி என்னும் சொல்லாய் வழங்கியிருக்கலாம்.

-சுப.வீ

[06/08, 7:11 am] மணிகண்ட பிரபு: வாழ்த்துக்கள் வளர்த்துமளவிற்கு தன்னம்பிக்கை கூட வளர்க்காது

*கமல்ஹாசன்

[07/08, 9:12 am] மணிகண்ட பிரபு: நீ என்பது ஒருமை
நான் என்பது தனிமை
நாம் என்பதல்லவோ இனிமை

#கலைஞர்

[08/08, 7:20 am] மணிகண்ட பிரபு: நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்

[08/08, 7:44 pm] மணிகண்ட பிரபு: வேறு ஏதோர் கலக்கத்தில்,
வேறு ஏதோர் மனவருத்தத்தில் இருப்பார்கள்.
ஆனாலும்
நம்மால்  காயப்பட்டுவிடவில்லை என்பதை
உறுதிசெய்து கொள்ளப் பிரயாசை கொள்கிறது-
அன்பாலே  ஆகிப்போன மனம் ஒவ்வொன்றும்.

-யாத்திரி

[08/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: "நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்..."
-
ரூமி

[09/08, 7:33 am] மணிகண்ட பிரபு: முதுமை

முதுமை
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு

இறந்தகாலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்

காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
மாமிச ஓவியம்

-அப்துல்ரகுமான்

[09/08, 7:43 am] மணிகண்ட பிரபு: தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.

முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
...
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..

😷😷😷

[09/08, 7:49 am] மணிகண்ட பிரபு: #புத்தம் புதுக் காலை..

இன்று ஆகஸ்ட் 9..
"வெள்ளையனே வெளியேறு" தினம்..!

1942 ஆம் வருடம், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று, மகாத்மா காந்தி துவக்கிய இந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்..
இதில் இறந்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த தினம், ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது..

"Quit India.."
"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியது மகாத்மா காந்தியடிகள் என்றாலும், அது உருவான நிகழ்வு சுவாரசியமானது..

போராட்டத்திற்கு ஒரு தினம் முன்பாக, 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, மும்பையில் கௌலியா மைதானத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது..
"Do or Die.."
"செய் அல்லது செத்துமடி.."
என்று காந்தியடிகள் தனது உரையைத் துவக்கினார்..

மறுநாள் நாடெங்கும் நடக்கவிருக்கும் போராட்டத்திற்கான, சிறந்த வாசகத்தை முன் வைக்குமாறு மகாத்மா காந்தி, போராட்டக் குழு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ள..

"Retreat..!"
"Withdraw..!"
"Get Out..!"
என்ற பல முழக்கங்களை ராஜாஜி உட்பட பலரும் கூறினர்..

அப்போது,
"யூசுப் மெஹெரெலி" என்ற அந்த 39 வயது காந்தியவாதி எழுந்து நின்று,
"Quit India.."
என்று முழங்க..
காந்தியடிகள்,
"Amen.." என்று ஆமோதித்தாராம்..!

"வெள்ளையனே வெளியேறு'
என்ற தீர்மானம் அன்று நிறைவேற்றப்பட்டது..

அதில் பேசிய
மகாத்மா காந்தி,
"In the democracy which I have envisaged, a democracy established by non-violence, there will be equal freedom for all.
Everybody will be his own master. It is to join a struggle for such democracy that I invite you today.." என்ற தனது
உரையை,
"செய் அல்லது செத்துமடி.." என்ற கோஷத்துடன் துவக்கி வைத்தார்..

"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது..

ஆகஸ்ட் 9ம் தேதி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்..

இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது..
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்..

அதன் பின் ஐந்து ஆண்டுகள் கழிந்து, அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திர நாடாக உருவானது..

"வெள்ளையனே வெளியேறு.."
இயக்கத்தின் 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் இன்று இந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது..
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

#ஆகஸ்ட்புரட்சி..

#மொழிபெயர்ப்பு

-சசித்ரா தாமோதரன்
[09/08, 7:54 am] மணிகண்ட பிரபு: மனது  எல்லைகளை மட்டுமே பார்க்கும். அன்புக்கு மட்டுமே எல்லைகளை கடந்து செல்கிற ரகசிய பாதை தெரியும் .

ரூமி

படித்தது

[10/08, 11:47 am] மணிகண்ட பிரபு: கடல் பார்க்க
போயிருந்த சிறுமி  கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற
அரைவட்ட கிளிஞ்சல் ஒன்றை வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்த பின்

ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,

தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்.

-சிவசங்கரி

[10/08, 12:06 pm] மணிகண்ட பிரபு: காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது

-ஜெயமோகன்

[11/08, 6:59 am] மணிகண்ட பிரபு: வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்
[11/08, 7:02 am] மணிகண்ட பிரபு: நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்
-மதன்
[11/08, 8:29 am] மணிகண்ட பிரபு: முதலில் கம்யூனிஸ்டுகளை பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் வாயைத் திறக்கவில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைப் பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஒரு புரொட்டஸ்டன்ட்
எனவே நான் ஏதும் பேசவில்லை.

பிறகு அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப் பேசுவதற்கு யாருமே இல்லை.

- மார்ட்டின் நீய்மொல்லர்

[12/08, 7:42 am] மணிகண்ட பிரபு: இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

ஓஷோ

[12/08, 7:46 am] மணிகண்ட பிரபு: எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன

- மு. சுயம்புலிங்கம்
(யானைகள் தினம்)

[12/08, 7:51 am] மணிகண்ட பிரபு: சென்னையில் மிகப்பெரிய கட்டுமான நிபுணராக விளங்கிய நம்பெருமாள் செட்டியார் வாழ்ந்த பகுதி "செட்டியார் பேட்டை" என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது "சேத்துப்பட்டு" என மாறியது-p

#Info

[12/08, 8:03 am] மணிகண்ட பிரபு: பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல

-தமிழச்சி

[12/08, 1:59 pm] மணிகண்ட பிரபு:

You know
you've read a good book
when you turn the last page
and feel a little
as if you have lost a friend ...
-Paul Sweeney -

[13/08, 6:54 am] மணிகண்ட பிரபு:

இருட்டு எனும் சுகம் நிம்மதி. தூங்கிவிட்டால் போதும் பதிலற்ற கேள்விகள் அப்படியே இருளில் ஆழ்ந்து போகும்

-ஜெமோ

[13/08, 7:34 pm] மணிகண்ட பிரபு: பேருந்து பயணம்பற்றி
-லா.ச.ரா வின் காட்சி

இந்தக்காலத்தில் பஸ்ஸில் போவதென்றால் என்ன என்று தெரியுமா..

ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம்-சினிமாக் கொட்டகையின் புதுப்படத்தின் முதல்நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை-புகுந்து தோல்வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்கார இடம் கிடைத்தால்.. அடேயப்பா!

முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே,ஓர் ஆளை உன்னிப்பாய் பார்ப்பார்கள்.
ஒவ்வொருவர் மனதிலும் எத்தனையோ குருட்டு யோசனைகள்.

[14/08, 7:56 am] மணிகண்ட பிரபு: மனிதர்கள் எப்போது சிந்திக்கிறார்கள்?

தேர்தலுக்குப் பிறகு

-சோ

[14/08, 7:05 pm] மணிகண்ட பிரபு: பக்குவம் என்பது நாமே இறங்கி, அனுபவித்து,அடிபட்டு கற்றுக்கொள்வதல்ல.. ஒவ்வொரு விசயத்திலும் மற்றவர்கள் என்னென்ன அனுபவிக்கிறார்கள்,அடிபடுகிறார்கள் என வெளியிலிருந்தே கண்டுணர்ந்து அதில் நாம் இறங்காமலே கற்றுக்கொள்வது.

கு. விநாயக மூர்த்தி.
[14/08, 7:48 pm] மணிகண்ட பிரபு: வரலாறு என்பது துரோகத்தின் மிச்சம்
வாழ்க்கை என்பது துயரத்தின் மிச்சம்

-நாஞ்சில் நாடன்

படித்தது

[15/08, 7:57 am] மணிகண்ட பிரபு: செயலில் உயிர்பெறாத சொல்
குறைந்த பட்சம்..
வயதுக்கு வராத கிழவி!
அதிகபட்சம்..
புதைக்க இடம் கிடைக்காத பிணம்!

-வலம்புரி ஜான்

[15/08, 1:05 pm] மணிகண்ட பிரபு: சுதந்திரம் நாம் பெற்றுவிட்டோம், இனி எந்த தவறு செய்தாலும் ஆங்கிலேயர் மீது பழி போட முடியாது
#ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சுதந்திர உரை

[16/08, 7:16 am] மணிகண்ட பிரபு: மூவேந்தர் கொடி தொடங்கி,
மூவர்ணக் கொடி வரையில்
எல்லாக் கொடிகளும் பறப்பது'
எந்த நூலில்?

பூணூலில்!

-இன்குலாப்

[16/08, 7:17 am] மணிகண்ட பிரபு: எது வேரில் கசக்கிறதோ
எது இலையில் துவர்க்கிறதோ
அதுவே கனியில் இனிப்பாகிறது

-ஜெயமோகன்

[16/08, 7:22 am] மணிகண்ட பிரபு: மழைதான் பெய்கிற நேரத்தை அழகாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது

-வண்ணதாசன்

[17/08, 10:37 am] மணிகண்ட பிரபு: ஒரு நிமிடத்திற்கு யாரேனும்
அறுபது நொடியென்றால்
நம்பவே முடிவதில்லை இப்போது.

ஒரு நிமிடத்தை
ஒரு நிமிடமாய்
இருக்கவிட்டதில்லை
எப்போதும் நாம்.

-படித்தது

[19/08, 7:08 am] மணிகண்ட பிரபு: தனிமனித வழிபாடு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது

-படித்தது

[19/08, 7:12 am] மணிகண்ட பிரபு: நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல

-சௌவி

[20/08, 7:06 am] மணிகண்ட பிரபு: நெடுங்குகை இருளுக்குள்
முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்
ஓடும் ரயிலில்
புல்லாங்குழல் வாசிக்கும்
கண் தெரியாத இசைஞன்

-கலாப்ரியா

[20/08, 8:50 pm] மணிகண்ட பிரபு: சில சமயம் இரவில் கண்விழிக்கும்போது,
அதிசயமாய்ப் போதை தெளிந்து,மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும்.அந்தக் கணம் வரை செய்துவந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும்.அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூறத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய் தெரியும்

-ஜெயமோகன்