Wednesday 20 December 2017

மணி

விழித்திருக்கும்போது நினைவுகளை தவிர்ப்பது மிக எளிமையானது. நினைவுகளை வெட்டிவிட ஏதேனும் ஒரு உடலசைவை பழகிக்கொண்டால்போதும்
-ஜெயமோகன்

: சிந்திப்பதற்கு நாம் வைத்திருந்த மூளையை
தங்கள் சேமிப்புக்கு உரியதாக
மாற்றிக் கொள்கின்றனர்
-யுகபாரதி

: வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக இருக்கிறது.
சிலருக்கு சுகராக இருக்கிறது..!

வாழத் தகுதியடைவர்கள் யார்?

"சாவதற்கு அஞ்சாதவர்கள்"
-கண்ணதாசன்

: ஒரு நல்ல கதை வாசகனைக் கேள்வி கேட்கும். அந்தக் கதையில் வாசகனுக்கான ஒரு வெளி இருக்கும். எழுதப்பட்டவரிகளுக்கிடையில் அவன் உய்த்து உணர்ந்து பொருள் கொள்ள ஏதுவான எழுதப்படாத வரிகளும் இருக்கும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அவை மணற்கேணி போல் ஊறி வரும். ஒரு நல்ல கதையை கதாசிரியன் எழுதி முடித்துவிடுவதில்லை. வாசகன்தான் முடித்துக்கொள்ளவேண்டும்.

-பி.ஏ கிருஷ்ணன்

நான் பிறந்தநாளே அடுத்த நாளே
நம் பிறந்தநாள் முடிகிறது
ஆண்டுக்கொரு முறை வருவது
அதன் நினைவு தினமே
-கபிலன் வைரமுத்து

தினமும் குளித்துத் துடைத்து தலைவாரி,ஆடை அணிந்து வெளியே செல்லும்போது ஏதோ ஒரு நாடகத்தில் நடிக்கப்போவது மாதிரியே இருக்கிறது!
-பாதசாரி

கோவை

நம்ம கோயம்புத்தூர் பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் ஒன்று:

*மணி
       
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.

மணி

: செத்துச் செத்துப்
பிழைத்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்
-சுந்தர ராமசாமி

: பெண்ணுக்கு நல்ல
   எதிர்காலம் உள்ள ஓர் ஆண்
   தேவைப்படுகிறான்..!

   ஆணுக்கு நல்ல கடந்த காலம்
   உள்ள ஓர் பெண்
   தேவைப்படுகிறாள்..!”

      - வளர்மதி.

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையெப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று..!”

                      -     கவிஞர். அறிவுமதி.

மார்வாடிக் கடையில்

நிரம்பிக் கிடக்கிறது

தமிழரின் உழைப்பு

– பாரதி ஜிப்ரான்

திருமாவேலன்

உயரும் என் குரல்
............................

நான் உரக்கக் கத்துவேன்
புதைக்கச் சொன்னவர் எவரோ
அவரின் நிம்மதியழியும் வரைக்கும்
நான் கத்துவேன்
இனியும் எவரையும் எதையும்
புதைக்க நினைக்கவும் முடியாமல்
அவர் அமைதி குலைந்து
ஆன்மா அலைந்து
உடல் நடுங்கி இதயம் சிதைந்து
வாய் பிதற்றும் வரையில்
நான் கத்துவேன்.

ஒரு சொல்
ஒரேயொரு சொல்
கதைப்பதற்கும் வழியின்றி
புதைக்கப்பட்ட
அத்தனை மனிதருக்குமாய்
அடிவயிற்றிலிருந்து எழும்
என் கதறல்
செம்மணி வெளி கடந்து
பிரபஞ்சமெங்கும் பரவும்
நட்சத்திரங்களை உலுக்கும்
புயலின் திசையை மாற்றும்
எரிமலையின் குமுறலையும்
பூகம்ப அதிர்வையும்
புதைக்கச் சொன்னவர் வீட்டு
முற்றத்துக்கு வரவழைக்கும்
கடைசி மூச்சை அவர்
விடும் கணத்திலும்
காதுக்குள் இரையும்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட
மனிதரை
எழுப்பும் வல்லமை எனக்கில்லை
ஆனால் கொல்லச் சொன்னவரை
உயிருடன் உலவும் பிணங்களாக்க
என் குரலுக்கு இயலும்.

-போராளியாகவும் படைப்பாளியாகவும் செயல்பட்டு 1998 முள்ளிகுளம் போரில் வீரமரணம் அடைந்த மலைமகள் எழுதியது.

(திருமாவேலன்)

கந்தர்வன்

என் சோகத்தை
உன் சோகம் வந்து
எட்டித் தள்ளவில்லை
கட்டிப் பிடித்துக் கொண்டது.

நூலிடையாள் என்றார்கள்
இடை மட்டுமல்ல
நீயே நூலாகத்தான்
நடந்து வருகிறாய்.

ஒரு வேலை இல்லாததால்
ஆணுக்குரிய அத்தனை தகுதியையும்
ஒரு சேர நான் இழந்துவிட்டேன்.

உலகம் ஒரு நாடக மேடை
ஏழைகள் நமக்குத்தான்
நடிக்கத் தெரியவில்லை.

*கந்தர்வன்*

படித்ததில் பிடித்தது

இப்போது தான்
அழகாய் தெரிகிறது
குப்பைத்தொட்டியில்
என் கவிதைகள்....
நீ கிழித்து போட்டபின்.
_புதன்

நீரூற்றி நகத்தை வளர்ப்பதில்லை-இன்ப நினைவுகளும் பிறர் சொல்லி பிறப்பதில்லை
#சுரதா

தனிமையின் கதையில் மாயமில்லை
தனிமைதான் ஒரு பெரும் மாயம்
-தேவதேவன்

: சாவு-கொடூரமானது
இறந்தவருக்கு அது ஒன்றுமில்லை.
இருப்பவர்களுக்கு அதுதான் சாவு
-கந்தர்வன்

ஒரு புத்தகத்தின் முன்னுரை என்பது
சாம்பாரில் உப்பிருக்கானு சாப்பிடும்முன் விரலில் நக்கிப்பார்ப்பது போல

சதீஷ்

தமிழ் எழுத்தாளன்

எழுத்தாளர்களையே பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதியவர்கள் உலகில் வேறு எங்கும் உண்டா? நகுலன் தான் அதைச் செய்துள்ளார். இதன் காரணமாக அவரது நாவல்கள் பிரசுரம் பெறுவதில் சிரமம் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அவர் தானே தான் வெளியிடவேண்டியிருந்திருக்கிறது.
இருப்பினும் அவர் சளைத்தவரில்லை. தனிமையும் அதன் சோகமும் தான் அவர் எழுத்துக்கு பெரிய காரணிகள் என்று சொல்லவேண்டும். இதற்கு சாட்சியம் அவர் எழுத்துக்களில் நீங்கா இடம் பெறும் 100 அல்லது 200 மிலி, பின் ஒரு கற்பனைப் பாவை, 'சுசீலா'. இரண்டும் அவரது தனிமையின் சோகத்தைத் தணித்தவை. ஜெயதேவருக்கு சாருஷீலே, நகுலனுக்கு சுசீலா.

நகுலன் தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. கவிதை தவிர மற்ற எல்லாவற்றிலும், விமர்சனம், கட்டுரைகள், நாவல்கள் போன்ற எல்லாவற்றிலும், நமக்குக் கிடைப்பது, நகுலன் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள், அவர்களுடனான அவரது அவ்வப்போது மாறும் உறவுகள், கசப்புகள், மறைமுக தாக்குதல்கள், கிண்டல்கள் போன்ற சமாச்சாரங்கள்.
எழுத்துலகமும், எழுத்தாளர்களும் நகுலனும் தான் அவர் நாவல்களின் கதா பாத்திரங்கள். பெயர்கள் கற்பனையேயானாலும், யாரைச் சொல்கிறார் என்று படிப்பவர்க்கு நன்றாகவே தெரியும். தெரியாது போகும் அளவுக்கு அதை மறைப்பதில் நகுலனுக்கு அக்கறை இல்லை. மறைமுகமாகத் தாக்கினாலும், தாக்கப்படுபவருக்கு அது தான்தான் என்று உறைக்காவிட்டால் அதில் என்ன சுவாரஸ்யமிருக்க முடியும்?

நகுலனின் ஒவ்வொரு நாவலைப் படிக்கும் போதும், நகுலனின் உறவுகள் மற்ற எழுத்தாளர்களோடு இருக்கும் அவ்வப்போதைய வெப்ப தட்பங்களைச் சொல்லும். ஒரு நாவலில் கண்ட வெப்ப தட்பம் அடுத்த நாவலில் தொடரும் என்பது நிச்சயமில்லை. உறவுகள் கெட்டிருக்கலாம். அல்லது சமாதானம் அடைந்திருக்கலாம். கற்பனைப் பெயர்கள் மறைப்பதால், யாரும் இதில் தப்புவதில்லை.

இந்த விசித்திர உலகத்தைப் பற்றி நகுலனின் நாவல்கள் விஸ்தாரமாகச் சொல்வதற்கு மேல், நீல பத்மனாபனின் தேரோடும் வீதியும் ('மறைந்து தாக்குதல், வத்தி வைத்தல் காரியங்களைச் செய்யும் கே.எச்.கே') ஆவணப் படுத்தும். இன்னும் சிலரும் (நகுலன் நாவலில் வரும் ஹேமசந்திரன், நீல பத்பனாபன் நாவலில் வரும் மந்திரமூர்த்தி) நாவலாக அல்ல, கவிதை வடிவில் நகுலனுக்கு பிரதி உபசாரம் செய்துள்ளனர். சுவாரஸ்யமான மனிதர் நகுலன். அவரது இப்பரிமாணமும் சுவாரஸ்யமானது தான்.

- வெங்கட் சாமிநாதன்

@மணி

நாம் நிஜம் அல்ல,
போனதெல்லாம் பொய்யாகி போக,
வரப்போவதெல்லாம் மாயையாக மருட்ட,
நீயும் நானும் அதிலோர் கனவாக மிதக்கிறோம்."!
-பாரதி

#காணி நிலம் கூட சொந்தமில்லை
கவலையைத் தவிர சொத்துமில்லை
கனவில் கூட குடிசையில்லை
கண்ணீர் மட்டும் வற்றவில்லை
-நாட்டுப்புறபாட்டு

#தவறுகளுக்கு அவமானப்பட்டால்
அவற்றை குற்றங்களாக்கிவிடுகிறார்கள்
-கன்பூசியஸ்

#திருப்பப்படாத மாத நாட்காட்டியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
"இறந்த காலம்"!

மனுஷ்

*புரிந்துகொள்பவராக இருப்பது தொடர்பாக*

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒவ்வொரு நாடகத்திலும் கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படுகிறது

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒவ்வொரு விவாதத்திலும் கடைசியாக தன் தோல்வியை
மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறார்

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒருவர் தாமதமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் சீக்கிரமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் வராமலேயே இருப்பதையும் புரிந்துகொள்கிறார்
அவர் ஒவ்வொருவருக்கும் எல்லையற்ற தேர்வுகளை அளிக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவர்கள்
தன் கைகளை
உங்கள் மேசை மேல் வைக்கிறார்
நீங்கள் அதன் அன்பின் மிகுதியால் ஒரு சுத்தியால் அடிக்கிறீர்கள்
அது அவரால் புரிந்து கொள்ளப்படுகிறது
வலியைப்புரிந்துகொள்தல் பற்றி அவருக்கு சில தீர்க்கமான புரிதல்கள் இருக்கின்றன.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது
அது நிர்த்தாட்சணமாக் மறுக்கப்படுகிறது
ஒரு மறுப்பு என்பது எப்போதும் புரிந்துகொள்வதற்கானது
என்பதில் அவர் நிச்சயத்தோடு இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரால்
தனக்கு ஏன் ஒரு விலையுயர்ந்த பரிசு தரப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை என்றபோதும் அதற்குத்தான் தரவேண்டிய  விலையை அவர் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒரு அந்தரங்கமான தருணத்தில்
ஒரு அந்தரங்கமான உணர்ச்சியால் அவமதிக்கப்படுகிறார்
அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு புதிரானது
அவ்வளவு கடினமானது
ஆயினும் அவர் அதனைப் புரிந்து கொண்டவராகவே புன்னகை செய்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரிடமிருந்து
எதையும் மறைக்க வேண்டியிருப்பதில்லை
எதற்காகப்பயப்பட வேண்டியதுமில்லை
ஒரு மெழுகு பொம்மையிடம் ஒரு சுரோவியத்திடம்  பாதுகாப்பாக இருப்பது போல் நாம் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரை
எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு பட்டியலில் இருந்து நீக்கலாம்
ஒரு பட்டியலில் சேர்க்கலாம்
அவருக்கு ஒரு பட்டியலைப் புரிந்துகொள்வதைப்போல சுலபமானது வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
உங்களுக்கு எவ்வளவோ சுதந்திரம் தருகிறார்
அவர் நீங்கள் எப்படி வளர்ந்தீர்களோ அப்படியே இருக்கவிடுகிறார்
நீங்கள் எதையுமே புரிந்துகொள்ளாதவராக இருப்பதன் மீது அவர் எந்தப்புகாருமற்று இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவரைத்தான்
இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றோம்
அவர் எப்போதும் புரிந்துகொள்பவராக இருப்பது குறித்து சில நேரம் களைத்துப்போகிறார்
அப்போது புரிந்து கொள்பவராக இருப்பதன் உன்னதம் பற்றி
அவருக்கு மேலும் கற்றுத்தருகிறோம்.

-மனுஷ்யபுத்திரன்

ஜே.கே

நாம் அறிய வேண்டிய அவசியமான
செய்திகளாயின் அவை நம்மை
நாடி வரும்
-ஜெயகாந்தன்

ஜி.கார்ல்மார்க்ஸ்

ஒரு செய்தியை கொண்டு இன்னொரு செய்தியைக் கொல்வது
ஒரு சீரழிவைக் கொண்டு இன்னொரு சீரழிவை மறைத்துக் கொள்வது
அபத்தங்களின் காலம்
-ஜி.கார்ல்மார்க்ஸ்

Sunday 10 December 2017

18/11/17

[17/11, 8:23 p.m.] 💥TNPTF MANI💥: புரிந்து விடு என ஒரு கவிதையை மிரட்ட முடியாது. ஒரு கவிதைக்கு புரியவும் புரியாமலிருக்கவும் முழு உரிமை இருக்கிறது. கிட்டதட்ட அது நம்மை போலத்தான்.

-வே.நி.சூர்யா

[17/11, 8:54 p.m.] SATHIS: தவற விட்ட வாய்ப்பெல்லாம் லைனா மனசுல வந்து போகுற அன்னிக்கு தான் நாம ரொம்பவே மனசொடஞ்சு போயிருப்போம்..

-மிருதுளா

[18/11, 6:13 a.m.] 💥TNPTF MANI💥: முழுபலத்துடன் இருக்கும்போது பலவீனமாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்து;
பலவீனமாக இருக்கும்போது முழுபலமும் இருப்பதைப்போல் காண்பி

-படித்தது

[18/11, 8:05 a.m.] SATHIS: என்னுடைய முகத்துடன் நான் வாழ்ந்தால்
நிச்சயம் ஒரு முட்டாளாகத்தான் இருக்க முடியும்

-வாரிஸ்  டைரி

[18/11, 8:15 a.m.] SATHIS: எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்; பராமரிக்க...
துணிகள் இருக்கின்றன; தைக்க...
தரை கிடக்கிறது; துடைக்க...

தோட்டம் அழைக்கிறது; குப்பைகளை அகற்ற...
உடைகள் காத்திருக்கின்றன; இஸ்திரி போட...

என்மேல் மிளிர்வாய் பிரகாச சூரியனே!

என்மேல் விழுவாய் மென்மையின் பனித்துளியே...

என்னை உன் வெண்குளிர் முத்தங்களால் மூடு...

இன்றிரவு மட்டும் என்னை ஓய்வெடுக்க விடு..

- மாயா ஏஞ்சலோ

[18/11, 8:15 a.m.] SATHIS: மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.

–  சில்வியா பிளாத்

[18/11, 8:21 a.m.] SATHIS: யதார்த்தங்களை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் மனிதர்களை படித்திருக்க வேண்டும்🍁

-அகி

[18/11, 8:52 a.m.] ‪+91 83447 34304‬: பட்டாம்பூச்சிகளுக்கான வாழ்வு எனது
அது கட்டமைந்திருப்பது
பூக்களின் அளவேயான பேருலகில்
-காடன்-

[18/11, 3:33 p.m.] 💥TNPTF MANI💥: யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்"
-நகுலன்

[18/11, 7:38 p.m.] 💥TNPTF MANI💥: உதட்டில் காயமானால்
ஒரு கவலையுமில்லை
உதவிக்கொண்டேயிருக்கிற
நாவினால்.
-தேவதேவன்

முதல்வரி

’நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக்கொள்கிறார்கள் ’ ஈபுக்கின் முதல்வரி

பதிவுகள்

சிந்திக்க ஒரு நொடி
===============
தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது 

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்

பித்தன் 
கீழே எறியப்பட்ட 
தீக்குச்சியை  வணங்கினான்

"ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?"
என்று கேட்டேன்  

"ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா" என்றான்.
------------------------------

- கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)
×××××××××××××××

💥TNPTF MANI💥: காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது
-தேவதச்சன்

[14/11, 5:33 p.m.] 💥TNPTF MANI💥: காயப்படுவோம் என்ற அச்சத்தில் தான்
சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்
-ஜெயகாந்தன்

[14/11, 5:35 p.m.] 💥TNPTF MANI💥: தாமரை என்றான் தலைகுனிந்து நின்றேன்
மல்லிகை என்றான் மயங்கி நின்றேன்
ரோஜா என்றான் சிவந்து நின்றேன்
வரதட்சணை என்றான் வாடி நின்றேன்
-பாலபாரதி

[14/11, 5:37 p.m.] 💥TNPTF MANI💥: மனச திடப்படுத்திக்கோங்க ன்னுட்டு சொல்ல ஆரம்பிக்கும்போதே இருக்கற கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுது"

-சொரூபா

[14/11, 7:00 p.m.] 💥TNPTF MANI💥: இந்தி மொழியின் ஓசை குதிரை வண்டி ஓசை,தூக்கத்தில் கற்றுக்கொள்ளும் மொழி,
அதன் எழுத்துக்கள் தொங்கும் மந்திகள்
-தமிழன்பன்

[14/11, 7:15 p.m.] 💥TNPTF MANI💥: ...எனக்குப்பிடித்த கவிதைகள் (1 - 15):

1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"

2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....

இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"

3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!

அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”

4. " புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.

5. " பறித்த மலரை
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
கல்லறையில் வைத்தாலென்ன?

மலருக்கென்னவோ
பறித்ததுமே வந்துவிட்டது
மரணம் ! "

6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”

7. "வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.

8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
--S. செல்வகுமார்

9. "பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்....
தேடலுக்குப்பிறகு
கிடைத்தன....
சில நாணயங்கள்
தொலைந்தன...
சிலர் நாணயங்கள்...!"
-ப. உமாமஹெஶ்வரி.

10. "பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்துக்கான
அழுகையும்...!"
-- அ. வெண்ணிலா.

11. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
-- ஒப்பிலான்.

12. "மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்.

13. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"
- நா. முத்துக்குமார்.

14. "உடைந்த பொம்மை
அழாத குழந்தை
கவலையோடு அப்பா..!"
-- சிவா.

15. பிள்ளையார் சுழி

"ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.

ஆண்டவனாய்
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை.

ஒரு ஆண் பிள்ளையாய்
நடத்தக்கூடாதா?

குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என் பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.

சீச்சீ!"

-- தஞ்சாவூர் கவிராயர்

💥TNPTF MANI💥: இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது
-யுகபாரதி
[15/11, 7:09 a.m.] 💥TNPTF MANI💥: அத்தனை பேர் கூடிய விழாவில்
"மொய்" செய்யாது போனவன் குறிப்பிட்டுச்
சொல்லப்படுகிறான் எப்பவும்..
-யுகபாரதி
[15/11, 7:14 a.m.] 💥TNPTF MANI💥: மனதை வருடிய கவிதை?

பெண் சுதந்திரம்

உணவகம் நில்லா
விரைவு பேருந்து
பொட்டல் வெளியில்
வேகம் குறைத்து நின்றது...

ஓட்டுனரும்,நடத்துனரும்
அவசரமாய் இறங்க...
(குறி)யீட்டை
புரிந்து கொண்டு
சில ஆண்களும் இறங்கினர்...
எனை ஏதும் கேட்காமலே
என் கணவரும் இறங்கினார்...

பெண்கள் ஒருவரும் இறங்கவில்லை
சிலர் புடவை தலைப்பு
கலைந்து தூங்கினர்
சில பெண்கள்
இறங்கிய ஆண்களை
வெறித்து பார்த்தனர்...

பேருந்தின் பின்புறத்தை
கட்டணமில்லா கழிவறையாக்கினர்..
இறங்கிய ஆண்கள்...

ஒரு சில ஆண்கள்
முகத்தில் தீர்வு கண்ட
பரவசத்துடன்
பேண்டில் சிந்திய
சிறுநீரைதட்டியபடி
பேருந்து
படிகளில் ஏறினர்...

ஒரு மணிநேரத்துக்கு மேலாக...
உள்பாவாடை
நனையும் பயத்தில்
சிறுநீரை
அடக்கி கொண்டு
பயணிப்பது
யாருக்கு தெரியபோகின்றது...

பேருந்து
மேடு பள்ளங்களில்
பயணிக்கும் போது
சிறுநீர் வந்து விடுமோ?என்று
மனம் முழுவதும்
பயத்தோடும்
வேதனையோடும்
பயணிப்பதை
ஆண்வர்க்கம் அறியுமா?

எல்லாவற்றிலும்
சரிபாதியாய்
என்னோடு பயணிக்கும்
என் கணவனுக்கே...
என் நிலை புரியாத போது,
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எப்படி புரியும்????

ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க முடியாது என
பொது இடத்தில்
பேசும் தைரியம்...

எந்த இடத்திலும்
ஜிப்பை அவுத்துக்கொள்ளும்
சுதந்திரம் உள்ளவர்களுக்கு
எப்போதுதான் புரிய போகின்றது...

நாங்களும்
ரத்தமும் சதையுமான
கழிவுஉறுப்புகளை கொண்ட
மனிதபிறவிகள் என்று..!
[15/11, 9:46 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒதுங்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்
-சேரன்
[15/11, 10:56 p.m.] THANGAM: புத்தகங்கள் என்பது
வெறும் தாளும் மையும் மட்டுமல்ல
அதற்குள் எழுதியவனின்
ஆன்மா இருக்கிறது
ஒரு செடியில்
வேருக்கும் விழுதுக்கும்
உள்ள தொடர்பு போன்றது
புத்தகங்களுக்கும்
வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு
புத்தகங்களின் மீது சமூகம்
நடந்து போகிறது
நடந்து போவது என்றால்
எழுதியவனின் மனநிலையை
நாம் உணர்ந்து கொள்வது.

-. தொ.பரமசிவன்
[16/11, 7:15 a.m.] 💥TNPTF MANI💥: எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்
-மு.வ
[16/11, 7:58 a.m.] 💥TNPTF MANI💥: எதெல்லாம் தலை போகிற விஷயமாக ஒரு வயதில் இருந்ததோ, இன்னொரு வயதில் அது காலுக்கு கீழே தூசாய்ப் போய் விடுகிறது
-பாலகுமாரன்
[16/11, 7:59 a.m.] 💥TNPTF MANI💥: உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன் என் உயிரைத் தவிர,
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன்
-தபூசங்கர்
[16/11, 7:59 a.m.] 💥TNPTF MANI💥: தும்மல் வரும்போது உடலின் சில பகுதிகள்
நின்றுவிடும்,
நீ வரும்போது தும்மலே நின்றுவிடும்
#தபூசங்கர்
[16/11, 8:05 a.m.] 💥TNPTF MANI💥: சுஜாதா எனும் மகான்
சுஜாதா
வயதாவதை நாம் அடையாளம் கண்டுகொள்வதில்லை .இது ஒன்றும் அத்தனை கடினமில்லை. வயதாக துவங்கி விட்டது என்பதற்கு சில தெளிவான அங்க அடையாளங்கள் உண்டு. அவை.இவை..
1. முதலில் வயிற்றில் ஆரம்பிக்கும்.ஒரே ஒரு தோசையோ அல்லது ஒரு இட்லி வடையோ சாப்பிட்டு,ஒரு காபி மட்டும் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது.
2.காரோ,பைக்கோ ஓட்டும்போது ஏற்படும் ஜாலி குறையும்,கொஞ்சம் போரடிக்குறார் போல் தோன்றும்.
3. பத்து வயசு பையன்களோடு பேசும்போது அவர்களுக்கு ஶ்ரீகாந்த் ,வெங்சர்கார் (இன்னைக்கு டிரெண்ட் க்கு அகார்கர் , அஜய் ஜடேஜா, ஶ்ரீநாத் ) போன்ற பெயர்கள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.
4. வீண் வம்புக்காக சண்டைக்கு போவதில் ஒரு த்ரில் இருந்ததே.அது திடீரென்று காணாமற்போய்விடும்.
5. உங்கள் க்ளாஸ்மெட் வீட்டுக்கு போனால் ,அதிர்ச்சி காத்திருக்கும். அவனுக்கு குழந்தை இருக கும்.
6. ஞாயிற்றுக்கிழமை ஊர் சுற்றுவீர்களே!!இப்போது சுற்றாமல் தூங்க வேண்டும் போல் இருக்கும்.
7. முன்பெல்லாம் அப்பா அம்மா பேசுவதை நின்று கவனிக்கவே நேரமிருக்காது.இப்போது உங்கள் பெற்றோர் பேசுவதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் தோன்றும்.
8.நீங்கள் கண்ணில் நீர் வர உருகிய சில சினிமா பாட்டுகளை த்தில் திரும்பக் கேட்கும்போது அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை என்று தோன்றும். சில சமயம் அபத்தமாக கூட தெரியும்.
9. நீங்கள் பைண்டு பண்ணி சேர்த்து வைத்திருந்த அந்த எழுத்தாளரின் தொடர்கதை ,இப்போது படிக்கும்போது ,"இந்த கண்றாவியவா வாராவாரம் கடையில் காத்திருந்து வாங்கினேன்"என்று தோன்றும் .
10. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அதை பற்றி பரபரப்பு இருக்குமே. "இப்போது அது எங்கே போச்சு".?
11. பனியன்,பாவாடை, அண்டர்வேர் ,பாடி போன்ற உள்ளாடைகளை துவைக்காவிட்டால் என்ன? பழசையே போட்டுகொள்ளலாம் என்று தோன்றும்.
12. ஆண்களுக்கு தினம் ஷேவ் செய்து கொள்வது அப்படி ஒன்றும் அவசியமில்லை என றும். பெண்களுக்கு மாட்சிங் ப்ளவுஸ் முக்கியமில்லை என்றும் தோன்றும்.
13. மத்தியான தூக்கம் சுகமாக இருக்கும்..
#இந்த அடையாளங்கள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் நீங்கள் முப்பது. ...
#சுஜாதா
[16/11, 8:34 a.m.] 💥TNPTF MANI💥: பூப்பதற்கான விநாடியை
எதிர்நோக்குகிறது ஒறு மொட்டு.
காத்திருக்கத் தெரியாத வண்டு
மொட்டறுத்து உள்புக முயற்சிக்கிறது
மொட்டவிழ்க்கவே தெரியாத வண்டுக்கு
தேன் உண்ணவா தெரியப்போகிறது
-தெலுங்கு கவிதை

(சொல்லாததும் உண்மை)
[16/11, 8:39 a.m.] 💥TNPTF MANI💥: செய்த வேலைக்கு நெல்லும்(சம்பாவும்)
உப்பும்(அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் "சம்பளம்" எனும் சொல் பிறந்தது
-தொ.ப
[16/11, 10:09 a.m.] 💥TNPTF MANI💥: எவ்வளவு நல்ல அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பும் மோசமாகிவிடும்.
எவ்வளவு மோசமான அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் திறமைமிக்கவர்களாக இருந்தால் மோசமான சட்டமும் நல்ல பலனைத் தரும்.

- டாக்டர் அம்பேத்கர்

(திருமாவேலன்)
[16/11, 6:43 p.m.] 💥TNPTF MANI💥: மடக்கி மடக்கி மாடி வீடு கட்டினோம்
வாழ்க்கை வற்றி வராண்டாவில்
முடிந்தது
-ஆதவன் தீட்சண்யா
[16/11, 9:10 p.m.] 💥TNPTF MANI💥: கரையானை பொறுத்தவரை ப்ளாஸ்டிக் தான் அந்நிய முதலீடு.
[16/11, 11:22 p.m.] 💥TNPTF MANI💥: காலத்தின் கரங்கள் கருணையற்றவை. அது கலைகளைத் தவிர மாமனிதர்களைக்கூட அழித்து விடுவதில் தயக்கம் காட்டுவதேயில்லை.
- எஸ். ராமகிருஷ்ணன்