Tuesday 29 May 2018

சுஜாதா

[03/05, 7:18 am] TNPTF MANI: ஒரு புலி நம்மளை திங்காம சாந்தமா பார்த்தா என்ன அர்த்தம்?

"அது புலி இல்லைனு அர்த்தம்"
-சுஜாதா

#HBDSujatha
[03/05, 7:22 am] TNPTF MANI: “எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.ஆனால்,எதற்கும் ஒரு செட் பனியன்,அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்”-மறுபிறவி பற்றி சுஜாதா
[03/05, 7:23 am] TNPTF MANI: எனக்கு கல்யாணம் ஆகுமா தாத்தா?
ஆகும்மா. சரியான விலை கொடுத்தா உன்னைக்கல்யாணம் பண்ணிக்கவும் ஒருத்தன் வருவான்.   

-சுஜாதா
[03/05, 7:40 pm] TNPTF MANI: சிகரெட்டை விடுவதற்கு…     – சுஜாதா

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சிகரெட் பழக்கம் என்பது பைனரி. சாதி இரண்டொழிய வேறில்லை... சிகரெட் பிடிப்பவர். பிடிக்காதவர். குறைவாகப் பிடிப்பவர், எப்போதாவது பிடிப்பவர். இதெல்லாம் ஏமாற்று. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிடவேண்டும். இருபதிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் த.தானே ஏமாற்றிக் கொள்வது. தப்பாட்டம்.

முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும். இந்த இம்சை தேவைதானா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்கவேண்டும்.
                  
சிகரெட்டுக்குப் பதில் பாக்கு, பான்பாரக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. யாரையாவது அடிக்க வேண்டும்போல் இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே உதைப்பதற்கு ஒரு கால் பந்தும் சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக்கொள்ளலாம் (கண்கள் ஜாக்கிரதை). ஒரு வாரம் ஆனதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத்துவங்கலாம். தமிழ்ப் படங்கள்போல் வெற்றிகரமான பத்தாவது நாள், பதினைந்தாவது நாள். சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம். இப்படி! ஆனால் இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும், மிதப்புக்காக பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக்கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

மணிகண்டபிரபு

[02/05, 6:35 pm] TNPTF MANI: “உலகில் அதிகமானோர் சந்தோஷப்படுவது
பாராட்டு சொற்களால்தான். அதுவும் மனம்
நிறைய யாராவது பாராட்டும்போது ஒருவர்
அடையும் சந்தோஷத்துக்கு நிகரே இல்லை
.ஆனால் , ஆயிரம் முறை கோபம் கொள்ளும்
ஒருவர் பத்து முறைப் பாராட்டுவதற்கு
யோசிப்பவராக இருக்கிறார்.”

-எஸ்.ராமகிருஷ்ணன்.
[02/05, 7:02 pm] TNPTF MANI: இப்பொழுது அதிகபட்ச அறிவாக கருதப்படுவது ஞாபக அறிவுதான்
-மதுக்கூர் ராமலிங்கம்
[02/05, 7:19 pm] TNPTF MANI: கே: இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்?
ப: பெட்ரோல், கூட்டுக் குடும்பம், கல்யாணம், தாய்ப் பாசம், வி. பயணம், ப.பயணம், டெலிபோன், பிலிம் ரோல் சினிமா, சில பெரிய வியாதிகள்,  பக்தி, கதை, கவிதை, ரூபாய் நோட்டு என பெரிய பட்டியலே இருக்கிறது. தற்கொலை மட்டும் பாக்கி இருக்கும்.

#சுஜாதா
[03/05, 6:38 am] TNPTF MANI: பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு கதை

அரசர் ஒரு ஐஸ் கட்டியை அருகில் இருந்த அமைச்சரிடம் கொடுத்து அவருக்கு அருகில் இருந்தவரிடம் கொடுக்கச் சொன்னார். அவர் அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும்.

இப்படியே கடைசி நபர் வரை கடத்திக் கொண்டு போகவேண்டும் ஐஸ் கட்டி கடைசி நபரை அடைந்த போது அது ஐஸ்கட்டியாக இல்லை. சில நீர்த்துளிகளே அவரைச் சென்றடைந்தது.

அரசின் பணம் இடைப்பட்ட மனிதர்களைத் தாண்டி கடைக்கோடிக் குடிமகனை எந்தளவிற்குச் சென்றடைகிறது என்பதை விளக்க அண்ணா சொன்ன கதை இது.
[03/05, 6:43 am] TNPTF MANI: 2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி

2005ல் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் 2010ல் இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி எழுதியுள்ளார். சில விஷயங்கள் அவர் நையாண்டியாக சொன்னாலும் இன்றைய நிலையும் அதுவே.

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்

- செல் போன்கள் இரட்டிப்பாகும்
- மக்கள் தொகை 118 கோடியாகும்
- போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம்
- பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்
- ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்
- ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்
- ராகுல் பிரதமர் ஆவார்
- தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.
- தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள்
- அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும்.
- கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்
- வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்
- செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும், இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.
- தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.
- அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்
- மற்றொரு சுனாமி வரும்; ஒரு கடலோர நகரம் அழியும்.

- முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்
- புத்தகங்கள் குறையும்.
- மருத்துவமனைகளில் இடம் போதாது…

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.
- நன்றி : விகடனின் கற்றதும் பெற்றதும்.

பிரபஞ்சன்-சதீஸ்

Good reads. Five minutes read. SK

எமதுள்ளம் சுடர்விடுக! - 03: அவரே அலங்காரம்!
பிரபஞ்சன்

   

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பரத நாட்டியக் கலைஞராக இந்தியாவிலும் வெளி உலகிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பாலசரஸ்வதி. இசை, நடனம், நாடகம் மூன்றும் இணைந்த நிகழ்த்து கலையான பரதநாட்டியத்துக்கு ஒருகட்டத்தில் உயிர் கொடுத்து, மேடை ஏற்றம் காணாமல் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்தப் பாரம்பரிய நாட்டியக் கலையை, பொதுமக்கள் முன் நிறுத்தி ஒரு பெரிய வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்படுத்தியவர் பாலசரஸ்வதி.

இந்தியாவின் செவ்வியல் நடன வகைகளில் ஒன்றான பரதநாட்டியத்தை மறு உருவாக்கம் செய்தவர் அவர். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகப் பரம்பரைப் பரம்பரையாக கையளிக்கப்பட்டுத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த நடனமணிகள் மரபில் வந்த அவர், தன் காலத்தில் தன் கலைக்குத் தாயகத்திலும் உலக அளவிலும் ஏற்படுத்தித் தந்த மரியாதை அளவிட முடியாதது. தன்னைவிடத் தன் பரதக் கலை உயர்ந்தது என்பதை அவர் எப்போதும் மறந்ததில்லை.

பாலசரஸ்வதியின் வாழ்க்கை மற்றும் அவரது கலையின் வரலாற்றை டக்லஸ் எம்.நைட் ஆங்கிலத்தில் எழுதி 2010-ல் வெளியிட்டார். அந்த அமெரிக்கப் பதிப்பின் இந்தியப் பதிப்பு 2011-ல் வெளிவந்துள்ளது. தமிழில் எழுத்தாளர் டி.ஐ.அரவிந்தன் மொழியாக்கம் செய்துள்ளார். ‘க்ரியா’ பதிப்பகத்தின் அழகிய பதிப்பு. ‘பாலசரஸ்வதி – அவர் கலையும் வாழ்வும்’ என்பது தமிழ்ப் பதிப்பின் பெயர். பதிப்பாண்டு 2017. ஒரு நூறாண்டு பரதக்கலை வாழ்வு சித்தரிக்கப்படும் ஆற்றலோடு எழுதப்பட்ட நூல்.

தஞ்சாவூரில் பாலசரஸ்வதி 1918-ல் பிறந்தார். இசை, நடனத்தைத் தம் வாழ்க்கைமுறையாகக் கொண்ட தேவதாசி மரபில் தோன்றிய அவரது முன்னோர் பற்றிய வரலாற்றை தஞ்சாவூர் அரசவையில் காணமுடிகிறது. தஞ்சையை ஆண்ட துளஜா ராஜா காலத்தின் (1763-1783) பதிவேட்டில் பாலாவின் குடும்ப வரலாறு காணப்படுகிறது. அவரது முப்பாட்டியின் பாட்டி தஞ்சாவூர் பாப்பம்மாள், 1760 வாக்கில் பிறந்தவர், தஞ்சை அரசவையில் நர்த்தகியாகவும், இசைக் கலைஞராகவும் இருந்தார். இவரது மகள் ரூபவதி, தாயின் பணியைத் தொடர்ந்தார். ஏறக்குறைய இக்காலத்தில்தான் தஞ்சை நால்வர் என்கிற நாட்டிய ஆசான்கள், நடனத்தில் பெரும் மாறுதலைச் செய்து, அக்கலைக்குப் புதிய அடித்தளம் இட்டார்கள். ரூபவதியின் மகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மாள். அவருக்கு சியாமா சாஸ்திரியின் மகன் சுப்பராய சாஸ்திரி குருவாக வாய்த்தார். தியாகராஜ சுவாமிகளிடம் கற்றவர் சுப்பராயர். அவர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் நால்வரிடம் சிஷ்யையாகப் பயின்றபோது முத்துசாமி தீட்சிதரின் மரபையும் கற்றார். ஆக, மாபெரும் மூன்று சங்கீத ஆச்சாரியார்களின் வளமான மரபுக்கு உட்பட்ட காமாட்சி, அவர் மகள் சுந்தரம்மாள், அவர் பேத்தி ஜெயம்மாள், அவர் மகள் பாலசரஸ்வதி என்று தம் கலைவாரிசுகளுக்குத் தம் கலையைக் கையளித்திருக்கிறார். ஒரு முக்கிய செய்தி, பாலாவின் தாயார் ஜெயம்மாளின் தாயாரே – அதாவது பாலாவின் பாட்டி – மாபெரும் வீணைக் கலைஞர் தனம்மாள்.

குழந்தை பாலாவுக்கு தம் குலக் கலையான நடனம் பயில்விக்கலாமா என்று தாய் ஜெயம்மாள், தன் தாயான வீணை தனம்மாளிடம் கேட்டார். தனம்மாளுக்கு விருப்பம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நடனம், குறிப்பாக நடனத்தைக் குடும்பக் கலையாகக் கொண்ட மரபுக் கலைஞர்கள் மனதிலும்கூட ஒதுக்கத்தைக் கண்டிருந்தது. சமூகச் சூழல் அக்கலையின்மேல் கவுரவம் ஏற்படுத்துவதாக இல்லை. தனம்மாள் யோசிக்கிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், தனம்மாளின் ரசிகர். அவசியம் பாலாவுக்கு நாட்டியம் கற்றுத்தர வேண்டும் என்கிறார். தனம்மாள் அப்போது கண் பார்வையை இழந்திருந்தார். ஒருநாள் ஜெயம்மாளை அழைத்த தனம்மாள், ‘‘அவளுக்கு (பாலாவுக்கு) மாறு கண் இருக்கிறதா?’’ என்று கேட்டிருக்கிறார். ‘‘இல்லை’’ என்கிறார் ஜெயம்மாள்.

‘‘அவள் பல் வரிசை சரியாக இருக்கிறதா?’’

‘‘ஆமாம்!’’

‘‘பார்க்க நன்றாக இருக்கிறாளா?’’

‘‘அழகு இல்லை என்றாலும் பார்க்க நன்றாக இருப்பாள்!’’

‘‘நன்றாகப் பாடுவாளா?’’

பாலா பாடிக் காட்டவேண்டி இருந்தது.

தனம்மாள் உத்தரவு கொடுத்தார். பாலா, நான்கு வயதில் தஞ்சை நால்வர் பரம்பரையில் வந்த கந்தப்பப் பிள்ளையிடம் நடனம் பயிலத் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் பயிற்சி பெற்றார். பாலாவின் நடன அரங்கேற்றம், 1925-ல் அவரது ஏழாம் வயதில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் அம்மனாட்சி அம்மன் எனும் ஒரு சிறிய கோயிலில் நிகழ்ந்தது. அரங்கேற்றத்துக்கு வந்திருந்த நைனா பிள்ளை போன்ற மகாவித்வான்கள், பாலாவின் நடனத்தை மெச்சி ஆதரித்தார்கள். தான் ஆற்றிய நடனக் கச்சேரிகளில் தன் முதல் அரங்கேற்ற நிகழ்ச்சி பற்றிப் பெருமிதம் கொண்டார் பாலா.

பாலாவின் காலத்து நடனம், நிருத்தத்துக்கு (நடனத்தின் தான அம்சம்) முக்கியத்துவம் கொடுத்தது. வாழ்க்கையின் பலப்பல மனநிலைகளுக்கு, அசைவுகளுக்கு முக்கிய இடம் கொடுக்கும் அபிநயம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. பாலா, அபிநயத்துக்கு மறுஉயிர் தந்தார். சிருங்கார ரசத்துக்கு மிகு இடம் கொடுக்கிறார் என்று அவர் மேல் எதிரிகள் சுமத்திய, அடிப்படையற்ற குற்றம் சுமத்தலையும் கடந்து, சிருங்காரம் என்கிற மனிதப் பண்பின் அழகியலை அவர் நிரூபணம் செய்தார். கல்கியும், டி.கே.சி.யும் நடனத்துக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்கள். பாலாவின் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து மனம் மாறினார்கள்.

1945 ஜனவரியில் பம்பாயில் ‘விக்ரம் சம்வத் 2000’ எனும் விழா, பாலா எனும் ஆளுமை எந்தச் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்தார் என்பதை விளக்குவதாக இருந்தது. அன்று, மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ருக்மணி தேவி ஆடினார். தொடர்ந்து பாலா ஆடுவதாக ஏற்பாடு. அதே மேடைப் பின்னணியில் தான் ஆடப்போகிறோம் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தார் பாலா. ருக்மணி ஆடி முடித்தவுடன், அழகான அந்த மேடைப் பின்னணிப் பிய்த்தெறியப்பட்டது. மேடையில் ஆணிகள், மரத் துண்டுகள் கிடந்தன. ஜெயம்மாள் மேடையைப் பெருக்கித் தன் மகளை அதில் ஆட வைத்தார். மேடை அலங்காரம், பாலாவுக்கு என்றுமே ஒரு பொருட்டல்ல. அவரே அலங்காரம். அவரது கலையே பரதம். அன்று மிக அற்புதமாக ஆடினார் பாலா.

உலக கலா ரசிகர்கள் வருந்த 1984-ல் மறைந்தார் பாலசரஸ்வதி.

பாலசரஸ்வதி பற்றி டக்லஸ் எம்.நைட் எழுதிய இந்த 400 பக்க வரலாறு, பல வகையில் மிகச் சிறந்தது. முன் உதாரணமான வரலாற்று நூல் என்று சொல்லத் தகுந்தது. பாலாவின் மகள் லட்சுமியின் துணைவர்தான் டக்லஸ். அதன் காரணமாகவே, மிகு ஜாக்கிரதை உணர்வோடு வரலாற்றைக் கட்டமைக்கும்போது, வரிக்கு வரி உண்மையும் ஆதாரம் துலங்கவும் எழுதி இருக்கிறார். பாலா கடந்துவந்த காலம், இந்திய சுதந்திரப் போர் உச்சம் பெற்ற காலம். தேவதாசி ஒழிப்புச் சூழல் உருவாகிவந்த காலம். மரபான கலைக்கும், புதிய அமைப்பு என்று சொல்லிக்கொண்ட நடன அமைப்புக்கும் இடையேயான உராய்வு மேல் வந்த காலம்.

சரித்திரத்தின் எந்த அம்சமும் விடுபடாமல், சமூகத் தட்பவெப்பம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பாலா என்கிற கலை மேதைமை டக்லஸால் உருவம் கொண்டிருக்கிறது. மூலத்தைச் சர்வ விழிப்போடு தொடர்ந்த மொழியாக்கம். க்ரியாவின் அழகிய பதிப்பு இது.

சுடரும்…

படித்தது

[01/05, 1:07 pm] TNPTF MANI: மனம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமையே துயரம் நீடிப்பதற்கான காரணம்

-மணி
[01/05, 5:57 pm] TNPTF MANI: உலகம்

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை

-சண்முக சுப்பையா
[02/05, 6:41 am] TNPTF MANI: மின்னல் கதை
-படித்ததில் பிடித்தது

பஸ் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது அவன் விழித்துக் கொண்டான்.அருகிலிருந்த பேக்கை காணவில்லை.அதில்தான் அரிசி வசூல் பணம்மூன்று லட்சம் இருந்தது.அருகே அமர்ந்திருந்த இருவரையும் காணோம்."அய்யய்யோ! எம் பணத்தை காணோம்.!வண்டிய நிறுத்துங்க.!"பஸ் பிரேக் அடித்து நின்றது.நள்ளிரவு தூக்கம் கலைந்த எரிச்சலில் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர்.கண்டக்டர் அருகே வந்து "எவ்வளவுங்க.?"

"மூணு லட்சம்.!அரிசி வசூல் பணம்.!"
"பத்ரமா வைச்சுக்கரதில்லையா.?"
"பத்ரமாத்தான் வைச்சிருந்தேன்.!பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பேரு மேலதான் சந்தேகம்.அவங்க எங்க இறங்குனாங்க.?"
"அவங்க கருமத்தம்பட்டில இறங்கி அரை மணி நேரம் இருக்கும்.!"
அதற்குள் டிரைவர் "எதிர்ல எந்த வண்டியும் வரல.!கோவை டூ ஈரோடுன்னு இருக்கிற போர்டை மாத்தி ஈரோடுடூகோவைங்கிற போர்டை வை.!ஒரு சின்ன ஐடியா.!

திருடனுங்க எதிர் திசையில் வருகிற பஸ்லதான் ஏறுவானுக.!"
போர்டை மாத்திக் கொண்டு பைபாஸில் வந்த வழியே விரைந்தது பஸ்.கருமத்தம்பட்டியில் நின்ற பஸ்ஸில் ஒடி வந்து ஏறியவர்கள் கையில் இருந்தது பணப்பை.!"வாங்க மாப்பிள்ளைகளா.!மாமியார் வீட்டுக்கு போகலாம்.!"என்ற குரல் கேட்டு டிரைவர்,பயணிகளின் பரிச்சையமான முகம் பார்த்து சுதாரிப்பதற்குள் மடக்கப்பட்டனர் பஸ் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது.!

மணி

[01/05, 7:37 am] TNPTF MANI: வெற்றிலை
*மணி

வெற்றிலை பற்றி பல்வேறு இடங்களில் வாசுத்துள்ளேன்.ஆனால் கழனியூரானின் வெற்றிலை பற்றி படித்தது இருநாட்களாக பதிவிட தூண்டிக்கொண்டே இருந்தது

*வெற்றிலை பயன்பாட்டை கூறுகிறார்
தாம்பூலம்,வரவேற்க,மங்கல வீட்டில்,பெண் பார்த்து வெற்றிலை மாற்ற,மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல

*வெற்றிலை போடும் பெரியவர் பாக்கை தேர்வு செய்வர்.கெட்டுப்போன பாக்கை கழித்து,நல்ல பாக்கை தேர்ந்தெடுத்து உட்புறம் ஊதி வாயில் போடுவர்.புழு,பூச்சி நீக்க.வெற்றிலையில் தூசினை முன் பின் துடைத்து லாவகமாய் வாயில் போடுவர்.

*வெற்றிலை போட்டு துப்பும் பாத்திரம் பெயர் துப்பாணி.

*கன்னிபெண்ணை இரண்டாம் தாரமாய் வயதானவர்க்கு கட்டி வைத்ததால் அவர் பாடிய நாட்டுப்புறப்பாட்டு,

"வாட வெத்தலை;வசங்குன வெத்தலை
வாய்க்கு நல்லால்லே!
வாக்கப்பட்ட புருஷன் கெதி
வாழ்க்கைக்கு நல்லால்லே!

*சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள்.அந்த வெற்றிலையை செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள்.இதை சொல்லும் மரபுத்தொடர்தான் "செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல""!

வெற்றிலையின் பிரமிப்பில் ஒருசிலவற்றை பதிவிட்டிருக்கேன்.நன்றி கழனியூரான்

-தோழமையுடன் மணிகண்டபிரபு
[01/05, 7:44 am] TNPTF MANI: இந்த செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
-ஆத்மாநாம்

MAY day wishes

பாரத்

*70கள் 80களில் குறைவாக எழுதுவதே நல்ல எழுத்து என்ற போக்கு இருந்தது. இப்போது ஒரு எழுத்தாளர் 10 நூல்களை ஒரே சமயத்தில் வெளியிடுகிறார்களே?*

-வண்ணநிலவனின் பதில் 👇🏻

💥குறைவாக எழுதுவது நிறைய எழுதுவது என்பது ஒரு விஷயமே அல்ல. எழுதியவற்றில் கலாபூர்வமாக, இலக்கியபூர்வமாக எத்தனை தேறும் என்றுதான் பார்க்க வேண்டும். புதுமையான நடை, உருவ சோதனைகளில் எந்தளவுக்கு ஒரு ஆசிரியன் அல்லது கவிஞன் ஈடுபடுகிறான், அவற்றில் எத்தனை படைப்புகள் தேறுகின்றன, மொழியை அவனது படைப்புகள் எந்தளவுக்கு வளப்படுத்தியிருக்கின்றன என்பதையெல்லாம் தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.

💥நிறைய எழுதும்போது அழகுணர்ச்சி குன்றிப் போய், காலப்போக்கில் வறண்டுவிடும் ஆபத்து நிறைய உண்டு. 90 சதவீத எழுத்தாளர்களின் ஆரம்பகாலப் படைப்புகளில் உள்ள கலையுணர்வு, இறுக்கம், அழகு எல்லாம் போகப் போகக் காணாமல் போய்விடுகின்றன. வயதான காலத்தில் அவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை. அந்தளவுக்கு வறட்டுத்தனமாகி விடுகிறது அவர்களுடைய எழுத்து.

💥 எனக்குத் தெரிந்தவரை மிகக் குறைவாக எழுதியதால் மௌனியின் சிறுகதைகள் அதன் அழியா இளமையுடன் இருக்கின்றன. இறுதி வரை தன்னைச் சட்டை உரித்துக் கொண்டு, வறண்டு போகாமலிருந்த ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். பெரும்பாலான, எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கிழடு தட்டிவிட்டது என்பதே உண்மை.

💥காவேரிக்கரை எழுத்தாளர்கள், தாமிரபரணிக் கதை எழுத்தாளர்கள் முக்கியப் படைப்புக்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்கள். அவற்றுக்கும் நல்ல எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

ஆற்று நாகரீகத்துக்கும் எழுத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி பிறந்த எட்டயபுரம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனின் இடைசெவல் போன்ற ஊர்கள் வறண்ட கரிசல் பூமிதான். இந்த ஊர்களிலிருந்து இவர்கள் எழுதி பல படைப்புகளைத் தமிழில் தரவில்லையா?

நதிக்கரை என்பதைவிடச் சூழல்தான் மிக முக்கியம் என்று தோன்றகிறது.

ப.பி

[30/04, 5:47 pm] ‪+91 83447 34304‬: அன்றைக்கு
அதிகாலை இருள்  பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.

-விக்கிரமாதித்தியன்-
[30/04, 5:52 pm] TNPTF MANI: பேருந்துக் கம்பிக்கு வெளியே அவன் கை
  பிய்த்துக்கொண்டு விழுந்தன விரல்கள்
  சிலிர்த்து விரல்களைச் சேகரித்து
  தொடர்ந்தான் மேலும் அவன் பயணம்

-ஆத்மாநாம்
[30/04, 6:20 pm] TNPTF MANI: நான் தவம் புரியப் போகிறேன். ''ஏனாம்?'' எவளாவது மேனகை என் தவத்தைக் கலைக்க வரமாட்டாளா என்றுதான்.

-கலாப்ரியா

யுகபாரதி

பாவனை

ஒருத்தியைக்
காதலிப்பது போன்ற பாவனையிலிருந்து
ஆண்கள் விலகுவதில்லை

அந்த பாவனையில்
தன்னைக் கரைத்துக்கொள்வது
அவர்களுக்கு உவக்கிறது

தாங்கள் கட்டமைக்கும் பாவனையை
ஒருகட்டத்தில் உண்மை எனவும்
கருதிவிடுகிறார்கள்

பாவனைகளை சம்பாதித்து
முத்தமும் குழந்தைகளும் கூட
பெற்றுவிடுகிறார்கள்

பாவனை கூட்டிலேயே
பொழுதுகளைக் கடத்துகிறார்கள்

வேறு என்ன செய்வார்கள்
வாழ்வை பாவனையாக
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

-யுகபாரதி

படித்தது

[30/04, 7:37 am] TNPTF MANI: மகிழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை
மனசின் கொள்ளளவு.
-வைரமுத்து

[30/04, 9:46 am] மினிமீன்ச்: கதை எழுத அனுபவ அறிவு அவசியமா ?

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் அனுபவம்.!

பெங்களூரில் ஒருநாள் ராத்திரி, ஓர் அன்பர் என்னை சந்திக்க வந்தார். "நீங்கள் எழுதும் எந்தக் கதையையும் போட்டு விடுகிறார்கள். ஆனால், நான் எழுதிய சிறந்த கதைகள் திரும்பி வந்து விடுகின்றன. இவற்றில் என்ன தப்பு என்று ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கதை எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்." என்று பை நிறைய வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எடுத்து மேஜையில் பரப்பினார்.

நான் அவற்றில் ஒரு கதையை எடுத்து முதல் பாராவைப் படித்தேன். கல்லூரியில் நடக்கும் காதல் கதை.

"கல்லூரியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எந்தக் கல்லூரி..?" என்று கேட்டேன்.

கோலாரில் ஒரு கல்லூரி பெயர் சொன்னார்.

"அந்தக் கல்லூரியின் வர்ணனை எங்கே? அதில் உள்ளே நுழைந்ததும் என்ன இருக்கும்?"

"நடுவில ஒரு மரம் இருக்குங்க" என்றார்.

"என்ன மரம் ...?"

"எதோ மரம்ங்க..."

"கல்லூரிக்குள் நுழையும்போது காம்பௌண்ட் சுவரில் என்ன எழுதி இருக்கும்...?"

"அதையெல்லாம் யாருங்க கவனிச்சாங்க..."

"ரெண்டு வருஷமாவது தினம் அந்தக் கல்லூரிக்குச் செல்கிறீர்கள். கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கவே இல்லை. சரி, காதல் கதை எழுதியிருக்கீங்க...காதல் பண்ணியிருக்கீங்களா?" என்றேன்.

"இல்லைங்க..."

"போய் பண்ணிட்டு வாங்க..அப்புறம் எழுதுங்க" என்றேன்.

HE HAD THE LAST WORD.

"நீங்க கூட நெறைய கொலைக்கதை எழுதியிருக்கீங்களே...!"
[30/04, 11:01 am] TNPTF MANI: ஏனோ ஓடிக்கொண்டு இருக்கிறது
ஒவ்வொரு நதியும்
உப்பாவதற்கு.!
-யுகபாரதி