Monday 28 February 2022

வெள்ளைக் கோடு

நம்மில் பலர் ஆகாயத்தில் விமான சத்தமொன்று கேட்டால் போதும் என்னவென்று பார்க்க தொடங்கிவிடுவார்கள். அதிலும் ஜெட் விமானத்தை பார்ப்பதற்கென்று ஒரு தனி கூட்டமே உண்டு. இதற்கு காரணம் ஜெட் விமானங்கள் பறக்கும் போது அதன் பின்னால் வெள்ளை நிற கோடு ஒன்று நேராக செல்வதேயாகும்.

அதைப் பார்த்துள்ள பலர் அதைப் புகை என்று நினைப்பார்கள், ஆனால் அப்படி நினைப்பது தவறு. ஜெட் எஞ்ஜின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது. நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது.

அது மட்டுமல்ல சில சமயங்களில் வெள்ளைக் கோடு மறையாமல் இருப்பதை கவனித்து இருப்பீர்கள். அதற்கு காரணம் விமானத்தின் நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதாகும். அப்படி ஈரப்பதம் அதிகரிக்கும் பட்சத்தில் இக்கோடுகள் மறைவதற்கான நேரம் அதிகரிக்கும்.

-படித்தது

Friday 25 February 2022

ஜானகிராமன்

யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்

Monday 21 February 2022

இயான் நாஷ்

உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்?

"I know how to say no"

(மற்றவர்கள் மனம் புண்படாதபடி என்னால் நன்கு மறுத்து சொல்ல முடியும்)

-இயான் நாஷ்

Monday 14 February 2022

ரப்பர்

ரப்பர்

பென்சில் கோடுகள் பேப்பரில் ஒட்டிக்கொள்ளும் கார்பைட் துகள்கள்.ரப்பரின் மூலக்கூறுகளுக்கு பேப்பரின் மூலக்கூறுகளைவிட ஒட்டும் தன்மை அதிகம்.ரப்பர் அழிக்கும் போது, கார்பைட் துகள்கள் அதிக ஒட்டும் தன்மையுடைய ரப்பரில் ஒட்டிக் கொள்கின்றன.இதுவே ரப்பரின் 'அழிக்க' முடியாத வரலாறு

#info

Saturday 12 February 2022

ஜென்

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்பவனை பார்த்து சாலை ஓரமாக நிற்பவன் கேட்கிறான்..
எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? குதிரை ஓட்டியோ எனக்குத் தெரியாது. 'குதிரையைக் கேள்' என்கிறான்.நம் நிலையும் அதுதான்.

-ஜென் கதை

மார்க் ட்வெயின்

உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதில்லை. உண்மை என்று நீங்கள் நம்புகின்ற விஷயங்களே உங்களுக்குப் பிரச்சனையை உருவாக்குகின்றன

-மார்க் ட்வெயின்

Friday 11 February 2022

செஸ்டர்டன்

குழந்தைகளுலகின் அற்புதம் என்னவென்றால் அதில் எல்லாமே அதிசயம்தான். 
வியக்கும் மனம் இருந்தால் போதும், அந்த அதிசய உலகம் நமக்கும் வசப்படும்.

-செஸ்டர்டன்

ரூமி

எப்பொழுது அன்பு ஏற்றுக்கொள்ளப் படவில்லையோ நகர்ந்து செல்.

எப்பொழுது அன்பு பாராட்டப்படவில்லையோ விலகிச் செல்.

எது உண்மையான அன்பு என்று காலம் கற்றுக்கொடுக்கும் .

நம்பிக்கையுடன் இரு 

-ரூமி

Wednesday 9 February 2022

அசோகமித்திரன்

காலங்கள் கடந்தபின் துன்பங்கள்,
கூர்மையை இழந்து விடுகின்றன

-அசோகமித்திரன்

ஜெயகாந்தன்

எழுதியே சம்பாதித்த பெயரை எழுதியே கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை

-ஜெயகாந்தன்

வைரமுத்துவின்

'விதவையின் சிரிப்பைப்போல எப்போதாவது வெயிலடித்தது வானம்'

'ஒரு கிழவியைக் கல்யாணம் செய்து வைத்த மாதிரி கல்வி உனக்குக் கசப்பாக இருக்கிறது'

-வைரமுத்துவின் உவமைகள்

Tuesday 8 February 2022

1000 k

கிரேக்க மொழியில் கிலோ என்பது ஆயிரத்தைக் குறிக்கும்.அதனை ஆங்கிலத்தில் Kilo என எழுதும்போது K என சுருக்கி 1000 என வழங்கப்படுகிறது.
அதனால்தான் K என்பது 1000 ஐ குறிக்க இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

#info

Monday 7 February 2022

கார்த்திக் நேத்தா

இருள் என்பது
தாயின் உடலை 
முழுவதும் காணாத பிள்ளை.

ஒளி என்பது
பிள்ளையின் உடலை
முற்றாய்க் கண்ட தாய்.

தாய்க்கு நான் 
இருள்.

-கார்த்திக் நேத்தா

லதா மங்கேஷ்கர் பெயர்க் காரணம்

Sunday 6 February 2022

எண்ணெய் நம் திறமைக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன?



மிக மெதுவான வேகத்தில் தான் எண்ணெய் ஓடும், அதுவே வேகமாக நகரும் பாகங்களுக்கு இடையே உள்ள உராய்வைக் குறைப்பதன் மூலம் வேகமாகப் பயணிக்க உதவுகிறது, இதன் மூலம் எண்ணெய் தன் மதிப்பை உயர்வாக உயர்த்தி கொள்கின்றது.

அதேபோல் நீங்கள் ஒரு சிறிய பகுதியில் திறமையானவராக இருக்கலாம், ஆனால் பெரிய பணியை முடிக்க இது ஒரு முக்கியமான பாலமாக மாறும், எப்போதும் உங்கள் சொந்த திறமையைப் பற்றி மனதில் பெருமிதம் கொள்ளுங்கள், உங்கள் திறமையால் மற்றவர்களுக்கு உதவுங்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.

Saturday 5 February 2022

மின்சார வாகனங்களின் எஞ்சின் சத்தம் ஏன் எழுவதில்லை?



ஏனென்றால் மின்சார வாகனங்களில் என்ஜின் இல்லை .
சப்தமெழுப்பாத மோட்டார் மட்டுமே இயங்குவதால் .அந்த அதிர்வுகளை பேரிங் தாங்கிக்கொள்வதால் சப்தம் எழுவதில்லை .

Wednesday 2 February 2022

அண்ணா

புலி வேட்டைக்குப் போகும்போது எலியைப் பற்றிக் கவலைப்படாதே.எலியை பூனை பார்த்துக் கொள்ளும்

-அண்ணா