Monday 8 January 2018

மணி

💥: அவரவர் தகுதி அவரவர் வாகனத்தில் காணப்படும்
-க.சீ.சிவகுமார்

💥: ஒரு புத்தகத்தை வாங்கிய வாசகன் படித்து நிறைவடைந்தால் அந்த எழுத்தாளனின் மற்ற புத்தகங்களையும் தானாகவே வாங்க முன்வருகிறான் வாசகன். ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும்மேலும் அவனைத் திருப்திப்படுத்தவேண்டியது இலக்கிய வெகுஜன பேதமின்றி எல்லா எழுத்தாளனுக்கும் தலையாய கடமை

-விமலாதித்த மாமல்லன்

#மனிதர்களில் பெரும்பான்மையினர் பலவீனமானவர்கள், அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போவதற்க்கு அவர்களின் தேவையற்ற குற்ற உணர்ச்சியும் தைரியமற்ற மனமுமே காரணம்... ஒருவன் துணிந்து செயல்பட ஆரம்பித்தால் எதையும் அடைந்துவிடலாம்... குடும்பமும் உறவுகளும் நட்பும் வறுமையும் தான் தடையாக இருக்கின்றன... அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்பவன் அதிகாரத்தின் உச்ச நிலையை அடைகிறான்.. இடக்கை..

💥: மறுவாசிப்பில்
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு உலகம்

#ஹென்றி எனும் பெயரை இன்று வரை மறக்காமல் இருக்க செய்தவர் ஜே.கே தான்

படித்தது

💥: சாக்கடைகள் சொல்வது எத்துனை கலங்கினாலும் தேங்கி நிற்காதே."

#படித்தது

💥TNPTF MANI💥: வாழ்வதில் ஒன்றுமில்லை-வாழ்க்கை
பிய்த்தெறியப்பட ஒரு மலராகி விட்டபிறகு
மரணத்தில் ஒன்றுமில்லை
அது வெறும் சொல்லாகி விட்டபிறகு..
-மனுஷி

💥TNPTF MANI💥: நம் முகமூடிகளே
நம் மகுடங்கள்
அவை கழற்றப்பட்டுவிட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது

-அப்துல்ரகுமான்

: நீயில்லாவிடில் இன்னொருத்தி
அந்த இன்னொருத்தி
உன்னொருத்தி போலிருந்தால் போதும்!

-மகுடேஸ்வரன்

வரலாற்றை அறியாத நாடும் ஆசிரியர்களை ஏங்க வைக்கும் நாடும் அழிந்து போகும்....!
   - அறிஞர் அண்ணா

💥: வேட்டை நாய்களை கண்டால் இந்த வெறும் நாய்களுக்கு ஏனிந்த பரபரப்பு -தானும் ஒரு நாய் என்ற கர்வம்
-நகுலன்

முனியாண்டி விலாஸ்

முனியாண்டி விலாஸ்

“முனியாண்டி விலாஸ்
ஓர் அசைவ உணவகம்.
இன்னும் சொல்வதெனில் அது
சாமானியர்களின் சாப்பாட்டுக்கடை.

பகட்டும் பம்மாத்தும் கொண்டவர்கள்
அக்கடைக்குள் நுழைவதில்லை.
எளிய மனிதர்கள் அதைத் தங்கள்
விருந்து மாளிகையாக
விளங்கிக்கொள்கிறார்கள்.

நெடிய காத்திருப்பிற்குப் பின்னே
வயிறு நிறையும் என்கிற தந்திரங்களை
அக்கடை செய்வதில்லை.

ஆர்டர் எடுத்துக்கொள்பவர்
நம்மிலும் வறிய வாழ்வை
மேற்கொள்பவராயிருப்பார்.

ஆங்கில மெனுக்கார்டை
அக்கடை தயாரித்து வைத்திருப்பதில்லை.

மேசை துடைப்பவர்  மேலாளர் என்னும்
பாகுபாடு இல்லை.
எல்லாரும் எல்லா வேலைகளையும்
இயல்பாகச் செய்வர்.

கரகரக்கும் வானொலியில்
சீர்காழியும் ஜெயராமனும்
கார நெடிகளுக்கு ஏற்ப தங்கள் கமகங்களை
மெருகேற்றிக்கொள்வர்.

கொல்வது பாவமாயிற்றே எனும்
குரலோ குமைச்சலோ
அக்கடையில அறவே கேட்பதில்லை.

நல்ல பதத்தில்
நாக்கூறும் பக்குவத்தில்
தயாராகும் அக்கடையின் உணவுவகைகள்
தமிழர்களின் தொன்ம வாடையைக்
கொண்டிருக்கும்.

கடல் நண்டெனில் மிளகையும்
காடை வறுவலெனில் மிளகாயும்
தூக்கலாக உபயோகிப்பது
முனியாண்டி விலாஸுக்கே உரியது.

ஆடு மேய்ப்பவர்கள்
அக்கடைக்கு வந்தால்
ஓர்  ஆட்டின் உயிர்ச் செயல்பாட்டிற்கு
உதவிய பாகங்களை உய்த்துணரலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட
சமையற் குறிப்புகளை அக்கடை மாஸ்டர்கள்
பழகிக்கொள்ள விரும்புவதில்லை.

உணவிற்குள் ஊடாடும் சாதியை
உட்கொள்ள நினைக்கும் யாரையும்
முனியாண்டி விலாஸ்
முகம் மலர்ந்து வரவேற்கிறது.

முனியாண்டி விலாஸுக்குப் பழகிய நாக்கு
கிர்ல்டு சிக்கனுக்கோ தந்தூரி சிக்கனுக்கோ
அலைவதில்லை.

முனியாண்டி விலாஸுக்கு
ஊர்தோறும் கிளைகளுண்டு.
ஒவ்வொரு முனியாண்டி விலாஸும்
ஒவ்வொரு சமஸ்தானம்.

மதுபோதை மண்டையிலேற
மங்கலான கிறக்கத்தோடு அக்கடைக்கு வருபவர்
தங்கள் புராதன பெருமைகளில் ஒன்றாக
முனியாண்டியைக் கருதுவர்.

கல்லாமேசையில் வைக்கப்பட்டிருக்கும்
திருநீறையும் குங்குமத்தையும் வேண்டியவர்
எடுத்துக்கொள்ளலாம்.

அடங்காமல் செருமலாம்.
அதிர அதிர அரட்டையடிக்கலாம்.
வீடுபோல் உணரலாம்.
வேண்டியதைத்  தமிழிலேயே கேட்கலாம்.

முனியாண்டி விலாஸ்
தன்னிடம் பசியாறிப்போகும் அனைவரையும்
முனியாண்டியாகவே பார்க்கிறது.

கணினிக்கும்
டிஸ்யூ பேப்பருக்கும் மயங்குவதில்லை.
எதற்காகவும்  தன் அசலான முகத்தை
மாற்றிக்கொள்ள முயலுவதில்லை.

முனியாண்டிகளுக்காக
முனியாண்டிகளால் நடத்தப்படும்
முனியாண்டி விலாஸ்
ஒரு சமூகத்தின் செயல்பாடு
ஒரு சமூகத்தின் அடையாளம்
ஒரு சமூகத்தின் சங்கிலித்தொடர்.

முனியாண்டிகளாய்த்  தங்களை
உணராதவர்கள் அக்கடைக்கு வருவதில்லை.
முனியாண்டிகளை  உணராதவர்களும்…”

-   யுகபாரதி.

பாரத்

💥தவிர்க்க முடியாததையே தன் விருப்பமாக காட்டிக் கொள்வது குடும்பங்களின் வலிமைகளில் ஒன்று

- விவேக் ஷான்பேக்

- கச்சரா கோச்சரா நாவல்

கவிக்கோ

பறித்த மலரை
     ஆண்டவனுக்குச்
சூட்டினாலென்ன?
     கல்லறையில்
வைத்தாலென்ன?

     மலருக்கென்னவோ 
     பறித்ததுமே
     வந்துவிட்டது
     மரணம்!"
#அப்துல்ரகுமான்

தமிழன்பன்

இந்தியாவின் பொருளாதாரம்
முன்னேறி இருக்கிறது
பொதுமக்கள் தான்
முன்னேறவில்லை
-"தமிழன்பன்

@MANIPMP

💥: உங்கள் நாட்டை எப்போதும் நேசியுங்கள். ஆனால், உங்கள் அரசைத் தகுதியோடு இருக்கும்வரை மட்டும் மதியுங்கள்.

-மார்க் ட்வைன்

# அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ..?
_ஆத்மாநாம்

# "அந்திக் கருக்கலில்

திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும் எனக்கதன்

பாஷை புரியவில்லை."

- கலாப்ரியா

I💥: உள்ளதில
சிறந்த புகைப்படத்தைத்தான்
பெண் வீட்டுக்கு அனுப்பினேன்...

வந்ததில் சிறந்த புகைப்படத்தைத்
தேர்வு செய்திருப்பார்கள் போல...
பதில் இல்லை..!”

  -பா. ராஜாராம்.

💥: மலை உச்சிப்பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்...

குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்..!”

       -   நா. முத்துக்குமார்.

💥: எல்லாரும் சொன்னபிறகு
என்ன சொல்வான்
புத்தாண்டு இரவில் குடுகுடுப்பைகாரன்
-லிங்குசாமி

💥: ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்களுக்கு இருக்கிற அறியாமை
"அன் ரிசர்வ் பெட்டி எங்க இருக்குதுனு
தெரியாம ஓடுறதுதான்"!

*மணி

💥: கடமைக்கு வாழ்பவர்கள்
உரிமைக்கு போராடுவதில்லை
- இன்குலாப்

I💥: எங்கே புத்திசாலித்தனமாக இருப்பது அபாயகரமோ அங்கே முட்டாள்தனமாக இருப்பது புத்திசாலித்தனம்
-நகுலன்

💥: மழையின்
பெரிய புத்தகத்தை
யார்ப் பிரித்துப்
படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர் வழிந்து கொண்டிருக்கிறது
-தேவதச்சன

💥: கவனம் பிசகினால்
உறக்கம் மரணமாகிவிடும்
நட்பு
காதலாவதுபோல்
-இன்குலாப்

💥: ஏதோ ஒரு மூலையில்
நானும் பூக்கிறேன்
பார்வையில் படவும்
படாமல் உதிரவும்
-இன்குலாப்

வாலி

பாஸ்கரன் ஜெயராமன் பதிவிலிருந்து:

"காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம்
அம்மா."

‘நியூ படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் நான் எழுதிய
பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில்
"வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும்
ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க... ‘தெய்வம்’ கிற வார்த்தைக்குப்
பதிலா ஏதாவது சொல்லுங் சார்!" என்று ரஹ்மானிடமிருந்து
ஃபோன் வந்தது.

‘ய்யோவ் ! என்னாய்யா....நீ ..இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு
சரி..சரி..தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ."
என்று மாற்றிக் கொடுத்தேன்.

-கவிஞர் வாலி...

மணி

💥: உண்மையை பரிசீலிப்பவன் அவன் பொய்யென நிரூபிக்கும்வரை ஓய்வதில்லை
-ஜெயகாந்தன்

💥: நம்ம societyல் என்ன பிரச்சனைனா,கெட்டவங்க நாங்க ஜெயிக்கப்போகிற நம்பிக்கையோட இருக்கோம்.ஆனா நல்லவங்க நீங்க தோத்துருவோம்னு பயத்தோட இருக்கீங்க

-கரு.பழனியப்பன்

முழுப்பழத்தை சாப்பிட்டவர் முன்னோர்,தோலை தவிர்த்துவிட்டு பழத்தை மட்டும் சாப்பிட்டனர் பெற்றோர்,பழச்சாறை மட்டும் அருந்துகிறோம் நாம்-வாரியார்

பவுன்சர்

பவுன்சர் உருவான கதை
புயல் வேகத்தில் வீசப்படும் ‘பவுன்சர்’ பேட்ஸ்மேன்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி சீறி வரும். சில நேரம் பேட்ஸ்மேன்களை விட மிக உயரமாக எழும்பும். பவுன்சர்களை பொறுத்தவரை அதை அடிக்காமல் விடுவது சிறந்தது. ஏனெனில் சரியாக கணிக்காமல் ஆடினால் காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
இந்த ‘பவுன்சர்’ ஒரு யுக்தியாக கையாளப்பட்டது 1930–களில் தான். அப்போது கிரிக்கெட்டில் இங்கிலாந்து–ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் மட்டுமே தான் பிரபலம். 1930–ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் வென்றது. ‘கிரிக்கெட்டின் பிதாமகன்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் அந்த தொடரில் மட்டும் 974 ரன்களை குவித்தார். அவர் ஓய்வு பெறாத வரை நம்மால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என்று இங்கிலாந்து வீரர்கள் குமுறினார்கள். அந்த சமயம், அந்த தொடரில் ஒரு டெஸ்டில் மழையால் ஆடுகளத்தன்மை மாறியதும், கொஞ்சம் எழும்பி வந்த பந்துகளில் பிராட்மேன் தடுமாறுவதையும் கண்டறிந்தனர்.
1932–33–ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்ற போது இங்கிலாந்து கேப்டன் டக்லஸ் ஜார்டைன் ‘பாடிலைன்’ எனப்படும் உடலை குறி வைத்து தாக்கும் யுக்திகளை தனது பவுலர்கள் மூலம் தொடர்ச்சியாக மேற்கொண்டார். அவ்வாறு வீசும் போது லெக்சைடில் பேட்ஸ்மேன்கள் கேட்ச் ஆவார்கள் என்பது கணிப்பு. அதற்கு பலனும் கிடைத்தது. அந்த தொடரில் பிராட்மேன் 396 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் விளைவு இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது.
ஆனால் ‘பவுன்சர்’ பந்து வீச்சு சர்ச்சையாக உருவெடுத்ததால் அதில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வர வேண்டிய நிலைமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) ஏற்பட்டது. 1970–80–களில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியதை மறந்து விட முடியாது.
பவுன்சர் விஷயத்தில் அவ்வப்போது விதிகளை மாற்றும் ஐ.சி.சி. தற்போது ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 2 பவுன்சரும், 20 ஓவர் போட்டியில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சரும் வீச அனுமதித்துள்ளது டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு ஓவரில் 2 பவுன்சர் வீசலாம்.
பிலிப் ஹியூக்சின் மரணத்தால் பவுன்சர் வகை பந்து வீச்சு அவசியமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற பந்து வீச்சு தான் சுவாரஸ்யமானது. இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்டிராக்டர் கூறும் போது, ‘இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கிரிக்கெட் உலகம் இளம் மற்றும் திறமையான ஒரு பேட்ஸ்மேனை இழந்து விட்டது. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி. இதனால் கிரிக்கெட் விதியில் மாற்றங்களை கொண்டு வந்து, பவுன்சரை நீக்கவேண்டும் என்று சிலர் வற்புறுத்துவதாக கேள்விப்படுகிறேன். பவுன்சர் பந்து வீச்சு தடை விதித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே போய் விடும்’ என்றார்.
ஆபத்து ஏற்படாத அளவுக்கு ஹெல்மெட்டில் பாதுகாப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்துவதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர்.

கயிற்றரவு

கயிற்றரவு என்றால் என்ன?”
”அடிப்படையான கேள்வி. சங்கரர் கேள்விப்பட்டிருப்பீர்கள்”
“ஆம்…ஓரளவு”
“இங்கே கேரளத்தில் காலடியில் பிறந்த மேதை அவர். உங்கள் ஷெல்லிங், ஹெகல் போல தூயகருத்துமுதல்வாத தத்துவத்தை சொன்னவர். அதற்கு அத்வைதம் என்று பெயர்” என்றார் நடராஜ அய்யர் ”இந்த பிரபஞ்சம் வெறும் மாயத்தோற்றம் என்று அவர் சொன்னார். நாம் நம்முடைய மனமயக்கத்தால் இதை உண்மையானது என்று எண்ணுகிறோம். அதை விளக்க அவர் சொன்ன உதாரணம்தான் கயிற்றரவு”
“ஹும்” என்றார் பென்னி ஆண்டர்சன்
“மங்கலான வெளிச்சத்தில் நாம் செல்கிறோம். பாதையில் ஒரு கயிறுகிடக்கிறது. ஒருகணம் அதை நாம் பாம்பாக நினைக்கிறோம். அந்தக்கணத்தில் அது பாம்பேதான் இல்லையா? நம் உடல் அஞ்சி புல்லரித்துவிடுகிறது” என்று நடராஜ அய்யர் உற்சாகமாகச் சொன்னார் “அதன்பின் நாம் தெளிவடைகிறோம். அது கயிறு என்று தெரிந்ததும் பயம்போய்விடுகிறது, அது கயிறாகவே தெரியத்தொடங்குகிறது”
-ஜெயமோகன்

சதீஷ்

தமிழ் எழுத்தாளன்

மொழி தன் இயல்பான இயக்கத்தின் மூலம் சென்றடைய முடியாத தளங்களுக்கு மொழியை சிறப்பு அழுத்தம் தருவதன் மூலம் கொண்டு செல்ல முயலும் கலையே கவிதை. மொழிக்குள் செயல்படும் இன்னொரு தனி மொழியை கவிதை உருவாக்குகிறது.

- சுந்தர ராமசாமி

சொற்களின் இருப்பு அதன் சகஜமான தளத்தில் இருந்து விடுபட்டு வேறொரு அமைவில் தங்களைப் பொருத்திக் கொள்ளும் போதே கவிதையின் ரகசியக் கதவு திறக்கிறது.

- க.மோகனரங்கன்

கவிதைக்கு வடிவத்தை விட, சொல்லாமல் விட்ட வரிகளைப் பற்றி சிந்திக்க வைப்பது என்பது முக்கியம். மேலும், தேவைப்பட்ட அளவுக்கு மிகச் சிக்கனமாக கோடி காட்டிவிட்டு கவிதானுபவத்தை வாசகனுக்கு விட்டுவிடும் கவிதைகள் சிறப்பானவை. அதில் ஒரு படிமத்தையும் தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்க்கும் ஆனந்தம் நல்ல கவிதைகளுக்கு நிச்சயம் உண்டு.

- ஞானி

வார்த்தைகளைச் சிக்கனமாகக் கையாள்வதில் உள்ள பொறுப்புணர்ச்சி, அனுபவ உணர்வுகளைச் சார்பின்றிப் பதிவு செய்யும் நேர்மை, வசீகரப்படுத்தும் வியாபாரத் தந்திரங்களின் புறக்கணிப்பு, கவிதைக் கலையைக் கையாளும் செய்நேர்த்தி, வாழ்க்கையின் புகைமூட்டத்தில் அதன் இயல்பான ஒளியைத் தேடும் போக்கு இவையே ஒருவரைக் கவிஞராக்குகின்றன.

- ராஜமார்த்தாண்டன்

கவிதை வேண்டுமானால், சொற்களைக் கூராக்கு. இசையை ஒதுக்கிவிடு. உருவகங்களை உயிராக்கு. சிந்தனைகளை நேராக்கு.

- க.நா.சு

படித்தது

[27/11/2017, 7:12 a.m.] 💥TNPTF MANI💥: இவ்வளவு நடக்கும்போது
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்று கேட்கிறார்கள்
அதான் புலம்புகிறேனே.
-பேயோன்

[27/11/2017, 7:13 a.m.] 💥TNPTF MANI💥: உலக அனுபவம் குறைய குறைய அடிக்கடி ஆச்சர்யப்பட நேரிடும்
-சுந்தர ராமசாமி

[27/11/2017, 7:16 a.m.] பாரத் கோவை: 💥யாரோ ஒருவரை
நினைக்காமலிருக்க
எவ்வளவு பேரைத்தான்
நினைத்துக் கொள்வது...
களைப்பாக இருக்கிறது!
-மனுஷ்யபுத்திரன்

[27/11/2017, 8:13 a.m.] 💥TNPTF MANI💥: இழந்து கொண்டிருக்கும் அமைதியை மீண்டும் பெற்று நிலை பெறும்படியாக செயலாற்றுவதே இன்றுள்ள பணிகளில் மிக முக்கியமான பணியாகும்
-பாவண்ணன்

[27/11/2017, 12:48 p.m.] 💥TNPTF MANI💥: ருசி என்பதே, நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு
காரியம்தான்
-கி.ரா

[27/11/2017, 12:53 p.m.] 💥TNPTF MANI💥: காற்றில் படபடக்கும் பக்கங்கள் தன்னைத்தானே படித்துக் கொள்கின்றன
-மனுஷ்யபுத்திரன்

[27/11/2017, 12:56 p.m.] 💥TNPTF MANI💥: விழி இழந்தால் வாழ்வு தொலைவு
வழி இழந்தால் பயணம் மிகத் தொலைவு

-படித்தது

சிற்பி

மனம் ஒரு பாத்திரம்

மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்

ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது

துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்

காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்

பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்

...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு

-சிற்பி

ஜெமோ

பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.

பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.

ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்

-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)

ருத்ரன்

ஏன் கடமையை செய்ய வேண்டும்?
கடமையைச் செய்யும்போது பிறருக்கு பயன் கிடைக்கும்.அதைச்செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வை மறுத்து செய்யாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்.மனதுக்கு இது ஒவ்வாது.அதனால் பிடிக்கிறதோ இல்லையோ நம் கடமைகளை நிறைவேற்றுகிறோம்-பிறருக்காக அல்ல,நமக்காக,நம் மனது குற்ற உணர்வால் பாதிக்கப்படக் கூடாதே என்ற தேவைக்காக..
-ருத்ரன்

பிழைதிருத்தி

"கண்ணதாசனின் கன்னல் வரிகளில்..  குழந்தை தூங்கட்டும்.. கவிதை வரிகள்..!!*

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினைக்காணட்டும் 
அன்புக் குழந்தையவன்
அரையாண்டுச்செல்வனவன்
இந்த வயதினிலே
இப்போது தூங்குவதே
சுகமான தூக்கம், அவன்
சுகமாகத் தூங்கட்டும் !

 

கண்ணை விழித்திந்தக்
காசினியைப்பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத்தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார்துணைவருமோ?
நன்றியிலாநண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ 
நலமிழந்தபெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத்தொழில்வருமோ 
திண்டாட்டந்தான்வருமோ
வெய்யில்அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்றநிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !

கோடிக் கதிபனெனக்
குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென 
நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம்
கிடைத்தாலும், அவன்வீட்டு
மாட்டுக்கும் கூட
மரியாதை கிடைத்தாலும்
பஞ்சணைகள்இருந்தாலும்
பால்பழங்கள்உண்டாலும்
சொத்துள்ளகாரணத்தால்
தூக்கம் பிடிக்காது!

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!

 

பூப்போலத்தூங்குகிறான்
பூமியிலேஉள்ளதெல்லாம்
பார்க்காமல்தூங்குகிறான்
பாவிகளை இன்றுவரை
சேராமல் தூங்குகிறான்;
தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகிறான்;
"லாலிலா" பாடுகிறான்!
வெள்ளை மலர்முகத்தை
வெள்ளிநிலாப்பெட்டகத்தைப்
பிள்ளைக் கனியமுதைப்
பேதையீர் எழுப்பாதீர்!

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!

கிருபா

பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம்
எவளை பேரழிகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது
-பிரான்சிஸ் கிருபா

ஒவ்வொருவராய் உங்களை விட்டு விலகிக்கொண்டிருக்கிறார்கள் எனில் தவறு அவர்கள் மீதல்ல. உங்கள் மீதே.
#மீனம்மாகயல்

💥: ரயில் ஸ்நேகம் கிடைக்காத போது ரயில் ஸ்நேகமாகி விடுகிறது.

-ராஜா சந்திரசேகர்

@மணி

முதல் மரியாதை சொற்களுக்கல்ல,
மவுனத்திற்கே

நிம்மதியிழக்க எளிய வழி
வீடு கட்டுவது
-யுகபாரதி

தைரியம் என்பது ஒரு பழக்கம்.
அதை நீங்கள் தைரியமாக இருக்கும்போது தான் கற்றுக்கொள்வீர்கள்
-மரிடேலி

💥‘'கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’'

-லா.ச.ரா.

முதல் தர எழுத்தாளர்கள் எல்லாம்
சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
மூன்றாம் தர எழுத்தாளர்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்
-சுந்தர ராமசாமி

திருமாவேலன்

நவ.: 26 தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின சிறப்பு பகிர்வு

ப.திருமாவேலன்

தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!



வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''

''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல்  ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''

''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!

'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்