Monday 31 October 2016

மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம்:
====================================
புனைகதை வாசிப்பிலிருந்து கவிதை வாசிப்பு வேறுபட்டது என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நீண்ட கவிதை வரலாறு கொண்ட தமிழ்க் கவிதைகளை வாசிக்கும்போது அதற்கான முன்மாதிரிகளைத் தேடுவதில்லை. என்னளவில் தமிழ்க்கவிதை தனித்தனிப்போக்கைக் கொண்டவை. வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய கவிதைகள் வடிவத்திலும், முன்வைப்புகளிலும் தொடர்பற்றவைகளாக இருக்கின்றன. மரபுக்கவிதைகளில் ஒவ்வொரு வகையினமும் சில நூறாண்டுகளைத் தனக்கானதாகக் கொண்டிருந்தன, ஆனால் வடிவமாற்றத்தோடு அறிமுகமாகிப் புதுக்கவிதைகளென அழைக்கப்பட்ட நவீனக்கவிதைகள் அவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அதிக அளவாகப் பத்தாண்டுகள்கூட ஒருவகை முன்வைப்புக்கில்லை. திட்டமிட்ட இயக்கமாகச் செயல்பட முனைந்த வானம்பாடிகளின் வாழ்நாளும்கூடப் பத்தாண்டுகள் இல்லை. எழுத்துப்பாணிக் கவிதைகளுக்கும் அதுதான் நிலை. நவீனக் கவிதைகளின் முன்மொழிவுகள் எப்போதும் தற்செயல் தன்மை அல்லது தற்காலிகத் தன்மைகளோடு நகர்ந்துவந்துள்ளன.

ஒரு புனைகதையை வாசித்தவுடன் அந்தப் புனைகதைக்கு ஒரு முன்மாதிரியை நினைத்துக்கொள்வேன். அந்த முன்மாதிரி எழுப்பிய முன்மொழிவை இந்தப் புனைகதைத் தாண்ட நினைக்கிறதா? நீட்டிக்க விரும்புகிறதா? முன்மாதிரியை உருவாக்கும் நோக்கம்கொண்டதா? என்று யோசிப்பேன். அப்படியொரு யோசனையை மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் எனக்குள் உருவாக்கியது.  ஆனந்த விகடனில் 14 பக்கங்களில் விரவிக்கிடக்கும்  கிளிக்காவியத்தின் இரண்டு பக்கங்களை வாசித்தவுடன் அதற்கொரு முன்மாதிரி தமிழில் இருப்பதாகத் தோன்றியது. நினைவுக்கு வந்த அந்தக் கவிதை ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு பெயராக மட்டுமல்லாமல் சொல்முறையும்கூட நினைவில் வரக்காரணம்.  தேடிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டையும் வாசித்தேன்.

கிளிக்காவியத்திற்கும் கிளிக்கூண்டிற்குமிடையே அடிப்படையான வேறுபாடொன்று உண்டு. மனுஷ்யபுத்திரனின் கவிதை கிளிகளை மனிதனின் புறத்தே நிறுத்துகிறது. ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு, கிளியை மனிதனின் அகத்தே அலையும் ஒன்றாக நிறுத்தியுள்ளது. கிளியின் இடம் இரண்டு கவிதைகளிலும் வேறுவேறு என்றாலும் கவிதைச்செயலை நகர்த்த உதவும் சொற்கள் வழி உருவாகும் தொனியும் மெய்ப்பாடுகளும் ஒத்தனவாக இருக்கின்றன.

கிளியாக அலையும் ஆன்மாவைக் கூண்டாகிய உடலில் சுமந்தலையும் மனிதனின் விடுதலையை ஆன்மீகத் தேடலின் பரிமாணங்களோடு முன்வைக்கும் ந.பிச்சமூர்த்தியின் தொனியைப் பற்றிக்கொண்ட மனுஷ்யபுத்திரன், தனது கவிதைகளின் இயக்கநிலைக்கேற்ப வேறு தளத்திற்கு நகர்த்திவிடுவதைச் சரியாகச் செய்துள்ளார். வளர்ப்புக்கிளிகள் கிளிகளாகவும் இருக்கின்றன; மனிதச் சாயல்களோடும் இருக்கின்றன. நடப்புச் சூழலோடும், வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளோடும் கிளிகள் அடைபட்டுக்கிடக்கின்றன கூண்டுக்குள்.

மனிதர்கள் ஏன் பறவைகளையோ, நாய், பூனை போன்ற  பிராணிகளையோ வளர்க்கவேண்டும்? அவர்களின் இரக்கத்தைக் காட்ட  வேறுமார்க்கங்கள் இல்லையா? அப்படி வளர்ப்பதென்பது வளர்க்கமுடியாத மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் நோக்கம் கொண்டதா? அல்லது தனக்குக் கிடைக்காத பற்றுக்கோடொன்றைத் தேடும் மனநிலையா? இப்படியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் கவிதைக்குள் அடைகாக்கப்படும் மூன்று கிளிகளின் ஆறு இறகுகளின் வழி தொடர்கிறது இன்னொருவகையான ஆன்மத்தேடல்.

தன்னையே இரண்டாகப் பாவிக்கும் கவிதைச்செயலின் தொடர்ச்சியாக இல்லாமல், தனக்கும் இயற்கைக்கும், தனக்கும் பிற உயிரினங்களுக்குமிடையேயான பாவனைகளை படிமத்தொடர்ச்சியாகவும் கதைநிகழ்வாகவும் ஆக்கியிருக்கும் மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் தரும் அனுபவம் புத்தம் புதியதல்ல.  தமிழின் நீள்கவிதைகளின் தொடர்ச்சியில் கிடைக்கும் புதுவகை முன்மொழிபு.

ஜே.கே

ஜேகே எழுதுவார் “என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்காக ‘நன்னா இல்லன்‘னு வச்சுட முடியறதா? நன்னா இல்ல நன்னா இல்லேன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னாயிருக்காதாங்கற நப்பாசை தான். சான்சே குடுக்க மாட்டான் போல இருக்கு! பக்கம் பக்கமாத் தள்ளிண்டே இருக்கேன்‘ என்று சில நேரங்களில் நாவலில்

மு.மகுடேஸ்வடன்

💥கொஞ்சம் உயரமானவன்
மூச்சு விடாமல் பேசுவான்
சந்தேகம் எழுப்புவான்
கேள்வி கேட்பான்
பதில் சொல்லமாட்டான்
பெண்பிள்ளைகள் சீண்டுவான்
கவிதை எழுதுவான்
திரைப்பாட்டு படிப்பான்
சட்டையில் மை தெளிப்பான்
சண்டையில் சட்டை கிழிப்பான்
கரும்பலகையில் பேசியவர் பட்டியலில்
முதல் பெயர் பிடிப்பான்
தேர்வறையில் தூங்குவான்
தேர்ந்த கதை சொல்வான்
திணறி திணறி வாசிப்பான்
தெரியாத ஆங்கிலம் முயற்சிப்பான்
இப்படி அவனைப் பற்றிய
உங்கள் அனுமானங்களை
பின்பு ஒருநாள்
உங்கள் ஓய்வு காலத்தில்
கடைத்தெருவில் கண்டால்
ஒளிந்தோடுவோர் மத்தியில்
கைகுலுக்கி கைக்கூடை வாங்கி
வீடு வரை வந்து பொய்யாக்குவான்
அவனைத்தான் நீங்கள்
வகுப்பில் கடைசி பென்ஞ்சில்
உட்கார வைத்திருந்தீர்.

-மகுடீசுவரன். மு

குட்டிக்கதை

பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,

"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு  மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி  ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.

வண்ணதாசன்

வெள்ளிக்கிழமைப் பின் மதியப் பேருந்துகளில், ஏதாவது ஒரு நேர்த்திக் கடனாக முடிகாணிக்கை செலுத்திவிட்டு சந்தனம் அப்பிய மொட்டைத் தலையோடு ஒன்றிரண்டு பேராவது தென்படுவார்கள்.

இன்று அப்படிப் பார்த்த ஒரு மனுஷிக்கு அதிகம் போனால் முப்பது வயதுக்கு ' 'முன்னப்பின்னே' இருக்கும்.  கன்னங்கரேர் என்று அப்படி ஒரு அழகு. பக்கவாட்டில் மூக்கும் நாடியும் கால அகாலத்துக் கற் சிற்பம்.      பக்கத்தில் இருந்த ஆண்பிள்ளையோடு   இறங்கும் வரை ஒரு சொல் உதிர்க்கவில்லை. பாவி, அந்த மன்னனும்  வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடக் கடன் கொடுக்கவில்லை.

பஸ்ஸை விட்டு இறங்கி வந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகப் போகிறது.  எனக்கு அந்த முகத்தை நினைக்க நினைக்கக் கஷ்டமாக இருக்கிறது.

கல்லைக்கட்டி  இன்னும்  எத்தனை பேரை வாழ்க்கை இப்படிக் கடலில் தாழ்த்திக்கொண்டே இருக்குமோ தெரியவில்லை.
-வண்ணதாசன்.

நா.முத்துக்குமார்

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்.
#நா_முத்துகுமார்

கடல்புறத்தில்-வண்ணநிலவன்

வண்ணநிலவனின் கடல்புரத்தில்

அதிகாரம் என்பதே ஒருவன் வாழ்வதற்க்கான பலத்தையும், மன திடத்தையும் தருகிறது. அந்த அதிகாரம் குறையும் போது அவன் வாழ்வதற்க்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முற்றிலும் அதை இழக்கும்போதோ கிட்டத்தட்ட நடைப்பிணமாகிறான். நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான அலுவலக அதிகாரிகள்/ஊழியர்களிடம் நாம் காண்பது, இதை உறுதிப்படுத்துகிறது. இது இவர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?. ஆட்சியாளர்கள், கலைத்துறையினர், வர்த்தகர்கள், விவசாயிகள், நெசவாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இது பொருந்துகிறது.

வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் புதினத்தில் இதுபோல் அதிகாரம் குறையும் ஒரு மீனவனுடைய குடும்பத்தார் வாழ்க்கை அந்த வட்டார மொழியில் சொல்லப்பட்டிருகிறது. இங்கே அவனது அதிகாரமாக இருப்பது அவனுடைய மீன்பிடி படகும், அதை செலுத்தக்கூடிய உடல் வலிமையும் தான். இயந்திரப்படகுகள் வருகையால் நாட்டுப்படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் அடையும் பின்னடைவும் இதில் ஊடுபாகாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வூர் மீனவர்களின் காதல்,காமம், பாசம், ஏமாற்றம், அரவணைப்பு ஆகியவை இக்கதை மாந்தர்கள் மூலம் நம்மனதில் படியவைக்கப்படுகிறது.

எனக்கு கடலும் மீனவர்களும் அவ்வளவு பரிச்சியமில்லை. தென் தமிழ்நாட்டில் ஒரு விவசாய கிராமத்தில் பிறந்த எனக்கு விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமே அறியப்பட்டிருந்தது. சிறு விவசாயத்திற்க்கு செய்யும் செலவு ஒரு வழிப்பாதை ஆனபின், வாரிசுகள் வேறு இடத்திற்க்கு பிழைப்புக்கு சென்றபின் மீதமுள்ள பெண்ணின் திருமணத்திற்க்கோ, விட்டுப்போன சீர்வரிசைக்காகவோ பூர்விக நிலத்தை விற்க டவுனுக்கு வரும் பலரை பார்த்திருக்கிறேன், பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் இருக்கும் பாலமுருகன் பிரியாணி ஸ்டாலில். பதிவு முடிந்தவுடன் அங்கே அரை பிளேட் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தார்க்கு பார்சல் வாங்கி டவுன் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போதுகூட அவர்கள் முகத்தில் சலனம் இருக்காது.

மறுநாள் காலை உடல் கடிகாரம் ஐந்து மணிக்கு எழுப்பிவிட்டுவிட, வழக்கம் போல் கருவிகளை எடுத்துக் கொண்டு நிலத்தை நோக்கி நாலடி வைத்தவுடன் உண்மை உறைத்து தோள் துண்டால் வாயைப் பொத்தி கேவும் போது, மனதளவில் இறந்துவிடுவார். அடுத்து யார் பாலமுருகன் கடையில் பிரியாணி சாப்பிடப்போகிறார்கள் என்பது ஊர் சாவடியில் வருத்ததுடன் பேசிக்கொள்ளப்படும். அதே போல் இங்கும் கதையின் நாயகன் மிக்கேல் குரூஸ் தன் பூர்விக படகையும் வீட்டையும் விற்றுவிட்டு மகளுக்கு விருப்பமானதை வாங்கிக்கொண்டு வருவதும் அதை தொடரும் நிகழ்வுகளும் குறிஞ்சி,முல்லைக்கு மட்டுமல்ல நெய்தலுக்கும் இதே நிலைதானோ என வருந்த வைக்கிறது.

எங்கள் ஊர் பக்கம் சேனைத்தண்ணீர் வைப்பது என்னும் பழக்கம் உண்டு. பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இருக்கும் என நினைக்கிறேன். பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கலந்த நீரை கொடுப்பதுதான் அது. அதை கொடுப்பவருடைய குணாதியசங்கள் குழந்தைக்கு வரும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே நன்கு படித்த, வாழ்வில் வெற்றியடைந்தவர்களையே சேணை வைக்கச் சொல்வார்கள். சில சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவனை சிலாகிக்க இப்படி சொல்வார்கள் "அவனுக்கு சேணை வச்சது யாரு?, நம்ம கிழக்கு வீட்டுக்காரரில்ல" என்று. இங்கும் சேணை வைக்கிறார்கள். சர்க்கரை நீரை அல்ல, கடல் நீரை. ஆணாயிருந்தால் அவனுக்கு கடலில் பிழைப்பதற்க்கான உடல் வலுவையும், பெண்ணாய் இருந்தால் எந்த கஷ்டத்தையும் தாங்கும் மனத்திடத்தையும் கடலம்மா தருவாள் என்ற நம்பிக்கை இங்கே. உண்மையிலேயே இங்கே பெண்ணுக்குத்தான் அதிக மனதிடம் வேண்டும். சென்றவன் என்ன ஆனான்? என ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமே?

கடல்புரத்தில் வரும் பெண்களில் முக்கியமானவர்கள் மிக்கேல் குருஸ்ஸின் கடைசி மகள் பிலோமினாவும், அவளது தோழி ரஞ்சியும். இருவருக்கும் காதல் தோல்வி இருக்கிறது. ஆனால் அதை கடக்கும் மன உறுதியும் வாய்க்கப்பட்டவர்கள். இவர்களை வண்ணதாசன் வர்ணிக்கும் விதம் அலாதியாக இருக்கும். அவர்களை வர்ணிக்கும் போது சொல்வார், "பிலோமியின் உடல் நிறம் கறுப்பாக இருந்தாலும் உதடுகள் மின்னும் கறுப்பாக இருக்கும்" என்று. பொதுவாக தமிழர்களுக்கு வெள்ளை நிற பெண்ணும் பிடிக்காது, கறுப்பு நிற பெண்ணும் பிடிக்காது. மாநிற மேனி என்றால் மயங்கி விடுவார்கள். எங்கள் ஊர்பக்கம் அதை புதுநிறம் என்பார்கள். அந்த நிறத்தில் முகம் லட்சணமாக இருக்கும் பெண்கள் திருவிழா காலங்களில் தாவணி அணிந்து வளைய வரும் போது ஊரே வெறிக்கும். ஆனால் முழு கறுப்பு என்றால்???. பிலோமி சொல்கிறாள் " ரஞ்சி உன் சிரிப்புல என்னவோ இருக்குடி, இல்லாட்டி இந்த கறுப்பிய யாரு கட்டிக்கிருவா?" இதைப் படித்தபின் யோசித்துப் பார்த்தேன் கடைசியாக நம்மை கவர்ந்த கறுப்பான பெண் யார்? டி ஆர் ராஜகுமாரி,ரோஜா முதல் சினேகா வரை புதுநிறத்து பெண்கள் தானே?. நாம் ரசிக்கும் அழகுகூட சமுதாயத்தின் கருத்தாகவே நம்மீது படிகிறதோ?. சுற்றம் நட்பு என எல்லோரும் கறுப்புதான் அழகு என கற்பித்திருந்தால் நமது ரசனை மாறியிருக்குமோ?

இயந்திரப்படகுகள்வந்ததால் தொழில் நசிந்து வெளியேறுகிறார்கள் நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள். உடனே நமக்குள்ளே கேள்வி வருகிறது. ஏன் இவர்கள் வருங்காலத்தை மனதில் வைத்து வாழ்க்கை நடத்தியிருக்க கூடாது? இந்த எண்ணமே பொருளை மட்டுமே பார்க்கும் பலருக்கும் முதலில் தோன்றும். இயந்திரப்படகுகள் இல்லாமல் வல்லத்தில் மட்டும் சென்று எல்லோரும் மீன் பிடித்தால்? யாவரும் நலமாய் இருக்கலாமே?. அரிய மீன் வகைகள் அழியாது.சுற்றுச்சூழல் நிலை நிறுத்தப்படும். இதைதான் அவர்கள் கடலம்மா கோபித்துக்கொள்வாள் என்ற எளிய மொழியில் சொல்லுகிறார்கள். உண்மையில் இருப்பதோடு அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வதில் வரும் தலைமுறைக்கு உலகத்தை தருகிறார்கள். தொழிலில் இம்ப்ரூவ்மெண்ட் என்று பேச ஆரம்பிக்கும் போது, நாம் செய்யும் எந்த முயற்சியும் சூழலை பாதிப்பதாகவோ இருக்கும் சமனிலையை சிதைப்பதாகவோதானே முடிகிறது. அதற்கு பாதிப்பில்லமல் செய்ய வழி இருந்தாலும் பொருள் கண்ணை மறைக்கிறதே. அதற்க்கு இந்த கடல்புரத்து வல்லத்துக்காரர்கள் எவ்வளவோ மேல்.

கதையில் வரும் மற்ற பாத்திரங்களான செபஸ்டி,ஐசக்,சிலுவை,வாத்தி, பவுலுபாட்டா போன்றவர்களின் பிம்பத்தை குறைவான வர்ணனைகள் மூலமே ஆசிரியர் நம் மனதில் ஏற்றிவிடுகிறார். அந்த கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அவர்களின் இயல்புக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.
கதையின் மையக்கதாபாத்திரமான மைக்கேல் குருஸ்ன் மனைவி மரியம்மை- ஊர் வாத்தி இடையேயான இலை மறை காய் மறை உறவு, அது தெரிந்திருந்தும் குறைந்துவிடாத மைக்கேலின் மனைவி பாசம், பிலோமிக்கும் தரகருக்கும் இடையே நடக்கும் ஒளிவுமறைவில்லாத பேச்சு, ரஞ்சிக்கும் அவளது கொளுந்தனுக்கும் இடையேயான பாசம் என பல காட்சிகளின் மூலம் அம்மக்களிடையே இருந்த நீக்கு போக்கான தன்மையும் வெளிப்படுகிறது.
இந்த கதை நடக்கும் காலகட்டம் 1970 என்பதால் இதில் சொல்லப்படும் படகின் விலை 350 ரூபாய், திருவிழாகாசு 10 பைசா என்பதெல்லாம் நம்மை ஆச்சரியப்படுத்துபவை. மேலும் அக்காலத்திலேயே ஆசிரியர்கள் உபதொழில்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. அப்போதைய முக்கிய லாபம் தரும் வியாபாரங்களில் ஒன்றாக சைக்கிள் ஸ்பேர்பார்ட்ஸ் கடை சொல்லப்படுகிறது.

இந்த நாவலின் சிறப்பே, இதில் வரும் சம்பவங்கள், குடும்பத்தில் நடக்கும் வாத பிரதி வாதங்கள் எல்லாம் எந்த சமூகத்திற்க்கும் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் அமைந்திருப்பதேயாகும். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் கடலைப் பார்த்தேன். இன்றுவரை கடற்கரையை தாண்டி எதையும் யோசித்ததில்லை. ஆனால் இதை வாசிக்கும்போது, கடல்புர மக்களின் பேச்சுவழக்கு, உடல்மொழி ஆகியவை என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. இனி எப்பொழுதாவது மீனவர் குடியிருப்பு பக்கம் போனால் அங்கே குரூஸையும், பிலோமியையும், பவுலுபாட்டாவையும் என் கண்கள் தேடும்.

நூலின் பெயர் : கடல்புரத்தில்

ஆசிரியர் : வண்ணநிலவன்

துயில்-எஸ்.ரா

வாதைக்கும், மீட்சிக்கும் இடையிலான பயணம் பற்றி பேசும் தன் *துயில்* நாவல் பற்றி *எஸ்.ராமகிருஷ்ணன்*.

💥நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்று தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.   

💥உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும் கண்ணால் காணமுடியாத பேராறு நமது ரத்த ஓட்டம். உடலினுள் எண்ணிக்கையற்ற புதிர்கள், வியப்புகள், நுட்பங்கள் மிகுந்த பேரொழுங்குடன் அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை நினைவுபடுத்துகிறது.   

💥கடவுளின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன் நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றப்பட்டுவருகிறது. ஒவ்வொரு நோயிற்கும் நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது. மருத்துவத்தின் வரலாறு மகத்தானது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.  

–எஸ்.ராமகிருஷ்ணன்

கிறுக்கல்கள்-ரா பார்த்திபன்

“ நினைச்சா பொறையேறும்”
நிஜமாயிருந்தா...

நீ செத்திருக்கனுமே
இந் நேரம்

நீ அழிக்க
காத்திருக்கிறது
ஈர மணலில்
என் பெயர்.

கிழக்கே போகும் ரயிலில்
நான் போகும்போது
மேற்கே செல்லும் தந்திக்கம்பமாக
எதிர்திசையில் நீ சென்றால்
எங்கு...எப்போது...சந்திப்பது?

உருகிப்போகவே
விரும்புகிறேன்
சுடராய்
நீ இருக்க...!!!

அழுதுகொண்டே
இருப்பேன்
நீ
அணைக்கும்வரை....!!!

விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்

கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!

உள்ளுக்குள்
நீ
இருப்பதால்
உயிரோடு
நான்
இருக்கிறேன்..!

யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக
கனவனாக..
ஏன் கடவுளாக
நான் மட்டுமே
உன் காதலாக...!!!

விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?

மெய் மறந்து

பொய் சொன்னாயா?
என்னை
காதலிக்கிறேன் என்று.

படைத்தல்
காத்தல்
அழித்தல்
கா..த...ல்..!!!

கண்னைத் திற
உலகம் தெரியும்

கண் மூடு
நான் தெரிவேன்.

பார்த்தல் பேசுதல
அணைத்தல்,
சுவைத்தல்
நீக்கியும்
நினைத்தல், நீடித்தல்
.....காதல்!

எரித்தாலோ
புதைத்தாலோ
புதையாமல்
எரிந்துகொண்டிருக்கும்
உன்
நினைவுத் தீ.!

நம்
நினைவில்
நான்..!!!

என்னை கிறுக்கனாக்கிய
கிறுக்கியே....................................
................................................................................
................................................................................
புரியுதாடி?

நான் .
. யானாலும்
நீ மட்டும் ,

கிழக்கில் விளக்காய்
நீ சிரிக்க

மேற்கில் இருட்டாய்
நான் ரசிப்பேன்!

அதெப்படி..
உள்ளில் இருக்கும் உனக்கு
உருவம் மட்டும்
தொலைவில்...!!!

அடியே..!!
’Total அம்னீசியா’ உனக்கு
‘Selective அம்னீசியா’ எனக்கு
நீ மட்டும்
நினைவில்.

என்ன எழவு விஞ்ஞானமோ?
என் Chest X-ray ல்
உன் Photo.

ரோஜா
மோதி
முள்ளுக்கு எலும்பு
முறிவு..!

காதல்
கல்யானத்தில் முடியாது

ஆமாம்,
என் காதல்
உன் கல்யாணத்தில் முடியாது.

நன்றி
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன்.

Thursday 27 October 2016