Sunday 30 January 2022

வங்காரி மாத்தாய்

சூழலை கெடுக்கும் தலைமுறை வேறு, அதற்கான விலையைத் தரும் தலைமுறை வேறு. பிரச்சனை அதுதான்

-வங்காரி மாத்தாய்

Saturday 29 January 2022

பிங்க்

நம்ம சொசைட்டியில் கடிகாரம் தான் ஒரு மனிதரின் (பெண்ணின்) நடத்தையைத் தீர்மானிக்கிறது

-பிங்க் திரைப்படத்தில் அமிதாப்

Wednesday 26 January 2022

நடராஜன் பாரதிதாஸ்

ஊரெல்லாம்
என்னை
சாதியை சொல்லியும்
தொழிலைச் சொல்லியும்
திட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஓர் அரசனைப் போல
நான் கையில் ஆயுதங்களுடன்
மன்னித்து கொண்டேயிருக்கிறேன்
ஒரு கடவுளைப் போல

-நடராஜன் பாரதிதாஸ்

ஹென்றி மில்லர்

முழுமையான உண்மைகள் என்று எதுவும் கிடையாது..
எல்லா உண்மைகளும் கிட்டத்தட்டத்தான்

-ஹென்றி மில்லர்

Monday 24 January 2022

info

கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, பல செய்முறைகளைத் தாண்டி வந்தா உற்பத்தி(manufacturing).
குறைந்த பட்ச இயந்திரங்களோ அல்லது இயந்திரங்கள் இல்லாமல் தனியாகவோ அல்லது சிலர் சேர்ந்து உருவாக்கினால் அது தயாரிப்பு (making)

#info

Tuesday 18 January 2022

ஹெலன் கெல்லர்

தாண்ட வேண்டிய தடைகள் ஏதும் இல்லாவிட்டால் மனிதனின் அற்புதமான அனுபவம் மகிழ்ச்சியின் ஒரு பகுதியை இழக்கும் 

கடக்க வேண்டிய இருட்டு பள்ளங்கள் இல்லாவிட்டால் மலை உச்சியை அடையும் போது பாதி சந்தோஷம் கூட இருக்காது 

-ஹெலன் கெல்லர்

யானிஸ் வருஃபாக்கிஸ்

நாம் உறுதியாக நம்பி வந்தவை எல்லாம் சுக்கு நூறாக சிதறிப் போகும் போது ஏற்படக்கூடிய தீவிரமான தடுமாற்றத்தை போன்று வேறு எதுவும் நம்மை மனிதனாக்குவதில்லை

-யானிஸ் வருஃபாக்கிஸ்

Monday 17 January 2022

தென்றல்

இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த
பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

-தென்றல்

Wednesday 12 January 2022

யுகபாரதி

நினைவுகள் பாறாங்கற்களைப் போன்றவை.அவற்றை எங்கேயேனும் இறக்கியே ஆகவேண்டும். இதனை பாறாங்கற்களைச் தூக்கிச்சுமக்கும் துணிவிருந்தால் பாரத்தை பிறிதொருவர் தலைமாற்றிக்கொள்ளலாம். நினைவுகள் பாறாங்கற்களே ஆயினும், சமயத்தில் பூக்களாகவும் மலர்ந்துவிடுபவை. வாழ்வையே வாசமாக்கும் அந்தப் பூக்கள் ஒருநாளும் உதிர்வதேயில்லை

-யுகபாரதி

Saturday 8 January 2022

யாத்திரி

இங்கு தான் கடைசியாக சந்தித்தோம் இங்கை கடக்கும் போதெல்லாம் கடைசியாக சந்தித்ததை சந்திக்கின்றோம்.

-யாத்திரி

அரசு பதில்

மனிதர்களில் இரு வகை
ஒருசாரார், கல்யாணம் செய்து கொண்டதால் கஷ்டப்படுகிறார்கள்.
மற்றவர்கள்,கல்யாணம் செய்து கொள்ளாததால் கஷ்டப்படுகிறார்கள். எந்த வகை கஷ்டத்தை தேர்ந்தெடுப்பது என தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கே உண்டு

-அரசு பதில்

Friday 7 January 2022

அரசு பதில்கள்

கடவுள் ஏன் கல்லானார்?

பூவாயிருந்தால் வாடிப் போய்விடும்.பிராணியாக இருந்தால் ஓடிப்போய்விடும்.
பொன்னாக இருந்தால் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். நாளைக்கும் இருப்பார் என்று நம்பும் வகையில் அவர் கல்லாக இருக்கிறார்

-அரசு பதில்கள்

கல்யாண்ஜி

இன்றும்
நடந்துவிட்டுத்தான் வந்தேன்
எல்லாவற்றையும்
கடந்துவிட்டு வந்தது போல
இருக்கிறது
அமைதியாக,
கொந்தளித்துக் கொண்டும்

-கல்யாண்ஜி

Thursday 6 January 2022

கலீல் ஜிப்ரான்

பயணம் செய். ஆனால், யாரிடமும் சொல்லாதே...

அழகான காதல் கதையைப் போல் வாழ். ஆனால், யாரிடமும் சொல்லாதே...

மகிழ்ச்சியாயிரு. ஆனால், யாரிடமும் சொல்லாதே...

ஏனென்றால்

மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள்.

- கலீல் ஜிப்ரான்

Wednesday 5 January 2022

சிவபாலன் இளங்கோவன்

பெரும் சமுத்திரத்தில் தொலையும் சிறு காகிதம் போல நாமும் இந்த இணையத்தில் காணாமல் போய்விடுகிறோம்

-சிவபாலன் இளங்கோவன்

Monday 3 January 2022

மகுடேஸ்வரன்

"இதுவும் கடந்து போகும்
என்று இராதே!
முதலில் வீழ்த்தும்
பின் மிதிக்கும்
உன் சுவடழிய தேய்க்கும்
பிறகு தான் கடந்து போகும்..."

-மகுடேஸ்வரன்

இக்கிகை

ஜப்பானில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே 'கேன்பாரு' (Canbaru)எனும் ஒரு ஜப்பானியச் சொல்லை சொல்லி வளர்க்கிறார்கள். அதன் பொருள்

விடா முயற்சியைக் கைவிடாதே” எது உன்னுடைய முழுத் திறமையோ  அதை நன்றாகச் செய்வதிலே முழு கவனஞ் செலுத்து என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!

-இக்கிகை

Sunday 2 January 2022

மெகாபிக்ஸல்

மெகாபிக்ஸல் megapixel என்பது டிஜிட்டல் கேமராக்களின் தெளிவுத் திறனைக் (resolution) குறிப்பது.

பிக்ஸல் என்பது ஒரு படத்தை உருவாக்க உதவும் நிறங்களின் தகவல் அடங்கிய புள்ளிகளைக் குறிக்கிறது.

பிக்ஸல்களின் எண்ணிக்கையையே ரெஸலுயூசன்.கிடையாகவும் நிலைக்குத்தாகவும் உள்ள பிக்ஸல்களின் (640X480) இது எடுத்துரைக்கப்படும்.

ஒரு மில்லியன் (10 இலட்சம்) பிக்ஸல்களின் (pixels) எண்ணிக்கையையே மெகா பிக்ஸல் எனப்படுகிறது.

உதாரணமாக 7.2 மெகா பிக்ஸல் கேமரா என்பது 7,200,000 பிக்ஸல்கள் கொண்டுகொண்டது.பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தரம் அதிகரிக்கும்.

ஒரு டிஜிட்டல் கேமரா நிலைக்குத்தாக 2048 பிக்ஸல்களையும் கிடையாக 3072 பிக்ஸல்களையும் உருவாக்குகிறது.

அதாவது மொத்தம் 6,291,456 (2048 X 3072) பிக்ஸல்களை உருவாக்கிகிறது. எனவே அதன் தெளிவுத் திறன் 6.3 மெகாபிக்ஸல் என நிர்ணயிக்கப் படுகிறது.

-படித்தது

நோவாலிஸ்

ஊகங்கள் வலை போல 
அதை வீசுபவர்கள் 
தாங்கள் விரும்புவதைப் பிடித்துக் கொள்கிறார்கள்

 -நோவாலிஸ்

சார்லஸ் பீர்ஸ்

சூழல்களால் சமநிலை இழந்த மனம்,நம்பிக்கை அற்ற நிலைப்பாட்டிலிருந்து நம்பிக்கைக்கு உகந்த உறுதியான தளத்தை நோக்கி நகரத் துடியாய்த் துடிக்கிறது.
அத்தகைய நகர்வின் உபகாரணிகளே சிந்தனை என்பதும் அறிவு என்பதும்

-சார்லஸ் பீர்ஸ்

Saturday 1 January 2022

கல்யாண்ஜி

என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல

-கல்யாண்ஜி

ஆண்டன் பெனி

அவசரத்தில் 
பொட்டு வைத்துப் போனாள் மகள் 
அதற்கு நேராக 
என் புருவங்களை 
நகர்த்திக் கொண்டேன்

-ஆண்டன் பெனி