Wednesday 29 December 2021

நிலாகண்ணன்

குட்டி யானையில் சாமான்களை
ஏற்றிக்கொண்டிருக்கிறேன்.
பெரிய யானையாய் இருக்கிறது
சொந்தவீட்டுக்கனவு..! 
                                     -நிலாகண்ணன்

பத்தாம் பசலி

‘பத்தாம் பசலி’ என்பதற்கு என்ன அர்த்தம்?

  ‘பசலி’ எ ன்ப து உருது சொ ல். வி ளை நி லம் குறித்த ஆண்டுக் கணக்கு. வருவாய்த் துறையால் பின்பற்றப்படுவது. அதாவது, விளைநிலம் குறித்த அரசு கணக்குகளில் பயன்படுத்தப்படும் நில வருவாய் ஆண்டு. ஆடி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது.

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜூலை முதல் ஜூன் வரையிலான காலம் என இது வரையறுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் பத்து வருடங்களை ‘DECADE’ என்கிறார்கள் அல்லவா? அது போல பத்து ஆண்டுகளை குறிப்பதற்கு ‘பசலி கணக்கு’ என்று பெயர்.

 ஆனால், காலத்துக்கு ஏற்ற புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல் பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு; பழமைவாதம் இருக்கிறதே! அப்படி தற்காலத்து விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முந்தைய விஷயங்களை மட்டுமே பிரதானமாக பேசுகிறவர்களுக்கு நடைமுறையில் நம்மால் கொடுக்கப்படும் பட்டம்தான் ‘பத்தாம் பசலி’! 

-படித்தது

ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ்

நம்பிக்கை என்பது எப்போதும் ‘பெரிய’ ஒன்றின் பொருட்டு பல சிறிய விஷயங்களை நம்ப மறுப்பதேயாகும். 

-ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ்

ஞானக்கூத்தன்

தலைவர்களேங்!
தமிழ்ப் பெருமக்களேங்!
வணக்கொம்!
தொண்ணூறாம் வாட்டாத்தில்
பாசும் வாய்ப்பந்த்தந்தமைக்கு
மகிழ்கின்றேன்!
இன்றாய்த் தினம் கண்ணீரில்
பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினைக் காண்கின்றோம் நாம்.வண்ணாரப் பேட்ட கிள
சார்பில மால

-ஞானக்கூத்தன்

Saturday 25 December 2021

கல்யாண்ஜி

தானாக
அந்தத் தண்ணீர்க் குவளை சரிந்து
தரையில் பெருகியது நீர்.
நானாக மீண்டும் ஒரு
குவளையைச் சரித்தேன்.
சரிந்த பிறகு அழகாய்ப் பெருக
நீராய் இருக்க வேண்டும்
அதுவும் தரையில்

-கல்யாண்ஜி

Friday 24 December 2021

இவோ ஆண்ட்ரிச்

எது காயப்படுத்தவில்லையோ, அது வாழ்க்கை அல்ல.
எது கடந்துபோகவில்லையோ, அது மகிழ்ச்சியல்ல.

- இவோ ஆண்ட்ரிச்

இறையன்பு

வெற்றி என்பது விமானப் பயணமல்ல;அது கால் கடுக்கும் நடைப்பயணம்.ஏறியவுடன் நினைத்த இடத்தில் இறங்கிவிடும் மாயக் கம்பளமல்ல தலைமைப் பொறுப்பு.அது கையளவு கடந்தால் முழமளவு சறுக்கும் முன்னேற்றப் பாதை.

-இறையன்பு

Thursday 23 December 2021

ஹெகல்

எதார்த்தம் அறிவுப்பூர்வமானது

அறிவு எதார்த்த பூர்வமானது

-ஹெகல்

Monday 20 December 2021

ஹராரி

ஒரு கிராமத்தின் அளவுக்கு சுருங்கிப் போயுள்ள சர்வதேச உலகம் நம்முடைய தனிப்பட்ட நடத்தையின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் அதிக அளவு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் மட்டுப்படுத்துகின்றன.மறுபுறம்
சின்னஞ்சிறு அசைவை கூட அடுத்தவர்க்கு தெரிவிக்கின்றன

-ஹராரி

ஓஷோ

வாழ்வதன் மூலம் அறிவு வளர்ந்தால் அது விவேகம். வாழ்வதன் மூலம் உன் இருப்பு வளர்ந்தால் அது புரிதல். வாழாமலேயே நீ சேர்த்து வைப்பது அதிகமானால் அது அறிவு

-ஓஷோ

Sunday 19 December 2021

கல்யாண்ஜி

கல்யாணப் பந்தியில்
தலைவாழை இலை அருகே
தண்ணீர் பாட்டில்.
காணாமல் போய்க் கொண்டிருக்கிறது
கல் உப்பும்
கங்கை கொண்டான் நதியும்

-கல்யாண்ஜி

Thursday 16 December 2021

ஓஷோ

பணிவைக் குறிக்கும் Humble எனும் சொல் humus எனும் வார்த்தையிலிருந்து வருவது. humus என்றால் மண்.எந்தப் பகட்டும் இல்லாதது.அந்த வார்த்தையே human,humanity க்கு வேர்ச்சொல்.

பணிவுள்ளவனாகும் போதே மனிதனாகிறாய்.
பகட்டற்றவனாகிறாய்.

-ஓஷோ

லின்யுடங்

தேநீரில்
இயல்பிலேயே
ஏதோ ஒன்று இருக்கிறது
அது -
அமைதியாகச் சிந்திக்கும் உலகத்துக்கு
வாழ்க்கையை அழைத்துச் செல்கிறது.

-லின்யுடங்

இறையன்பு

பேச்சு தங்கத்தைப் போன்றது. அதை அதிகம் பயன்படுத்தும் போது மங்கித் தகரமாகி விடுகிறது

-இறையன்பு

Monday 13 December 2021

ஆபிரகாம் லிங்கன்

சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யுங்கள்! முதலில் சின்ன சின்ன தவறுகளை சரி செய்யுங்கள்! Compound effect படி நீங்கள் தினமும் செய்யும் சின்ன சின்ன மாற்றம், காலப்போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் வழி செய்யும்!

-ஆபிரகாம் லிங்கன்

புத்தர்

எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ, அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான் வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை.

புத்தர்

Sunday 12 December 2021

பாரதி ஜிப்ரான்

தரைமீது என்ன கோபமோ..!
எப்போதும் தண்ணீரிலேயே
வாழும் நிலா

-பாரதி ஜிப்ரான்

பாஷோ

எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்க கூடாது.உள்மனதை நேரடியாகப் பேசு.. எண்ணங்களை கலைய விடாமல் நேராகச் சொல்

-பாஷோ

Wednesday 8 December 2021

தங்கம் மூர்த்தி

கதிரவன் அழகு

நாம் அதனருகே செல்லாதவரை.

மின்னல் அதனினும் அழகு

அது நம்மருகே வராத வரை’

–தங்கம் மூர்த்தி

படித்தது

குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாயா 
தேநீர் உன்னைச் சூடாக்கும் 

வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கிறாயா தேநீர் உன்னைக் குளிரச்செய்யும்

 பெருங்குழப்பத்தில் இருக்கிறாயா 
தேநீர் உன்னை ஆற்றுப்படுத்தும் 

படபடப்பாக இருக்கிறாயா 
தேநீர் 
உனக்குள் அமைதியைப் பாய்ச்சும்.

-படித்தது

Monday 6 December 2021

ஆண்டன் பெனி

மகனுக்கும் எனக்குமான
சதுரங்க விளையாட்டு
இப்படியாக துவங்குகிறது.
அவன் சதுரங்கத்திலும்
நான் அவனிலும் கவனித்திருக்க
ஒருபோதும் தோற்றதில்லை இருவரும்.

-ஆண்டன் பெனி

Saturday 4 December 2021

மார்க் கியூபன்

இந்த யுகத்தில் அறிவு, மற்றும் தகவல் எல்லார்க்கும் சமமாக தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அதை தேர்ந்தெடுக்கிறோமா என்றால்? அது தான் இல்லை.

-மார்க் கியூபன்

Wednesday 1 December 2021

இறையன்பு

இலக்கு,நோக்கம் என இரு விஷயங்கள் உள்ளன. 'மருத்துவர் ஆவேன்' என்பது இலக்கு,எளியவர்க்காக பணியாற்றுவேன் என்பது நோக்கம்.

எல்லோரும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.ஆனால் யாரெல்லாம் நோக்கத்தை நோக்கி பயணிக்கிறாரோ, அவர்களே இலக்கை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்

-இறையன்பு

ராமச்சந்திர குஹா

மனிதர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பசிக்கு இயற்கையை இரையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

-ராமச்சந்திர குஹா