Monday 31 July 2023

மனிதர்கள்


நாம் சந்தித்த அழகானவர்கள் பலரும் வீழ்ச்சியை, வாதையை, வலி மிகுந்த போராட்டத்தை, இழப்பை அறிந்தவர்கள். அவற்றிலிருந்து மீளும் வழியைக் கண்டறிந்தவர்கள். அத்தகைய மனிதர்களிடம் வியப்பும் பாராட்டுணர்வும் நுண்ணுணர்வும் இயல்பாகவே மிகுந்திருக்கும். வாழ்க்கை கொடுத்த பலத்த அடிகள் வழியாகப் பரிவையும் சக மனிதர்கள் மீது அக்கறையையும் மென்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்துவார்கள். 

ஒரு நாளில் யாரும் அழகாவதில்லை. 

- வளர்ச்சியின் இறுதிப் படிநிலை, எலிசபெத் குப்ளர் ராஸ்.

'காலையில் ஒன்று ஆவர், கடும்பகலில் ஒன்று ஆவர்;மாலையில் ஒன்றுஆவர் மனிதரெல்லாம்'-ஓளவையார்

Sunday 30 July 2023

நன்றாக உடுத்திய பெருவயிறான பணக்காரனுக்கும், மோசமாக உடுத்திய படிப்பறிவற்ற ஏழைக்கும் இடையில் நீதியை நிர்ணயிக்கும் போது இயற்கையாகவே நீதிமன்றம் முதலில் சொன்னவனுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது-இ.எம்.எஸ்.நம்பூதரிபாட்

"நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்"- ஆல்பெர் காம்யு

"வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லே தான்... ஆனா நரகமா ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்..."- ஜெயகாந்தன்,

Friday 28 July 2023

தற்கொலை என்பது எளிதல்ல அரளிவிதை மையாய் அரைத்து நீர்கரைத்து குடித்துவிடலாம் குடல்பிரட்டி வயிறு எரியும் சையனைடுகளுக்கு வாங்குதிலேயே பிரச்சினைகள் வரும் தூக்குப்போட்டுக்கொண்டால் வாய்கோணி முகம் கோரமாகும் தூக்கமாத்திரை இவற்றில் எளிது காப்பாற்றும் முயற்சியிலிருப்பவர்கள் கண்டதையும் கரைத்து வாயில் ஊற்றக்கூடும் தற்கொலைக்கு எளியவழி என்பது காரணங்களோடு சமரசம் கொள்வதுதான்-லதாமகன்

என்.சொக்கன்

அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!

 கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்! 

ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:

 ‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’ இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல,

 ’ஆலத்தைப்போ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண். 

இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’

 அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’

 இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!

-என்.சொக்கன்

"உதட்டை இறுக்கிச் சிரிப்பது, சுழித்துச் சிரிப்பது, தாடையைக் கீழே இறக்கிச் சிரிப்பது, பக்கவாட்டில் பார்த்துச் சிரிப்பது, எப்போது பார்த்தாலும் சிரிப்பது" என ஐந்து வகை சிரிப்புகள் சொல்லப்படுகின்றன.-படித்தது

எக்காரணத்தைக் கொண்டும் உன்னுடைய மேலதிகாரியைக் காட்டிலும் ஒளிர நினைக்காதே-அதிகாரத்திற்கான 48விதிகள் நூலில்

சொற்களைக் காட்டிலும்மௌனத்திற்கு அஞ்சுகிறோம்,ஒரு மௌனம் தனக்குள்எல்லா விபரீதங்களின் சாத்தியங்களையும்புதைத்து வைத்திருக்கிறது.எய்யாத அம்புஎந்தத் திசையில் வேண்டுமானாலும் பாயக்கூடும்அபாயங்களைப் போல.-யாத்திரி

Thursday 27 July 2023

ஈசாப்


மதிய வேளையில் மலை உச்சிக்குச் சென்ற ஓநாய் தன் நிழலை பார்த்து, மிக பிரம்மாண்டமான உருவத்தை பெற்றிருக்கும் நாம் ஏன் இனி புலி,சிங்கத்துக்கு பயப்பட வேண்டும் என எண்ணியது. அப்போது அந்த வழியாக வந்த சிங்கம் அதன் மேல் பாய ஓநாய் உயிரை இழந்தது.போலிச் சொற்களால் மிகவும் உயர்வாக கருதுபவர்களின் முடிவு இதுதான்.

-ஈசாப்

பிடித்தவைகளோடு இருக்க நேரம் பறித்துக் கொண்டிருக்கிறான்தன் அவதியின் உலகிலிருந்து.பிடித்தவைகளும் அதற்கேயுரிய அவதிகளின் உலகிலிருந்து கரம் நீட்டுகின்றன..-திருச்செந்தாழை

Wednesday 26 July 2023

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி, தான் தான் சுவரையே தாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுமாம்.அதைபோல சிலர் வேலை செய்யும் கம்பெனியை தான் தான் தாங்குவதாக சிலர் நினைத்துக் கொள்வார்கள்..-சுகபோதானந்தா

அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்-தலாய்லாமா

படித்தது


'ஒரு விசயத்தைப் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பார்க்கும் விசயமும் மாறுகிறது...' என்கிறது குவாண்ட இயற்பியல். எல்லைக்குட்பட்ட நம் அறிதல்களால், நம்மை சிறிதினும் சிறிதாக சுருக்கிக்கொள்ள உதவுகிற கதைகளையோ, செயல்களையோ நாம் நம்ப விழைகிறோம்.

 'இந்த உட்சுருங்கலுக்கு காரணம் நானல்ல, இதுவே வாழ்வியல்போக்கு' என எதன்மீதோ பொறுப்புசுமத்தி நம்மை நாமே நியாயப்படுத்துகிறோம். மானுட அகம் எந்நிலையிலும் சுருங்கப்படுவதன் பொருட்டு படைப்படைந்தது அல்ல.

 அறிதலால்... அமைதியால்... அடைதலால்... கணத்திற்குக் கணம் அது விரிவுகொள்வது.  ஆகவே, நம் சின்னஞ்சிறு அகத்தை, பெரிதினும் பெரிய இப்பிரபஞ்சத்தோடு பொருந்த வைக்கக்கூடிய கதைகளும் செயல்களுமே நமக்குத் தேவை. அதைத் தேடி கண்டடைவதே ஒவ்வொரு மனிதரின் பிறப்புநோக்கம்.

-படித்தது

Monday 24 July 2023

நிலவு சண்டையிடுவதில்லை;அது யாரையும் தாக்குவதில்லை;அதற்கு கவலை என்பதில்லை:அது எதையும் நசுக்க முயல்வதில்லை.நிலவு அதன் போக்கில் இயங்குகிறது, ஆனால் அதன் இயல்பே, மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நிலவைத் தவிர, வேறெந்த ஒன்றால் ஒரு முழு கடலையும் கரையிலிருந்து கரைக்கு இழுக்க முடியும்? நிலவு, அதன் இயல்புக்கு உண்மையாக இருக்கிறது. அதனால், அதன் சக்தி ஒருபோதும் குறைவதில்லை.- டெங் மிங்-டாவோ.

நீங்கள் இளமையாக இருக்கும்போது வாழ்க்கை இன்னமும் தொடங்கவில்லை என்றே நம்பிக்கொண்டிருப்பீர்கள். உங்களது வாழ்க்கை அடுத்த வாரமோ அடுத்த மாதமோ அடுத்த ஆண்டோ விடுமுறைக்குப் பிறகோ ஏதேனுமொரு கணத்தில் தன்னிச்சையாகத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கருதுவீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததைப் போல வாழ்க்கை ஆரம்பமாகியே இருக்காது. நீங்கள் விரும்பிய தருணம் மலர்ந்திருக்காது. சட்டென உங்களுக்கு வயதாகியிருக்கும். உங்களிடம் எஞ்சுவதென்னவோ ஒற்றைக் கேள்விதான். ‘இத்தனை காலமாக என்னிடம் இருந்தது என்ன? காலத்தின் இடைச்செருகலா? சிதறுண்ட பொழுதுகளா? பொருளற்ற பைத்தியக்காரத்தனமா? என்னிடம் வழங்கப்பட்டிருந்தது என்ன?’- டக்ளஸ் கூப்லேண்ட்.

திருச்செந்தாழை


அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.

அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.

தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.

இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.

கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.

-திருச்செந்தாழை

Sunday 23 July 2023

ஓஷோ


எல்லாம் அவசரம்

 ஒரு சிறிய நகரத்தில் கார் விபத்து ஏற்பட்டது.

அதில் பலியானவரை  சுற்றி ஒரு பெருங்கூட்டம்  கூடி இருந்தது.

அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர்,அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது.

"இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான்"என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும் ,தயவு செய்து வழிவிடுங்கள்.

உடனே,அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று,அவருக்காக வழி விட்டனர்.

நிருபர் அருகில் சென்றவுடன்,விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அது ஒரு கழுதை????????? 🙄🤔

இப்படிதான் மனிதன் எல்லாவற்றிருக்கும் அவசரப்படுகிறான்...!

- ஓஷோ

Saturday 22 July 2023

மனிதர்கள் தங்களைத் தொடர்ந்து 'அவதானிப்பதன்' மூலமாகவும் தொடர்ந்து 'மறுகண்டுபிடிப்பு' செய்வதன் மூலமாகவும் மட்டுமே கட்டற்ற நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும் மனக்கொந்தளிப்பான வாழ்க்கை சூழலிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்-யுவால் நோவா ஹராரி

படித்தது


முற்றிலும் அடையாளம் சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு காலத்தில் அடையாளங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது  சந்தையில் தியானம் செய்வது.  எவ்வளவு அமைதிக்கு முயல்கிறோமோ அவ்வளவு இரைச்சலைத் திணிப்பதும், எவ்வளவு இரைச்சலிருக்கிறதோ அவ்வளவு அமைதி தேவையாகவும் ஆவது. டார்க்காவ்ஸ்கி, கலைஞனுக்குத் தேவை சமூக உரையாடல் இல்லை, தனித்திருப்பது என்கிறார். அவர் உத்தேசிப்பது தன்னைப் புனைந்துகொள்வதை விடுத்து தனித்திருந்து ஆராய்ந்துகொள்வதை. அறிவால் அல்ல, அறிவை அதைவிட பெரிய ஒன்றின் முன் தன்னிலையை மண்டியிடச்செய்துதான் கலையை உருவாக்க முடியும். அறிவை அங்குசமாக்குபவர் அந்த யானையை மண்டியிடச்செய்யலாம். ஆனால் யானையையே மண்டியிடச்செய்வதால் அங்குசம் ஒன்றும் அரிய ஒன்றாகிவிடுவதில்லை.
 
அறிவு நம்மை நோக்கி வரும்போதே நூறு கைகளையும் விரித்துக்கொண்டே வருகிறது. நம்மின் பகுதியாகவே மாயம் காட்டுவது. ரத்னாபாயின் ஆங்கிலத்தைப்போல. அறிவின் சிறு துளி போதும்,  சந்தையை வாங்கித் தருகிறேன் என்பது.  ஆனால் அங்குசத்தை வைத்திருப்பவனுக்குத் தேவை சந்தையல்ல. பகலில், சந்தையின் இரைச்சல் எட்டாத உயரத்தில் மிதந்து செல்ல ஒரு யானை. இரவில் தனிமையின் குளிருக்குக் கிழித்துப் போர்த்திக்கொள்ள ஒரு யானைத்தோல். சந்தையையே வாங்கினாலும் குத்தி மண்டியிட வைக்க யானையற்றவன் துயரம் தீராதது.
 
அங்குசத்தை அடைவதைவிட ஆயிரம் மடங்கு கடினம் தனக்கான யானையைக் கண்டடைதலும், அதைக் கிழித்துப் போர்த்திக்கொள்வதும்.

-படித்தது

யார் யாரோ வந்துஆறுதல் போல் ஏதேதோ சொல்லஇப்போது என்னிடம் இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்அவர்களிடம்எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்எஞ்சி இருந்தது-படித்தது

பழசெல்லாம் சோப்பு போட்டுக் கழுவின மாதிரி பளிச்சுன்னு பத்திரமாக நினைவில் இருக்க, காலையில் நடந்தது மறந்துபோவதுதான் மூப்பின் பிரச்னை.-சுஜாதா

Wednesday 19 July 2023

கற்பனை நிஜம்


உங்களின் கற்பனை' என்பது, நிழல்கள். உங்களின் அனுபவம் என்பது நிஜங்கள்.

உங்களின் கற்பனையில், இருப்பதை அனுபவிக்க, பழகுங்கள். அங்கு நிஜங்கள் தோன்றும். நிழல்கள் மறையும்.

அதாவது அனுபவித்தல், என்பது உணர்தல். ஒவ்வொன்றுடனும்' ஒவ்வொன்றையும், ஆழமாக உணருங்கள்.

அதாவது. அங்கு, நீங்கள் நீங்களாக' இருந்திடுங்கள்.

அதாவது, உண்மை, என்பதே நிஜம்.

எனவே உங்களுள் இருக்கும், நிஜமே, உங்களிற்கு நிஜத்தை காட்டும்.

எனவே உங்களின், கற்பனை என்பது ஒரு ஆக்கம்'. ஆனால் அது நிஜமா, என்பதில் உங்களிற்கு எந்த வித விடயமும் இல்லை. ஆனால் அது கற்பனையில், உள்ள விழிப்பு ' என்பதில் எந்த வித ஆட்சபனையும், இல்லை, என்பதே உண்மை.

"வெளிச்சம் வரும் போதெல்லாம், கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன" எனும் ஆதவனின் வரி நினைவுக்கு வருகிறது.

Tuesday 18 July 2023

படித்தது


காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரை !!

''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது. மீண்டும் மீண்டும் எழுகிறது. யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்த பிறகு தான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்து போன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
'ஒரு சரித்திரம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு சகாப்தம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு தியாக பரம்பரை முடிந்தது' என்று சொல்வார்கள் . எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வதுதான் உண்மையோ? என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப் பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார்.
மற்றவர்களையெல்லாம்  வாழவைக்க நினைத்த அந்த மனிதனை, வாழவேண்டிய விதத்தில் வாழ வைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து 'வாழ்க' என்ற  கோஷம் வானதிரக்கிளப்பி, அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.               
நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மை விட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப் புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை. அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும், யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை.சொல்ல வேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை  நமக்கு நாமே அழுது கொள்வோம். அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை இனி நாம் தானே அனுபவிக்கப் போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. 
இனி நம்மால் அவரை அவமானப்படுத்த  முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்...

Monday 17 July 2023

பிச்சைக்காரன்


நீளமான வாக்கியங்களில் தெளிந்த நீரோடை போல எழுதுவது ஆங்கில பாணி .. தமிழில் இந்த பாணி குறைவு..  ..  இயல்புத் தன்மை கெடாமல் நீளமாக எழுதுவதில், மாஸ்டர்  சாண்டில்யன்தான்... கவனியுங்கள்
--------------
இளமதியின் இளம் பாதங்களையும் தளிர் விரல்களையும் கடலரசன் தனது அலைக்கரங்களால் ஆசையுடன தழுவி தழுவி சென்று கொண்டிருந்தாலும் மாலைக்திரவன் அவள் பொன்னிற மேனிக்கு ஈடு கொடுக்க முடியாத தன் கிரகணங்களை ஈர்த்துக்கொண்டு வெட்கத்தினால் முகம் சிவந்து கடலுக்குள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்ததனால் தமது தோல்விககு பழி வாங்கும் பொருட்டு அவன கிரகணங்கள் கடல் நீரில் கலந்து அதன் ஓரப்பகுதிகளை சிவக்க அடித்து நீலக்கடலுக்கு சிவப்பு சேலையை போர்த்த முற்பட்டன.


*முற்றுப்புள்ளியே இல்ல.. தட் எவ்லோ பெரிய மாத்திரை மொமண்ட்

இவ்வளவு பேர் இருக்கும்இவ்வளவு கூட்டமான என் வாழ்வில்நீ மட்டும் ஏன்இல்லாது போனாய்?இருந்திருக்கலாம்தனிப்பட என்றில்லாவிட்டாலும்கூட்டத்தில் ஒருத்தியாகவாவதுஎவரையோநீ என ஒரு கணம்காட்சிப் பிழையாக மயங்கும் விதமாகவேணும்-மனுஷ்ய புத்திரன்

'சிலரோடு சிந்திப்பாய், பலரோடு பேசுவாய்'*பலரைக் கவனித்து அவர்கள் தகவல்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு.. முடிவுகளை எடுக்கும் போது முக்கியமானவர்களை அருகில் வைத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டும்".-பல்தசார்

ப.பி


படித்ததில் பிடித்தது

உதய கீதம் படம் . மோகன் சிறையில் . ரேவதி அவரை விரும்புகிறார் . பாடு நிலாவே . தேன் கவிதை என பாடல் எழுதினேன் . இதே வரியை மோகனும் பாடுவதாக எழுதினேன் . இளையராஜா யோசித்தார் . ரேவதி சிறைக்கு வெளியே இருக்கிறார் . நிலவை பார்த்து பாடுவது பொருத்தம்தான் . ஆனால் சிறைக்குள் இருக்கும் மோகன் பாடு நிலாவே என எப்படி பாடுவார் . அவருக்கு நிலா தெரியாதே என்றார் . நிலவொளி தெரியுமே என்றேன் . இசைஞானி சமாதானம் ஆகவில்லை . யோசித்தோம் . திடீரென அவர் முகத்தில் பரவசம் . ஒரே ஒர் எழுத்தை சேர்ப்போம் . பாடு நிலாவே என ரேவதி பாடட்டும் . பாடு(ம்) நிலாவே என மோகன் பாடட்டும் என்றார் . அருமை அண்ணா என உற்சாகமாக கை தட்டினேன் . ம் என்ற ஓர் எழுத்து அர்த்தம் பொருந்தியது . ரேவதி நிலவை பார்த்து பாடுகிறார் . மோகன் ரேவதியை முன்னிலைப்படுத்தி பாடுகிறார் . பாடல் வெற்றி பெற்றது . இப்போது இன்னொன்று தோன்றுகிறது . அது இசைஞானிக்கே தெரியாது . பாடும் நிலா பாலு என எஸ்பிபி அழைக்கப்படுகிறார் . அன்று ராஜா சேர்த்த மெய்யெழுத்து பாலுவின் அடையாளமாகி விட்டது

−மு.மேத்தா

Sunday 16 July 2023

நேரம்


மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப்பாண்டவரை தரிசித்தனர். முதல் நபரை பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறார்கள் என்றார் போப். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாக சுற்றிப் பார்க்க மாட்டீர்கள் என்றார்.

 அடுத்தவர் நான் மூன்று மாதம் தங்கப் போகிறேன் என்றார். அதற்குப் நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார்.பிறகு மூன்றாமவர் எனக்கு ஒருவாரம் தான்  விடுமுறை என்றார்.போப் சொன்னார்.. நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள் என்றார்.அதற்கு விளக்கமும் தந்தார்.. 

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனை பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறது பிறகு பார்ப்போம் என்று எதையும் முழுமையாக பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்றார். இது நேர நிர்வாகத்துக்கும் நேரம் மேலாண்மைக்கும் நிச்சயம் பொருந்தும்.

இனிய காலை

பா.வெ


"வாய்மொழி மரபில் நிறுத்தற்குறிகள் போன்ற அடையாளக்குறிகள் எதுவும் இருக்காது. இந்த அடையாளக்குறிகள் 'இன்மையை' ஈடுசெய்வதற்காக வாய்மொழி மரபில் 'Modulation' உபயோகப்படுகிறது. ஒரு ஆச்சர்யக்குறியை இட முடியாத இடத்தில் "ஹா.. "என்ற ஒரு ஒலி அதை ஈடுசெய்கிறது. கேள்விக்குறி இட முடியாத இடத்தில் "அப்படியா.. " என்ற ஒலி கேள்விக்குறியை ஈடுசெய்கிறது. அல்லது, தலைமாற்றாகச் சொல்ல வேண்டுமானால் Modulation ஐ ஈடுசெய்வதற்காக நாம் சில குறியீடுகளை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

என்னுடைய கதைகளில் நிறுத்தற்குறி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இந்த குறிகளை ஈடுசெய்யக்கூடிய சப்தமுறையை எழுத்துக்களின் வழியே உருவாக்க முடியுமா என்கிற பரிசோதனை முயற்சியாக நான் என்னுடைய புனைவுகளை அமைக்கிறேன்.

இந்த பரிசோதனைகளை நான் செய்வதற்காக வாக்கிய அமைப்புகளை அதற்குத் தகுந்தாற்போல மாற்றுகிறேன். இப்படி வாக்கிய அமைப்புகளை தகுந்தாற்போல மாற்றும்போது மொழியினுடைய சாத்தியப்பாடு அதிகமாகிறது. மொழி அதிகமாக வேண்டியிருக்கிறது. மொழியினுடைய திரவத்தன்மை அதிகமாகிறது. திரவத்தன்மை தொடர்ந்து எனக்கு நிகழ்வுகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது."

-புதுமைப்பித்தன் நினைவு விருது விழாவில் பா.வெங்கடேசன்

அன்பு என்பது அடைக்கப்பட்ட பறவைக்கு இடப்படும் இரையைப் போன்றதல்ல, அது அந்தப் பறவைக்காகத் திறந்து காட்டும் ஆகாசத்தைப் போன்றது-சிவபாலன் இளங்கோவன்

Saturday 15 July 2023

மெழுகுவர்த்தி


மெழுகுவர்த்தி-சக்கரவர்த்தி

மெழுகுவத்தி - என்பதே பிழையற்றது.

வத்தி - என்ற சொல் 'திரி' யைக் குறிக்கும்.

வதி - என்றால் தங்கு. (To dwell, remain, stay, abide).

வத்தி = எரியும் தீயினை நிலைக்கச் செய்யும் திரி, தீப்பற்றி எரியும் திரிப்பொருள்.

எனவே தீவத்தி, மெழுகுவத்தி, ஊதுவத்தி, கொசு வத்தி எனச் சொல்வதே பிழையற்ற பயன்பாடுகள்.

தீவத்தி > தீவட்டி.
தீவத்தி என்பதன் கொச்சை வழக்கே தீவட்டி .

வத்தி > வத்திக்குச்சி /வத்திப் பெட்டி.

சக்கர வர்த்தி போன்ற அயற்சொற்களின் தாக்கத்தால், பேச்சு வழக்கில் மெழுகுவர்த்தி, ஊதுவர்த்தி என்று பிழையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வத்தி, வர்த்தி இரண்டும் வெவ்வேறு பொருள் குறிப்பன.

சக்கரவர்த்தியில் உள்ள 'வர்த்தி' யானது வட்டப்பொருள் குறிப்பது.

மன்னனின் தேர் சக்கரத்தை உருவகப்படுத்தி அமைந்த சொல்லாகும். அதாவது ஆட்சி என்ற தர்மச்சக்கரத்தை உருளச் செய்பவன் என்ற பொருள் குறிப்பது - சக்கரவர்த்தி.

-படித்தது

ஜெமோ


இந்த உலகை அறிந்துகொள்ளுதல்,
பயன்படுத்துதல் என
அறிவியலின் இரண்டு விளைவுகள் உள்ளன.அறிவு பயன்பாடாக ஆகிறது,பயன்பாடு மேலும் அறிந்துகொள்ள தூண்டுதலை அளிக்கிறது. அறிவை அறிவியல் என்றும் பயன்பாட்டை தொழில்நுட்பம் என்றும் அழைக்கிறோம். 
இவ்வாறு தொடர்ச்சியாக அறிவும் பயன்பாடும் வளர்ந்ததே இன்றை நவீன உலகை உருவாக்கியது என்கிறார் ரஸல்

-ஜெமோ

Friday 14 July 2023

பூ


” மலர்ப் பண்பாடு “ - பூவுக்கு எத்தனை பெயர்கள்? Tamil Botany 

1 அரும்பு : காலையில் அரும்பிய நிலை

2 நனை - வெளியில் தெரியத்தொடங்கி வெளிச்சத்தில் நனையும் நிலை 

3 முகை –முத்துப்போல்ஆகும் நிலை 

4 முகிழ் – நறுமணத்துடன்முகிழ்த்தல் 

5 மொட்டு –கண்ணுக்குத் தெரியும் மொட்டு 

6 போது –மலரும் பொழுது காணப்படும்
புடைத்த நிலை

 7 மலர் – மலர்தல் செய்யும் நிலை 

8 பூ –முழுமையாகப் பூத்த மலர் 

9 வீ – தரையில் உதிரும் பூ 

10 பொதும்பர்– பூத்துக் குலுங்கும் நிலை. .

11பொம்மல் – தரையில் உதிர்ந்த புதுப் பூ

12செம்மல் – தரையில் உதிர்ந்த பூ சிவந்து அழுகும் நிலை.

”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்” என்று வள்ளுவர்  உருவகிக்கிறார். 

நாம் இன்று பூக்களை அந்த அளவுக்கு நுட்மாகக் கவனிக்கும் ஆற்றலை இழந்து
விட்டோம். அதனால் பூவின் பல பெயர் சொற்களை நாம் இழந்து வருகிறோம்.

-இந்திரன்

தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணி காகங்கள் எப்போதும் பறக்கின்றன.பிடித்துக் கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றனநம்பிக் கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன-இறையன்பு

ஆயிரம் துயர்களை எதிர்கொள்ளயானை பலம் போதும்.அன்பினால் வீழ்த்தப்படும் போது..சிற்றெறும்பின் திடம் கூடவாய்ப்பதில்லை.- ஜே.ஜே.அனிட்டா

Thursday 13 July 2023

இயற்கை மெழுகு கடினமான உடையும் பொருள்.ஆனால், அதில் கொஞ்சம் வெப்பத்தைச் சேர்த்தால், நாம் விரும்பும் வடிவத்தை அதில் ஏற்படுத்த முடியும். அதைப் போலவே பணிவையும், இனிமையையும் சேர்த்தால் யாரையும் நம் பக்கம் ஈர்க்க முடியும்-ஆர்தர் ஷோபன்

' எப்படி இருக்கீங்க?' என்ற கேள்விக்குசத்தி பொய் சொன்னார்'நல்லா இருக்கேன்'.' நீங்க எப்படி இருக்கீங்க:ஐயா?'சத்தி பதிலுக்குக் கேட்டார்.'நல்லா இருக்கேன் சாமி'நான் பொய் சொன்னேன்.இப்படித்தான் நாங்கள்ரொம்ப ரொம்பஉண்மையாக இருக்கிறோம்.-வண்ணதாசன்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!-கவிதாஎத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு.ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம் புதிதாய் உயிர்ப்பித்து விடுகிறது.ஒரு செண்பகத் தோட்டத்தின் தெற்கு மூலையில் அவன் காத்திருப்பு. காதலுக்காக சில மணித்துளிகள் காத்திருப்பதன் சுகத்தையும், சந்திக்க வராது போனவளிடத்துப் பிறக்கும் தவிப்பையும் எத்தனையெத்தனை வடிவிற்தான் சொல்லிப் பார்க்கிறான் பாரதி.காத்திருக்கிறான். பார்க்கும் இடங்களெல்லாம் அவளைப் போலவே தோற்றம் கொள்கிறது. இதையே மற்றொரு பாடலில் விரித்துக் கூறுகின்றான்.‘நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.’வானின் இடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார்’ என்று அவனுக்குள் சின்னதாய் ஒரு சிணுங்கல் எழுகிறது. காதலினால் உடல் கொதித்து வேதனை செய்கிறது. இது வேதனையல்ல! காதலின் பெருந்தவிப்பு!சட்டென்று அங்கிருந்து ஓடிச் சென்று அவளைக் காணவேண்டும் என்ற வேகம் வருகிறது. ஒரு அரசியைப் போல மிடுக்கோடு இருப்பவளை தனது வருகை நாணச் செய்திடுமோ என்ற அச்சமும் வருகிறது. அவ்வெண்ணத்தை அதே வேகத்தில் தடுத்துவிடுகிறான். ஒரு பெண்ணின் தன்னிலை மாறாது தன்னோடு வைத்துக்கொள்ள எத்தனிக்கும் காதல் அவனது.அன்றைய பொழுதில் காதலோடு கூடிப் பரவசப்பட முடியாதது தான் செய்த குற்றம் தானோ என தனக்குள் நொந்து நோகிறான்.இதே போல ஊரே உறங்கிக் கிடக்கும் தருணத்தில் தான் மட்டும் அனுபவிக்கும் காதல் வேதனையை, தவிப்பை குறுந்தொகைப் பாடலொன்றும் பாடியிருக்கிறது. அது அங்கே தலைவன் வராததையிட்டு தலைவி தோழிக்குச் சொல்லியது. பதுமனார் என்ற புலவர் எழுதியது.‘நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கள் முனிவின்றுநனந்தலை உலகமும் துஞ்சும்ஓர்யான் மன்ற துஞ்சா தேனே’ஆனாலும் பாரதியின் “இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ?” என்ற வார்த்தைகளுள் இருக்கும் உணர்வையும் உடல்மொழியையும் குறுந்தொகைப் பாட்டில் என்னால் பெறமுடியவில்லை என்பதே உண்மை.‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!’ – பிரிவாற்றாமையின் ஏக்கத்தை அவளுக்கு வலிக்காமல் சொல்வதற்கு இதை விடவும் வார்த்தையுண்டோ!கொடுத்துவைத்தவள் கண்ணம்மா!உண்மையில் யார் இந்தக் காதலி?‘வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலிபன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தனநின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே’என்று தன் கவிதைத்தமிழையும் காதலியென்றான். அவனுடைய கண்ணம்மா, பால் கடந்தவள், வயதெல்லை கடந்தவள், வரையறைகள் கடந்தவள், அளவீடுகளைக் கடந்தவள்.அவள் சிறுவாழ்வின் பேரோசை.ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

படித்தது


புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhovவிடம் ஒரு முறை "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.

"தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.

அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும்  உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். 

அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும். 

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."

Wednesday 12 July 2023

செய்யும் பணி எதுவானாலும் அதில் கரைந்து போய் உச்சத்தைத் தொடவேண்டும், மிகச் சிறந்த விளைவுகளைப் பெறவேண்டும் என்கிற கனவை வளர்த்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.-பா.ரா

பூலோக நரகம் என்பது யாது?அஃது இருப்புப்பாதை மூன்றாம் வகுப்பு வண்டித்தொடர்(அன்ரிசர்வ் கோச்)-திரு.வி.க

சல்லிசிறுமைக் கருத்தின் அடிப்படையில் அமைந்த சொல்லே... சல்லிப்பையன்/சல்லிப்பயல்! சல்லி வேர், சல்லிக்கல், சல்லிக்காசு, சல்லித்தனம், சல்லிசு, சல்லி(ஜல்லி) சல்லிப்பயல் முதலியபெயர்களில், சல்லி என்பது சிறுமைப் பொருள் குறிக்கும்.

ஆசைப்பட்ட பொருள் ஆசைப்பட்ட நேரத்தில் ஆசைப்பட்ட விதத்தில் கிடைக்காமல் போவது தான் வாழ்க்கையின் சுவாரசியம்!-பாலகுமாரன்

இரவு நேர சாலை விளக்கு


ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?

அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.

இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.

அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில்சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.

இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர்(LIGHT DEPENDING RESISTOR ) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE )எனப்படும் எல்இடி விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிர செய்கின்றது.

அதனால் இரவு 12 மணி நேரம் கூட எல். இ .டி பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது

-படித்தது

Monday 10 July 2023

ஆறுதல் பரிசு என்று ஒன்று உண்டு. அதைவிட மோசமான பரிசு இந்த உலகத்திலேயே கிடையாது. தோற்றவரை ஆற்றுவதற்காகத் தரும் இந்தப் பரிசு உண்மையிலேயே தோல்வியை நினைவுபடுத்துவதற்காகக் கொடுக்கப்படுவது. இந்தப் பரிசு பெற்றவரை யாரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அ.முத்துலிங்கம்

மது அருந்துபவர்கள் குடிக்க துவங்கும் முன் cheers என்று கூறுவது 'கம்பெனி கொடுத்ததற்கு நன்றி' என்று பொருள்-ஜி.எஸ்.எஸ்

ரயில் குறியீடு


பொருள் மயக்கம் என்னும் அழகு ❤

குறியீடுகள் நிறைந்தப் படம் என்று ”குறியீடு” என்கிறச் சொல்லை கடந்த 10-12 வருடமாக  இணையத்தில்  வைரலாகப் பயன்படுத்தி வருகிறோம்.இதன் பழைய மாடல் ”சிம்பாலிக்” (symbolic) என்கிற சொல்.பாலச்சந்தர் இதன் உலகக் காப்புரிமையை வைத்திருந்தார்.அவர்  படங்களில் பார்க்கலாம்.லோக்கலில் நாங்கள் இதை “டைரக்‌ஷன் காட்றது” என்போம்.😃வீட்டில் யாரவது இறந்தால் சுவர் கடிகாரப் பெண்டுலம் நின்று விடும்.வாழை மரம் தலை சாயும்.அவுட் அண்ட் அவுட் நாடகத்தனம் இருக்கும்.அப்போதைய டிரெண்ட்.

பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட  புகழ் பெற்ற எழுத்தாளர்களின்  சிறுகதைகளில் ரயில் நிலையம் ஒரு படிமமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்?அதைக் குறியீடாக சிலாகித்து இந்தப் புத்தகத்தில் "சில பொழுதுகள் சில நினைவுகள்” வெங்கட்சாமிநாதனும் பாவண்ணனும் உரையாடுகிறார்கள்.

குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி, சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்,யில்வே ஸ்தானம் – பாரதியார்,
விடியுமா – கு.ப.ரா.

மல்லேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெங்கட்சாமிநாதன் பாவண்ணன் உரையாடல் நடுவே இந்த ரயில் நிலையத்தைச் சிலாகித்து உரையாடல் நீள்கிறது.

”ஸ்டேஷன் ரயில் எல்லாமே  வலிமையானப் படிவம்.மறைமுகமா ஒரு மனிதனுக்குள்ள நடக்கிற டிரான்ஸ்ஃபர்மேஷனை ரொம்ப சுலபமா முன் வைக்க ஒரு எழுத்தாளனுக்குக் காலம் காலமா ஸ்டேஷன் சித்தரிப்புகள் ரொம்ப உதவியா இருந்திருக்கு”  வெ.சா.

குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி

புத்தரருக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைச்ச மாதிரி அந்த வாத்தியாருக்குக் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷ்ன்ல ஞானம் கிடைச்சிட்டுது……..அதுதான் பெரிய தரிசனம்.குமாரபுரம் ஸ்டேஷன்கிறதே  அந்த நேரத்துல ஒரு பெரிய குறியீடாயிடுது.அற்புதமான கதை.

ரயில்வே ஸ்தானம் – பாரதியார்

ஒரு கதைக்குரிய நுட்பத்தையும் கவித்துவத்தையும் இந்தச் சித்திரத்தில் வச்சிருக்காரு பாரதியார்.முஸ்லீம் இளைஞனுக்கு மூன்று பொண்டாட்டி.அதனால் வீட்டில் பிரச்சனை.ஒரு நாள் கனவில் அல்லா  மூணுல ரெண்டு பேரை மணவிலக்குச் செஞ்சு ஒருத்தியோடு வாழுன்னு சொல்லிட்டு போயிடறாரு.ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்துதான் யோசிப்பதாக கதை ஆரம்பிக்கிறது.
அழுகை துக்கம்.இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்றதுன்னு கதைச் சொல்லிக்கு ஒரே குழப்பம்.
தடுமாற்றம்.நல்ல வேளையா தொடர்ந்து பேச முடியாதபடி ரயில் வந்துடுது.அவனும் அதில் கிளம்பி போயிடறான். கதை முடிஞ்சுடுது.ரயிலும் ஸ்டேஷனும் சரி டிரன்ஸ்ஃபர்மேஷனை சுட்டிக் காட்டக் கூடிய குறியீடுகள்.முக்கியமான முடிவை நோக்கி வந்துட்டான் அவன்.ஆனால் இப்ப எடுக்கப் பட போகுதுங்கற சூட்சுமமா சுட்டிக் காட்டத்தான் ரயில்வே ஸ்டேஷன் பின்னணி.

(மேல் சொன்னக் கதையைப் பாவண்ணனுடன் இரண்டுப் பக்கத்திற்கு அலசுகிறார் வெ.சாவுடன்)

விடியுமா? கு.ப.ரா❤

இந்தச் சிறுகதையில் கூட ஒரு ரயில் பயணம் வருது.கணவன் இறந்துட்டார்னு தந்தி கிடைச்சதும் மனைவியும் அவள் தம்பியும் ஊருக்குக் கிளம்புகிறார்கள்.செத்துப்போன கணவனைப் பற்றிய ஞாபகங்கள் வந்துட்டே இருக்கு.எப்படா விடியும்னு இருக்கு.கணவன் உயிரோடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்னு இரு சாத்தியப்பாடு உருவாகுது.ஒரே குழப்பம்.ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்னு நின்னு போகுது.ஒரு பக்கம்  ரயில் பயணம் அதனுடைய விவரங்கள் பெட்டிக்குள்ள பயணம் செய்யக்கூடிய மற்ற பிரயாணிகளுடைய எதிர்வினைன்னு சொல்லிக்கிட்டே போறாரு.ஒரு கதையைப் பற்றி யோசிப்பதற்கும் அசைப்போடுவதற்கும்  ஒரு வாய்ப்பை அந்த பொருள்
மயக்கம் காலம்காலமாக தக்கவச்சிருக்குது.

சிலிர்ப்பு – தி.ஜா.(stunning one. என்னால் மறக்கவே முடியாத கதை❤👌)

ஒரு ரயில் பயணம் நம் கண்களையெல்லாம் திறந்துடுது……………..ஓடும் ரயிலில் பல விவரங்கள் சொல்லப்படுகிறது.சிறுமியின் கதையும் சொல்லப்படுகிறது

.(இந்தக் கதை ஆரம்பமே ரயில்வே ஸ்டேஷன் விவரிப்புதான்.உரையாடலில் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கிறது.இருவரும் கதையின் உள்ளடக்க சிலாகிப்பிற்குப் போய்விட்டார்கள் உரையாடல் முழுவதும்.

கதையின் ஆரம்பம்:( இது புத்தகத்தில் இல்லை.படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக)

// திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. //

வெ.சாவின் ரசனையில் மிகையும் உண்டு.சாதாரண விஷயத்தை இப்படி பில்ட் அப் கொடுப்பதாக.இப்போத் கதை,சினிமா,குறும்படம் எல்லாவற்றிலும் drill down & detailing லெஃப்ட் அண்ட் ரைட் வந்துவிட்டது.96 படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் கதையை ஒட்டிய  ஒவ்வொரு hidden element கண்டுப்பிடித்திருக்கிறேன்.

பாரதியார் கதையில் ரயில்வே ஸ்டேஷன் தவிர நிறைய விஷயங்கள் உண்டு.அது உரையாடலில் இல்லை.

நன்றி நாகராஜன்

இறந்தார் என்ற சொல்லுக்கு கடந்தார் என்பதுதான் பொருள். அதையேதான் ஆங்கிலமும் passed away என்கிறது. எங்கிருந்தோ வந்தார், இப்போது இந்தப் பூவுலகை கடந்தார் என்று இவ்வுலக வாழ்வை நீத்தாரை அச்சொல் சுட்டுகிறது-பழ.அதியமான்

இறந்தார் என்ற சொல்லுக்கு கடந்தார் என்பதுதான் பொருள். அதையேதான் ஆங்கிலமும் passed away என்கிறது. எங்கிருந்தோ வந்தார், இப்போது இந்தப் பூவுலகை கடந்தார் என்று இவ்வுலக வாழ்வை நீத்தாரை அச்சொல் சுட்டுகிறது-பழ.அதியமான்

காதல்-பைத்தியம்


புத்தக வாசிப்பு,புத்தக காதல் தொடர்பான சொற்களை பார்க்கும்போது..

Bibliophobia வேறு Bibliomania வேறு

முதலாவது புத்தகக்காதல்- அறிவை வளர்த்துக் கொள்ளுதல்.பின்னது புத்தகப் பைத்தியம்.புத்தகங்களை சேகரிப்பதற்காக வாங்குவது

-சுப்பாராவ்
வாசிப்பு போதை கட்டுரையில்

கார்னகி


நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். 

மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை. நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்? 

மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.

ஆண்ட்ரூ கார்னகி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தை உண்டு பணணியது.புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்? என்று கேட்டனர்.
கார்னகி சொன்னார், என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்றுபாருங்கள்!
அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.
கார்னகி சொன்னார் ,உங்களால் ஐந்து நிமிடம் கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட மனதுடன் நீங்கள் அமெரிக்காவை ஆள்வது எப்படி சரியாக இருக்கும்?நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப்படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும்

-படித்தது

Friday 7 July 2023

லுசர்ஸ்


தோல்வியுற்றவர்களை இன்று லுசர்ஸ் என்று அழைக்கிறார்கள். ஒருவன் கல்லறை காவலாளியை பார்த்து லுசர் என்று சபித்தான். 'விதியை மீற முடியாமல் ஆயிரக்கணக்கான தோல்வியுற்றவர்கள் மத்தியில் நீ நிற்கிறாய் என்பதை மறக்காதே. நீயும் காலத்திடம் தோற்று போய் இங்கே வர தான் போகிறாய் லுசர்.'

Wednesday 5 July 2023

லூயிமால்


ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் செயல்பாடு பற்றிய ஓர் எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற நடைமுறை வடிவத்திற்கும் இடையில் எப்பொழுதும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் நாம்மீண்டும் மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.  துவழாத சிறுமுயற்சிகளின் ஒருங்கமைவே மனித வரலாறு..."

-லூயி மால்

இலக்கிய உலகில் எதிரிகளைத் தேடி ஒருவர் செல்ல வேண்டியதில்லை. தன் வேலையை அமைதியாகச் செய்துகொண்டிருந்தாலே எதிரிகள் தன்னால் உருவாகி வருவார்கள்!-சுந்தர ராமசாமி

Tuesday 4 July 2023

நீதிபதியாக இருந்த முல்லாவிடம் ஒருவன் ஓடி வந்தான்... அய்யா... எனக்கு சொந்தமான பசு மாடு உங்க வயலில் புகுந்து நாசம் ஆக்கிடுச்சு... என்றான்..முல்லா சொன்னார்.. இதற்கு பசு என்ன செய்யும்... அதுக்கு பகுத்தறிவு இல்லை..பசுவுக்கு சொந்தக்காரன் தான் தண்டிக்கப்பட வேண்டியவன்.. அபராதம் கட்ட வேண்டியவன் என்றார்.ஜட்ஜ் அய்யா..அவசரத்தில் மாத்தி சொல்லிட்டேன்..உங்க பசு, என் வயலை நாசம் ஆக்கிடுச்சு என்றான் அவன்..யோசித்த முல்லா சொன்னார்.. அந்த பீரோவில் நாலாவது அடுக்கில் , மூன்றாவதா ஒரு பெரிய ஊதாஃபைல் இருக்கே ,,அதையும் பக்கத்தில் இருக்கும் சட்ட புத்தகத்தையும் எடுங்க... கொஞ்சம் ஆராய வேண்டி இருக்கு

அம்மா


ஒரு நிருபர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கேட்டார்: 
உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடன் வாழ்கிறார்?  ஏன் அவளுக்கு வீடு கட்டக்கூடாது?

கிறிஸ்டியானோ ரொனால்டோ:

என் அம்மா எனக்காக தன் உயிரை தியாகம் செய்து என்னை வளர்த்தார். நான் இரவில் சாப்பிடுவதற்காக அவள் பசியுடன் தூங்கினாள். எங்களிடம் பணம் இல்லை. அவள் வாரத்தில் 7 நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் என் முதல் கால்பந்து உபகரணங்களை வாங்க கிளீனராக வேலை செய்தாள்.

நான் ஒரு வீரராக முடியும், என் முழுமையான வெற்றி அவளுக்கு அர்ப்பணிக்கப்
பட்டுள்ளது. நான் வாழும் வரை, அவள் எப்போதும் என் பக்கத்தில் இருப்பாள், அவளுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தருவேன்.அவளுக்கான அடைக்கலம் மற்றும் என் மிகப் பெரிய பரிசு நான்.

பணம் மக்களை செல்வந்தர்களாக மாற்றாது உண்மையில் சிலர் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்களிடம் இருப்பது பணம் மட்டுமே. வாழ்வில் பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதில் உண்மையான செல்வம் காணப்படுகிறது.

இந்த உலகத்திலே படிச்சுத் தெரிஞ்சிக்கிறது கொஞ்சம்.பட்டுத் தெரிஞ்சிக்கிறது கொஞ்சம்தெரிஞ்சிக்காம இருக்கிறது ஏராளம்-தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Monday 3 July 2023

ராமன் விளைவு


ராமன் விளைவு என்ற ஆய்வுக்காக சி வி ராமனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை பெறுவதற்கான கடிதங்கள் அவருக்கு கிடைப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு பல முட்டுக்கட்டைகளை போட்டு பார்த்தது. கடைசியில் வேறு வழி இன்றி அவரை அனுமதித்தது. ஒரு நிபந்தனையுடன்..

ராமன் பரிசு பெறும் போது வேறு
எதை பற்றியும் பேசாமல் பரிசினை மட்டும் பெற்று வர வேண்டும். ஆனால் அந்த மேடையில் ராமன் அவர்கள் "இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடும் விடுதலை வீரர்களுக்கு இந்த பரிசை நான் அர்ப்பணிக்கிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டு வந்தார்.

 அதனால் தான் ராமன் விளைவு ஆய்வு முடிவை வெளியிட்ட
தினமான பிப்ரவரி 28ஆம் தேதியில் அவரை பெருமைப்படுத்தும் விதத்தில் இந்தியா "தேசிய அறிவியல் தினமாக" அறிவித்துக் கொண்டாடி வருகிறது

ஒரு நல்ல சிறுகதை என்றால் எழுத்தாளர் ஓர் அடி முன்னே நிற்பார்.வாசகர் பின்னே தொடர்வார்.வாசகரால் எழுத்தாளரை எட்டிப் பிடிக்கவே முடியாது. அதுதான் நல்ல சிறுகதை-அ.முத்துலிங்கம்

மனதின் வாலை நிமிர்த்தும் யத்தன விளைவுதான் அகப்போராட்டம்-பாதசாரி

Sunday 2 July 2023

அறிவியல் அறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தார். மேடையில் இருப்பவர்கள் பிரஞ்சு மொழியில் பேசினார்கள்.இவருக்கு பிரஞ்சு மொழி தெரியாது. என்ன பேசுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வரிசை தள்ளி அவருக்கு அறிமுகமான ஒரு அம்மையார்அமர்ந்திருந்தார் அவருக்கு பிரஞ்சு மொழி தெரியும். அந்த பெண்மணி கைதட்டியபோது எல்லாம் அதை பார்த்து இவரும் கைதட்டினார். நிகழ்ச்சி முடிந்தவுடன் சின்னஞ்சிறுவன் அவர் அருகில் வந்து.. என்ன தாத்தா.. நிகழ்ச்சியில் உங்களை பாராட்டி பேசிய மத்தவங்களை விட நீங்க பலமா கைதட்டுனீங்க என்றான் இதைகேட்ட பிராங்கிளின் வெட்கப்பட்டு போனார். ஒருவரை பார்த்து அவரைப் போலவே செய்கிறபோது ஏற்படும் பிரச்சனை இதுதான் -படித்தது

மே.இ தீ


இந்து ஆங்கில இதழில் சில நேரங்களில் மிகவும் ரசிக்கும்படியான headlines வைப்பாங்க. ஒரு சமயம் மேற்கிந்திய அணியுடன் தொடர்ந்து தோத்துக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, தீடீரென ஒரு முக்கிய மேட்சில் வென்றது. அதை பற்றிய செய்தி தலைப்பு : 'The Empire strikes back' :) 
(70களில் வெளியான ஸ்டார் வார்ஸ் படங்களில் ஒன்று இந்த தலைப்பு )

உட்பொருள் : ஆங்கில சாம்ராஜ்ஜியம் ஒரு காலத்தில் ஆண்ட நாடு மே.இந்தீஸ் !!

Saturday 1 July 2023

யட்சன்


கேள்விகள் யட்சன்
பதில்கள் தருமன்

தூங்கும்போது கண்ணை மூடாமல் இருப்பது எது?
மீன்

பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
முட்டை

தன்னுடைய வேகங்காரணமாக வளர்வது எது?
ஆறு

நோயாளிகளுக்கு நண்பன் யார்?
மருத்துவன்

காற்றைவிட வேகமானது எது?
மனம்

பொன்னைவிட மதிப்புடையது எது?
அறிவு

எதை விடுவதன் மூலம் பிறர் அன்பை பெறமுடியும்?
ஆணவத்தை விட்டுவிட்ட மனிதன் மற்றவர்களின் அன்பை பெறுகிறான்

மனிதன் எதனால் அளக்கப்படுகிறான்?

அவனுடைய நடத்தையால்

சரியான பாதையை எவ்வாறு அறிவது?

விவாதங்களினால் அல்ல  ஆசிரியர்கள் வழியாக அல்ல. தனிமையான சூழலில் அமைதியான மனநிலையில் தன்னை உள்முகமாக பார்க்கப் பார்க்க சரியான பாதை புலனாகும்

 ⁃ மகாபாரதம் மாபெரும் விவாதம்  பழ. கருப்பையா   2014

விவேகானந்தர்


 இப்படிப் பேசினார்

“ ஒருவன் பொய்யை நோக்கிப் போகிறான் என்றால் அதன் காரணம் உண்மை எங்கே இருக்கிறது என்பதை அவனால் காணமுடியாததுதான்.
ஒருவனை பொய்யிலிருந்து சரி செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு உண்மையை கொடுங்கள். அவன் ஒப்பிட்டு பார்க்கட்டும். உண்மையை கொடுங்கள் அதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது.
நீங்கள் சரியான உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே ஆகவேண்டும். எவையெல்லாம் நல்லவையோ, மகோன்னதமானவையோ அதன் கைகள் எல்லோருக்கும் நீளச் செய்யுங்கள். விளக்கு இருளைத் துரத்திவிடும். “

”மற்றவர்களின் அரண்மனை மீது விருப்பம் கொள்ளாதே. உனது குடில்களை கோட்டையாக்கு"-அம்பேத்கர்

உண்மையை தெரிந்து கொள் ஆனால் வெளிக்காட்டாதே.பின் அத்தனை பொய்களையும் ஆறுதலாய் கேள்.அதன் சுவாரஸ்யமே தனியானது....!!!-யாசகன்

சத்சங்கம் என்றால் ஒரு குருவுடன்-அறிந்திருக்கிற ஒரு மனிதருடன்- மிக அருகாமையில் இருத்தல் என்று பொருள்.நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே என்று மூதுரையில் குறிப்பிடுகிறார் அவ்வையார்.