Friday 30 June 2023

நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,ஆனாலும்ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்அதன் தொண்டையைஅடைத்திருக்கும் பாடல் போலஎன்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.-லொய்னாஸ்தமிழில் மோகனரங்கன்

பொய்யை சொல்கிறவன், கடவுளிடம் தைரியமாகவும்,மனிதனிடம் கோழையாகவும் இருக்கிறான்-பேகன்

நம்முடைய துக்கம் என்பது எப்போதோ நடந்த நிகழ்வுடைய நினைவின் துயர் மட்டுமே. தற்கணத்தில் அந்தப் பழைய நினைவை மீட்டுவதால் ஏற்படுகிற கவலையை மனச்சோர்வுடன் முடிச்சிட்டுக் குழப்பிக் கொள்கிறோம். நினைவைப் போலவே நினைவின் துயருக்கும் தொடர்ச்சியுண்டு-கோகுல் பிரசாத்

Thursday 29 June 2023

அவலாஞ்சி என்றால் நிலச்சரிவு என்று பொருள்.1800 களில் ஊட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுப் பகுதியே அவலாஞ்சி என அழைக்கப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து 2036 அடி உயரம் கொண்டது.

ஒரு நாள் என்பதும் சூட்கேஸ் மாதிரிதான்.சிலர் ஓரிடு ஆடை வைத்துவிட்டு மேற்கொண்டு இடமில்லை என்பார்கள்.சிலர் நேர்த்தியாக நிறைய துணிகளை அடுக்கி வைப்பார்கள்.அதில் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் அத்தனை வேலைகளையும் செய்துவிடலாம்-சுகபோதானந்தா

மாமன்னன்


மாமன்னன் விமர்சனம்
*மணி

மாரி செல்வராஜ் படம், உதயின் கடைசி படம், வடிவேலுவின் ரீ எண்ட்ரி,பகத்தின் வில்லத்தனம், ராசா கண்ணு பாடல் என ஏகத்துக்கும் ஒரு மாதம் முன்பே எதிர்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதைப் பார்ப்போம்

கதை

சேலம் காசிபுரம் தனித்தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் வடிவேலு. அவரின் மகன் உதய்.இளம்வயதில் தந்தையின் அரசியலால் சாதிப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பதற்காக தந்தையிடம் பல வருடங்களாக பேசாமல் இருக்கிறார் மகன். அதே ஊரில் மாவட்ட செயலாளராக இருக்கும் அழகம் பெருமாள் மகன் பகத் பாசில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்.

தான் ஜெயிக்க வேண்டும், தனது ஆதிக்கத்தை ஒவ்வொரு இடத்திலும் அழுத்தமாய் புரியவைக்க வேண்டும் எனும் மனநிலை உள்ளவர். அடிமையாய் நடத்தும் வடிவேலுவை சமமாய் நடத்த வேண்டும் எனும் உரிமையை எடுத்துகொள்ளும் சண்டையில் உதயநிதிக்கும்  பகத் பாசிலுக்கும் மோதலாய் உருவெடுக்கிறது. அரசியல் போட்டியில் இது பிரதிபலித்து இறுதியில் என்ன ஆனது என்பதை அழுத்தமாய் சொல்கிறது கதை

#ப்ளஸ்

*படத்தில் வரும் மூன்று காட்சிகள் முக்கியமானவை, சிறுவர்கள் கிணற்றில் இருக்கும் காட்சி, வடிவேலுவின் இயலாமை வெளிப்படுத்தும் காட்சி, பகத்துடன் மோதும் இண்டர்வெல் காட்சி இவை தரம்

*ஒடுக்கப்பட்ட பிரிவினரான வடிவேலுவின் உடல்மொழி நடிப்பும், பகத்தின் இயல்பான ஆதிக்க உணர்வும் பெரும் பலம்

*சாதாரண கதை சாமர்த்தியமான திரைக்கதையால் பாராட்டு பெறுகிறார் மாரி. ஏ.ஆர் ஆர் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் பவைக்கிறது

*யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்',

உனக்கு மேல இருக்கிறவங்ககிட்ட தோற்கலாம் தப்பில்ல, கூட இருக்கிறவங்ககிட்ட தோற்கலாம் தப்பில்ல, ஆனா உன்ன விட கீழ இருக்கிறவங்க கிட்ட தோற்பது மகாதப்பு

நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்', என்பன போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கிறது

*ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏக்களின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறது. இறுதிக்காட்சியில் வடிவேலுவின் எண்ட்ரீ சமூகநீதியை சுட்டிக்காட்டுகிறது

*மைனஸ்

*இடைவேளை வரை வரும் வேகமும் படபடப்பும் இரண்டாம் பாகத்தில் தடதடக்கிறது

*வடிவேலு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எங்கேயும் தனியாகவே செல்கிறார்.

*சாதித்தலைவர் கொலை, ஊர் முழுக்க எதிர்ப்பு..ஆனாலும் ஒற்றை வீடியோ தேர்தல் முடிவை மாற்றுமா?

*பகத்தின் சாதுர்யத்தை முறியடிக்க ஏதேனும் ஒரு விசயத்தை செய்திருக்கலாம். இறுதிவரை பகத்தின் காய்நகர்த்தல்களை ஒன்றுமே செய்ய முடியவில்லையா என எண்ண வைக்கிறது

சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தை இறுதிவரை அமர்ந்து பார்க்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

மாமன்னன் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

தஸ்தோயோவ்ஸ்கி



நிஜமான பாசத்தை வைத்தியசாலை வளாகத்திலும், கல்லறை படிக்கட்டுங்களிலும் மாத்திரம்தான் நான் காண்கிறேன். அன்புக்குறியவர்களை இறுதிக்கட்டத்தில் மாத்திரமே நினைவு கூறும் மனித சாதிகள் நாம்.!

 - தஸ்தோயோவ்ஸ்கி

மரணம் ஒரு விருந்தாளி; அறிவிப்போடு வரும்போது, மரியாதையின் சம்பிரதாயமான வெளிப்பாட்டோடு வரவேற்கணும். அதனுடன் மிகவும் பரிச்சயம் கொண்டவர்கள் கூட அதை அப்படித்தான் வரவேற்க வேண்டும்.ராணுவ நடத்தை விதி பரிபாஷையில் மௌனமும் நிலை குத்திய தன்மையும் மரணத்தின் மரியாதை வடிவங்கள்-ஆம்ப்ரோஸ் பியர்

Wednesday 28 June 2023

அறிவொளிர்தல்

பேச்சு




ஒரு மூக்கு கண்ணாடி விற்பவர் எப்படித் தன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது என மகனுக்கு சொல்லிக் கொடுத்தார் 

"மகனே கண்ணாடியை நீ முகத்தில் பொருத்தியதும் வாடிக்கையாளர் எவ்வளவு விலை என்று கேட்டதும் நீ 400 ரூபாய் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் முகபாவனையை உற்றுப் பார்க்க வேண்டும். அவர் முகத்தில் எந்தச் சுணக்கமும் இல்லாவிட்டால் அது ஃப்ரேமுக்கு மட்டும். லென்ஸுக்கு 400 ரூபாய் என சொல்ல வேண்டும். பிறகு இடைவெளி விட்டு அப்புறம் அவருடைய ரியாக்ஷனை பார்த்துவிட்டு அவர் எந்த வருத்தமும் காட்டாவிட்டால் ஒவ்வொரு லென்சுக்கும் என சொல்ல வேண்டும்."

 நாம் ஏன் ஏமாந்து போனோம் என்பதை பரிசீலித்தால் மிக இனிமையாக நம்மை வசீகரிக்குமாறு பேசிய சொற்கள் தான் அதற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளலாம் 

-படித்தது

குன்னூர் எப்படி வந்தது ? OOபேச்சு வழக்கினில் சில சொற்கள் தன்னியல்பாக வழங்கப்படும். மக்களுடைய உரையாடலில் அத்தகைய பல சொற்களைக் காணமுடியும். மேலோட்டமாகப் பார்க்கையில் அந்தச் சொல் தானாகத் தோன்றிய இடுகுறிச் சொல்லோ என்று தோன்றலாம். ஆனால், ஆராய்ந்து நோக்கினால் அச்சொல்லும் உரிய பொருள்பற்றியே தோன்றியிருப்பதை அறியலாம்.நம் வீட்டுப் பயன்பாட்டில் எண்ணற்ற பண்டபாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். பெரிய கலயங்கள் முதற்கொண்டு சிறுகுவளைகள்வரை இருக்கின்றன. அண்டா, குண்டா, சட்டி, பானை, போகணி, தேக்சா, கூஜா, குவளை, சம்படம் என்று அவற்றைப் பலவாறு அழைக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் விளிம்புப் பகுதிக்கு ‘வாப்பாடு’ என்று ஒரு பெயர் சொல்லுவார்கள். “அந்தப் போகணியை வாப்பாட்டைப் பிடிச்சுத் தூக்கு.”“அண்டா வாப்பாடுகிட்ட ஒடுங்கிப் போயிடுச்சு”இங்கே வாப்பாடு என்பது என்ன ? ஒரு பொருளின் வாய் போன்ற பகுதி. அந்தப் பொருளின் வாய்ப்படு பகுதி. ஈடுபடு என்பது ஈடுபாடு ஆனதுபோல, மாறுபடு என்பது மாறுபாடு ஆனதுபோல - வாய்ப்படு என்பது வாய்ப்பாடு என்று ஆகிறது. பேச்சுவழக்கில் அதுவே ‘வாப்பாடு’ என்று வழங்கப்படுகிறது.பிள்ளைப் பேறுற்ற பெண்களிடத்தில் வழங்கும் சொல் ‘மசக்கை’ என்பதாம். வயிற்றுள் பேறுற்றிருப்பதால் சோர்வாக இருக்கும். மயக்கமாக இருக்கும். மயக்கு + ஐ என்பதுதான் மயக்கை ஆகிறது. யகரம் பேச்சு வழக்கில் சகரமாகும். மயக்கை மசக்கை ஆகிவிட்டது. மயக்கை நிலையே மசக்கை.ஊர்ப்பெயர்களில் பலவும் பேச்சு வழக்கில் குன்னூர், குன்னக்குடி, குன்னாங்கல்பாளையம், குன்னத்தூர் என இருக்கும். இங்கே குன்னு என்பது என்ன என்று பலர்க்கும் கேள்வி இருக்கலாம். இதுவும் பேச்சு வழக்கில் மருவிய சொல்லே.குன்று என்பதுதான் பேச்சு வழக்கில் குன்னு என்று ஆகிவிடுகிறது. குன்றுகள் நிறைந்த மலையூர் குன்றூர் – குன்னூர். குன்றக்குடியே குன்னக்குடி ஆகிறது. குன்று + கல் சேரும்போது ஆம் சாரியை இடைப்படுகிறது. குன்றாங்கல்தான் குன்னாங்கல் எனப்படும். குன்னாங்கல்பாளையம். குன்றுகள் மிக்கிருக்கும் ஊரின் இடையே அத்துச் சாரியை பயின்றால் அது குன்று + அத்து + ஊர் ஆகும். அதுவே குன்றத்தூர் – பேச்சு வழக்கில் குன்னத்தூர். - கவிஞர் மகுடேசுவரன் (தினமலர் பட்டத்தில் வெளிவந்தது.)

சித் ரா


என்னம்மா வர்ணிக்கிறாங்க 😄😊

"கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்ந்த முகம் திங்களோ காணீர்"
- இது சிலப்பதிகாரம்.

".......கவிதைக் கனி பிழிந்த
சாற்றினிலே, பண் கூத்தெனும் இவற்றின் சாரமெல்லாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காய வைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

- இது பாரதி, குயில் பாட்டு

❤️❤️

Tuesday 27 June 2023

சுஜாதா


சுஜாதா

ஆண்களை விட பெண்கள் பொறுமைசாலிகள் என நினைககிறேன்...நெய்ல் பாலிஷ் போடுவது சரியான மடிப்புடன  புடவை கட்டுவது  ..மருதாணி வைப்பது என அவர்கள் பொறுமை பளிச்சிடுகிறதே?

அவர்கள் இத்தனையும் செய்யும்வரை காத்திருக்கும் கணவனின் பொறுமையை என்னவென்பது

ஒரு விவாதம் நீண்டு கொண்டே போகிறது எனில்அதில் பங்கு கொண்ட இரு தரப்பினரின் மீதும்குற்றம் இருக்கிறது என்பது பொருள்.-வால்டேர்

Saturday 24 June 2023

பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? -ராஜுமுருகன்

அடுத்த நாளுக்கான வெளிச்சத்தில் வானம் வெளுத்திருந்தது-லக்‌ஷ்மி சரவணகுமார்

தி.ஜா


எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும். எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும். கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும். காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வயித்துக்கு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும், எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சந்தோஷமாகத்தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கணும். பிடிவாதமா சிரிக்கணும். 

- தி. ஜானகி ராமன்

இருவர் வாதிடும் போது உண்மை காணாமல் போய்விடுகிறது. வாதத்தை முதலில் நிறுத்துபவனே உண்மையான அறிவுள்ளவன் .ஒரு விவாதத்தில் உண்மைக்காக நீ வாதிடுவதில்லை.உனக்காகவே வாதிடுகிறாய். -THOMAS CARLYLE

MGR அவர்கள் தன் வலது கையில் தான் கை கடிகாரம் அணிவார் , Seiko கை கடிகாரத்தின் பிரியர் ,யாருக்கும் பரிசு அளித்தால் Seiko watch யை தான் பரிசளிப்பார்.இறுதியில் அந்த வாட்ச்சுடன் தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது-படித்தது

முழுநிலவில் முத்துச் சிப்பிகள் பூரிப்படைந்து தங்கள் வாயைப் பூரணமாகத் திறக்கின்றன. அதைப்பார்த்த நண்டுகள் சின்னக்கல்லை எறிந்து அவை மறுபடியும் சிப்பியை மூடிக் கொள்ளாதவாறு செய்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன.அதிகமாக வாய் திறப்பவர்கள் நிலை இதுதான்-டாவின்சி

மகிழ்ச்சி என்பதுபூக்களுக்கிடையில்ஆடும் இலையின் உணர்வு!-மகுடேசுவரன்

Wednesday 21 June 2023

தெரிந்ததைச் சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள்.-பாரசீகப் பழமொழி

'எண்ணங்களை கவனி ;அவை சொற்களாகின்றன,சொற்களை கவனி; அவை செயல்களாகின்றன,செயல்களைக் கவனி; அவை பழக்கங்களாகின்றனபழக்கங்களைக் கவனி; அதை குணாதிசயமாகின்றன,குணாதிசயத்தைக் கவனி; அது உன் விதியாகிறது'-ஃப்ராங்க் அவுட்லா

ஆர்த்தசபை நூற்றொருவர்; ஆயிரத்து ஒன்றாம் புலவர்;வார்த்தை பதினாயிரத்தொருவர்*பத்தாயிரத்தில் ஒருவர்தான் சொல்ல வேண்டியதைச் சொல்லும் ஆற்றலுடையவர்-ஒளவையார்

Tuesday 20 June 2023

இயலாதவன்குழந்தைகளிருக்கிற வீடுகளில்இந்தவெறுங்கைகளை வைத்துக்கொண்டுநுழையாமலே இருந்திருக்கலாம்-கு.விநாயகமூர்த்தி

குப்பைமேடுகளுக்கும் மலையுச்சிக்கும், சாக்கடைக்கும் ஓடும் நதிக்கும் வித்தியாசமில்லாதது எண்ணத்தின் இயல்பு.பிறகு, ஓரளவு கட்டுப்பட்டு, திக்கும் நோக்கும் தெரிந்து,அதன் வழி போக முயலும்போது அதற்குச் சிந்தனையின் அந்தஸ்து ஏற்படுகிறது-லா.ச.ரா

காது



காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.

உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.

ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?

பைக் நிற்க்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.

ஒரு டெட்பாடியை நிற்க்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க்க முடிகிறது,

காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து திரிந்து மைக்ரோ நொடியில் உங்க மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.

10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை காது கேட்க்க போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,

முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து இறுதியில் காது கேட்க்கும் திறன் குறைந்து விடும்.

காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனது, மண்ணெண்ணெய் ஸ்டோவில் புலன் வைக்காமல் அப்படியே எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி போகும்?

அதே போன்று தான் அந்த காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே உங்களை கொன்று விடும் அவ்வளவு வலியுடனானதாக இருக்கும்.

அதை தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதை சுற்றி உள்ள சிக்கலான அமைப்புகளும்.

நீ நேசிப்பதை எல்லாம் சுதந்திரமாக விட்டுவிடு. அது உன்னுடையதென்றால் திரும்பி வரும். இல்லையென்றால் ஒருபோதும் வராது-ப.பி

நிர்மலா புதில்


எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில் நடந்தே
திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை.
இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில்பட்டு நீ வர வேண்டும்...

-நிர்மலா புதில்
(தந்தை-மகள் இடையில் நிலவும் பாசப்போராட்டம்)

Monday 19 June 2023

செளம்யா


நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும்  காழ்ச்சப்பாடு,என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்” 
என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். 

இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் 
நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒரு கட்டுரை" வேகத்தின் விலை "

கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப்ப பிடிக்கும்.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார். 

ஒருமுறை  ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது. 

பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தது. 

இனி அவரின் மொழியில் வாசியுங்கள். 

அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார். 

இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில்  வண்டி நிலை குறைந்தது.  இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது. 

வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன். அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார்.  அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.

கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார். 

பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்."

திடீரென காருக்கு குறுக்கே வந்த போது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.  

இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என் 
வண்டியில் ஏற்றிக் கொண்டேன். 

அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள். 

அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. 

அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில். 

மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது  மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.

ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.  கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார்.  கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார். 

 உங்க பேர் என்ன என்று கேட்டார்.  மம்முட்டி என்ற  பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை. எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.
 
என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.

அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து "இத டீ செலவுக்கு வச்சிக்க"என்று என்னிடம் தந்தார். 

என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டு 
என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.

அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள்.   அதை எதற்காக தந்தார் என்று இன்று
வரை எனக்கு புரியவில்லை. 

ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும்.  என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும். 

அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அனுபவங்கள் வாழ்வெனும்
வாழ்வில் மின்னும் நட்சத்திரங்கள்.

மம்மூட்டி


நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும்  காழ்ச்சப்பாடு,என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்” 
என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். 

இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் 
நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒரு கட்டுரை" வேகத்தின் விலை "

கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப்ப பிடிக்கும்.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார். 

ஒருமுறை  ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது. 

பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தது. 

இனி அவரின் மொழியில் வாசியுங்கள். 

அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார். 

இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில்  வண்டி நிலை குறைந்தது.  இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது. 

வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன். அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார்.  அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.

கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார். 

பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்."

திடீரென காருக்கு குறுக்கே வந்த போது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.  

இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என் 
வண்டியில் ஏற்றிக் கொண்டேன். 

அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள். 

அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. 

அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில். 

மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது  மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.

ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.  கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார்.  கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார். 

 உங்க பேர் என்ன என்று கேட்டார்.  மம்முட்டி என்ற  பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை. எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.
 
என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.

அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து "இத டீ செலவுக்கு வச்சிக்க"என்று என்னிடம் தந்தார். 

என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டு 
என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.

அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள்.   அதை எதற்காக தந்தார் என்று இன்று
வரை எனக்கு புரியவில்லை. 

ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும்.  என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும். 

அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அனுபவங்கள் வாழ்வெனும்
வாழ்வில் மின்னும் நட்சத்திரங்கள்.

Sunday 18 June 2023

'எதையும் முழுதாகப் புரிந்துகொண்டுவிடாதீர்கள். அது ஒரு ஆபத்து. புதிர்கள் இல்லாத வாழ்வில் சுவாரசியம் இல்லை. சுவாரசியம்தான் வாழ்வின் அர்த்தமே தவிர, தெளிவடைவது அல்ல. தீர்மானங்களுக்கு வந்து சேர்வதல்ல. -யதி (பா.ரா)

முகம் திரும்பா பிரிதல்கள்என்றேனும் நிகழும்நீ திரும்பும் கணமென்னும்எதிர்பார்ப்பை எப்போதும்பொய்யாக்கிப் போகும்உன் முகம் திரும்பாபிரிதல்கள்-செல்வராஜ் ஜெகதீசன்

மகேஷ்வரன்


எப்போதெல்லாம்இழந்த
அப்பாவைப்
பார்க்கவேண்டும்
எனத்தோன்றுகிறதோ
அப்போதெல்லாம்
கண்ணாடியில்
என்முகம் பார்க்கிறேன்
மூக்கில்
முக வாயில்
கன்னக்கதுப்பில்
காது மடலில்
தடிமனான கீழ்உதடில்
நெற்றியில்
முன்சொட்டையில்
ஏதேனும் 
ஒரு அடையாளமாய் அப்பாதெரிகிறார்

-மகேஷ்வரன்

Friday 16 June 2023

குரலாக இரு. எதிரொலியாக இருக்காதே.-இந்திரன்

ஹெமிங்வே


சிறந்த எழுத்தாளனின் 7 பழக்கங்கள்
-எர்னெஸ்ட் ஹெமிங்வே:
1 எழுதத் தொடங்கு. 
அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.
2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில்ஒரு மணி நேரமாவது எழுது.
3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.
4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதியதைத் தொடர்ந்து எழுதும்போது
முதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.
5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.
6 பென்சிலைப் பயன்படுத்து.
7 சுருக்கமாக எழுது.
நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை

Wednesday 14 June 2023

சிந்திப்பதென்பதுசிரமமானது,அதனால்தான் பலரும் உடனே தீர்ப்புக் கூறிவிடுகிறார்கள்.-கார்ல் யூங்

விவாதிக்கும் விஷயத்தில் எந்தவித அறிவுமற்ற ஒருவரிடம் கூட ஓரளவு விவாதிக்க முயற்சிப்பேன். ஆனால் அவரது அந்த அறியாமை திமிராகத் திரளும்போது நாம் விவாதத்திலிருந்து ஒதுங்கிவிடுவதே மாண்பு - ஷோபாசக்தி

உன் வாழ்க்கையில் யாரைச் சந்தித்தாலும் முதலில் அவர்களுடைய நிறைகள் என்னவென்று பார்.அந்த நிறைகளை எப்போதும் பாராட்டிப் பேசு.நிறைகளை மட்டும் பேசினால் பிறர் மகிழ்ச்சி அடைவர்.நீ சந்திக்கும் நபர்களிடம் எதாவது குறைகளை கண்டாலும் உன் மனதில் புதைத்துவிடு.நாளடைவில் குறைகள் மறையும்-ப.பி

ஒரு நல்ல நாவல், கதாநாயகன் பற்றிய உண்மையைச் சொல்கிறது.ஒரு மோசமான நாவல், கதாசிரியரைப் பற்றிய உண்மைகளைச் சொல்கிறது.-ஜி.கே.செஸ்டேர்ன்

Tuesday 13 June 2023

சொல்லின் வழியே வெளிப்பட மறுக்கும் அர்த்தங்களை காத்திருக்க விடுங்கள்.அதன் சிறகுகள் பொறுமையாக வளரட்டும்..-கவிதைக்காரன் இளங்கோ

கண்களை அகல திறந்து உனக்கு முன் இருக்கிற நிஜத்தைப் பார்த்து முடிவெடு. எதுக்கெடுத்தாலும் காகிதத்தைப் பார்த்து முடிவெடுக்காதே. அதெல்லாம் உன் முன்னோர்கள் எழுதியது. அவர்களும் உன்னைப்போன்றவர்கள் தான்.-கரமகடே

கோகுல் பிரசாத்


ஒரு கருத்தைச் சொல்லும்போது அது தன்னளவில் ‘வெளியேறி’விடுவதைப் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தக் கருத்தும் நானும் ஒன்றல்ல. ஒரு விஷயத்தில் தற்போதைக்கு என்னுடைய எண்ணம் இவ்வாறாக இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறேன். அதை வெளிப்படுத்தியதும் விலகிவிடுகிறேன். அந்தக் கருத்துக்கு எப்போது அடிமையாகிறேன்? நானும் கருத்தும் எப்போது ஒன்றாகிறோம்? அதற்காக வழக்காடத் தொடங்கும்போதுதான். 

விவாதத்திற்குள் புகுந்து என் கருத்துக்கு ஆதரவாக வக்காலத்து வாங்க ஆரம்பித்ததுமே ‘நானும் கருத்தும்’ என்கிற இருமை மறைந்து அந்த எண்ணமே ‘நான்’ என்றாகிவிடுகிறது. அதுவொரு தரப்பாக எஞ்சுகிறது. ஒரு தரப்பு உருவானதும் இயல்பாகவே அதற்கான எல்லையும் மறுதரப்பும் தோன்றிவிடுகின்றன. யார் சொல்கிறார்கள், அவர்களுடைய அதிகாரம் என்ன, பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா, பின்புலம் எத்தகையது, உள்நோக்கம் உண்டா என்பதைப் போன்ற சரடுகள் வழியாக உங்களது தரப்புக்கு பலமும் பலவீனமும் அமைகிறது. அதையொட்டிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. தீர்ப்புகள் முடிவாகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில் கருத்துகளைச் சொன்னதும் அதிலிருந்து உங்களைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். அதன் செல்வாக்கை அல்லது தாக்கத்தைச் சற்று விலகியிருந்து மதிப்பிடுவதற்குப் பழக வேண்டும். 

இப்படிச் செய்வதனால் நீங்கள் சொன்ன கருத்தின் மீது உங்களுக்கே உறுதிப்பாடு இல்லை என்றாகிவிடாதா? விவாதத்தில் பங்கெடுக்காமல் நழுவினால் அக்கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு பறிபோகாதா? 

மற்றவர் கருத்துக்குச் செவிமடுப்பதாலும் நிறை குறைகளை அலச முடியும். உங்களைத் (உங்கள் கருத்தைத்) தற்காப்பதற்கு முனையாமல் கட்டுப்படுத்திக்கொள்வதன் வழியாக வேடிக்கை மனநிலையைத் தருவித்து முன்னகர இயலும். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் விவாதத்தின் முடிவில் கட்சி மாறியவர்களோ சமரசப் புள்ளியை எட்டியவர்களோ எவருமில்லை என்பதே யதார்த்தம். மேலும், நீங்கள் தனித்துச் சிந்திப்பதன் மூலமாக மட்டுமே இன்னொரு கருத்தை வந்தடைவீர்கள். வக்காலத்து வாங்கி அல்ல. அப்படிச் சிந்திப்பதற்கான நீண்டகால கருவிகளையே நீங்கள் கணக்கில்கொள்ள வேண்டும். தேட வேண்டும். உடனடி எதிர்வினைகளால் மிகுதியான பலன்கள் கிடைப்பதில்லை.

-கோகுல் பிரசாத்

குமுலோ நிம்பஸ் என்கிற மேகத்தை ஒன்பதாம் மேகம் (cloud nine) என்பார்கள்.இது மகிழ்ச்சியில் திளைப்பதை சித்தரிக்குமாம்.காற்றின் சுழற்சியில் 36,000 அடி உயரே செல்லும்.மழையும் பொழியும்#info

Monday 12 June 2023

'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே' என்றார், ஆரிய படைகடந்த நெடுஞ்செழியன்.கீழே உள்ளவன் கல்வியால் மேலே வந்தால், மேலே உள்ளவன் கீழே சென்றுவிடுவான் எனச் சொல்லாமல் கண்படுவான், அதாவது சமப்படுவான் -நம்மாழ்வார்

நல்லவர்களாக வாழ்வதில் ஒரு துன்பமுமில்லை. ஆனால், அதை மற்றவர்களுக்கு நிரூபிக்கப் படுகிற பாடு இருக்கிறதே அதுதான் துன்பத்திலும் பெருந்துன்பம்.-யுகபாரதி

வாழ்க்கையில் முக்கியமானது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல. நீங்கள் எதை நினைவுகூர்கிறீர்கள், அதை எப்படி நினைவுகூர்கிறீர்கள் என்பதுதான்.- காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்.

கோகுல் பிரசாத்


சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கல்லறை வாசகத்தைப் (epitaph) பற்றி 13 reasons why தொடரில் குறிப்பிடுவார்கள். கல்லறையில் சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் பெயர், பிறப்பு - இறப்பு தகவல், அதனிடையே ஒரு குத்துச்சண்டை வீரனின் படம், முத்தாய்ப்பாக அதன் மேலே ‘Don’t try’ எனும் அறிவுறுத்தல் இடம்பெற்றிருக்கிறது. 

முதற்பார்வைக்கு ‘எதையும் முயலாதே’ என்பதே புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கைக் கண்ணோட்டமாகப் படுகிறது. இதைக் கண்டதும் ஒரு மனிதனால் முயற்சி செய்யாமல் எப்படி வாழ முடியும், இத்தகைய எதிர்மறைத் தன்மையைப் பிறரிடம் விதைப்பது சரியானதா, வருங்காலத் தலைமுறையினருக்கு இருண்மையான பார்வையைப் பரிந்துரைப்பது முறையா போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

ஆனால், புக்கோவ்ஸ்கியை வாசித்தவர்களுக்குத் தன் வாழ்க்கைச் சாராம்சமாக அவர் எதைக் கருதுகிறார் என்பது தெளிவாகவே புரியும். ‘எதுவாகவும் ஆக முயலாதே. எதை உன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கிறாயோ அதுவாகவே இரு’ என்கிறார். Don’t try to become something, be it. கல்லறையிலுள்ள குத்துச்சண்டை வீரனின் படம் புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாடுகளைக் குறியீடாக உணர்த்துகிறது. தன்னுடைய இடையறாத போராட்டத்தின் வழியாகத் தான் கண்டடைந்த உண்மையை மிகச் சுருக்கமாக நமக்குச் சொல்வதே அவரது நோக்கம். 

தன்னுடைய முப்பதாவது வயதில் எழுதத் தொடங்கிய புக்கோவ்ஸ்கி, 49வது வயதில்தான் முதல் நாவலை எழுதி முடிக்கிறார். அவரது தொடக்க காலப் படைப்பாக்க முயற்சிகள் அனைத்தும் திருப்திகரமான ஆக்கங்களாக அமையவில்லை. அதனால் எழுதுவதைக் கைவிட்டு வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டார். பிறகு, பல்லாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதத் தொடங்குகிறார். சரசரவென எழுதிக் குவிக்கிறார். 

தனது அனுபவத்தின் வழியாகக் கவிதைகளிலும் கடிதங்களிலும் புக்கோவ்ஸ்கி வலியுறுத்தும் விஷயம் ஒன்றே. ‘எதையும் வலிந்து செய்யாதே. உன்னுள் இயல்பாகப் பெருக்கெடுக்காத விஷயத்திடம் முட்டி மோதாதே. அதன் பொருட்டு நேரத்தை வீணடிக்காதே. உன்னுடைய திறமை எதுவோ அது ஆற்றொழுக்காக வெளிப்பட்டே தீரும். கொட்டித் தீர்க்கும். அப்படிப் பொங்கிப் பெருகவில்லை எனில் உன்னிடம் அந்த ஆற்றல் இல்லை என்று பொருள்.’

இதையே தன் கல்லறை வாசகமாக விட்டுச்சென்றிருக்கிறார் புக்கோவ்ஸ்கி. ரத்தினச் சுருக்கமாக!

-கோகுல் பிரசாத்

என்ன பெரிதாய்ச் சொல்லிவிடப் போகிறேன் அன்புள்ள என்று தொடங்கி அன்புடன் என்று முடிப்பதைத் தவிர.-மகுடேசுவரன்

Saturday 10 June 2023

உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆசை மட்டும் காரணமன்று. வெறுப்பும் கூடக் காரணம்.ஒன்றின் மீது நாம் வைக்கிற ஆசை நம்மை எப்படி அலைக் கழிக்குமோ,அதுபோல இன்னொன்றின் மீது வைக்கிற வெறுப்பும் நம்மை அலைக்கழிக்கும்-சுப.வீ

ஓய்வு பெற்ற மனிதனின் முதல் திங்கட்கிழமை காலை எவ்வளவு நிசப்தமானது-பா.திருச்செந்தாழை

ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன் உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி-சுகபோதானந்தா

Friday 9 June 2023

குறிக்கோள் அற்ற வாதமே தர்க்கம்;எதிர்மறை மனோநிலையுடன் கூடிய வாதமே குதர்க்கம்;உடன்பாட்டு மனநிலையுடன் கூடிய வாதம் விதர்க்கம்#info

போகன்

நான் புகைப்படங்களில்
சிரிப்பதில்லை  என்கிறார்கள்.

புகைப்படங்களில்
சிரிப்பதில்
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் 
எவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
என்னுள் புதைத்துக் கொண்டு 
நான் சிரித்தேன்
என்று பின்னால்
உங்களுக்குத் தெரியவரும்போது
பயங்கரமாக  இருக்கும்.

-போகன் சங்கர்

டாடா உப்பு


யோசனைகளை யார் மூலம் பெறுவது?

ஒரு முறை டாட்டா குழுமத்தின் தலைவரான ஜே ஆர் டி டாடா அவர்களை சந்திக்க ஒரு நபர் பலமுறை முயற்சி செய்து கடைசியில் அவரை சந்திக்க வாய்ப்பு பெற்றார்.

அந்த நபர் டாட்டாவிடம் உப்பை விற்குமாறு கூறினார். டாட்டா விற்கு உப்பை விற்பதில் பெரிதாக ஆர்வமில்லை.‌

ஆனால் அந்த நபர் உப்பின் விற்பனை குறித்து பல்வேறு தகவல்களை கூறி டாட்டாவை வியக்க வைத்தார். உப்பானது இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒன்று. அதன் தேவையானது என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே உப்பினை விற்றால் அதிக பணம் பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

அந்த நபரின் யோசனையை கேட்ட டாட்டா உடனே உப்பினை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். இன்று டாட்டா உப்பு இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் உப்பு. இந்தியாவில் உப்பு விற்பனையில் 17 சதவீதம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது.

எனவே யோசனைகளை நாம் யார் மூலம் பெற்றாலும் அதனைச் சிந்தித்து செயல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்.

Thursday 8 June 2023

நம்மை நம் சிறுமையை, எல்லைகளை அறிந்து கொண்டு வாழ்வது விடுதலை.மனித அறிவு இன்னும் நுழைய முடியாத இடங்கள் உண்டு. அறிவால் ஆதாரம் காட்ட இயலாதபோது, நம்பிக்கையே மனிதனுக்கு எளிய வழி. நம்பிக்கைக்கும் எல்லையுண்டு.அந்த நம்பிக்கையின் எல்லை என்பது நமது சமாதானத்தின் புள்ளி.-பாதசாரி

வெளியேறும் நேரம் வந்துவிட்ட பிறகும் பாதம் ஒரு திசையில் மனம் ஒரு திசையில்..-இளங்கோ

சித்ரா

வாழ்வு எல்லா செயல்களிலும் இரு சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
சோதனைகள் நேரும் போது எதிர்த்து நின்று இடும்பைக்கு இடும்பைப் படுப்பது.
அல்லது தோற்று மங்கி மறைவது.

காந்தி எல்லா சந்தர்ப்பங்களிலும் முதலாவதையே தேர்ந்தெடுத்தார்.

வெற்றி ஈட்டினாரா அவரின் முயற்சிகள் நினைத்த பலனைத் தந்தனவா என்பது தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட வினா.
அவரும் சளைக்காமல் அதற்கு பதில் உரைத்தவாறே தான் இருந்தார்.

"நான் வெற்றி கண்டேனா என்பதை நாளைய வரலாறு தான் தீர்மானிக்கும். ஆனால் நான் முயன்றேன் என்பதே என் வெற்றி"

தொடர்ந்து முயலுதலே காந்தியம்.

மாரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நாள் இன்று.



நடந்து கொண்டிருந்தோம்‘என்ன அதிசயம் பார்’ என்றான் மகன்.அடுக்கு மாடி ஒன்றிலிருந்துமூக்கு நுனியில் விழுந்த நீர்த்துளியைக் காட்டி. நமக்குத்தான்அதிசயம் என்றால்என்னென்னவோ வேண்டியிருக்கிறது.-செல்வராஜ் ஜகதீசன்

உணர்தலே அனுபவமாகின்றது அந்த அனுபவமேகடைசியில் வாழ்வுஎன்றாகிறது.-பாமதி

Tuesday 6 June 2023

Coromandel என்பது 'சோழ மண்டலம்' என்பதன் திரிபு. ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெயர். கிழக்கு கடலோரப் பகுதிகளை Coromandel Coast என்று அழைத்தனர். #Coromandel Express

நிர்மல்


விபத்து என்றால் என்ன? ஏன் நடக்கிறது. 

விபத்துகளைக் குறித்து நமது கருத்துக்கள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். விபத்திற்கான காரணங்களைப் பற்றி பேசும் பொழுது    நமது விருப்பு வெறுப்புகள் நம் பார்வையை மங்கச் செய்வது இயல்புதான்.
       தொழிற்சாலை பாதுகாப்பு மேலான்மை குறித்த அறிவு மற்றும் அனுபவத்தோடு சொல்கிறேன்.

  

1. அனைத்து விபத்துகளையும் தவிர்க்க முடியும். / all accidents are preventable. 

2. விபத்துகளை தடுக்க ஒன்றுக்கு மேலான பாதுகாப்பு தடுப்பு அடுக்குகள் உண்டு.( protective Barriers ). இந்த அடுக்குகள் இயந்திரமாக இருக்கலாம், கருவிகளாக, செயல் முறைகளாக இருக்கலாம், மனிதர்களின் செயல்பாடுகளாக இருக்கலாம். அனைத்து  பாதுகாப்பு அடுக்குகளும் செயல்படவில்லையெனில் விபத்து நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு.  
3. விபத்துகள் அதுவாக  நடப்பதில்லை. கடவுள் / காலம் போன்றவை உருவாக்கும் நிகழ்வும் அல்ல. /  Accidents don’t happen , They are caused by the actions or inactions of one or more protective layer or people.

3. பெரிய விபத்துகள் தீடிரென நடப்பதில்லை. பெரும் விபத்துகள் நடக்கும் முன் பல சிறு விபத்துகள் நிகழ்ந்திருக்கும் அல்லது சிறு இழையில் தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும். பல காலமாக கவனத்தில் கொள்ளாத சிறு விபத்துகளின் நீட்சியே இவை. 

அனைத்து  விபத்துகளுக்கும் காரணங்கள் இரண்டே இரண்டுதான்
   1. மனிதர்களின் கவனக் குறைவு 
   2. நிர்வாக செயல் திறமையின்மை / நிர்வாக நெறி முறைகள் இல்லாமை அல்லது பின்பற்றாமை. 

எனக்குப் பிடித்த விபத்து குறித்த வாக்கியம் : Accidents don't happen to people who take accidents as a personal insult.
   விபத்துகளை தனிப்பட்ட அவமானமாக கருதுபவர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதில்லை.

Sunday 4 June 2023

அப்பாவின் சிறு புன்னகைபோல்எந்தச் சிலைகளிலும் காணக் கிடைக்கவில்லை.-இளமதி

எஸ்.பி.பி படித்தது


சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.

'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது பிரபு ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது. 
பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம், 
"பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு."

மறுபடியும் பாடல்.
கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது. 
"பிரபு..."
"என்னப்பா ?"
"இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு."

மீண்டும்... மீண்டும்... மீண்டும்... 

பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்பா.
அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ''இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?" 

பிரபு சொல்லியிருக்கிறார்.
"புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்."

சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, "பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட  (MSV) இது விஷயமா உடனே பேசணும்."

அப்படித்தான் சிவாஜிக்கு 'பொட்டு வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்பிபி,
'சுமதி என் சுந்தரி'
திரைப்படத்தில்.

இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். 
"எஸ்பிபி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.
அவரைப் பாராட்டி நான் ஏதாவது பேச ஆரம்பித்தால், என்னை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் என்னைப் பாராட்டி இப்படி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்."

"பிரபுவோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
'என்னவென்று சொல்வதம்மா' பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு" என்று சொல்வாராம் எஸ்பிபி.

இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.
அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, "டூயட் படம் பாத்திருக்கீங்களா ?
அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே... பியூட்டிஃபுல்."

இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.

இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு,  நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.
"நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.
அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க."

இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.

இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால், 
நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை. 
நல்ல நல்ல பாடங்களையும் கூட 
நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.

இன்று எஸ்.பி.பி.யின்
பிறந்த நாள்.

எழுத்தை வாசிக்கும் போது அதனைக் காட்சிபூர்வமாகக் காண முடிந்தால் அது நல்ல எழுத்து.காட்சியைப் பார்க்கும் போது அதன் பின்னுள்ள சமரசமற்ற எழுத்து துலங்கி வந்தால் அது நல்ல திரைப்படம்-கோகுல் பிரசாத்

Thursday 1 June 2023

அனஸ்தீசியா


அனஸ்தீஸியா, குளோரோஃபார்ம் என்ன வித்தியாசம்?

 அனஸ்தீஸியா என்பது மருந்து அல்ல. உணர்வில்லாமல் செய்வது என்று அர்த்தம். மயக்கம் அடையச் செய்கிற வாயுவின் பெயர் குளோரோஃபார்ம். 

முதல் அனஸ்தீஸிஸ்ட் கடவுளே! ஆதாமுக்கு மயக்கம் ஏற்படுத்தி, வலியில்லாமல் விலா எலும்பை அகற்றிய முதல் டாக்டர் அவரே! குளோரோஃபார்ம் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர் ஜேம்ஸ் சிம்ஸன் என்னும் ஸ்காட்லாந்து
டாக்டரால் கண்டுபிடிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணி ஏழாவது குழந்தை பெற்றெடுத்தபோது, ராணி கேட்டுக்கொண்டபடி அவருக்கு குளோரோஃபார்ம் தரப்பட்டது. 1860-ல் வங்காளத்தில் சிப்பாய் கலகத்தின்போது 261 இந்துக் கைதிகளுக்கு டாக்டர் ஜேம்ஸ் எஸ்டேய்ல் ஆபரேஷன் செய்தபோது, மயக்கத்துக்கு அவர் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது ஹிப்னாடிசம்! 

இன்று பக்கவிளைவுகள் எதுவுமில்லாமல் அனஸ்தீஸியா பிரமாதமாக முன்னேறிவிட்டது. ரமண மகரிஷிக்கு அனஸ்தீஸியா இல்லாமல் தோளில் ஆபரேஷன் செய்தார்கள். ரமணர் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

-மதன்