Saturday 15 October 2016

பட்டாம்பூச்சி-சிவா

*என் பார்வையில் பட்டாம்பூச்சி !*

ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து 'பாப்பில்லான்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற ஹென்றி ஷாரியரின் இந்த நாவல் உண்மைக்கதை இக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளதாம். நல்ல நூல்கள் தாய்மொழியாம் தமிழில் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின்   உழைப்பினால் கடமை உணர்வினால் கிடைத்த பொக்கிஷமே இந்த 'பட்டாம்பூச்சி' ஆகும்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்த மனிதர்கள் மட்டும் தனது வாழ் நாட்களை இப்படி சரித்திர மாக்க முடியும். அந்த வகையில் பட்டாம்பூச்சி தனது அறுபத்தாறு வயதில் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம் தான் இந்த நாவல்.

ஒரு கதையை நாம் படிக்கும் போதே அது கற்பனைக் கதை என்றாலும் அதில் நம் மனம் ஒன்றி விடும். அந்த கதாநாயகியோ நாயகனோ அழுதால் நாம் அழுது, சிரித்தால் நாமும் சிரித்து அக்கதையோடே ஒன்றிவிடுவோம். அந்த வகையில் 'பட்டாம் பூச்சி' உண்மைக் கதையாதலால் வரிகளில் உயிரோட்டம் காண முடிகிறது.

இருபத்தைந்து வயதில் இளைஞன் எப்படி எந்த மனநிலையில் இருப்பான் என்று நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத படி கதையின் தொடக்கத்தில் இருந்தே சிறை வாழ்க்கை அதுவும் விடுதலை என்பதே இனி வாழ்வில் இல்லையென்றான ஒரு சிறை வாழ்க்கை இப்படி ஒரு சூழலில் எந்த மனிதனாக இருந்தாலும் அழுதோ அல்லது புலம்பியோ சிறை வாழ்வை அனுபவித்து செத்திருப்பான். ஆனால் பட்டாம் பூச்சி கொடிய தீவாந்திர சிறை வாழ்விலும் விடுதலை என்ற சிந்தையிலேயே போராடி வெற்றி கண்ட மாபெரும் விடுதலை சாசனம் தான் இந்த பட்டாம்பூச்சி. எந்த மனிதனுக்கும் செய்யாத குற்றதிற்காக தண்டனை கிடைத்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும் வசதி படைத்தவன் என்றால் கோர்ட் வக்கில் என பணம் செலவழித்து வெளி வந்திருக்காலம் ஒரு சராசரி மனிதனான பட்டாம்பூச்சி தம் மீது பழி சுமத்தியவர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் தான் தப்பிப்பதற்கான காரணத்தை மூர்க்கமாக எதிர்கொண்டான்.

சிறை வாழ்க்கையில் ஆயுள் தண்டனை பெற்று தென்னமெரிக்காவில் உள்ள கயானா சிறைக்கு கடத்தப்படுவது தெரிந்தும் பட்டாம் பூச்சியின் தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி அவரை இவ்வாறு சிந்திக்க வைத்து படிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் விடுதலை உணர்வை தூண்டும் வரிகள்   'குற்றமற்றவன் குற்றமற்றவன் என்று ஒவ்வொருவரிடமாகப் போய் அளந்து கொண்டிருக்காதே !' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். ஒரு கொலைக்காக ஆயுள் தண்டனை பெற்று விட்டு கொலை செய்தவன் வேறு யாரோ என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் சுத்தக் கோமாளித்தனம். ' என்று தனக்குத் தானே சொன்னதோடு மட்டுமல்லாமல் தப்ப முயற்சி செய்து பல முறை தோல்வி கண்டும் துவலாது வெற்றி கண்ட விதம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

"கயானாவில் படுபயங்கரம் ஒவ்வொரு வருடமும் 100க்கு 80 பேர் செத்துப் போகிறார்கள். முந்தின கும்பல் மொத்தமும் இறந்ததும் அடுத்த கும்பல் புறப்படுகிறது". என்ற சக கைதிகளின் எச்சரிக்கையையும் பொருட் படுத்தாது அவர்களையும் தோழர்களாக்கி அவர்களுக்கும் விடுதலை உணர்வை ஊட்டும் பட்டாம் பூச்சியின் துணிவு பாராட்டுக்குரியது.

தன் மனைவி மக்கள் என்ற நினைவையும் அந்த சுமைகளையும் சுமக்க தயாராக இருக்கும் ஓரெ ஜீவன் தன் தந்தை என்பதை   நினைத்து பெருமிதம் அடையும் கையிதின் மனநிலையை கண் முன் கொண்டு போகும் அழகிய தமிழ் மொழிபெயர்ப்பு  நடை படிக்கும் நம்மை மொழிபெயர்த்த திரு .ரா.கி. ரங்கராஜன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

கடலிலும் ,கட்டு மரத்திலும், காட்டுப்பகுதிகளிலும் சிதறியோடி மறுபடி சிக்கி கொடிய தண்டனை அனுபவித்தும் மறுபடி மறுபடி விடுதலை என்ற ஒரு உணர்வை மட்டுமே உயிரில் சுமந்து போராடி சுதந்திர மனிதனாக ஆகும் சராசரி மனிதனின் காதலும் நகைச்சுவையும் கோபாவேசமும் திகிலும் நட்பும் கொடுமையும் நிறைந்த போராட்ட வரலாறு தான் பட்டாம்பூச்சி.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சுஜாதா அவர்களின் வரிகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர் திரு ரங்கராஜனைப்பற்றி குறிப்பிட்ட வரிகள் சில " ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும் பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்த பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில் ரங்கராஜன் ஒரு கர்ம யோகி.  இத்தனை சாதனை படைத்தவருக்கு குறைந்த பட்சம் ஒரு பொன்னாடைகூடப் போர்த்தாதது தமிழகத்தின் விசித்தரமான முரண்பாடுகளில் ஒன்று! " என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் திரு. ரா.கி. ரங்கராஜன்அவர்களின் முழுத் திறமைகளையும் சுஜாதா அவர்கள் தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த மகத்தான மனிதருக்கு தகுந்த மரியாதைகளும் பராட்டும் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கவே செய்கிறது. எல்லா மனிதர்களுமே தமக்குள் இருக்கும் திறமைகளை

No comments:

Post a Comment