Friday 20 January 2017

தோட்டியின் மகன்- மணிகண்டபிரபு

தற்போது நான் படித்து முடித்த புத்தகத்தில் மனதை பாரமாக்கிய புத்தகம் இது.
தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதியது.

இது வெளிவந்தது 1951.சுந்தரராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.இது ஒரு மொழிபெயர்ப்பு போலவே தோன்றாமல் தமிழில் நடை இயல்பாக இருந்தது.தோட்டிகளும் தொழிலாளர் வர்க்கம் தானே தோழர் என்று ஜி.நாகராஜன் சொல்லியுள்ளார்.

கதை

சுடலை முத்து ஒரு மலர் அள்ளுபவர்.மகன் இசக்கி முத்துவும் இத்தொழிலுக்கு வருகிறார்.தன் பிள்ளை இத்தொழிலுக்கு வரக்கூடாதென உறுதியாய் இருக்கிறார். வள்ளி எனும் பெண்ணை திருமணம் முடித்து மகன் பிறக்கிறார்.ஆசையாய் மோகன் என பெயர் வைக்கிறார்.ஊரே தோட்டியின் மகன் என கிண்டல் செய்யுது.இடையில் தொழிற்சங்கம்,கொடிய நோய் பரவுதல் போன்றவை காட்சிப்படுத்தப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தாய் தந்தையும் நோயில் பலியாக மகனின் நிலைமை கதை.

மலம் அள்ளுதலின் நகைச்சுவைகள் சிரிப்பை ஏற்படுத்தினாலும் அது அவல சுவையாகவே தெரிகிறது.

மகனிடம் தோட்டி வேலை மறைப்பதும்,
தோட்டியின் அர்த்தத்தை மகன் கேட்கும்போது அப்பா பொறுமுவதும் மனம் கணக்க வைக்கிறது.

கையிலெடுத்த இரு நாளில் பல்வேறு பணிக்கிடையில் இதனை படித்து முடித்தேன்.மொழி பெயர்ப்பை போலவே தெரியாத இதன் எழுத்து நடையை வியக்கிறேன்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment