Wednesday 7 July 2021

பேயோன்

இருபதடி தூரத்தில்
பார்த்துவிட்ட பிச்சைக்காரன்
நின்ற இடத்திலிருந்து
கை நீட்டி
ஐயா என்கிறான்

நெருங்கும் வரை
பொறுமை தந்து
இல்லை என்கிறேன்

-பேயோன்

No comments:

Post a Comment