Wednesday 30 November 2022

August-august


ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டார். முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை. பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.

அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது. இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள். அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.

சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே. August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.

மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்.. அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது

No comments:

Post a Comment