Book-58
வெட்டுப்புலி’
- தமிழ்மகன்
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் திடீர்னு ஒரு கொலை நடக்கும். அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் வெளிப்படுவது போல் திடீரென பார்த்த வெட்டுப்புலி தீப்பெட்டி அட்டையில், ஒருவர் சிறுத்தைப்புலியை எதிர்கொள்வது போன்ற படம் இடம்பெற்றிருக்கும்.
அது என் கொள்ளுத்தாத்தா என சொல்ல போதையில் உள்ள பிரபாஸூம் பெர்னாண்டஸூம் ஆச்சர்யப்பட்டு..அந்தப் படத்தில் இருக்கும் உண்மையான மனிதரைத் தேடி கிராமத்துக்கு செல்கின்றனர்.
ஒரு சிறிய சம்பவத்தின் வழியாகப் பெரிய வரலாற்றைச் சொல்லும் முயற்சி
தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் அந்தப் படத்தின் பின்னணியைத் தேடிச் செல்கிறான். அந்தத் தேடல், ஒரு வீரனின் வாழ்க்கையை மட்டும் வெளிப்படுத்தாமல், ஒரு நூற்றாண்டு காலத் தமிழக சமூக, அரசியல், பண்பாட்டு மாற்றங்களுக்குள் வாசகனை அழைத்துச்செல்கிறது.
அங்கு உறவினர்கள சொல்லும் கதை 1930களில் பயணப்படுகிறது. நள்ளிரவில் ஆங்கிலேயரின் குதிரைகளை எடுத்துக்கொண்டு செல்லும் லட்சுமணன்.. விடியலில் வீட்டுக்கு வந்ததும் ஊர் முழுக்கச்செய்தி வாழை தோட்டத்தில் பெரிய நைனாவின் அருகில் செத்துப் போன சிறுத்தையுடன் பார்த்த மக்கள் வெட்டுப்புலி எனவே நைனாவை அழைக்கத்தொடங்கினர்.லட்சுமணன் எடுத்து வந்த குதிரை யை திருடியதாக ஆங்கிலேயர் லட்சுமணனை விசாரிக்க ஒரு கலகம் ஆரம்பிக்கிறது.
ஆங்கிலேயரின் தண்டனையின்றி சமாதானம் அடைந்து தந்தை தசரத ரெட்டி மகன் லட்சுமணனை வேறு ஊருக்கு அனுப்பி வைக்க அங்கு அவர் காதலில் விழுகிறார்.அந்த காதல் தோல்வியுற..மீண்டும் ஊர் திரும்பும்போது சாதிய எதிர்பாளராக மாறி ஊருக்கு முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் நாவல்அதன் பின் ஒவ்வொரு பத்து ஆண்டுகளாக கதை நகர்கிறது.
காலவெள்ளத்தில் நிகழ்காலத்தில்.லட்சுமணன் பேரன் அவர் சென்ற பாதையிலேயே சிறுத்தை சண்டை நடைபெற்ற ரங்காவரம் பகுதிக்குச் செல்கிறான். லட்சுமணன் பிறந்ததை தசரத ரெட்டி கொண்டாடுகிறார்.சுதந்திர போராட்ட காலக்கட்டம் என்பதால்.. அந்த போராட்டங்கள் விடுதலை முயற்சி போன்றவை சொல்லப்படுகிறது. ஆறுமுக முதலி என்பவர் அந்த காலக்கட்டத்தில் சென்னையில் படம் எடுக்க வருகிறார்.தசரத ரெட்டியின் சகலைக்கு அண்ணனான சின்னா ரெட்டியை தோப்பில்.இருக்கச் சொல்லிவிட்டு போனபோதுதான் சிறுத்தை வரும் காட்சி சொல்லப்படுகிறது.அதன் பின் சின்னாரெட்டியின் பின்னணி போன்றவை சொல்லப்படுகிறது.
அந்த சிறுத்தை கொல்லப்பட்ட இடத்தில் நின்று அவர்களின் பேரன்களும் நண்பர்களும் உணர்ச்சி பொங்க பார்க்கின்றனர்.
அதன் பின் கதை தொடர்சியாக தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிரப்பு, திராவிட அரசயல் என வரலாற்றை பதிவு செய்கிறது. சிறுத்தையை கொன்றவர் கதையை மையமாக க்கொண்டு அப்போதிருந்து தற்போது வரையிலான தமிழகத்தின் மாற்றங்களை பதிவு செய்கிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், அரசியல் மாற்றங்கள், சமூக உறவுகள், ஆசைகள், ஏமாற்றங்கள் போன்றவை நாவலில் இடம் பெறுகின்றன. சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் திராவிட இயக்க குடும்பங்களின் வரலாறு சொல்லப்படுகிறது.
சிறுத்தையை வெட்டிய குடும்பத்தினர் அடுத்தடுத்த தலைமுறையினர் அரசியலில் ஈடுபாடுடனும் ஆர்வத்துடன் இருப்பது சொல்லப்படுகிறது. அரசியலும் சிறுத்தையை போல அடக்கியாள வேண்டுமா என குறியீடு புலப்படுகிறது.
நான்லீனியர் முறையில் நாவல் சுவாரஸ்யமாக பயணிக்கிறது. தமிழக அரசியலில் திராவிட இயக்கங்களின் தாக்கம்,மிசா, சென்னையின் வரலாறு அண்ணாவின் அரசியல் வருகையும் எழுச்சியும், இந்தி எதிர்ப்பு,இலங்கை தமிழர் பிரச்சனை, அன்றைய காலகட்ட சினிமாக்கள் என்ன காலப்பயணம் பயனிக்கிறது.வரலாறும் புனைவும் இணைந்து பயணிக்கிறது.லட்சுமண ரெட்டி கதாபாத்திரம் நாவல் முழுதும் வரும் முக்கிய கதாபாத்திரம்.
1930 களில் துவங்கி 2009சமகாலம் வரை பயணிக்கிறது.அன்றைய அரசியல் காலகட்டங்களை, சினிமாவின் வரலாற்றையும் கூறுவதுடன் கால ஓட்டத்தில் இவ்விரண்டு மாற்றங்களையும் கூறுகிறது.சினிமாவில் சாதிக்க நினைத்த சிவகுருவும், அரசியலில் கோலோச்ச நினைத்த தியாகராசன் வீழ்ச்சியும் சொல்லியுள்ளார்.
*கண்டுகொள்ளாமல்.இருப்பதும் சும்மா இருப்பதும் வாழ்வின் ஒரு தரிசனம் போல
மனிதர்கள் ஏற்படுத்தும் தடயங்களை காலம் அரித்து நிர்மூலமாக்கும் அழகிய விளையாட்டை நினைத்துக் கொண்டேன் என முடிகிறது நாவல்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு