Saturday, 21 July 2018
படித்தது
ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை
-பாவண்ணன்
#ஒரு வளர்ப்பு நாயை மெல்ல மெல்ல பழக்குவது போல,
தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்
-பாரதி தம்பி
# நினைவுக்கு வரும் அவமானம்
அதன் பின்னால் நடந்த அத்தனை அவமானங்களையும் நினைவுக்கு கொண்டு வரும்
-மணி
#எனக்கு யார்மீதும் புகார் கிடையாது, என்ன...ஒரு சௌகர்யமான வாழ்வு கிடைத்திருந்தால், இரண்டு வேளை உணவை எனக்கு இந்த சமூகம் உத்தரவாதமாக அளித்திருந்தால் என்னால் இன்னும் நல்ல படைப்புகளை, கதைகளை எழுதியிருக்க முடியும். அந்த வருத்தம் எனக்கு உண்டு ஆனாலும் பரவாயில்லை புதுமைப்பித்தனை விட , பாரதியை விட நான் நன்றாக இருக்கிறேன்.
பிரபஞ்சன்.
சுஜாதா
கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதாவின் சில கவிதை முயற்சிகள். -------
‘
கவிதை எழுதுகிறவர்கள் நிறையக் கிளம்பியிருக்கிறார்கள். அன்று என் நண்பரும் கவிஞருமான ‘கீகீ’யை (அவருடைய புனைபெயர்) பார்த்ததும் சரேலென்று சந்தில் மறைந்தேன். அவர் என்னைத் துரத்தி ஒரு மூலையில் மடக்கி பைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு நேரிசை வெண்பா எழுதியிருப்பதாகச் சொல்லி அதைக் கணையாழியில் பதிப்பிக்குமாறு சொன்னார். ஆசிரியர் கி.க. மறுத்து விட்டார். அதனால் அதை இப்பகுதியில் நுழைத்திருக்கிறேன்.
“விண்ணெடுகப் பரவி
பாரிஸ் வனிதைகள் போல்
கண்ணடிக்கும் தாரகைகளின்
கணக்கை எண்ணி வைத்த
முட்டாள் ஒருத்தர் இருக்கார்
அவர் நமக்கு எட்டாத கடவுளப்பா”
(அடிக்க வராதீர்கள். ‘கீகீ’தான் எழுதினார். நான் இல்லை.)
(டிசம்பர், 1975)
‘
பிரபலமான ஜப்பானியக் கவிஞர் ஒருவரை Chinees கவிதை எழுதுவது எப்படி என்று கேட்டபோது அவர், “சாதாரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையைத் தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையைத் தொடர்கிறது. மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்றுசேர்க்கிறது” என்றாராம். உதாரணம்:
“கியாட்டோவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள் பதினெட்டு.
ஒரு படைவீரன் தன் கத்தியால் கொல்கிறான்.
இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொல்கிறார்கள்.”
நாமும் ஒரு சைனீஸ் கவிதை எழுதிப் பார்க்கலாமே என்று தோன்ற:
“மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டுத் திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.”
(ஜனவரி, 1976)
‘
Clerihew என்பது பிரபலமானவர்களின் பெயர்களை அமைத்து எழுதிய ஒருவித வேடிக்கைப் பாட்டு. நம் நேரிசை வெண்பாவில் இந்த மாதிரிப் பாட்டுக்களை முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.
000
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ள
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
000
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டெல்லோரும்
.................. குடிக்க வாரும்!
(ஜனவரி,1978)
‘
சென்ற கணையாழி இதழில் இந்தப் பகுதியில் என் புனர் பிரவேசத்தை விமர்சித்து ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்னதான் ‘ராயப்பேட்டை பாலு’ என்கிற பெயருக்குள் ஒளிந்து கொண்டு, அற்ப சுத்திக்காக ஒதுங்கும் இடங்களின் சுவர்களில் காணப்படும் பிரத்தியேக பாஷையை உபயோகித்து எழுதினாலும் அந்தக் கடிதத்தை எழுதியவர், எழுத வைத்தவர் யார் யார் என்பதெல்லாம் சுலபமாக எனக்குத் தெரிந்து விடுகிறது. சிரிப்புத்தான் வருகிறது.
புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன” என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.
என்னய்யா விளையாடுகிறீர்களா?
நான் புதுக்கவிதையை எதிர்ப்பவனில்லை.... யாப்புடன் எழுதுவது மிகச் சுலபமான விஷயம். எதை வேண்டுமானாலும் யாப்புடன் சொல்லலாம். பார்க்கலாமா?
“எல்லோரும் பாட்டெழுத நான் ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்படி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான் ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் மேலே
தொடுத்து அமைப்பதில் தொந்தரவு இல்லை
படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதைபற்றிச் சொல்ல நினைத்தவன்
‘பாயை விரித்துப் படுத்தவளைப் பாச்சா
வாயைத் திறந்து....’ வரைக்கும் வந்துவிட்டேன்
மாயச் சுழலிது, மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு! வா!”
இஃது பன்னிரண்டடியான் வந்த பல்விகற்பப் பஃறொடை வெண்பா.
(அக்டோபர், 1972)
மணி
ஒருவர் எப்படி வாழ்கிறாரோ அப்படியே சிந்திக்கிறார்
-மார்க்ஸ்
உலக கார்டூனிஸ்ட்கள் தினம் இன்று
1962-ல் ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன் இது...
கார்ட்டூனிஸ்ட் : கோபுலு
[05/05, 6:34 am] TNPTF MANI: நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
-கார்ல் மார்க்ஸ்
[05/05, 7:09 am] TNPTF MANI: நான் உன் அருகே வருகிறேன்
உண்ணும் போது
வாய்க்கு அருகே வரும்
கையைப் போல..
-மீரா
[05/05, 7:45 am] TNPTF MANI: கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை
"மீன்"
-நா.முத்துக்குமார்
மணி
[04/05, 8:08 am] TNPTF MANI: தள்ளு/இழு
இப்புறம் நான்
இழுப்பது தெரியாமல்
அப் புறம் நீ
தள்ளிக்கொண்டிருந்தாய்
அப்புறம் நீ தள்ளுவது அறியாமல்
இப்புறம் நானிழுக்க
கொஞ்சம் திரைவிலைக்கியது
ஒற்றை மரக்கதவு
எதிர்பாராவொரு வேளையில்
என்னெதிரே நீ
உன்னெதிரில் நான்
கடக்கும் கணங்களுடன் நகராமல்
உறைந்து நின்றோம்
அப்போதுதான் அது நடந்தது !
நீ வந்தாய்
என் உள்ளே
நான் சென்றேன்
உன் உள்ளே
-படித்தது
[04/05, 5:46 pm] TNPTF MANI: குத்தாத முள்ளுண்டோ
கொத்தாத பாம்புண்டோ
பத்தாத சீமெண்ணெய் தானுண்டோ?
-சுஜாதா எழுதி முடிக்காத வெண்பா
[04/05, 6:59 pm] TNPTF MANI: கேள்வித்தாளின் பின்புறம் வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகியிருந்தது
அவன் தேர்வு
முடித்த மிச்ச நேரம்
-ப.பி
[04/05, 7:01 pm] TNPTF MANI: எல்லோரையும் தட்டி
கேட்க வைத்துவிடுகிறது
"கதவு"!
அபிலாஷ்
வாசிப்பு ஏன் ஆறுதல் தருகிறது?
-அபிலாஷ்
டி.வி பார்ப்பது, பேஸ்புக்கை புரட்டுவது, அரட்டை அடிப்பதை விட மிக அதிகமான கவனமும் மன உழைப்பும், உணர்வுகளின் குவிப்பும் வாசிப்புக்கு தேவைப்படுகிறது. அதாவது வாசிப்பு ஒரு ஓய்வு செயல் அல்ல, அது மூளையையும் உணர்வுகளையும் அதிகமாய் தூண்டும் ஒரு வேலை. ஆனால் வாசிப்பின் ஒரு முக்கிய தன்மை வேறு பொழுதுபோக்குகளுக்கு இல்லை. அது தனிமை.
தனிமை என்றால் பௌதிகமான தனிமை அல்ல. அகத்தனிமை. வேறு பொழுதுபோக்குகளின் போது ஒன்று மனிதர்களோ, குரல்களோ, பிம்பங்களோ நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். வாசிப்பு மட்டுமே யாருமில்லாத பிரதேசத்துக்கு நம்மை அழைத்துப் போகிறது. எல்லாரையும் விட்டு எல்லாவற்றையும் விட்டு கொஞ்ச நேரம் தனித்திருக்க மனம் ஏங்குகிறது. புத்தகம் மட்டுமே எனக்கு அதற்கு உதவுகிறது.
நமக்கு எந்தளவு மனிதர்களோடு இருப்பது அவசியமோ அந்தளவு மனிதர்கள் இல்லாது இருப்பது தேவை. நமக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஆனால் பேச்சு ஒரு கட்டத்தில் அலுப்படைய வைக்கிறது. களைத்து ஒதுங்க நினைக்கிறோம். அப்போது தனிமை அவசியமாகிறது. ஆனால் தனிமை என்பதும் நாம் நம்முடன் நிகழ்த்தும் ஒரு பேச்சு தானே. அந்த பேச்சின் சொற்கள் நமக்குள் மலையாக குவியும் போது நாம் தனிமையில் இருந்து வெளியே வருகிறோம். யாரிடமாவது உரையாட தவிக்கிறோம். மிகவும் உக்கிரமாய் தீவிரமாய் தீக்கங்குகளைப் போல் சொற்களை சமூகத்துக்கு கொண்டு வருகிறோம்.
வாசிப்பது ஒரு விதத்தில் மொழியில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி தான். வெளியே பேசும் மொழியில் இருந்து தப்பித்து உள்மொழிக்கு செல்வது. ஆனால் மனிதர்கள் முழுக்க மொழியில் இருந்து தப்பிக்கவே இயலாது.
சாருவின் நாவல் ஒன்றில் கதைசொல்லி ஒரு களேபரமான கொண்டாட்டத்தில் இருப்பான். அவனைச் சுற்றி நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். கதைசொல்லி சட்டென அவர்களுடன் தான் இல்லை என உணர்வான். அந்த கூட்டத்தின் நடுவே தான் மிகவும் தனியாய் இருப்பதாய் சொல்வான். அவனுக்கு அந்த தனிமை தான் வசதிப்படும். அவனால் கூட்டத்திற்கு வெளியிலும் செல்ல முடியாது. உள்ளுக்குள்ளும் சிறைப்பட முடியாது. மனிதனின் ஆகப்பெரும் அவஸ்தையே இது தான்.
அடிக்கடி பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து துறவறம் போகிற நண்பர்களை எனக்குத் தெரியும். பாதி வழியில் எப்படியும் திரும்ப வந்து விடுவார்கள். ஆனாலும் ஏன் அப்படிப் போகிறார்கள்? இரைச்சல் தாங்க முடியாமல் தான். உலகில் மிக அதிகமான ஜனநெருக்கடி உள்ள இடம் பேஸ்புக் தான். பேஸ்புக்கை சீரியசாய் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கும் போது சட்டென வெறுப்பு ஏற்படுகிறது. இதில் வரும் கொண்டாட்டங்கள், அன்புப் பெருக்கு, கோபம் எல்லாம் பொய் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை தவிர்க்கவோ தள்ளி நிற்கவோ முடியாது. நிஜ உலகில் அதற்கு ஒரு இடம் உள்ளது.
பேஸ்புக்கில் நீங்கள் அமைதியாய் இருக்க ஒரு ஊசிமுனை இடம் கூட கிடையாது. இங்கு இருந்தால் நீங்கள் எதையாவது செய்து கொண்டு, பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சொற்கள் நம் கழுத்து வரை நிரம்பி நின்று மூச்சு முட்ட செய்கின்றன. டி-ஆக்டிவேட் செய்கிறோம். பேஸ்புக்கை தம் தேவைக்காய் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே நிரந்தரமாய் அதில் இருக்கிறார்கள்.
வாசிப்பின் மிக முக்கியமான பயன் அது நமக்கு தனிமையின் அத்தியாவசியத்தை கற்பிக்கிறது என்பதே. பேஸ்புக் நம்மை “தனியாய் போய் விடாதே” என அச்சுறுத்திக் கொண்டே இருக்க, புத்தகங்கள் தனித்திரு என காதில் சொல்கின்றன. இரண்டுக்கும் நடுவே மகிழ்ச்சி இருக்கிறது.
சுஜாதா
[03/05, 7:40 pm] TNPTF MANI: சிகரெட்டை விடுவதற்கு… – சுஜாதா
சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சிகரெட் பழக்கம் என்பது பைனரி. சாதி இரண்டொழிய வேறில்லை... சிகரெட் பிடிப்பவர். பிடிக்காதவர். குறைவாகப் பிடிப்பவர், எப்போதாவது பிடிப்பவர். இதெல்லாம் ஏமாற்று. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிடவேண்டும். இருபதிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் த.தானே ஏமாற்றிக் கொள்வது. தப்பாட்டம்.
முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும். இந்த இம்சை தேவைதானா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்கவேண்டும்.
சிகரெட்டுக்குப் பதில் பாக்கு, பான்பாரக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. யாரையாவது அடிக்க வேண்டும்போல் இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே உதைப்பதற்கு ஒரு கால் பந்தும் சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக்கொள்ளலாம் (கண்கள் ஜாக்கிரதை). ஒரு வாரம் ஆனதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத்துவங்கலாம். தமிழ்ப் படங்கள்போல் வெற்றிகரமான பத்தாவது நாள், பதினைந்தாவது நாள். சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம். இப்படி! ஆனால் இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும், மிதப்புக்காக பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக்கொள்வதும் விஷப் பரீட்சைகள்.
[03/05, 8:49 pm] மினிமீன்ச்: மூச்சு ஆராய்ச்சி நிறுவனம் (ரெஸ்பிரேட்டரி ரிசர்ச் ஃபவுண்டேஷன்) சென்னை வடகிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டாக்டர் நரசிம்மன்(C.O.P.D) க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் (பிடிவாதமான சுவாசத்தடை வியாதி) மனிதனைக் கொல்வதில் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது என்று சொன்னார். இதயநோய், புற்றுநோய் போன்றவை மெள்ள மெள்ளக் குறைந்து வரும்போது ஸி.ஓ.பி.டி முதலிடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறதாம்.
இந்தக் கூட்டத்தில் புகைப்பதைக் கைவிடுவது எப்படி என்கிற தலைப்பில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். இதற்கு நான் தகுதியான ஆள்தான். 1986 வரை ஒரு நாளைக்கு பாக்கெட் சிகரெட் – ப்ளேயர்ஸ், பிறகு கோல்டு ப்ளேக், இறுதியாக வில்ஸ் ஃபில்டர் பிடித்தவன். அதை ஒரே நாளில் கைவிட்டவன்.
சிகரெட் பழக்கம் தற்செயலாகத்தான் ஏற்படுகிறது. குறிப்பாக வீட்டில் கட்டுப்பாடாக வளர்ந்த இளைஞர்கள் அதை ஒருவிதமான defiance ஆகப் பழகிக் கொள்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் குடுமி வைத்துக்கொண்டு பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்த நண்பன் வேலை கிடைத்து டெல்லி வந்து குடுமியை நறுக்கிய கையோடு மகாவிஷ்ணு சங்கு சக்கரம் போல் அந்தக் கையில் ஒன்று, அந்தக் கையில் பனாமா பற்றவைத்துக் கொண்டான். ரிட்டயர் ஆனப்புறம்தான் நிறுத்தினான்.
இக்கால இளைஞர்கள் பெண் சிநேகிதிகள் முன்னால் ஸ்டைலாக சிகரெட் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்து விட்டுப் பேசிக்கொண்டே வார்த்தை வார்த்தையாக புகை வெளியிடுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும். சில காதலிகளும் இதைக் கல்யாணம் வரை விரும்புவார்கள். பிள்ளை பிறந்ததும் அதன் தலைமேல் சிகரெட் புகை வாசனை வரும்போது பழக்கத்தைக் கைவிட்டே ஆகவேண்டும். இல்லையேல் சுளுக்கு.
என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி.ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் பழக்கம் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.
சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.
சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்துக் காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்துச் சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வப்போது சே என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சிலசமயம் பிப்ரவரி வரை நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதிவரை.
பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் ‘ரங்கராஜன், நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்’ என்றார்.
‘ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை’ என்றார்.
‘எப்போதிலிருந்து விட வேண்டும்?’ என்று கேட்டதற்கு நேற்றிலிருந்து’ என்றார். ‘கைவிடாவிட்டால் என்ன ஆகும்?’ என்றேன். ஹார்ட் அட்டாக்… லங் கேன்சர்.. யு சூஸ்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?’
இந்த முறை பயம் வந்துவிட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தோதாக தேர்ந்தெடுத்து பெல்காலனி தெருநாய் ஜிம்மி உள்பட அனைத்து நண்பர்களிடமும் ‘நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்’ என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன். சிகரெட் பழக்கம் என்பது பைனரி இதைத் தெளிவாக உணரவேண்டும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை… சிகரெட் பிடிப்பவர், பிடிக்காதவர். குறைவாக பிடிப்பவர்… எப்போதாவது பிடிப்பவர்… இதெல்லாம் ஏமாற்று கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது. முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம்… சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்க வேண்டும். சிகரெட்டுக்குப் பதிலாக பாக்கு, பான்பராக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு எதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தம்மானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.
உதடுகளில் லேசாக நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் குளிர்ந்த தண்ணீர் குடித்துவிட்டு ‘யார் தெச்ச சட்டை.. எங்க தாத்தா தெச்ச சட்டை… தாத்தா தெச்ச சட்டைப்பைல பாத்தா ரெண்டு முட்டை’ என்று தொடர்ந்து சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்கள் புகார் செய்தால் ‘ஒரு வாரம் அப்படித்தான் இருக்கும்’ என்று அவர்கள் மேல் பாயலாம். யாரையாவது அடிக்க வேண்டும் போல இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள்… கூடவே உதைப்பதற்கு ஒரு கால்பந்தும், சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக் கொள்ளலாம்.(கண் ஜாக்கிரதை) ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப் படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்… சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்… இப்படி! மெள்ள மெள்ள நண்பர்களிடம் மனைவியிடமும் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம்… போஸ்டர்கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.
பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டிவிட்டீர்கள். ஒரு சிகரெட்டை எடுத்து அதைப் பற்றவைக்காமல் மூக்கில் ஒட்டிப்பார்த்து விட்டு ‘சீ நாயே’ என்று சொல்ல முடிந்து, அழுகை வராவிட்டால் பரீட்சை பாஸ். இனியெல்லாம் சுகமே. சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்தின அஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்குப் போய்விடூவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டி விட்டால் பழக்கம் போய்விடுகிறது.
இப்போதெல்லாம் அமெரிக்காவில் சிகரெட்டை நிறுத்த பலவிதமான patch டம்மி சிகரெட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்தியாவிலும் கிடைக்கலாம். எல்லாவற்றிலும் சிறந்தது லங் கேன்சர் பயம்தான். 90 விழுக்காடு சிகரெட் குடிப்பதால் இது வருகிறது. வகுத்துப் பார்த்தால் இன்றைய தினம் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வருஷத்துக்கு 130 சிகரெட் குடிக்கிறார் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. சுமார் ஐந்து கோடி மக்கள். பெரும்பாலும் ஆண்கள் புகைபிடிக்கிறார்கள். 50 லட்சம் பேர் அதைக் கைவிட்டிருக்கலாம். அந்நியச் செலாவணி நிறைய சம்பாதிக்கிறது. நம் மக்கள் தொலையில் ஐந்து விழுக்காடாவது இந்த வியாதியின் அபாயத்தில் இருக்கிறார்கள். இதனுடன் சேர்ந்து புகையிலை சார்ந்த வாய், நாக்கு, தொண்டை, உணவுக்குழல் கேன்சர்கள்… கிட்னிகாரானரி ஆர்ட்டரிகளைப் பாதிக்கும் வியாதிகளுக்குக் கணக்கில்லை. இதை அறிந்து கொண்டால் பாட்ச் தேவையில்லை.
பற்ற வைப்பதற்கு முன் ஒரு நிமிஷம்..!
நன்றி : சுஜாதா – கற்றதும் பெற்றதும் – ஆனந்தவிகடன் (29.12.2002)
படித்தது
*****************மானசீகன்****************
சுஜாதா எல்லோரையும் போல் எனக்கும் ஆதர்சம்தான்.எனக்குள் வியப்பை மலர்த்திய முதல் எழுத்தாளர்.என் எழுத்தில் வெளிப்படும் நுணுக்கமான கிண்டல்களில் அவர் சாயலும் உண்டு (எனக்கான தனித்தன்மைதான் அதிகம். நான் அவரை ஒருபோதும் பிரதியெடுக்க முயன்றதில்லை )
நாம் ஆரம்பகாலத்தில் சில எழுத்துக்களைப் படித்து விட்டு மேலே வருவோம். லட்சுமி,சிவசங்கரி,ரராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்கள் ஒரே கதையை வைத்து ஆயிரம் நாவல்கள் எழுதும் சாதனையாளர்கள்(?).பிறகு யாரோ ஒரு புண்ணியவானின் தயவால் நமக்கு தீவிர இலக்கியம் அறிமுகமாகும்.சுரா, ஜெயகாந்தன், பிரமிள்,நகுலன், வண்ணதாசன், ஜெயமோகன் என்று படித்து விட்டு கம்பு சுற்ற ஆரம்பிப்போம். இந்த இரண்டு பாதைகளுக்கு நடுவில் முச்சந்தியில் நிற்கும் இருவரை நாம் சந்திக்காமல் செல்ல முடியாது. ஒருவர் சுஜாதா, இன்னொருவர் பாலகுமாரன்.பாலகுமாரனை நாம் வாசிப்பால் தாண்டிச் சென்று விட முடியும். சுஜாதாவை அப்படி தாண்டி விட முடியாது. அவர் எப்போதும் சரியாக ஒரு கைப்பிடியளவு நமக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருப்பவர்.
தமிழ் இலக்கிய உலகில் அவர் ஒரு அபூர்வம். அவர் நினைத்திருந்தால் தீவிரமான இலக்கியத்தை வெகு சாதாரணமாக படைத்திருக்க முடியும். அவரது வாசிப்பும், நுண்ணுணர்வும் அப்படிப்பட்ட தரத்தைக் கொண்டவை. ஆனால் அவர் வேண்டுமென்றே அதே இடத்தில் நின்றிருந்தார். அவருக்கு அதுதான் பிடித்திருந்தது. அவர் அடிப்படையில் ஒரு ஆசான். அவரால் அறிஞர் சபையில் வந்து விவாதிக்க முடியும். ஆனால் விரும்ப மாட்டார். அறிஞர்களின் சபையில் எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாய் இருந்து விட்டு அங்கே கற்றுக் கொண்டதை கடைவீதியில் மேடை போட்டுப் பேசும் சுவாரஸ்யமான ஆசான் சுஜாதா. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்துலகில் ரெண்டு ஆசான்கள்தான்.ஒருவர் சுஜாதா;இன்னொருவர் ஜெயமோகன்.சுஜாதா மரணத்தைக் கூட நகைச்சுவை ததும்பப் பேசுவார். ஜெயமோகன் கொசு அடிப்பதற்குக் கூட ஒரு கோட்பாட்டைக் கண்டுபிடித்து பலமணி நேரம் விளக்குவார். ஜெயமோகனை முழுவதும் வாசித்து அவரது கோட்பாடுகளை மீறுவதன் வாயிலாகவே ஒரு இளம் படைப்பாளி வளர முடியும். சுஜாதாவை மீற வேண்டியதில்லை. அவர் 'சூது கவ்வும்' படத்தில் வரும் ஷாலுவைப் போல. எவர் கண்ணுக்கும் தெரியாமல் நம்மோடு உரையாடிக் கொண்டிருப்பார்.
சுஜாதாவின் படைப்புகளை எதிர்காலத்தில் வாசித்தால் அவரது எழுத்துகள் சாதாரணமான ஒன்றாகவே மதிப்பிடப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுஜாதா என்கிற ஆளுமையுடனும்,அவர் வாழ்ந்த காலகட்டத்துடனும் வைத்துப் பார்த்தால் மட்டுமே அவற்றின் முக்கியத்துவம் புரிய வரும். சுஜாதாவை வாசிப்பதன் மூலமாக ஒருவன் சுஜாதாவை விட பலமடங்கு வளர முடியும். அதற்காகத்தான் சுஜாதா பிறந்திருக்கிறார்.
இலக்கிய உலகத்திற்கு அவரளித்த பங்களிப்பாக நான் அவருடைய நவீனமும், நகைச்சுவையும் ததும்பும் சிக்கனம் கொண்ட உரைநடையைச் சொல்வேன். எந்த சில்மிஷத்திற்கும் வாய்ப்பில்லாத, காதலியாகப் போகிற தோழியுடனான பயணத்தைப் போன்றது அவர் உரைநடை.அதன் எல்லை குறுகியதுதான். ஆனால் அந்தக் குறுகிய சாத்தியத்தில் ஏற்படும் அதீத மனவெழுச்சிதான் அவர் எழுத்துக்களின் வெற்றி.
பிராமண சமூகத்தை மீறியதாலேயே வளர்ந்த சமூகம்தான் தமிழ்ச்சமூகம்.கல்வி, கலை, அரசியலில் அவர்கள் நிறைய சாதித்திருந்தாலும் அவர்களை மீறுவதன் வாயிலாக உருவான முரணியக்கமே தமிழகத்தின் தனித்தன்மையாக நீடிக்கிறது. ஆனால் சகல திராவிடர்களும்,தமிழ் தேசியர்களும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கற்றுக் கொண்டது சுஜாதாவிடம் மட்டும்தான். அதற்கு மிக முக்கியமான காரணம் அவர் ரொம்ப நவீனமாக இருந்தார். கடந்த காலத்தின் பெருமிதங்களைத் தூக்கிச் சுமக்காமல் நிகழ்கால யதார்த்தத்தை புரிந்து கொண்ட யதார்த்தவாதியாயிருந்தார்.கடவுளை பயங்கரமாய் கிண்டலடித்துக் கொண்டே பாசுரங்களின் அழகை வியக்கிற வைணவராயிருந்தார்.ஆழ்வார் பாசுரங்களுக்கு நிகராக சங்க இலக்கியங்களையும், புறநூனூறையும், திருக்குறளையும் ஏற்றுக் கொள்கிற பரந்த பார்வை அவரிடம் இருந்தது. அவர் நாரதரிடம் கூகுளைக் காணாமல் உலகின் அனைத்து துறை அறிவையும் அறிமுகப்படுத்துகிறவராய் இருந்தார். பல்வேறு மதங்களின் வேதநூல்களை ஆழக் கற்றறிந்து அவற்றின் சாராம்சத்தில் உறைந்திருக்கிற ஒருமையை உணர்கிற பேரறிவு அவருக்கு வாய்த்திருந்தது.அவர் எல்லோருடனும் மிதமான குரலில் உரையாடினார். அவர் கால்பதித்த துறைகள் அனைத்திலுமே அதிகம் அலட்டிக் கொள்ளாமலே ஜெயித்தார். ஜெயித்த பிறகும் ஒரு ஆசிரியரின் குணத்தோடு தன் வெற்றி இரகசியங்களை ஊருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.தனக்கு யாரோ அணிவித்து விட்ட மாலையை பிறரிடம் காட்டும் போது கூட அதிலிருக்கும் மலரின் தாவரவியல் பெயர் சொல்லி உரையாடும் அறிவுணர்ச்சியும்,அடக்கமும் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.அவர் அறிவியலை கோவிலாக்கி அதன் வழியே கடவுளை தேடிக் கொண்டிருந்த அறிவு உபாசகன். மிக முக்கியமாக அவர் ஹெச். ராஜா, எஸ். வி. சேகர் போன்ற அரைகுறைகளைப் போல் ஒரு போதும் உளறியதில்லை.
சுஜாதா விரல் நீட்டிப் பாராட்டினாலே ஒருவன் பலரது கவனத்திற்கும் உள்ளாக முடியும் என்கிற சூழல் ஒருகாலத்தில் நிலவியது. நா.முத்துக்குமாரும்,மனுஷ்யபுத்திரனும் அடைந்த உயரங்களுக்குப் பின்னால் இருப்பது அவர்களின் திறமை மட்டுமல்ல;அந்தத் திறமையை மிகச்சரியாய் ஒரே ஒரு கவிதையில் கண்டறிந்த சுஜாதாவும் இருக்கிறார். இன்று நிகழ்ந்திருக்கிற நவீன இலக்கிய, சிற்றிதழ் வாசிப்பிற்குப் பின்னால் சுஜாதாவும் அவரது பத்தி எழுத்துக்களும் இருக்கின்றன. அதற்கான அத்தாரிட்டியாக தன்னை அவர் முன்னிறுத்திக் கொண்டதே இல்லை; அதுதான் சுஜாதா.
அவர் எவ்வளவு பெரிய ஆள் என்று சுட்டிக் காட்ட இரண்டு விஷயங்கள் போதும்.தமிழில் உலக இலக்கியமே இல்லை;நல்ல எழுத்தாளர் இன்னும்பிறக்கவேயில்லை;தமிழின் ஒரே உலக எழுத்தாளர் தான்தான் என்றெல்லாம் குடுகுடுப்பைக்காரனைப் போல் குறி சொல்லிக் கொண்டிருக்கும் சாரு நிவேதிதா சுஜாதாவின் பெயர் சொன்னால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்.தன் எழுத்தில் அவரது தாக்கமிருப்பதைக் கூட ஒத்துக் கொண்டார். இன்னொருவர் வாசுகி பாஸ்கர்.பெரியாரையும்,அம்பேத்கரையும் தனக்கான வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டு நவீனமான நடையில் 'பிராமணியத்தை' துவைத்துக் காயப் போட்டுக் கொண்டிருக்கிற வாசுகி பாஸ்கர் தன் முகப்புப் படமாகவே சுஜாதா என்கிற பிராமணரைத்தான் வைத்திருக்கிறார்.
சுஜாதாவை யாரும் தவிர்க்க முடியாது. டிவிட்டர், வாட்ஸ் அப்,முகநூல் என்று விஞ்ஞானத்தின் சாத்தியத்தால் எல்லோரும் எழுத்தாளர்களாகி விட்ட ஒரு சூழலில், ஒரு புதிய உலகத்தைப் படைத்து விட்டு உடனே தலைமறைவாகி அதற்குப் பிறகும் கூட
மற்றவர்களை நினைக்க வைக்கிற கடவுளின் இடத்தில் இப்போது சுஜாதா இருக்கிறார்.
ஆசானே!நான் அங்கே வரும் போது நீ அடித்த நுணுக்கமான ஜோக்குகளை கடவுளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். அதுவரை மரித்துப் போன மதகுருக்களிடமிருந்து சொர்க்கத்தை காப்பாற்றி வை!
HBD சுஜாதா சார்!
#Mohammed Rafeek R