Sunday, 27 August 2017

கவிதை

G.வசந்தகுமாரன் கவிதைகள்...

🔴சாவதென
முடிவெடுத்த பிறகுதான்
நான் உன்னைக்
காதலிக்கத் தொடங்கினேனோ?

🔴 கொன்றபின்
எனக்காக  அழுவாயெனில்
என்னைக் கொன்றுவிடு.

🔴 நீதான் வேண்டும்
என்னைக்
கொல்வதானாலும்.
்்்்்்்்்்்்்்்

🔴நீ என்னை
எறிந்த இடத்தில்
முளைப்பேன்
உன் கூந்தலுக்கு
ரோஜாவாக!

🔴நீ என்னை
வெறுத்தாலும் எனக்கு
விரக்தியில்லை.
வெறுப்பதற்காகவேணும்
என்னை நினைப்பாய்
இல்லையா!

🔴 கனவுகள்
தொடமுடியாத
தூக்கம்
மரணம்!

🔴என் கல்லறையில்
இப்படி
எழுதி வையுங்கள்:
வாழ நினைத்து
தோற்றவன் இங்கே
தூங்குகிறான்.

🔴நான் இறந்தபிறகும்
உன் ஞாபகம் வந்தால்
எழுந்து உன்னை நினைப்பேன்...

🔴நான் நானாக இல்லாதபோது
நீ என்னை நேசித்தாய்.
நீ நீயாக இல்லாதபோது
நான் உன்னை நேசித்தேன்.
நான் நானாகவும்
நீ நீயாகவும் ஆனபோது
முகவரியற்ற அனாதையாகிவிட்டது
நம் காதல்.

🔴நீ
பறவையாக
இருந்தபோது நான்
சிறகாக இருந்தேன்
என்னைத் தெரிகிறதா?
்்்்்்்்்்்்்்்்்
🔴 மரணம் வழங்காதீர்
உயிரோடு விட்டுவைப்பதும்
தண்டணைதான்.
்்்்்்்்்்்்்
🔴 மறுபடியும் பிறந்து
மீண்டும் உன்னைக்
காதலித்து
தோற்கவேண்டும் நான்!
்்்்்்்்்்்்்்்்்்
🔴 யாரிடமும் இல்லை
நான்
என்னிடமும்கூட!

🔴தயவு செய்து
என்னைச் சாகவிடு
உன் மடியில்!
்்்்்்்்்்

🔴என்னை வெறுத்தேன்
புத்தன் சிரித்தான்
வெறுப்பதும் ஆசைதானே?
்்்்்்்்்்்்்்்்்்்

No comments:

Post a Comment