திருமாவேலன்
மனம் இனிக்கும் போதும்
மனம் வலிக்கும் போதும்
ரூமியின் எந்தச் சொல்லையும்
எடுத்து முகம் கழுவலாம்.
இன்றிலிருந்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் ( 1207 - 1273) இன்றைய துருக்கியில் துளிர்த்தவன். பாரசீகக் கவி. சூஃபி ஞானி. பெர்ஷிய மொழியில் எழுதியவர். கவியும் கதையும் அவரது உடல் உறுப்புகள். இசையும் இறையும் அவரது மெய் உறுப்புகள்.
எங்கிருந்தோ வந்த ஷம்ஸ் என்பார் இவரோடு இரண்டு ஆண்டுகள் தங்கி ஞானம் கற்றுத்தந்தார். திடீரெனத் தலைமறைவு ஆனார்.
இந்த ஏக்கமே ரூமியைத் துவள வைத்து வார்த்தைகளை வெளியில் தள்ளியது. அகத்தைக் களைதலும் இசையில் திளைத்தலும் ரூமியின் பாதை. வலது கையை வானை நோக்கியும் இடது கையை பூமியை நோக்கியும் நீட்டியபடி வணங்குதல் அவரது வழக்கம்.
கவிதையில் திளை என்றார். கவிதைக்கு உள்ளே இருக்கும் துடிப்புகளைக் கேள் என்றார். கவிதை எழுது என்றார். நீயே கவிதை என்றார் ரூமி கவி!
எந்தச் சொல்லைக் கோர்த்தாலும் அன்பு இருக்கிறது. அன்பால் இருக்கிறது. அன்புக்குண்டோ அடைக்கும் தாழ் என்றவன் தமிழ் வள்ளுவன் அல்லவா?
யாரைப் பார்க்கும்போது உனது அரண் தகர்க்கப்படுகிறதோ அவர்களிடம் அன்பு செலுத்தச் சொல்கிறது ரூமி வரிகள். அவரின் பல்லாயிரம் வரிகளில் இருந்து சில நூறு வரிகளை மட்டும் என் சத்தியமூர்த்தி ( முன் எழுத்துக்கு முன் புள்ளி தவிர்க்கப்பட்டுள்ளது!) மொழிபெயர்த்து " தாகங்கொண்ட மீனொன்று" எனத் தலைப்பிட்டு தமிழில் வெளியிட்டுள்ளார்.
எனது நண்பர் தேவநேயனின் நண்பர் என பின்னர் அறிந்தேன். ரூமியை மொத்தமாய் தமிழுக்குத் தர வேண்டிய கடமை என் சத்தியமூர்த்திக்கு உண்டு.
ரூமியைப் படித்தால்
நெஞ்சு திறக்கிறது
கற்பனை விரிகிறது
உடல் லகுவாகிறது
மூளை விடுதலை அடைகிறது.
இந்த நாட்டில் இந்த நான்குக்கும் தான் முதலில் பஞ்சம் வந்தது. இதன்பிறகு
முதலாளித்துவ சமூகத்தில் பணத்திற்கு மதிப்பிருக்கும்.ஆனால் அதை நம்பியிருக்கும் மனிதனுக்கு மதிப்பிருக்காது
கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம்
No comments:
Post a Comment