Sunday, 27 August 2017

ராஜூமுருகன்

ஆண்-பெண் தோழமை
எவ்வளவு வைராக்கியமானது
ஒரு பெண்ணின் நட்புதான்
ஆணுக்குப் பெருங்கொடை
எல்லா தோழிகளுக்கும் கொஞ்சம்
அம்மா சாயல் இருக்கிறது
அவர்களின் ஒரே ஒரு குறுஞ்செய்தி
நமது நாளையே மலர்த்திவிடுகிறது
ஒரு வார்த்தை,உரையாடல் எவ்வளவோ
நம்பிக்கைகளை அளித்துவிடுகிறது
கனவுகளை புதிப்பிக்கிறது
அவர்கள் உடன் இருந்தால்
துயரங்கள் சிறிதாகி விடுகின்றன
உறவுகளாலும் பிரிவுகளாலும்
மனதில் எரியும் காயங்களுக்கு
இந்த விரல்கள்தான் விசிறி வீசிவிடுகின்றன

-ராஜு முருகன்

No comments:

Post a Comment