Sunday, 27 August 2017

கதிர்பாரதி

*ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்*

வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு
வாக்கப்பட்ட அத்தையொருத்தி
தன் மனசுக்குள் மடித்துவைத்திருக்கிறாள்
பெல்பாட்டம் பேன்ட்  ஒன்றை

யாருமற்ற பொழுதுகளில்
அதை வெளியே எடுத்து
உதறி
நீவிவிட்டு
மீண்டும் மடித்து வைத்துக்கொள்கிறாள்.

அப்போது மட்டும்
மிகச் சன்னமாக ஒலிக்கவிடுவாள்
யெஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்
பாடலை

மற்றபடி
மாமனுக்கு மூன்று பிள்ளைகள் பெற்றிருக்கிறாள்
அதிலொன்று இரட்டைப் பிரசவம்.

     -கதிர் பாரதி
(ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்)

No comments:

Post a Comment