Sunday, 10 November 2024

புத்தகம்-22


Reading_Marathon2024
#24RM050

Book No:22/100+
Pages:152

கதைக் கம்பளம்
-ச. தமிழ்ச்செல்வன்

ஸ்வீட் கடைக்குச் சென்று ஒரே ஒரு ஸ்வீட்டினை மட்டும் வாங்காமல் எல்லா சுவீட்டுகளையும் சாப்பிட்டு பார்த்தால் எப்படி சுவையாக இருக்குமோ அதுபோல இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு சரியான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய சுவை உளள தொகுப்பாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் மாணவர்களிடமும் வாசிப்பாளர்களிடம் ஆசிரியர் நான்கு விதமான கேள்விகளை கேட்கிறார் ..அது இன்னும் அக்கதையினை மீளாய்வு செய்து நமக்குள் நாமே விவாதித்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

முகத்தில் அவர் கொண்டு வர நினைத்திருந்த சாதாரண தன்மை மெல்ல மெல்ல பரவுவதை உணர்ந்தேன் என்று முன்னுரையிலேயே கதைகளை சொற்களால் நெய்துவிடும் திருச்செந்தாழையின் விலாசம்  கதை ராமவிலாசத்தின் வரலாற்றையும் மனித வரலாற்றையும் பேசுவதாக முதல் கதை உள்ளது.

முதன்முதலாக கிராமத்துக்கு வரும் பேருந்தினைப் பார்த்து அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் அதிசயிருக்கின்றனர். மாடுகளை பேருந்தில் எங்கே கட்டி உள்ளார் என்பதை கண்டறியும் செம்பட்டை தான் அந்த ஊரில் பெரிய சயின்டிஸ்ட் ஆக வலம் வருகிறான். நகைச்சுவையோடு க.சீ.சிவக்குமார் சொல்லும் அந்த பஸ் கதை நம்மையும் அந்த ஊரில் பயணிக்க வைக்கிறது.

எண்பதுகளில் தொண்ணூறுகளில் தொலைக்காட்சியில் தோன்றுவது என்பது கடவுளாய் வரம் கிடைத்ததற்கு சமம் தான். டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்லும் ஒரு மனிதனும் அங்கு நடைபெறும் உரையாடல்களுமாய்
வேலையில்லாத இளைஞனின் கதையை சொல்லி இருப்பார் எழுத்தாளர் ஞா‌நி

அவன் நம்மளுக்கு எதிரி இல்லை நம்ம கோபம் தான் நம்மளுக்கு எதிரி. அதுதான் நம்மள கொலை வாங்குது என்ற கருத்தினை பேசும் கதையாய் எதிரி கதையை எழுத்தாளர் இமையம் எழுதி இருப்பார். காவல் நிலையத்துக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கச் செல்லும் ஒரு பெண்ணின் பார்வையும் பெண்ணினை அடித்தவரின் பார்வையும் காவல் நிலையத்தில் நடக்கும் அணுகுமுறையும் எவ்வாறு ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு எதிரியாக தெரிகிறது என்பதை நெற்றி போட்டில் அடித்தால் போல கதையில் சொல்லி இருப்பார்

பஸ் ஸ்டாண்டில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் அயினுக்கு 5 பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளை எதிர்பார்த்து ஏமாந்த ஏழை. நாள்தோறும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் 30 ரூபாய் கிடைக்கும். இந்த அன்றாடம் காட்சியை வாழ்க்கையில் ..எட்டு குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் ஏறும் போது ஒரு பெண் தன் குழந்தையை வைத்துக் கொள்ளும்படி தருகிறார் .அதை வாங்கி வைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தால் பெண்ணினை காணவில்லை .எந்த இடத்தில் தேடியும் அவள் தாயினை கண்டறியாதலால் தான் திரும்பவும் வீட்டிற்கு வருகிறான். ஏற்கனவே பெண்பிள்ளைகள்.. தற்போது இன்னொரு பெண் பிள்ளையா என்று ஆயிரம் கேள்விகளுடன் வரும்போது அவன் மனைவி எதிர்கொண்ட விதமும் ,கருணை பொங்கும் ஏழையின் பார்வையும் லட்சுமண பெருமாள் வயனம் கதையில் எழுதி இருப்பார்.

வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் தன் அக்காவின் வீட்டுக்காரர் உலகநாதனை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்படும். ஒரு கட்டத்தில் அவர் செய்யும் காகித பொம்மைகளை பார்த்து மனமிறங்கும் அவன் அவரிடம் நட்பு கொள்கிறான். இப்படியே சென்று கொண்டிருக்கும் நாட்களில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இல்லாத தன் அக்கா மாமாவை சந்திக்க ஊருக்குச் செல்கிறான். அப்போது மாமா மளிகை கடையில் பொட்டலம் கட்டும் தொழில செய்கிறார் .அப்போது தான் இளமைப் பருவத்தில் தனக்கு செய்து கொடுத்த பொம்மைகளை மீண்டும் செய்து தரச் சொல்கிறான். அப்போது அந்த காகித பொம்மையை செய்யும் போதெல்லாம் பல சரக்கு கட்டும் பொட்டலமாக வருகிறது. அற்புதங்கள் தாங்கள் ஒரு காலத்தில் இருந்ததற்கான ஏதாவது அடையாளத்தை விட்டு வைக்காமல் போவதில்லையே. இழந்ததை நினைத்து தவித்துக் கொண்டிருக்கின்ற என் மாமாவின் கண்களில் அன்பின் ஒளி மீந்திருந்ததை நான் உணர்ந்தேன் என்று இறுதியில் உதயசங்கரின் கதை நம்மை நெகிழ வைக்கிறது.

நகரங்களில் வீடு மாறுவதற்கான வலியையும் வேதனையும் ஒரு வாடகை வீட்டுக்காரரின் பார்வையிலிருந்து அணுகும் ஆதவன் தீட்சன்யா தனது காக்கை குருவி உங்கள் ஜாதி என்னும் கதையில் விவரிப்பார். கடைசி பெஞ்ச் காரர்களின் உலகத்தினை தேர்வு எழுதும் நாட்களில் நடைபெறும் சம்பவங்களையும் கார்த்திக் புகழேந்தி தேர்வு காலம் கதையில் சொல்லி இருப்பார். 

கே என் செந்தில் அவர்களின் விருந்து கதை மிகவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தொகுப்பு நூலில் கதையினை படித்திருந்தாலும் இந்த கதம்ப மலரில் அந்த கதையும் தனித்து தெரிந்ததாய் அமைகிறது. கட்சித் தலைவரின் பிறந்தநாளில் வழங்கப்படும் பிரியாணியை உண்ணும் ஆர்வத்தில் பிச்சைக்காரர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதை தனக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் கதையினை நம் முகத்துக்கு நேராக கற்பனையில் விரியும் படி சொல்லி இருப்பார்.

கேபிள் டிவி வசூலுக்கு செல்லும் சிறுவனிடம் பணம் கொடுக்காத வாடிக்கையாளர்கள், பணத்தை வசூல் செய்து வர வலியுறுத்தும் முதலாளி என தற்போது இருக்கும் மன அழுத்தம் வேலை அழுத்தம் அந்த மாணவனுக்கும் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தினால் அவன் இழந்தது என்ன பெற்றது என்ன என்பதனை அரிசங்கரின் புதுச்சட்டை கதை நமக்கு சொல்கிறது.

செந்தில் ஜெகதானனின் ஆடிஷன் கதையில் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை பெற்றிருக்கும் உதவ இயக்குனர் முன்னாள் காதலியின் மகள் தேர்வுக்கு வரும் போது நிகழும் சம்பவங்களும்.. கலைடாஸ்கோப் மனிதர்களை அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சாதாரண மனிதனின் பார்வையை கார்த்திக் பாண்டியன் கதைகளிலும், ஐ கிருத்திகாவின் நாய்சார் கதையில் நாயின் தியாகமும் அன்பும் நன்றியுள்ள விசுவாசமும் கதைகளைப் படிக்கின்ற நமக்கும் ஏற்படுகின்றது.

*அவர் கண்களில் ஒரு தழும்பிய மகிழ்ச்சி கடந்திருக்கும் என உணர்ந்தேன் 

* பள்ளிச் சிறுவன் சிலேட்டையை நீட்டுவதை போன்ற ஒரு அறியாமை நிறைந்த முகத்துடன் மாப்பாவிடம் தந்தார்

*ஆவேசமான கண்கள் காருக்கு முன்பாக சாலையில் ஓடியபடி இருந்தன.

*பழைய நாட்களின் ஞாபகங்கள் மறதியின் புதைச்சியேற்றிலிருந்து மீறி கிளம்பி வந்தன

*தொலைந்த ஞாபகங்களை தேடிப் பிடிப்பவர் போல நெற்றியை சுருக்கினார்

ஆறாம் வகுப்பில் சிறுகதைபூங்கொத்து புத்தகம் வாங்கியவுடன் அந்த கதைகளில் வரும் 10 கதைகளையும் படித்து விடுவேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். குழந்தைகளுக்கு சொல்லும் படி இருக்கும். நாம் கற்றுக் கொள்ளும்படி இருக்கும் .நாமே முயன்று வாசித்தது மிகவும் இனிமையான வாசிப்பு நாட்களில் ஒன்று. அதேபோல இந்த புத்தகத்தில் உள்ள 15 கதைகளை வெவ்வேறு எழுத்தாளர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அனுபவங்களை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஒவ்வொரு கதையும் கதை நிகழ்ச்சியும் நம் வாழ்வினோடு சேர்த்து அசை போட வைக்கிறது. அனுபவங்களை கூர்தீட்டுகிறது. மிகச் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

‘ஐம்பது வயதைக் கடந்த பின் நாமெல்லாம் வானத்தில் எறிந்த கல், திரும்பி வரும் பாதையில் இருக்கிறோம். விழும்போது நல்ல நெஞ்சங்களில் விழ வேண்டும்’-படித்தது

"முதலில் எழும் விருப்பத்தைத் தொடர்ந்து வரும் பிற விருப்பங்கள் அனைத்தையும் திருப்திப்படுத்துவதைக் காட்டிலும், முதல் விருப்பத்தை அடக்கிவிடுவது எளிது!"-பெஞ்சமின் ஃபிராங்க்லின்

Saturday, 9 November 2024

"பயன் விளைவிக்கும் மனிதர்கள் அனைவரும் நல்ல எண்ணங்களையும், நல்ல யோசனைகளையும், நல்ல நோக்கங்களையும் கொண்டுள்ளனர். ஆனால், விலைமதிப்பு மிக்க வெகு சிலரே அவற்றைச் செயல்வடிவாக்குகின்றனர்."-ஜான் ஹேன்காக் ஃபீல்டு

80 சதவீத நேரம் நீங்கள் எதில் மிகவும் திறம் படைத்தவராக இருக்கிறீர்களோ அதில் வேலை செய்யுங்கள். 15 சதவீத நேரம் நீங்கள் எங்கு கற்றுக் கொள்கிறீர்களோ அங்கு வேலை செய்யுங்கள் 5 சதவீத நேரம் நீங்கள் எங்கு பலவீனமாக இருக்கிறீர்களோ அதை வலிமையாக்க வேலை செய்யுங்கள்.இனிய காலை

சுதர்சன்


தன்னைப் பற்றிச் சிந்திக்கிற எல்லாருக்குமே ஒரு existential crisis வரும். ஒரு anxiety இருக்கும். எதற்காக உலகத்துக்கு வந்தோம்? உடல் ஒத்துழையாமல் இறந்துவிடுவோமோ? இந்த வாழ்க்கையோட ஆழமான அர்த்தம் என்னவென்று எல்லாம் கேள்வி வரும். இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்குள்ளும் வராமல் இருக்குமா என்ன? ஆனால் அப்படி எனக்குள் தோன்றுகிற அந்த எண்ணங்களை, Anxiety இனை எல்லாம் எதிர்த்து சண்டை போடுகிற சக்தி சிலவற்றுக்கு உண்டு. 

உதாரணமாக, அழகை ரசிப்பது, கலையில் அழகு காண்பது, புதிது புதிதாக எதையாவது அறிந்துகொள்வது, புத்தகங்கள், காதல், காமம், அம்மா, தமிழ், பெண்கள், இயற்கை, அன்பு, அழகின் ஆராதிப்பு என்று ஏராளம் இருக்கின்றன. இவையெல்லாம்  ஒன்றிலேயே என்னைத் திளைத்திருக்கச் செய்யும் விடயங்கள். நான் நுணுக்கம் தேடும் விடயங்கள். என்னை அந்தப்பொழுதில்  இன்பமாக வைத்திருக்கும் விடயங்கள். ஆமாம், இன்பம். என்னுடைய தத்துவம் இன்பம். ஆனால் அந்த இன்பங்களை இன்னுமின்னும் ஆழமாக, அர்த்தமுள்ளதாகக் காண விளையும் போது, நம்மை நாமே உணர்ந்து அந்த நான் என்கிற புரிதல் ஊடாக அவற்றை இரசித்துக் காண விளையும் போது அது இன்னோர் உன்னத நிலைக்குப் போய்விடுகிறது.  

-சுதர்சன்

Friday, 8 November 2024

குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல இதுகாண் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்புடையரான குணங் கண்டவிடத்து இவை உண்மையான ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற்பாற்று! அன்புடையரான குணம் யாவையோ எனின்... சாவிற் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வு நனிவேட்டல், பிரிவு நனியிரங்கல் என இவை.’’ இது 8-ம் நூற்றாண்டு உரைநடை. 21-ம் நூற்றாண்டுக்கு மொழிபெயர்த்தால், அதில் உள்ள சிந்தனை தெளிவாகிறது; இன்றைக்கும் செல்லுபடியாகிறது. ‘குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல... இதுதான் அன்பு என்று அறியுமாறு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் குணங்களைப் பார்க்கும்போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்... சாவில் சாதல், நோவு வந்தால் வருத்தப்படுவது, பொருள் உதவி செய்வது, நல்லதாக, இனிமையாகப் பேசுவது, சந்திப்பதை மிகவும் விரும்புவது, பிரிவில் மிகவும் வருந்துவது என இவை.’-சுஜாதா

Saturday, 2 November 2024

கீட்ஸ்


Too happy in thine happiness
-கீட்ஸ்

உங்கள் மகிழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள்

இந்த வரியை பார்த்தவுடன் சாதாரணமாக தோன்றும். ஆனால் அதை நினைக்க நினைக்க உளவியல் ரீதியான ஊற்று நம் மனதில் சுரக்கும். ஏனெனில் மகிழ்ச்சி என்பது பிறர் மட்டுமே இருப்பார்கள். சந்தோஷம் முழுவதும் பிறருக்கு மட்டுமே கிடைக்கும். தனக்கு எப்போதும் கிடைக்காது என்று ஒருவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான்.

 தனக்கு கிடைத்த மகிழ்ச்சியை கூட கொண்டாடாமல் பிறரின் மகிழ்ச்சியை பார்த்து ஏக்க உணர்வு கொள்கிறான். அதற்குத்தான் கீட்ஸ் அவர்கள் நைட்டிங்கேல் பறவை தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பாடுகிறது. அதனை பார்த்து பொறாமைப்படாமல் உங்களுடைய மகிழ்ச்சியில் மகிழ்வாய் இருங்கள் என்று கவிஞர் கூறுகிறார்.

 தற்காலத்தில் இதை யோசித்துப் பார்த்தோமேயானால் பிறர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நாம் பெரும்பாலும் பொறாமை கொள்கிறோம். அப்படி இல்லாமல் நம்முடைய மகிழ்ச்சியை நாம் தான் முதலில் கொண்டாட வேண்டும் என சின்னஞ்சிறு வரிகள் பேருண்மையை உணர்த்துகிறது

Too happy in thine happiness-கீட்ஸ்உங்கள் மகிழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள்

நியாண்டர் செல்வன்


"முடிவற்ற குரங்குகள் தியரி" (Infinite Monket Theorem) என ஒரு கோட்பாடு புள்ளியியலில் உண்டு

1913 ஆண்டு எமிலி போரெல் எனும் கணிதவியல் நிபுனர் இதை முன்மொழிந்தார். இதன்படி "இன்பினிட்டி" எனும் முடிவற்ற எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் கையில் தலா ஒரு கணிணியை கொடுக்கவேண்டும். அதன்பின் அந்த குரங்குகள் தொடர்ச்சியாக அந்த கணிணியில் நொடிக்கு ஒரு பட்டனை அமுக்கவேண்டும்

இப்படி முடிவற்ற எண்ணிக்கையிலான குரங்குகள், பல, பல லட்சம் கோடி ஆண்டுகள் கணிணியை தட்டச்சிகொண்டே இருந்தால், ஏதோ ஒரு குரங்கு ஷேக்ஸ்பியரின் மொத்த படைப்புகளையும் எழுத்து மாறாமல் ரேண்டம் ஆக தட்டச்சும் என்றார் எமிலி

அளவற்ற நேரம் இருந்தால் தற்செயல் ஆக எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரேண்டம் ஆக நடக்கும் விசயங்களுக்குள் தற்செயலான முறையில் ஒழுங்கு உருவாகும் என இந்த கோட்பாடு கூறியது

பிரபஞ்சம் உருவானது, உயிர்கள் உருவானது எல்லாவற்றையும் இந்த முடிவற்ற குரங்குகள் தியரி விளக்குவதாக கூறப்பட்டது

ஆனால் இந்த கோட்பாடு தியரிட்டகல் ஆக சாத்தியமா என நூறாண்டுகளுக்கு மேலாகியும் யாரும் கணிதவியல் முறையில் ஆராயவில்லை

இந்த ஆண்டுதான் பிபிசி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இருவர்  "இந்த தியரி சாத்தியமா?" என ஆராய்ச்சி செய்துவிட்டு பின்வரும் தீர்ப்பை சொன்னார்கள்

"பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அணுக்களையும் தலா ஒவ்வொரு குரங்காக மாற்றி, அனைத்தின் கையிலும் ஒரு கணிணியை கொடுத்து, அவற்றை நொடிக்கு ஒரு எழுத்தை அமுக்க சொன்னால், பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் அழியும்வரையிலான நேரத்தை கொடுத்தாலும் அவற்றால் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மட்டுமல்ல, வெறும் 79 எழுத்துக்கள் கொண்ட ஒரு டாக்குமெண்டை கூட உருவாக்க முடியாது

பல,பல கோடி பிரபஞ்சங்களை உருவாக்கினாலும், அதிலும் இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை" என்றார்கள்

ஆக போதுமான நேரத்தை கொடுத்தால் தற்செயலாக எல்லாமே நடக்கும் எனும் கோட்பாடு பிழையானது என்றது ஆய்வு.  இதை கண்டுபிடிக்கவே நூறான்டுகள் ஆகியிருக்கிறது

இதற்கு பிபிசி கொடுத்த தலைப்பு "குரங்குகள் எப்போதும் ஷேக்ஸ்பியரை எழுதாது"

எது முதலில் வந்தது — ஒழுங்கா, குழப்பமா?  
பிரபஞ்சத்தின் புதிரை யாரும் அறிந்ததில்லை

குரங்குகள் டைப் அடித்தால் 
ஷேக்ஸ்பியர் ஆகுமென்றார்கள்
ஒரு ஒற்றைபக்கத்தை கூட 
அவற்றால் அடிக்கமுடியவில்லை

எதனால் உருவானது இயற்கையின் நடனம்?  
எங்கிருந்து தோன்றின உலகத்து உயிர்கள்  
கூடுமா குழப்பத்தில் ஒழுங்கு தோன்ற?
நாம் அறிய முடியாத புதிரின் மொழியாக.

இது கேள்வி இல்லை, இது ஓர் சிந்தனை,  
ஒழுங்கில் இருந்து பிறந்தது ஒழுங்கற்றதன்மையா
அல்லது ஒழுங்கற்ற ரேண்டமில் பிறந்தது ஒழுங்கா?

நாம் காணும் உலகில் ஒவ்வொரு அணுவும்,  
அந்த ஒழுங்கின் அரிச்சுவடியா, குழப்பத்தில் பிறந்ததா?
குழம்புகிறான் மனிதன்
குழப்பமின்றி டைப்படிக்கின்றன குரங்குகள்
ஷேக்ஸ்பியர் ஆகும் ஆர்வத்தில்

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்