Friday, 8 November 2024

குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல இதுகாண் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது. அன்புடையரான குணங் கண்டவிடத்து இவை உண்மையான ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற்பாற்று! அன்புடையரான குணம் யாவையோ எனின்... சாவிற் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வு நனிவேட்டல், பிரிவு நனியிரங்கல் என இவை.’’ இது 8-ம் நூற்றாண்டு உரைநடை. 21-ம் நூற்றாண்டுக்கு மொழிபெயர்த்தால், அதில் உள்ள சிந்தனை தெளிவாகிறது; இன்றைக்கும் செல்லுபடியாகிறது. ‘குடத்துள் விளக்கு, உரைக்குள் கத்தி போல... இதுதான் அன்பு என்று அறியுமாறு திறந்து காட்ட முடியாது. அன்புள்ளவரின் குணங்களைப் பார்க்கும்போது இவை இருப்பதால் (உண்மையாய்) இங்கே அன்பு இருக்கிறது என்று அறிந்துகொள்ள முடியும். அன்புள்ளவரின் குணங்கள் என்னென்ன என்றால்... சாவில் சாதல், நோவு வந்தால் வருத்தப்படுவது, பொருள் உதவி செய்வது, நல்லதாக, இனிமையாகப் பேசுவது, சந்திப்பதை மிகவும் விரும்புவது, பிரிவில் மிகவும் வருந்துவது என இவை.’-சுஜாதா

No comments:

Post a Comment