Wednesday, 24 May 2023
Tuesday, 23 May 2023
அ.மு
வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான்.அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.
அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான்.அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான்.அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான்.அது எந்திரம் என சொல்லவில்லை.
ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான்.மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான்.சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழித்துக் கொண்டது.பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.
இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான்.பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும்,பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது.
#எஜ்சிவெல் எழுதிய கதை.மதங்கள் உருவானதை கூறுகிறார்.இது வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.
படித்தது
Saturday, 20 May 2023
sudharsan
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.
சுஜாதாவின் குரலோடு ஆரம்பமாகிற பாடல். கதையின்படி பெண்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். களைப்புத் தெரியாமல் பாடுகிற பாடல். பின்னணியில் ரஹ்மான் ஓர் ஓசையைப் பயன்படுத்தியிருப்பார். பாடல் நெடுக அந்த ஓசை இருக்கும். கிராமிய உணர்வுக்காக அந்த ஓசை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.
அதைப் பெண்கள் நெல் குற்றும் ஓசைபோல கற்பனை செய்துகொள்ளவும்.
பெண்கள் உலக்கையால் நெல் குற்றும்போது, இருகைகளையும் மாற்றி மாற்றிக் குற்றுவர். அப்போது அவர்கள் அணிந்திருக்கும் வளைகள் குலுங்கி ஓசை எழுப்பும். அதை வள்ளைப்பாட்டு என்பார்கள். உள்ளத்தில் இருப்பதை உள்ளபடி தலைவி பாடுவாள். இடிக்க இடிக்க உமி எப்படிக் கழன்று போகுமோ அதுபோல இந்தப் பாடல்மூலம் அவள் உள்ளத்து துன்பம் நீங்கும். காதல் வெளிப்படும்.
முற்றத்தில் தினை குற்றுகையில், தலைவி கோபத்தில் தலைவனைப் பழித்துப் பாடுவாள். தோழி, தலைவனுக்கு ஆதரவாகப் பாடுவாள். உதாரணமாக, அவனுடைய நாட்டு வண்டுகள் எல்லாம் பூவினை மணந்துவிட்டு அதன் அழகு கெட கைவிட்டுச் செல்லும் என்று தலைவி சொல்வாள்.
உடனே அதற்கு மறுமொழியாக, அவனுடைய நாட்டு ஆண் யானை, தான் விரும்பிய பெண்யானைக்கு கடினப்பட்டுக் கரும்பு கொண்டுவரும் என்று தோழி கூறுவாள். கலித்தொகையில் கபிலர் எழுதிய "அகவினம் பாடுவம்" பாடல் தலைவிக்குத் தோழி மறுமொழி சொல்லும் பாடல்.
"என் வீட்டுத் தோட்டத்தில்" பாடலில், ஒருபக்கக் காதல் மட்டும் கொண்டிருக்கும் இவள், தன் காதலை பூக்களிடமும் ஜன்னல் கம்பிகளிடமும் கேட்டுப்பார்க்கச் சொல்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி எதிர்ப்பாட்டு பாடுவார்கள். முதலில் பெண் மறுத்துக் கூறுவாள். பிறகு ஆண் மறுத்துப் பாடுவான். வைரமுத்து அதைக் கையாளும் நயம் அழகு.
வாய்ப்பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது.
வாய்ப்பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது.
வண்டெல்லாம் சத்தம்போட்டால் பூஞ்சோலை தாங்காது. மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது.
சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம்போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது.
-சுதர்சன்
Friday, 19 May 2023
டால்ஸ்டாய்
நினைவில் வைத்துக் கொள்வாய்,முக்கியமான நேரம் என்பது இந்த நொடிதான்.
அப்போது யாருடன் இருக்கிறோமோ அவர்களே முக்கியமானவர்கள்.ஏனெனில் அதற்குப் பின் அவர்களை சந்திப்போமா தெரியாது. அவர்களுக்கு நன்மை செய்யவதே முக்கியப்பணி. இதற்காகவே இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டோம்
-டால்ஸ்டாய்
Thursday, 18 May 2023
காப்சா
கற்கை நன்றே-32
*மணி
CAPTCHA - Completely Automated Public Turing Test to Tell Computers and Humans Apart.
தமிழில், மனிதர்கள் மற்றும் கணினிகளை வேறுபடுத்திக் காட்டும், முழுவதுமாக தானியங்கி முறையில் செயல்படும் டூரிங் சோதனை
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானிய நாஜிக்களின் ரகசிய சங்கேத செய்திகளை புரிந்து கொண்டு, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் போரில் ஜெயிக்க உதவியவர் அலன் டூரிங். அவர் பிரபல கணினி மேதை. அவர் இயந்திரங்கள் மனிதர்களைப் போன்று அறிவாட்சித்தரம் பெற்றிருக்க முடியுமா என்பதற்கு டூரிங் சோதனை(Turing Test) என்ற ஒன்றைக் குறிப்பிட்டார். அதில், ஒரே கேள்வியை மனிதன் மற்றும் இயந்திரத்திற்கு எழுப்பி, அதன் மூலம், பதிலைக் கொண்டு, இயந்திரத்தினால் மனிதனைப் போல , வேஷமிடமுடியுமா(Imitate) என்று கண்டுபிடிக்கலாம் என்றார்.
அலன் டூரிங்
அதுதான் இன்று காப்ட்சா(CAPTCHA) என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆம் ஆண்டு, லூயிஸ் வான் ஆன்(Luis Von Ahn) மற்றும் அவரது பேராசிரியர் மேனுவல் பிளம்(Manuel Blum) அவர்களால் , கணினிகளை மற்றும் கணினி வலையமைப்புகளை(computer network), தானியங்கி நிரல்களின்(automated programs) தாக்குதலிலிருந்து காப்பாற்ற கண்டுபிடிக்கப்பட்டது.
இயந்திர செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) பெருகியுள்ள இந்தக் காலத்தில், இந்த காப்ட்சா தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது. திருடர்களைக் கொண்டு, பூட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதைப் போல், இதுவும் தொடர்ந்து கடினமாகிக் கொண்டே வருகிறது.
2000 ஆம் ஆண்டில், லூயிஸ் வான் அஹ்ன் என்ற 22 வயது இளைஞன் தனது பேராசிரியர் மானுவல் ப்ளூம் உடன் இணைந்து தானியங்கு நிரல்களை வெவ்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளங்களைத் தாக்குவதைத் தடுப்பதற்காக கேப்ட்சாவை உருவாக்கினார்.
பயனர் மனிதரா இல்லையா என்பது சரிபார்க்கப்பட்டது
இது OCR ஆல் படிக்க முடியாத வார்த்தையை சரிபார்த்து, மனித அறிவுக்காக அதை டிஜிட்டல் மயமாக்கியது
கேப்ட்சா வகைகள்
கேப்ட்சாக்கள் பொதுவாக மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன-
1.உரை அடிப்படையிஎழுத்துக்கள்
-சிதைந்த எழுத்துக்கள்
2.CAPTCHA படம்
3.ஆடியோ கேப்ட்சா
பின்னர் இன்று நாம் பயன்படுத்தும் புரட்சிகர API வந்தது - NoCAPTCHA reCAPTCHA.
I'm not a robot வகை
இதுவும் பாதுகாப்பு
குறைவாகவே உணரப்பட்டது
சைபர் செக்யூரிட்டியின் பாதுகாப்புற்காகவே இவையெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இன்னும் எதிர்காலத்தில் மாற்றமடையலாம்
இனியகாலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 17 May 2023
காஃப்கா
புகழ்பெற்ற ஜெர்மனிய எழுத்தாளரான "ஃபிரான்ஸ் காஃப்கா" வரிகள்....
எழுத்துக்கு கை,கால்,கண், காது, இதயம் எல்லாம் இருக்கிறது. யாராவது அழுதால்
எழுத்தின் கரங்கள் நீண்டு சென்று துடைத்துவிடும். உங்களை விட்டு யாராவது பிரிந்து சென்றால் எழுத்தின் கால்கள் விரைந்து சென்று அவரை கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். உங்களுக்கு துயரமென்றால் எழுத்தின் இதயம்
உங்களுக்காக துடிக்கும். உங்களை தன்னோடு சேர்த்து அணைத்துகொண்டு நம்பிக்கையளிக்கும் நூறு கதைகளை உருவாக்கி சொல்லும்"...
Tuesday, 16 May 2023
ஜா.தீபா
எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் வாசித்திருக்கிறேன். அவர் வசனம் எழுதிய திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நாவலுக்கும் திரைக்கதைக்குமான செய்திறனை நன்றாக அறிந்த எழுத்தாளர் என்றால் அவர் பாலகுமாரன் தான். அவரது நாவலின் முத்திரை திரைப்பட வசனங்களிலும் இருக்கும். ஆனால் தனியாக உறுத்திக் கொண்டு நிற்காது. ‘உல்லாசம்’ படத்தில் அஜித் ஒரு போட்டியில் ஜெயிக்க வேண்டுமென அவர் காலில் எரிகிற சிகரெட்டைப் போட்டு மிதிப்பார் ரகுவரன். அஜித் ஜெயித்துவிடுவார். “ஏன் அப்படி பண்ணீங்க..வலிக்குதுல்ல” என்றவுடன் “வலிச்சா ஜெயிக்கறல்ல..வலி தாங்கிப் பழகு” என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போவார் ரகுவரன். இந்த வரிகளை அவர் பல்வேறு நாவல்களில் வெவ்வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் திரைப்பட வசனமாக வரும்போது நீட்டிமுழக்காமல் தெறிக்கவிடுவது போல சொல்ல அவருக்குத் தெரியும்.
“அபிராமி அந்தாதி நூறு பாட்டு கத்துகிட்டேல்ல..அபிராமிக்கு லெட்டர் எழுதனுங்கற..ஏன் எழுதக் கத்துக்கக்கூடாது”
“அபிராமி உள்ள இருக்கு..எழுத்தெல்லாம் வெளில இருக்கு”
இதில் அபிராமி உள்ள இருக்கா என்பதாக இல்லாமல் உள்ள இருக்கு...என்பது திட்டமிட்டு எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.
“நீ மறுபடியும் கார் திருடினியா?”
“இல்ல..கதவ மாத்திரம் திறந்து விட்டேன்”
குணா படத்தினை ஒவ்வொரு முறையும் பார்க்கையில் பாலகுமாரனின் மேல் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதுவதே ஒரு கஷ்டம். புத்திசாலித்தனமான, பிடிவாதமான மனநல பாதிப்பு உள்ள ஒருவருக்கு எழுதுவதென்பது கயிற்றுக்கு மேல் நடப்பதற்கு சமமானது. கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விடும்.
“கண்மணி அன்போட காதலன்...நாக்கு தடிச்சு போச்சா?”
என்று தொடர்பில்லாமல் அதே நேரம் தொடர்போடும் பேச வேண்டும்.
மற்றொன்றும் என் அனுமானம். ஒரு நடிகருக்கு முக்கியமானது எந்த இடத்தில் வசனத்துக்கு இடைவெளி விடவேண்டும் என்பது. ஒருவருக்கு பதில் கூறும் முன்பு இடைவெளி விடுகிறார் என்றால் நாம் என்ன சொல்லப்போகிறார் என்று கூர்ந்து கவனிப்போம். அப்படி இடைவெளிக்குப் பின் சொல்லப்போகிற வசனம் கூர்மையாக வலிமையாக இருக்க வேண்டும்.
பாலகுமாரனின் வசனங்களை சரியாக புரிந்து கொண்டு பேசிய நடிகர்களாக கமல், ரகுவரன், ரஜினியை சொல்ல முடியும். சில நேரங்களில் வசனத்துக்கு பதிலாக சிறு உடலசைவில் வெளிப்படுத்தி விட முடியும்.
“இது தீப்பெட்டி..கீழே போட்டா கீழே விழும்..நீயும் அப்படித் தான் சாதாரண மனுஷன்..உன்னால மேலே பறக்கவே முடியாது”
என்றதும் குணா அதே தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை உரசுவார்..நெருப்பு மேலே எழும்..” இது தான் நான் என்பதை சைகையில் காட்டுவார். “தீப்பெட்டி கீழ விழும்..ஆனா அதே தீப்பட்டியில் உரசின தீக்குச்சியோட நெருப்பு மேலே எழுந்து நிக்கும்..நான் நெருப்புடா” என்று பக்கம்பக்கமாகப் பேசியிருந்தால் அந்தக் காட்சி இப்போது வரை நினைவில் நின்றிருக்காது.
ஒருமுறை மட்டுமே பாலகுமாரன் அவர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். தன்னை கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் வரும் என்றார். அப்படியெனில் அவர் குணா கதாபாத்திரத்துக்கு எழுதும்போது எப்படியான மனநிலையில் இருந்திருப்பார் என்று யோசித்து பார்க்கிறேன்.
வெகுஜன இலக்கியமும், தீவிர இலக்கியமும் அவரைத் தவறவிட்டதை விட திரைப்பட உலகம் அவரை நிச்சயம் இழந்துவிட்டது. அந்த வெறுமையை இன்னும் எந்த எழுத்தாளரும் நிரப்பவில்லை என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்ல முடியும்.
-ஜா.தீபா
Monday, 15 May 2023
Saturday, 13 May 2023
மனித முகம்
மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மீண்டும் உருவாகாமல் எப்போதும் தனித்துவமாகவே உருவாகின்றன?
பரிணாம வளர்ச்சியின் தேவையால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களை போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.
எடுத்துக்காட்டாக, பென்குயின் பறவைகள் உருவத்தால் பெரும் வேறுபாடுகள் கொண்டவையில்லையெனினும், தத்தம் தனித்துவமான குரலோசையால் மற்ற பென்குயின்களை கண்டறிகின்றன. நாய்கள், தம் அதீதமான மோப்பத்திறனால் மற்ற நாய்களை அறிகின்றன. மனிதனின் உருவ வேறுபாடுகள் வியக்கத் தக்கவை. 700 கோடி மனிதர்கள் 700 விதமான முகங்கள். ஒத்த இரட்டையர்களின் மரபணுக்கள் ஒத்திருந்தாலும் உருவத்தில் வேறுபட்டு விடுவர். சிறு வேறுபாடுகளை கவனிக்கத் தவறுவதாலேயே நம்மால் வேறுபாட்டை அறிய முடிவதில்லை.
The Biology of belief நூலின் ஆசிரியர் முனைவர்.லிப்டன் அவர்கள் கூறுவதைப்போல், ஒவ்வொரு புறக்காரணி மட்டுமின்றி ஒருவரின் நம்பிக்கையும் அவர் தம் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். உலகின் எந்த மனிதனுக்கும், புற, அகக்காரணிகள் ஒன்றாக இருப்பதில்லை
உடலின் ஒவ்வொரு உயிர் அலகும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உயிரலகும் புற, அகக்காரணிகளால் பாதிக்கப்படும்போது ஒவ்வொன்றும் நுண்ணிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, பலகோடி செல்களிலான உடல் எனும் பெரிய அளவில் பெரும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.
எனது ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சிறு பிழை எவ்வாறு பெரும் பிழையாய் மாறுமென்பதற்கு எடுத்துக்காட்டாய், நிலவிற்கு ஒரு பொருளை நேர்கோட்டில் அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் கோணத்தில் 0.0000000001 பாகை பிழை ஏற்பட்டாலும், அது நிலவை அடைய முடியாது. ஏனெனில், அந்த பிழையின் அளவுடன், நிலவின் தூரத்தை பெருக்கும்போது வரும் கோணம், நிலவை விட்டு அந்த பொருளை, வெகு தொலைவில் விலக்கி விட்டிருக்கும். அவ்வாறே, நுண்ணிய அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெரிய அளவில் பூதாகர மாற்றமாக இருக்கும்.
அடுத்த முறை நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகின் தனித்துவமான உருவத்திற்கு சொந்தக்காரரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை!
-படித்தது
கூலிட்ஜ்
கூலிட்ஜ் என ஒரு ஜனாதிபதி அமெரிக்காவை ஆட்சி செய்து வந்தார். மிக மிக அமைதியானவர். யாரிடமும் பேச மாட்டார்.
ஒருவர் கூலிட்ஜிடம் வந்தார்..
- ஜனாதிபதி அவர்களே..உங்களை இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச வைப்பேன் என என் நண்பர்களிடம் பந்தயம் கட்டி இருக்கிறேன்
ஜனாதிபதி அமைதியாக சொன்னார்
- நீ தோற்றாய்... ( u lost )
இதுவே தமிழில் சொல்லி இருந்தால் தோத்துட்டியே என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம் .. you தேவையில்லை
நன்றி;கோகுல்பிரசாத்
இளமைக்காலத்தின் மகிழ்ச்சிகரமான பொழுதுகள் யாவும் மாயப்பொய்களால் நிரம்பியவை. அப்போது நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவை அனைத்தும் பிற்கால வாழ்வின் குரூர யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கோ முகத்தில் அறையும் நடைமுறை உண்மைகளைச் சமாளிப்பதற்கோ கிஞ்சித்தும் உதவுவதில்லை. நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும் பயிற்றுவிக்கப்பட்டதும் பயனற்றுப் பொருளிழந்துவிடுகின்றன. வெறும் பொய்கள், பொய்கள், பொய்கள்! நிகழ்காலத்தின் உண்மைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் எப்போதும் இளமையை நினைவுகூர்கிறோம். ஏனெனில் பொய்யைவிட வசீகரம் மிக்கது ஏதுமில்லை.
- Of Human Bondage, சோமர்செட் மாம்.
என்.சொக்கன்
ஆங்கிலத்தில் ‘Room for improvement’ என்றொரு பயன்பாடு உண்டு. அதாவது, மேம்படுத்துவதற்கான இடம். எந்தவொரு படைப்பும் மிகச்சிறந்ததாக, கச்சிதமானதாக அமைந்துவிடுவதில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம், அவ்வாறு மேம்படுத்தியபின்னும் அது முழுமையடைவது இல்லை, இன்னும் இன்னும் மேம்படுத்தலாம். அதற்கு அங்கே இடமுண்டு, நமக்கு மனமிருந்தால்.
-என்.சொக்கன்
Friday, 12 May 2023
பூபாலன்
காற்றில் அலையும் சொற்கள்!
தேவையற்ற
தேவை என்றாகிவிட்ட
அலைபேசியில்
அன்றாடம் ஏதேனும்
சங்கடம்...
பெரியப்பா செத்துப்போன
இரவில்
விவரம் தெரியாத நண்பன்
அடுத்த மாதப் பொங்கலுக்கு
இனிப்பான வாழ்த்துக்கள்
அனுப்புகிறான்.
அலுவல்களின்
மும்முரங்களிலும்
பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது
தவறான அழைப்புகளுக்கு.
கடன் தருவதாகச்
சொல்லும் முகம்
பார்க்காமல்
நட்புறவாகும்
பெண்களைச்
சபிக்க வேண்டியதாயிருக்கிறது.
மருத்துவமனை
பிணவறையிலும்
கேட்க நேரிடுகிறது
புதுப்படப் பாடலின்
ரிங்டோனை.
இத்தனைக்கு இடையிலும்...
'பத்திரமா வந்துட்டேன்ப்பா'
தனித்து வெளியூர் சென்ற
மகளின் குரல் கேட்கையில்
வரமாகிவிடுகிறது அலைபேசி
- இரா.பூபாலன்
Thursday, 11 May 2023
Talcum powderTalc எனப்படுவது, நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சிலிக்கேட் என்ற வேதிப்பெயர் கொண்டதொரு மென்மையான கனிமம். இது படிவுப்பாறை வகையை சேர்ந்த பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமம். இதன் அமைப்பு ஒன்றின் மீது ஒன்றாக நழுவும் தாள்களைப் போல் இருப்பதால், இதன் மென்மைத்தன்மைக்கு காரணமாகிறது.இதன் வேதி வாய்ப்பாடு H₂Mg₃(SiO₃)₄ ஆகும். இது உயர்ரக வழுவழுப்பான தாள்கள் செய்தல், ரப்பர் தயாரித்தல், வழுவழுப்பான தரைகள் அமைக்க பயன்படும் செராமிக் ஓடுகள், ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு என பல வகைகளில் பயன்படுகிறது. உயர் வெப்ப நிலைகளில் இயங்கும் இயந்திரங்களில் எண்ணெய்களை உயவுப்பொருளாக பயன்படுத்த இயலாது. எனவே, அந்த சூழ்நிலைகளில், இது உயவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.பொருட்களின் கடினத்தன்மை மோ அளவீட்டில் அளக்கப்படும். மோ அளவீட்டில் வைரம் அதிகபட்ச கடினத்தன்மையான 10 ஐ கொண்டிருக்க டால்க்கின் மோ அளவு 1. எனவே, அதன் மென்மைத்தன்மையை அறியலாம்.-படித்தது
தாவளம்
மாட்டுத் தாவளம் - என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி 'மாட்டுத் தாவணி' - ஆகியிருக்க வாய்ப்புள்ளது.
தாவளம் > தாவளி > தாவணி.
மாடுகளை விற்பனை செய்யும் சந்தை மாட்டுத் தாவளம் எனப்பட்டது.
யானைகளைக் கட்டி விற்பனை செய்யப்பட்ட சந்தைக்கு யானைத்தாவளம் என்று பெயர். (கோவை மாவட்டத்தின் 'வேலந்தாவளம்' (வேழம் = யானை) என்ற ஊரின் பெயரும் இப்படி வந்ததே! (3000 ஆண்டுகள் பழமையான - கோவை வேலந்தாவளம், குமிட்டிபதி )
அக்காலத்து வணிகர்கள் விற்பனை செய்யும் பண்டங்களை மாட்டு வண்டிகளிலேற்றி ஊரூராகச் சென்று வியாபாரம் செய்வர். அவ்வணிகர்கள் தங்கி இளைப்பாறிய இடங்கள்' தாவளம்' எனப்பட்டது.
தாவளம் = வணிகச் சந்தை, வணிகம் நடைபெறும் இடம், வணிகர்கள் தங்குமிடம் என்று பொருள். இன்றைய Lodge / Lodging என்ற சொல்லுக்கு ஒப்பானது.
நெடுஞ்சாலைகளில் வணிகர்கள் தங்கிச்செல்லவும், அங்கேயே வணிகம் செய்யவும் உள்ள தங்குமிடங்கள் தாவளங்கள் எனப்படும்
-படித்தது
Wednesday, 10 May 2023
ஜெயமோகன்
செயலின்மை ஒரு வகையான சேறு. அது மனிதனை அமிழ்த்தி வைத்துக்கொள்ளும். மனம் செயலற்றுக் கிடக்கையில் மகிழ்ச்சி என்பது இருக்காது. ஆனால் அப்போது துயரம் எடை கூடிக்கொண்டே இருக்கும். செயல்வழியாக அமையும் நேர்நிலையான உளச்செயல் இல்லாத நிலையில் துயரை, கசப்பை பெருக்கிக்கொண்டு அந்த வெறுமையை நிரப்பிக்கொள்கிறார்கள்
-ஜெயமோகன்
Tuesday, 9 May 2023
என்.சொக்கன்
தன்னுடைய சிந்தனைக்கோணம் ஒன்றுதான் சரி என்கிற மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.
'Walk in Others' shoes' என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, அடுத்தவர்களுடைய செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்துபார்ப்பது; அவர்களுடைய கோணத்திலிருந்து சூழ்நிலையை உணர்வது.
-என்.சொக்கன்
Subscribe to:
Posts (Atom)