Monday, 17 April 2023
Sunday, 16 April 2023
கற்கை நன்றே-21
கற்கை நன்றே-21
*மணி
கடவுள் இந்த உலகத்தைப் படைத்துவிட்டு, இங்கேயே தங்கிவிட்டார்.
அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கே புரிந்தது . தினம் எதாவது புகார் கொடுக்க மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லை. சில பேர்கள் வந்து , என் பயிர் காய்கிறது . இன்று எனக்கு மழை தேவை. அடுத்து சிலர் வந்து இன்று மழை கூடாது. அது என் வேலையை பாதித்து விடும் .நான் களிமண் பானை செய்து சுடுகிறேன்.
இப்படி நிறைய புகார்கள் முரண்பாடாக வந்து கொண்டே இருந்தது.
கடவுள் கிட்டத்தட்ட பைத்திய நிலைக்கே சென்றுவிட்டார். அவருக்குச் சரியான தூக்கமும் இல்லை. எல்லாருடைய ஆசைகளையும், தேவைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது .
பிறகு ஒரு நாள், தன் மந்திரி சபையைக் கூட்டி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.
அதில் ஒரு சிலர், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை . நீங்கள் இமயமலைக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வந்து யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்றார்கள்.
கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் அங்கு வர இருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக அங்கேயும் வர ஆரம்பித்து விடுவார்கள்.
வேறு யோசனை சொல்லவும் என்றார். அடுத்து ஒரு சிலர், சந்திரனுக்குச் செல்லலாமே? என்றார்கள். கடவுள் அதற்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆளைத் தயார் பண்ணிக் கொண்டிருகிறது என்றார்.
சரி எதாவது தொலைதூர நட்சத்திரத்திற்குச் செல்லலாம் என்றார்கள் மற்றும் சிலர்.
கடவுள் இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது எனக்கு நிரந்தரமாக இந்த மனிதத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.
பிறகு , கடவுளுடைய பழைய வேலையாள் வந்து, மெல்ல அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார் . உடனே கடவுள் முகம் மலர்ந்து, ரொம்ப சரி அப்படித்தான் செய்ய வேண்டும் என்று, ஆமோதித்தார் .
அந்தக் கிழவன் சொன்னது என்னவென்றால்,
மனிதனால் அடைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கிறது. அவனுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்பதே. அதிலிருந்து கடவுள் அங்கேயேதான் மறைந்து கொண்டு இருக்கிறார். மனிதன் நினைக்காத இடம் அது தான்.
ஆகவே மிக அருகில் உள்ளதை, உங்கள் அகங்காரம் ஏறெடுத்தும் பார்க்காது. அதில் அதற்கு சுவாரசியமும் இல்லை . ஆகவேதான் நீங்கள் உண்மையை தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் .
நற்காலை வணக்கம்
-மணிகண்ட பிரபு
Book-63
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-23
Book-62
Pages-532
இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்
- வே குமரவேல்
நாடாளுமன்றத்தில் பிர்லாவின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்த போது வடநாட்டு தலைவர்களும் நடுங்குகின்ற வகையில் பலர் திடுக்கிட்டு இருக்கும்போது அண்ணா கூறிய சொல் "ஒவ்வொரு துறைகளிலும் உங்களுடைய ஆதிக்கமே நிலவுகிறது. மக்களவையில் பிர்லாவின் பிரதிநிதிகளுக்கு என்ன வேலை. பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்ன உறவு" என்று கேட்டார் அண்ணா. நூலின் மொத்த சாரமும் பெரு முதலாளிகளின் மறுபக்கம் தான். இன்று நாம் அன்றாடம் பார்க்கும் பல்வேறு விஷயங்களில் இந்த பெரு முதலாளிகளின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
தவறு செய்வது மனித இயற்கை அது சகஜம் தவறு செய்வதையே தொழிலாக கொண்டிருக்கக் கூடாது. அது பழக்கம் ஆகிவிட்டால் தவறுகளை தத்துவம் ஆகிவிடும். நாற்காலிக்கு சிலர் அடித்துக் கொள்வதால் நாற்காலிக்கு பெருமை வந்துவிடாது. மனிதன் தான் நாற்காலியில் உட்கார வேண்டுமே தவிர நாற்காலியை தூக்கிக் கொண்டு மனிதனுக்கு கூடாது. சமூகத்தில் பெரு முதலாளிகள் சட்டத்தின் வழி கொண்டு எவ்வாறெல்லாம் தப்பிக்கிறார்கள்.. அவர்களுக்கு உதவும் அரசியல்வாதிகள்.. இவ்வாறு நடைமுறை எதார்த்த சிக்கல்களை பெரும் முதலாளிகள் எவ்வாறெல்லாம் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லும் புத்தகம் தான் இது.
புலிகளை வேட்டையாடாமல் புள்ளிமான்களே வளர்ப்பதில் பயனிலை எனும் உரையில் தா. பாண்டியன் அவர்கள் பேசிய உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காக்கையை குயிலாக்க வேண்டும் என நினைப்பது ஆசையின் ஆர்வத்தின் விளைவு .ஆனால் முடியும் என நம்புவது நம்பிக்கையின் விளைவு. ஆசைப்படுவது குற்றம் ஆகாது. ஆனால் நம்புவது வாழ்வையும் சக்தியையும் ஆற்றலையும் வீணடித்து விடும் என பெரு முதலாளிகளின் சோசலிச தத்துவம் அரசியல்வாதிகளின் புரிதல் ஆகியவை பற்றி எல்லாம் சொல்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் அவை 75 ஏகபோக குடும்பங்களை கொழுக்க வைப்பதில் தான் குறியாக இருக்கிறது
உலகெங்கிலும் இயற்கையை பாதுகாப்போம் என்று சொன்னாலும் லாபம் ஈட்டும் தனியார்கள் கனிம வளத்தையும் கொள்ளையடிக்கிற கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலம் கியான் ஜவகர் மாவட்டத்தில் 3000 ஏக்கரை பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை பார்க்கிறார்கள். தென்கொரியாவின் போஸ்கோ கம்பெனி உலகில் உருக்கு உற்பத்தியில் மூன்றாவது இடம் பிடித்த கம்பெனி . அங்கே இருக்கக்கூடிய ஆதிவாசிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி தன்னுடைய தொழில் அபிவிருத்தியை தொடங்குகின்றனர் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டக் கூடிய அதிகாரம் இல்லாமல் போகிறது.
இந்தியாவை குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பி வருவது ஏன் என்பதற்கான காரணத்தை பார்த்தால் உலக சந்தையில் நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது? இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர் .திறந்த வீடாக சலுகைகளும் கிடைக்கிறது. இந்தியா வளர்ந்து வருகின்ற சந்தை அமைப்பு உள்ள நாடுகள் பலவும் இங்கு தொழில் துவங்க துடிக்கின்றன
அரசியல்வாதிகள் தாங்கள் நடத்தும் பத்திரிகைக்காகவும் அறக்கட்டளைக்காகவும் தேர்தல் நிதிக்காகவும் பல நூற்றுக்கணக்கான கோடிகளை திரட்டுகிறார்கள். இதில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு என்று எமதர்மராஜாவிடம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு கூட தெரியாது. பசுமை புரட்சி என்கிற பெயரில் ரசாயனங்களை உரத்தில் கலந்ததால் மென்மையான மண் என்ன கதியாகும் என்று பிற்கால சந்ததிகள் நிச்சயம் உணர்வார்கள். தன் விருப்பம் போல் உற்பத்தி செய்து கொள்ளலாம் தன் விருப்பம் போல உரத்துக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம், தங்கு தடையற்ற முறையில் உரங்களை தயாரித்துக் கொள்ளலாம் என்பன போன்ற சலுகைகள் பெரும முதலாளிகளுக்கு வசதியாக போயிற்று.
*காபித்தூள் அரைக்கும் இயந்திரத்தில் அரிசி அரைக்க முயலாதீர்கள். அரிசி தவிடு ஆகிவிடும். நெல் அரைக்கும் மில்லில் காபித்தூள் அரைக்க முயலாதீர்கள். காபி கொட்டை தூளாகாது .
*சோசலிச லட்சியத்தில் ஆர்வம் இருந்தால் வென்று நிற்கும் மெய்யை காணுங்கள் .அது சொகுசு பேச்சால், மினுக்கால் வராது, கடுமையான உழைப்பும் தெளிவான சிந்தனை உரமும் தேவை
*வெண்ணையைப் பூட்டிவிட்டு நெய்யை தேடுவதைப் போல, யானையை பூட்டிவிட்டு பூனையைத் தேடுவதைப் போல
*குட்ட குட்ட குனிகிறவனும் முட்டாள் குனிய குனிய கொட்டுகிறவனும் முட்டாள்
*ஜெயகாந்தன் எழுதியதை போல இவர்களை நாம் அறிவாலும் வாதத்தாலும் வெல்ல முடியும். ஆனாலும் நாமும் போர் பயிற்சி பெற வேண்டும். அதுதான் பதிலடியாகும்.
*கண்ணதாசன் அழகாக சொன்னார் "நாக்கு தொழிற்சாலை அமைக்காது .நாக்கு வேலை செய்யாது. சம்பளம் பெற்று தராது. நாக்கு சோறு சாப்பிடுமே தவிர சோறு போடாதே. இந்த நாக்கால் ஏமாற்றி விட்டார்கள் நம்மை அரசியல்வாதிகள்
பெரும் பணக்காரர்களின் உடைமைகளின் மீது கை வைக்காமல் பெரும் ஏழைகளை பெரிய வறுமையை தீர்க்க இயலாது. கருப்பு பணத்தில் கை வைக்காமல் கஷ்டப்படும் எளியவர்களுக்கு காவிய தரிசனம் கிடைக்காது .அமெரிக்காவில் சூரியன் உதிக்க வேண்டுமானால் நம்முடைய நாட்டிலே சூரியன் மறைய வேண்டும். நமது தேசத்தில் கதிரவன் எழ வேண்டும் ஆனால் அமெரிக்காவிலே ஆதவன் விழ வேண்டும். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால் பெரும் பணக்காரர்களிடம் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் ஒன்றே நிலையானது உறுதியானது. தொடர்ந்து கருப்பு பணம் பெரும் முதலாளிகளின் தொழில் வளம் சங்கங்களினால் என்ன செய்ய முடிந்தது வாழ்வதற்கு பொருள் வேண்டும் போன்ற கட்டுரைகள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரிவான விளக்கத்தை அளிக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Book-61
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-23
Book-61
Pages-512
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
-ஓஷோ
இப்ப புத்தகத்தில் ஓஷோ உலக நோக்கினை ஒரு புதிய மற்றும் விரிவான வழியில் தெளிவுபடுத்தியுள்ளார் .தன்னை ஒரு நாகரீகமான மனித இனம் என்பது தொடர்ந்து சொல்லிக் கொள்வதற்கு நாம் அந்த அளவுக்கு இன்னமும் வரவில்லை என்பது ஒரு தீர்வு காணப்படாத நினைவூட்டலாகவே இருக்கிறது. இந்த உலகில் நடந்த எல்லா குற்றங்களையும் எண்ணிப் பார்த்தால் அதன் பின்னர் அந்த குற்றங்களுக்கான அடிப்படை காரணம் எல்லா மதங்களும் தான். அவை அன்பை போதிக்கின்றன, ஆனால் வெறுப்பை நடைமுறைப்படுத்துகின்றன. அவை ஒற்றுமையை போதிக்கின்றன, ஆனால் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துகின்றன என்பதை அடுக்கடுக்காக சொல்லிய ஓஷோ எதிர்காலத்தில் இல்லாமல் போகிற அளவுக்கு சமுதாயத்தை வடிவமைக்கின்றனர் என்று விமர்சனப் பார்வையுடன் அணுகியுள்ளது இப் புத்தகம்.
கீழைநாட்டு புனித நூல்கள் எல்லாம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஆரம்பித்த பின்னர் அதே வார்த்தைகளில் முடிக்கின்றன. சத்தியத்தை கீழை நாடுகள் மேலை நாடுகளுக்கு நேர் எதிரான பார்வையில் அணுகுகின்றன. இது ஒரு பிரபஞ்ச இதயத்துடிப்பின் குறியீடாக உள்ளது. வார்த்தைகள் அல்ல .இதற்கு அர்த்தம் அமைதி என்றும் மூன்று முறை சொல்லி முடித்த பின் நான்காவது முறை சொல்லப்போகும் அந்த நேரத்தில் நீங்கள் அங்கு இருப்பதில்லை. வெறுமனே அமைதி அங்கு மிஞ்சி இருக்கும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
இறந்த காலத்துக்குள் நாம் செல்ல முடியாது .ஒரு வாலிபன் மீண்டும் குழந்தை ஆக முடியாது. இங்கே ஒரு திறந்த எதிர்காலம் தான் இருக்கிறது. இதனை பற்றி ஒரு கதை சொல்லும்போது "ஹென்றி போர்டு இறந்தவுடன் கடவுளை சந்தித்தார் கடவுள் எனது படைப்பு குறித்து நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? என்று கேட்டார்
உடனே போர்ட் கிடையாது. நான் உயிர்களைப் படைத்திருந்தால் அநேக தவறுகளை திருத்தி இருப்பேன். உதாரணமாக நான் முதலில் காரை படைத்தபோது அந்த காரில் பின்னோக்கிச் செல்லும் வசதி கிடையாது. பல பகுதிகளை சுற்றிக்கொண்டு தான் வர வேண்டும் .பின்னோக்கிச் செல்லும் வசதியை கண்டுபிடித்தது நான் தான். படைப்பிலும் கூட நீங்கள் அதில் விஷயங்களை தவற விட்டு விட்டீர்கள் என்று சுட்டிக் காட்டுகிறார்.
நம் எல்லோருக்கும் உள்ளம் உள்ளது. பொருள்களை பற்றிய விசாரணையை பொருத்தமட்டில் மனம் என்பதற்கு அதற்கு உரிய பலம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு மருத்துவரிடம் இதயம் என்பது எங்கு இருக்கிறது என்று கேட்டால் இதயம் என்பது ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு உறுப்பு அவ்வளவுதான் என்பார். மனம் என்பதெல்லாம் பார்த்ததில்லை என்பார்.
இதற்கு உதாரணமாக எடிசன் ஒரு முறை கடற்கரை பள்ளிக்கு அறிவியல் கண்காட்சிக்கு சென்ற போது அங்கு இருக்கும் ரயில் வடிவத்தை பார்த்து இது எதன் மூலம் இயங்குகிறது மின்சக்தியை பார்த்திருக்கிறாயா? என கேட்கிறார். அவர்கள் இல்லை என்கிறார்கள் அதன் பிறகு ஆசிரியர்கள் முதல்வர்கள் அனைவரையும் கூப்பிட்டு கேட்கிறார். மின்சக்தியை பார்த்திருக்கிறீர்களா மின் விளைவுகளை தான் பார்க்க முடியும் மின்சாரத்தை பார்க்க முடியாது என்கிறார்கள். உடனே எடிசன் சிரித்தார். நானும் மின்சாரத்தை பார்த்ததில்லை என்கிறார் .அன்பு என்பது உன் உடல் அமைப்பின் பகுதி அல்ல .அது உடலில் மறைந்துள்ள தூய்மையான சக்தி என்கிறார் ஓஷோ.
ஓஷோவின் நகைச்சுவை கதைகள் அவ்வப்போது படித்தவுடன் வாய்விட்டு சிரித்து விட முடியும் .அது கற்பனையாக இருந்தாலும் சரி நிஜமாக இருந்தாலும் சரி இது .கற்பனையா உண்மையா என்று தெரியவில்லை.ரொனால்ட் ரீகன் இந்தியா வருகை புரிந்தார் .அப்போது அவரும் ராஜீவ் காந்தியும் ஒரே காரில் பயணம் செய்கின்றர். சாலை ஓரங்களில் அநேக மக்கள் மலஜலம் கழித்துக் கொண்டிருப்பதை ரீகன் கவனிக்கிறார். இதனால் வேதனை அடைந்த ரீகன் ராஜிவிடம் இந்தியாவில் இதுதான் பழக்கமா என்று கேட்கிறார். இதனால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ராஜிவ்..தான் மக்களிடம் காகித கழிவறையை பயன்படுத்தம்படி விழிப்புணர்வு செய்து வருகிறேன். கொஞ்ச காலம் பிடிக்கும் என்கிறார் அதன் பின்னர் மறு பயணமாக ராஜீவ் அமெரிக்கா சென்ற போது அந்த வழியில் ஒருவர் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கிறார். கோபம் கொண்ட ஜனாதிபதி ரகசிய காவலர்களிடம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடுகிறார். ஆனால் அவர்களால் அவரை கைது செய்ய முடியவில்லை. ஏன் முடியவில்லை? என்று கத்தினார் ரீகன் அந்த ஆள் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்கிறார்கள் இது கற்பனையாக இருந்தாலும் படித்தவுடன் சிரித்து விட முடிகிறது.
உனக்குள் நகர்ந்து செல் ஆனால் பயம் உன்னை நகர்த்தி செல்கின்ற வழியில் நகர்ந்து செல்லாதே-ரூமி
இந்த வரிகளை வைத்து அற்புதமான ஒரு கட்டுரையை இதில் சொல்லி இருப்பார். பயம் என்பது உனக்குள் செல்ல முடியாது ஏனெனில் பயம் தனியாக இருக்க முடியாது. உனக்குள் நீ செல்லும் போது அங்கே நீ தனிமையில் இருந்தாக வேண்டும். பயத்துக்கு ஒரு கூட்டம் தேவைப்படும். பயம் பணத்தை நோக்கி நகர்ந்து செல்லும் ,அதிகாரத்தை நோக்கி நகர்ந்து செல்லும் ,கடவுளை நோக்கி நகர்ந்து செல்லும் ,பயமின்மை தான் உள்நோக்கி செல்வதற்கான முதல் தேவை என்கிறார் .பயம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். கன்பூசியசின் சீடர் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று கேட்கிறார். அதற்கு கன்பூசியஸ் "இப்போது அதற்காக காலத்தை வீணாக்காதே நீ கல்லறையில் இருக்கும்போது படுத்துக்கொண்டு இதைப் பற்றி சிந்தி ..இப்போதுஅதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறாய் என்று கூறுகிறார்.
இருப்பு நிலையில் புதிர்கள் எனும் உரையில் கௌதம புத்தர் இறந்த ஆண்டு அவரது சீடர்களிடம் அவர் வலியுறுத்தி சொன்னது "எனது சிலைகளை உருவாக்காதீர்கள் "எனக்கு கோவில்கள் கட்டாதீர்கள் ஏனெனில் அவை உங்களை ஏமாற்றி விடுபவை. உங்களது நினைவு மட்டுமே போதும். அதுதான் உண்மையான ஆலயம் இவற்றைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றார். ஆனால் மக்கள் எப்போதும் மக்கள்தான். கௌதம புத்தர் இறந்த போது அவர்கள்.. அவர் ஞானம் பெற்ற போதி மரத்தை வழிபட ஆரம்பித்து விட்டனர். மரத்தின் அடியில் புத்தர் ஞானோதயம் ஆனதால் அதற்கு போதிமரம் என்று ஆகிவிட்டது. முதன் முதலில் கட்டப்பட்ட கோவில் பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட ஒரு மரம் மட்டுமே .புத்தர் சிலை இல்லை .விரைவில் அந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. உலகம் விசித்திரமானது. சிலைகள் வைக்கக்கூடாது என்று சொன்ன மனிதருக்கு இந்த உலகத்தில் அதிக சிலைகள் இருக்கின்றன.
*மேலைநாட்டின் செயின்ட்(saint) என்பதற்கு கிறிஸ்தவ திருச்சபையால் சான்று அளிக்கப்பட்ட ஒருவர் என்று அர்த்தம் ஆகும்.sactus என்னும் வார்த்தையிலிருந்து என்பது வந்துள்ளது
*ஒரு மனிதனிடம் சரணடையாதே அன்பிடம் சரணடை
*அன்பின் அடையாளமாக மூன்று ரிங்குகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எங்கேஜ்மென்ட் (engagement ring) வெட்டிங் ரிங்(wedding ring) சபரி ங்(suffering)
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Saturday, 15 April 2023
Book-60
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-22
Book-60
Pages-489
பதிவகள்
-கி.ரா
எழுத்தாளன் அனுபவம் எழுத்துக்கான அடித்தளமாய் அமைகிறது.எந்த நூலிலும் இல்லாமல் கி.ராவின் முழுமையான தரிசனத்தை இந்நூலில் காணலாம் என்கிறார் கழனியூரன். திருநங்கைகள குறித்து ஆராய்ந்த போது மகாபாரதம் தவிர்த்து இவர்கள் குறித்து கதைகள் எங்கும் கிடைக்கவில்லை என கூறி தேடி அலைந்து தொகுத்த கதையைக் கூறுகிறார்.
நன்றி சொல்லும் பகுதியில் முதல் உருண்டை சாதத்தை எடுத்துக் கொள்ளும் போதும் முன்னோர்களுக்கும், இரண்டாம் உருண்டை சாதம் எடுத்துக் கொள்ளும் போது உழவர்களுக்கும், மூன்றாவது உருண்டை சாதம் எடுத்துக் கொள்ளும் போது பசியோடு தவிப்போரையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
தமிழில் முதல் நாவல் வேதநாயகம் மாயூரம் பிள்ளஒ எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று சொல்வதுண்டு. ஆனால் வித்வான் சேஷையா 1875ல் எழுதிய ஆதியூர் அவதான சரித்திரம் எனும் செய்தி புதிதாய் இருந்தது.அது கவிதையில் நாவல் என்கிறார்கள்.
செம்மறி என்ற ஜாதி இருந்தது என பலருக்குத் தெரியாது.தமிழில் செம்மான் என்று அழைக்கின்றனர்.தையல் இயந்திரங்கள் வராத காலத்தில் துணிகளை சலவை செய்து வருவது போல் கிழிந்த துணிகளை தைத்து கொண்டு வரும் தொழில் செய்து வந்ததால் இவ்வாறு அழைத்தனர்
என்ற செய்தியும் மழை குறித்து தமிழில் வழங்கும் ஊசித்தூற்றல் ,சாரல்மழை உள்ளிட்ட 41 சொற்கள் வழங்கப்பட்டன.
வேளார் என்பது மண் பாண்டம் செய்பவர் சமூகத்தை குறிப்பது.வேள் என்பது மண்ணைக் குறிப்பது.இதில் இருவகையினர் உண்டு.கருப்பு பானை செய்பவர்கள் சிவப்பு பானை செய்பவர்கள் என இருவகையினர் உண்டு.அதோடு பச்சரிசி புழுங்கல் அரிசி சாப்பிடுவோர் இருவகையினர் பெண் கொடுத்து பெண் கொடுப்போர் இல்லை.கொசுறாக இதேபோல் நன்னீர் மீன் பிடிப்போர் உப்பு நீர் மீன் பிடிப்போர் என இவர்களும் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை
புதுமைப்பித்தனுக்கு நாதஸ்வரன் வாசிக்க ஆர்வம். கொண்டு ஒரு நாதஸ்வரம் வாங்கினாராம். அதனைப் பற்றி கதையைச் சொல்லி..வீணையின் இசை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். வீணையின் இசை முதலில் கேட்கப்படும் போது அவஸ்தையாக இருந்தததாகவும் அதன் பின் ஜாதிமல்லி என்கிற் பூ, பூர்வீகத்தில் ஏகப்பட்ட இதழ்களை வைத்துக் கொண்டு லோல்பட்டு கடைசியில் ஐந்து இதழ்கள் போதுமென்று தீர்மானித்ததாம்..என்பார் ரசிகமணி. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வதத்தில் பல் சீர்திருத்தங்கள் செய்தார்.
வீணை பாடுவதற்கு ஒரு துணை வாத்தியமென பெயர் உண்டு.இதுபோல் வீணை பற்றி அரிய செய்திகள் இக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.
*நான்கு திசைகள் சேர்வதை முக்குகள் என்கிறார்கள்.தென்கிழக்கு இதனை உப்பு மூலை என்கிறார்க்ள்.தென்மேற்கு மூலை கன்னிமூலை என்கிறார்கள்.பெண் வயதுக்கு வந்தால் இங்கு தான் உட்கார வைக்கிறார்கள்.வடகிழக்கு ஈசான மூலை. கங்கை மூலை என்கிறார்கள். குடிதண்ணீர் இங்குதான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.இங்கு நந்தவனம் இருப்பது நல்லது என்கிறார்கள்.
வசவு பத்திசொல்லும் போது மூத்தவ என்பது வசவுதான்.கிரா முதலில் கேள்விப்பட்டவசவு தான் இது என்கிறார்.மூத்தவள் என்பது மூதேவி என்பதை மூதி என்கின்றார்.மூதேவியை செல்லமாக மூதி என்று செல்லமாக சொல்கிறார்களாம். திருநெல்வேலியில் இந்த வசவு சாதாரணம். ஏ மூதி, ஆக்கங்கெட்ட மூதி,என்று சொல்லப்பட்டு வருவதற்கான காரணத்தை நாட்டுப்புற கதைகளின் உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார்.
*நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் சோகவியல் நூலை நகைச்சுவையாக சொல்கிறது.
*வாய் பதனம்/கை பதனம்/சுகனம் பதனம்
*ஆணுக்கு பிறந்த ஜாதகம் உண்டு என்றால் பெண்ணுக்கு ருது ஜாதகம் உண்டு.அந்த ரத்தம் கண்ட நேரம் மெய்யான பெண் என்பவள் பிறக்கிறாள் என்பது அர்த்தம்.
*சரியான வாதம் வேறே ; நடைமுறை விவாதம் வேறு
*ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு. நம்ம ஐயங்காருக்கு மூணு கொம்பு-சொலவடை
கி.ராவின் நாட்குறிப்பிலிருந்து சொல்லும் அனைத்து சம்பவங்களும் சுவையானவை. தான் கண்டு கேட்டு ரசித்த சம்பவங்களையே சொல்லியுள்ளார். எல்லாவற்றையும் அனுபவித்து அறிவது இயலாத காரியம். ஆனால் இது போன்ற அனுபவ மொழிகளை கேட்பது பேரின்பமே
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Friday, 14 April 2023
book-59
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-21
Book-59
Pages-400
புதிய நோக்கில் மகாகவி பாரதி
-முனைவர் தே ஞானசேகரன்
முனைவர் சி சித்ரா
ஒவ்வொரு ஆண்டும் கோவை புத்தகத் திருவிழாவில் பாரதியார் குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் ஏதேனும் புத்தகம் வெளியிட்டுள்ளதா என்பதை பார்ப்பதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு வாங்கிய புத்தகம் தான் புதிய நோக்கில் மகாகவி பாரதி. பாரதி வாழ்ந்த மொத்த நாட்கள் 14,155 தான் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் பால் நினைந்தூட்டும் தாய் போல மானிடத்தையும் உயிர்நேயத்தையும் அள்ளி அள்ளி வழங்கியவன் பாரதி என்று பதிப்புரையில் புகழாரம் சூட்டுகின்றனர். இந்த புத்தகத்தில் 20 பேர் எழுதிய ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பாரதியார் தன் வாழ்வின் 18 ஆண்டுகளை 1904 முதல் 1971 வரை தேச மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்.முதல் கட்டுரையில் தமிழ் காவிரியின் இலக்கிய தரப்பை விசாரப்படுத்திய பாரதியையும் கேரளத்தின் பெரும் நிலப்பரப்பில் பாய்ந்து வளப்படுத்திய நிளாநதியைப் போல தற்கால மலைகள் கவிதையை வளப்படுத்திய வள்ளத்தோளினை தமிழகத்தின் முண்டாசு கவிஞர் பாரதியோடு ஒப்பிட்டு காட்டுவது முதல் கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது. இருவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு உள்ள காங்கிரஸில் இணைந்தனர் .இருவரும் எழுச்சியுடன் சுதந்திரத்தை மக்களிடையே ஊட்டினர் .ஆனால் பாரதியிடம் இருந்த ஆங்கில இலக்கிய அறிமுகம் வள்ளத்தோளுக்கு வாய்க்கவில்லை .பாரதி திலகரை தலைவராக ஏற்றவர். திலகர் விதைத்த வித்து பாரதி. காந்தி விதை வித்து வள்ளத்தோள் என்று கூறுகிறார்.
தன்னம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் கட்டுரையில் ஒருவனின் தன்னாற்றல் திறமை மற்றும் கருத்து மீது வைக்கும் நம்பிக்கையும் ,அவன் தன் மீது வைக்கும் நம்பிக்கையும் தன்னம்பிக்கை ஏற்படும். இதனை ஒரு பாடலின் வழியே நமக்கு கூறுகிறார் மனத்தடையை வெல்லதலே தன்னை வெல்லதலாகும்.
என்ன வரங்கள், பெருமைகள் ,வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது சத்தியமாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
பாரதியார் கவிதைகளில் விளையாட்டியல் என்னும் தலைப்பில் இடம் பெற்ற கருத்துகளில் அவருடைய பாடல்களில் 1.தெய்வ விளையாட்டுகள் 2. மனித விளையாட்டுகள் 3.விலங்கு விளையாட்டுக்கள் 4.விளையாட்டு இலக்கியம் என் வகைப்பாட்டினுள் தெய்வ விளையாட்டு என்பதை கண்ணன் விளையாட்டு கண்ணம்மா விளையாட்டு என்று பாகுபடுத்துகிறார்கள்.
பாரதியார் பாடல்களில் வாய்மொழி மரபு எனும் ஆய்வு கட்டுரையில் குயில் பாட்டில் இடம் பெறும் ஒரு பாட்டினை குறிப்பிட்டு இது உள்ளத்தின் உண்மை ஒளி வாக்குத்தெளிவாக வந்துள்ளது. பாரதியார் நாட்டார் பண்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்தவர் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். அதேபோல கும்மி பாட்டு துளைக்கருவி தோல் கருவி ஆகியவற்றையும் பாரதியார் பாடலில் பதிவு செய்துள்ளார். பாரதியார் கட்டுரைகளில் தமிழருக்கு என்றொரு கட்டுரையில்
கால் தொட்டு கடலை வாங்கி காலை நீட்டி தின் கையிலே
என்னை யவன் கூப்பிட்டு இழுத்தடித்தான் சந்தையிலே"
" சந்தையில் மருக்கொழுந்து சரம்சரமாய் விற்கையிலே
எங்களிடம் காசில்லாமல் எங்க முகம் வாடி போச்சு"
பாடல்களில் நாட்டுப்புற மெட்டும் பாட்டும் இடம்பெற்றது அறிய முடிகிறது
பாரதியின் நம்பிக்கை நம்புதல் எனும் மாயாஜால சிந்தனையின் வெளிப்பாடு. விடுதலை பள்ளு எனும் விடுதலை கீதம் என்கிறார்கள். ஆடுவோமே பள்ளு பாடுவோமே போன்ற பாடல்கள் பின்னாளில் நாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம் எனும் நம்பிக்கை விதையை அவர் விதைத்தார். இதை வெற்றிக்கான உந்து சக்தியை மக்களிடம் கொடுத்தது. எதிர்பார்த்தது கிடைக்கும் எண்ணங்களை எதில் செலுத்துகிறீர்களோ கற்பனை ஓட்டுகிறீர்களோ அதைத்தான் நீங்கள் ஈர்ப்பீர்கள். இதைத்தான் இவரும் செய்து இருக்கிறார். ஒவ்வொரு செயலின் மூல சக்தி நமது எண்ணமே என்கிறார் எமர்சன. ஒவ்வொரு செயலின் மூதாதையர் எண்ணம்தான். இந்த புரிதல் ஏற்பட்டால் உலகமே எண்ணங்களினால் இயங்குகிறது என்று புரியும் எனும் வாதம் இதனுடன் ஒத்துப் போகிறது. நிகழ்வுகளை நம் பெரும் ஆசையின் செல்வாக்கினால் நிகழச் செய்கிறோம் என்று சொல்கிறான். பாரதி போன்ற மகத்தான கலைஞனின் பெரும் ஆசையின் விளைவாக பல நிகழ்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
வாழ்வெனும் அபத்த நிலையை சேக்ஸ்பியர் முதல் புறநானூற்று பாடல்கள் வரை சொல்லி உள்ளன. பாரதியாரும் வாழ்வின் இந்த அர்த்தத்தன்மையை பல இடங்களில் பதிவு செய்து கொண்டு போகிறார் அதில் ஒன்றாக
"உலகமெல்லாம் ஒரு பெரும் கனவு அஃதுளே உண்டு உறங்கி யிடர் செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஒரு
கனவினும் கனவாகும்"!
தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழியில் வந்த முக்கிய இதழ்களில் சுதேசி மித்ரன் ஒன்று. 1904 நவம்பர் இறுதி முதல் 1906 செப்டம்பர் வரை சதேசமித்திரனில் உதவி ஆசிரியராக முதலில் பணிபுரிந்த பாரதி பின்னர் 1920 முதல் இறக்கும் வரை அதில் தான் பணிபுரிந்தார். வார இதழாக ஆரம்பித்து பின்னர் வாரமிரு முறை வெளிவந்தது. இந்து வில் ஆசிரியராக இருந்து கொண்டே 1882 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கை துவங்கப்பட்டது. ஜி சுப்ரமணிய ஐயரின் இறுதி காலத்தில் 1915 இந்து ஆசிரியருக்கு சுதேசமித்திரனை அரங்கசாமி ஐயங்காருக்கு விற்றுவிடுகிறார் மீண்டும் பாரதி சுதேஷ் மித்திரனில் எழுத தொடங்கியவர். பாரதியின் வரலாற்றை படித்த அதே போல் சுதேச மித்திரனின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது
ஒவ்வொரு கட்டுரைகளிலும் பாரதியார் குறித்த இன்னொரு முகத்தையும் நாம் அறிய தவறிய பாரதியாரின் மொழி வரலாறு பண்பாடு கவிதை இலக்கியம் என ஒவ்வொரு துறைகளை பற்றியும் நாம் அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவியாளராக இருக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
book-57
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-21
Book-57
Pages-431
மகாத்மா காந்தி
-வின்செண்ட் ஷீன்
இலட்சியத்துக்காக உழைப்பவனை யாராலும் வெல்ல முடியாது-காந்தி
யாருடைய வாழ்வு குறித்தும் இத்தனை முறை அலசி இருக்க மாட்டார்கள் அல்லது பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையாக இருந்ததால் அவர் மீது போற்றுதலும் தூற்றுதலும் விமர்சனப் பார்வையும் அதிகம் .அவர் பேசியது எழுதியது என அனைத்தும் வியப்பையும் ஆச்சரியத்தையும் தந்திருந்தாலும் ஒரு மனிதன் எப்படி இவ்வாறு நடந்து இருக்க முடியும் என்ற ஒரு கேள்வியை அனைவரின் மனதிலும் எழுகிறது. இந்த கேள்விக்கான பதிலை அவரவர்கள் கேட்டுக் கொண்டாலும் அறிஞர்கள் பலர் அவர் உடன் இருந்து அதனை ஆராய்ந்து கூறியதாலும் ஒவ்வொரு புத்தகமும் இன்னும் காந்தி குறித்து வந்து கொண்டே இருக்கிறது .நாம் ஒவ்வொரு புத்தகத்தையும் காந்தியை பற்றி தெரிந்து கொள்ளும்போதெல்லாம் கண்பார்வையற்றவர்கள் யானையை தடவி பார்த்து உண்மையை அறிந்தவர்கள் போலத்தான். கடல் ஆழத்தையும் காந்தி குறித்த புத்தகங்களையும் இன்னும் யாராலும் அறிவது என்று சொல்ல முடியாது. இன்னும் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் வின்சென்ட ஷுன் எழுதிய மகாத்மா காந்தி குறித்த வரலாற்று புத்தகம் இது
முதல் அத்தியாயத்தில் காந்தியம் பற்றி கூறும்போது காந்தியத்துக்கு அறவழி என்பதை திறவுகோலாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு அடிப்படையாக அமைந்த பல்வேறு நிகழ்வுகளையும் கூறியதோடு அறவழி என்பது காந்தியடிகளுக்கு இருந்த மகத்தான சக்தியை விளக்கி விட முடியாது தம்முடைய தோற்றம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும் அவருடைய அந்த தோற்றமே அவருக்கு ஒரு ஈர்ப்பு சக்தியை அளித்தது.
இந்த புத்தகத்தில் நான் அறிந்து கொண்டே ஒரு செய்தி மாரிட்ஸ்பெர்க் ரயில் நிலையத்தில் காந்தியை கீழ இறங்க வைத்ததும் இரவு முழுவதும் கடும் குளிரில் அங்கேயே தங்கினார். மறுநாள் காலையில் ரயில்வே அதிகாரிகளுக்கும் டர்பனில் இருந்த அப்துல்லா சேட்டுக்கும் இது பற்றி தந்தி கொடுத்தார். உடனே அவர் மற்ற இந்திய வியாபாரிகளுக்கு தந்தி மூலம் தகவல் கொடுத்து காந்தியை சந்திக்கும்படி செய்தார் .அவர்களும் இது போன்ற தொல்லைகளை வெள்ளையர்கள் கொடுத்ததாக கூறி அன்று மாலை வந்த அடுத்த ரயிலில் அவருக்கென்று தூங்குவதற்கு தனியிடம் உரிய கட்டணம் கொடுத்து ஒதுக்கப்பட்டது. முதலிலேயே காந்தி இக்கட்டணத்தை கட்டியிருந்தால் இந்த அசம்பாவிதமான சம்பவம் நிகழ்ந்திருக்காது. ஆனால் கம்பெனிக்கு தம்மால் அனாவசிய செலவு ஏற்படுவதை தடுக்க விரும்பினார் .
காந்தியடிகளின் இன்னொரு தனித்திறமை சொல்லுவது என்றால் தன் கம்பெனி அதிபர் அப்துல்லாவுக்காக வாதாடி தையூப்பிடபம் இருந்து அவருக்கு வரவேண்டிய பணத்தை மொத்தமாக வசூலிக்காமல் தவணை முறையில் கட்ட நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இருவருக்கும் நன்மை செய்ததால் நாளடைவில் இருவரும் நண்பர்களாகினர் . சட்டத் தொழிலுக்கு இந்த முறை பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் அவருடைய தனித்திறமைக்கு இது ஒரு சான்றாகும்.
1901 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கெடுக்க விரும்பினார். அதில் மாநாட்டில் தென்னாப்பிரிக்க இந்தியர்களை ஆதரித்து ஒரு தீர்மானம் கொண்டு வருவது தான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்து நிறைவேறியது. காங்கிரஸ் மாநாடு முடிந்ததும் கல்கத்தாவில் விருந்தினராக ஒரு மாதம் தங்கி கோகலேவின் மூலமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதன்பின் கல்கத்தாவில் இருந்து ரங்கூன் சென்று சில நாட்கள் தங்கி விட்டு கோகலேயுடன் விடை பெற்றுக்கொண்டு பம்பாய்க்கு புறப்பட்டார். முதன் முறையாக ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் தான் பயணம் செய்தார். அன்று அவர் கண்ட காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தன. 1918- 19 ஆம் ஆண்டில் அவர் கவலைக்கிடமாக நோய் வாய்ப்பட்டிருந்தப் பட்டிருந்த ஒரு சமயம் தவிர மூன்றாம் வகுப்புகளில் தான் அவருடைய பயணம் இருந்தது.
என்னுடைய உள்ளத்தில் இருந்த பல முடிவுகள் ரஸ்கினுடைய பெரிய நூலில் பிரதிபலிப்பதை கண்டார் .அவரின் கடையனும் கடைத்தேற்றம் நூலிலிருந்து தான் கொண்ட உபதேசங்களாக கூறியவை
1.எல்லோருடைய பொது நலனிலும் தான் தனி மனிதனுடைய சுயநலனும் அடங்கியிருக்கிறது
2. எல்லோருக்கும் தத்தமது தொழிலை செய்து வாழ்வதற்கு உரிமை இருப்பதால் ஒரு வழக்கறிஞரின் தொழிலும், ஒரு நாவிதரின் தொழிலும் ஒரே மதிப்புடையவையே
3.உழைப்பின் பாற்பட்ட வாழ்க்கை தான், அதாவது வேளாண்மை செய்யும் உழவனின் ,கைத்தொழில் செய்யும் உழைப்பாளியின் வாழ்க்கை தான் வாழ்வதற்கு ஏற்றது
முதல் உபதேசத்தை நான் அறிவேன். இரண்டாவது லேசாக உணர்ந்திருக்கிறேன். மூன்றாவது இதுவரை என் சிந்தனையில் தோன்றியதே கிடையாது என்று காந்தி சொல்லி இருக்கிறார்.
சத்யா கிரக ஆசிரமம் என பெயரிடப்பட்ட காந்தியடிகளின் ஆசிரமம் 1915 ஆம் ஆண்டு மே 25ஆம் நாள் நிறுவப்பட்டது.அது கட்டப்பட்ட இடமான சபர்மதி என்னும் இடத்தில் பெயரால் சபர்மதி ஆசிரமம் என்றே வழங்கி வரலாயிற்று. ஆமதாபாத்துடன் தொடர்பு கொள்ளமளவு அதற்கு அருகிலும் அன்றாட வாழ்க்கையை பொறுத்தவரையில் அதன் சந்தடிகளிலிருந்து போதிய தூரம் விலகியும் இருந்தது. பின்னாளில் தனக்கான போதிமரம் போல அனைத்து ஞானங்களையும் அங்கிருந்தே அவருக்கு கிடைத்தது.
1942 இல் கிரிப்ஸ் குழு இந்தியாவுக்கு விடுதலை அளித்திருந்தால், பயங்கர விளைவுகளை தடுத்திருக்கலாம் என்று பேசப்படுவது.. நடந்திருந்தால் கொடுத்திருந்தால் என்று பேசப்படும் பல விஷயங்களை போல விவாதத்துக்குரிய ஒரு பிரச்சனையே. அப்போது இந்தியாவில் தங்கி இருந்த பிரிட்டிஷ் நாடுகளின் ஆணையால் 1942-ல் அதிகார மாற்றம் செய்திருந்தால் பலத்தை அரசாங்கம் வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தை மட்டும் நாம் வைத்துக் கொள்வது போல் இருந்திருக்கும் .அதற்கு காந்தியே ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். அப்போது ஜின்னா அவர்களின் பிரிவினை அப்போதும் பிரச்சினை தான் இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்
மகாத்மாக்களின் மனத் துயரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும்
*இந்தியாவுக்கு கப்பலில் செல்லும் வழியில் தமிழ் உருது ஆகிய இரு இந்திய மொழிகளை அவர் கற்றார்
300 பக்கங்கள் வரையும் இந்த வரலாற்று புத்தகம் காந்தியை பற்றிய மிக எளிமையாக அதே வேளையில் யாரும் அறிந்திராத பல தகவல்களை இந்த புத்தகம் கொண்டுள்ளது. மீதி இருக்கும் பக்கங்கள் அனைத்திலும் அவருடைய பொன்மொழிகள் அமுத மொழிகள் இடம் பெற்றுள்ளன. காந்தி குறித்து அறிய விரும்புபவர்கள் இந்த புத்தகத்தையும் கருத்தில் கொண்டு வாசித்தால் காந்தி குறித்து நாம் அறியாத பல தகவல்களையும் பல வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Thursday, 13 April 2023
Book-56
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-20
Book-56
Pages-560
சமூக நீதிக்கான அறப்போர்
-பி.எஸ்.கிருஷ்ணன்
நீங்கள் விரும்புகிற எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் திரும்புங்கள்.அந்தப் பாதையில் பிசாசைப் போல சாதி குறுக்கே நிற்கும்
-அம்பேத்கர்
பி.எஸ் கிருஷ்ணன் ஐஏஎஸ் கேரளாவில் பிறந்து ஆந்திராவில் அதிகாரியாக இருந்து.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதுடன் இறுதிவரை தொடர்ந்து அவர் பட்டியல் சாதியினர் பழங்குடியினர் சிறுபான்மை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தவர். தனது 87 வயது வரையிலும் இடைவிடாமல் மக்களுக்காக போராடிய அறிஞர் அவரைப் பற்றி வசந்தி தேவி அவர்கள் உரையாடலிருந்து இப்புத்தகம் துவங்குகிறது. முதல் வரியிலேயே "இந்த மனித மனம் தான் எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது! தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன் என்று எவ்வளவு விடாப்பிடியாக அடம்பிடிக்கிறது ?என அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு ஆதரவாய் போராடிய ஏஞ்சலினா கிரீம்கே வார்த்தைகளில் இருந்து புத்தகம் துவங்குகிறது
இளம் அதிகாரியாக ஆந்திரத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் பட்டியல் இனத்தார் பிரச்சினைகள் தீர்ப்பதற்காக முக்கிய பங்கு வைத்திருக்கிறார் . நாடாளுமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றிய காலத்திலும் இவருடைய பங்கு அளப்பரியது.1978 ஆம் ஆண்டு மாநிலங்களின் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்கான மத்திய அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு பல திட்டங்கள் இவரின் கனவில் உதித்து கரங்களில் வடிவம் பெற்றவை. இந்த திட்டத்தின் படி மாநில பொருளாதாரம் வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த உதவுவது, மனிதக் கழிவுகளை அகற்றுவோர் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கான திட்டங்களை தொடங்குவது, பிசிஆர் சட்டம் என்று அழைக்கப்படும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தற்போது உள்ள நிர்வாக கட்டமைப்பின் பகுதி என்ற வகையில் மனிதக் கழிவு அகற்றுவோரின் விடுதலைக்கான மறுவாழ்வுக்கான திட்டங்களை தொடங்குதல் போன்ற முக்கிய பல அம்சங்கள் வசந்தி தேவி மற்றும் கிருஷ்ணனின் உரையாடல்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் ஆணையம் 1977 மொரார்ஜி தேசாய் அரசின் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் உறுப்பினர்கள் என அரசியல் சாசன சட்ட கூறு ஒரு 338 ல் குறிப்பிடப்பட்டுள்ள படி ஏற்படுத்தப்பட்டது .ஆனால் மசோதா தோல்வி அடைந்தது. 1990 வரை இது பிரச்சினையாகவே இருந்து வந்து மீண்டும் இந்த பட்ஜெட் தொடரில் 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. இதில் கிருஷ்ணனின் பங்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிவுச் சட்டத்தில் ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த இழிவு பெருமளவில் இன்றும் தொடர்கிறது. அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் ரயில்வேயில் தான் சட்டத்தை பெருமளவு மீறுகிறார்கள். மனித தன்மையற்ற கேவலமான இந்த குற்றங்களில் இருந்து எப்படி தலித்துகளை விடுதலை செய்வது எனும் கேள்விக்கு மனிதக் கழிவை அகற்றுவதில் பரம்பரையாக பிணைக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியினர் மக்கள் தொகையில் ஏறத்தாழ 10 சதவீதம் இருப்பார்கள். அத்தகைய நிலையில் உள்ள சாதிகளின் மக்கள் தொகை தலித் மக்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அளவுக்கு இருக்காது. இதனை நிவர்த்தி செய்யும் பொறுட்டு சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கழிவுநீர் சாக்கடைகளை பராமரித்தல், வேதியியல் கண்டுபிடிப்பான்கள் மூலம் பணி செய்யும் இடத்தை மதிப்பிடுவது, மக்காத திடக்கழிவுகள் உள்ளே போகாமல் சல்லடைகளை பயன்படுத்துவது என பல யோசனைகளை அவர் கூறியிருந்தார்.
பழைய சட்டத்தில் 1989 வன்கொடுமை சட்டத்தில் 22 குற்றங்கள் தான் வன்கொடுமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன புதிய சட்டத்தில் 37 குற்றங்களாக விரிவு படுத்தப்பட்டுள்ளன அவ்வாறு சேர்த்தவைகளின் பட்டியலை கொடுத்துள்ளார். தலித் ஒற்றுமையின் தேவையும் தலித் சாதிகளின் ஏற்றத்தாழ்வை சரி செய்வதையும் குறித்த உரையாடல் ஒரு நல்ல முன் முயற்சி ஆக இருக்கிறது.
பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் தொடுத்தது ஆதிக்க சாதிகள் அல்ல. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற வனத்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் தான் .பழங்குடியில் நலிவடைய வைத்து ஆங்கிலேயர்கள் ஆட்சி மட்டுமல்ல அவர்களின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டங்களிலேயே அப்படியான நிலை தொடங்கி விட்டது. இன்னும் வேகம் எடுத்தது. வனங்களில் இருந்த இந்திய வளங்கள் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு இவை தொடர்வது தான் துரதிருஷ்டம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் எவ்வாறு அறிமுகமாகியது நடைமுறைப்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக சிறப்பான முறையில் பதில் அளித்துள்ளார். இவைகளின் மூலம் அதன் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த இட ஒதுக்கீட்டுக்கான தேவை என்ன என்பதையும் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் இதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு ஆய்வு போல சொல்லியுள்ளனர்
*சமூக ஜனநாயகத்தின் மீது மிகச் சிறிய அளவில் கவனம் செலுத்திவிட்டு அரசியல் ஜனநாயகம் மீது மட்டுமே கவனம் செலுத்துகிற போக்கை சாணி குவியலின் மீது அரண்மனை கட்டுகிற போக்கு என்கிறார் அம்பேத்கர்.
*புதிய சட்டங்களை உருவாக்கு என்று கோரிக்கைகள் வைப்பது விட ஏற்கனவே சட்டங்களை முறையாக அமலாக்க சட்டங்களை நிறுத்தி போகச் செய்யாதே
*உழைக்கும் மக்களை பிரித்து வைப்பது தான் சாதி
*சாதி என்பது உழைப்பின் பிரிவினை அல்ல உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருப்பது தான் சாதி
*இந்திய சமூகத்தில் வர்க்கங்கள் செங்குத்தாகவும் சாதிகள் குறுக்காகவும் செயல்படுகின்றன
இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான புத்தகம் 2017 டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனை தமிழாக்கி விட வேண்டும் என முயன்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அன்றைய கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு ஆனந்தன் அவர்கள் மொழிபெயர்ப்பு என்பது தெரியாமல் நேரடி மூலநூல் போல அருமையாக இந்த புத்தகத்தை கொண்டு வந்துள்ளார் அவருக்கு தான் மிகுந்த பாராட்டுக்கள். ஆங்கிலத்தில் வந்தவை இரண்டு புத்தகங்களாக இருந்தாலும் இவைகளை சுருக்கி ஒரே புத்தகமாகவும் அதே சமயத்தில் கருத்தில் எளிதாக குறைபாடுகளும் இல்லாமல் கொண்டு வந்துள்ளனர். திரையாடல் ஓடியாவது இது போன்ற நல்ல நூல்களை தமிழ் படுத்திட வேண்டும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Wednesday, 12 April 2023
book-55
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-19
Book-55
Pages-927
குடியரசு 1931
பெரியாரின் பேச்சும் எழுத்தும்
காலை 6 மணிக்கு ஆரம்பித்த புத்தகம் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் பணிக்கிடையில் தற்போது தான் வாசித்து முடித்தேன். அறிஞர்கள் கூறுவது போல எந்தவித மேற்கோளும் சொல்லாமல் பெரியாரின் பேச்சு தன்னுடைய உள்ளத்தில் இருந்து எழுந்தவை ஆகும். அவை வெறுமனே தப்பு என்றோ இல்லை என்றோ நாம் ஒதுக்கி விட முடியாது .அது குறித்து ஆராய்ந்து பார்தது நம்முடைய மனசாட்சியிடம் விட்டால் அது நிச்சயம் பெரியார் பக்கம் தான் சாயும். சிந்தித்துப் பேசக்கூடிய பேச்சு நம்மையும் சிந்திக்க வைக்கும் விதத்தில் இருப்பது தான் பெரியாரின் மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் இந்த புத்தகமும் ஆங்காங்கே தத்துவம் ஆத்தமும் கருத்துக்களும் நையாண்டியும் பகுத்தறிவும் பல வகைகளில் உள்ளே மிளிர்கிறது.
1931 ஆம் ஆண்டிலேயே வட மாநிலங்களில் வர்ணாசிரம சுயராஜ்ய மாநாடுகளை தேச பக்தர்கள் நடத்தி அதில் மனு தர்மத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்திகளை குடியரசு கண்டனத்துடன் பதிவு செய்துள்ளது. சுயமரியாதை இயக்கத்தின் ஆஸ்தியே மன உறுதி தான்.மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன்முதலாக தமிழில் வெளியிட்டது சுயமரியாதை இயக்கம் தான். அதில் பெரியார் எழுதிய முகவுரையில் "மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகிறது. அதாவது முதலாளி தொழிலாளி. ஆனால் இந்தியாவிலோ மேல்ஜாதியார் கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதும் இருப்பதால் அது பணக்காரன் ஏழை தத்துவத்துக்கு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது" என்கிறார்.
அறிவு இயக்கம் எனும் கட்டுரையில் மேல்நாடுகளில் வெகு தீவிரமாய் அறிவு இயக்க பிரச்சாரங்கள் முக்கியமாய் கருதப்படும் பரப்பப்படும் வருகின்றன. அந்த இயக்கத்தின் சார்பில் ஒன்றான லண்டனில் இருக்கும் அறிவு ஆராய்ச்சியாளர்களின் அபிப்பிராய பதிவு சங்கம் பல புத்தகங்கள் அச்சிட்டு அடித்து விளக்கி விநியோகிக்கிறது. அதில் அறிவு விளக்கம் என்னும் பெயரால் நடத்தப்பட்டு வந்த அந்த புத்தகத்தில் இந்திய சரித்திரத்தில் அதிசய தக்கபடி ஒரு பெரிய புத்துணர்ச்சி பிரபாகம் இரு கரையை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களால் எதிர்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த நம்பிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் அஸ்திவாரத்திலேயே ஆட்டம் ஏற்படும்படி செய்து விட்டது. இந்த இயக்கமானது இந்துக்களை நூற்றுக்கு 97 பேர் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனியத்தின் மீது பாய்ந்து அதை கண்டிப்பதன் மூலமாக தொடங்கி பிறகு ஜாதி வித்தியாசத்தை கண்டிப்பதில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் தனிப்பங்காற்றி வருகிறது என்று புகழாரம் சூட்டி இருக்கிறது.
புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியாகும்
அதற்கு பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்கு பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம் .நம்மை போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கு அடைந்து வருகின்றன. நம்மிடம் வேறு எவ்விதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும் பழைய கொள்கைகளை குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும் புதிய கொள்கைகளிடம் துவேசமும் வெறுப்பும் காட்டுவதில் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குவதாக இருக்கிறோம். மற்ற நாடுகளெல்லாம் ஐரோப்பிய ஜப்பானியர் எல்லாம் புதிது புதிதாக சிந்திக்கின்றனர். புதிய கொள்கைகளின் அவசியத்திற்கு இன்னும் என்ன காரணம் உதாரணம் கேட்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. நம்முடைய சனாதான தர்மபிரச்சாரம் எல்லாம் பழைய கொள்கை பிரச்சாரம் இல்லாமல் வேறு என்ன பிரச்சாரம் என்று எண்ணுகிறீர்கள். இன்றைய முற்போக்குத்தனத்தை அப்போதே முன்னிறுத்துகிறார்
மொழி குறித்த அவரின் பார்வையில் இந்த உலகில் இந்திய மக்களுக்கு அவரவர் சொந்த மொழி தவிர வேறு மொழி தெரிய வேண்டும் என்றால் அது ஆங்கில மொழி என்று நாம் தைரியமாக சொல்லுவோம். உலகமே ஒரு கிராமம் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது. தமிழ் மக்களுக்கு சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வர வேண்டி இருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத்துகிறது என்று சொல்லுகிறோம் .தமிழ் மொழியின் பாண்டித்தியம் என்பதை இப்போது அநேகமாய் பார்ப்பனர்களிடமிருந்து தமிழ் மொழியின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனராய் இருக்கிறார்கள் என்பதோடு இவர்கள் ஹிந்தி படிக்க கட்டாயப்படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் மொழிக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உணர்வீர்கள் ஆக
வட்டமேசை மாநாடு குறித்து ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி வட்டமேசைக்கு போக மாட்டார் .ஒரு சமயம் போனாலும் அவர்தான் போவாரே ஒழிய மற்றவர்கள் போக மாட்டார்கள். மற்றவர்கள் போனாலும் மகாத்மா தான் காங்கிரஸ் பிரதிநிதியாக இருப்பார். வட்டமேஜை மாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் கட்சி மாத்திரம் எடுத்துச் சொல்லிவிட்டு விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டார். பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவே என்று ஒரு சமயம் ஏதாவது விட்டுக் கொடுத்தாலும் ஐயோ பாவம் அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே பிழைத்து போகட்டும் என்று கருதி தயாளத்தின் மீது விட்டுக் கொடுப்பாரே ஒழிய மிருக பலத்துக்கு பயந்து கொண்டு ஒரு காலம் விட்டுக் கொடுக்க மாட்டார் .இதனை எல்லாம் உத்தேசித்து அகிம்சையும் சத்தியாகிரகம் தோற்றுப் போகும் என்று ஒருநாளும் சந்தேகப்பட மாட்டார். ஏனெனில் அது கீதையின் ரகசியமாயும் கடவுள் செயலாளரும் தான் இருக்குமே ஒழிய ஒரு நாளும் மகாத்மா காந்தி செயலாக இருக்க முடியாது என்பது மாத்திரம் உறுதி என்று ஜோசியன் எனும் ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளார்.
சுயமரியாதை திருமணம் குறித்த பார்வையில் பெண்களுக்கு போதிய அறிவில்லாததாலும் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படாதொளாலும் முழு சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத்தனத்தை குறிப்பிடப்படுகிறது. நியாயமாகவே மணமகள் தாலி கட்டிக் கொள்ள தனது கழுத்தை அளித்து இருக்க கூடாது. இந்த விவகாரத்தில் புரோகித செலவு குறைக்கப்பட்ட இருப்பதாக நான் கருதுவது இல்லை .பொதுவாக விவாகத்தை கடவுளின் தலையில் சுமத்தி விடுகிறோம் என்ன செய்வது விவாகம் திடீரென கூடிவிட்டது, இருவரின் சம்மதத்தையும் வயதையும் கவனிக்காமல் நாம் செய்து வைக்கின்றோம். உனக்கு என்ன கவலை வந்தது என்று சொல்லியே பல மணங்கள் முடிக்கப்படுகிறது. பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று தான் கேட்டு தெரிந்து இருக்கிறோம். பணத்தை வாங்கிக் கொண்டு இருவருக்கும் பொருத்தம் இருப்பதாக கூறிவிட்டால் உடனே விவாகம் நடந்து விடுகிறது. இதே போல கிறிஸ்துவ இஸ்லாமிய திருமண முறைகளின் மூடநம்பிக்கைகளையும் சாடி சுயமரியாதை திருமணங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தன்னுடைய சொற்பொழிவில் கூறியுள்ளார் மேலும் அதிக செலவில்லாமல் சடங்குகள் இன்றி தம்பதிகள் இருவரும் தங்களுடைய விவாதத்தை இரண்டு சாட்சிகளின் முன்னணியில் ரிஜிஸ்டர் செய்து கொள்வதே போதுமானது என்று தீர்வையும் சொல்லி இருக்கிறார்.
இதற்கு என்ன சொல்கிறீர்கள் எனும் கட்டுரையில் இன்றைய தினமே கண்டிப்பாக மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களான ஒருவருக்கொருவர் மதங்களை மரியாதை செய்வது, பெண்களை எல்லா விஷயங்களிலும் சமத்துவமாய் நடத்துவது, தீண்டாமையை ஒழித்து விடுவது ஆகிய காரியங்களை செய்ய இப்பொழுதே நாம் நாள் முடியாவிட்டால் சுயராஜ்யம் வந்த பிறகு சுயராஜ்ய அரசாங்கத்தாருக்கு மக்களை நிர்பந்தப்படுத்தி மேற்கொண்ட சீர்திருத்தங்களை செய்வதற்கு சக்தி இல்லாமல் போய்விடும் என்று நான் தீர்க்கதரிசனமாக சொல்லுவேன். ஏனெனில் மக்கள் அபிப்ராயங்களுக்கு விரோதமாக ஒரு அரசை பெற வேண்டிய காரியத்தை செய்யவே முடியாது. பகுத்தறிவும் ஞானமும் கட்டுப்பாடுள்ள ஜனநாயகம் தான் சரியான ஜனநாயகம் ஆகும்
சுயமரியாதை இயக்கம் என்ன செய்து விட்டது சத்தியாகிரகம் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் சத்தியாகிரகம் என்ற பெயரில் விளம்பரம் கொடுத்து கோவில்களில் முன்பு குளங்களின் முன்பாக நிறுத்தி ஜெயிலுக்கு அனுப்பி அதற்கு தகுந்த விளம்பரங்களும் பாராட்டுகளும் போட்டு ஆடம்பரம் செய்வதல்ல. அவை இல்லாமலேயே சுயமரியாதை இயக்கம் நிறைய சாதித்து விட்டது. முதலாவது நமது மக்களுக்கு பெரும்பாலும் பகுத்தறிவு ஆராய்ச்சி என்பது தடை படுத்தப்பட்டு விட்டது. உணர்ச்சி இருந்தாலும் அதனை நேர்வழியில் பயன்படுத்த யோக்கியமோ நாணயமோ தன்மையோ இல்லாமல் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலேயே பொதுநல வாழ்க்கையில் நாணயமாக இல்லாமல் இருப்பதுடன் மக்களை அறிய முடிவோ நன்றி செலுத்துவோ இல்லாமல் போய்விடுகிறது. இந்த இயக்கம் தோன்றிய காலம் முதல் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தலிலும் அரசியல் உத்தியோகத்திலும் வகுப்புவாரி உரிமை ஏற்பட வேண்டும் என்று கூப்பாடு போட்டு வந்ததாகும்.
வேகின்ற வீட்டிலே பிடுங்கினது வரை லாபம் என்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய தேசியமும் பல்வேறு பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த புதிய புதிய வரிகளை போடுவதில் ஆர்வமாய் இருக்கின்றார்கள். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்றால் அது யாருக்கு ஏற்பட்டிருக்கிறது. எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழை மக்கள் கிராமத்தில் ஆடு மாடு மேய்த்து செருப்பு தைத்து வாழ வேண்டியது. அவர்களது கையில் காசு சேரும்படியான வேலை எதுவும் செய்யக்கூடாது. மற்றும் பம்பாய் மேல் முதலாளிகளை பார்த்து பொறாமை படக்கூடாது. அவர்களைப் போல பணக்காரன் ஆவதற்கு எண்ணவும் கூடாது என்பதாக கொள்கை இருந்தால் இந்த அரசாங்கம் நடைபெற்று வருகிறது.. என்று தற்கால உண்மைகளை கூட அப்போதே சொல்லி இருப்பது தான் மிக ஆச்சரியமாய் இருக்கிறது
*தோலை கடித்து துருக்கியை கடித்து கடைசியாக வேட்டைக்கு தயாராகி விட்டது
*ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதை தேளும் கடித்துவிட்டால் எப்படி அது தலைகால் தெரியாமல் கண்டதை எல்லாம் கடிக்குமோ அது போலத்தான் காவல்துறை இருக்கிறது சகோதரர்களே
இதுபோல் நூல் முழுக்க மக்களின் குரலாக சமூகத்தின் குரலாக அன்றைய விடுதலையில் என்னென்ன தேவை இருக்கிறது என்பதனையும் ஒவ்வொரு மேடையிலும் கட்டுரைகளிலும் தன்னுடைய இயல்பான சொற்களில் ஆழமான அர்த்தத்துடன் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது. இதில் நான் ரசித்த பகுதிகளை மட்டும் குறித்துள்ளேன். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் சிந்தனை செய்துள்ள பக்கங்கள் இருக்கின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Book-54
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-19
Book-54
Pages-472
இந்தியா
-சசி தரூர்
வாழ்வின் கனவை மனிதன் காணத் தொடங்கிய ஆதி நாட்களிலிருந்து, உயிர் வாழ்ந்த மனிதர்களின் கனவுகளின் இல்லமாக ஓர் இடம் உலகில் இருக்கும் என்றால் அது இந்தியா தான்
-ரோமைன் ரோலன்ட்
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்ற இந்தியாவுக்கு 50 வயது ஆகிறது .இந்த முதல் 50 ஆண்டுகளின் கதை என்ன? 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வைத்திருக்கிறது? இந்த இரண்டு வினாக்கள் ஏன் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்கான கேள்விக்கான பதிலாக இந்த புத்தகம் இருக்கிறது
இந்தியாவைப் பற்றிய மெய் வாசகத்தோடு இந்தியாவைப் பற்றிய இன்னொரு வாசகம் முரண்படும். நாட்டின் அரசு இலட்சணையில் பொறிக்கப்பட்டிருக்கும் தேசிய குறிக்கோள் வாக்கியம் வாய்மையே வெல்லும் என்பது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. யாருடைய உண்மை? இந்த கேள்விக்கு ஒரு கோடி பதில்கள் கிடைக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட விடை விடையே அல்ல.எனவே ஒரு கேள்வி க்கான விடையை காண வேண்டும். இது ஒருமை நிலையில் உள்ளொளியில் இருக்கிறது. இந்தியாவைப் பற்றிய ஒருமை தன்மையை பற்றி மட்டும் தான் பேச முடியும் என்பது தான் அந்த விடை.பல இந்தியாக்கள் இருக்கின்றன ஒவ்வொன்றும் எண்ணற்ற வேறுபட்ட வகைகளாக இருக்கின்றன. ஒரே தரம் என்றோ, ஒரே மாதிரி என்றோ, ஒரே வழி என்றோ ஒன்றும் இல்லை. இந்தியாவில் எல்லா குழுக்கள் சமயங்கள் ரசனைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கி வருவதற்கு இவ்வுலகில் அவற்றினை ஒழுங்குபடுத்துவதில் இப் பன்முகத்தன்மை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்க பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் கொண்டு எவ்வாறு எல்லாம் திட்டம் தீட்டினர். இறுதியில் மக்கள் எவ்வாறு எல்லாம் ஒன்றுபட்டு ஒரே கோட்டில் நின்றனர் என்பது பற்றியும் கட்டுரை இன்னும் ஆழ அலசுகிறது. சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் அவதூறுகளையும் எவ்வாறெல்லாம் கருதலாம் என்பதைப் பற்றியும் கருத்தியல் ரீதியாக அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அடிப்படையில் இரண்டாம் பகுதியின் கட்டுரை அமைந்துள்ளது.
மிகத் தவறாக பயன்படுத்தப்படும் சொல்லான மதச்சார்பின்மை என்பதற்கு இதுதான் பொருள். மேலைநாட்டு அகராதிகள் மதச்சார்பின்மை இச்சொல்லுக்கு மதம் இல்லை என்று பொருள் காண்கின்றன. ஆனால் இந்த செக்யூரிலிசம்.. மதங்களின் மிகுந்திருத்தல் என்று பொருள் தெரிகிறது.இவற்றில் எந்த மதமும் அரசாங்க மதம் இல்லை .மக்கள் பண்பாட்டில் மதம் என்பது எங்கும் நிரவி இருக்கிறது. அதுவும் நேரு வெளிப்படையாகவே தான் எந்த மதமும் இல்லாதவராக இருந்தார் .ஆனால் மதம் பொதுக் கொள்கையில் எந்த இடத்திலும் பெறவில்லை என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. மதம் குறித்தும் மதச்சார்பின்மை குறித்தும் இப்பகுதியில் நீண்ட நெடிய வரலாற்றுத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதச்சார்பின்மையை தகுதியை வெளிப்படுத்துகிறது
பட்டியலின ஜாதிகள் தொடர்பான கட்டுரை ஒன்றில் இந்தியா விடுதலை பெற்ற 50 ஆண்டுகளாக நிலைபெற உழைத்த மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையான மாற்றம் கேரளாவில் நன்றாகவே நடந்தது. அங்கே தொடர்ந்து வந்த பொதுவுடமை அரசுகள் அவர்களது புரட்சிகர ஆர்வத்தை வளர்ச்சி மாற்றுவதற்கு உட்படுத்திக் கொண்டார்கள். மற்ற இடங்களில் இல்லாவிட்டாலும் இந்தியா முழுவதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
நீங்கள் ஒரு மதத்தினை சேர்ந்தவராக இருந்து உங்களை நீங்களே பெரும்பான்மையானதாக நினைத்துக் கொண்டிருந்தால் ரயிலில் இந்தியா முழுவதும் சுற்றி வாருங்கள். நாம் எவ்வளவு சிறுபான்மையினர் என்பது தெரியும். ஏனெனில் பல்வேறு தரப்பினர் வாழ்ந்து வரும் பூமி தான் இந்தியா. இங்கே நாம் பெரும்பான்மை என்று எண்ணிக் கொண்டிருந்தால் வெளி உலகத்துக்கு செல்லும்போது சிறுபான்மை போல நினைக்க நேரிடும். இந்தியா ஒரு பழைய சுவடி போன்றது. அதன் மேல் அடுக்கின் மேல் அடுக்காய் சிந்தனையும் கனவுகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஏற்கனவே எழுதப்பட்ட எதுவும் முழுதும் மறைக்கப்படவோ அழிக்கப்படவோ இல்லை .மக்கள் மத்தியில் வேறுபாடும் கணக்கற்ற வகைகளும் வெளிப்படையாக இருந்தாலும் எங்கும் ஒருமைப்பாடு எனும் மிகப்பெரிய அழுத்தம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனில் இந்தியா காட்டும் அக்கறையும் இந்து வளர்ச்சி வீதமும் பிற கடவுள் மறுப்பு பாரம்பரியங்களும் கட்டுரைகளும் நாட்டில் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றங்களும் மக்களிடையே ஏற்பட்ட முன்னேற்றங்களும் எவ்வாறெல்லாம் வரலாற்றில் பதிவு பெற்றன என்பதை பற்றிய கட்டுரையாக வருணிக்கிறது.
சுதந்திரம் அடைந்த ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மை எவ்வாறு நாம் அயல்நாடுகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகினோம் என்றும் இந்தியாவின் தத்துவார்த்த ரீதியான கொள்கை விளக்கங்கள் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கின்றன என்பது பற்றியும் நீண்ட நெடிய கட்டுரைகளாக ஒவ்வொன்றும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. வரலாறை மீள் வாசிப்பு செய்வதற்கு இது போன்ற கட்டுரைகள் துணை புரிகின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
book-53
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-19
Book-53
Pages-446
நகுலன் 100 அருவம் உருவம்
-ஷங்கர ராமசுப்ரமணியன்
இந்தப் புத்தகத்தில் நகுலனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் ஒரே புத்தகத்தில் அழகாக வடிவமைத்துள்ளனர் .முதலில் இந்த புத்தக நேர்த்தி தான் என்னை இந்த புத்தகத்தை வாங்க வைத்தது. அழகாக அட்டையை ஒரு பர்ஸ் போல் அழகாக மூடி வைக்க முடிகிறது ஒவ்வொரு முறை திறக்கும் போதும் ஏதோ ஒரு பரிசு பொருளை திறப்பது போல எண்ணம் வருகிறது.
இருப்பதன் மீதான சார்பும் இருப்பதன் மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பது தொடர்பிலான பிரம்மாண்ட அகந்தையும் பெருகியிருக்கும் காலகட்டம் இது. இங்கே இல்லாமல் போகும் வரும் இடத்தை ஒரு கருவறையாக கண்டு, இன்மையை தனித்த ஒரு வசீகரமான இருப்பாக தமது மொழி வழியாக சுட்டிக் காட்டியவர் நகுலன் என்று முன்னுரையில் புகழாரம் சூட்டுகின்றனர. நகுல சரித்திரம் எனும் பகுதியில் நகுலனின் இயற்பெயர் டி கே துரைசாமி. நாயர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். நகுலனின் பாட்டனரான கிருஷ்ண ஐயர் நீதிபதி என்பதால் திருவனந்தபுரம் அருகே அவரின் இருப்பிடம் அமைந்தது. நகுலன் பிறப்பிலேயே மிகவும் பூஞ்சையான உடல்வாகக் கொண்டவர். அடக்கத்தையும் நேர்மையையும் இவரிடம் இளமையிலேயே கற்றவர். குடும்ப வறுமை காரணமாக பிஏ படிப்பை மட்டும் நேரடியாக கல்லூரிகள் பயின்றவர் மற்றவை அனைத்தும் தொலைநிலை கல்விதான். இதுவரை 10 நாவல்கள் 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 5 கவிதை தொகுப்புகள் 62க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியில் ஒரு நாவல் ஐந்து கவிதை தொகுப்பு என இவரின் படைப்புலகம் இருக்கிறது.
இவரின் ஆங்கில கவிதைகளைப் பற்றி சொல்லும் போது யுவன் சந்திரசேகர் பகிரும் சில கவிதைகள்
/மழை இலைகளை சிதறடிக்கிறது இலைகள் என்ன செய்யும்/
/வார்த்தைகளை போகவிடு அவை விட்டுச் சென்றதை தக்கவை இந்த விதத்தில் வார்த்தைகளை தோற்கடிப்பாய்/
/பக்கங்களை திருப்பு புத்தகம் தானே வாசித்துக் கொள்ளும்/
/அரங்கம் காலி ஆட்டம் முடிந்தது அப்படித்தான் படுகிறது/
அடுத்த பகுதியாக நகுலனின் வாக்குமூலம் குறுநாவலை தழுவி வரதராஜன் ராஜ உருவாக்கிய கிராபிக் நாவல் என்று படங்களின் உதவியுடன் ஒரு நாவல் விரிகிறது. நகுலனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் இருந்து விருந்து ஒரு கதை இதில் கொடுக்கப்பட்டுள்ளது அதில் ஒரு நொடி கதையும் ஒரு நீண்ட கதையும் சுருக்கமாக நறுக்கு தெரிந்தால் போல் இருக்கிறது
/நீலகண்டனும் ராமநாதனும் நண்பர்கள் எழுத்தாளர்கள். ராமநாதன் நீலகண்டனிடம் என்னுடைய அப்பா செத்து விட்டார். நல்லவர். நீ என்ன சொன்னாய் .என்னுடைய என்பதை நான் கேட்கவில்லை. இருவரும் பேசாமல் நடந்து சென்றார்கள்/கதைகளை ஓரிரு வாக்கியங்களில் உணர்வுகளின் மூலமாக இதை வெளிப்படுத்தி உள்ளார்
Non being தொகுப்பிலிருந்து
நகுலன் பகிர்ந்த அனுபவத் தொகுப்பில் அரசியல் களத்தில் முன்னேறி வந்த போது லாலு பிரசாத்துக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் ஒரு ஆங்கில ஆசிரியர் அமர்த்திக் கொண்டதாகவும் ,ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் லாலு கூறிய இந்தி பதங்களை கேட்டு அந்த ஆசிரியர் தனது பணியாகிய ஆங்கிலம் கற்பதை மறந்து இந்தி புலமையை வளர்த்துக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
/இருப்பதாக வருகிறோம் இல்லாமல் போகிறோம்/ இந்த கவிதை வெளிப்படையாக தெரியாத ஆழ் தளங்களைப் பற்றி பேசுகிறது. இல்லாமல் என்ற பதம் பல ஆழங்களில் பொருள் கொள்கிறது. நாம் உயிருடன் வாழும் போதே உண்மையில் இருப்பதில்லை என்னும் ஆழமான உண்மையை சுட்டிக்காட்டுகிறது. இருப்பது என்பது உடலளவில் ஜீவித்திருப்பதா அது மட்டும் தானா? அல்லது எதையெதையோ தேடி பணம் செல்வாக்கு இவற்றையெல்லாம் தேடி அலைவது தானா? இருப்பது என்பது நான் இருக்கிறேன் என்பது எவ்வளவு பேருக்கு தெரிகிறது. நான் இருக்கிறேன் என்பது தன்னுணர்வு. உயிரின் சுய உணர்வு என மேலும் மேலும் இதை குறித்த விரிவான கட்டுரை இடம் பெற்றுள்ளது.
திரை உலகமேதை இங்மெர் பெர்க்மன் ரஷ்யத் திரை கலைஞரான ஆந்ராய் தர்கோவ்ஸ்கி. "நான் மனித மன உலகில் பிரவேசிப்பதற்காக அதன் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறேன். அந்தத் தட்டல் சத்தங்கள் தான் என்னுடைய திரைப்படங்கள். ஆனால் தார்கோவ்ஸ்கிக்கு மனித மதம் கதவுகள் தாமாகத் திறந்து வழி விடுகின்றன. அவர் அனாசியமாக உள்ளே புகுந்து சஞ்சரிக்கிறார். நகுலனோ தன்னை அறியும் பிரயாசைகளுக்காக தன் மனக்கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார். அவருடைய மனக்கதவுகளும் திறப்பது மூடுவதுமாய் அவருக்கு வேடிக்கை காட்டுகின்றன. என்ற ஒப்பிட்டு ஒரு கட்டுரையில் சொல்லி இருப்பார்கள்
மகாபாரதத்தில் வரும் நகுலன் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரியின் புதல்வர் ஆயுர்வேதம் வாள்வீச்சு குதிரை வளர்ப்பு குதிரைகளின் மொழி அறிதல் ஆகியவற்றில் திறமைசாலியாக இருந்தவர். குறிப்பாக மழை பெய்து கொண்டிருக்கும்போது இரு மழைத்துளிகளுக்கு இடையில் தேரை நனையாமல் செலுத்துவதிலும் விரைவாக தேரையும் குதிரைகளையும் இயக்குவதிலும் வல்லவர் என்கிறது பாரதம். நகுலனிடம் இதே சாயல்கள் காணப்படுகின்றன. கவிதை எழுதுவதும் இரு மழைத்துளிகளுக்குள் நனையாமல் செல்லும் செயல் தான் இவர் தன்னை இரட்டையராகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார் எஸ்ரா
*/லட்சியம் நலியும் போது உருவம் தோன்றுகிறது- சார்லஸ் புகோவ்ஸ்கி/
*பேராசிரியர் என்னை புன்முருவலுடன் வரவேற்றார் நீங்கள்?
தமிழில் படித்திருப்பது எம் ஏ வரை
ஆங்கிலத்தில் அல்லது தமிழிலா?
தமிழை ஆங்கிலத்தில் எவ்வாறு கற்க முடியும்?!?
*புகழ் மீதுள்ள ஆசைதான் ஒரு எழுத்தாளனை எழுத தூண்டுகிறது
*/முகம் பார்க்கும் கண்ணாடி மூன்றுண்டு என் வீட்டில் மூன்றில் பார்த்தாலும் முகம் தான் தெரியவில்லை அகம் தான் தெரிகிறது- சுப்பையா/
*வார்த்தை அர்த்தத்தில் இருந்து விலகியே இருக்கிறது
வாழ்க்கையில் இருந்து சித்தன் விலகி இருப்பது போல
வாழ்க்கைக்குள்ளே தான் இருக்கிறான் சித்தன் அர்த்தங்களுக்குள்ளே தான் இருக்கிறது வார்த்தை
*எளிய வார்த்தைகளின் திகைப்பூட்டும் சேர்மானங்களில் கவித்துவம் கொள்ளும் கவிதைகள் இவருடையவை
*நகுலனின் கடுங்கதைகள் முழுக்க நூலக ஆடியில் அசையும் ஏதோ சொற்கள்; சிதறிய அங்கங்களின் முடிகிறது.
**/ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டு வந்து கடைசி நிற்கும் பூஜ்ஜியம் தான் பூரணம் என்கிறீர்கள்/
புத்தகத்தின் இறுதியில் நான் வசித்த இந்த சிறுகதை சபரிநாதன் தன் கட்டுரையில் பயன்படுத்தியது. புத்தர் சீடர்களுடன் காட்டு வழியை பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கே ஓடிக் கடக்கும் ஒரு காட்டு நாயை பார்க்கிறார். அது முதலில் புதர்களுக்கு அடியில் நிற்கிறது. பிறகு மரப் பொந்துக்குள், பிறகு குகைக்குள், அங்கும் நிலை கொள்ள முடியாமல் பாறை நடுவுக்குள் ஓடுகிறது. புத்தர தன் சீடர்களிடம் சொல்கிறார் பார்த்தீர்களா பிக்குகளே இந்த நாய் இங்கும் அங்கும் ஓடி அல்லலுறுவதை .ஏனெனில் ,அதன் உடல் சொறி பிடித்து புண்ணாகி உள்ளது .எனவே அது எல்லா இடங்களிலும் துயருறுகிறது. பிரச்சினை மரப்பொந்திலோ குகையிலோ இல்லை. அந்த நாயிடம் தான் உள்ளது. மனிதனை ஏன் நாய் என்று கூறக்கூடாது என்கிறார். கட்டாயம் கூறலாம். சொல்லப்போனால் புத்தரின் கதையில் வரும் அந்த நாய் மனிதனே என்று அந்த கதை முடிகிறது. மிகவும் தத்துவார்த்த ரீதியாக உள்ள கதை மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Tuesday, 11 April 2023
book51
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-18
Book-51
Pages-288
மும்மூர்த்திகள்
-சரவண கார்த்திகேயன்
கேள்வி கேட்பது ஒரு கலை என்பார்கள். கேள்வி கேட்பதன் இன்னொரு வகை தான் பேட்டி எடுத்தல். ஆனால் பேட்டி எடுப்பது என்பது பதில் சொல்பவருக்கு எவ்வளவு தெரியும் என நினைத்துக் கொள்வதை விட கேள்வி கேட்பவருக்கு எவ்வளவு தெரியும் என காட்டிக்கொள்வதே அதிகம். ஒரு நேர்காணல் செய்ய வேண்டுமாயின் கேள்வி கேட்பவர் அவரைப் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொண்டு இன்னும் அதில் மிச்சம் இருக்கும் அல்லது அதை நீச்சியாக ஏதேனும் ஒரு கேள்வி கேட்டு அவரின் அனுபவத்துளியை அப்படியே அள்ளி எடுப்பது போல அந்த கேள்வி அமைந்தால் கேட்பவருக்கும் அதை படிப்பவருக்கும் சுவாரஸ்யம் தானே .அப்படித்தான் இந்த புத்தகம் எதெச்சியாய் கிடைத்துப் படித்தது. எழுத்தாளர் ட்விட்டரில் நண்பராய் இருப்பதால் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் படித்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. மூன்று ஆளுமைகளை பற்றி முழுமையாக தனக்கு தெரிந்த விடயத்தையும் அவர்களின் பதில்களையும் வைத்து அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தந்தது இப்புத்தகம்.
நேர்காணல் பொதுவாக வார இதழ்களில் மூன்று பக்கங்களுக்கு மிகாமலும் இலக்கிய இதழ்களில் 30 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும். ஏனெனில் நேர்காணல் என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் ஜெயமோகன் பற்றிய நேர்காணலில் பல்வேறு கேள்விகள் மிக அழகாக கேட்கப்பட்டுள்ளன.சு.ரா பற்றிய கேள்விக்கு அவரைப் பற்றி சொல்லும்போது சிற்றிதழ் என்பது அளித்த பரவசத்தை இன்று ஆச்சரியத்துடன் நினைத்துக் கொள்கிறோன். குறைவாக எழுதுவது மட்டுமல்ல எழுதாமல் இருப்பதே கூட படைப்பு செயல்பாடு என நம்பினோம் என்று ஜே ஜே சில குறிப்புகள் பற்றி ஓர் இடத்தில் கூறுகிறார்.
மொழியின் உச்ச வெளிப்பாடு பற்றிய கேள்விக்கு காவியம்தான் என்று பதில் சொல்கிறார். கவிதை ஒரு முழுமை அனுபவத்தை அளிப்பதில்லை அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீன கவிதையின் இந்த துளித்தன்மை அதன் பலம் அதன் பலவீனமும் அதுவே என்கிறார்.
எழுத்தாளனின் சமூக கடமை என எதை கருத்துகிறீர்கள் என்று கேள்விக்கு களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படியான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கை அளிக்கிறது. சூழலில் போராளிகளை எடுத்துக் கொண்டால் சூழலியல் பிரச்சனை சரி செய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாது .ஆனால் இலக்கியத்துக்கு அவை எதிரானவை .இலக்கியம் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாக இருக்க வேண்டும். எந்த வகையான தீவிர செயல்பாடு இலக்கியத்தை வலுவிழக்க செய்யும். மேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லா கலையும் அப்படித்தான் மொழியிலும் சிக்கலானது .அது அன்றாட செயல்பாடு முதல் ஆழ் மனக்கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே வாழ்ந்தால் ஒழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்க முடியாது.
#யுவன் சந்திரசேகர்
எதற்காக எழுதுகிறீர்கள் எனும் கேள்விக்கு? எனக்கு வாசிக்க பிடித்திருந்தது அதேபோல் எழுத பிடித்திருக்கிறது என்று நச்சென்று பதில் சொல்கிறார் ஆரம்பத்திலிருந்து. ஸ்டார் எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இரண்டே காரணங்கள் தான் ஒன்று நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களுக்கு என்னுடைய எழுத்து பொருட்படுத்த தக்கதாக இருக்க வேண்டும். இரண்டாவது சீரிய வாசகன் எனது பெயரை பத்திரிகையில் காணும் போது அதை தாண்டி போகக்கூடாது என்னும் ஆசை என்கிறார் இயல்பாக.
ஒரு படைப்பின் கரு உருவாகும் விதம் இன்னமும் மர்மமானதாக தான் இருக்கிறது .ஆனால் அது சற்று தெளிவுறும் விதமாக திரண்ட பிறகு, அதற்கு உருவம் அளிப்பதில் பிரக்ஞை பூர்வமான செயல்பாட்டின் பங்கு அதிகம் .ஆனாலும் ஒரு குறிப்பிட்ட விகிதம் ஆழ்மனச் செயல்பாடும் அதில் கலந்து இருக்கிறது. மனதில் இரண்டு தளங்களும் ஈடுபடுகின்றன. எதிர்புறத்தில் ஒரு கதாபாத்திரங்களை தன்னிச்சையாக உதித்து அதன் ஆதாரப் பிள்ளை தேடும் வாக்கியங்கள் வழிபயணம் தொடரும் போதும் இதுதான் நிகழ்கிறது. முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட பிறகு நான் நேசிக்கும் இலக்கும் மிக நெருக்கமாக நகர்த்திக் கொண்டு போவது தான் படைப்பின் வெற்றி இருப்பதாக கருதுகிறார்
நான் மிகவும் ரசித்த கேள்விகளில் ஒன்று நாவலுக்கு முன்னுரை எழுதாமல் ஏன் பின்னுரை எழுதுகிறீர்கள் ஒருவேளை நாவலை வாசித்தவன் மட்டும் நான் சந்திப்பேன் என்று அர்த்தமா? எனும் கேள்விக்கு வாசகன் தன்னிச்சையாக சுதந்திரமாக ஒரு படைப்பை படித்த பின் அது குறித்து அந்த ஆசிரியருக்கு ஏதேனும் சொல்ல இருந்தால் கேட்டுக் கொள்ளலாம் கேட்காமல் போகலாம்.
முன்கூட்டியே வாசகனை நாவலுக்கு தயார்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை என்று அற்புதமாய் ஒரு பதிலை சொல்லி இருக்கிறார்.
#பெருமாள் முருகன்
சிறுகதை எழுதிக் கொண்டிருக்கும்போது நாவல் எழுதும் பழக்கம் எப்போது வந்தது எனும் கேள்விக்கு இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாய் ஒரு உணர்வு அந்த கதைகளுக்கு நான் எடுத்துக் கொண்ட களம் சிறுகதைக்கானது அல்ல என்ற தீர்மானித்தேன் தொடர்ந்து நண்பர்களின் உற்சாகத்தினால் நாவல் என் கைக்கு வந்தது. மன ஓசை இதழில் ஆசிரியராக மூன்றாண்டுகள் செயல்பட்டது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாய் நான் பார்க்கிறேன். மொழி சார்ந்து கற்றுக் கொள்வதற்கும் ஒரு பத்திரிக்கை எப்படி நடத்துவது என கற்றுக் கொள்வதற்கும் உதவியது எனக்கு அது ஒரு களமாக இருந்தது.
மாதொருபாகன் பிரச்சனை வந்தபோது உண்டான மனநிலை கையாண்ட விதங்கள் நீதிமன்ற தீர்ப்பு என்பன பற்றிய விரிவான ஆய்வு போல ஒவ்வொரு கேள்விகளையும் நறுக்கென கேட்டிருப்பார். அதேபோல் அவரின் படைப்புகளான கூளமாதாரி மொழிபெயர்ப்பு சம்பந்தமான நூல்கள் குறித்தும் மிக விரிவாக கேட்டிருந்தார்.
*பேட்டி என்பதற்கு பதிலாக நேர்காணல் என்ற சொல்லை அறிமுகம் செய்தது கோமல் சுவாமிநாதன் தான்
*எழுத எழுத எழுதுவதற்கு இடம் தெரிந்து கொண்டே இருக்கும். அப்படி தெரியாமல் ஆகும்போது நின்று விடுகிறோம் .அப்போதுதான் திரும்பிப் பார்க்கிறோம்
*குரு என்பவர் ஒரு கடல். அலைகளை தான் தனிமனிதர்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்
* ஆசிரியர் ஒரு துறையில் நமக்கு கல்வி அளித்தவர் குரு நம்மை முழுமை நோக்கி வழி நடத்துபவர் கற்றும் அகத்தை முழுமை செய்கிறார் குரு ஆசிரியர் பாடங்களை சொல்லித் தருகிறார்கள்
*எழுத்து சில வரிகளுக்கு மேல் கட்டற்று தன்னிச்சையாக பெறுக வேண்டும்
*அறிவியலை நாம் முறையாக கற்றவர்கள் அல்ல. அறிவியலை தகவல் கல்வியாகவே நாம் கற்கிறோம். அறிவியல் கொள்கைகளை புரிந்து கொள்வதற்கும் தொடர்ந்து சிந்திப்பதற்கும் இங்கு நமக்கு பயிற்சியே இல்லை
*ஒளித்து வைப்பதை வாசகன் கண்டுபிடித்து விட்டால் மகிழ்ச்சி அடைகிறான் .அதை இலக்கிய அனுபவம் என நினைத்துக் கொள்கிறான்
*குறத்தி முடிக்கில் தங்கம் சொல்வாள் நடந்ததெல்லாம் நடக்காமல் இருந்திருக்கனுங்க. இதுதான் நாகராஜனின் மொத்த கதை உலகத்தின் அடியோட்டம்
*இப்படி ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டோம் எனில் காரியங்களை அதற்கு தக்கவாறு நடத்திக் கொண்டே போகலாம்
*தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை ஒரு விசித்திரமான வயிற்று எரிச்சல் என்னவெனில் ஆன்மீகம் என்ற சொல் விழுந்த உடனே அது ஒரு மதத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது
*தோன்றுவதை தோன்றும் போது தோன்றும் விதமாக எழுதுவது என்னுடைய சுதந்திரம்
*எழுத்தாளன் எழுத்து என வந்து விட்டாலே நீர்மட்டத்துக்கு மேல் தலையை மட்டுமாவது மேலே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு
*மோசமான மொழியில் சொல்லப்பட்ட நல்ல கதை நல்ல மொழியில் சொல்லப்பட்ட கேவலமான கதை என சிறுகதைகளில் இருக்க முடியும்
மூன்று ஆளுமைகளைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அவர்களைப் பற்றிய நுணுக்கமான செய்திகளை ஒவ்வொரு கேள்விகளும் அறிய முடிந்தது. அவர்களின் படைப்புலகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. அவர்கள் எங்கிருந்து அந்த படைப்புகளை தேடி எடுக்கிறார்கள் படைப்புகள் குறித்த மற்றும் வாசகர்கள் குறித்தான அவர்களின் பார்வை என்னென்ன என்பது குறித்து எல்லாம் மிக ஆழமாக அழகாக சிறப்பாக இந்த நேர்காணல்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன .எந்த கேள்வியும் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு கேள்விக்கும் சீர்தூக்கி தரம் பார்த்து கேட்கப்பட்டுள்ளத
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Monday, 10 April 2023
book-49
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-18
Book-49
Pages-384
மயிலை சீனி.வேங்கடசாமி தொகுப்பு நூல்கள்
இரண்டு
மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சிறந்த ஆய்வாளர். தமிழோடு வரலாற்றையும் ஆய்வியல் முறையில் நமக்கு கொடுத்தவர்.இந் நூலில் சேரன் செங்குட்டுவன் துளுநாட்டு வரலாறு கொங்கு நாட்டு வரலாறு என்று சங்க இலக்கியங்கள் வரலாற்றினை நமக்கு கொடுத்துள்ளார். சேரன் செங்குட்டுவன் எனும் இந்த புத்தகம் நீண்ட கட்டுரையாக எழுத பெற்று சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சேரன் செங்குட்டுவனுடைய காலம் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்திருந்ததாக ஆசிரியர் சொல்கிறார். சங்க நூல்களில் இருந்து சேரனின் ஆட்சித்திறன் கொடைதிறன் போன்றவற்றை அறிய முடிகிறது. சேரன் செங்குட்டுவனுடைய தகப்பனான இமயவரம்பன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை தன்னுடைய ராஜ்ஜியத்தில் இணைத்துக் கொண்டான். செங்குட்டுவனின் தமையனான கலங்காய் கண்ணிநார் முடிச் சேரலின் காலத்தில் துளுநாடு சேரர் ஆட்சியின் கீழ் வந்தது. கொங்கு நாட்டை சிறிது சிறிதாக சேரர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தபோது சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இது பிடிக்காமல் அவர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்து வந்தன.
கடைச்சங்க காலத்து சேர அரசர்களின் பேரும் புகழும் பெற்றவர் சேரன் செங்குட்டுவன் ஆவார். தமிழ்நாட்டில் பத்தினி தெய்வ வணக்கத்தை இவர் ஏற்படுத்தினார். சங்க கால சரித்திர ஆண்டுகளை கணக்கிடுவதற்கு இவருடைய வரலாறும் துணை நின்றது.பதிற்றுப்பத்து நூலில் எட்டு சேரர்கள் அரசர்களை பற்றிய வரலாறு இருக்கின்றன அதனைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். செங்குட்டுவனின் தந்தை ஏவலுக்கு இணங்க செங்குட்டுவன் தான் முதன் முதல் கடல் போர் செய்தான் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பாடலில் குமட்டூர் கண்ணனார் கூறுகிறார். எகிப்து ரோமாபுரி நாடுகளில் இருந்து வணிகத்தின் பொருட்டு கடல் வழியாக வந்த மரக்கலங்களை சேர நாட்டில் துறைமுக பட்டினங்களில் வராதபடி இடைமறித்து தடுத்து கொள்ளையடித்த குறும்பர்களை அடக்குவதற்காக இப்போர் நடந்தது என்று பாடல் வழியே அறிய முடிகிறது.
செங்குட்டுவன் செய்த போர்களில் மற்றொரு போர் மோகூர் போர் .பாண்டிய நாட்டில் மதுரைக்கு வடகிழக்கு 7மைல் தூரத்தில் இருந்த இந்த ஊரில் மோகூர் பழையன் எனும் சிற்றரசரை தோற்கடித்து அந்த ஊரில் காவல் மரமாக இருந்த வேப்ப மரத்தை வெட்டி அதனால் முரசு செய்தான் என்று ஐந்தாம் பத்தில் பரணர் பாடுகிறார். செங்குட்டுவனுக்கு ஆட்சி துணையாக ஐம்பெரும் குழு இருந்தது அவைகள் அமைச்சர் புரோகிதர் சேனாதிபதிய தூதுவர் சாரணர் என்பர். செங்குட்டுவனுடைய சேனைத்தலைவன் அழும்பில் வேள். அரசனுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தவுடன் கண்ணகிக்கு விழா தொடங்கிய போது சிறைப்பட்டிருந்த அரசர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி ஏவினான் என்று கூறுகிறது பாடல்.
செங்குட்டுவன் வெண்மாள் எனும் அரசியை திருமணம் செய்து அவளுக்கு வேண்டுமாள் என்று பெயரும் உண்டு. செங்குட்டுவன் வாழ்ந்த அரண்மனை இலவந்தி வெள்ளி மாடம் வஞ்சி மாநகரத்துக்கு வெளியே கடற்கரை அருகில் வேளாவிக்கோ மாளிகை எனும் அரண்மனை இருந்தது. வேனிற்காலத்தில் அரண்மனையில் அவர் வசிப்பதில்லை . ஆற்றங்கரையில் மரச் சோலையில் கூடாரம் அமைத்து சுற்றத்தோடு தங்கி இருப்பது வழக்கம் என பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. அப்போதுதான் கண்ணகியின் செய்தியை குன்றத்தில் வாழும் மக்கள் சொல்ல கேட்டு அறிந்தான். பத்தினி கூட்டம் அமைக்கும் எண்ணம் வந்ததாகவும் கூறுகிறது.
சிலப்பதிகாரம் மணிமேகலை எனும் இரு நூல்கள் காவிய கற்பனையுடன் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவலனை அநியாயமாகக் கொன்ற காரணத்துக்காக மதுரை மக்கள் சீற்றம் கொண்டு அரசனுடைய அரண்மனையை கொளுத்தினார்கள் என்பதே உண்மை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை உள்ளது உள்ளபடியே கூறாமல் கற்பனைகளை புனைந்து வியப்புச்சுவை புலப்படும்படி எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.
துளுநாடு என்பது கொங்கண நாடு என்றும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரளா நாடாகிய பழைய சேர நாட்டுக்கு வடக்கு தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. சங்கத் பாடல்களில் ஆங்காங்கே சிதறி கிடந்த துளுநாட்டு வரலாற்றினை வகைப்படுத்தி எழுதப்பட்டது தான் இந்த ஆய்வு கட்டுரை. அசோகர் காலத்தில் கூறப்பட்ட சத்தியபுத்திர நாடு என்பது தொழில்நாடு என்று இரு வேறு கருத்துகளும் நிலவுகின்றன
துளு என்றால் போரிடுதல் எதிர்த்தல் என்பது பொருள். பழம் கன்னட மொழியில் துளு என்னும் சொல்லுக்கு இந்த பொருள் உண்டு. எனவே துளுநாடு என்றால் வீரர்கள் உள்ள நாடு என்று பொருள் கொள்ளலாம். குடமலை நாடு என்று கூறுகின்றன. குடகு நாடு என்னும் பகுதியில் இருந்து தான் தலைக்காவிரி உண்டாகிறது.
துளு நாட்டில் புகழ்பெற்ற அரசனாக முதலாம் நன்னன் திகழ்ந்தார். சிற்றரசனாக இருந்தாலும் போர்களில் பல சிற்றரசர்களை தோற்கடித்து அவர்களின் மனைவியின் கூந்தலை மழித்தான் என்றும்,இவனுக்குரிய தோப்பு ஒன்றில் மாமரம் பறித்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை அக்னிக்கு இறையாக்கினான் என்றும் பாடலில் சொல்லப்படுகிறது. முதலாம் நன்னனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் நன்னன் என்று அழைக்கப்பட்ட அரசாண்டான். இவன் ராஜ்யத்தை விரிவு செய்வதற்காக போரில் ஈடுபட்டான்.
இரண்டாம் நன்னனும் அவனுடைய தளபதி ஆகிய மிஞிலி என்பவனும் சிறந்த வீரர்கள். பசும்பூன் பாண்டியனுடைய படையை தோற்கடித்ததால் இரண்டாவது நன்னன் வெற்றி பெற்றான். கடற்படை காரர்களான குறும்பருடன் இணைந்து சேர அரசரை எதிர்த்தான். முதல் போரில் களங்காய் கண்ணிநார் முடி சேரல் உடன் போர் புரிந்து சேரர்களை வென்றான். சேரர்கள் தோல்வி அடைந்தனர். ஆனாலும் இரண்டாவது போரில் களங்காய் கண்ணி நார் முடி சேரர் துளுநாட்டின் மீது போர் தொடுத்து இரண்டாவது போரில் சேரர்கள் வெற்றி அடைந்தனர்.
தொடர்ந்து மன்னர்களின் காலமானது கிபி நான்காம் நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கின்றன என்றும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட மன்னர்களை பற்றியும் நன்னனை பற்றிய செயற்பாடுகள் இடம்பெற்ற சங்க பாடல்கள் பற்றியும், துளுமொழி என்பதும் திராவிட நாட்டைச் சார்ந்தது. துளுநாட்டு அரசர்கள் தமிழ் புலவர்களை ஆதரித்ததும் பிற்காலத்திலேயே துளுநாட்டு தமிழ் தனித்து நின்றது. சேர நாடு மொழி மாறுபட்டு கேரள நாடாகவும் மலையாள நாடாகவும் மாறிப்போன பிறகு துளுநாட்டு தமிழுக்கும் தமிழ்நாட்டு தமிழுக்கும் இந்த தொடர்பு அற்றுப் போய்விட்டது. இவை இலக்கியம் படைக்காத வெறும் பேச்சு மொழியாகவும் கொச்சை மொழியாகவும் இருந்து வந்தது.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் துளு மக்களை மதமாற்றம் செய்ய முற்பட்டு அவர்கள் துளு மொழியிலேயே கிறிஸ்தவ மத நூல்களை எழுதத் தொடங்கினார்கள். துளு மொழிக்கு தனி எழுத்து இல்லாததால் அவர்கள் அருகாமையில் உள்ள நாடாகிய கன்னட நாட்டில் வழங்கிய கன்னட எழுத்தையே துளு மொழிக்கும் வழங்கினார்கள். இது பற்றிய விரிவான ஆய்வுகள் இந்த புத்தகத்தில் உள்ளன
ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகு அந்த அத்தியாயத்தில் இடம் பெற்ற பாடல்களையும் அதற்குண்டான விளக்கங்களையும் மொழி காலம் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் பின் இணைப்பாக கொடுத்துள்ளார் ஆய்வாளர் அதேபோல் கொங்கு நாட்டு வரலாற்றுக்கும் இதே போன்ற நடைமுறை பின்பற்றியுள்ளார் முக்காலத்திய சேர நாடு துளு நாட்டு வரலாறுகளை இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Book-46
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-17
Book-46
Pages-258
மூளைக்குள் வாங்க
-நா.மணி
மூளைதான் உடம்பிலேயே முக்கியமான ஒரு உறுப்பு
என்று நான் நினைத்ததுண்டு.யோசித்துப் பார்த்தேன் ஒரு நிமிஷம்...இதைச் சொல்வது யார்?
-எமோ ஃபிலிப்ஸ்
மூளையைப் பற்றிய புத்தகம் என்றவுடன் நினைவுக்கு வருவது சுஜாதா எழுதிய தலைமைச் செயலகம் இறையன்பு எழுதிய மூலைக்குள் சுற்றுலா அதேபோல் இந்த புத்தகம் வாசித்த போது மூளை குறித்த முழு விவரங்களுடன் மிக எளிமையான நிலையில் பேராசிரியர் எல்லாம் மணி அவர்கள் எழுதியிருந்தார். இந்த புத்தகத்தில் மூளையை நம்பலாமா சாம்பல் படலம் சினிமாவும் அறிவுடைய மாமிசம் அதிசய லயம் உழைப்பும் உடல் பலம் என ஐந்து தலைப்புகளில் புத்தகங்களில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மூளை பல விஷயங்களில் அப்படியே நினைவு வைத்துக் கொள்வதில்லை. தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறது எடிட் செய்து கொள்கிறது. இதனாலே பல நேரத்தில் நமக்கு மறதி ஏற்படுகிறது. டேனியல் காப்மன் என்பவர் மூளையை வைத்து மூளையின் குறுக்கு விதிகளை ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றிருக்கிறார். அவகாசம் கொடுத்தால் நல்ல முடிவு செய்யும். அவசரப்படுத்தினால் குறுக்கு வழியை நாடும் அதுதான் மூளை. கண் முன் நடப்பதில் மிகச் சில பகுதிகளை தான் புலன் உறுப்புகள் கவனிக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து கோல் போடப்பட்டு வருகிறது .இடையில் ஒரு கரடி வந்ததால் அனைவரின் கவனம் கரடி மீது சென்று விட்டது. இப்போது எத்தனை கோல் என்று கேட்டதில் பெரும்பான்மையோர் தவறான பதிலை அளித்தனர். ஆகவே மூளை எதில் கவனம் செலுத்துகிறதோ அதை மட்டுமே கவனிக்கிறது.
தமிழ் சினிமாவில் தலையில் அடிபட்டால் நினைவு போய்விடும் மீண்டும் தலையில் அடிபட்டால் நினைவு வந்துவிடும். பழைய ரேடியோ அல்லது ரிமோட்டை தட்டுவது போல இப்படி செய்கின்றனர் .ஆனால் அது அப்படி அல்ல நினைவை இழந்து விட்டால் மீண்டும எனவே மீட்டுக் கொண்டு வர முடியும். அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் அது கடினம் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு நரம்பு செல்லும் நூறாயிரத்துக்கும் மேலான கெமிக்கல் சிக்னல்களை பல நரம்பு செல்களில் இருந்து பெறுகின்றன. கெமிக்கல் தொடர்பு நடக்கும் சந்திப்புகளுக்கு ஸ்னாப்ஸெஸ் என்று பெயர். மூளையில் நடைபெறும் சிந்தனை சுகம் துக்கம் கவலை போன்ற அனைத்துக்கும் இந்த ஸ்னாப்சஸ் தான் காரணம்.
சுவாசத் துடிப்பு இதய லயம் போன்றவை. நிமிட நேரத்தில் நடப்பவை. இன்சுலின் சுரப்பதை அமிலம் சுரப்பது போன்றவை மணி நேர கணக்கில் எடுத்துக் கொள்பவை தூக்கம் 24 மணி நேரமும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களிலும் ஆகும். தண்டுவடத்தில் இயங்கும் நரம்புகள் தானியங்கி மூலம் தானே செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன அதனால் தான் கோழியின் தலையை வெட்டியுடன் முண்டமாக அது ஓடும் கரப்பான்பூச்சியின் தலையை கொய்த உடன் உயிருடன் இருக்கும்.
தலையில் கண்கள் இரு வேறு இடங்களில் இருப்பதால் ஒவ்வொரு கண்ணும் உலகை ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறது. இரு வேறு கோணங்களில் இருந்து வரும் காட்சிகளை ஒரு காட்சியாக மாற்ற மூளை கற்றுக் கொள்கிறது. கற்பது நடந்து கொண்டே இருக்கிறது. தலை வளர வளர கண்களின் இடைவெளியும் வாழ்கிறது. எல்லா மனிதருக்கும் கண்கள் ஒரே தூர வடிவில் இல்லை சிலருக்கு சற்று ஏறி இறங்கி இருக்கக்கூடும்.
நியூசிலாந்து அறிஞர் ஃபிளின் பத்து வருடங்களுக்கு மூணு பாயிண்ட் என்கிற வேகத்தில் ஐக்யூ மதிப்பெண்கள் அதிகரிக்கிறது. வாழ்நாள் அறிவை கண்டுபிடிப்பதில்லை. வயதுக்கேற்ப அறிவு எப்படி பெறுகுகிறது என்கிற வளர்ச்சி மட்டுமே அது அளிக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சி சுற்றுப்புற சம்பவங்கள் அறிவு மூன்றும் இடையிலான சம்பந்தத்தை அளிக்கிறது என்று விளைவு பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்.
நாம் சொல்வது போல் கற்பூர புத்தி கரித்துண்டு புத்தி வாழை மட்டை போன்றவை பல ஆண்டுகளாக சொல்லப்படுகிறது. ஆனால் மூளையே ஸ்கேன் செய்து பார்த்தபோது ப்ரீ ஃபிரண்டால் கார்டெக்ஸ் உடன் லேடிர கார்டெக்ஸ் என்கிற இடத்திலும் அதி விரைவான இயக்கம் தென்பட்டது.
முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக முடிவெடுப்பது சாதாரண காரியம் அல்ல அதனை ரஷ் அவர் என்று சொல்வார்கள். போதிய உளவுத்துறை தகவல்கள் கிடைக்காத தர்மசங்கடமான நேரங்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முடிவெடுக்கும் செயல் மூளையில் சரியா தவறா என்பதைவிட வேகம் முக்கியம் இது முடிவு எடுக்கும் திறனை சோதிப்பது அதற்கான உதாரணங்களையும் ஆய்வு முடிவுகளையும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்கள்.
*மூளையில் புதிய நரம்பு செல்கள் தோன்றுவதில்லை என பல ஆண்டுகளாக நினைத்து வந்தனர் .ஆனால் மூளையில் ஆல் ஃபேக்டரி பல்பு, ஹிப்போ கேம்பஸ் போன்ற இடங்களின் வாழ்நாள் முழுவதும் புதிய நரம்பு செல்கள் ஸ்டெம் செல்களின் துணையால் பிறந்து கொண்டே இருக்கின்றன
*வளர்ப்பு இருந்து ஜெனிடிக் மோசமாக இருந்தாலும் அறிவு வளர்ச்சி இல்லை. ஜெனட்டிக் இருந்து வளர்ப்பு சரியில்லை என்றாலும் அது வேஸ்ட். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை
*மூளை மடிப்புக்கும் அறிவு திறமைக்கும் சம்பந்தம் அதிகம் இல்லை தலை அளவுக்கு மூளை அளவுக்கு உள்ள வேறுபாடு தான் மடிப்புக்கு காரணம் சிறிய தலையில் பெரிய மூளையை வைக்கும் போது மடிப்புகள் அதிகமாகின்றன டால்பின் திமிங்கலம் போன்ற கடல் ராணிகளிடம் அதிகம் அடிப்படையே மூளை காணப்படுகிறது நரம்பு செல்களுக்கு இடையே தொலைதூரத் தொடர்பு அதிகரிக்க மூளை மடிப்புகள் தேவைப்படுகிறது என்பதன் விளக்கம்
*மூளையில் 80 சதவீதம் செரிப்ரல் கார்டெக்ஸ் இருந்தால் அவன் மனிதன் அடுத்தது சிம்பன்சி அடுத்தது கொரில்லா
*நாட்டு விலங்குகள் வீட்டு விலங்காக மாறும்போது அவற்றின் மூளை அளவு 10 சதவீதம் குறைவதை அறிஞர்கள் காண்கின்றனர்
*முடிவெடுப்பதில் இரு வகை மனிதர்கள் உள்ளனர் பேராசைக்காரர்கள் ஒருவகை .திருப்தியாளர்கள் இன்னொரு வகை
*புக்தி கூர்மையின் பெரும்பகுதி இமிடெட் செய்வதுதான். பார்த்து பழகுவது கண் பார்த்து கை செய்வது, குருவை பார்த்துவிட்டு செய்தால் தான் கற்க முடியும்
மூளை குறித்த விஷயங்களை அபூர்வமான தகவல்களை எளிய மொழியில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி இந்த புத்தகம் இருக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
ஓஷோ
நெருக்கம் இல்லாதவர்களுடன் இருக்கும்போது ஆயிரம் விஷயங்களை பயமின்றி பேசலாம். அது ஒரு சம்பிரதாயமான உறவு தானே .ஆனால் யாருடனாவது நெருக்கமான உறவை ஏற்பட்டால் அதன் பின் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் பெறுகிறது. வார்த்தைகளுடன் விளையாட முடியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆழமான அர்த்தம் வந்து விடுகிறது. பேச்சுக்கிடையை நீண்ட மௌனம் வந்து புகுந்து விடும்
-ஓஷோ
Sunday, 9 April 2023
Book-43
#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-16
Book-43
Pages-1216
புதிய தரிசனங்கள்
-பொன்னீலன்
நாவல் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றிய நூல் என்பதால் அதன் விவரங்களை தெரிந்து கொள்வோம். சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ராணுவ நடவடிக்கை வழி கிடையாது பேச்சுவார்த்தை தான் ஒரே வழி என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ், ராமமூர்த்தி போன்றவர்கள் வாதாடினார்கள். ஆனால் டாங்கே போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவுக்கு எதிரான நேருவின் ராணுவ நடவடிக்கைக்கு டாங்கே தலைமையான கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவளித்தனர். சீன ஆக்கிரமிப்பு பிரச்சினையில் நேரு வழி ஆதரித்ததால் இ.எம் எஸ் போன்றவர்கள் காங்கிரசின் வால் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். பதிலுக்கு அவர்கள் சீன ஏஜெண்டுகள் என முத்திரை குத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் என இரண்டாக உடைந்தது. 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நக்சல் பாரி கிராமத்தில் நடைபெற்ற உழவர் எழுச்சியால் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என மூன்றாவது ஆக கட்சி பிரிந்தது. ஆக இந்த மூன்று கட்சிகளும் தான் முக்கியமாக தற்போது உள்ளது.
அதன் பின்பு இந்திரா காந்தி எடுத்த எமர்ஜென்சி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது இந்தியாவில் இரண்டே கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) அதிமுகவும் தான். மற்ற அனைத்து கட்சிகளும் இந்திரா காந்திக்கு எதிராகவே இருந்தன. இந்த எமர்ஜென்சி காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெரு மன்றம் சார்பில் எமர்ஜென்சி ஆதரித்ததால் ஏற்பட்ட விளைவுகளையும் அதன்பின் ஏற்பட்ட மன கசப்புகளையும் இந்த நாவல் விளக்குகிறது. பொதுவாக இடதுசாரிகளிடம் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதோடு அவர்களும் சுயவிமர்சனம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொன்னீலன் அவர்கள் இந்த நாவலின் வழியாக சுய விமர்சனத்திற்கு வழிகாட்டி உள்ளார்.
#கதை
நாவலின் கதையானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள அனந்தனூர் எனும் கற்பனை கிராமத்தில் நடப்பது போல் காட்டி உள்ளனர். இதில் மூன்று குடும்பங்கள் அதாவது மூன்று வர்க்கங்கள் என்று சொல்லப்படக்கூடிய பெரிய தெருவில் மேல் தட்டு வர்க்கமும் நடுத்தெருவில் இடைப்பட்ட சமூகமும் அடித்தட்டு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகமும் வசித்து வருகிறதாக நாவலில் வருகிறது. மேல்த்தட்டு வர்க்கங்கள் போல தியாகி ராமநாதன் காங்கிரசை சேர்ந்தவராகவும் மேகநாதன் குடும்பமும் நடுத்தர வர்க்கத்தினரின் முந்திரி ஆலை தொழில் அதிபர் காளியப்பன் குடும்பம் மற்றும் ரங்கசாமி குடும்பத்தில் மூன்று பேர் உள்ளனர். அவர்களில் முறையே இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் ராகவன் என்னும் கதாபாத்திரம் அரசு ஊழியராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈடுபாட்டாளராக உள்ளார். கீழ் தெருவில் உள்ள முக்கியமானவர்களில் செல்லையா அர்ஜுனன் துரை ஓவியர் திரவியம் உள்ளிட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கதையின் ஆரம்ப பகுதியில் முந்திரி ஆலையில் வேலை செய்து வரும் லட்சுமியை மேஸ்திரி அடித்து விட ஒட்டுமொத்த தொழிலாளர்களும் போனஸ் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். விவரம் அறிந்த காளியப்பனின் மகன் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கிறார். ஆனால் காளியப்பன் அதெல்லாம் செய்து தருவதாகவும் அரவணைத்து செல்கிறார். இது தொழிற்சாலைகள் சம்பந்தமான போராட்டமாய் நாவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது
மற்றொருபுறம் அடித்தட்டு மக்களான ஓவியர் திரவியம் ஒரு நாள் சலூன் கடையில் இருக்கும் போது பெருமாள் என்பவர் தகராறு ஏற்பட்டு அங்குள்ள கீழ் தட்டு மக்களை அநாகரிகமாக திட்டி சண்டையில் ஈடுபடுகிறார். இது சமூக அடக்கு முறையாக நாவலில் சொல்லப்படுகிறது. மூன்றாவதாக விவசாயத் தொழில் குத்தகை செய்து வரும் கீழ் தட்டு மக்களான செல்லையா என்பவரை குத்தகை நிலத்தை பிடுங்குவதற்காக முயல்கின்றனர் மற்றொரு குழுவினர். இவ்வாறு ஒரே கிராமத்திலேயே தொழில் விவசாயம் சமூக பிரச்சினைகள் குறித்து பேசி உள்ளனர்.
எமர்ஜென்சி கால கட்டங்களில் இளைஞர் மன்றத்தினர் இந்திரா காந்திக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கின்றனர். இதனால் இளைஞர் பெருமன்றத்திலிருந்து விலகி வாலிபர் சங்கம் என்பதனை ஆரம்பித்து அதே கிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கின்றனர். இவர்களுக்கு உண்டான வாக்குவாதம் உரையாடலும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜே பி ஆதரவு கூட்டம் நடக்கிறது. அதில் சிபிஎம் டிஎம்கே எம்எல் ஜனதா கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காந்திய பொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். அதற்கு நேர் எதிராக இந்திரா காந்தி ஆதரித்து கூட்டமும் நடத்துகின்றனர் அவர்களின் 20 அம்ச திட்டத்தினை பற்றி கூறுவதோடு முதல் பாகம் நிறைவுறுகிறது.
அவசரநிலை என்பது சர்வாதிகாரமாக ஆகும்போது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர் பெருமன்றத்தினர் உணர தொடங்குகின்றனர். 20 அம்ச திட்டத்தில் ஏற்படும் முரண்பாடு மேலிட அழுத்தம் போன்றவை அவர்களிடையே கொஞ்சம் வெறுப்பினை ஏற்படுகிறது. இதனுடைய பிரேம் என்பவர் ஜன சங்கத்தின் சார்பாக சமய மாநாடு அம்மன் விழா தேர்த்திருவிழா போன்றவற்றையெல்லாம் நடத்துகின்றனர் .இன்னும் சிலர் இளைஞர் பெருமன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைகின்றனர் ஆனால் இவர்கள் சேர்ந்த ஓரிரு நாளில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒரு சிலர் அதிமுகவில் இணைகின்றனர்.
1977 மார்ச் 21ஆம் தேதி எமர்ஜென்சி விளக்கிக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் கிராமத்தில்
பெரு முதலாளிகள், அதிகாரிகள் மாற்றுக் கட்சியினர் அனைவரும் இணைந்து இளைஞர்களை தாக்குகின்றனர்.தகராறுகள் தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்து நிலவி வருகிறது. ராகவன் அரசு ஊழியராக இருந்து ஆதரவு தெரிவித்ததால் அவருடைய வேலையும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறது. பின்பு நண்பர்களுக்காக அவர் ஜாமீன் எடுத்து உதவுகின்றார். இன்று அனைவரும் விடுதலையாகிய கிராமத்துக்கு வரும் போது அனைவரும் ஒரு அறிவார்ந்த உரையாடல் நிகழ்த்துகின்றனர். கட்சியின் அடித்தட்டு மக்களை கேட்காமல் மேலிருந்து கொடுக்கும் அழுத்தம் காரணமாக பல்வேறு நிலைகளில் நாம் பலவீனப்படுகிறோம் என்பதை அந்த உரையாடலில் தெரிவிக்கின்றனர்.
அதில் காங்கிரசை ஆதரித்தது தப்பு எனவும் ஆதரிக்க வேண்டிய நிலை என்ன தேவை என்ன எனவும் விரிவாக அலசுகின்றனர். எம்.எல்-ரகுராமன் மார்க்சிஸ்ட் ரங்கசாமி, இ. கம்யூனிஸ்ட் ராகவன் மூவரும் உரையாடலில் பல்வேறு காரண காரிய கேள்விகளும் பதில்களும் முன் வைக்கப்படுகின்றன
சர்வாதிகாரம் குறித்து பேசும் போது தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது சிறுபான்மை சுரண்டல்வாதிகளை அடக்க பெரும்பான்மை உழைப்பாளி மக்கள் சர்வாதிகாரம் செய்வது ஆகும்.ஊருக்கு வருவோரை உற்சாகமாய் வரவேற்றும்,
ஒவ்வொரு தாய்மார்களின் உணர்வுகளையும் மிகவும் உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார். நாவலில். இறுதியில் அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ராகவன் தோழர்களிடம் விவாதிப்பதாக நாவல் நிறைவு பெறுகிறது. அரசியல் குறித்த விவாதம் முடிந்து மனிதத்தன்மை குறித்த நாவலாய் பேசுகிறது.
சமூக எதார்த்த வாதத்திற்கு ஒற்றை புரிதல் மையம் இருப்பதாக கற்பனை செய்து கொள்வது பண்டிதர் மடமை. வாழ்வுக்கு பல புரிதல் மையங்கள் உண்டு. அவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பிரம்மம் என அங்கீகரித்து விட்டு இன்னொன்று மாயை என ஒடுக்குவது வன்முறை. வாழ்வின் பல குரல்களை ஒலிக்கப்பட வேண்டும் என நா. முத்து மோகன் முன்னுரையில் கூறியது அவசியமான ஒன்றாகும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Subscribe to:
Posts (Atom)