Friday, 30 June 2023

நான் உனது பெயரைச் சொல்லி ஒருபோதும் அழைத்ததில்லை,ஆனாலும்ஒரு வானம்பாடி பாடாதிருக்கும்போதும்அதன் தொண்டையைஅடைத்திருக்கும் பாடல் போலஎன்னுள் நீ நிரம்பியிருக்கிறாய்.-லொய்னாஸ்தமிழில் மோகனரங்கன்

பொய்யை சொல்கிறவன், கடவுளிடம் தைரியமாகவும்,மனிதனிடம் கோழையாகவும் இருக்கிறான்-பேகன்

நம்முடைய துக்கம் என்பது எப்போதோ நடந்த நிகழ்வுடைய நினைவின் துயர் மட்டுமே. தற்கணத்தில் அந்தப் பழைய நினைவை மீட்டுவதால் ஏற்படுகிற கவலையை மனச்சோர்வுடன் முடிச்சிட்டுக் குழப்பிக் கொள்கிறோம். நினைவைப் போலவே நினைவின் துயருக்கும் தொடர்ச்சியுண்டு-கோகுல் பிரசாத்

Thursday, 29 June 2023

அவலாஞ்சி என்றால் நிலச்சரிவு என்று பொருள்.1800 களில் ஊட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுப் பகுதியே அவலாஞ்சி என அழைக்கப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து 2036 அடி உயரம் கொண்டது.

ஒரு நாள் என்பதும் சூட்கேஸ் மாதிரிதான்.சிலர் ஓரிடு ஆடை வைத்துவிட்டு மேற்கொண்டு இடமில்லை என்பார்கள்.சிலர் நேர்த்தியாக நிறைய துணிகளை அடுக்கி வைப்பார்கள்.அதில் அடுக்கும் விதத்தில் அடுக்கினால் அத்தனை வேலைகளையும் செய்துவிடலாம்-சுகபோதானந்தா

மாமன்னன்


மாமன்னன் விமர்சனம்
*மணி

மாரி செல்வராஜ் படம், உதயின் கடைசி படம், வடிவேலுவின் ரீ எண்ட்ரி,பகத்தின் வில்லத்தனம், ராசா கண்ணு பாடல் என ஏகத்துக்கும் ஒரு மாதம் முன்பே எதிர்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதைப் பார்ப்போம்

கதை

சேலம் காசிபுரம் தனித்தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் வடிவேலு. அவரின் மகன் உதய்.இளம்வயதில் தந்தையின் அரசியலால் சாதிப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பதற்காக தந்தையிடம் பல வருடங்களாக பேசாமல் இருக்கிறார் மகன். அதே ஊரில் மாவட்ட செயலாளராக இருக்கும் அழகம் பெருமாள் மகன் பகத் பாசில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்.

தான் ஜெயிக்க வேண்டும், தனது ஆதிக்கத்தை ஒவ்வொரு இடத்திலும் அழுத்தமாய் புரியவைக்க வேண்டும் எனும் மனநிலை உள்ளவர். அடிமையாய் நடத்தும் வடிவேலுவை சமமாய் நடத்த வேண்டும் எனும் உரிமையை எடுத்துகொள்ளும் சண்டையில் உதயநிதிக்கும்  பகத் பாசிலுக்கும் மோதலாய் உருவெடுக்கிறது. அரசியல் போட்டியில் இது பிரதிபலித்து இறுதியில் என்ன ஆனது என்பதை அழுத்தமாய் சொல்கிறது கதை

#ப்ளஸ்

*படத்தில் வரும் மூன்று காட்சிகள் முக்கியமானவை, சிறுவர்கள் கிணற்றில் இருக்கும் காட்சி, வடிவேலுவின் இயலாமை வெளிப்படுத்தும் காட்சி, பகத்துடன் மோதும் இண்டர்வெல் காட்சி இவை தரம்

*ஒடுக்கப்பட்ட பிரிவினரான வடிவேலுவின் உடல்மொழி நடிப்பும், பகத்தின் இயல்பான ஆதிக்க உணர்வும் பெரும் பலம்

*சாதாரண கதை சாமர்த்தியமான திரைக்கதையால் பாராட்டு பெறுகிறார் மாரி. ஏ.ஆர் ஆர் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் பவைக்கிறது

*யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்',

உனக்கு மேல இருக்கிறவங்ககிட்ட தோற்கலாம் தப்பில்ல, கூட இருக்கிறவங்ககிட்ட தோற்கலாம் தப்பில்ல, ஆனா உன்ன விட கீழ இருக்கிறவங்க கிட்ட தோற்பது மகாதப்பு

நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்', என்பன போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கிறது

*ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏக்களின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறது. இறுதிக்காட்சியில் வடிவேலுவின் எண்ட்ரீ சமூகநீதியை சுட்டிக்காட்டுகிறது

*மைனஸ்

*இடைவேளை வரை வரும் வேகமும் படபடப்பும் இரண்டாம் பாகத்தில் தடதடக்கிறது

*வடிவேலு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எங்கேயும் தனியாகவே செல்கிறார்.

*சாதித்தலைவர் கொலை, ஊர் முழுக்க எதிர்ப்பு..ஆனாலும் ஒற்றை வீடியோ தேர்தல் முடிவை மாற்றுமா?

*பகத்தின் சாதுர்யத்தை முறியடிக்க ஏதேனும் ஒரு விசயத்தை செய்திருக்கலாம். இறுதிவரை பகத்தின் காய்நகர்த்தல்களை ஒன்றுமே செய்ய முடியவில்லையா என எண்ண வைக்கிறது

சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் படத்தை இறுதிவரை அமர்ந்து பார்க்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

மாமன்னன் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

தஸ்தோயோவ்ஸ்கி



நிஜமான பாசத்தை வைத்தியசாலை வளாகத்திலும், கல்லறை படிக்கட்டுங்களிலும் மாத்திரம்தான் நான் காண்கிறேன். அன்புக்குறியவர்களை இறுதிக்கட்டத்தில் மாத்திரமே நினைவு கூறும் மனித சாதிகள் நாம்.!

 - தஸ்தோயோவ்ஸ்கி

மரணம் ஒரு விருந்தாளி; அறிவிப்போடு வரும்போது, மரியாதையின் சம்பிரதாயமான வெளிப்பாட்டோடு வரவேற்கணும். அதனுடன் மிகவும் பரிச்சயம் கொண்டவர்கள் கூட அதை அப்படித்தான் வரவேற்க வேண்டும்.ராணுவ நடத்தை விதி பரிபாஷையில் மௌனமும் நிலை குத்திய தன்மையும் மரணத்தின் மரியாதை வடிவங்கள்-ஆம்ப்ரோஸ் பியர்

Wednesday, 28 June 2023

அறிவொளிர்தல்

பேச்சு




ஒரு மூக்கு கண்ணாடி விற்பவர் எப்படித் தன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது என மகனுக்கு சொல்லிக் கொடுத்தார் 

"மகனே கண்ணாடியை நீ முகத்தில் பொருத்தியதும் வாடிக்கையாளர் எவ்வளவு விலை என்று கேட்டதும் நீ 400 ரூபாய் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் முகபாவனையை உற்றுப் பார்க்க வேண்டும். அவர் முகத்தில் எந்தச் சுணக்கமும் இல்லாவிட்டால் அது ஃப்ரேமுக்கு மட்டும். லென்ஸுக்கு 400 ரூபாய் என சொல்ல வேண்டும். பிறகு இடைவெளி விட்டு அப்புறம் அவருடைய ரியாக்ஷனை பார்த்துவிட்டு அவர் எந்த வருத்தமும் காட்டாவிட்டால் ஒவ்வொரு லென்சுக்கும் என சொல்ல வேண்டும்."

 நாம் ஏன் ஏமாந்து போனோம் என்பதை பரிசீலித்தால் மிக இனிமையாக நம்மை வசீகரிக்குமாறு பேசிய சொற்கள் தான் அதற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளலாம் 

-படித்தது

குன்னூர் எப்படி வந்தது ? OOபேச்சு வழக்கினில் சில சொற்கள் தன்னியல்பாக வழங்கப்படும். மக்களுடைய உரையாடலில் அத்தகைய பல சொற்களைக் காணமுடியும். மேலோட்டமாகப் பார்க்கையில் அந்தச் சொல் தானாகத் தோன்றிய இடுகுறிச் சொல்லோ என்று தோன்றலாம். ஆனால், ஆராய்ந்து நோக்கினால் அச்சொல்லும் உரிய பொருள்பற்றியே தோன்றியிருப்பதை அறியலாம்.நம் வீட்டுப் பயன்பாட்டில் எண்ணற்ற பண்டபாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். பெரிய கலயங்கள் முதற்கொண்டு சிறுகுவளைகள்வரை இருக்கின்றன. அண்டா, குண்டா, சட்டி, பானை, போகணி, தேக்சா, கூஜா, குவளை, சம்படம் என்று அவற்றைப் பலவாறு அழைக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் விளிம்புப் பகுதிக்கு ‘வாப்பாடு’ என்று ஒரு பெயர் சொல்லுவார்கள். “அந்தப் போகணியை வாப்பாட்டைப் பிடிச்சுத் தூக்கு.”“அண்டா வாப்பாடுகிட்ட ஒடுங்கிப் போயிடுச்சு”இங்கே வாப்பாடு என்பது என்ன ? ஒரு பொருளின் வாய் போன்ற பகுதி. அந்தப் பொருளின் வாய்ப்படு பகுதி. ஈடுபடு என்பது ஈடுபாடு ஆனதுபோல, மாறுபடு என்பது மாறுபாடு ஆனதுபோல - வாய்ப்படு என்பது வாய்ப்பாடு என்று ஆகிறது. பேச்சுவழக்கில் அதுவே ‘வாப்பாடு’ என்று வழங்கப்படுகிறது.பிள்ளைப் பேறுற்ற பெண்களிடத்தில் வழங்கும் சொல் ‘மசக்கை’ என்பதாம். வயிற்றுள் பேறுற்றிருப்பதால் சோர்வாக இருக்கும். மயக்கமாக இருக்கும். மயக்கு + ஐ என்பதுதான் மயக்கை ஆகிறது. யகரம் பேச்சு வழக்கில் சகரமாகும். மயக்கை மசக்கை ஆகிவிட்டது. மயக்கை நிலையே மசக்கை.ஊர்ப்பெயர்களில் பலவும் பேச்சு வழக்கில் குன்னூர், குன்னக்குடி, குன்னாங்கல்பாளையம், குன்னத்தூர் என இருக்கும். இங்கே குன்னு என்பது என்ன என்று பலர்க்கும் கேள்வி இருக்கலாம். இதுவும் பேச்சு வழக்கில் மருவிய சொல்லே.குன்று என்பதுதான் பேச்சு வழக்கில் குன்னு என்று ஆகிவிடுகிறது. குன்றுகள் நிறைந்த மலையூர் குன்றூர் – குன்னூர். குன்றக்குடியே குன்னக்குடி ஆகிறது. குன்று + கல் சேரும்போது ஆம் சாரியை இடைப்படுகிறது. குன்றாங்கல்தான் குன்னாங்கல் எனப்படும். குன்னாங்கல்பாளையம். குன்றுகள் மிக்கிருக்கும் ஊரின் இடையே அத்துச் சாரியை பயின்றால் அது குன்று + அத்து + ஊர் ஆகும். அதுவே குன்றத்தூர் – பேச்சு வழக்கில் குன்னத்தூர். - கவிஞர் மகுடேசுவரன் (தினமலர் பட்டத்தில் வெளிவந்தது.)

சித் ரா


என்னம்மா வர்ணிக்கிறாங்க 😄😊

"கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்ந்த முகம் திங்களோ காணீர்"
- இது சிலப்பதிகாரம்.

".......கவிதைக் கனி பிழிந்த
சாற்றினிலே, பண் கூத்தெனும் இவற்றின் சாரமெல்லாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
காதல் வெயிலிலே காய வைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

- இது பாரதி, குயில் பாட்டு

❤️❤️

Tuesday, 27 June 2023

சுஜாதா


சுஜாதா

ஆண்களை விட பெண்கள் பொறுமைசாலிகள் என நினைககிறேன்...நெய்ல் பாலிஷ் போடுவது சரியான மடிப்புடன  புடவை கட்டுவது  ..மருதாணி வைப்பது என அவர்கள் பொறுமை பளிச்சிடுகிறதே?

அவர்கள் இத்தனையும் செய்யும்வரை காத்திருக்கும் கணவனின் பொறுமையை என்னவென்பது

ஒரு விவாதம் நீண்டு கொண்டே போகிறது எனில்அதில் பங்கு கொண்ட இரு தரப்பினரின் மீதும்குற்றம் இருக்கிறது என்பது பொருள்.-வால்டேர்

Saturday, 24 June 2023

பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? -ராஜுமுருகன்

அடுத்த நாளுக்கான வெளிச்சத்தில் வானம் வெளுத்திருந்தது-லக்‌ஷ்மி சரவணகுமார்

தி.ஜா


எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும். எல்லாரும் திருப்தியாயிருக்கணும். எத்தனையோ கிடைக்கும். கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும். காசு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வயித்துக்கு இருக்கலாம். இல்லாம இருக்கலாம். வெயில் கொளுத்தலாம். மழை கொட்டலாம். எதாயிருந்தாலும், எல்லாரும் முயற்சி பண்ணி சந்தோஷமா சந்தோஷமா இருக்கப் பாடுபடணும். சந்தோஷமாகத்தான் இருப்பேன்னு பிடிவாதமா இருக்கணும். பிடிவாதமா சிரிக்கணும். 

- தி. ஜானகி ராமன்

இருவர் வாதிடும் போது உண்மை காணாமல் போய்விடுகிறது. வாதத்தை முதலில் நிறுத்துபவனே உண்மையான அறிவுள்ளவன் .ஒரு விவாதத்தில் உண்மைக்காக நீ வாதிடுவதில்லை.உனக்காகவே வாதிடுகிறாய். -THOMAS CARLYLE

MGR அவர்கள் தன் வலது கையில் தான் கை கடிகாரம் அணிவார் , Seiko கை கடிகாரத்தின் பிரியர் ,யாருக்கும் பரிசு அளித்தால் Seiko watch யை தான் பரிசளிப்பார்.இறுதியில் அந்த வாட்ச்சுடன் தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது-படித்தது

முழுநிலவில் முத்துச் சிப்பிகள் பூரிப்படைந்து தங்கள் வாயைப் பூரணமாகத் திறக்கின்றன. அதைப்பார்த்த நண்டுகள் சின்னக்கல்லை எறிந்து அவை மறுபடியும் சிப்பியை மூடிக் கொள்ளாதவாறு செய்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன.அதிகமாக வாய் திறப்பவர்கள் நிலை இதுதான்-டாவின்சி

மகிழ்ச்சி என்பதுபூக்களுக்கிடையில்ஆடும் இலையின் உணர்வு!-மகுடேசுவரன்

Wednesday, 21 June 2023

தெரிந்ததைச் சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள்.-பாரசீகப் பழமொழி

'எண்ணங்களை கவனி ;அவை சொற்களாகின்றன,சொற்களை கவனி; அவை செயல்களாகின்றன,செயல்களைக் கவனி; அவை பழக்கங்களாகின்றனபழக்கங்களைக் கவனி; அதை குணாதிசயமாகின்றன,குணாதிசயத்தைக் கவனி; அது உன் விதியாகிறது'-ஃப்ராங்க் அவுட்லா

ஆர்த்தசபை நூற்றொருவர்; ஆயிரத்து ஒன்றாம் புலவர்;வார்த்தை பதினாயிரத்தொருவர்*பத்தாயிரத்தில் ஒருவர்தான் சொல்ல வேண்டியதைச் சொல்லும் ஆற்றலுடையவர்-ஒளவையார்