பூனைகள் நகரம்
- ஹாருகி முரகாமி
தமிழில்: ஜி.குப்புசாமி
ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் கதைகள் வெகுவாக தமிழில் வந்துள்ளன. பூனைகள் நகரம் என்பது ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் தனித்துவமான கதை உலகத்தை அறிமுகப்படுத்தும் படைப்பு. முரகாமியின் வழக்கமான மாய யதார்த்தம், தனிமை, கனவு–நனவு கலப்பு போன்ற கூறுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இத்தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள் உள்ளன. முதலாவதாக
'ஆளுண்ணும் பூனைகள்' கதையில்
பூனைகள் ஆட்களை தின்றதாக செய்தித்தாளில் செய்தி வருகிறது. அதை நாயகன் தன் காதலி இசுமிக்கி படித்துக் காண்பிக்கிறான். பூனை குறித்த விவாதம் வருகிறது.பின் தன் மனைவியை விட்டுவிட்டு காதலி இசுமியுடன் கிரீஸ் நாட்டில் உள்ள தீவிற்கு செல்கிறார்கள்.தங்களது சேமிப்பில் உள்ள பணம் சிறிது காலத்துக்கு வரும் என திட்டத்துடன் தங்குகிறாள்.நள்ளிரவில் இசுமி காணமால் போகிறாள். அடுத்தது என்ன என்பதே கதை. மேஜிக்கல் ரியலிசத்தை தன் கதையில் கொண்டு வந்திருப்பார்.சாதாரண மனிதனின் உணர்வுகளை சொல்லியிருப்பார். உங்களால் துறக்க முடிந்தது சொற்பமானவை அலல்...மிக சொற்பமானவை என்றொரு வரி தங்களின் சிக்கலான காலகட்டத்தை உணரச் செய்தது.
மனதர்களின் அகச்சிக்கலை அலசும் விதத்தில் அமைந்தது பிற்கால முதலாளித்துவத்தின் முன் ஒரு சரித்திரம். தலைப்புப் க்கு ஏற்றது போல உள்ளடக்கம் இல்லை.. நண்பனின் அகச்சிக்கலை கூறும் விதத்தில் அமைந்த கதை. கோபோவில் தன் உடன் படித்த நண்பன் யூஷிகாவுடன் காதலில் விழுந்து பிரிந்த கதை இவனின் பார்வையில் சொல்லப்படுகிறது
உன் கணவரின் தந்தை ட்ராம் வண்டியில் அடிபட்டு இறந்து போனார் என மருமகளிடம் கதை சொல்கிறார் அபார்ட்மெண்ட் வாசி.அவர் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர்.தந்தை இறப்பிற்குபின் தாயை கவனித்துக் கொண்டு வருபவர்.ஒருநாள் திடிரென காணாமல் போகிறார்.அதன் கதை சொல்லி துப்பறிகிறார்..அதன் பின் என்ன என்பது தேடல் கதை.
தன் பெயரை மறந்துவிடும் வியாதி பீடித்திவிடுகிறது ஒஸாவாவுக்கு.அந் நோயிருலிந்து மீட்டுத்தரும்படி டெட்சுகோ சகாகி எனும் உளவியல் வழிகாட்டுநரை அணுகுகிறார்.அவர் அந்த வியாதியை சரி செய்தாரா அதற்கு காரணம் ஒரு குரங்கு என்பதை கண்டறிகிறார். ஏன் அவ்வாறு நடந்தது என்பதை பேண்டசியில் வகை பாணியில் ஷினாகவா குரங்கு கதை அமைந்து ள்ளது." பொறாமை உன் மனதில் இருந்தால் நரகத்தை சுமந்து கொண்டு இருப்பது போல எனும் வரி கதையில் ரசிக்க வைத்தது
பூனைகள் நகரம் இக்கதையின் நாயகன் டெங்கோ அறிதிறன் குறைபாடுள்ள நோயாளிகளை பராமரிக்கும் இடமான சாண்டோரியத்தில் உள்ள தந்தையை பார்க்க ரயிலில் செல்கிறான்.இளம் வயதில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வரி தண்டலராய் வேலை பார்த்த தந்தையுடன் செல்வதால் ஞாயிற்றுக்கிழமை என்பதே உணராதவன்.டெகோவிற்கும் அவனது தந்தைக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது.
தனது தந்தையைப் பார்க்கச் செல்லும் பயணத்தின் போது, டெங்கோ 'பூனைகள் நகரம்' என்ற தலைப்பிலான ஒரு கதையைப் படிக்கிறான். அக்கதை, ஒரு இளைஞன் தற்செயலாக ஒரு ஊரில் இறங்குவதையும், அங்கு இரவில் மனிதர்களுக்குப் பதிலாகப் பூனைகள் நடமாடுவதையும், இறுதியில் அவன் அந்த உலகத்திலேயே சிக்கிக் கொள்வதையும் விவரிக்கிறது.டெங்கோவின் தாய் குறித்த உண்மைகளை அவனது தந்தை சொல்கிறார். தன் பிறப்பு குறித்து நீண்ட காலச் சந்தேகம் தீர்ந்தது. .
"நான் யார்?" என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதே அவனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக அமைகிறது.தனது பிறப்பின் உண்மை தேடும் அவனது பயணம், அந்த மர்மமான நகரத்திற்குள் செல்வதைப் போன்றது என உணர்கிறான்.
விளக்கம் இல்லாமல் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், விளக்கினாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது" என்ற தத்துவார்த்தமான உரையாடல்கள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழ்கின்றன.
'விநோத நூலகம்' கதை நூலகத்திற்கு புத்தகம் மாற்றச் செல்லும் சிறுவன்.. தான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகத்தை குறிப்பிடுகிறான். நேராகப்போய் கீழே இறங்கி வலதுபுறம் திரும்புங்கள் என்கிறார். அதை நம்பிச்செல்லும் சிறுவன் படியில்.கீழே இறங்கி மாய உலகில் அகப்படுகிறான். அதன் பின் எப்படி மீண்டான் என்பதே கதை.
ஸாம்சாவின் காதல் கதையிலும் மாய உலகில் இருப்பது போன்றே கதை பின்னப்பட்டிருக்கும்.
*ஒரு வெற்றிடம் உருவானால் அதை வேறொன்று வந்து நிரப்ப வேண்டும்"
எனும் வரி கதையுடன் இணைந்து வரும் அழகியாலாக மிளிர்கிறது.
முரகாமியின் படைப்புகளில் காணப்படும் யதார்த்தமும் கனவும் கலந்த உலகம் இங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதாபாத்திரங்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுமையையும், தாங்கள் தொலைத்துவிட்ட ஒன்றையும் தேடிச் செல்கின்றனர். பூனைகள் இங்கு வெறும் விலங்குகள் அல்ல; அவை மனிதர்களின் மனநிலைகளையும் மர்மங்களையும் பிரதிபலிக்கும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன.மாயத்தன்மை கொண்ட எழுத்து நடை எளிமையாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment