Tuesday, 17 November 2026

ஜென் தோட்டம் -28


ஜென் தோட்டம் | மலர் 28
******
சீடன்:"குருவே என் மனதில் எந்தவொரு சிறு எண்ணமும் எழவில்லை; இந்த அமைதியான நிலையில் எனது பாவங்கள் அழிந்துவிட்டதா எஞ்சியிருக்கிறதா?"

குரு யுன்மென்: "மேரு மலையளவு!" 
******

இந்தக் ஜென வாசகம் ஒருவரின் மனதுக்குள் உள்ள ஆன்மீக அகந்தையை சுட்டிக் காட்டுகிறது."எனக்குள் எந்த எண்ணமும் இல்லை" என்று சீடர் சொல்வதே ஒரு மிகப் பெரிய எண்ணம் தான். தனது மனம் ஒரு சூனிய நிலையை அடைந்துவிட்டதாக அவன் நினைப்பதே அவனது மனதின் செயல்பாடாக இருக்கிறது.

மனம் முழுமையாக அமைதியடைந்து உண்மையான வெறுமை நிலையை அடைந்த ஒருவருக்கு, "நான் அந்த நிலையை அடைந்துவிட்டேனா? எனது பாவங்கள் அழிந்ததா?" என்ற கேள்வியே எழாது. அப்படிக் கேட்கும்போதே, அவனுக்குள் இருக்கும் 'நான்' என்ற அகந்தை மேரு மலையைப் போல பிரம்மாண்டமாக நிற்கிறது என்பதை குரு ஒரே வார்த்தையில் உணர்த்துகிறார்.

பாவம் அல்லது கர்மா என்பது தீய செயல்களில் மட்டுமல்ல, 'தான்' என்ற ஈகோவின் பற்றுதலிலும் உள்ளது. தான் தியானத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதாக நினைக்கும் பெருமையே ஒரு மாபெரும் தடையாக, மேரு மலையளவுக்குப் பெரிய கர்மாவாக சீடனுக்குள் இருக்கிறது என்பதை ஜென்மாஸ்டர் யுன்மென் “மேரு மலையளவு” என்ற பதிலில் உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment