Tuesday, 14 May 2024

எந்தவொரு நதியுமே கடைசி ஜாமத்தின் ஏதோ ஒரு தருணத்தில், ஓட்டத்தை ஒரு கணம் நிறுத்தி ஆசுவாசப்பட்டுவிட்டு, பிறகு மீண்டும் நகரத் தொடங்குமாம். காலத் தொடர்ச்சியும் அறுந்து அந்தரத்தில் தொங்கும் ஒற்றைக் கணம் அது-படித்தது

ஒருவர் போல்.இல்லை


மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மீண்டும் உருவாகாமல் எப்போதும் தனித்துவமாகவே உருவாகின்றன?

பரிணாம வளர்ச்சியின் தேவையால் இது நிகழ்வதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களை போலன்றி மற்ற உயிரினங்கள், தம் சக உயிரினங்களை அதிசயக்கத்தக்க பல வழிகளில் வேறுபடுத்தி அறிகின்றன.

எடுத்துக்காட்டாக, பென்குயின் பறவைகள் உருவத்தால் பெரும் வேறுபாடுகள் கொண்டவையில்லையெனினும், தத்தம் தனித்துவமான குரலோசையால் மற்ற பென்குயின்களை கண்டறிகின்றன. நாய்கள், தம் அதீதமான மோப்பத்திறனால் மற்ற நாய்களை அறிகின்றன. மனிதனின் உருவ வேறுபாடுகள் வியக்கத் தக்கவை. 700 கோடி மனிதர்கள் 700 விதமான முகங்கள். ஒத்த இரட்டையர்களின் மரபணுக்கள் ஒத்திருந்தாலும் உருவத்தில் வேறுபட்டு விடுவர். சிறு வேறுபாடுகளை கவனிக்கத் தவறுவதாலேயே நம்மால் வேறுபாட்டை அறிய முடிவதில்லை.

The Biology of belief நூலின் ஆசிரியர் முனைவர்.லிப்டன் அவர்கள் கூறுவதைப்போல், ஒவ்வொரு புறக்காரணி மட்டுமின்றி ஒருவரின் நம்பிக்கையும் அவர் தம் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். உலகின் எந்த மனிதனுக்கும், புற, அகக்காரணிகள் ஒன்றாக இருப்பதில்லை

உடலின் ஒவ்வொரு உயிர் அலகும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உயிரலகும் புற, அகக்காரணிகளால் பாதிக்கப்படும்போது ஒவ்வொன்றும் நுண்ணிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, பலகோடி செல்களிலான உடல் எனும் பெரிய அளவில் பெரும் மாற்றத்தை வெளிக்காட்டுகிறது.

எனது ஆசிரியர் ஒருவர் கூறும்போது, சிறு பிழை எவ்வாறு பெரும் பிழையாய் மாறுமென்பதற்கு எடுத்துக்காட்டாய், நிலவிற்கு ஒரு பொருளை நேர்கோட்டில் அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் கோணத்தில் 0.0000000001 பாகை பிழை ஏற்பட்டாலும், அது நிலவை அடைய முடியாது. ஏனெனில், அந்த பிழையின் அளவுடன், நிலவின் தூரத்தை பெருக்கும்போது வரும் கோணம், நிலவை விட்டு அந்த பொருளை, வெகு தொலைவில் விலக்கி விட்டிருக்கும். அவ்வாறே, நுண்ணிய அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெரிய அளவில் பூதாகர மாற்றமாக இருக்கும்.

அடுத்த முறை நிலைக்கண்ணாடி முன் நிற்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உலகின் தனித்துவமான உருவத்திற்கு சொந்தக்காரரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை!

-படித்தது

பகல் முழுக்க மோடம்.தரையும் வானிலையும் குளிர்ந்து விடுகிற நாளில் மனத்தின் இன்னொரு பகுதி இந்த மாநகரை ரசிக்கத் தொடங்கி விடுகிறது. அதுவரை இருந்த வெறுப்பு அத்தனையும் ஆவியாகி, இந்த ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிற மாதிரி சமனப்பட்டு விடுகிறது-யுவன் சந்திரசேகர்

Monday, 13 May 2024

அழியாத மை*வாக்களிக்கும் போது வைக்கப்படும் அழியாத மை முன்பு புள்ளி போல் வைக்கப்பட்டது.1.2.2006 முதல் விரல் முழுதும் வைக்கப்பட்டது*1950ல் மைசூரை சேர்ந்த NRTC நிறுவனம் காப்புரிமைப் பெற்றது.*1962ல் 3வது மக்களவைத் தேர்தலில் மைசூரில் மட்டும் முதன்முதலில் உபயோகிக்கப்பட்டது*இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 30 இலட்சம் லிட்டர் மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 55கோடி*1976முதல் சர்வதேச அளவில் 29 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது-என்.மகேஷ்குமார்

முழுக்கப் புறக்கணிக்கப்பட்ட கிடங்கிலிருந்து நினைவுகள் பீறியடிப்பதன் பின்னுள்ள தர்க்கம் யாராலும் எளிதில் அளவிட முடியாதது என்றே சொல்ல வேண்டும்.-யுவன் சந்திரசேகர்

Saturday, 11 May 2024

routine


,அன்றாட ஒழுங்கின் அவசியம்
Power of Routine

நீங்கள் உங்களை எத்தனை சாதாரணமான ஆளாகக் கருதினாலும் உங்களுக்குச் செய்ய பெரிய விஷயங்கள் இல்லை என்றாலும் கூட Routine எனப்படும் அன்றாட ஒழுங்கை வைத்துக் கொள்ளுங்கள்.
காலை இத்தனை மணிக்கு எழுவது , பேப்பர் படிப்பது  , உடற்பயிற்சி, ஃபேஸ்புக் பார்ப்பது, வீட்டு வேலைகள் , வாசிப்பது, எழுதுவது, ரிலாக்ஸ் பண்ணுவது என எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஒழுங்கு வைத்துக் கொண்டு அதன்படி செய்யுங்கள். எத்தனை சிறிய ரொட்டின் என்றாலும் பரவாயில்லை

பல விஷயங்களை நாம் செய்ய ஆசைப் படுவோம். ஆனால் அதைச் செய்ய ஒரு மூட் வரட்டும் எனக் காத்திருப்போம். அந்த மூட் வரவே வராது.இதுதான் Psychological Inertia எனப்படும் ஸ்டார்டிங் ட்ரபிள்.

அதுவே ஒரு அன்றாட ஒழுங்கு வைத்திருந்தால் அதுவே உங்களுக்கு ஒரு உந்துதலைத் தரும். 

அன்றாட ஒழுங்கை வைத்திருப்பவர்களுக்கு மனச் சோர்வு வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இலக்குகளை அடைவதாலும் மனச் சோர்வு குறைகிறது.

வாழ்க்கையின் நோக்கம் என்றெல்லாம் அடிப்படையில் எதுவும் கிடையாது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க ஒரு ஒழுங்கையும் நோக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . அது போலியாக இருந்தாலும். எதையாவது செய்தோம் என்ற நிறைவு இருக்கும்

So have a routine...

டாக்டர் ஜி ராமானுஜம்.

Thursday, 9 May 2024

ஜீரோ வாட் பல்புகள் 12-15 வாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.அந்த காலத்தில்,அந்த காலத்தில் உள்ள மின்காந்த மீட்டரால் இவ்வளவு குறைவான அளவு சக்தியை அளவிட முடியல. மீட்டரில் 'ஜீரோ' பவர் என்று எழுதப்பட்டதால் அதற்கு ஜீரோ வாட் பல்ப் என்று பெயர் வைத்துவிட்டனர்.#info

புத்தர்


புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம். 

அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.

புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.

புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.

"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"

பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.

But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும் :-)

-படித்தது

நேற்றைய கனவென்பது இன்றைய வாழ்விலிருந்து நாளையின் வரலாற்றை உருவாக்குவதுதானே?-லதாமகன்

வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை -புத்தர்

There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure.""ஒரு கனவை நனவாக்க முடியாமல் தடுப்பது ஒன்று மட்டுமே : அது தோற்று விடுவோம் என்ற பயம் தான்".-பாவ்லோ கொய்லோ

Wednesday, 8 May 2024

துவங்கிய இடத்திலேயே வந்து சேருகிற இரண்டே எண்கள் 0& 8.இதில் ஜீரோ போடுவது எளிது.8 சற்று சிக்கலானதும் கன்ட்ரோல் இருந்தால் மட்டும் காலூன்றாமல் போட முடியும் என்பதால் இருசக்கர ஓட்டுநர் உரிமத்துக்கு இதை தேர்ந்தெடுத்தனர்.#info

மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது.'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள்.அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.-ராமானுஜம்

Monday, 6 May 2024

டாலரில் ப்ராங்க்ளின் படம்


பெஞ்சமின் ஃப்ராங்ளின்

அமெரிக்க டாலர்களில் படம் வரணும்னா அந்த நாட்டின் அதிபராக ஒருவர் இருந்திருக்கணும்.

ஆளானப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டனே $1 டாலர் நோட்டிலும், ஆப்ரஹாம் லிங்கன் $5 டாலர் நோட்டிலும் தான் படமாக வந்துள்ளனர். பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க அதிபர் இல்லை. ஆனாலும் படமாக வந்து விட்டார். அதுவும் $100 டாலர் நோட்டுகளில்.

ஏனெனில் பிராங்க் செய்த தரமான சம்பவங்கள் அப்படி!

பிரிட்டனை எதிர்க்க, அமெரிக்கா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரஞ்சு காரனுக்கு இளகிய மனசு. இந்த ஒப்பந்தம் நிறைவேற ஆணி வேராக செயல்பட்டவர்களில் பிராங்க் தான் முதல் ஆள்.

அமெரிக்கா முன்னேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளின் தயவு தேவை! என சீக்கிரமே புரிந்து கொண்ட பிராங்க், ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து கடனுதவி, மற்றும் வாணிபம் இரண்டையும் கொண்டு வந்து சேர்த்தார்.

மொத்தம் மூணு ஒப்பந்தங்கள் நிறைவேற பிராங்க் தான் காரணம்:

Treaty of France
Treaty of Paris
Declaration of Independence

மூன்றாவதாய் உள்ளது படி யாரையும் கைது செய்ய முடியாது.
முதலாம் Amendment குடுத்த பேச்சுரிமை இருப்பதால் வெள்ளை மாளிகை முன்பு கூட நின்று கொண்டு "அதிபர் ஒழிக!" என்று கோசம் போட முடியும்.

ஆனால் சனி பகவான் நாவில் வந்து அமர்ந்து விட, கொஞ்சம் வாய் தவறி "அமெரிக்கா ஒழிக! அல்லது ஒழித்து கட்டுவேன்!" என்று சொன்னால் 10 வருடம் நிச்சயம்! 25 வருடம் லட்சியம்! என்று தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள்.

பிராங்க் அறிவியல் அறிஞர். எதற்கும் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கவில்லை. நல்ல விஷயங்கள் மக்களுக்கு எளிதா போய் சேரனும் என்று பெருந்தன்மையா சொல்லி விட்டாராம்.அதனால் அவரால் அதிகம் டாலர் சம்பாதிக்க முடியவில்லக்.ஆனால் ப்ராங்ளினால் அந்த டாலரில் படமாக வர முடிந்தது.

-படித்தது

1770ம் வருஷம், ஆஸ்த்ரேலியாவுக்கு சென்ற ஜோசப் பேங்க்ஸ் எனும் ஆங்கிலேயர், அங்கு வேறெங்கும் காணாத வித்தியாசமான விலங்கு ஒன்றினைப் பார்த்தார். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள, அங்கு இருந்த அபோரிஜினல் பழங்குடியினரிடம் அந்த விலங்கின் பெயரைக் கேட்டிருக்கிறார். அந்த பழங்குடியினர், "கங்காரு" என்றனர்.உடனே இவரும் தனது டைரியில் இந்த வகை விலங்குக்கு "கங்காரு" என்று பெயர் என குறித்துக்கொண்டார். பிறகு, அதனையே அதன் பொதுப் பெயராக உலகெல்லாம் பரப்பி விட்டனர். ரொம்ப நாளைக்குப் பிறகு தான் தெரிந்தது. அந்த பழங்குடியினர் பேசும் "கூகு யிமித்திர்" மொழியில் "கங்காரு" என்றால் "எனக்குத் தெரியாது / எனக்கு புரியவில்லை" என்று அர்த்தமாம். பாவத்த... 🤣

“ஒரு மனிதன் எப்படி இருக்கிறானோ, அவனை அப்படியே நடத்தினால், அவன் தொடர்ந்து அப்படியே இருப்பான். ஒரு மனிதனால் எப்படி இருக்க முடியுமோ, அவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி அவனை நடத்தினால், அவன் அப்படிப்பட்டவனாக உருவாவான்.”-கதே

Saturday, 4 May 2024

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைபோகாறு அகலாக் கடை' - வருமானம் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவழிப்பது அதிகம் இல்லாமல் இருந்தால் போதும்-திருவள்ளுவர்

தனிமை இரண்டு விதம்.தனிமையாய் ஆகுவது..தனிமையாய் ஆக்கப்படுவது.இரண்டுமே..வெவ்வேறு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.-பாலகுமாரன்

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் பணத்திற்கான மறு பெயர் கரன்சி (CURRENCY) என்று உள்ளது. பணமானது ஒரு நீரோட்டமாக (CURRENT) நதி போன்று, வழிந்து ஓடிக் கொண்டு, வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காக அப்பெயர்#info

ஓர் அஸ்திவாரக் கல்லாய் பார்வையில் படாதிரு பரந்தகன்ற பிரம்மாண்ட கட்டடத்தை மனநிறைவோடு உன் மார்பில் தாங்கு!-சரண்தாஸ்

Friday, 3 May 2024

இயற்கையின் நிழலில்


மிக வலிமை வாய்ந்த இறகுகள்.. இவை.. 

நமது சீலிங் பேன் (Ceiling fan) சராசரியாக ஒரு நொடி பொழுதில், 4-5 முறை சுத்துகிறது..

அதுவே கணினியில் இருக்கும் விசிறி 40-50 முறை ஒரு நொடிக்கு..

கார்களில் பிஸ்டன் ஒரு நொடி பொழுதில் அதிக பட்சமாக 120 முறை சுற்றும்.. 

ஹெலிகாப்டரில் கூட ஒரு நொடியில் ரெக்கை 30-40 முறை சுற்றி விடும்..

ஒரு தேனீ பூச்சியின் ரெக்கை என்ன வேகத்தில் இயங்குகிறது தெரியுமா? 

ஒரு நொடியில் 236 முறை.. 

நாம் பயன் படுத்தும் கண்டுபிடிப்புகள் வட்டமாக விசுறுபவை.. 

தேனீ பூச்சி மற்றும் பறவைகளின் ரெக்கை அப்படி அல்ல.. மேல்கீழாக இயங்குபவை.. 

இது வரை மனிதன் இந்த பொறிமுறையில் (mechanism) எதையும் பறக்கவிட்டதாக தெரியவில்லை..

செயற்கையான கருவிகள் மேள்கீழாக இயங்கி 236 முறை ஒரு நொடியில் இயங்கினால் அதை தாங்க வலிமை தர பல கோடிகள் செலவு செய்து வருட கணக்கில் உழைப்பு போட வேண்டி இருக்கும்.. அப்படியும் சாத்தியம் தானா என்பது சந்தேகம் தான்.. ஏராளமான எரிபொருள் அல்லது மின்சாரமும் தேவை படும்..

ஆனால் விரல் நுனி அளவே உள்ள தேனீ, ஒரு நொடிக்கு 236 தனது இறகை அடித்து பறக்கும்.. 

குறைந்த பட்சம் ஒரு தேனீ 10 மணி நேரம் வேலை செய்யும்.. 

10 மணி நேரம் 

600 நிமிடங்கள்

36000 நொடிகள்

8496000 முறை ஒரு தேனீ இறகை ஒரு நாளில் அசைத்து விடும்.. 

இப்படி சராசரியாக 36 நாட்கள் செய்ந்தால், ஒரு தேக்கரண்டி யில் பண்ணிரண்டில் ஒரு பங்கு தேன் சேகரிக்கும்..

36 X 8496000 = 305856000 முறை ஒரு தேனீ பூச்சி தனது இறகை அடித்தால், நமக்கு கிட்டத்தட்ட, ஒரு சொட்டு தேன் கிடைக்கும்...

ஒரே தேனீ பூச்சியின் உழைப்பு இது.. 

கோடிக்கணக்கான தேனீக்கள் இப்படி தேன் சேகரிக்க சென்று, நமக்காக மகரந்த சேர்க்கை செய்கின்றன..

ஒரு பருக்கை சோற்றை, ஒரு துளி தேனை, ஒற்றை கடுகை, ஒரு நுண் துகள் உணவை, வீணடிக்க நமக்கு உரிமை இல்லை.. 

- இயற்கையின் நிழல்..

அத்தனை வழிகளும் அத்தனை சாத்தியங்களும் அத்தனை எளிய கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டும் அதன் வேலிகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் சுவர்களில் மோதி தங்கள் எல்லைகளை விரிவாக்கிவிட பாடுபடும் மனிதர்களின் காலம்.-லதாமகன்

Thursday, 2 May 2024

'ஓய்வை ஒருவன் அனுபவிக்க விரும்பினால், அவன் தன்னுடைய நேரத்தை நிறைவாகப் பயன்படுத்தவேண்டும். ஒரு நொடி கூட நிச்சயமில்லாதபோது ஒரு மணி நேரத்தை வீணாக்குதல் விவேகமாகுமா? ஓய்வு என்பது, பயனுள்ளதைச் செய்யப் பயன்படுத்தும் நேரமாகும். -பெஞ்சமின் பிராங்க்ளின்

உமா ரமணன்




ஆனந்த ராகம்..பாடல் ரேடியோவில் 90களில் ஒலிக்கும் போதெல்லாம் அந்த இசை கேட்டு ஓடிவரும் குரலில் அத்தனை துள்ளல் இருக்கும்.
கிளாசிக்கல் ஸ்டைலில் அமைந்த நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாள்திறவாய் அந்த கதாநாயகியின் முக ஒற்றுமைக்கும் குரலுக்கும் அத்தனை பொருத்தம். ரேவதியின் நடிப்பில் உருவான பாடல்கள் சிலவற்றுக்கு உமா ரமணின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அரங்கேற்ற வேலை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே, புதுமைப்பெண் படத்தில் வரும் கஸ்தூரி மானே உள்ளிட்ட சில பாடல்களை சொல்லலாம்.

கேளடி கண்மணி என் நீ பாதி நான் பாதியும், புது நெல்லு புது நாத்து படத்தில் மரிக்கொழுந்து பாடலில் சித்ராவுடன் இணைந்து பாடியிருப்பார். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் துள்ளல் இசையாக மேகம் கருக்கையிலே பாடலில் கிராமத்து மணத்தை நமக்கும் தந்து இருப்பார். ராஜாவுடன் இணைந்து பாடிய மற்றொரு பாடல் பாட்டு பாடவா படத்தில் வரும் நில் நில் நில் பதில் சொல் சொல் பாடலும்.
பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் வரும் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன் என்ற பாடலும் ராஜாவுடன் பாடியிருப்பார்.

வைக்காத செந்தூரம்தான் என சரணத்தில் ஆரம்பிக்கும் கும்பக்கரை தங்கையா படத்தில் வரும் பூத்து பூத்து குலுங்குதடி பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும். கண்மணி நீ வர காத்திருந்தாள்  பாடலில் இவரின் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலிப்பது குறிப்பிடத்தக்கது. நந்தவன தேர் படத்தில் வரும் வெள்ளி நிலவே பாடலில் நாயகனின் ஆறுதலை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை குரலிலே தந்திருப்பார்.

மகாநதி படம் வந்தபோது படத்தில் ஒரு சரணத்தை வெட்டி இருப்பார்கள். ஆனால் ஆடியோவில் அது இருக்கும். அதுதான் ஸ்ரீரங்கநாதர் பாடலில் கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் எனும் சரணம். அந்த பத்தியில் அவ்வளவு இயல்பாய் பாடியிருப்பார்.

முரளியின் படத்தில் வரும் தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே பாடலில் நாயகனுடன் ஊடல் ஆடும் நாயகியின் மனோ நிலையை அப்படியே பிரதிபலித்து இருப்பார். ஊரடங்கும் சாமத்துல எனும் துவங்கும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் சொர்ணலதா உடன் இணைந்து கலக்கி இருப்பார்.

 இது என்ன இது என்ன புது மயக்கம் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலும்.தற்காலத்து நாயகியான திரிஷா விற்கும் சிவகாசி மற்றும் திருப்பாச்சி பாடல்களில் பாடி இருப்பார்

இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வந்தவை இவைகள் மட்டுமே. தனித்துவக் குரலாக அதிகம் கவனத்தில் அறியாத உமாரமணன் அவர்களின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

-மணிகண்ட பிரபு

Wednesday, 1 May 2024

Laapataa ladies, (Hindi)-மணி



அமீர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள படம்
தொலைந்து போன பெண்கள் எனும் அர்த்தம் தரும் டைட்டில் தான்
லாபட்டா லேடிஸ்.செங்கல் செல்போன் உள்ள 2000ன் துவக்கத்தில் நடக்கும் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு குக் கிராமத்தில் திருமணம் நடைபெறுகிறது.பொது இடத்தில் பெண்கள் யாரையும் பார்க்காமலிருக்க முக்காடிட்டு நடக்கும் வழக்கமுள்ள ஊரில், தீபக் எனும் மணமகனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். மாப்பிள்ளை சைடுல ஒருத்தர் கூட இல்லை.

திருமணம் முடித்து தனது சொந்த ஊருக்கு தன் புது மனைவியுடன் கிளம்புகிறான்.. நெருக்கடியான ரயிலில் பயணம் செய்யும் போது அதே இருக்கைக்கு அருகே இன்னொரு புது மணத் தம்பதியினரும் பயணிக்கின்றனர். இரண்டு பெண்களுக்கும் ஒரே விதமான சிவப்பு நிற உடை + முக்காடு.

ரயில் காலதாமதமாவதால், நல்லிரவில் தீபக்கோட ஸ்டேஷன் வருகிறது.உண்மையான மனைவி உறங்கிக் கொண்டிருக்க, தீபக் இரயிலில் இருந்து இறங்கும் அவசரத்தில் பெட்டியில் இருந்த மற்றொருவரின் மனைவியுடன் அந்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறான். அந்த பெண்ணுக்கு தான் இடம் மாறி இறங்குவது அறிந்தும், அவள் அமைதியாக தீபக்குடனே அவனது கிராமத்துக்கு செல்கிறாள். 

தீபக்கின் உண்மையான மனைவி வேறு ஒரு ஊரில் இறங்கி தவிக்க, அங்கு அவளுக்கு அந்த ஸ்டேஷனில் டீக்கடை நடத்தும் ஒரு வயதான பெண்மணி ஆதரவு அளிக்கிறார்.

இறுதியில் புது மணத்தம்பதி சேர்ந்தார்களா?புது மணப்பெண் என்ன ஆனாள் என்பது மீதிக்கதை.

*இடம் மாறிப்போன இரண்டு பெண்களின் நிலைதான் கதையாக பயணிக்கிறது. காவல் நிலைய புகார், ரயில் நிலையத் தொடர்பு என அன்றைய தொழில் நுட்பத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ள கோல்டன் நாட்கள் தெரிகிறது

*விருப்பமில்லாத மற்றொரு மணப்பெண் அமைதியாக தீபக்குடன் பயணிக்கிறாள்.ஆரத்தி எடுக்கும் போது வரும் அதிர்ச்சி பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது

*புதிதாய் வந்த மணப்பெண்வந்த அன்றே செங்கல் செல்போனின் சிம்மை எரித்துவிடுகிறாள். இதனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என லாஜிக் வொர்க் அவுட் ஆகிறது

*தொலைந்து போன உண்மையான மனைவி பதறி அழும் இடம் இயலாமையை காட்டுகிறது. யாரையும் நம்பாமல் பின்னர் நம்பிக்கையுடன் நகர்வது பெண்ணின் தன்னம்பிக்கையை காட்டுகிறது

*கையிலிருக்கும் மருதாணியில் தீபக்கின் பெயர் அழிவதை பார்த்து இனி சந்திப்போமா என சந்தேகத்தையும் கூட்டுகிறது.

*பெண்ணை ஒருவர் துணையின்றி அனுப்புவார்களா?ஆணின் உறவினர் ஒருவரும் வரவில்லையா?கடிதப் போக்குவரத்தில் பெண் வீட்டார் விசாரிக்கவில்லையா?புதுப்பெண்ணை விருந்தாளி போல் தங்க வைப்பார்களா? என அடுக்கடுக்கான கேள்வி இருந்தும் அந்த விளிம்பு நிலை குடும்ப கிராமச் சூழல் கோவாக்சின் போட்டவர் போல் கேள்வி கேட்காமல் கோவிஷீல்ட் போட்டவர் மாதிரி அமைதியாய் கவனிக்க வைக்கிறது.

ஒருவரிக்கதை,நல்ல திரைக்கதை வித்தியாசமான அனுபவம், சினிமாத்தனம் இல்லாமல் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

பெருந்தீசிற்றனலிலிருந்து கிளம்புவதுபோல,பெரும் யுத்தம் சிறுபுறக்கணிப்பிலிருந்து துவங்கும்.-நரன்

புரிந்துணர்வுடன் காதுகொடுத்துக் கேட்பது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுவதாகச் சிலர் கூக்குரலிடுகின்றனர். துவக்கத்தில் அது கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டாலும், அது தவறான புரிதல்களைச் சரிப்படுத்துவதற்கும் உதவும்.பிரச்சனையின் காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்-டேல் கார்னகி