Saturday, 11 May 2024

routine


,அன்றாட ஒழுங்கின் அவசியம்
Power of Routine

நீங்கள் உங்களை எத்தனை சாதாரணமான ஆளாகக் கருதினாலும் உங்களுக்குச் செய்ய பெரிய விஷயங்கள் இல்லை என்றாலும் கூட Routine எனப்படும் அன்றாட ஒழுங்கை வைத்துக் கொள்ளுங்கள்.
காலை இத்தனை மணிக்கு எழுவது , பேப்பர் படிப்பது  , உடற்பயிற்சி, ஃபேஸ்புக் பார்ப்பது, வீட்டு வேலைகள் , வாசிப்பது, எழுதுவது, ரிலாக்ஸ் பண்ணுவது என எல்லா விஷயங்களுக்கும் ஒரு ஒழுங்கு வைத்துக் கொண்டு அதன்படி செய்யுங்கள். எத்தனை சிறிய ரொட்டின் என்றாலும் பரவாயில்லை

பல விஷயங்களை நாம் செய்ய ஆசைப் படுவோம். ஆனால் அதைச் செய்ய ஒரு மூட் வரட்டும் எனக் காத்திருப்போம். அந்த மூட் வரவே வராது.இதுதான் Psychological Inertia எனப்படும் ஸ்டார்டிங் ட்ரபிள்.

அதுவே ஒரு அன்றாட ஒழுங்கு வைத்திருந்தால் அதுவே உங்களுக்கு ஒரு உந்துதலைத் தரும். 

அன்றாட ஒழுங்கை வைத்திருப்பவர்களுக்கு மனச் சோர்வு வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இலக்குகளை அடைவதாலும் மனச் சோர்வு குறைகிறது.

வாழ்க்கையின் நோக்கம் என்றெல்லாம் அடிப்படையில் எதுவும் கிடையாது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க ஒரு ஒழுங்கையும் நோக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . அது போலியாக இருந்தாலும். எதையாவது செய்தோம் என்ற நிறைவு இருக்கும்

So have a routine...

டாக்டர் ஜி ராமானுஜம்.

No comments:

Post a Comment