பக்கத்தில் கடவுள்!
வேறு வேலையாக வந்ததால்
கோயிலுக்குள் செல்லாமல்
வாசலில் நின்று
முகப்புச் சிற்பங்களை
பார்த்துக்கொண்டிருந்தேன்
பக்கத்தில் நிழலாட திரும்பினால்
அங்கே கடவுள்
நான் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால்
அவர் அதன் விரிசல்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஆசி பெறலாம் எனக் கால்களைத் தேடினேன்
“இங்கேயே இருந்து
செருப்புகளைப் பார்த்துக்கொள்’’
என உள்ளே சென்றுவிட்டார்
மெல்ல எட்டிப்பார்த்தேன்
“ஹலோ, இலவச தரிசனம் அந்தப் பக்கம்’’
என யாரோ வழிகாட்டினார்கள் கடவுளுக்கு
-ரா.பிரசன்னா
💥: பிழைக்க
கரைபெருக ஓடிய
காவிரியில் நீச்சலிடித்தவர்கள்
தங்கள் மகன்களை
பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
வாட்டர்கேன் தொழிலுக்கு
-யுகபாரதி
💥: யாரோ திட்டுகிறார்கள்.
நான் கடந்து போகிறேன்
கடவுளைப் போல...
#ஆத்மாநாம்
💥: நிழல்
————
இரவின் பகல் தூக்கம்
-கவி
💥: மகாபாரத இறுதியில் குந்தி தவம் மேற்க்கொள்ள வனம் செல்கிறாள். “மனைவியை வைத்து சூதாடியவர்கள், தாயை வைத்து ஆட மாட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்” என்று நினைத்திருக்கலாம்!
#பிரபஞ்சன்
No comments:
Post a Comment