💥: சென்னை புத்தகத்திருவிழாவிற்கு சென்று வந்த முறையில் சொல்கிறேன்.அதிகம்.விற்பனையாவது
*இந்தியாவின் இருண்ட காலம் -சசிதரூர்
*ஜெயலலிதா குறித்து வாஸந்தி எழுதிய புதிய நூல்
*அம்பேத்கர் அன்றும் என்றும்
*கடவுளின் நாக்கு
*மற்றபடி அஜ்வா, தமிழ்பிரபா,சாரு,எல்லாம் வாங்குறாங்க.படிக்கிறாங்களானுப்தெரியல..
இது குறித்து கட்டுரை எழுதி வருவதால்..இப்போதைக்க்கு இவ்வளவே
💥: வேலைகளல்ல வேள்விகளே!
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன்
கைகளில் பூமி சுழன்று விடும்
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி
எழுஎழு தோழா! உன் எழுச்சி இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி
-தாராபாரதி
💥: காரணமற்று சில கணங்கள் வெறித்துப் பார்ப்பது காட்சிகளையா?,நினைவுகளையா?"
💥: வெற்றியின் ரகசியம் என்ன?
ரகசியமாய் பெற்றால் அது வெற்றியல்ல
-இறையன்பு
# பட்டம் விற்கும்
சிறுவனிடம் கேட்டேன்
நீ எப்போது
பட்டம் விடுவாய்
சிரித்தபடி சொன்னான்
அதோ பட்டம் விட்ற
பசங்கள எல்லாம்
பாருங்க சார்
அது நான்தான்
- ராஜா சந்திரசேகர்
No comments:
Post a Comment