Sunday 4 March 2018

மணி

💥: தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை...
-வா.மணிகண்டன்

💥: யூதர்கள் ஏன் ஓரிடத்தில்கூட ஹிட்லரை எதிர்த்து புரட்சி செய்யவில்லை?

இருத்தலியல் (existentialism) தத்துவத்தின் குருவாகக் கருதப்படும் சார்த்தர், “மரணபயத்தை விட சித்திரவதை எதிர்பார்ப்பு இன்னும் கடுமையானது” என்று கருதுகிறார்.

-அசோகமித்திரன்

எனக்கு
யாருமில்லை
நான்
கூட...
_நகுலன்.

நீயற்ற நீயும்
நீயற்ற நானும்
நீயற்ற பொழுதும்
நீயற்ற கணமும்
நீயற்ற மௌனமும்
நீயற்ற வார்த்தைகளும்
நீயற்ற கொண்டாட்டங்களும்
நீயற்ற எதுவும்....
நானற்றுக் கிடக்கிறது-
வனாந்தரத்தில்
தனித்து விடப்பட்ட
ஒரு ஆட்டுக்குட்டியைப்போல.
_பாரதிவாசன்
(இடைவெளி நிரப்பும் வானம்)

💥: பதில் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி..ஆயுதம்..!!
-p

💥: உன்னை ஒருத்தன் ஏமாத்தினா அவன் ஒனக்கு ஒரு தந்திரம் கத்துக்குடுத்தான்னு வச்சிக்க. அவன் ஒரு வகைலே ஒனக்கு குரு.
#ஜி_நாகராஜன்

அங்கீகாரத்திற்குத்தான் இங்கு எல்லா மெனக்கெடலும்..சிலர் தகுதியை வளர்த்துக்கொள்கிறார்கள், சிலர் கவனயீர்ப்பு வித்தையை. அவ்வளவே வித்தியாசம்.
# - அரூபி via Twitter.

💥: பழுதுபார்க்கப் படாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது வீட்டுச் சுவர் கடிகாரம்.ஆனாலும் அப்பப்ப மணி பார்த்து அக்கணம் ஏமாறுவது நிற்கவில்லை
#பாதசாரி

No comments:

Post a Comment