பதின் நாவலை ஆரம்பிக்கும் போதே எஸ்.ரா அவர்கள் நீங்கள் குழந்தையாக, சிறுவனாக உங்களை நினைத்து படிக்க நினைத்தால் இந்த நாவலை படிக்கலாம், இல்லையெனில் புத்தகத்தை மூடிவிடலாம் என கூறும் போது எதற்கு இப்படி சொல்கிறார் என யோசித்தேன்.. ஆனால் நாவல் 10 பக்கம் படித்ததுமே அவர் கூறிய காரணம் புரிந்தது...
நாவல் முடியும் போது நம் சிறுவயது நினைவுகள் அனைத்தையும் அசைபோட்டு முடித்திருப்போம்.. மீண்டும் சிறு வயது திரும்ப நம்மை ஏங்க வைக்கிறது..
சங்கரோடு சேர்ந்து பகல் நேரத்தை அளப்பது, டவுசர் பாக்கெட்ல தோசையை போட்டு சாப்டரது, பன் ரொட்டி வாசனை புடிக்கரது, கோழிக்கிட்ட கடன் கேட்கரது, முயல் பாக்க போரது, ஒரு நாள் முழுசா சுவத்த பாத்துகிட்டு இருக்கிறது, வாட்டர் டேங்க் மேல ஏறி எச்சில் துப்புதல், மீன் பிடிக்கிறதுனு இன்னும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை செய்வது எல்லாமே நாமும் நம் குழந்தை பருவத்தில் செய்து பார்த்த பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வருகிறது..
இது மட்டும் இல்லாம சில வித்யாசமான யோசனைகளான தாண்டவன் கதை, ரொக்கம் கதை, சுண்ணாம்புகாரி சுத்தம், மின்சாரமனிதன், ஒற்றைச்சக்கர சைக்கிள், கொக்கு பூ போடுதல், கண்ணாடி போட்டவங்கள கணக்கெடுப்பது, வீடு முழுசும் தோசை ஊத்தரது, அண்டா தண்ணியை கீழ ஊத்தரது, கழுதை கல்யாணம், கடல்ல உச்சா உடரது, அழிரப்பரை வச்சு மூளையை அழிக்கிறது, பாட்டு கேக்கர நாய் என இன்னும் பல சுவையான நிகழ்வுகள் அனைத்தும் நம் வயதை முன்னோக்கி நகர்த்துகிறது...
பதின் நாவலில் எனக்கு பிடித்தமான வரிகளில் சில..
*பால்யத்தில் பேய்களும், ஆசிரியர்களும் ஒன்று போலவே பயமுறுத்தினார்கள்..
*உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையானது.. கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்தல் போன்றவற்றிற்கு உட்படாத சிறார்கள் இந்த உலகில் இல்லை..
* சிறுவயதில் எப்போது வளர்ந்து பெரியவன் ஆவோம் என்ற எண்ணம் தோன்றாத நாளே இல்லை..
*காலம் ஒவ்வொரு நாளாகத்தான் கடந்து போகும் என்பது எவ்வளவு துரதிஷ்டம்..
*சிறுவர்கள் தனியுலகில் வாழ்கிறார்கள்.. அந்த உலகம் பெரியவர்களின் உலகைவிட சிக்கல்களும், சிடுக்குகளும், அவமானங்களும், வெறுப்பும், விரோதமும், விசித்திரமான சந்தோஷங்களும் நிரம்பியது..
*பொய் சொன்னால் நம்பும்படி சொல்ல வேண்டும்.. இல்லாவிடில் கண்டுபிடித்து விடுவார்கள்..
*பயந்துகிட்டே இருந்தா எதையுமே செய்ய முடியாது.. இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்..
*கெட்டவார்த்தை பேசுனா சாமி நாக்குல ஓட்டை போட்ரும்..
*பெரியவர்களுக்கு எதையும் சொல்லி புரியவைக்க முடியாது.. அவர்களுக்கு சிறுவர்கள் மீது எதாவது புகார் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்..
*சாமிக்கும் சமயத்துல புத்தி அவிஞ்சி போயிருது...
*இரவில் தெருவிற்கு ஒரு மணமிருக்கிறது.. தூக்கத்தின் வாசனையோ என்னவோ...
*குடிகாரன் போல லாரிகள் எப்போதும் தள்ளாடியபடி செல்கின்றன..
*கற்கள் கோபமானவை.. ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும்போது நெருப்பைக் கக்குகின்றன்..
*பறவைகளுக்கு மட்டுமே தன் குரலை பயன்படுத்த தெரிந்திருக்கிறது.. அவை வீணில் சப்தமிடுவதில்லை..
*மழை பெய்யும் போது நாக்கு விழித்து விடுகிறது.. அது சூடாக எதையாவது சாப்பிடத் தேடுகிறது..
*மீறுவதுதான் கட்டுபாடுகளுக்கு விடப்படும் சவால்...
*சர்வாதிகாரிகள் உலகிலிருந்து மறைந்து போயிருக்கலாம்.. ஆனல் வீட்டில் வாழத்தான் செய்கிறார்கள்..
*வீடு என்பது அப்பாவின் வாய்.. நாங்கள் அனைவரும் அதில் சிறுசிறு பற்களைப் போல அடங்கியிருக்கிறோம்.. அப்பாவிற்காக வேலை செய்வதுதான் எங்கள் கடமை..
*சிங்கம் காட்டிற்கே அரசனாக இருந்தாலும் யாரும் சிங்க வேஷம் போடுவதில்லை, புலிவேஷம் தான் போடுகிறார்கள்..
*ஒருவன் கனவில் இன்னொருவர் வருவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை.. யார் வேண்டுமானாலும் யார் கனவிலும் வரலாம்..
*பாம்பு பால் குடிக்கும்னு யாராவது சொன்னா.. பாம்பு பூரி திங்குமா, பாம்பு பரோட்டா சாப்பிடுமானு கேட்கணும்..
*அழிரப்பரை எதற்கு வாசனையோடு தயாரிக்கிறார்கள் என்று புரியவே புரியாது.. அதுவும் பச்சை கலரில் கமகமவென வாசனையாக இருக்கிற அழிரப்பரைக் காணும்போது அதைக் கடித்து திண்ணுவிடலாமா என தோன்றும்..
*ஒரு நண்பனால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை இன்னொரு நண்பனால் நிரப்பிவிட முடியாது.. அது என்றைக்குமே வெற்றிடமாகவே இருக்கும்.. அவனே திரும்பி வந்தால் கூட அதே போல நட்பு இருக்குமா எனத் தெரியாது...
செ.பிரகாஷ்,
குருசாமிபாளையம்..
No comments:
Post a Comment