Saturday, 18 October 2025

105


#Reading_Marathon2025

#25RM055

Book No:105/100+

Pages:-176

எம்.ஜி.ஆர் பதில்கள்

அந்நாளில் பிரபலங்களின் கேள்வி பதில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. தாங்கள் விரும்பும் நட்சத்திரம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் அவர்களின் மனதில் உள்ள விஷயங்களும் நமக்கு தெரிந்துவிடும். தினமணி கதிர் வார இதழில் எம்ஜிஆர் அவர்கள் அளித்த கேள்வி பதில்கள் தான் இந்த புத்தகங்களின் தொகுப்பாக இருக்கிறது.

அறிஞர் அண்ணா அவர்களின் நிழல் கருணாநிதி என்று கூறுகிறார்களே அது உண்மையா? என்று கேட்டதற்கு நிழல் எப்போதும் தானாக இயங்குவதில்லை. வெளிச்சம் இல்லாவிட்டால் நிழல் நம் கண்களுக்கு தெரியாது. பேரறிஞரின் மறு பதிப்பு கலைஞர் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

மடக்கும் விதத்தில் சில கேள்விகளும் கேட்பார்கள் அதற்கு புத்திசாலித்தனமாக பதிலும் சொல்லி இருக்கிறார். ஒருவர் கோழியில் இருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா? என்பதற்கு பதிலாக மாம்பழம் முதலிலா? மாமரம் முதலிலா? என்று வினா எதிர் வினாவை கொடுத்திருப்பார்.

ஒரு எதிர்க்கட்சிக்கு என்ன ஒழுங்கு தேவை என்பதற்கு ஓர் அரசியல் நடத்தும் கட்சிக்கு என்னென்ன ஒழுங்குகள் தேவையோ அத்தனையும் எதிர்க்கட்சிக்கும் தேவை. என்னை பொறுத்தவரையில் எதிர்க்கட்சியை சிவப்பு விளக்கு என்று சொல்லுவேன். மக்களை ஏற்றி செல்லும் வண்டிகள் தடம் புரளாமல் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுவது என்று எதிர்க்கட்சிக்குரிய தகுதிகளாக குறிப்பிடுகிறார்.

என்றும் மதிக்கும் அறிவுரை என்ன என்று கேட்டதற்கு "உன்னை விட பிறருக்கு அறிவோ பலமோ ஆற்றலோ ஏதோ ஒரு வகையில் அதிகம் இருக்கும், என்று நினைப்பில் நீ மற்றவர்களோடு பழக வேண்டும். யாரைப் பற்றியும் அலட்சியமாக எண்ணாதே" என்று அறிவுரை பிடித்திருந்ததாக கூறுகிறார்.

சில கேள்விகள் சாதாரணமாகவும் பதில்கள் அதைவிட சாதாரணமாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வழக்கமாக எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? நடிப்புத் துறைக்கு எப்படி வந்தீர்கள்? எனும் கேள்விக்கு எழுதத் தெரிந்ததால், நடிக்க தெரிந்ததால் என்ற சேப்டியான பதில்கள் தான் எம்ஜிஆரும் சொல்லி இருக்கிறார்.

இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவை கொடுத்திருப்பது ஏன் எனும் கேள்விக்கு "அவன் மீது உள்ள அவநம்பிக்கையால்"

இந்தியாவின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?கலங்கித் தெளிதல் என்ற நிலையில் இருக்கும்

 என்ற சில ஒன் லைனர்கள் ரசிக்க வைக்கின்றன.

கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் காலத்தை பார்த்தால் எம் ஜி ஆர் அப்பொழுத திமுகவில் தான் இருந்திருக்கிறார். அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் வந்த புதிது என்பதால் அதை குறித்த கேள்விகள் தான் அதிபெற்றுள்ளபெற்றுள்ளன. பல கேள்விகள் சுவாரசியம் இல்லாமையும் சில பதில்கள் சுவாரஸ்யம் இல்லாமலும் ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்திலும் அமைந்திருக்கின்றன. நல்ல கேள்விகள் சிறந்த குழந்தைகளை பெற்றெடுக்கின்றன என்று சொல்வார்கள். அது போல சில கேள்விகள் மட்டும் நல்ல முறையில் அமைந்துள்ளன ஒரு வித்தியாசமான அனுபவமான வாசிப்பு அனுபவமாக இருந்தது

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment