Saturday, 4 October 2025
"நடப்பது என்பதின் தத்துவம்" Philosophy of walking எனும் ஃப்ரெட்ரிக் கிராஸ் எழுதிய புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நடப்பது என்பது சுதந்திரம்,படைப்பு சக்தி,சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது என்று எழுதி இருக்கிறார் . மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மூலமாக நடை போடுவதை ஒரு போராட்ட யுத்தியாக மாற்றிக் கொண்டார். சுதந்திரமும், தனிமனித வெற்றியும் பற்றி நீண்ட நடை பயணங்களில் தனிமையாக சிந்திக்கும் போது --சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து விலகி நடக்கும் போது ---தனக்கான தனி வழிகளை சிந்தனை பூர்வமாகக் கண்டுபிடிக்க முடிகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.10000 அடிகள் தினந்தோறும் நடப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் தினந்தோறும் நடை பழகுங்கள்.-இந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment