#கற்கை_நன்றே_184
"கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும். அதன்மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும் அது உறுதியாக நிற்கிறது. அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அடங்கி அமைதியாகின்றன
-வில்லியம் ஆஸ்லர்
ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது ? என்ற கேள்வியைப் பல்லாயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் கூறக்கூடிய பதில்களும், அதற்கான காரணங்களும் அவரால் தொடர்ந்து தொகுக்கப்பட்டும், பத்திரிக்கையில் வெளியிடப்பட்டும் வந்தன. பெரும்பாலானவர்கள் ஆகாய விமானம், அணுசக்தி ஆற்றல், கம்ப்யூட்டர், வாகனப் போக்குவரத்து, சில அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் என்றெல்லாம் கூறினார்கள்.
ஒரேயொரு நபர் மட்டும் மிகவும் வித்தியாசமான ஒரு பதில் சொன்னார். அதாவது அவரைப் பொறுத்தமட்டில் தலைசிறந்த கண்டுபிடிப்பு தெர்மாஸ் என்றார். காரணம் கேட்டதற்கு, அது சூடானதை சூடானதாகவும், குளிர்ச்சியானதை குளிர்ச்சியாகவும் வைக்கிறது என்றார். இதிலுள்ள உள் அர்த்தம் "எது எப்படியுள்ளதோ அதன் உண்மைத்தன்மை மாறாமல் அது வெளிப்படுத்துகிறது என்பதே" இதன் சிறப்பு.
தன்னிடம் பெறக்கூடிய பொருளின் தன்மையை மாற்றாமல் வைப்பது தெர்மாஸ் குடுவையின் பண்பு. மனிதர்களைக் காணும் போதும் அவரவர் நிலையில் அவர்களை வைத்து, அவர்களை உயிரோட்டமாக இருக்க வைப்பதும் அவசியம் என்பதே இந்தச் சம்பவத்தின் உண்மையான விளக்கம்.
Sympathy vs Empathy
Sympathy என்பது ஐயோ பாவம் என்று இரக்கப்படுவது.இது ஒரு போதும் ஒருவரின் துன்பத்தை மாற்றாது.
அதை மாற்ற முயலுவதுதான் Empathy.கருணையை செயலாக மாற்றுவது.இந்த Empathy யை தான் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும்
ஒத்தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
எவன் அடுத்தவனுக்கு நேர்கிற துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதுகிறானோ,அவன் தான் உண்மையில் உயிர்வாழ்கிறவன்.
*அதற்கு ஆங்கிலத்தில் empathy என்றுபெயர்.மற்றவர் துன்பத்தை எவன் உணர்கிறானோ அவன் தான் emperor- பேரரசன் என்கிறார் சுபவீ
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment