Monday, 12 October 2026

கற்றுக்.கொடுப்பது

நம்மால் ஏன் எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக கற்றுக்கொள்ள முடிவதில்லை? அது ஆங்கிலமோ, ஷேர் மார்க்கெட்டோ, சமையலோ, வண்டி ஓட்டுவதோ.... 

ஏனென்றால் நாம் கற்றுக்கொள்வதில் "பாடம் நடத்தப் படுகிற"  விதத்திற்கு பெரும் பங்கு உண்டு. "Learning Pyramid / Cone of Learning" எனும் ஆராய்ச்சி அதைத் தான் சொல்கிறது. 

நாம் அமைதியாக இருந்து வெறும் "Lecture" கேட்பதால் நம் மனதில் எவ்வளவு பதியும் தெரியுமா? வெறும் 5% மட்டும் தான். 

அதையே Audio - Visual  மூலம் கற்றுக் கொண்டால்? 20% மனதில் பதியும்.

Discussion மூலம்? (குரூப் டிஸ்கஷன், ஜோடி டிஸ்கஷன், ஆசிரியரிடமே டிஸ்கஷன்) அப்போதும் 50% தான். 

அப்படி என்றால் கற்றுக் கொள்வதற்கு எது பெஸ்ட் மெத்தட்? 

*"கற்றுக் கொடுப்பது"* 

ஆம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தை, இன்னொருவருக்கு கற்றுக் கொடுப்பது. அவருக்கு புரிய வேண்டுமே என்று தெளிவாகப் படிப்போம், அவரது சந்தேகங்களைத் தீர்ப்போம், புரியாததைப் புரிய வைக்க மாற்றி சொல்லித் தருவோம். 

எனவே நாம் கற்றுக் கொள்ள விரும்பிய விஷயம் 90% மனதில் பதியும். 

-எஸ் கா

No comments:

Post a Comment