Wednesday, 31 December 2025
#மனசுக்கு_ஒரு_தேநீர்_1குத்துச்சண்டை வீரரான கோர்பெட் ஒரு ஆற்றங்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மீனவன் கரையோரத்தில் மீன்பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மீனவன் தன் வலையல் அகப்படும் மீன்களில் சிறியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய அளவிலான மீன்களை ஆற்றில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தான் இதை பார்த்து ஆச்சரியப்பட்ட கோர்பெட் அருகில் சென்று சிறிய மீன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் பெரிய மீன்களை மீண்டும் தண்ணீருக்கும் தூக்கிப் போடுகிறாய்? என்று ஆர்வமுடன் கேட்டார். அதற்கு அவன் ஐயா இப்படி செய்வதில் எனக்கும் விருப்பமில்லை தான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் வீட்டில் இருப்பது சிறிய எண்ணெய் சட்டி தான் என்றாராம். அந்த மீனவன் குறிப்பிடுவது உங்களையும் என்னையும் சேர்த்து தான் பெரிய அளவில் செய்யக்கூடிய திட்டங்களுக்கான வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்போது கடவுளே! இவ்வளவு பெரிய திட்டத்தை என்னால் செயல்படுத்த இயலாது. என்னிடம் இருப்பது குறைந்த திறமை தான் என நினைக்கிறார்கள் .பெரிய விஷயங்கள் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக செயல்படுத்தி இருக்கக்கூடும் சிறிய அளவிலான திட்டங்களை தள்ளி வைத்து பெரிய அளவிலான திட்டங்களை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.கனவை நனவாக்க நம்பிக்கை மட்டும் போதாது துணிச்சலும் வேண்டும் புத்தம்புது காலையுடன் மணிகண்டபிரபு
ஜா-13
வாழ்க்கைக்கு ஹைக்கூ 13
"கோவில் மணி ஓசை மெல்ல கரைகிறது,
ஆனால் அதன் ரீங்காரம்
மலர்களின் நறுமணத்தோடு கலந்து நிற்கிறது;
மாலை நேரம்!"
- மட்சுவோ பாஷோ
ஒரு மாலை வேளையில், கோவில் மணியின் பலத்த ஓசை நின்றுவிடுகிறது. சத்தம் ஓய்ந்தாலும், அந்த மணியின் அதிர்வு காற்றில் கலந்து, அங்கே பூத்திருக்கும் மலர்களின் நறுமணத்தோடு ஒன்றிவிடுகிறது. சத்தம் நின்றாலும் அதன் தாக்கம் அந்தச் சூழலில் அமைதியாகத் தொடர்கிறது.
இந்தக் கவிதை ஒரு நிறைவான வாழ்க்கைக்கு மிக ஆழமான இரண்டு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது.
கோவில் மணி அடித்து ஓய்ந்தாலும், அதன் ரீங்காரம் மலரின் மணத்தில் கலந்திருப்பதைப் போல, நாம் செய்யும் செயல்கள் முடிந்தாலும் அதன் தாக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தங்கிவிடும்.
நாம் யாரோ ஒருவரிடம் அன்பாகப் பேசியிருப்போம் அல்லது ஒரு சிறிய உதவி செய்திருப்போம். அந்தச் செயல் சில நிமிடங்களில் முடிந்துவிடும் (மணி ஓசை போல). ஆனால், அந்த அன்பு தந்த மகிழ்ச்சி, அந்த நபரின் மனதில் நீண்ட நேரம் ஒரு நறுமணம் போலத் தங்கியிருக்கும். ஆகவே, நிறைவான வாழ்க்கை என்பது நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதில் இல்லை, நாம் மறைந்த பிறகும் அல்லது ஒரு செயல் முடிந்த பிறகும், அது மற்றவர்களிடத்தில் எவ்வளவு இனிமையான அதிர்வுகளை (நினைவுகளை) விட்டுச்செல்கிறது என்பதில் உள்ளது.
பாஷோ இந்தக்கவிதையை "மாலை நேரம்" என்ற ஒற்றை வார்த்தையில் முடிப்பதற்குப் பின்னால் ஆழமான உளவியல் மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. மாலை நேரத்தில் சூரிய வெளிச்சம் குறையும்போது, நமது பார்க்கும் திறன் மங்கத் தொடங்கும். இயற்கையாகவே, பார்வை குறையும்போது மனிதனின் மற்ற புலன்களான கேட்கும் திறன் மற்றும் நுகரும் திறன் அதிக கூர்மையாகும். இந்தக் கவிதையில் நடப்பதும் அதுதான். கவிஞர் காட்சியை விவரிக்கவில்லை. "மணி ஓசை" (கேட்டல்) மற்றும் "மலர் நறுமணம்" (நுகர்தல்) ஆகிய இரண்டையும் இணைக்கிறார். இந்த இரண்டு நுட்பமான உணர்வுகளும் ஒன்றோடொன்று கலப்பதற்கு மாலை நேரமே மிகச் சிறந்த களம். பகலில் இந்த அனுபவத்தை முழுமையாக உணர முடியாது.
"மாலை" என்பது எப்படி ஒருநாளின் நிறைவுப் பகுதியாக இருக்கிறதோ, அதே போல நமது வாழ்வில் செயலின் நிறைவுப் பகுதியை இது குறிப்பிடுவதாக புரிந்துகொள்ளலாம். வாழ்க்கையின் ஓட்டம் (பகல்) குறையும்போதுதான், நாம் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தையும், விட்டுச்செல்லும் நற்பெயரையும் (நறுமணம்) நிதானமாக உணர முடியும்.
இந்த ஹைக்கூ, "எல்லாம் ஓய்ந்த பிறகும் எஞ்சி நிற்பது எது?" என்ற கேள்வியை நமக்குள் கேட்கிறது.
கார்க்கி ஜான்சன்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபலங்களின் சரிவுகளை, இங்கு பலரும் கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்திருப்பது பற்றி கேள்வியை சுதீர் முன்வைத்தார். அதற்கு இயக்குநர் ராஜ் பி ஷெட்டி அளித்த பதில் தரமானதாக இருந்தது. அந்த பதில் கீழே,
"To Compliment somebody you need to have joy inside you. The whole world is suffering. எல்லோரும் அவர்கள் வாழ்விலிருந்து தப்பி ரீல்ஸ் பார்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் உள்ள பொழுதுபோக்கு மிகக்குறைவு. அப்படி ஒரு நிலையில் நீங்கள் எப்படி சிறந்தவராக உங்களை காட்டிக் கொள்ள முடியும்? மிக சிறந்தவர்களை அவமதிப்பதன் மூலம் மட்டுமே. எனவே சிறந்த ஒருவரின் வீழ்ச்சியை இந்த உலகம் கொண்டாட்டமாக பார்க்கிறது. ஏனெனில் this world is sick, இதில் நானும் அடக்கம். அதுதான் இங்கு பிரச்னை. அதற்கு collectiveவான ஒரு சிகிச்சை தேவைப்படுகிறது. ஒருவரின் தோல்வி உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றால், உங்களை நீங்களே கேள்விக்கு உட்படுத்த வேண்டும். Because it is a sickness we can't help, they are not doing intentionally"
நன்றி கார்க்கி ஜான்சன்
Monday, 29 December 2025
121
#Reading_Marathon2025
#25RM055
Book No:121/150+
Pages:-548
நெக்சஸ்
-யுவால்நோவா ஹராரி
தமிழில் நாகலட்சுமி சண்முகம்
2025 ம் ஆண்டு துவக்கத்தில் வாங்கியபுத்தகம் இது.பல இலட்சம் ஆண்டுகள் பரிணாமத்திற்கு பின்னும் மனிதகுலம் இருத்தல்சார் நெருக்கடிகள் இருப்பதை பற்றி பேசுகிறது.மலையளவு தகவல்கள் உள்ள போதும் பகுத்தறிவைக் கைவசப்படுத்துவதில் இன்னும் போதாமை இருக்கிறது.தங்கள் பொறுப்புகளை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக கடவுள் மீது விசுவாசம் கொள்கிறோம். தகவல்களை பெறுகின்ற நாம் அதை அலசுவதோ ஆராய்வதோ இல்லை. வெகுளித்தனமான கண்ணோட்டம் வலையமைப்பு, ஏ.ஐ உருவாக்கும் புதிய அபாயங்களை பற்றிக் கூறுகிறது. அதிகமான தகவல்கள் மேம்படுத்துவதை விட மோசமாக்கியதே அதிகம்.
அதிகாரமும் நாகரிகமும் யாரிடம் தகவல் ஓட்டத்தின் கட்டுப்பாடு இருக்கிறதோ அவர்களிடமே சென்று சேரும்; இன்று அது மிக வேகமாக மனிதர்களிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்கு நகர்கிறது.
தகவல்கள்தான் நவீன யுகத்தின் ஆக்ஸிஜன்..அது முட்கம்பிகள் பதிக்கப்பட்டச் சுவர்களை ஊடுருவிச் செல்கிறது.21ம்நூற்றாண்டில் முட்கம்பிக்குபதிலாக சிலிக்கான் நுண்சில்லுகளாலும், கணினி நிரல்களாலும் ஆன புதிய உலகளாவிய மோதல் நடைபெறுமென எச்சரிக்கிறார்.
இப்புத்தகம் மூன்று முதன்மை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, பகுதி 1: மனித வலையமைப்புகள். இந்தப் பகுதி தகவலின் அடிப்படைத் தன்மைபற்றி ஆராய்கிறது. உண்மையும் யதார்த்தமும் வெவ்வேறு விஷயங்களாகும். ஏனெனில் ஒரு பதிவு உண்மையானதாக இருந்தாலும் எதார்த்தத்தை பிரதிபலிக்க முடியாது.
தகவல்களில் எது உண்மை,
இயேசு, ஸ்டாலின், இதிகாச, பைபிள் கதைகள்,, உண்மைகளும் திரிபுகளும், ஆவணங்கள், பிழைகள் மற்றும் சுயதிருத்த அமைப்புகளை ஆராய்கிறது. அதன் பின்பு வந்த ஜனநாயககட்டமைப்புகளைப் பற்றிக் கூறுகிறது.
மேலும் இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த அரசியல்வரலாறு, வல்லாட்சி பற்றி கூறுகிறது.தகவல் உண்மையைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை; அது மனிதர்களை இணைத்து பெரிய சமூகங்களை உருவாக்குகிறது. மதங்கள், நாடுகள் போன்ற கற்பனைக் கதைகள் மூலம். ஜனநாயகம் சுயதிருத்தம் செய்யும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு வலையமைப்பாக விவரிக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் கனிம வலையமைப்பு சொல்லப்பட்டுள்ளது.
முந்தைய தகவல் புரட்சிகளிலிருந்து மேம்பட்ட தகவலைப்பில் வாழ்கிறோம்.முதல்முறையாக அதிகாரம் மனிதர்களிடமிருந்து விலகி வேறு ஏதோ ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.இவை மனிதர்களைத் தாண்டி சுதந்திரமாக செயல்படலாம். முதன்மைத் திறவுகோலை கைப்பற்றிக் கொண்டிருக்கும்.மனித சிந்தனையில் உருவானவை தான் பரிணாம வளர்ச்சி அடைந்து சர்வாதிகாரம் அச்சமடைவது, தீவிர கண்காணிப்பு மனிதர்களுக்கிடையே நாடுகளுக்கிடையே என எப்போதும் இயங்குகிறது.
நாடுகளிடையே பகைமை உணர்ச்சி, வெறுப்பையும் வன்முறையும் பெருக்கும்.அல்காரிதம்களை கட்டுப்படுத்தாவிடில் பல்வேறு அபாயங்கள் நடைபெறும். மூளைச்சலவை எளிதில் நடைபெறும்.சமூகப் பொறுப்பு மனிதர்களுக்கும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டுமென கூறுவதுடன் இதனை ஒத்திசைவு பிரச்சனையாக கருதுகிறார்.இப்பிரச்சினையை தீர்க்க கோர்சிகத் தொடர்புகளை கூறுவதுடன் சாத்தியமுள்ள ஐந்து இலக்குகளை முன் வைக்கிறார்.
மூன்றாவதாக கணினி அரசியல் பற்றி புத்தகம் கூறுகிறது.
அண்மையில் தவறாக அச்சுறுத்தும் தகவல்களை சிறுவனுக்குதெரிவித்த ஆபத்து பற்றி நாம் படித்திருப்போம். இப்பகுதி ஜனநாயகத்தை அழிக்கும் ஆபத்து, ஜனநாயகத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா? என வினவி தொழில்நுட்பப் புரட்சியுடன் ஒப்பிடுகிறது;
இரண்டு உளவியலாளர்கள் சாட்ஜிபிடியின் பதிலை 0-என்ற அளவீட்டைக் கொண்டு தனித்தனியாக மதிப்பிட்டனர்.0 என்பது விவரிக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தவேயில்லை என்று சுட்டிக்காட்டுகிறது; 10 விவரிக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் அந்தச் சூழ்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்தியதைச் சுட்டிக்காட்டுகிறது. இறுதிக் கணக்கீட்டில், சாட்ஜிபிடியின் மதிப்பெண்கள், மனிதர்களின் மதிப்பெண்களைவிடக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தன: அதன் ஒட்டுமொத்தச் செயல்திறனுக்குக் கிடைத்த மதிப்பெண்ணும் கிட்டத்தட்ட உச்சபட்ச மதிப்பெண்ணை எட்டியது."
ரோபோட்டுகள் விளையாடுவதை பார்க்க மனிதர்களிடம் ஆர்வமில்லை.மனிதருடன் உணர்வுபூர்வமாய் உரையாட பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பில் நிலையற்ற தன்மை ஏற்படுத்தும்.தொழில்நுட்ப முன்னேற்றம் மனித நெறிமுறைகளை விட வேகமாக ஓடுகிறது.ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம் ஆகியவை புதிய சவால்களை சந்திக்கின்றன
தீர்வுகளை விட எச்சரிக்கைகளே அதிகம் தேவைப்படுகிறது.
புத்தகத்தின் இறுதியில் நாம் மிகவும் அறிவார்ந்தவர்கள் எனில் பிறகு ஏன் நாம் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்?குறை நம்முடைய இயல்பில் இல்லை. மாறாக தகவல் வலையமைப்பில் உள்ளது.
*தகவல் என்பது வெறும் செய்தி அல்ல; மனிதர்களை ஒன்றாகக் கட்டி இணைக்கும் சிமெண்ட் போல செயல்படும் ஒரு சமூக சக்தி
* “உண்மை பேசுவதற்காக” அல்ல, “அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக” தகவல் வலயங்கள் பெரும்பாலும் செயல்பட்டிருக்கின்றன
*வலைதளங்கள் மனிதர்களின் முன்னேற்றத்துக்கும் மனித துயரத்துக்கும் ஒரே நேரத்தில் பொறுப்பான இரு முனை வாளாக படம் பிடிக்கப்படுகின்றன.
*“நாம் மனிதர்கள் உண்மையைத் தேடும் உயிர்களா, இல்லையா அதிகாரம், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றைக் காப்பாற்ற எந்த கதையையும் நம்பத் தயங்காதவர்களா?”
*உன்னால்.கட்டுப்படுத்த முடியாத சக்திகளை ஒருபோதும் வரவழைக்காதே
தகவலை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?” என்ற கேள்வியை இன்று வாழும் ஒவ்வொரு மனிதரின் முன்பும் வைக்கும் சிந்தனைத் தூண்டும் நூலாக திகழ்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
120
#Reading_Marathon2025
#25RM055
Book No:120/150+
Pages:-216
எரியும் சமவெளி
-யுவான் ரூல்ஃபோ
தமிழில் இல.சுபத்ரா
மெக்ஸிகோ இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர் யுவான் ரூல்ஃபோ.கிராமப் புற மாந்தர்களும், அந்த நில அமைப்பும் தான் இவரின் எழுத்துக்களில் வலிமையாக கூறப்பட்டுள்ளது.
மெக்ஸிகோபுரட்சி மற்றும் கிறிஸ்டேரோ போர்களுக்கு பின் உள்ள நெருக்கடிகள் இவரின் படைப்புகளில் காண நேரிடுகிறது.17 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன
கதைகள் வெறும் சம்பவங்களை சொல்வது மட்டுமல்ல உணர்வுகளை கடத்துவதும் தான். உணர்வுகளை கடத்துவதற்கு சொற்கள்மிக அத்தியாவசிய தேவையாகின்றன.அந்த மொழியின் வழியே அவர் கை காட்டும் நோக்கில் வாசிப்பின் வழியே நம் மனம் பயணிக்கிறது." கிராமம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. காற்றுதான் அதனை அருகில் உணரச் செய்கிறது" எனும் வரி கிராமத்தை நோக்கிய பயணத்தில் நம்மையும் இழுத்துச் செல்கிறது.தரிசு நிலத்தை வழங்கிய கிராமத்தில் வெப்பம் மிகுந்த சூழலை நம்முள்ளும் அந்த பயணம் கடத்துகிறது.நிலம் தான் மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் வெறுமையில் உழல்வதையும் சுட்டிக் காட்டுகிறது.
கொமாத்ரே மலை கிராமத்தில் எல்லா அதிகாரத்தையும் கைப்பற்றிய டோரிகோ சகோதர்கள் பற்றிய ஒரு ஆணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.இவர்கள் மீது கொண்ட பயம் காரணமாக மக்களெல்லாம் வெளியேறுகிறார்கள். துண்டு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிதான் கதைசொல்லி.டாரிகோ சகோதரனில் ஓரிலானை கொலை செய்யும் போது.." அவனது இதயம் இருக்கும் எனநான் கருதிய இடத்தில் குத்த முடிவு செய்து குத்திய நிகழ்வை விளக்குகிறார்.
அத்தை ஜெஸிந்தா இறந்த சோகத்திலிருக்கும் சிறுமிக்கு வெள்ளத்தின் தான் ஆசையாய் வளர்த்த பசு மாடு அடித்துச் செல்லப்பட்டது இன்னும் வேதனையைத் தருகிறது.இயற்கையின் கசப்பான அனுபவம் எவ்விதமான உணர்ச்சிக்கு ஆளாகிறாள் என்பதை சொல்கிறது.ஒரு குடும்பத்தையே கொன்றுவிட்டு தப்பிச்செல்லும் ஒரு மனிதனின் மன உணர்வுகள் தான் கதை.பழிவாங்கல்,பயம், குற்ற உணர்வு வாட்டிவதைப்பதை அழகாய் சொல்லியிருப்பார் அந்த மனிதன் கதையில்.
தவளைகள் வெளியே வருவதற்காகக் காத்திருந்தபடி நான் சாக்கடையின் அருகே அமர்ந்திருக்கிறேன் என துவங்கும் மகாரியோ கதை மனநிலை குன்றிய சிறுவனின் பார்வையில் தன் தாயையும் தன் மீது அன்பு செலுத்தும் ஃபெலிபா எனும் தாயையும் பற்றி சொல்லும் போது தன்னுள் ஏற்படும் உள்ளார்ந்த உரையாடல் தான் கதை. பத்திகளின்றி நீள்வாக்கில் ஒரே மூச்சில் படித்து விடும்படி உள்ளது
அசட்டுத்தனமாக ஒரு மனிதன் கொலைக்குத் தள்ளப்பட்டான் என்று சொல்லப்படும் எளிய சம்பவத்தில், சமூகம் ஏழை வேலைக்காரரை எவ்வளவு எளிதில் பலியாடாக்குகிறது என்பதைப் பேசும் கதை ஒன்று நெகிழ்ச்சியானது
எரியும் சமவெளி ஒரு நீள்கதை. பள்ளத்தாக்கின் புரட்சிக்கும்பல் பெட்ரோ ஜிமோராவுடன் துவங்குகிறது.அக்கும்பலில் உள்ள பிஷோன் எனும் இளைஞனின் பார்வையில் கதைநகர்கிறது. ஆயுதமேந்திய புரட்சி ஏற்படும்போது எளிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகளும், வலிகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலமும் வறுமையும் இக்கதைகளின் மையச்சரடாக சொல்லப்பட்டுள்ளது. கதை மாந்தர்கள் அனைவருமே எளிய கிராமத்து மக்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கதையை மெதுவாக உள்வாங்க வைக்கின்றன.இலத்தின் அமெரிக்க மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள முடிகிறது.மொழிபெயர்ப்பு கடினமின்றி எளிய மொழியில் அதே சமயம் அடத்தியுடன் உள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 28 December 2025
119
வாழ்க்கைக்கு ஹைக்கூ 12:
"அழகாக மாறி;
பின்னர் உதிர்ந்து; கீழே விழும் மேப்பிள் இலைகளைக் கண்டு நான் பொறாமை கொள்கிறேன்."
- ககாமி ஷிகோ (Kagami Shiko)
மேப்பிள் மரத்து இலைகள் கோடைக்காலத்தில் பச்சையாக இருக்கும். ஆனால் இலையுதிர் காலத்தில் (Autumn), அவை உதிர்வதற்குத் தயாராகும் போது, மிக அழகான சிவப்பு மற்றும் தங்க நிறத்திற்கு மாறுகின்றன. தங்கள் வாழ்வின் முடிவில், அவை வாடி வதங்கிப் போகாமல், மிகச்சிறந்த அழகை வெளிப்படுத்திவிட்டு, மரத்தை விட்டு மெதுவாக, அமைதியாகக் கீழே விழுகின்றன. கவிஞர் அந்த "அழகான விடைபெறுதலை" இந்தக் கவிதையில் கண்டு வியக்கிறார்.
பொதுவாக மனிதர்களாகிய நாம் வயதாவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்; மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால் இந்த ஹைக்கூ முதுமை ஒரு அழகு என்கிறது.
வயதாவதை அழகின் இழப்பாகப் பார்க்காமல், அனுபவமும் ஞானமும் நிறைந்த ஒரு மனங்கனிந்த அழகாக (Inner Beauty) பார்க்க வேண்டும்.
இலைகள் எப்படி கிளைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்காமல், நேரம் வந்ததும் அழகாக உதிர்ந்து விடுகின்றனவோ, நாமும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பற்றுகளைத் துறந்து, அமைதியாகவும் பெருமையுடனும் விடைபெறக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் அன்பாலும் அனுபவத்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை அழகாக்கிவிட்டு, வாழ்க்கைக் குறித்து எந்த கவலையோ, புகாரோ இல்லாமல் மகிழ்வாக, நிறைவாக, பற்றுகளை விட்டு விலகி மேப்பிள் இலைகளைப் போல, வாழ்விலிருந்து உதிர்தல் உன்னதம்.
ஜா-12
வாழ்க்கைக்கு ஹைக்கூ 12:
"அழகாக மாறி;
பின்னர் உதிர்ந்து; கீழே விழும் மேப்பிள் இலைகளைக் கண்டு நான் பொறாமை கொள்கிறேன்."
- ககாமி ஷிகோ (Kagami Shiko)
மேப்பிள் மரத்து இலைகள் கோடைக்காலத்தில் பச்சையாக இருக்கும். ஆனால் இலையுதிர் காலத்தில் (Autumn), அவை உதிர்வதற்குத் தயாராகும் போது, மிக அழகான சிவப்பு மற்றும் தங்க நிறத்திற்கு மாறுகின்றன. தங்கள் வாழ்வின் முடிவில், அவை வாடி வதங்கிப் போகாமல், மிகச்சிறந்த அழகை வெளிப்படுத்திவிட்டு, மரத்தை விட்டு மெதுவாக, அமைதியாகக் கீழே விழுகின்றன. கவிஞர் அந்த "அழகான விடைபெறுதலை" இந்தக் கவிதையில் கண்டு வியக்கிறார்.
பொதுவாக மனிதர்களாகிய நாம் வயதாவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்; மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால் இந்த ஹைக்கூ முதுமை ஒரு அழகு என்கிறது.
வயதாவதை அழகின் இழப்பாகப் பார்க்காமல், அனுபவமும் ஞானமும் நிறைந்த ஒரு மனங்கனிந்த அழகாக (Inner Beauty) பார்க்க வேண்டும்.
இலைகள் எப்படி கிளைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்காமல், நேரம் வந்ததும் அழகாக உதிர்ந்து விடுகின்றனவோ, நாமும் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பற்றுகளைத் துறந்து, அமைதியாகவும் பெருமையுடனும் விடைபெறக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் அன்பாலும் அனுபவத்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை அழகாக்கிவிட்டு, வாழ்க்கைக் குறித்து எந்த கவலையோ, புகாரோ இல்லாமல் மகிழ்வாக, நிறைவாக, பற்றுகளை விட்டு விலகி மேப்பிள் இலைகளைப் போல, வாழ்விலிருந்து உதிர்தல் உன்னதம்.
Saturday, 27 December 2025
erode kathir
நம்முடன் வாழ்கின்ற உறவுகள், நட்புகளோடு இணைந்தே இந்தப் பயணத்தை நாம் மேற்கொண்டிருந்தாலும், இந்த தொழில்நுட்ப யுகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற ஒருவித வேகத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.
அந்த வேகம் என்பது, உதாரணத்திற்கு ‘அறிந்து கொள்வது, அறிந்து கொள்ளாமல் இருப்பது மற்றும் ஆசைப்படுவது, ஆசைப்படாமல் இருப்பது’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது.
இணைந்தே பயணிக்கிறோம் எனக் காட்டிக் கொண்டாலும், சொல்லிக் கொண்டாலும், அவரவர் வேகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில்தான் நிற்கின்றோம்.
அது சிலருக்கு கர்வத்தையும், சிலருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தந்துவிடுகின்றது. மிகப் பெரும்பான்மையான சூழல்களில், அந்த வேகத்தின் அடிப்படையிலேயே மற்றவர்களோடு பெரிதும் முரண்படுகின்றோம்.
நாம் மிகச் சாதாரணமாகச் சொல்லும் ஒன்று அவர்களுக்கு வேறு மாதிரியும், அவர்கள் மிகச் சாதாரணமாகச் சொல்லும் ஒன்று நமக்கு வேறு மாதிரியும் பெரும்பாலான நேரங்களில் உணரப்படுவது இந்த வேக மற்றும் இட மாறுபாட்டால்தான்.
வெவ்வேறு இடத்தில், மாறுபட்ட வேகத்தில் இருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை, 'நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு புரிய வைக்கவே முடியாது!’ எனும் புலம்பல் மட்டுமே மிகுந்திருக்கும்.
அதன் விளைவு... நாட்கள் நரகமாகும்!
நாம் இருக்கும் நிலையில் இருப்பதால் மட்டுமே நிம்மதி வந்துவிடாது. மற்றவர்கள் இருக்கும் நிலையை புரிந்து கொள்வதும், ஏற்றுக்கொள்வதுமே நிம்மதியைத் தரும்.
- ஈரோடு கதிர்
Friday, 26 December 2025
ஜா-11
வாழ்க்கைக்கு ஹைக்கூ 11:
"மெல்லிய பனியோடு
அடியெடுத்து வரும்
மூவாயிரம் உலகங்கள்,
அந்த மூவாயிரம் உலகங்களிலும்
பெய்து கொண்டிருக்கும்
மெல்லிய பனி."
- ரியோகன் டைகு
இந்தக் கவிதை "எல்லாமும் ஒன்று" (Oneness) அல்லது "பிரபஞ்சத் தொடர்பு" (Interconnectedness) என்ற தத்துவத்தை விளக்குகிறது.
இதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் ஒப்பிடப்படுகின்றன:
* மெல்லிய பனி (Light Snow): இது மிகச்சிறிய, அமைதியான, சாதாரணமான ஒரு விஷயம்.
* மூவாயிரம் உலகங்கள் (Three Thousand Worlds): இது புத்த மதத்தில் முழு பிரபஞ்சத்தையும், அண்டசராசரத்தையும் குறிக்கும் ஒரு சொல். இது மிகப்பெரியது.
நமக்கு, ஒரு சிறிய பனித்துளி கீழே விழும் நிகழ்வு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அந்த ஒரு பனித்துளி விழுவதற்கு, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் (காற்று, ஈர்ப்பு விசை, காலம், இயற்கை) ஒத்துழைக்க வேண்டும். அந்தப் பனித்துளிக்குள் முழு பிரபஞ்சத்தின் இயக்கமும் அடங்கியுள்ளது.
உதாரணமாக கடலில் ஒரு சிறிய அலை கரைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த "அலை" என்பது கடலை விட்டுத் தனியாக இல்லை. முழு கடலின் விசையும், இயக்கமும் சேர்ந்தது தான் அந்த ஒரு சிறிய அலை.
கடல் இல்லாமல் அலை இல்லை; அலை அசைவது என்பது கடலே அசைவது போன்றது.
அதே போல, நாம் பனியைப் பார்க்கும்போது, வெறும் பனித்துளியை மட்டும் பார்க்கக் கூடாது. அந்த அமைதியான பனிப்பொழிவில், முழு பிரபஞ்சமும் (மூவாயிரம் உலகங்களும்) நம்முன் இயங்குவதாக உணரவேண்டும்.
நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் (ஒரு பூ மலர்வது, இலை உதிர்வது, மழை பெய்வது) இறைமையையும், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் காண்பதே தியானம்.
இந்தக் கவிதையிலிருந்து நாம் வாழ்க்கைக்குப் பெறக்கூடிய செய்திகள் மிகவும் ஆழமானவை.
பெரும்பாலும் நாம், "நான் செய்யும் இந்தச் சிறிய உதவி அல்லது சிறிய மாற்றம் உலகத்தில் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது?" என்று நினைக்கிறோம். இந்தக் கவிதையில் வரும் 'மெல்லிய பனி' போல, நமது செயல் சிறியதாக இருக்கலாம். ஆனால் அது 'மூவாயிரம் உலகங்களை' அசைக்கும் சக்தி கொண்டது.
எடுத்துக்காட்டாக நாம் ஒருவருக்குச் சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தையோ, செய்யும் சிறிய உதவியோ, அது அந்த நபரின் உலகத்தையே மாற்றக்கூடும். சிறியது என்று எதையும் ஒதுக்கிவிட வேண்டியதில்லை.
நமது ஒவ்வொரு "சிறிய" அசைவும், இந்த "பெரிய" பிரபஞ்சத்தின் ஒரு முக்கியமான அங்கம். நாம் அற்பமானவர் அல்ல, இந்தப் பிரம்மாண்டத்தின் ஒரு துளி என்றுணர்தலே "ஞானம்".
Thursday, 25 December 2025
ஜா-10
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 09
"நீ காண்பதெல்லாம் மலரைத் தவிர வேறில்லை;
நீ நினைப்பதெல்லாம் நிலவைத் தவிர வேறில்லை."
- மட்சுவோ பாஷோ (Matsuo Bashō)
இந்த வரிகளில் பாஷோ, "பூ" (Flower) மற்றும் "நிலவு" (Moon) ஆகிய இரண்டு குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்.
"காண்பதெல்லாம் மலர்":
பொதுவாக நாம் அழகான பொருட்களை மட்டுமே ரசிப்போம், குப்பையையோ அல்லது காய்ந்த சருகையோ ரசிக்க மாட்டோம். ஆனால் பாஷோ, இயற்கையோடு முழுமையாக ஒன்றிவிட்ட ஒருவனுக்கு, இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் (அது ஒரு கல்லாக இருந்தாலும் சரி, முட்செடியாக இருந்தாலும் சரி) ஒரு மலரைப் போலவே அழகாகத் தெரியும். அவனது பார்வையில் உயர்வு தாழ்வு இருக்காது என்கிறார்.
"நினைப்பதெல்லாம் நிலவு":
நிலவு என்பது ஜப்பானிய ஜென் (Zen) தத்துவத்தில் "ஞானம்" அல்லது "உண்மையான ஒளி" ஆகியவற்றின் குறியீடு.
நம் மனதில் எழும் எண்ணங்கள் தூய்மையானதாக, இயற்கையோடு இயைந்ததாக இருந்தால், அந்த ஒவ்வொரு எண்ணமும் நிலவைப் போலப் பிரகாசமானதே.
இந்த வரிகள் "நான்" என்னும் அகந்தை (Ego) அழிந்து இயற்கையின் அங்கமாக நாம் இருக்கும் போது, பார்க்கும் அனைத்தும் கலையாகவும் (மலர்), நாம் நினைக்கும் அனைத்தும் ஞானமாகவும் (நிலவு) மாறும். அது, ஒரு நிறைவான, தெளிவான வாழ்வை நமக்களிக்கும்.
Tuesday, 23 December 2025
ஜா-9
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 09
"நீ காண்பதெல்லாம் மலரைத் தவிர வேறில்லை;
நீ நினைப்பதெல்லாம் நிலவைத் தவிர வேறில்லை."
- மட்சுவோ பாஷோ (Matsuo Bashō)
இந்த வரிகளில் பாஷோ, "பூ" (Flower) மற்றும் "நிலவு" (Moon) ஆகிய இரண்டு குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்.
"காண்பதெல்லாம் மலர்":
பொதுவாக நாம் அழகான பொருட்களை மட்டுமே ரசிப்போம், குப்பையையோ அல்லது காய்ந்த சருகையோ ரசிக்க மாட்டோம். ஆனால் பாஷோ, இயற்கையோடு முழுமையாக ஒன்றிவிட்ட ஒருவனுக்கு, இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் (அது ஒரு கல்லாக இருந்தாலும் சரி, முட்செடியாக இருந்தாலும் சரி) ஒரு மலரைப் போலவே அழகாகத் தெரியும். அவனது பார்வையில் உயர்வு தாழ்வு இருக்காது என்கிறார்.
"நினைப்பதெல்லாம் நிலவு":
நிலவு என்பது ஜப்பானிய ஜென் (Zen) தத்துவத்தில் "ஞானம்" அல்லது "உண்மையான ஒளி" ஆகியவற்றின் குறியீடு.
நம் மனதில் எழும் எண்ணங்கள் தூய்மையானதாக, இயற்கையோடு இயைந்ததாக இருந்தால், அந்த ஒவ்வொரு எண்ணமும் நிலவைப் போலப் பிரகாசமானதே.
இந்த வரிகள் "நான்" என்னும் அகந்தை (Ego) அழிந்து இயற்கையின் அங்கமாக நாம் இருக்கும் போது, பார்க்கும் அனைத்தும் கலையாகவும் (மலர்), நாம் நினைக்கும் அனைத்தும் ஞானமாகவும் (நிலவு) மாறும். அது, ஒரு நிறைவான, தெளிவான வாழ்வை நமக்களிக்கும்.
Sunday, 21 December 2025
ஜா-7
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 07
"இவ்வுலகம்
தேய்ந்து மறையும்
மலை எதிரொலி போல,
வெறுமையானது,
நிலையற்றது."
- ரியோகன்
இந்தக் கவிதை "நிலையாமை" (Impermanence) என்ற பௌத்த தத்துவத்தை மையமாகக் கொண்டது.
ஒரு மலையில் நாம் எழுப்பும் சத்தம் எதிரொலியாகத் திரும்பக் கேட்கும். ஆனால் அந்த எதிரொலி உண்மையானது அல்ல; அது மூல சத்தத்தின் ஒரு பிம்பம் மட்டுமே. மேலும், அந்த எதிரொலி நிரந்தரமானதும் அல்ல; அது சிறிது நேரத்தில் காற்றில் கரைந்து மறைந்துவிடும். ரியோகன் இந்த உலகத்தை அத்தகைய ஒரு 'எதிரொலிக்கு' ஒப்பிடுகிறார்.
நமது வெற்றிகள், தோல்விகள், சந்தோஷம், துக்கம் அனைத்துமே அந்த எதிரொலியைப் போலத் தோன்றி, சிறிது காலம் இருந்து, பின் மறைந்துவிடுபவை.
ஆகவே, நடப்பவற்றை ஒரு சாட்சியாகப் பார்க்கனும். எதிரொலியை ரசிப்பது போல வாழ்க்கையை ரசிக்கலாம், ஆனால் அதைத் துரத்திப் பிடிக்க முயலக்கூடாது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
"இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையை வேண்டும். பெரிய தோல்விகள் வரும்போது, "இது ஒரு எதிரொலி, இதுவும் மறைந்துவிடும்" என்று நினைப்பது மன உறுதியைத் தரும். அதே போல பெரிய வெற்றி கிடைக்கும் போதும் ஓவரா ஆடக்கூடாது.
ஈகோ: நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கைவிட்டு, எளிமையாக வாழ்வது நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
"எதையும் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கவலைப்பட வேண்டாம்; எல்லாம் மாறும் தன்மை கொண்டது; அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்" என்பதே இந்த ஹைக்கூவின் சாராம்சம்.
118
#Reading_Marathon2025
#25RM055
Book No:118/150+
Pages:-284
-கு.ப.ரா
-கரிச்சான் குஞ்சு
கு.ப.ராவை முதன் முதலில் வாசித்தது பள்ளியில் படிக்கும் போது தான் அதில் விடியுமா என்ற கதை சிறுகதை பாடநூலில் வந்தது அப்போது அந்த கதை ஆழமான ஒரு உள்ளுணர்வை நமக்கு ஏற்படுத்தி இருக்கும் வாசிப்பு பழக்கம் ஆரம்பமான நாள் முதல் அவரின் சிறிது வெளிச்சம் கனகாம்பரம் போன்ற கதைகள் பிறை எழுத்தாளர்கள் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வாசித்தேன் மேலும் குபாராவின் கட்டுரைகளும் வாசித்த பிறகு இந்த புத்தகம் எழுச்சியாக கிடைத்தது 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் என்பதை படிக்கும் போது ஆச்சரியமாய் இருந்தது. மேலும் மேலும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி பின் ரெவென்யு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வ பெற்று
சிறிது காலத்தில் கண் பார்வை குறைந்து விட்டதால் இவருடைய வாழ்க்கை திசை மாறியது. எழுத்தை நம்பி பிழைக்கலாம் என்று சென்னை வந்தவர்.. பல்வேறு சிற்றிதழ்களில் பணியாற்றிக் கொண்டு புத்தக விற்பனையையும் மேற்கொண்டுள்ளார்.
நான் பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் கும்பகோணத்து இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவருக்கு பல்வேறு காலகட்டங்களில் உதவியாக பிச்சமூர்த்தி இருந்திருக்கிறார். அவருடைய கதைகளின் எளிமை எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவது. வர்ணனைகளோ புதிரோ இல்லாமல் அவருடைய எழுத்து அனைவராலும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். தன் வாழ்வில் கண்ட உண்மைகளை எதார்த்தத்தை மீறாத அளவில் பதிவு செய்து இருப்பார். உதாரணத்திற்கு விடியுமா என்ற கதை அவருடைய சகோதரியின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண் பெண் உறவுகளைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் தன்னுடைய எழுத்தில் உண்மைக்கு நெருக்கமாகவும் எழுதி இருப்பார்.
ஆணை கண்டு பெண் அஞ்சுவதும் ,பெண்ணை கண்டு அவன் வெறிப்பதும் உற்றுப் பார்ப்பதும் இருபாலரிடமும் சகஜம் .அந்த மனோ பாவத்தை 50,60 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய எழுத்தில் பதிவு செய்திருப்பார் கனகாம்பரம் கதையில்.
வாழ்வின் மிகச் சிறிய சம்பவம் அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்க்கட்சியை தாக்காமல், உலக இயல்பு மாறாமல் அவருடைய கதைகளில் பெண் கதாபாத்திரங்களில் மூலம் வலியை வெளிப்படுத்தி இருப்பார். நூருண்ணிசா, பண்ணைச் செங்கான், விடியுமா போன்ற கதைகளின் நுட்பத்தை சிலாகித்திருப்பார்.
தோழியின் அழகை மனைவியிடம் பாராட்டும் நடராஜனின் மனதை சுக்கல்சுக்கலாக கிழுத்து எறிகிறாள் பெண்மனம் கதையில்.
ஒரே மாதிரியான கதைகளை எழுதினார் என விமர்சித்த க. நா.சு வுக்கு பதில் அளித்துள்ளார் ஆசிரியர்.அதே போல் நாவலில் கு.ப.ராவிம் பங்களிப்பை பற்றி சொல்லும்போது இருவங்க நாவலை மொழிபெயர்த்துள்ளார். ஒன்று கையெழுத்திப்பிரதியுடன் நின்றுவிட்டது. மற்றது வேரோட்டம் என்று பிற்காலத்தில் அவர் எழுதியதை தொகுத்து வெளியிடுள்ளனர். மனோ தத்துவ தளத்தில் இருந்து இந்நாவலை அணுகியுள்ளார்.
மேலும் அகலிகை நிகும்பலை உள்ளிட்ட எட்டு நாடகங்கள் எழுதி உள்ளார்.அது தொகுப்பாகவும் வந்துள்ளது.சிறிது வெளிச்சம் எனும் தலைப்பில்.கவிதையும் எழுதியுள்ளார்.
வேதமும் வடமொழியும் பயின்றவர்.1936ல் தமிழ் வித்துவான் படித்து ஆசிரியராகவும் பணியாற்றினார்.கிராம ஊழியன் இதழில் பங்களிப்பு செய்துள்ளார்.
இறுதியாக இந்நூல் ஆசிரியரின் பெயர்க்காரணம் இன்றுதான் தெரிந்தது.கு.ப.ரா எழுதியவற்றில் பேசியவற்றில் மிக்க ஈடுபாடுடையவர்.. அவற்றை அவர் எழுதும்போது கொண்ட புனைபெயர் "கரிச்சான்" அது அவர் பிறந்த பரத்வாஜ கோத்திரத்தின் தமிழாக்கம். அது ஒரு பறவைப் பெயர். கு. ப. ரா. இறந்தபோது 'கலாமோகினி'யில் அவரைப்பற்றிய துயரக் குறிப்பு எழுதுகையில் "கரிச்சான் குஞ்சு" என்ற புனைபெயரைப் பூண்டு அதே நிலைத்து விட்டதாக பதிவு செய்துள்ளார்.
கும்பகோணம் என்றாலே இவர்கள் அனைவரையும் நினைக்கு வைக்கும் அளவுக்கு என்றும் ஆழமாய் பதிந்துவிட்டது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Thursday, 18 December 2025
ஜா-5
வாழ்க்கைக்கு ஹைக்கூ 05
"நான் ஒன்றுமே இல்லை;
சிவந்து மறையும் இலையுதிர்காலக் கதிரவன்
என் பெயரைப் பறித்துச் செல்கிறது."
- ரிச்சர்ட் ரைட் (Richard Wright)
இந்தக் கவிதை இயற்கையோடு மனித மனம் இணையும் ஒரு உன்னத தருணத்தைப் பேசுகிறது.
பொதுவாக நம் வாழ்வு என்பது நமது பெயர், பதவி, அந்தஸ்து மற்றும் "நான்" என்கிற அகங்காரத்தைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கவிதை வாழ்வின் உண்மையான பொருள் 'நான்' அற்ற நிலையில் (Selflessness) உள்ளது என்று கூறுகிறது.
மாலை நேரத்தில் மறையும் அந்தச் சூரியனின் பிரம்மாண்ட அழகைக் காணும்போது, கவிஞர் தன்னை மறக்கிறார். "நான் ரிச்சர்ட் ரைட், நான் ஒரு கவிஞன், எனக்கு இவ்வளவு கவலைகள் உள்ளன" என்ற சுய அடையாளங்கள் அனைத்தும் அந்த அழகின் முன் கரைந்துவிடுகின்றன.
இந்தக் கவிதை மூலம், நமது மன அமைதியைக் குலைப்பது, பெரும்பாலும் நமது "பெயர்" மற்றும் அதனோடு ஒட்டியுள்ள அடையாளங்களும் தான். அந்தப் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் வாழ்நாள் முழுவதும் போராடுகிறோம்.
"அந்தச் சிவந்த சூரியன், பெயரை எடுத்துச் செல்கிறது" என்ற வரியில், இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் நமது உலக அடையாளங்கள் நீங்கிய ஒரு வெறுமை நிலை (Emptiness/Void) ஏற்படுவதைக் குறிக்கிறது.
எப்போது ஒருவன் "நான் யாரும் இல்லை" (I am nobody) என்ற நிலையை அடைகிறானோ, அப்போது அவனுக்குள் இருக்கும் பதற்றங்கள், பொறுப்புகள் மற்றும் கவலைகள் மறைந்து, ஆழமானதொரு அமைதி குடிகொள்கிறது. அந்த அந்திப் பொழுதில் வெறும் சாட்சியாக (Witness) மட்டுமே நாம் இருப்போம்.
ஒரு குடம் தண்ணீர் கடலில் கலக்கும்போது, அது தனது வடிவத்தை இழக்கலாம், ஆனால் அது கடலாகவே மாறிவிடுகிறது. அதுபோல, நமது சிறிய அடையாளத்தை (பெயரை) இழக்கும்போது, அந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றாகக் கலக்கிறோம்.
"தன்னை இழத்தலே தன்னை அடைதல்" (Losing oneself is finding oneself) என்ற ஆழமான உண்மையின் உருவகமாக இந்த ஹைக்கூ அமைந்திருக்கிறது.
Wednesday, 17 December 2025
ஜா-4
வாழ்க்கைக்கு ஹைக்கூ 04
“அலைகளின் ஓசை
சிலநேரம் தொலைவில், சிலநேரம் அருகில்;
என் வாழ்வில் இன்னும் எவ்வளவு மீதமுள்ளது?”
- சந்தோகா தனேடா
கடலோரத்தில் அமர்ந்து அலைகளின் ஓசையைக் கவனிக்கும் ஒருவருக்கு அலைகள் கரையை நோக்கி வரும்போது சத்தம் பலமாகவும் (அருகில்), பின்வாங்கிச் செல்லும்போது சத்தம் குறைவாகவும் (தொலைவில்) கேட்கிறது. இந்த இயற்கையான மாற்றமானது வாழ்க்கையின் ஓட்டத்தையும், அதன் நிலையற்ற தன்மையையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறது.
கடல் அலைகளைப் போலவே நம் வாழ்வின் இன்பங்களும் துன்பங்களும் வந்து போகும். எதுவும் நிரந்தரமல்ல. அலைகள் 'அருகில்' வரும்போது மகிழ்ச்சியாகவும், 'தொலைவில்' செல்லும்போது தனிமையாகவும் உணரத் தேவையில்லை; இது இயற்கையின் சுழற்சி என்று புரிந்துகொண்டால் போதும். "இன்னும் எவ்வளவு மீதமுள்ளது?" என்று கேட்கும்போது, வருங்காலத்தைப் பற்றிய கவலையை விட, கையில் இருக்கும் நேரத்தின் மதிப்பை உணர்த்துகிறார். முடிவைப் பற்றி சிந்திப்பது, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக மாற்றத் தூண்டுகிறது.
மனித வாழ்வு இயற்கையின் ஒரு அங்கமே. அலைகளின் ஓசையில் தனது ஆயுளைத் தேடுவது, வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் முயற்சியானது, பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துளியே மனித வாழ்வு என்பதை அமைதியாக உணர்த்துகிறது.
இந்தக் கவிதை நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை உற்று கவனிக்க தூண்டுகிறது. நாம் தேடும் கேள்விகளுக்கான விடைகளும், வாழ்க்கையின் நிதர்சனமும் அதற்குள் ஒளிந்துள்ளன.
Tuesday, 16 December 2025
ஜா-3
வாழ்க்கைக்கு ஹைக்கூ 03
"ஒரு இலை உதிர்கிறது,
திடீரென மற்றொன்றும்...
காற்றால் களவாடப்படுகிறது."
இயற்கையில் எதுவும் நிரந்தரமல்ல. மரத்தில் இருக்கும் இலைகள் என்றாவது ஒருநாள் உதிர்ந்தே ஆக வேண்டும். இதுவே உலகின் நியதி. இலைகள் எப்போது விழ வேண்டும் என்பதை அவை தீர்மானிப்பதில்லை. "காற்று" (இயற்கை அல்லது விதி) அதைத் தீர்மானிக்கிறது. அது 'திடீரென' நடக்கும் ஒரு நிகழ்வு. இலையுதிர்தல் முடிவல்ல, ஒரு மரத்தின் பருவகால மாற்றத்தின் ஒரு பகுதி. மீண்டும் அந்த மரத்தில் இலை துளிர்க்கும், பூ மலரும், காய்க்கும், கனியும்.
மரமானது இலை உதிர்வதை நினைத்து வருந்துவதில்லை. அது அடுத்த பருவத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது. அதேபோல, நம் வாழ்விலும் உறவுகள், வேலை அல்லது சூழல் மாறக்கூடும். "ஏன் இது எனக்கு நடந்தது?" என்று எதிர்ப்பதை விட்டுவிட்டு, "இது இயற்கையான மாற்றம்" என்று ஏற்றுக்கொள்ளும்போது மனம் அமைதி அடைகிறது.
காற்று இலையை இழுக்கும்போது, இலை மரத்தைப் பிடித்துக்கொண்டு போராடுவதில்லை. அது காற்றோடு செல்கிறது. நம் வாழ்க்கையில் கடந்த கால கசப்புகள், தோல்விகள் அல்லது அதீத ஆசைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருப்பதால்தான் நமக்குத் துன்பம் உண்டாகிறது. அந்த இலையைப் போல 'விட்டுவிட' பழகினால் வாழ்க்கை லேசாகும்.
நாம் அந்த இலை விழும் நொடிக் காட்சியை மட்டுமே ரசிக்கப் பழகவேண்டும். எதிர்காலத்தில் மரம் எல்லா இலைகளும் விழுந்து மொட்டையாகுமே என்றோ, கடந்த காலத்தில் இலைகள் நிறைந்து பசுமையாக இருந்ததே என்றோ கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நொடியில் நடப்பதை கவனிப்பது மட்டுமே நிறைவான மகிழ்ச்சியைத் தரும்.
"திடீரென மற்றொன்று" என்ற வரி, வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதைக் காட்டுகிறது. நாளை என்ன நடக்கும் என்ற பதற்றம் இல்லாமல், வரும் மாற்றங்களை ஒரு சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கும் பக்குவத்தை இது கற்றுக்கொடுக்கிறது.
வாழ்க்கை என்பது மெல்லிய காற்று போல வீசிக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இன்ப துன்பங்கள் அந்த இலைகளைப் போல உதிர்ந்தும், பறந்தும் செல்லும். அந்த ஓட்டத்தோடு இணைந்து பயணிக்கும்போது, வாழ்க்கை இனிதாகிறது.
116
#Reading_Marathon2025
#25RM055
Book No:116/150+
Pages:-86
மரகதச்சிலை
-வாண்டுமாமா
சித்திரக்கதை என்றாலே மெல்லிய திரில் கலந்த சாகசம் போன்றவை படிக்க படிக்க அடுத்து என்ன விறுவிறுப்பை தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இந்த தொடர் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த கதை சித்திரக் கதைகளுக்கு ஏற்ற ஓவியம் சிறப்பாக அமைந்தால் தன் கதையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நாம் அதனை பின்தொடர முடியும்.
மகேந்திரபுரி மன்னர் மகன் ஆதித்தன் தான் கதையின் நாயகன்.மந்திரவாதி நீலகேசியின் கொடுமை தாளாமல் அண்டை நாட்டு மன்னர் மகள் நிர்மலா மன்னரிடம் முறையிடுகிறார். அவளுக்கு உதவவும் மந்திரவாதியின் கொடுமையை அடக்கவும் மகன் ஆதித்தனை கையில் ஒரு பெரிய வாளுடன் அனுப்பி வைக்கிறார் மன்னர். அவனக்கு உதவியாக குள்ளனை அனுப்புகிறார். மூவரும் காட்டில் நுழைவதை தன் மந்திரக் கண்ணாடி வழியாக மந்திரவாதி பார்க்கிறார்.
அதற்கு தகுந்தாற்போல் சூழச்சி செய்கிறார். நிர்மலாவை மந்திரத்தின் மூலம்.உருமாற்றி அவனை வெறுக்க வைக்கிறார். பின் ரூபவதி என்பவள் மந்திரவாதியின் ஆளாக இருந்து அவனை ஏமாற்ற நினைக்கிறாள். ஆனால் குள்ளன் தக்க ஆலோசனை சொல்லி கண்டுபிடிக்கிறான். மந்திரவாதியின் சூழ்ச்சி எதுவும் பலிக்கவில்லை.
நாகநந்தினி, மந்திரவாதியின் ஆள் ஆகியோர் ஆதித்தனை சிறைபிடிக்க முயன்றும் முடியவில்லை. உண்மையான நிர்மலா மீண்டு வருகிறாள். அவளுக்கு துணையாக சிங்கமும் வித்தியாசமான பிராணியும் உதவுகின்றனர்.
இறுதியில் ஆதித்தன் மந்திரவாதியின் மந்திர செயல்களை முறியடித்து நிர்மலாவுக்கு வந்த சோதனைகளை தடுத்தானா அல்லது மந்திரவாதியின் சூழ்ச்சிகளுக்கு இரையானானா என்பது தான் மீதிக்கதை. கதையின் இடையில் நாயகனின் சாகசங்களுக்கு சவால் விடும் வகையில் இடையில் எதிர்வரும் கதாபாத்திரங்களும் இயற்கை பேரிடர்களும் மந்திரவாதியின் மந்திரங்களும் எவ்வாறெல்லாம் தான் ஒரு சிறந்த வீரன் என்பதை கதையின் இறுதி வரை ஆதித்தன் உடன் சேர்ந்து நாமும் நம்மை ஆதித்தனாக உணர்கிறோம்.
இன்றைய கார்ட்டூன் கதைகளை பார்த்த குழந்தைகளுக்கு இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் அப்போது இந்த சித்திரக் கதைகளை படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் அந்தக் கதைகள் நடைபெறும் இடம், அது எந்த வகையான சூழலில் எவ்வாறு எதிர்கொள்கிறார் ..என்பதை பற்றிய ஒரு தன்னம்பிக்கை மிளிரும் வண்ணம் கதைகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கும். இறுதியில் நீதி வெல்லும் என்பதுதான் ஒவ்வொரு கதையின் மையமான கருத்தாக இருப்பதால் சிறுவயதிலிருந்தே கதைகள் படிப்பதன் மூலம் அறம் சார்ந்த செயல்களை செய்ய அன்றே மனதில் குழந்தைகள் விதைத்து விடுவர். அதற்கு இந்த சித்திரக் கதைகள் மிகவும் துணை புரிந்தது எனலாம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Monday, 15 December 2025
ஜா-4
வாழ்க்கைக்கு ஹைக்கூ 02:
“அவர் ஒரு வார்த்தை சொல்கிறார்,
நான் ஒரு வார்த்தை சொல்கிறேன்;
இலையுதிர் காலம் மெதுவாக ஊடுருவுகிறது.”
இந்த ஹைக்கூ, பெரிய மாற்றங்களுக்கு எப்போதும் அதிரடி, சத்தம் அல்லது வலுக்கட்டாயம் தேவையில்லை என்ற அழகான வாழ்க்கைத் தத்துவத்தை பகிர்ந்துகொள்ளும் வலிமையான கவிதை.
இரண்டு பேர் அமைதியாக அவர்களுக்குள் ஒரு வார்த்தையை பகிர்ந்துகொள்ளும் போது,
இயற்கையில் இலையுதிர் காலம் மெதுவாக ஆழமடைவதைப் போல, அந்த இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிதல், மரியாதை, தகவல் தொடர்பில் தெளிவு ஆகியவை மெதுவாக ஆனால் உறுதியாக நிகழ்கிறது.
அமைதியான உரையாடல், மரியாதை, மற்றவரை கவனித்து கேட்கும் மனப்பான்மை இவை எல்லாம் பெரிய சத்தமில்லாமல் உள்ளார்ந்த அமைதியையும், மனிதர்களிடையே ஒற்றுமையையும் வளர்க்கிறது.
எப்படி இயற்கையில் பருவகால மாற்றம் இலையுதிர் காலம் போல, அமைதியாகவும், மென்மையாகவும், ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் மிகத் தீவிரமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல நமக்குள் மாற்றம் எப்போதும் திடீரென்றோ, ஆரவாரமாக பிரகடனப் படுத்திக்கொண்டோ வர வேண்டியதில்லை.
மென்மையே வலிமை; எளிமையே அழகு.
முன்பொரு காலத்தில் வாழ்ந்த கால்களற்ற பறவையின் கதையைக் கேள்விப்பட்டேன். அது எப்போதும் ஓய்வின்றி வான்வெளியில் வட்டமிட்டு பறந்துகொண்டேயிருக்கும். சோர்வடையும்போது மட்டும் காற்றில் மிதந்துகொண்டே அந்தரத்தில் உறங்கிக்கொள்ளும். வாழ்வில் ஒரேயொரு முறைதான் அது நிலத்துக்கு வருகிறது. ஆம்; எப்பொழுது அந்தப் பறவை மரணிக்கிறதோ அப்பொழுது மட்டுமே பூமிக்கு வருகிறது.- Wong Kar Wai - sakthi vel
Sunday, 14 December 2025
ஜா-3
என்சோ (Ensō) - ஜென்னிய வாழ்க்கை
இந்தக் குறியீடு சுய முன்னேற்றம், விழிப்புணர்வு மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றின் மெட்டாஃபராக கருதப்படுகிறது.
சுய மேம்பாடு (Self-Development): முழுமையடையாத, திறந்த நிலையில் வரையப்பட்ட இந்த வட்டம், நமக்கான 'வளர்ச்சியில் இன்னும் வாய்ப்புகள்' (Room for growth) உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த முழுமையற்ற தன்மையை ஒரு குறையாகப் பார்க்காமல், அதனைத் தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும்.
விழிப்புணர்வு நிலை (Mindfulness): என்சோ ஓவியம் ஒரே மூச்சில், ஒரே தீற்றலாக வரையப்படுவது. இதில் வரைந்ததை அழித்தோ அல்லது திருத்தியோ அமைக்க முடியாது. கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது எதிர்கால முடிவைப் பற்றியோ கவலைப்படாமல், நிகழ்காலத்தில் (In the Moment) முழுமையாகக் கரைந்து செயல்படுவதை இது குறிக்கிறது.
அர்த்தமுள்ள வாழ்க்கை (Meaningful Life): வாழ்க்கையின் அழகு அதன் கறைகளிலும், முழுமையற்ற தன்மையிலும் தான் உள்ளது. (ஜப்பானிய மொழியில் இதை 'வாபி-சாபி' என்பர்).
ஆக, நம் குறைகளை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு கணத்தையும் முழு ஈடுபாட்டுடன் வாழ்வதே 'என்சோ' கூறும் வாழ்வியல் செய்தியாகும்.
Saturday, 13 December 2025
உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.-சிவராஜ்
ஜானகிராம்
ஒசோஜி (大掃除)
ஒசோஜி என்பது ஜப்பானிய சமூகத்தில் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் முறை. “முழுமையான சுத்தம்” என்று அர்த்தம். நாம போகி, ஆயுத பூஜைக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்வது போல, புத்தாண்டுக்கு முன்பு ஒசோஜி என்ற பழக்கத்தை வீட்டையும் தாம் வாழும் சுற்றுச்சூழலையும் ஜப்பானியர்கள் சுத்தம் செய்கிறார்கள். இதன் சிறப்பம்சம், இது வெறும் வீட்டை அல்லது இடத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்ல. இந்த செயலை ஒரு தியானம் போல செய்யப்படுகிறது. ஒசோஜி, மனதில் தேங்கி நிற்கும் தேவையற்ற சுமைகள், கவலைகள், பயங்கள் மற்றும் பழைய பிடிப்புகளை சுத்தம் செய்யும் ஒரு நடைமுறையாகக் கருதப்படுகிறது.
வீட்டில் தூசி மெதுவாக சேர்வதைப் போல, மனதிலும் கவலை, கோபம், ஒப்பீடு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்றவை நம்மையறியாமல் சேர்ந்து விடுகின்றன. ஒசோஜியின் போது, நாம் நம்மை உள்ளார்ந்து பார்க்கவும், நமது சுமைகளை உணரவும், அவற்றை சுத்தம் செய்து விடுவிக்கவும் கற்றுத் தருகிறது. உடலை சுத்தம் செய்வது போல், மனதை சுத்தம் செய்வதும் அவசியம்.
பயனில்லாத எண்ணங்களை விட்டுவிடுதல், கடந்த கால குற்றவுணர்வுகளை மன்னித்தல், கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுதல், இன்றைய நிமிடத்தில் வாழ்தல் ஆகியவை சார்ந்த முயற்சிகளை எடுக்கவேண்டும். இந்த நடைமுறையில், மன சுத்தம் என்பது போராட்டமல்ல; அது விடுதலை. வெறுமை என்பது இழப்பு அல்ல; அது புதிய தெளிவுக்கான வாய்ப்பு என மாறுகிறது. அமைதி என்பது எதையாவது சேர்ப்பதில் இல்லை; தேவையற்றதை விட்டு விலகுவதில் உள்ளது என்ற செய்தியை ஒசோஜி நமக்குக் கற்றுத் தருகிறது.
அடுத்த மாத போகிப் பண்டிகையை ஒசோஜி ஆக்குவோம்.
Friday, 12 December 2025
ஜானகிராமன் நாபலூர்
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 01
"எதுவும் செய்யாமல்
அமைதியாக அமர்ந்திருங்கள்...
வசந்த காலம் தானாக வருகிறது,
புல் தானாகவே வளர்கிறது."
ஜப்பானிய ஜென் ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் இந்த ஹைக்கூக் கவிதை நமக்கு ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது:
1. எல்லாம் அதற்கான நேரத்தில் நடக்கும்:
நாம் பல நேரங்களில் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்காக அவசரப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு வேகம் உள்ளது. எப்படி வசந்த காலத்தை நம்மால் நாம் நினைத்த போது இழுத்துக்கொண்டு வர முடியாதோ, அதே போல வாழ்க்கையின் மாற்றங்களையும் நம்மால் நினைத்த நேரத்தில் ஏற்படுத்த முடியாது. உரிய நேரம் வரும்போது நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கும்.
2. அமைதியே வலிமை:
"எதுவும் செய்யாமல் இருப்பது" என்பது சோம்பேறித்தனம் அல்ல. இது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, பதற்றம் இல்லாமல் இருக்கும் நிலை. பல சமயங்களில் நமது பிரச்சனைக்கான தீர்வு, நாம் அதிகமாக முயற்சி செய்வதை விட, அமைதியாக இருந்து சூழலை கவனித்தாலே கிடைக்கக்கூடும்.
3. இயற்கையின் இயக்கத்தில் நம்பிக்கை வைத்தல்:
புல் வளர்வதற்கு நாம் அதைப் பிடித்து மேலே இழுக்க வேண்டியதில்லை அப்படி செய்தால் புல் தனியே பிடுங்கிக் கொண்டு வந்துவிடும். புல் தானாகவே வளர்கிறது. எல்லாவற்றையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. இயற்கையின் அல்லது இறைவனின் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தால் போதுமானது.
ஆக, மனஅமைதி எங்கிருக்கிறதோ அங்கு வளர்ச்சி இயல்பாக நிகழும்.
தும்பி
உலகின் சிறந்த கல்வி எது?
நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ புத்தகங்களை வாசித்து, எவ்வளவோ தேர்வுகளை எழுதி, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, நினைவில் தேக்கி வைத்திருக்கும் அனைத்தையும் எது மறக்கடிக்கிறதோ அதுவே சிறந்த கல்வி என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.
இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா? வள்ளுவர், ஷேக்ஸ்பியர், மார்க்ஸ், சாக்ரடீஸ், கன்ஃபூஷியஸ், கபீர், தாகூர் என்று நான் விரும்பிப் படிக்கும் அனைவரையும் மறக்க வேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் அவர்கள் சொல்லிருப்பவை தவறு என்கிறீர்களா?
இப்படிக் கேட்டால் நம் கையைப் பிடித்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பூந்தொட்டி ஒன்றைக் காட்டுகிறார் ஜேகே. நீங்கள் நிறைய படிப்பவர் போலிருக்கிறது.
இது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஓ, இது கூடவா தெரியாது எனக்கு? இந்த ரோஜாவை மட்டுமல்ல, இன்னும் என்னென்னவோ வகை ரோஜாக்களை எல்லாம் கண்டிருக்கிறேனாக்கும். அயல் நாடுகளில் மட்டுமே பூக்கும் அரிய ரோஜாவைக்கூடப் பார்த்திருக்கிறேன். சட்டென்று ஷேக்ஸ்பியர் நினைவுக்கு வருகிறார்.
அது சரி, நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்கிறார் ஜேகே. இந்த எளிய ரோஜாவைப் பார்த்து ரசிக்கக்கூட உங்கள் கல்வி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த ரோஜா இன்று காலைதான் மலர்ந்திருக்கிறது. முதல் முறையாக இந்த மலர் நம் உலகுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
முதல் முறையாகக் காற்றை எதிர்கொண்டு மெல்ல மெல்ல அசைந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்த ரோஜாவை எப்படி இதற்கு முன்பு கண்டிருக்க முடியும்? எப்படி இதைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரிந்திருக்க முடியும்? எப்படி இதை ஷேக்ஸ்பியரோ வேறு ஒருவரோ கண்டு எழுதியிருக்க முடியும்?
ஒரு மலரைப் பார்க்கும்போது இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம், ஏற்கனெவே படித்திருக்கிறோம், ஏற்கெனவே ரசித்து முடித்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்றால் அதை உங்கள் கல்வியின் குறை என்பேன்.
உங்களுக்கான வழிகாட்டுதலை 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்ஃபூஷியஸால் எப்படித் துல்லியமாக அளித்திருக்க முடியும்? என் மனிதர்கள் மதத்தின் பெயரால் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்னும் கபீரின் கேள்விதான் அவர் பாடலாக மாறியது. என் மனிதர்கள் ஏன் வறுமையில் வாட வேண்டும் என்னும் மார்க்சின் சிந்தனைதான் அவர் எழுத்தாக விரிந்தது.
உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.
உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, ‘இதுவே உயர்வானது‘ என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.
மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.
உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, ‘நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்’ என்று புன்னகை செய்யும்.
முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். ‘உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்’ என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.
முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.
ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி. உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.
நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.
-மாய உலகம், மாயா பஜார்
Thursday, 11 December 2025
மனசுக்குள்.ஒரு ஜிம்
ஒரு துறையில் நிபுணராக பலருக்கும் தடையாக இருக்கும் விஷயங்கள் இரண்டு
1. இயல்பிலேயே எனக்கு அந்தத் திறமை கிடையாது . ( Natural Talent)
2. எனக்கு அதில் ஆர்வம் இல்லை ( Passion)
இரண்டுமே தவறான கருத்துகள்.
பிறவியிலேயே சிலருக்கு கவனிக்கும் திறன் ( ability to focus) குறைவாக இருக்கலாம். ஆனால் இந்த Birth disadvantage ஐ பயிற்சியின் மூலம் ஈடு கட்டிவிடலாம் என்பதுதான் உண்மை. பயிற்சி செய்ய செய்ய மூளை இணைப்புகள் வலுவடைகின்றன என்கின்றன
இரண்டாவதுதான் மிக முக்கியமான காரணம். எனக்கு Passion இல்லை எனப் பல விஷயங்களைச் செய்யாமல் விடுகிறோம். உண்மையில் பிறவித் திறமை போல் பிறவிப் Passion என்றும் எதுவும் கிடையாது. Passion என்பதும் முயற்சி செய்து வளர்த்துக் கொள்ள வேண்டியதே. ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் அதில் உங்களுக்குத் திறமை வர ஆரம்பித்தால் அதில் உங்கள் Passion உம் வளரும்.
ஒரு துறையில் திறமை/ ஆர்வம் வரக் கொஞ்சம் காலம் ஆகும். Critical period.
இதை Valley of disappointment என்கிறார்கள். சில வருடங்கள் ஆகும்.அந்த காலகட்டத்தில் நமக்கே நம்மீது சந்தேகம் வரும். இதில் எனக்குத் திறமை இல்லை இது எனது Passion இல்லை, இது எனக்கானதில்லை என்றெல்லாம் விட்டு விடுவோம்.
ஆனால் அந்த காலகட்டத்தைப் பொறுமையாக கடந்தால் திறமை ஆர்வம் இரண்டும் வரும்.
Dont do anything without passion. But allow time for passion to develop.
Follow your passion - கனவுகளைப் பின் தொடருங்கள் என்பதை விட Foster a good passion - நல்ல கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
- இது Cal Newport என்னும் உளவியலாளரின் புகழ்பெற்ற வாசகம்.
மனசுக்குள் ஒரு ஜிம் நூலிலிருந்து
- டாக்டர் ஜி ராமானுஜம்
Wednesday, 10 December 2025
115
#Reading_Marathon2025
#25RM055
Book No:115/150+
Pages:-199
நாம் நார்மலாகத் தான் இருக்கிறோமா?
-சிவபாலன் இளஙகோவன்
மனநலத்துறையில் பேராசிரியராக பணிபுரியும் சிவபாலன் அவர்களின் எழுத்துக்களை முதன் முதலாக உயிர்மையில் ஒரு ஆன்மீக கட்டுரையில் தன் கருத்துக்கு விளக்கம் அளிப்பதை பற்றி எழுதியிருப்பார். அதனை படித்தது முதல் அவரின் அனைத்து புத்தகங்களையும் தேடித் தேடி வாசித்து விடுவேன். அந்த வகையில் இந்த புத்தகமும் வாசிப்பு அனுபவத்துக்கு நெருக்கமானது. பொதிவாக மனம் குறித்து பல புத்தகங்களும் இருந்தாலும் மருத்துவரகள் எழுதும் போது இன்னும் எளிமையாக புரியும்.
சண்டையோ பதட்டமோ இருக்கும் போது நாம் அனைவரும்.கேட்டு உறுதிப்படுத்துவது நார்மல் ஆகிட்டியா என்பது தான். அப்படி நார்மல் ஆவதற்கு ஏதேனும் வ்ரைமுறை உண்டா.. விரைவில் நார்மலாக ஏதேனும் பரிகாரம் இருக்குமா என நான் எப்போதும் எண்ணுவதுண்டு.அந்த வகையில் 45 கட்டுரைகளில் வேறு வேறு வித நார்மல், மனம்,உறவாடல், உணர்ச்சிகள் பற்றியெல்லாம் அலசியுள்ளார்.
இசை எங்கிருந்து வருதுனு கேட்பது போல் தான் மனம் எங்கிருக்கிறது, மனசே இல்லனு பல வசைகளை கேட்டிருப்போம்.இதில் மனம் குறித்தும்,சொல்லி..ஆராய்ச்சி யின் முடிவில் மனித மூளையின் இன்சுலா என்னும் பகுதிதான் மனம். அதுதான் சுய உணர்வுக்கான காரணம் என்கிறார்.
நார்மல் என்பது மாயை என்பதை விளக்க வரும் கட்ட்டுரையில் shutter island திரைப்படத்தை உதாரணமாக கூறியது சிறப்பு.மன ஆரோக்கியம் என்பது உணர்ச்சிகளை கடந்த நிலை அல்ல. இந்த உணர்ச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்வது என்கிறார்.சுருக்கமாக மன ஆரோக்கியம் என்பது பிரச்சினைகள் கண்டு விலகுவது அல்ல..பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது.
தன்னைப் பற்றி அறிதலில் மற்றவர்கள் பற்றி யூகிப்பதில் உள்ள ஆபத்தை விளக்குகிறார். முரண்பாடுகளை கலைய வேண்டுமென்றால், அதற்கு.முதலில் ந்ம்மை அறிந்து கொள்ள வேண்டும்.மார்க்கெட்டிங் துறையில் பிறர் மனதை கவரச் செய்யும் "இண்டர்பர்சனல் ஸ்கில்ஸ்" பற்றி இதில் சொல்லியுள்ளார்.
மனதின் உணர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் தேவை சார்ந்தும், முடிவு சார்ந்தும் நிகழும்.அப்போது அட்ரினல் சுரக்கிறது. இதுதான் அடுத்து செயல்படத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது.உணர்ச்சிகளை முதலில் உணர்ந்து பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.எமோசனல் இண்டலிஜென்ஸ் அதாவது உணர்ச்சிகளை அறிவுபூர்வமாக கையாளுவது பற்றி தெரிவிக்கிறது.
உண்மையில் ஸ்ட்ரெஸ் என்பது என்ன?
மனஉளைச்சல் என்பது ஒரு போராட்டம். நிஜ அல்லது கற்பனை எதிர்கொள்ள அல்லது அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமது யான ஒரு ஆபத்தை நாம் எதிர்கொள்ளும்போது, அந்த ஆபத்தை ஒட்டுமொத்த சக்தியையும் நாம் திரட்டிக் கொள்வதுதான் ஸ்ட்ரெஸ்
உதாரணத்திற்கு, சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம் திடீரெனெ ஒரு மாடு நம்மை முட்டிவிட வேகமாய் வருகிறது அப்போது நமக்கு எப்படி இருக்கும்? உடல் ரீதியாகவும், ம ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் நமக்குள் நடக்கும்? படபடம் பாய் இருக்கும். வியர்த்துப்போய்விடும். மூச்சு முட்டும். மனம் பதட்டமாய் இருக்கும். நம் கவனம் முழுவதும் அந்த மாட்டின்மீகண் அதில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றியும்தான் இருக்கும். இதுதான் ஸ்ட்ரெஸ்.
நாம் ஒரு ஆபத்தில் இருக்கும்போதோ அல்லது அதை எதிர்நோக்கி இருக்கும்போதோ, நமது மூளை தன்னிச்சையாகச் செயல்பட்டு அட்ரினலின் முதலான ஹார்மோன்களை நமக்குள் சுரக்க வைத்து ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஆற்றலை வைத்துக்கொண்டுதான் நமது உடல் ஆபத்தோடு போராடுகிறது.எல்லா வகையான ஆபத்துகளும் இந்த ஸ்ட்ரெஸை உண்டு பண்ணுமா என்றால், இல்லை. நாம் எதை ஆபத்தாகப் பார்க்கிறோமோ அப்போதுதான் இந்த ஸ்ட்ரெஸ் வருகிறது.
*மனம் ஒரு ஊற்று போல ஏராளமான எண்ணங்களை அது சுரந்து கொண்டே இருக்கும்
*அறிவியலிடம் கேட்பது மிகச் சிக்கலான ஒரு கேள்வியை, ஆனால், எதிர்பார்ப்பது மிகச் சுலபமான பதிலை.. மனம் அத்தனை சுலபமானதல்ல
*சகமனிதர்களிடம் நாம் மேற்கொள்ளும் உள்ளார்ந்த தன்னலமற்ற உறவாடல்தான்.. ஒரு ஆரோக்கியமான மனதிற்கு அடையாளம்
*எண்ணங்களை அழிப்பதற்கு
இன்னும் எந்தஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை
*ஒரு எளிமையான, எதிர்னார்ப்பு இல்லாத உறவாடலில் எப்போதும் ஏமாற்றத்திற்கு இடமில்லை
*ஒரு நல்ல உரையாடல் பல விவாதங்களுக்கு தொடக்க புள்ளி.நமது கருத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது உரையாடலின் நோக்கமல்ல
*ஒவ்வொரு இழப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது.அதுமட்டுமே எல்லா இழப்புகளையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது.
இவ்வாறு மனித மனம் குறித்த பல்வேறு தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரகட்டுரையும் அதிக ஆழ்ம் பொதிந்தவையாக அர்த்தமுடனும் இருக்கின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 8 December 2025
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும் தான்.அதுவும் சலனம் எதுவும் இன்றி . இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது, ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும்,நான் அந்த விரிதலுக்காகவும் ஒடுங்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.-வண்ணதாசன்
Saturday, 6 December 2025
114
#Reading_Marathon2025
#25RM055
Book No:114/150+
Pages:-153
மலரும் அறிவியல்
-ப.செங்குட்டுவன்
அறிவியல் குறித்த செய்திகளைத் தேடிச் செல்லும் போது வியப்பளிக்கும் பல்வேறு உண்மைகளை நாம் அறிய முடிகிறது. அவ்வாறு அறியும் போது..நாம் இத்தனை காலம் உன்மையென நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கையில் ஒரு சிறு கல் விழும்.மூட நம்பிக்கைகளை விரட்டி அடிக்கும். இத்தனை காலம் நாம் நம்பும் விஷயங்களை மீள் உருவாக்கம் நம் மனதில் செய்ய வேண்டியிருக்கும் அவ்வாறு எளிமையாக விளக்கும் வகையில் இந்த நூல் பதினொரு கட்டுரைகள் உள்ளன.
பிரபஞ்சம் குறித்த கருத்துகளைமுன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரை முதலாவதாக உள்ளது. பிரபஞசத்தின் வரலாறு குறித்த தகவல்களை ஐன்ஸ்டீன், நியூட்டனின் விதிகளின் படி விளக்கியுள்ளார்.ஒரு பொருள் மிக அதிகவேகத்தில் பயணம்செய்யும் போது அது செல்லும் திசைவழியே அதன் நீளம் குறைகிறது. நீள் வட்டத்தில் பயணித்தால் முன்முனையிலிருந்து நீளம் குறையும், செங்கோண வாட்டத்தில் பயணித்தால் செங்கோன வாட்டத்திலேயே குறையும் என்றார் ஐன்ஸ்டீன். மேலும் அவரின் ஒளி, வேகம்,நேரம் பற்றிய கோட்பாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்.
சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டின் செய்முறை மூலம் கண்டுபிடிக்கவில்லை; விளக்கவில்லை. இயற்கை இப்படித்தான் இருக்கும் என்ற ஆழ்ந்த சிந்தனை மூலமாகவே கண்டுபிடித்தார். கணக்கியல் மூலம் கண்டுபிடித்தார். அவரின் மூளையே, எண்ணங்களே செய்முறை ஆய்வகங்களாயின - Thought Experments - அவரின் மூளை உயர் அறிவியல் எண்ணங்கள், கருத்துக்கள் மலரும் சோலையாகும்.
"ஒரு முறை சிலர் ஐன்ஸ்டிடம் அவரின் ஆய்வகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டனர். உடனே தன் பவுண்டன் பேனாவை எடுத்து வைத்து இதுதான் என் ஆய்வகம் (There it is) என்றார். வேறொருமுறை எழுதி இனித் தேவையில்லை என்று கசக்கிப் போடும் பேப்பர் கூடையைக் காட்டி waste paper pocket) இதில்தான் என்னுடைய முக்கிய ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன" என்றார்.
அவர் எழுதிய முக்கிய கருத்துகள், கணக்குகள், தீர்வுகள் ஆகியவற்றை குப்பைக் (வேஸ்ட் பேப்பர்) கூடையில்தான் போடுவார்.அவர் எப்போதும் மாறுபட்டு சிந்திப்பார்
ஒளிச்சிதறல் பற்றிய கட்டுரையில் தொடர்ந்தாற் போல் மாறி மாறி கருப்பு வெள்ளைக் கோடுகள் ஏற்படுதலில் நியூட்டன் மற்றும் யங் கோட்பாடுகளை விளக்கியிருப்பார்.
விண்மீன்கள் தனித்தனியாகத் தோன்றுவதில்லை; கூட்டமாக உண்டாகின்றன.
விண்மீன்களுக்கு இடையேயுள்ள விண்வெளி ஹைட்ரஜன் வாயு தூசி (dust) ஆகிய மேகங்களால் (clouds) நிரம்பியுள்ளது. இந்த வாயு மேகங்கள் தங்களுக்குரிய ஒளியை வெளியிடுகின்றன. வானில் இவை பனிமூட்டங்கள் மேகங்கள் (Mist-clouds) போன்று தோற்றமளிப்பதால் இவற்றை நெபுலாக்கள் (Nebulae) என்றழைக்கின்றனர். நெபுலா என்ற இலத்தீன் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது மேகம் என்று பெயர்.
இந்த ஹைட்ரஜன் வாயுவும், தூசியும் தொடக்கக் காலத்தில் உண்டாகிய பழைய விண்மீன்களுக்கு இடையே இருக்கின்றன. இந்த வாயு, தூசி நெபுலாக்கள் ஆகியவற்றிலிருந்து தான் விண்மீன் பிறக்கின்றது. விண்வெளியில் இத்தகைய நெபுலாக்கள் பெருமளவில் இருக்கின்றன. நெபுலாக்கள் என்பவை பெரிய விண்மீன்களிலிருந்து வெளியே தள்ளப்பட்ட - தனியாகித் தள்ளப்பட்ட - வெளிப்பரப்பு களினாலும் நெடுங் காலத்திற்கு முன்னிருந்த பெரிய விண்மீன்களின் அழிவில் எஞ்சிய சிதைவுகளாலும் ஏற்பட்டவையே ஆகும் என்கிறார்
மேலும் ஹீலியம் எவ்வாறு உண்டாகிறது என்பது பற்றியும்,பெருவெடிப்பு, ஸ்டெடி ஸ்டேட் தியரி பற்றுயும் கூறியுள்ளார்.
கோலமிடும்பொழுது புள்ளிகளை வைத்து கோடுகளால் புள்ளிகளை இணைத்து பலவகை உருவங்களை (Shape) அமைக்கின்றனர். கோலங்களில் மான், மயில், வாத்து, மாடு. தேர் போன்றவற்றின் உருவங்களைக் காணலாம்.
அவ்வாறே, விண்வெளியிலுள்ள விண்மீன்களைப் புள்ளிகளாக்கி அவற்றை கோடுகளால் இணைத்து உருவத்தை உண்டாக்கி ஆடு, மாடு. மீன், பெருங்கரடி என்பன போன்றவற்றை உண்டாக்கிப் பெயரிட்டனர் நமது முன்னோர்கள். அவை அனைத்தும் கற்பனை உருவங்களே, கற்பனைப் பெயர்களே.
ஆக. நமது முன்னோர்கள் கற்பனையாக விண்மீன்களைக் கோடுகளால் ஏட்டில் இணைத்து அமைத்த உருவங்களே நமது ராசிகளாகும். கற்பனையில் உருவானவற்றை வைத்துக்கொண்டுதான் நாம் ராசிபலன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கற்பனையாக உருவாக்கப்பட்ட விண்மீன்களின் உருவங்களில் ராசிகளில் நம் வாழ்க்கையில் வலிந்து பிணைந்து விடப்பட்டவை மேஷம்,ரிஷபம் ராசி உள்ளிட்ட பன்னிரண்டு ஆகும்.
மேலும் பிரபஞசத்தில் உள்ள கோள்கள், காற்று மண்டலம்,விண்கல், எரிகல், நட்சத்திரம், கதிர்கள் குறித்த அறிவியல் தகவல்களும் மிக எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 3 December 2025
நாம் ஒன்றை தேர்வுசெய்தாகவேண்டும். ஒரே இருக்கையில்தான் நாம் இருந்தாக வேண்டும். அது நம் பருவுடல் நமக்கு போடும் நிபந்தனை. நாம் இந்த புரோட்டீன் கட்டிடத்திற்குள் சிறையுண்டிருக்கிறோம்.மனிதர்கள் கால்களால், மீன்கள் செதில்களால், பறவைகள் சிறகுகளால் கட்டுண்டிருக்கின்றன!நினைவிருக்கிறதா, சின்னஞ்சிறு வயதில் மேகங்களை பார்த்து எப்படி ஏங்கியிருப்போம், பறப்பதற்கு! மலையுச்சிகளின் மாயத்தனிமையில் நிற்க கண்ணீருடன் மனம் விம்மியிருப்போம். பிறகு நாம் கற்றுக் கொண்டோம், கற்பது கைமண்ணளவு என்று.மனிதனின் இந்த ஆதிச்சிறையின் சுவரில் ஒரு சிறிய ஓட்டை. அதன் வழியாக அவன் கண் வெளியே போக முடியாது, ஆனால் காட்சி வெளியே போகமுடியும். கருத்து வடிவில் அவன்கிளம்பி உலகமெங்கும் உலவ முடியும். விட்டுவிடுதலையாக முடியும். ஆம், அவனால் அப்போது இரண்டல்ல இரண்டாயிரம் இருக்கைகளில் அமர முடியும்!-யதி
Tuesday, 2 December 2025
Subscribe to:
Comments (Atom)