Sunday, 21 December 2025

118


#Reading_Marathon2025
#25RM055

Book No:118/150+
Pages:-284

-கு.ப.ரா
-கரிச்சான் குஞ்சு

கு.ப.ராவை முதன் முதலில் வாசித்தது பள்ளியில் படிக்கும் போது தான் அதில் விடியுமா என்ற கதை சிறுகதை பாடநூலில் வந்தது அப்போது அந்த கதை ஆழமான ஒரு உள்ளுணர்வை நமக்கு ஏற்படுத்தி இருக்கும் வாசிப்பு பழக்கம் ஆரம்பமான நாள் முதல் அவரின் சிறிது வெளிச்சம் கனகாம்பரம் போன்ற கதைகள் பிறை எழுத்தாளர்கள் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வாசித்தேன் மேலும் குபாராவின் கட்டுரைகளும் வாசித்த பிறகு இந்த புத்தகம் எழுச்சியாக கிடைத்தது 42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் என்பதை படிக்கும் போது ஆச்சரியமாய் இருந்தது. மேலும் மேலும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி பின் ரெவென்யு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வ பெற்று

 சிறிது காலத்தில் கண் பார்வை குறைந்து விட்டதால் இவருடைய வாழ்க்கை திசை மாறியது. எழுத்தை நம்பி பிழைக்கலாம் என்று சென்னை வந்தவர்.. பல்வேறு சிற்றிதழ்களில் பணியாற்றிக் கொண்டு புத்தக விற்பனையையும் மேற்கொண்டுள்ளார். 

நான் பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் கும்பகோணத்து இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவருக்கு பல்வேறு காலகட்டங்களில் உதவியாக பிச்சமூர்த்தி இருந்திருக்கிறார். அவருடைய கதைகளின் எளிமை எப்போதும் ஆச்சரியம் ஊட்டுவது. வர்ணனைகளோ புதிரோ இல்லாமல் அவருடைய எழுத்து அனைவராலும் படித்து புரிந்து கொள்ளும் வகையில்  இருக்கும். தன் வாழ்வில் கண்ட உண்மைகளை எதார்த்தத்தை மீறாத அளவில் பதிவு செய்து இருப்பார். உதாரணத்திற்கு விடியுமா என்ற கதை அவருடைய சகோதரியின் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண் பெண் உறவுகளைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் தன்னுடைய எழுத்தில்  உண்மைக்கு நெருக்கமாகவும் எழுதி இருப்பார்.

ஆணை கண்டு பெண் அஞ்சுவதும் ,பெண்ணை கண்டு அவன் வெறிப்பதும் உற்றுப் பார்ப்பதும் இருபாலரிடமும் சகஜம் .அந்த மனோ பாவத்தை 50,60 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய எழுத்தில் பதிவு செய்திருப்பார் கனகாம்பரம் கதையில்.

வாழ்வின்  மிகச் சிறிய சம்பவம் அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்க்கட்சியை தாக்காமல், உலக இயல்பு மாறாமல் அவருடைய கதைகளில் பெண் கதாபாத்திரங்களில் மூலம் வலியை வெளிப்படுத்தி இருப்பார். நூருண்ணிசா, பண்ணைச் செங்கான், விடியுமா போன்ற கதைகளின் நுட்பத்தை சிலாகித்திருப்பார்.

தோழியின் அழகை மனைவியிடம் பாராட்டும் நடராஜனின் மனதை சுக்கல்சுக்கலாக கிழுத்து எறிகிறாள் பெண்மனம் கதையில்.

ஒரே மாதிரியான கதைகளை எழுதினார் என விமர்சித்த க. நா.சு வுக்கு பதில் அளித்துள்ளார் ஆசிரியர்.அதே போல் நாவலில் கு.ப.ராவிம் பங்களிப்பை பற்றி சொல்லும்போது இருவங்க நாவலை மொழிபெயர்த்துள்ளார். ஒன்று கையெழுத்திப்பிரதியுடன் நின்றுவிட்டது. மற்றது வேரோட்டம் என்று பிற்காலத்தில் அவர் எழுதியதை தொகுத்து வெளியிடுள்ளனர். மனோ தத்துவ தளத்தில் இருந்து இந்நாவலை அணுகியுள்ளார்.

மேலும் அகலிகை நிகும்பலை உள்ளிட்ட எட்டு நாடகங்கள் எழுதி உள்ளார்.அது தொகுப்பாகவும் வந்துள்ளது.சிறிது வெளிச்சம் எனும் தலைப்பில்.கவிதையும் எழுதியுள்ளார்.
வேதமும் வடமொழியும் பயின்றவர்.1936ல் தமிழ் வித்துவான் படித்து ஆசிரியராகவும் பணியாற்றினார்.கிராம ஊழியன் இதழில் பங்களிப்பு செய்துள்ளார்.

இறுதியாக இந்நூல் ஆசிரியரின் பெயர்க்காரணம் இன்றுதான் தெரிந்தது.கு.ப.ரா எழுதியவற்றில் பேசியவற்றில் மிக்க ஈடுபாடுடையவர்.. அவற்றை அவர் எழுதும்போது கொண்ட புனைபெயர் "கரிச்சான்" அது அவர் பிறந்த பரத்வாஜ கோத்திரத்தின் தமிழாக்கம். அது ஒரு பறவைப் பெயர். கு. ப. ரா. இறந்தபோது 'கலாமோகினி'யில் அவரைப்பற்றிய துயரக் குறிப்பு எழுதுகையில் "கரிச்சான் குஞ்சு" என்ற புனைபெயரைப் பூண்டு அதே நிலைத்து விட்டதாக பதிவு செய்துள்ளார்.

கும்பகோணம் என்றாலே இவர்கள் அனைவரையும் நினைக்கு வைக்கும் அளவுக்கு என்றும் ஆழமாய் பதிந்துவிட்டது

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment