#மனசுக்கு_ஒரு_தேநீர்_22
உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை.ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறையக் குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும் என்கிறார் ஹென்றி மில்லர்
நீண்டகாலமாக இருக்கும் செவி வழி கதை.ஆனால் வரலாற்று ரீதியாக நிருபிக்கப்படவில்லை. ஆனால்.எப்போது படித்தாலும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.
ஒரு நாள், ஸ்காட்லாந்து கிராமப்புறத்தில் ஒரு ஏழை விவசாயி Fleming என்பவர் சதுப்புநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் புதைகுழியில் மார்பளவு மூழ்கிவிட்டார். இதைக்கண்ட விவசாயி சற்றும் தாமதிக்காமல் கயிறு கட்டிச்சென்று காப்பாற்றினார்.
இதை அறிந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இச்செயலை பாராட்டி பணம் தந்தார். விவசாமி பிளெமிங் வாங்க மறுத்துவிட்டார்.
அப்போது அவர் கூறினார்:
“உங்கள் இளைய மகனுக்கு நல்ல கல்வி கிடைக்கட்டும்; அதற்கான செலவை நான் ஏற்கிறேன் என்று கூறி அவனை படிக்க வைத்தார்.
அந்த விவசாயியின் மகனே பின்னர் உலகப் புகழ்பெற்ற பென்சிலின் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானியான Alexander Fleming ஆவார்.
பல ஆண்டுகள் கழித்து, சதுப்பு நிலத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அச்சிறுவன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பென்சிலினால் காப்பாற்றப்பட்டார்.அவரது பெயர் Winston Churchill.
இதேபோன்று கரு.பழனியப்பன் பகிர்ந்த செய்தி.. எம்.ஜி.ஆரஇ பார்க்க.. மகனை தோளில் வைத்துக் கொண்டு தினசரி ஒருவர் சாலையில் நின்றிருந்தார்.ஒரு முறை அழைத்து விசாரித்ததில் ஐந்து மகனக்கு தங்கள் வாயால் பெயர் வைக்க வேண்டுமென சொன்னாராம். சிரித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் இதுவரை எப்படி அழைத்தீர்கள் என கேட்டதற்கு மலைக்கள்ளன் படம் வந்த போது பிறந்ததால் அப்பெயர் வைத்து அழைக்கிறோம் என்றாராம். இதனைக் கேட்ட எம்.ஜி.ஆர், நல்ல பெயரை வைத்ததோடு.. அச்சிறுவனின் கல்விச் செலவை ஏற்பதாக கூறினார். கட் செய்தால் அமெரிக்காவில் சிகிச்சை பெற வந்த எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டராக மலைக்கள்ளன் வந்து நின்றாராம்.
Kindness returns in unexpected ways.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment