#Reading_Marathon2026
#26RM009
Book No:38/150+
Pages:-653
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுந்தர ராமசாமி
தமிழ் இலக்கியத்தில் குடும்பம், சமூகம், மனித உறவுகள் மற்றும் கால மாற்றங்களை ஆழமான உளவியல் பார்வையுடன் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதில் குழந்தைகளின் உலகம், பெண்களின் அனுபவங்கள், ஆண்களின் அதிகார மனப்பான்மை மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகளின் சிக்கல்கள் மிக இயல்பாக சித்தரிக்கப்படுகின்றன.
இந்த நாவல் ஒரு தனிப்பட்ட கதையை மட்டும் சொல்லுவதில்லை. மாறாக, ஒரு குடும்பத்தையும் அதன் வழியாக ஒரு சமூகத்தையும் வாசகன் முன் நிறுத்துகிறது. வயது, பாலினம், அதிகாரம், அன்பு, பொறுப்பு, ஆசை, ஏமாற்றம் போன்ற மனித வாழ்க்கையின் பல அடுக்குகள் இதில் வெளிப்படுகின்றன.
தாத்தாவின் கடனை அடைக்க கோட்டயம் செல்லும்.அப்பா எஸ்.ஆர் எஸ்க்கு அங்கேயே ஏஜென்சி தொழில் அமைகிறது.எஸ்.ஆர்.எஸ் லட்சுமி தம்பதியினரின் குழந்தைகள் மூத்தவள் ரமணி மற்றும் பாலு.கோட்டயத்தில் வசிக்கின்றனர். லட்சுமியின் தங்கை வள்ளி கல்வி பயில அங்கு வருகிறாள்.லட்சுமிக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அவர்களுக்கு உதவ இளம்விதவையான ஆனந்தம் அந்த வீட்டில் இருக்கிறாள்.
இதே குடும்பத்தில் சாமு சீதையின் குழந்தைகளான லச்சம்,கோமு, பிஷாரடியின் குழந்தைகளான ஸ்ரீதரன்,அப்புக்குட்டன், சுகன் யா ஆகியோர் உள்ளனர். இதில் ஸ்ரீதரன் லண்டனில் ஐ.சி எஸ் படிக்க சென்று நாத்திகனாய் புரட்சிக்காரனாய் வருகிறான்.வள்ளியை திருமணம் செய்து வைக்கும் ஆசை நிராசையாகிறது. இவளின் தங்கை சுகன் யா தந்தைக்கும் த்மையனுக்கும்.உறவுப்பாலமாய் இருக்கிறாள்.
சேது அய்யரின் குடும்பத்தில் உள்ள வள்ளியுடன் ரமணிக்கு நல்ல தோழமை அமைகிறது.எஸ் ஆர் எஸ்ஸின் தங்கை பங்கஜாவின் வருகை சாதாரணமாய் குடும்பங்களில் நடக்கும் உரையாடல் போல் இருக்கிறது.
இந்த குடும்பங்களின் குழ்ந்தைகள், பெண்கள் பெரியவர்களுக்கு இடையேயான உரையாடலே நாவலாய் விரிகிறது.நாவல் ஒவ்வொரு அத்தியாத்திலும் உரையாடல் வழியே சென்று கொண்டே இருக்கிறது. இடம் வீடு குறித்த மையச்சரடு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது.
#குழந்தைகளின் உலகம்
பகல் தூக்கத்திலிருக்கும்
தந்தைக்கு பயந்த மகன்பாலுவின் பார்வையில் குழந்தைகள் உலகம் விரிகிறது. எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும்.பகல்.தூக்கத்தில்.பாலுவின் மன் உலகத்தில் வாழை தோப்பு விவரிக்கப்படுகிறது.ரமணியின் பார்வையில் படகுப் பயணம், பாடல் என கதை செல்கிறது. இவர்களின் உலகில்.குரியன் ஜானகி ஆகியோர் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறது.
ரமணி,பாலு, லச்சம்,வள்ளி ஆகியோரன் விளையாட்டுகள் அணுகுமுறைகள் படிக்கும் நம்மையும் குழந்தைகளின் உலகத்திற்கே கொண்டு செல்கிறது
இயல்பாய் நடக்கும் அன்றாட குழந்தைகள் உலகமான டீச்சர் விளையாட்டு, பாட்டுப் போட்டி, கடுதாசி போடுவது, சைக்கிள் ஓட்டுவது என உரையாடலின் வழியே அமைகிறது. குழந்தைகளின் உலகத்தில் பெற்றோர்கள் இருப்பதை சூழலும் அனுபவமும் உணர்த்துகிறது.
பாலு தன் ஆசிரியை எலிசபெத்தை வீட்டுக்கு அழைத்து வருவது, அப்பாவுடன் பாலு முரண்படும் இடங்கள் என பாலுவின் கதாபாத்திரம் நன்கு வடிமைத்திருப்பார் சு.ரா.
லச்சத்தின் இறப்பு நம்மை மனம் கனக்க வைக்கிறது.
மொட்டை பாலு என பட்டப்பெயர் குறித்து சொல்லபோது..ஒழுங்கா கூப்பிட்டா அன்பைக் காட்ட முடியுமா? இஷ்டத்தை பொறுத்துதான் எல்லாமே என்கிறாள் வள்ளி. எத்தனை நிதர்சன வார்த்தைகள்.வீட்டை விட்டு ஓடிப்போயிடலாமா என கேட்கையில் பசிக்குமா என்கிறாள்.பாலு அதற்கு தோசை காய்க்கிற மரம் இருக்காதா? என வெள்ளந்தியாக கேட்கிறான். பாலு தனது எலிசபெத் டீச்சரை வாஞ்சையோடு வீட்டுக்கு அழைத்து வந்து எல்லா பொருட்களையும் காட்டுகிறான்.
#பெண்கள்
லட்சுமிக்கு ஆஸ்துமா இருந்தாலும் கணவனின் சுயமுரண்களை அறியும் ஆளுமை மிக்கவள்.
மனைவி லட்சுமியின் சுபாவத்தை தனது அழகிய உவமையில் சு.ரா விளக்குகிறார்
/அவளுடனான அவருடைய பேச்சு
நாலு முழம் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் கன்றின் சுதந்திரம் போல் தான்.கன்று தும்பை அறுத்துக் கொள்ளும்போது அது எந்த திசை நோக்கிப் பாயும்?அது இலக்கணமற்ற சுதந்திரம்/ என்கிறார்.
நாவலில் வரும் இளம் விதவையான ஆனந்ததத்தை மணக்க விரும்பும் செல்லாப்பாவை பாராட்டுக்கின்றனர் எஸ்.ஆர் எஸ். தன் கணவன் சிறைக்கு சென்றாலும் தனி ஆளாக மன உறுதியுடன் இருக்கிறார் எலிசபெத் டீச்சர்.
ஏன் அழறேனு பாலு கேட்கும் போது ஆனந்தம் சொல்கிறாள்
அப்படி அழுதாத்தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும் என சொல்லி பெண்களின் அக உலகை விவரிக்கிறார்.
1939 களில் முற்போக்கு சிந்தனையாக வள்ளி மேற்படிப்பு படிக்க வள்ளி வருவது நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.
#ஆண்கள்
எஸ்.ஆர்.எஸ் உடன் விவாதிக்க வரும் கோவிந்தன் குட்டி, கருநாகப்புள்ளி ஆகியோரின் உரையாடல் தத்துவமயமானது.
இந்திய சமுதாயத்தில் புரட்சி என்பது
சாத்தியமல்ல.சீர்திருத்தங்கள் வழியாக சிறுகசிறுகத்தான் சமூகம் மாறும். ஒரு சீர்திருத்தத்தை புகுத்தும் வரையிலம் சமூகம் வெடித்திவிடும் என்றநிலை ஏற்பட்டால் தான் அந்த சீர்திருத்தம் அமலாகும் என்கிறார். இந்திய மனம் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்கு தாவுமே தவிர கேள்வி கேட்கும் பகுத்தறிவை பார்க்காது என்கிறார்.
மேலும்.எதிர்காலம் என்பது இருட்டாகத்தான் இருக்கிறது. நம் அறிவில் சில வெளிச்சங்கள் தெரிந்தும் இருளின் திரை எல்லையற்றதாக விரிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்
எஸ்.ஆர்.எஸ் ஏஜென்சி தொழிலில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் கோட்டயத்தைவிட்டு வெளியேறுகிறார்.இனி கோட்டத்தை இருளை எப்படி பார்ப்பேன் என மனம் உடைகிறார்.ஊருக்கு திரும்புவதுடன் நாவல் நிறைவுறுகிறது.
வீடு பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது.பிரதான கதாபாத்திரமான எஸ்.ஆர் எஸ் கண்டிபான தந்தையாக வருகிறார்.
/சிறிய விஷயங்களைப் பெரிதாகக் காட்டும் கண் அவருக்கு. அலங் கோலத்தைச் சிறிய அளவில் நுழையவிட்டால் அது பூதாகரமாகிப் பெருகி தன்னையே விழுங்கிவிடும் என்ற பயம். சுற்றிவரப் பார்த்து சதா கொதித்துக்கொண்டிருப்பது அவருடைய இயற்கையாகிவிட்டது. லட்சுமிக்கோ சகஜமாகவும் கலகலப்பாகவும் இருக்கவேண்டும் என்று ஆசை.ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை நீரைக் கசியாமல் வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தப் படுவது போல் ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் அதையும் மீறி விரல் இடுக்கில் ஈரம் கசிகிறது./
கோபமும் ஈரமும் எல்லைமீறி வழிவதாக குறிப்பிடுகிறார்.
/நினைவுகள் வயதான பின்பும் மழுங்காமல் கூராக இருக்கின்றன. நின்று நிலைக்க எவ்வளவு மழுங்கல் தேவைப்படுகிறது/
/எப்படிச் செயல்பட வேண்டும் என்பது பல சந்தர்ப்பங்களில் மனிதனுக்குத் தெரிவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிய வருகிறபோதும் பல சந்தர்ப்பங்களில் அவனால் அவற்றை அமுல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு உலோகம் உருகித் திரவ வடிவம் கொண்டிருக்கும்போது அதற்கு நாம் விரும்பும் வடிவம் தர முடியும். அது உருவம் பெற்று இறுகியபின் அதை மாற்ற முடியுமா?./
/எல்லாவற்றுக்கும் நம்மிடம் விடைகள் இருப்பதன் தீர்மானம் கற்பனையானது/
ஒவ்வொரு பாத்திரங்களும் முரண்பா
முரண்பாடுகளுடனும் குறைகளுடனும் காட்டப்படுகிறார்கள்.
எளிய ஆழமான மொழிநடை பலம்.
மனித மன்ங்களின் அசைவுகளை துல்லியமாக காட்டுகிறது.
"குழந்தைகளின் பார்வையில் உலகம் புதிது; பெண்களின் பார்வையில் உலகம் பொறுப்பு; ஆண்களின் பார்வையில் உலகம் அதிகாரம். இந்த மூன்றின் சந்திப்பே மனித வாழ்க்கை."
என்பதை உணர்த்துகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment