Saturday, 21 November 2026
ஜென் தோட்டம் | மலர்: 32"நிலவைக் காட்டும் விரல் நிலவு அல்ல!"நிலவைப் பார்க்க வேண்டும் என்றால், விரல் காட்டும் திசையைப் பார்க்க வேண்டும். விரலையே பார்த்துக் கொண்டிருந்தால் நிலவைப் பார்க்க முடியாது & அந்த விரல் தான் நிலவு என்று தவறாகவும் கருதிக்கொள்ளக்கூடாது.ஜென் தத்துவத்தில் விரல் என்பது ஒரு குறியீடு. நிலவு என்பது உண்மை. விரல் என்பது ஞானியரின் போதனைகள், புத்தகங்கள், கோட்பாடுகள் போன்றவற்றைக் குறிக்கும். நிலவு என்பது நேரடி அனுபவம், உண்மை, வாழ்க்கையின் யதார்த்தம்.ஒரு போதனை நமக்கு உண்மையை நோக்கி வழிகாட்டலாம். ஆனால் அந்தப் போதனையை மனப்பாடம் செய்வதால் மட்டும் உண்மையை உணர்ந்துவிட முடியாது. வழிகாட்டுவது வேறு; அந்த வழியில் பயணித்து உணர்வது வேறு.ஒருவர் நிறைய சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் படிக்கிறார். பொறுமை, அன்பு, கருணை, எளிமை பற்றி நிறைய பேசுகிறார். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கோபத்தையும் பொறாமையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வாழ்க்கையில் பொறுமையைக் கடைப்பிடிப்பது என்ற நிலவைப் பார்க்காமல் புத்தகங்கள் என்ற விரலோடு நின்றுவிட்டார் என்று பொருள்.விரலைப் பார்த்துக்கொண்டிருப்பவன் நிலவைத் தவறவிடுவதைப் போல, வார்த்தைகளில் சிக்கிக்கொள்பவன் அனுபவத்தைத் தவறவிடுகிறான். கோட்பாடுகளில் சிக்கிக்கொள்பவன் யதார்த்தத்தைத் தவறவிடுகிறான். சடங்குகளில் சிக்கிக்கொள்பவன் ஆன்மிகத்தின் உண்மையான நோக்கத்தைத் தவறவிடுகிறான். அறிவில் சிக்கிக்கொள்பவன் ஞானத்தைத் தவறவிடுகிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment