உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
- சுப்பிரமணிய பாரதி
#ஆசைப்பட்டவற்றை நிஜத்தில் அடைவது எளிதானதல்ல.
பலரும் அவற்றை கற்பனையிலே அடைந்து கொள்கிறார்கள்.
அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள்.கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் கடந்து வருவது எளிதில்லை
-எஸ்.ரா
உலகம்
அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை
-சண்முக சுப்பையா
#நேர்மையானவர்களை உயர்த்து
மோசமானவர்களை அம்பலப்படுத்து
_கன்ஃபூசியஸ்
#செப்டம்பர் 14 - இன்றோடு கார்ல் மார்க்சின் "மூலதனம்" வெளிவந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. அதோ உங்களின் தலைக்கு மேல் ஒளி வீசிக் கொண்டுள்ளதே அந்த வெப்ப மின் பல்ப் கண்டுபிடிப்பதற்குப் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த நூல். எத்தனை விடயங்களின் மீது ஒளி பாய்ச்சிய நூல் அது. இன்றளவும் முதலாளியத்தின் அடிப்படைகளையும் ஆபத்துக்களையும் அடையாளம் காட்டும் அறிவுத் திறவுகோல் அது. புனித விவிலியத்துக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கிய நூல் இது.
No comments:
Post a Comment