Monday, 25 September 2017

படித்தது

ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களை அவமானம் படுத்தும் போது உணருங்கள்....
*அவர்கள் உங்களிடம்* *இன்னும் வெற்றிகளை*
*எதிர்பார்க்கிறார்கள்* என்று

ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களை தனிமை படுத்தும் போது உணருங்கள்....
*அவர்கள் மட்டுமே இந்த* *பூமியில்*
*வாழவில்லையென்று*

ஒவ்வொரு முறை மற்றவர்கள்
உங்களிடம் பேசாமல் இருக்கும் போது உணருங்கள்....
*நாளை உங்கள்* *வெற்றிகளை*
*பார்த்து கை* *தட்டுவார்கள் என்று*

இன்று உங்களை தூற்றிய உதடுகள்
தான், *நாளை உங்கள் வெற்றிகளை முத்தமிட வரும்*

துணிந்து சென்றால்
*உங்களை நீங்கள் அறிவீர்கள்*

*உங்கள் வீட்டிற்கு* *இருக்கும் முகவரி*
*நாளை உங்கள்* *பெயருக்கும்* *இருக்கட்டும்..👍*

#*கி.ரா*

கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்துகளும் தீர்ப்புகளும் சுவாரஸ்யமானவை.

*எள்ளுக்காய் பிளந்ததுபோல சொல்லிவிட்டார் தீர்ப்பு* என்று ஒரு பிரயோகம் உண்டு.

இதன் அர்த்தம், எள்ளுக்காய் பிளந்தது போல அவ்வளவு சரியாக ஒரு வழக்கை தீர்த்து வைக்க முடியாது என்பதே.

வாதியோ, பிரதிவாதியோ யாராவது ஒருவர் பாதிக்கப்படுவார். இரண்டுபேரும் சந்தோசமாக ஒப்புக்கொள்ளும் தீர்ப்பை தரமுடியாது. அப்படியிருந்தால் அவர்களுக்குள் ஏன் தகராறு வரவேண்டும்.

*-கரிசல் காட்டுக் கடுதாசி*

No comments:

Post a Comment