[28/04, 7:19 am] TNPTF MANI: துடைத்துக்கொள்
கசந்த உன் கண்ணீரை
இனிநாம் அடையப்போகும் துயரங்களிலேயே
இதுதான் சின்னஞ்சிறு துயரமென ஆகிவிடலாம்
-மனுஷ்யபுத்திரன்
[28/04, 9:57 am] TNPTF MANI: மன உளைச்சல் தாளாமல் எங்காவது போயிடலாம்னு தோணும்போது இந்த மனசும் நம்ப கூடத்தான் வரும்கற உண்மை.... ஆயாசம்
-செளம்யா
[28/04, 11:39 am] TNPTF MANI: நடந்து நடந்து
கடக்கிறேன் பாதையை
அது நடக்கச் சொல்லி
காட்டுகிறது மீதியை
-ராஜா சந்திரசேகர்
[28/04, 5:56 pm] TNPTF MANI: இன்று
விஷேச நாட்களிலும்
ஒருவரும் வரவில்லை
சிறிய துணிக்கடைகளுக்கு
பின்மதிய நேரங்களில்
தூக்கத்தை கட்டுப்படுத்துகிறான்
செருப்புக்கடை சேல்ஸ்மேன்
கதர்கடை விற்பனை பிரிவில்
துடைத்துக் கொண்டே
எதிர்பார்க்கிறான் வாடிக்கையாளரை
எதிரில் இருக்கும்
பல்பொருள் அங்காடியை
ஏக்கமாய் பார்க்கிறான்
மளிகை கடைக்காரன்
குவிந்திருக்கும்
மசால் வடைகள்
நஷ்ட கணக்கையே காட்டியது
டீக்கடைகாரருக்கு
இன்றும் நேற்று போல்
இருக்ககூடாதென நினைத்து
கதவை திறக்கிறார்கள்
வேண்டுதல்களுடன்
விற்பனையாளர்கள்!
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment