[27/04, 8:21 am] +91 83447 34304: நாளும் பொழுதும் ஹைக்கூ
-----------------------------------
மழைக்குப் பிந்தைய
இரவில் கொதிக்கும்
நான்கு சுவர்கள்
நெடுநேரமாய்க்
கதவு தட்டப்படும் சப்தம்
இரவில் காற்றில்
கூடற்றப்
பறவைகளின் களேபரம்
நள்ளிரவில்
சன்னல் திறந்ததும்
காற்றோடு வரும்
நிலவொளி
மின்சாரம் அறுந்த
நிசப்த இரவில்
தொடர் இருமல்
எங்கும் இருள்
மயிலின் தனித்த
அகவல்
-சுஜய் ரகு-
[27/04, 12:36 pm] +91 83447 34304: நாளும் பொழுதும் ஹைக்கூ
----------------(2)----------------------------
சுவற்றில்
சிறகுலர்த்தும் காகம்
கைக்குழந்தை
வண்டிப் பூட்டின்
துவாரத்தைத் துழாவும்
வீட்டுச்சாவி
பாத்திரம் கழுவுகையில்
முதுகுப்புறம் வந்து
ஒளியும் நாய்
கிடையானக்
கழிவுநீரில்
நாயின் பிம்பம்
எருக்கஞ்செடி
நீல மலர்களின் கீழ்
உறங்கும் பூனை
கூடு தெரியுமளவு
வெற்றுக்கிளை
செந்நிற வானம்
- சுஜய் ரகு-
No comments:
Post a Comment